Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖

அத்தியாயம் 46 (நிறைவு)

Administrator
Staff member
Messages
300
Reaction score
215
Points
63
அத்தியாயம் - 46

சிறிது காலம் டெல்லியில் வசித்து விட்டு மனைவி மகளோடு குடும்பமாக அவன் வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டான் விஷ்வரூபன்.

ஆரம்பத்தில் தயக்கம் பயம் கூடவே பழைய தாக்கம் அவள் நெஞ்சை வாட்டியதில் வர மறுத்த மோகியை கட்டாயப்படுத்தவில்லை அவன். பல ஊர்களில் தனி தனி டெக்ஸ்டைல்ஸ் கிளைகள் இருந்தாலும் மெயின் உற்பத்தி தொழிற்சாலை சென்னையில் தானே உள்ளது அதை கவனித்துக் கொள்ள கண்டிப்பாக அவன் அங்கு இருக்க வேண்டும்.

விதுரனும் மனைவி குடும்பத்தோடு திருமணமான சிறிது நாட்களில் சென்னையில் செட்டில் ஆகி விட்டான் தான் ஆனாலும் அவன் தொழிலை கவனித்துக் கொள்ளவே நேரம் போதாது இதில் எங்கே அவனை தொந்தரவு செய்வது என்றெண்ணி அடிக்கடி சென்னை டூ டெல்லி பயணம் செய்து கலைத்துப் போவதை கண்டு கவலையாக இருந்தது.

கனகா அம்மா துணையாக இருப்பதால் வேறு அபார்ட்மெண்ட் செல்லாமல் அதே சிறிய வீட்டினில் தான் வைத்திருந்தான் இல்லையேல் அவன் வசதிக்கு ஏற்றது போல் எப்போதோ புது பங்களாவையே வாங்கி சகல வசதிகளோடு மனைவி மகளை வைத்திருந்திருப்பான், அவர்களின் மகிழ்ச்சி எங்குள்ளதோ அங்கு தானே அவனுக்கும் மகிழ்ச்சி.

அவன் கஷ்டம் கண்டு மெல்ல மெல்ல நிதர்சனம் புரிந்து கொண்டாள் மோகி. இன்னும் எத்தனை நாட்களுக்கு அவன் இங்கும் அங்கும் அலைய முடியும், இங்கு சிறிய வீட்டினில் தங்களோடு தங்க தானே அவன் அங்கு மாளிகை போல் உள்ள வீட்டை கூட விட்டுவிட்டு இங்கு ஓடி வருகிறான். நியாயமாக தானும் அங்கு தானே இருக்க வேண்டும் என்ற பல யோசனைகளுக்குப் பிறகு, கனகா அம்மாவை கட்டி அணைத்து கண்ணீர் விட்டு பிரியாவிடை கொடுத்து புகுந்த வீட்டில் அடியெடுத்து வைத்து இப்போது சீறும் சிறப்புமாக காதல் பெருகி வாழும் தம்பதிக்கு ஒரே ஒரு பெரிய கவலை தான். எப்படியாவது தங்கள் மகளின் கால்கள் குணமாகி விட வேண்டும் என்று.

சென்னையில் உள்ள பெஸ்ட் நியூரோ ஸ்பெஷலிஸ்ட் மற்றும் பிசியோதெரபிஸ்ட் வைத்து மகளின் கால்களுக்கு சிகிச்சை செய்து கொண்டு இருக்கிறான். கடவுள் நம்பிக்கையற்ற விஷ்வரூபனே நெற்றியில் பட்டையடித்து மகளுக்காக விழுந்து விழுந்து சாமி கும்பிடும் போது மோகி மட்டும் அமைதியாக இருப்பாளா! கடவுளை தரிசிக்க மறந்திருந்தவள் மீண்டும் கிட்டிய மகிழ்ச்சியான புது வாழ்க்கையின் மாற்றத்தில் முன்பு போல் மனம் உருக கைக்கூப்பி கடவுளை வேண்டுகிறாள் எப்படியாவது தன் குழந்தையின் கால்களை குணப்படுத்தி கொடு கடவுளே என்று.

மனசஞ்சலங்கள் ஆயிரம் இருந்தாலும், குழந்தையிடம் எதையும் காட்டிடாமல் குழந்தைக்கு நல்லது கெட்டது பிரித்துக் கற்றுக் கொடுப்பதோடு செல்வ செழிப்பின் தலைகணத்தையும் அவளுள் திணிக்காமல் வளர்க்க வேண்டும் என்ற உறுதியில் இருந்தனர் பக்குவமான பெற்றோர்களாக. பணம் பத்தும் செய்யும் இன்று இருப்பது நாளை இருக்குமோ என்னவோ தெரியாது எப்போதும் எளிமையை மட்டுமே விரும்பும் மோகிக்காக அணைத்தும் செய்வான் விஷ்வரூபன்.
குழந்தை வளர்ப்பும் அவள் பொறுப்பு தான் தாயை விட நல்ல ஆசிரியை உண்டோ அதையும் மனைவி மூலமாக தான் கற்றான். அவனுக்கும் அவளே ஆசிரியை ஆகிப்போக சிறிய பிள்ளையை விட வளந்த பிள்ளையின் சேட்டைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போவதை சமாளிக்க முடியாமல் சோர்ந்துப் போவாள்.

இப்போதும் தன் அறையில் இருந்த மற்றொரு பர்சனல் அறையின் மெத்தையில் கிடத்தி அவள் தூக்கத்தை கெடுத்தது போதாதென அவள் கெஞ்ச கொஞ்ச, இவன் மிஞ்சி கெஞ்சி அவளையும் சேர்த்தே கெடுத்து விட்டான் கேடி பாய்.

'டேய்.. பிராடு கொஞ்சம் இடம் கொடுத்தா எந்நேரமும் அட்டையாட்டம் ஒட்டிக்கிட்டு என்னென்ன அட்டகாசம் பண்ற. பாப்பா வேற தனியா ரூம்ல படுத்திருக்கா, விடு என்ன' சிணுங்கிக் கொண்டே ஆங்காங்கே சிதறிக் கிடந்த ஆடையை எக்கி எடுக்க போராடிக் கொண்டிருந்தவளை மீண்டும் நீள் படுக்கையில் தள்ளி மோக பார்வை வீசி சறுக்குமர கழுத்தில் எச்சில் உதடுகள் கொண்டு சறுக்கி மலைமுகட்டில் விழுந்தவனை முறைக்க முயன்று தோற்றவளாக இதழ் மீட்டும் கானத்தில் கலைத்துப் போனாள் மோகி.

'பாப்பா நல்லா தூக்கத்துல இருக்கா இப்போதைக்கு எழ மாட்டா, எழுந்தாலும் நம்மள தேட மாட்டா டிவி ரிமோட் அவ பக்கத்துல தான் வச்சிருக்கேன், கார்ட்டூன் பாக்க தொடங்கிடுவா சோ யூ டோன்ட் வொரி பேபி' வேலையின் நடுநடுவே நிறுத்தி நிறுத்தி அவளுக்கு புரிய வைக்க மீன்குஞ்சாக நெளிந்தவளாக 'ஏன்டா இப்டி சேட்டை பண்ற என்ன திட்டினாலும் இந்த விஷயத்துல மட்டும் உனக்கு சூடு சொரணையே இருக்காதா விஷ்வா' அவனை புரட்டிப் போட்டு அவன் நெஞ்சில் கை ஊன்றி உதட்டில் நிலைத்தப் புன்னகையோடு ஆடவனின் முகம் பார்த்தவள், அன்று அவன் தண்டனை கொடுத்துக் கொண்டேன் என்றதின் அடையாளமாக அவன் நெஞ்சில் வீற்றிருந்த பழுத்த கம்பியால் இழுத்துக் கொண்ட சூட்டுக் காயத்தின் தழும்பில் அழுத்தமாக முத்தமிட்டு பொன்விரல் கொண்டு வருடினாள்.

"பொண்டாட்டிக்கிட்ட போய் சூடு சொரணை எல்லாம் பாக்க முடியுமா டி அதுவும் இந்த விஷயத்துல, கிடைக்கிற நேரத்துல எல்லாம் ரோஷம் பாக்காம அப்டியே அள்ளிக்கணும் மோகிமா" என்றவனுக்கு தானே தெரியும் இரவெல்லாம் கொட்டகொட்ட முழித்து மகள் அவன் நெஞ்சில் படுத்து கதையளக்க, இருவரையும் புன்சிரிப்போடு கண்டு எனக்கென்ன வந்தது எனும் விதமாக மோகி அவனுக்கு முதுகுக்காட்டி படுத்து நன்றாக துயில் கொண்டு ஆடவனை சோதிப்பாள். மகளிடம் பேசி பேசியே டையார்டாகி அவனையும் அறியாமல் கண் சொக்கி தூங்கி விட்டால் அவ்வளவு தான் மோகப் பெண்ணை மறுநாள் இரவு வரை நெருங்கவே முடியாது மகள் உறங்கும் வரை.

நினைத்த நேரத்தில் எல்லாம் ரொமான்ஸ் செய்து பழகியவன், இப்போதெல்லாம் பொறுப்புள்ள தந்தையாக மாறி தன் உணர்வுகளை கட்டுப் படுத்திக் கொண்டு அதிக நேரங்கள் கண்களால் மனைவியிடம் காதல் பாஷைகள் பேசி திருப்திப்பட்டுக் கொள்வது வழக்கமாகிக் கொண்டே போகிறது. ஆனாலும் மோகப்பெண் கேட்டு துடிக்கும் மனதையும் உடலையும் எப்படி கடிவாளமிட்டு தடுப்பது.

அவனையும் மீறி மோகதீ பற்றி எரியும் நேரங்களில் எப்படியாவது முழித்திருந்து, பொறுப்பின்றி உறங்கும் மனைவியை இப்படி தான் தனியாக கடத்தி வந்து பலவித வித்தைகளோடு மோகத்தை தனித்துக் கொள்வான். சும்மாவே அவன் கையில் குழையும் அவன் கை பொம்மை அவள், தாபத்தில் தொட்டால் போதும் பனிக்கட்டியாக உருகி மோகபைத்தியம் பிடிக்க வைப்பாளே அவனை.

'இப்டி பேசி பேசியே என்னை உன் வழிக்கு கொண்டு வந்திடறடா. சரி நைட்டெல்லாம் ஏக்கத்துல கண் முழிச்சி பாக்கவே பாவமா இருக்கியேனு இன்னைக்கு நானா உன்ன சீண்டி இப்டி மாட்டிக்கிட்டு முழிக்கிறேன்' பெரிதாக அலுத்துக் கொண்ட பெண்கிளியை சுவாரிசியமாக பார்த்தபடி வெள்ளை முயலை பந்தாடி விளையாடிக் கொண்டிருந்தவனை உதட்டுக்குள் ஒலிக்க முயன்ற வெட்கப் புன்னகையோடு கண்டு அவன் மார்பில் விழ திகட்ட திகட்ட மோக வெள்ளத்தில் திளைத்து புதிது புதிதாக காதலை வளர்த்தனர் கணவன் மனைவி ஒன்றிணைந்து.

தொடரும்.

எபிலாக்

இரண்டு வருடங்கள் கழித்து:-

அப்டிதான் குட்டி அப்டிதான் கம்மான்.. கம்மான்.. குட்.. குட்.. வெல்டன் மை கேர்ள் சூப்பர்.. சூப்பர்.. சூப்பர்.. உற்சாகம் பொங்க கை தட்டி துள்ளி குதித்த விஷ்வரூபன் ஆனந்தக் கண்ணீர் பெறுக கைகள் இரண்டையும் விரித்து நீட்டியபடி ஓடினான்,

என் பிள்ளை எட்டு வைத்த நடையைப்போல எந்த இலக்கண கவிதையும் நடந்ததில்லை..
முத்துக்கள் தெறிக்கின்ற மழலை போல ஒரு உள்ளூரு மொழிகளில் வார்த்தை இல்லை..
தந்தைக்கும் தாய் அமுதம் சுரந்ததம்மா என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே…

வா வா என் தேவதையே..
பொன் வாய் பேசும் தாரகையே..
பொய் வாழ்வின் பூரணமே..
பெண் பூவே வா..

பிறந்ததில் இருந்து முதல் முறையாக தத்தி தத்தி அழகு மயிலாக நடந்த வந்த மகளை தூக்கி முத்தமிட்டு சுற்றி 'என் தங்கமே சக்கரக்கட்டியே எங்க வேண்டுதல் வீண் போகல என் தங்கம் நடக்கத் தொடங்கிட்டா, மோகிஇஇ.. பாரு டி நம்ம பாப்பாவ அழகா நடந்துட்டா டி' ஹூஹூ.. கூக்குரலிட்டுக் கத்திட, தான் நடந்து விட்ட மகிழ்ச்சியில் தந்தையோடு சேர்ந்து சிரித்த மகளை கொஞ்சி தோளில் தூக்கி வைத்து தட்டாமாலை சுற்றி மகிழ்ச்சியில் டான்ஸ் ஆடி எல்லையற்ற மனமகிழ்ச்சியை காட்டினான் என்றால்

மோகியோ, காணக்கிடைக்காதா என பெற்ற நாளில் இருந்து ஏங்கி தவித்த அழகிய உணர்ச்சிமிக்க தருணத்தை கண் குளிரக் கண்டு கண்கள் குளம்க்கட்டி ஆனந்த அதிர்ச்சியில் மடிந்து விழுந்த மோகி வயிற்றை இறுகப் பிடித்து கதறி அழுதுக் கொண்டிருந்தவளின் தோளில், தடுமாற்றமாக தட்டிப் பதிந்த குட்டிப் பிஞ்சி கரம் ஒன்று அவள் தாடையை தேடி இழுத்துப் பிடித்து குட்டி தலைகுனிந்துப் பார்த்து நான்கு பால்பற்கள் கொண்ட பொக்கை வாய் திறந்து சிரித்த சிரிப்பில் உலகம் மறந்தவள் கண்ணீரை துடைத்துக் கொண்டு அழகான புன்னகை சிந்தி தனது ஒண்ணேகால் வயதுடைய மகனை முத்தமிட்டு தூக்கிக் கொண்டு கணவனிடம் ஓடியவள் 'வேதிகுட்டி என் அம்முக்குட்டி நடந்துட்டா. விஷ்வாஆ.. வேதி நடந்துட்டா விஷ்வாஆ.. என் குழந்தை நடந்துட்டா' உடைப்பெடுத்த கண்ணீரோடு மகளின் கன்னம் வருடி ஆசை தீர முத்தமிட்டு இதழ்க்கடித்து வெம்பி அழுதவளை ஆறுதலாக தன்னோடு அணைத்துக் கொண்டான். நடப்பது எதுவும் தெரியவில்லை என்றாலும் மழலை மொழியால் புரியாத பாஷையில் கை தட்டி சிரித்து அன்னையின் கையில் ஆரவாரம் செய்து கொண்டிருந்த குட்டிப் பையன் கன்னத்தில் குனிந்து ஆசையோடு முத்தமிட்டான் விஷ்வரூபன்.

கடந்த ஆண்டு, மருத்துவமனையில் ஆபரேஷன் தியேட்டர் முன்பு விஷ்வரூபன் மோகித்தா இருவருக்குமே மிகப் பெரிய இக்கட்டான சூழ்நிலையில் மனம் கலங்கி போயிருந்தனர் வேதியின் பிஞ்சி கால்களுக்கு தீவிர அறுவை சிகிச்சை நடந்துக் கொண்டு இருப்பதில், 'ஐயோ என் பிள்ளை வலியில் துடிப்பாளே' அழுகையோடு உள்ளம் துடித்து கண்ணீரும் கம்பளியுமாக கலங்கிய நிலையில் நிலைகுலைந்து அமர்ந்திருந்தவர்களின் கையில், மூன்று மாத குழந்தையாக விஷ்ணுவரதன் தாய் தந்தையின் துயரம் தீர்த்தான்.

விஷ்வா மோகியின் அளவற்ற காதலில் பிறந்தவன் இருவரது வாழ்க்கையும் ஒன்றிணைய காரணமாக அமைந்த விக்னேஷ்வரனின் மற்றொரு ஜென்மமாக அவன் ஜாடையில் பிறந்த சிங்கக்குட்டி. மகனின் சாயாலை கண்டு குட்டிஅண்ணனை கரம் நடுங்க தூக்கி பிஞ்சி கையில் முத்தமிட்டு நெஞ்சில் சாய்த்து மடிந்து விழுந்து கதறியதை கண்டு பயத்தில் திணறி விஷ்வாவை அடக்க முயன்ற மோகி கூட அவன் அண்ணன் பாசத்தில் தோற்றுப் போனாளே!!

வா வா என்னுயிரே மீண்டும் ஒரு ஜனனம் கொடு..
வாடா என் மகனே தந்தை என பதவி கொடு..

சிறியவன் நான் சிறியவன்தான்
உலகின் பார்வையிலே..
பெரியவன் நான் பெரியவன்தான்
உலகின் கண்களிலே..

மெதுவாய் மெதுவாய் உனை நான் அணைக்க.. உயிரும் உயிரும் ஒன்றாய் இணைக்க..
ஓ… சித்திரை நீ செந்தமிழ் நீ..
வார்த்தைகள் இல்லை அழைக்க..
சூரியன் நீ விண்வெளி நீ..
கேளிக்கையில் ரத்தினம் நீ..

துருதுருவென தந்தையின் கையில் ராஜாவாக துள்ளி, தாயிடம் குறும்பாக அமுதம் பருகி, குட்டி அக்காவிடம் எந்நேரமும் எதையாவது பேசி கை கால்களை உதைத்துக் கொண்டு விளையாட்டு தான். எப்பேர்ப்பட்ட அழுகையாக இருந்தாலும் தாய் தந்தையின் கெஞ்சலுக்கு கூட மனம் இறங்கி அழுகையை நிப்பாட்டாதவன், விஷ்ணுஊ.. என வேதியின் ஒற்றைக் கொஞ்சல் குரல் கேட்டால் போதும் சட்டென அழுகை நின்று அக்கா எங்கே என பரபரப்பாக வாய் குவித்து தேடும் அந்த குட்டி குட்டி அழகிய விழிகளை வர்ணிக்க வார்த்தைகள் உண்டோ!!

நன்முறையில் சிகிச்சை முடிந்த பின்னும் காயங்கள் ஆறி கால்கள் தேறிவரவே மாதங்கள் கடந்தன. அந்த காயங்கள் ஆறுவதற்குள் அந்த குழந்தை கண்ட வலிகளை கண்டு பெற்ற மனங்கள் துடிதுடித்துப் போகுமே!! வளந்த மகள் தந்தையின் கால்களில் மென்பாதம் பதித்து நடக்கப் பயின்ற இனிய நிகழ்வுகள். அக்காவோடு சேர்ந்து தானும் குட்டிகுட்டி பாதங்களை உதைத்து நடக்கப் பழகிய விஷ்ணு ஒரு காலில் வேதிபாப்பா ஒரு காலில் மழலை சிரிப்புகளோடு கணவன் சிரிப்பும் சேர்ந்து கொள்ள தாய் கண்பட்டு இதயம் நிறைந்த புன்னகையோடு திருஷ்டி கழித்து பொட்டு வைப்பாள் மோகி.

விதுரன் கண்மணியின் காதல் பரிசான இரட்டை ஆண்குழந்தைகளோடு வேதிதா விஷ்ணுவை அடிக்கடி காண வந்து விடுவர். பல இக்கட்டான சூழ்நிலையில் சொந்ததிற்கு சொந்தமாக நண்பனுக்கு நண்பனாக விதுரனும் கண்மணியும் முன்நின்று பெரும் ஆதரவாக இருந்த தருணங்கள் ஏராளம்.

கண்மணியின் தாயார் பேரக்குழந்தைகளின் முகத்தை கண்டு பூரண மகிழ்ச்சியில் இயற்கை எய்தி ஆறு மாதங்கள் கடந்தாயிற்று. அவர் உயிருடன் இருந்தவரை மற்றொரு தாயாகவே உடன் வைத்து கவனித்துக் கொண்ட விதுரன் துக்கத்தில் இருந்த மனைவியை மீட்டெத்து தன்னவளின் அணைத்துமாய் ஆனான்.

****

தித்திக்கும் இனிய தை பொங்கல் திருநாள் அன்று வீடே கலைக்கட்டி இருந்தது. மோகி விஷ்வாவின் வாழ்வில் மறக்க முடியாத முக்கிய நாள் கிட்டதட்ட திருமண நாள் கூட எனலாம். கசப்புகளை மறந்த திகட்டாத தித்திப்பு நாளை தங்கள் பிள்ளை குட்டிகளோடு கொண்டாடும் மகிழ்ச்சியான பொங்கல் விழா.

விஷ்வா கரும்பு வாங்கிட்டு வர சொன்னேனே, எங்கே வச்ச? ஆமா பொங்கல் வைக்க இடிச்சி வச்சிருந்த வெல்லம் எங்கே காணோம்? கலர்க் கோலப் பொடிய இங்கே தானே வச்சிருந்தேன் அது எங்கே போச்சி? சிவப்பு ஜரிகை வைத்த பூக்களிட்ட சந்தன நிறப்பட்டு சரசரக்க இதற்கும் அதற்குமாக ஒவ்வொரு பொருளையும் தேடித்தேடி அலைவதில் அவள் பின்னழகில் தட்டி தட்டி விளையாட்டுக் காட்டிய பின்னலிட்ட கருங்கூந்தலில் உருண்டோடிய மல்லி சரம் என ஒவொன்றும் அடங்கிக் கிடந்த விஷ்வரூபனின் மோகதாபங்களை தட்டி எழுப்ப போதுமானதாக இருந்தனவே!!

"மோகிஇ.. நீ கேட்டது எல்லாம் இங்க இருக்கு பாரு" கீழ் தளத்தின் அறையில் இருந்து வந்த கணவனின் குரலை பின்தொடர்ந்து, 'ஹான் இதோ வந்துட்டேன் விஷ்வா' அவன் சூட்சி தெரியாமல் அவசரமாக சென்றவளின் வயிற்று கொசுவத்தில் விரல் நுழைத்து தன்னோடு இழுத்த இழுப்பில், அக்.. சப்தத்தோடு அவன் மார்பில் முட்டி நின்ற மனைவியை குறும்பாக கண்டவனை முறைக்க தானே முடியும் அவளால்.

என்ன விஷ்வா இது விளையாட்டு, நிறைய வேலை இருக்கு ஒத்த ஆளா நான் மட்டுமே எல்லா வேலையும் இழத்து போட்டு செஞ்சிட்டு இருக்கேன் நீ என்னடானா பசங்களோட ஆட்டம் போடறதும் இல்லாம வேலை நேரத்துல என்ன கூப்ட்டு வச்சி.. அதற்குமேல் மூச்சும் பேச்சிம் நின்று விட்டது அவன் விரலும் உதடும் செய்த கலேபர செயலில்.

எத்தனை முறை கெஞ்சி கேட்டேன் ஒரே ஒரு கிஸ் மட்டும் கொடுத்துட்டு போடினு, முடியாதுனு என்ன ஒரு வீம்பா முறுக்கிட்டுப் போன, பாத்தியா எப்டி வர வச்சேன்னு இப்ப என்ன டி பண்ணுவ குறும்பாக புருவம் ஏற்றி இறக்கி, முத்தத்தை தொடர்ந்தவன் பெண்ணவளின் சேலை மறைத்த அங்கங்களும் அவன் கையில் வதைப்பட்டு போயின.

மோகியின் கவலை எல்லாம் புடவை கசங்குகிறதே என்றதில் தான், அவளும் அவனுக்கு சலைத்தவள் இல்லையே என் சேலை கசங்கினால் உன் சட்டை வேஷ்டியும் கலையும் என்ற பாலிசியோடு அவன் கூட்டும் மோகதாப அழுத்தங்களுக்கு ஏகுவாக கானம் இசைத்து அவளது புடவைக்கு மேட்சாக அணிந்திருந்த சந்தனநிற சட்டை மென்மையாக அவளின் வளவி சிணுங்கிய கையால் கசங்கி இருவரது அழகிய காதல் தருணங்களில் இதுவும் சேர்ந்து கொண்டது.

"என்ன டா ரொம்ப சந்தோஷமா இறுக்கியா" அவன் எண்ணம் அறிந்து தோளில் முகம் புதைத்திருந்தவனை குனிந்து பார்த்தாள்.

ரொம்ப ரொம்ப டி. எல்லாம் உன்னால மட்டும் தான். அப்பானா எத்தனை பெரிய உயர்ந்த பதவினு வார்த்தையால சொல்லாம, தாங்க முடியாத இனிய சித்ரவதைல என்னை வாழவச்சி காட்டிட்ட டி. என் குழந்தைங்க எனக்கு ரெண்டு கண்ணுனா நீ என் உயிர் மோகிஇ.. உயிர் இல்லாம கண்களால மட்டும் தனியா இந்த உலகத்தை பாத்திட முடியுமா சொல்லு. என் வாழ்க்கையோட முழுஅர்த்தம் என் மோகப்பெண். நீ ஒருத்தி என்கூட இருந்தா போதும் உலகமே என் காலடில டி என்னோட ஒட்டுமொத்த சந்தோஷமும் உன்கிட்ட மட்டும் தான் மோகி இருக்கு. முழு காதலையும் தேக்கி அவள் நெற்றியில் முத்தம் வைத்தான் விஷ்வரூபன்.

ம்ஹ்ம்.. அப்டியா என கண்மூடி புன்னகையோடு வாங்கிக் கொண்டவளை இறுக அணைத்து, காலம் முழுக்க இந்த இறுகிய அணைப்புல உன்னோட அளவுகடந்த காதல்ல வதைப்பட்டே சாகனும் அதுதான் நான் உனக்கு கொடுத்த கஷ்டங்களுக்கு எல்லாம் நீ எனக்கு கொடுக்க போற இனிய தண்டனை. கொடுப்பியா மோகி.. ஆசையாக அவள் கண்கள் நோக்க கணவனின் வார்த்தையில் கலங்கிய கண்களை மறைத்து அவன் தோளில் அடித்து "நல்ல நாள் அதுவுமா என்ன பேச்சி பேசுற விஷ்வா. காதலனா ஒருமுறை நீ தோத்து போயிருக்கலாம் ஆனா ஒரு அன்பான கணவனா நம்ம குழந்தைகளுக்கு நல்ல அப்பாவா நீ உயர்ந்து நின்னு ஜெய்ச்சிட்ட டா. இனியும் ஜெயிப்ப ஜெயிக்கணும். சேந்து ஜெய்ப்போம் விஷ்வா" அவன் கரத்தோடு கரம் பின்னி எக்கி அவன் நெற்றியில் முத்தம் வைத்தாள் அவன் தண்டனையாய் யாசித்த காதலை ஒன்றிணைத்து. ஆமோதிப்பாய் மென்புன்னகை அவன் இதழினில்.

இருவருக்கும் காதல் ஓவர்ஃபுளோவில் சென்றிட மீண்டும் இதழ்கள் கவ்விக் கலவிக் கொண்டன. விட்டால் முத்தம் மட்டும் இல்லை மொத்தமாக விழுங்கக் கூடிய கடோத்கஜன் அவன் ஆனாலும் இன்றைய நாளில் நிறைய நிறைய பொறுப்புகள் உள்ளதே, பிள்ளைகள் பொங்கல் கொண்டாட ஆவலாக காத்திருக்கும் இச்சமையத்தில் மோகிக்கு காதல் கணவனாக மட்டும் இருந்து விட முடியாதே!! பெருமூச்சு விட்டவன் அவன் பற்களில் சிக்கி சிதைப்பட்ட செப்பு இதழை மீண்டும் ஆசையாக முத்தமிட்டு மிட்டாயாக சுவைத்து விட கோரப்பல் பட்டு லேசாக கசிந்த ரத்த துளிகளை கண்டதும் தான் திருப்தியாக இருந்தது.

புறங்கையால் துடைத்துக் கொண்டு மையிட்ட கண்களால் வெட்கத்தை தேக்கி முறைத்து மீண்டும் மீண்டும் அவனை கிறங்கடித்து மோகப்பெண்ணின் அடிமையாக்கி வைத்துக் கொள்கிறாள் விஷ்வரூபனின் அழகான மோகராட்சசி.

மோகமும் உண்டு பொறுப்புகளும் அதிகளவில் உண்டு, மோக கானம் மனைவியிடம் மட்டும் எப்போதும் அதிகமா இசைக்கும். வெட்க கானத்தோடு மறுக்காமல் தன்னவனின் மோகத்தை கர்வமாக கொண்டாடி அவன் நெஞ்சில் சரண்புகுவாள் மோகித்தா.

இன்றைய கதாநாயகன் கதாநாயகியாக, விஷ்ணுவரதன் வேதிதா.

சிவப்பு நிற குட்டி சட்டை சந்தன நிற குட்டி வேஷ்டியில், கண்ணில் குட்டிக் கண்ணாடி, வலகையில் தங்க பிரேஸ்லெட் இடகையில் சிவப்பு நிற குட்டி வாட்ச், கழுத்தில் தங்கத்தில் செய்த மைனர் செயின் என்று அரிசிப் பற்கள் தெரிய மழலை நடையோடு கால்கள் பின்னி பின்னி வளைத்து, அக்காவிடம் வம்பு செய்ய வேண்டும் என்றே வேதிக்காக விஷ்வா தோல்சீவிக் கொடுத்த சிறு கரும்பு துண்டை பிடித்துக் கொண்டு முன்னால் ஓட "நில்லு விஷ்ணு என் கரும்பை என்கிட்ட குடுத்துட்டு போடா" சிவப்பு நிற கல் வைத்த கண்ணை பறிக்கும் பாவாடை அதே சந்தன நிற சட்டையில் இரட்டை ஜடையில் பூக்கள் வைத்து கால்களில் பெரிய சைஸ் சலங்கை வைத்த கொலுசுகள் சிணுங்க பாவாடையை தூக்கிப் பிடித்துக் கொண்டு பிஞ்சி பாதம் நிலையாக தரையில் முத்தமிட்டு கொஞ்ச தம்பியை பிடிக்க ஓடிய அழகிய காட்சிகள், மோகித்தா விஷ்வரூபனின் எத்தனை வருட கனவு அது.

ஷியாம் கால்கள் குணமடைந்ததும் தனது குட்டி தோழியை பார்க்க வந்து இருவரும் ஒருசேர சிரித்தபடி கைகோர்த்து நடந்த புகைபடம் ஃபிரேமாக மாட்டப்பட்டிருந்தது ஹாலில்.

வெறுமை மட்டுமே குடிகொண்டிருந்த அவ்வீட்டினில் மகிழ்ச்சிகள் மட்டுமே நிறைவாய் பொங்கிட, அழகிய புள்ளிமான்களாக சில்லறை சிதறும் மழலை சிரிப்பின் கானங்களோடு இரு குழந்தைகளும் தாய் தந்தையை சுற்றி சுற்றி வந்து துள்ளி குதிக்க, மனைவியை தோளோடு அணைத்து பொங்கலோ பொங்கல்.. பொங்கலோ பொங்கல்.. குடும்பத்தின் கூக்குரல் மகிழ்ச்சியை பறைசாற்ற இனி அவர்கள் வாழ்வில் வசந்தம் பொங்கும் இனிய காலமாகவே மாறி அடுப்பில் பொங்கி வழியும் தித்திப்பு பொங்கல் போல் என்றும் இனிக்கும் என்ற மகிழ்ச்சியோடு விடைபெறுவோம்.

வாழ்க வளமுடன்
சுபம்

மோக கானம் கதைக்கு ஆதரவளித்த அன்பு நெஞ்சங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் "இந்து"
 
Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 46 (நிறைவு)
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
New member
Messages
7
Reaction score
4
Points
3
சூப்பர் சூப்பர் சூப்பர்
👌 👌 👌 👌 👌
❣️ ❣️ ❣️ ❣️ ❣️ ❣️
🥰 🥰 🥰 🥰 🥰 🥰 🥰
 
Messages
62
Reaction score
53
Points
18
Supb ah irundhuchu sagi... Appa ponnu ku idaiyilana unarva romba azhaga vum aazhamavum romba unarvu porvamavum solli irundhinga.. niraya idangal la alugaiya control panna mudiala sagi... seriously very nice story... .. next new story epo? Illa adutha updates enna? Eagerly waiting....
 
Kuil than adutha target ji. Apdiye agimasai oru pakkam pogum 😊
 
New member
Messages
1
Reaction score
0

Super super super super super
 
Top