Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖

அத்தியாயம் 43

Administrator
Staff member
Messages
300
Reaction score
215
Points
63
அத்தியாயம் - 43

திருமணம் என்றாலே திருவிழா போல் சொந்தங்கள் கூடி கலகலத்து நிறையும் அல்லவா. இங்கோ பெருத்த அமைதி கிழவனுக்கு மூன்றாவது திருமணமாம் ஆண் வாரிசுக்காக. காதும் காதும் வைத்தது போல் கண்மணி வீட்டில் திருமணம் நடக்க உள்ளது. தினேஷ் அவன் மனைவி யோகா மற்றும் அம்மா, கிழவன் வீட்டில் இருந்து இரண்டு மனைவிகள் கண்மணி வயதை தாண்டியும் குறைந்தும் ஆறு மகள்கள் பேரன் பேத்திகள் அனைவரும் வந்திருந்தும் சோகம் தான், கிழவனும் கண்மணியின் அண்ணன் அண்ணியை தவிர.

கண்மணியோ தவறு செய்த குற்றவாளியை எப்போது எந்த நேரம் சிறையில் பிடித்து அடைப்பார்களோ என்ற பீதியில் இருப்பதை போல், இன்னும் சற்று நேரத்தில் தன் வாழ்க்கையே இருட்டில் முழ்கி விடுமே எனும் விரக்தியோடு கல்யாண அலங்காரத்தில் எதையோ பறிகொடுத்ததை போல் அமர்ந்திருந்தாள் அவளது அறையினில்.

கண்மணி கல்லூரியில் இருந்தே உயிருக்கு உயிராக காதலித்த பரத் பெரிதாக வசதி படைத்தவன் இல்லை என்றாலும் தன் வீட்டில் காதலுக்கு எப்படியும் தடா விதிப்பார்கள் இனி அவனோடு தான் தன் வாழ்க்கை என வீட்டை விட்டு ஓடியவளை கண்டு பிடித்து, அவள் கெஞ்சி கதறிய எதையும் காதில் வாங்காது கண்ணெதிரே அவளின் காதலனை கண்டம் துண்டமாக ரத்தம் தெறிக்க வெட்டி வீசி கொன்ற தினேஷ், அதிர்ச்சியில் மயங்கி சுருண்டவளை தூக்கி வந்து அவள் காதலை அழித்து விட்டு பெரிய வசதி படைத்தவனுக்கு தங்கையை திருமணம் செய்துக் கொடுத்து அதன் மூலம் லாபம் சம்பாதிக்கப் பார்க்கிறான்.

அப்போதில் இருந்து தமையனை அடியோடு வெறுத்து அநியாயமாக காதலன் மறைவுக்கு காரணமாக இருந்தவனுக்கு தன்னால் எந்த ஒரு சொத்தும் கிடைக்கக் கூடாது என்றே இப்போது வரை அவனை நினைத்து வாழ்ந்துக் கொண்டு தாய்க்காக அனைத்தும் பொறுத்துப் போகிறாள்.

அவள் மட்டும் தனியாளாக இருந்திருந்தால் இந்நேரம் கல்யாணம் ஆவது மண்ணாவது என எங்காவது கண் காணாத இடத்திற்கு சென்றிருப்பாள் அவன் தேடி வந்து வெட்டி போட்டாலும் பரவாயில்லை என்று. ஆனால் உடல் நலம் குன்றிய தாயை வைத்துக் கொண்டு என்ன செய்வது. அவள் மறுப்பாகவோ தினேஷுக்கு எதிராகவோ ஒரு அடி எடுத்து வைத்தாலும் முதல் பலி அவள் தாய் தான். இத்தகைய இக்கட்டான சூழ்நிலையை கடந்து இத்தனை ஆண்டுகள் தாக்குப் பிடித்ததே அதிகம்.

இப்போது அணைத்து கதவுகளும் அடைத்து தாயை பனைய கைதியாக வைத்து இத்திருமணத்தை நடத்த போகிறான் கோடிக் கணக்கில் பணத்தைப் பெற்றுக் கொண்டு.

ஐயர் மந்திரம் ஓத, கிழம் மாப்பிளை தோரணையாக மணவறையில் அமர்ந்து ஆவலாக கண்மணி எப்போது வருவாள் என்ற குஷியில் இருக்க இரண்டு மனைவிகளின் முகத்திலும் அப்பட்டமான அருவருப்பு.

மாமா உன் பொண்ண குடு ஸ்வாகா.. சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு ஸ்வாகா.. கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா ஸ்வாகா..
என்ன சத்தம் இந்த நேரம் ஸ்வாகா.. உயிரின் ஒலியா ஸ்வாகா.. குடுமியை ஆட்டியபடி ஐயர் மந்திரத்தை மிகவும் ரசித்து சுவாரிசியமாக ஓதிக் கொண்டிருக்க, "ஏய்யா ஐயரு உன் மந்திரமெல்லாம் என்ன ஒரு மார்க்கமா எங்கேயோ கேட்டது போல இருக்கு. நிஜமாலுமே நீ மந்திரம் தான் சொல்றியா" அவரை குறுகுறுவென பார்த்த கிழத்தை கண்டு கண்ணாடியை சரி செய்தபடி திருட்டு முழி முழித்த ஐயர்,

என்ன சாமி இப்படி கேட்டுட்டேல் நோக்கு தெரியாதோன்னோ இது ஸ்பெஷலான ஹெவி பவர்ஃபுல் மந்திரம், உங்க மச்சான் தான் என் தங்கச்சிக்கும் மச்சானுக்கும் நல்லபடியா கல்யாணம் முடிஞ்சி குலம் தழைச்சி ஷேமமாக வாழணும் அதுனால ஹை குவாலிட்டி பவர்ஃபுல் மந்திரமா போடுங்கோ ஐயரேனு கெஞ்சி கேட்டுக்கிட்டார்.

என்ன, என் மச்சானா சொன்னான்? குழப்பமாக கேட்ட கிழத்திற்கு தெரியுமே தினேஷின் தங்கை பாசம் பற்றி. அட ஆமா உங்களுக்கு பிடிக்கலைன்னா விடுங்கோ நான் எல்லாருக்கும் சொல்ற குவாலிட்டி கொறச்சலான நான்-பவர்ஃபுல் மந்திரத்தையே சொல்லிடறேன். வாடா மாப்புள வாழப்பழ தோப்புள ஸ்வாகா.. வாலிபால் ஆடலாமா ஸ்வாகா.. முகத்தை அம்மாஞ்சியாக வைத்துக் கொண்டு மீண்டும் சரசரவென மந்திரம் ஓதியவரை சந்தேகமாக பார்த்தபடியே இருந்த கிழத்தை கண்டு எரிச்சலான ஐயர், 'அட அபிஷ்ட்டு மூதேவி கிழட்டுப்பயலே சும்மா சும்மா இங்க என்ன டா குறுகுறுன்னு பார்வை, ஐயோ அடுத்த பாட்டு என்னனு மறந்து போச்சே, எல்லாம் இந்த கிழத்தால, இனிமே இங்க பாப்ப' மந்திரத்தோடு மந்திரமாக கண்டபடி திட்டிக் கொண்டே நெய்யை அக்னியில் உற்றுவதற்கு பதிலாக அசதிக்கு குடிக்க வைத்திருந்த ஓட்காவை ஊற்றிட புகை மண்டலத்தில் கிழத்திற்கு கண்ணு தெரியாமல் போனது.

அப்பாடா என பெருமூச்சு விட்ட ஐயர் 'பொண்ண அழைச்சிட்டு வாங்கோ' உற்சாகம் பொங்க குரல் கொடுத்தார்.

வான் நீலப்பட்டு சரசரக்க ஒப்பனை செய்த வட்டவடிவ அழகு வதனம் துக்கத்தில் ஆழ்ந்திருக்க 'இங்க பாரு கடைசி நேரத்துல எதையாவது செஞ்சி கல்யாணத்தை கெடுக்க நினச்ச அப்புறம் நீ எப்பவும் உன் அம்மாவ பாக்க முடியாது பாத்துக்கோ' அண்ணிக்காரி மிரட்டி கிழத்தின் அருகில் அமர வைக்க தெறித்த விழிகளில் நீர் சுரந்தன.

என்னவென்று சொல்வதம்மா வஞ்சியவள் பேரழகை ஸ்வாகா.. சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை ஸ்வாகா.. பெண் வந்ததும் ஐயரின் மந்திரம் படு ஜோராக தூள் கிளப்பிக் கொண்டு இருக்க, 'யோவ் ஐயரு அந்த புகைய குறைச்சிட்டு தாலிய கொடுய்யா சும்மா என்னத்தையோ உளறி புகைய மூட்டி நேரத்தை வளத்திக்கிட்டு' பெண்ணை பார்க்க முடியாது போகவே டென்ஷன் ஆகி விட்டது கிழம்.

அட சத்த பேசாம இருங்கோல் தாத்தா, வந்த வேலைய முடிக்காம என் மந்திரத்தை நிப்பாட்ட மாட்டேன். மேலும் ஓட்காவை தெளிக்க கண்மணிக்கும் கண்கள் கலங்கி புகையில் இருமல் வந்து தொண்டை வறண்டு போனது.

என்ன பாப்பா தொண்டை கரகறக்குதா? மாப்பிளை தானே அக்கறை பட வேண்டும் இங்கு ஐயர் அக்கறை பட்டார்.

ஆமா சாமி என்றாள் தொண்டையை நீவியபடி தலையாட்டி. அச்சோ இந்தாம்மா தண்ணியக் குடி அருகில் இருந்த தண்ணீர் போத்திலை நீட்ட. இல்ல பரவால்ல சாமி வேண்டாம்.

அட கொஞ்சம் குடி பாப்பா. அவள் கையில் திணிக்க வேறு வழியின்றி ஒரு வாய் குடித்தவள், சாமி என்ன தண்ணி கசக்குது அஷ்டகோணலானது அவள் முகம்.

அச்சோ அவசரத்துல நான் குடிக்க வச்சிருந்த சரக்க எடுத்து கொடுத்துட்டேன் போலயே, "அ.அது பிராண்டட் தண்ணி பாப்பா லைட்டா அப்டித்தான் கசக்கும், இந்தா இந்த தண்ணிய ட்ரை பண்ணி பாரு" இன்னொரு போத்திலை கொடுக்க, ஆணியே வேணாம் என்ற ரியாக்ஷ்ன் அவள் முகத்தில்.

யோவ் ஐயரு இவ்ளோ புகைச்சலை போட்டு என்னத்த பண்ற, நேரத்தை வளத்தாம தாலிய எடுத்து மாப்பிளை கைல கொடு தினேஷ் வந்து சத்தம் போட, இதோ கொடுத்துடுறேன் அம்பி என்ற ஐயர் தாலியை எடுத்து கிழத்திடம் நீட்ட கிழம் ஆவலாக தாலியை வாங்க வரும் வேலை கைக்கு எட்டாத தாலி சட்டென யூடர்ன் எடுத்து வளைந்து கண்மணியின் கழுத்தில் நேரடியாக மூன்று முடிச்சிகள் இடப்பட்டது.

மணவறையில் நடந்த காட்சியை கண்டு அனைவரும் என்ன நடந்ததென புரியாமல் அதிர்ச்சியில் பிரீஸ் மோடில் இருக்க, கண்மணி முகத்தில் அப்பட்டமான சோகமும் கண்ணீரும் போட்டி போட்டு வழிந்து, இனி இந்த கிழத்தோடு தான் தன் வாழ்க்கையா என்று நினைத்திருக்கும் போதே, வேறு கரம் மங்கலனான் சூடி அழுத்தமாக அவள் தோளைப் பற்றி எழுப்பி தன்னோடு அணைத்துக் கொண்ட ஆடவனை ஸ்லோமோவில் தலை தூக்கிப் பார்த்து அதிர்ந்து போனாள் கண்மணி.

மாப்பிளை கிழவனும் தினேஷும் அதற்கு மேல் அதிர்ச்சி. பின் மண்டையில் இருந்த குடுமி கிழத்தின் மூக்கில் தொத்தி தும்பலை கிளப்பி பெரிய சைஸ் சோடாபுட்டி கிழத்தின் சொட்டை தலையில் மாட்டிக் கொண்டது, வாயில் இரண்டு பக்கமும் அதக்கி வைத்திருந்த சுவிகத்தை துப்பி அதுவரை அம்மாஞ்சி ஐயராக இருந்தவன் இப்போது அழகிய ஆண்மகனாக மாறி இருந்தான் விதுரன்.

டேய் யாரு டா என் வீட்டுக்குள்ளே வேசம் போட்டு வந்து என் தங்கச்சி கழுத்துல தாலிய கட்டினது. ஆவேசமாக பாய்ந்து வந்த தினேஷின் வாயில் ஓங்கி விட்ட குத்தில் மொத்த ரத்தமும் கொப்பலிக்க, டேய்.. நான் யாருனு தெரியாம எம்மேல கை வச்சி பெரிய தப்பு பண்ணிட்டே சும்மா விடமாட்டேன் இப்பவே உன்ன கொன்னு புதைக்கிறேன் டா, மீண்டும் ஆவேசமாக அடிக்கப் பாய்ந்தவனின் கரத்தை முறுக்கி குனிய வைத்து குத்தியவன் 'எவ்ளோ அதப்பு இருந்தா பணத்துக்காக சொந்த தங்கச்சிய விக்க துணிஞ்சி இருப்ப, உன்னையெல்லாம் அடிச்சே கொல்லனும் டா நாயே' நீண்ட காலை தூக்கி அவன் நெஞ்சில் விட்ட உதையில் தூணில் தலை மோதி பலமான அடியோடு குப்புற விழுந்து கிடந்தவனை கொத்தாக அள்ளிக் கொண்டனர் காவலர்கள்.

இவனை இனி எப்பவும் வெளிய விடாதீங்க, அப்புறம் அந்தா நிக்குதே சூனியக்காரி அவளையும் பிடிச்சி உள்ள தூக்கி போடுங்க இன்ஸ்பெக்டர் விதுரன் சொன்னதும் கணவன் மனைவி இருவரையும் கொத்தாக அள்ளி ஜீப்பில் போட்டு சென்றிட, அவமானத்தில் ஆத்திரமான நின்றிருந்த கிழத்திற்கு பேமிலி பிளானிங் செய்து அவன் பேமிலியோடு அனுப்பி வைத்து விட்டான்.

ஹெலோ கண்மணி மேடம் என்ன இன்னும் ஷாக் மொமெண்ட்லே இருக்கீங்க, பைட் சீன் எல்லாம் முடிஞ்சிது இப்புடுச்சூடு. முகத்தின் நேரே கைகளை ஆட்ட ஆத்திரத்தோடு அவனை கண்டாள் அவள்.

எதுக்கு டா என் கழுத்துல தாலி கட்டின. மூச்சி வாங்க அவன் சட்டையைப் பற்றப் போக, அந்தோ பரிதாபம் ஐயர் வேடமிட்டதால் சட்டை இல்லை அவன் மேனியில் கை இரண்டையும் பின்னிழுத்து மடக்கிக் கொண்டாள்.

"உன்ன எனக்கு பிடிச்சி இருக்கு கட்டிக்கிட்டேன். இதுக்கு முன்னாடி எப்டியோ இனிமே பழசை எல்லாம் மறந்து மனசை மாத்திக்கிட்டு என்கூட சந்தோசமா வாழு, உன்ன நான் கண்கலங்காம கடைசி வரை பாத்துக்குறேன் அப்டிலாம் சொல்ல மாட்டேன், நீ தான் என்ன கண் கலங்காம பாத்துக்கணும். பாத்துக்குவியா கண்மணி" காதலோடு அவள் விழி நோக்கி தளிர் கரங்கள் பற்றி மார்போடு வைத்துக் கொள்ள, அவன் கண்களில் தெரிந்த காதலில் அவள் வியப்படைந்தாலும் அத்தனை எளிதில் எதையும் மறக்க முடியாமல் கரங்களை உருவிக் கொண்டு அவள் அறைக்கு ஓடி கதவடைத்துக் கொண்டாள்.

திருமணத்திற்கு சாவகாசமாக மனைவி பிள்ளையை அழைத்து வந்த விஷ்வாவை கொலை வெறியில் முறைத்த விதுரனை கண்டு அசடு வழிந்து நின்றான். 'ஏன்டா நீதான் கல்யாணத்தை நிறுத்தி என் காதலை சேத்து வைக்கிறேன்னு சொன்ன புண்ணியவானா' கடைசி நேரம் வரை நண்பனை எதிர்நோக்கி காத்திருந்து டென்ஷன் ஆனவன், திடீரென வந்த யோசனையாக வீட்டினுள் நுழையப் போன ஐயரை தூக்கி இவன் அவர் இடத்தில் உள்ளே புகுந்து ஆட்டத்தை கலைத்தது.

'அது மச்சா, நான் உனக்கு உதவி பண்ணனும்னு தான் டா நைட்டல்லம் தூங்காம முழுச்சிருந்தேன், ஆனா கடைசி நேரத்துல எப்டி தூங்கினேன்னு எனக்கே தெரியல டா. நீ வேணும்னா மோகிக்கிட்ட கேட்டு பாரு நான் நைட் முழிச்சி இருந்தேனா இல்லையானு அவளே சொல்லுவா ' குறும்பாக அவள் தோள் இடிக்க, 'இவன் ஜாலிக்கு முழிச்சி என்னையும் தூங்க விடாம ஒரு வழி ஆக்கிட்டு படுபாவி எப்டி பொய் சொல்றான் பாரு, இவனெல்லாம் திருந்தவே மாட்டான் பொய்க்காரன்' மோகியின் முறைப்பிலே அவள் எண்ண ஓட்டம் அறிந்தவன் பச்சக்கென கண்ணடிக்க சட்டென சிவந்த முகத்தை மறைத்துக் கொண்டு கண்மணியின்அறைக்கு சென்றாள்.

விதுரனின் உறுதியை கண்டே தீர்மானித்து விட்டான் எப்படியும் கண்மணியை கைவிடமாட்டான் என்று. அதனால் தானே சாகவாசமாக வந்தது.

என்ன முடிவு பண்ணிருக்க கண்மணி? அவள் தோள் தொட்ட மோகியை அணைத்துக் கொண்டு வெம்பியவளை ஆதரவாக தட்டிக் கொடுத்தாள்.

தெரியல மோகி.. இத்தனை வருஷமா பரத்தை மட்டும் தான் நினைச்சி வாழ்ந்துட்டு இருந்தேன் இப்ப திடிர்னு இந்த கல்யாணம் நான் எதிர்பாக்கல, அதுவும் விதுரன் சார் என் கழுத்துல தாலி கட்டினதை கொஞ்சம் கூட எதிர்பாக்கல மோகி. அடுத்து என்ன எப்டி இனி நான் என் வாழ்க்கைய அவரோடு சேர்த்து வாழப் போறேன் ஒன்னும் புரியல என்றாள் கலங்கியவளாக.

உன் தவிப்பு புரியிது கண்மணி. அதுக்காக கடைசி வரை நீ அப்டியே இருந்திட முடியுமா. உனக்குன்னு ஒரு வாழ்க்கை வேண்டாமா.

இல்ல மோகி, என்னால ஒரு உயிர் அநியாயமா போயிடுச்சி அப்டி இருக்கும் போது குற்றவுணர்ச்சி இல்லாம நான் மட்டும் எப்டி புது வாழ்க்கைய ஏத்துக்கிட்டு சந்தோசமா வாழுறது. அன்னைக்கு நான் அவனை போர்ஸ் பண்ணி வீட்டை விட்டு ஓடாம இருந்திருந்தா இந்நேரம் அவன் எங்காவது ஒரு மூலையில உயிரோட இருந்திருப்பான். இப்போ பாரு அவனை மறக்கவும் முடியாம வேற யாரையும் நினைக்கவும் முடியாம தினம் தினம் வேதனைல வெந்துட்டு இருக்கேன். அந்த கிழம் என் கழுத்துல தாலி கட்டி இருந்தா ஒண்ணு அவனை கொன்னு இருப்பேன் இல்ல நானே என்னை ஏதாவது செஞ்சிகிட்டு செத்து போயிருப்பேன். ஆனா இந்த விதுரன் சார் இப்டி பண்ணுவாருனு நான் நினைக்கவே இல்ல மோகி, ஒரு நல்லவரை எப்டி நான் தெரிஞ்சே ஹர்ட் பண்றது. இதழ்கள் துடிக்க அவள் சொன்னதை அணைத்தும் அவளை பார்க்க வந்த விதுரன் கேட்டபடி உள்ளே வர, கண்மணி முகத்தை திருப்பிக் கொண்டாள்.

நானும் உன்ன மாதிரி தான் கண்மணி வாழ்க்கைல நிறைய அடிப்பட்டு பல துயரத்தை தாண்டி வந்திருக்கேன், காதல்னாலே வலியும் வேதனையும் நிரஞ்சது தானே. காதல்ல வெற்றி அடைஞ்ச பலரும் கடைசி வரைக்கும் சேர்ந்து வாழுறதும் இல்ல தோல்வி அடைஞ்சவங்க யாரும் குழம்பிய குட்டையா ஒரே இடத்துல தேங்கிறதும் இல்ல. மனுஷனா பொறந்த எல்லாருக்கும் ஏதோ ஒரு வகைல வாழ்க்கைல துயரங்கள் வந்துட்டும் போயிட்டும் தான் இருக்கும் நம்ம தான் அதுல இருந்து மீண்டு வரணும் கண்மணி.

இத்தனை நாள் தனியா இருந்தே நானும் தான் அப்ப நீ யாரோ நான் யாரோ. உன்ன பாத்ததும் எனக்குள்ள ஒரு பாசிட்டிவ் வைப் அது பாக்குறவங்ககிட்ட எல்லாம் கிடைச்சுடாது. அடுத்தடுத்து நீ எப்டி எனக்குள்ள வந்தியோ ஆனா குறுகிய காலத்துல என் மனசு முழுக்க நிறைஞ்சி நின்னுட்ட. என் காதலை உனக்கு எப்படியாவது உணர்த்திடணும்னு நினைச்சிட்டு இருந்த போது தான் இந்த கல்யாண ஏற்பாட்டை பத்தி தெரிஞ்சிது.

இதுக்கு மேல என் மனசை உன்கிட்ட உணர்த்தி புரிய வச்சி எப்போ கல்யாணம் பண்ணி ஃபர்ஸ்ட்நைட் முடிச்சி சந்தோசமா வாழ்ந்து குழந்தை பெத்து வளக்குறது. அதான் தாலிய கட்டிட்டு நான் சொன்னதை எல்லாம் ஆன்பிராசசிங்ல செஞ்சிகிட்டே உன்ன சமாதானம் செஞ்சிக்கலாம்னு கிடைச்ச வாய்ப்பை பயன் படுத்திகிட்டேன். பேச்சுவாக்கில் அவளை நெருங்கி அணைத்ததை கூட உணராது விழிகள் விரிய அவனை பார்த்துக் கொண்டிருந்தவளின் நெற்றியில் குனிந்து முத்தமிட மயக்கம் தெளிந்து விழிப்பதை போல் பட்டென அவனை தள்ளி நிறுத்தி மலங்க மலங்க விழித்தவளை கண்டு அழகாக புன்னகைத்தான் விதுரன்.

விதுரன் உள்ளே வந்த போதே இருவருக்கும் தனிமையை கொடுத்து விட்டு வெளியே வந்த மோகியை கை சிறையில் பற்றி இருந்தான் விஷ்வா.

ஏய்.. மோகி என்ன டி திரும்பவும் முகத்தை தூக்கி வச்சி சுத்திட்டு இருக்க, நைட்டு தானே சமாதானம் செஞ்சி ரெண்டு பேரும் வாழ்க்கைய தொடங்கினோம், அப்போல்லாம் வெக்கப்பட்டு சிணுங்கி, விஷ்வா விஷ்வானு முத்தம் கொடுத்து கொஞ்சிட்டு திரும்பவும் காலைல எழுந்ததுல இருந்து கோவமா இருந்தா என்ன டி அர்த்தம்.
கையில் வைத்திருந்த குழந்தையின் செவியை எட்டாமல் மெதுவாக மனைவியின் காதில் கிசுகிசுத்தான்.

நான் உன்ன மன்னிச்சிட்டேன்னு சொல்லவே இல்லையே நீயா அப்டி நினைச்சுக்கிட்டா நான் என்ன பண்றது. அப்புறம் நானா உன்ன நெருங்கல நீயா தான் திரும்பவும் நாடகம் ஆடி என் மனச கலச்சி என்னையும் கெடுத்துட்ட, இதழ் சுளித்து நகரப் போனவளின் இடையில் மென்மையாக கரம் நுழைத்து இறுக்கிக் கொள்ளவும் கூச்சம் கொண்டது மோகக்கிளி.

இந்த யோசனை கூட ரொம்ப நல்லா இருக்கே, அப்ப நீ மன்னிக்கவே வேண்டாம் டி, தினம் தினம் உன் மனசையும் உன்னையும் சேத்தே சமாதானப் படுத்தி கெடுக்குறேன் ஓகேவா மோகிமா குறும்பாக கண்ணடித்து இடையில் அழுத்தம் கூட்டவும் ஊடல் கொண்டு அவன் கையில் குழைந்தது கோலமயில்.

தொடரும்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 43
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Messages
62
Reaction score
53
Points
18
Paravalaye vishwa ipdi kuda samathana paduthalama mmm ithu therinju irundha ithana carusham waste panni Iruka thevai illa... Epdiyo vithuran settled inime Kaila viluviyo kaala viluviyo un pondatiya samathana paduthu da yappa...
 
Top