Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Administrator
Staff member
Messages
278
Reaction score
215
Points
63
அத்தியாயம் - 46

ஆதி சொன்னதை கேட்டு குடும்பம் மொத்தமும் அதிர்ச்சியிலும் ஒரு வித மகிழ்ச்சியிலும் திளைத்து இருக்க, மித்ராவோ பெரும் ஆனந்தத்தோடு தன் அண்ணனின் மகளான பார்கவியை கட்டிக்கொண்டு, ஆசை தீர அவளுக்கு முத்தம் வைத்தாள், பேச வார்த்தைகளின்றி.

திரும்பக் கிடைக்கவே கிடைக்காது என்று நினைத்திருந்த ஒன்று, மீண்டும் கிடைத்து விட்ட மகிழ்ச்சியில், கண்ணீரின் மூலம் அவள் மீதுள்ள பாசத்தை முத்தத்தால் இறக்கி வைக்க, உண்மையை ஏற்றுக் கொள்ள முடியாமல், பலவித உணர்வுகளில் சிக்கித் தவித்த கவிக்கு, ஆத்வி தான் தனது ஆழ்மனக் காதலன் என்று மட்டும் தெளிவாக புரிந்து போனது.

"இது மட்டும் எப்டி சாத்தியம், எனக்கு இத்தனை உறவுகள் இருந்திருக்காங்க ஆனா அவர் ஒருத்தர் மட்டும் எப்டி என் மனசுல ஆழமா பதிஞ்சிருக்காரு.. என் மனசுல இத்தனை ஆழமா நின்னவரோட மனசுல நான் ஏன் இல்லாம போனேன்..

என் உணர்வுகள் அவரை இவர் தான் என் மாமானு கண்டு பிடிச்ச மாதிரி, அவரு இதுவரை என்ன அடையாளம் கண்டுக்கவே இல்லையே.. அப்போ அவருக்கு என்ன அப்பவும் பிடிச்சது இல்ல, இப்பவும் பிடிக்காது அப்டி தானே இருக்கும்.." என நினைக்கும் போதே மனம் வலித்திருக்க, மித்ராவின் குரல் அவள் நினைவை கலைத்தது.

"எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா, அதை என்னால வார்த்தையால சொல்லவே முடியல கவிமா.. நீ என் அண்ணன் பொண்ணு.. அப்படியே பாக்க உன் அம்மா தான் நீ, என் உயிர் தோழி நித்யா.." என கூறும் போதே குடும்பங்களுடன் சந்தோஷமாக வாழ்ந்த நினைவுகள் தோன்றி புன்னத்தவளின் முகம், சடுதியில் மாறி வேதனையை பிரதிபலித்தது.

15 வருடங்களுக்கு முன்பு,

மார்த்தாண்டத்தில் உள்ள சுற்றுலா தளத்திற்கும், அப்படியே அங்குள்ள சிறப்புமிக்க தெய்வங்களையும் வழிப்பட்டு வர திட்டமிட்டு அன்று மித்ராவின் மொத்த குடும்பமும், உற்சாகமும் கலகலப்புமாக, மகிழ்ச்சிக்கு பஞ்சமின்றி பிள்ளைகளோடு கிளம்ப ஆயுத்தமாயினர்.

பிள்ளைகளின் மழலை கூக்குரல் அந்த வீடெங்கும் எதிரொலிக்க, தாத்தா பாட்டிகளுக்கு அவர்களோடு மல்லுக்கட்டியே நேரங்கள் ஓடி விடும்.

அன்றும் அதே தான், பெரிய்வர்கள் முன்னமே தயாராகி விட்டு, ஓடி ஆடும் குழந்தைகளை பிடித்து நிறுத்தி கிளப்பி விடுவதே ரோதனையாகி போக, ஒரு குட்டியை மட்டும் பிடித்து நிறுத்துவது பெரும் சவாலாகி விட்டது.

வாலுப்பெண் சுட்டித்தனம் மிக்கவள், அனைவருக்கும் போக்குக்காட்டி விட்டு இரட்டை ஜடையில், புத்தம் புதிய பாவாடை சட்டையில் சலங்கை கொலுசொலி அதிர, சற்று நேரம் முன் வீட்டையே சுற்றி வந்தவளின் சத்தம், அமைதியாக அடங்கி போய் இருப்பதிலேயே தெரிந்தது, எங்கோ பதுங்கி இருந்து ஏதோ பெரிதாக வில்லங்கம் பிடித்த வேலை செய்து கொண்டிருக்கிறாள் என்று.

"டேய்.. யாது உன்கூட தானே அவ இருந்தா எங்கே டா போனா கிளம்புற நேரத்துல.." விக்ரம் தன் மகனை முறைப்பாக வினவ,

"ப்பா.. என் கூட தான் அவ இருந்தா, அப்ப எனக்கு அர்ஜென்ட்டா ஸுஸு.. வந்துச்சின்னு, இதோ இவகிட்ட அவளை விட்டு நான் வெளிய ஓடிட்டேன்.." நிலா சரண் மகளான திவ்யாவை கை காட்ட,

"பெரியப்பா, யாது அண்ணா போய்ட்டதும் அவ என் பொம்மைய கேட்டு சண்டை போட்டா, அவளுக்கு நான் ஏற்கனவே நிறைய பொம்மை கொடுத்துட்டேன், அதை எல்லாம் அவ பிச்சி போட்டுட்டா.. அதான் என் புதுபொம்மைய ஒளிச்சி வைக்க உள்ள ஓடிட்டேன், அப்புறம் அவளை காணோம்.." பாவமாக திவ்யா சொல்ல, அதில் கோவமான விக்ரம்,

"ரெண்டு பேரும் இப்டியா பொறுப்பில்லாம சொல்லுவீங்க, ஏன்டா உங்க கூட விளையாடுறான்னு தானே விட்டு போனோம்.." பிள்ளைகளை அதட்டலாக கேட்கும் போதே,

"டேய் மச்சி.. அந்த வாலு சேட்டை பண்ணிட்டு தப்பிச்சி ஓடினதுக்கு பாவம் குழந்தைங்க என்ன பண்ணுங்க, இங்க தான் எங்கயாவது இருப்பா, நிதானமா தேடினா குட்டிஎலி கிடைச்சிடும் வா.." என்ற நிலனுக்கு தெரியுமே, அவனின் செல்ல மகளின் வகைவகையான சேட்டைகளைப் பற்றி.

"பொறுப்பே இல்ல நிலன் உங்களுக்கு, கஷ்டப்பட்டு அவளை கிளப்பி, உங்கள நம்பி விட்டு தானே நான் ரெடியாகிட்டு வரேன்னு போனேன்.. இப்ப என்ன வேலை பாத்துட்டு இருக்கானே தெரியல.." நித்யா கணவனை முறைக்க, எப்போதும் போல் அழுதாலும் கோவித்தாலும் முறைத்தாலும் சிவக்கும் மனைவியின் மூக்கை, யாரும் அறியாதவாறு குனிந்து முத்தமிட்ட நிலன்,

"இங்கே தான் இருப்பா நித்திமா, கிளம்புற நேரத்துல முறைச்சி மாமன சூடேத்தாத.." அவள் காதினுள் கிசுகிசுக்கவும் வெட்கத்தில் முகம் திருப்பிக் கொண்டு ஓடி விட்டாள்.

இதை கண்டு தலையில் அடித்துக் கொண்ட விக்ரம், "டேய்.. பெத்தப் புள்ளையக் காணோம்னு எங்கேயாவது பதட்டம் இருக்கா உனக்கு.. இப்டி பொறுப்பே இல்லாம ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்க.." விக்ரம் சிடுசிடுக்க,

"ஏன்.. ஏன்.. நான் ரொமான்ஸ் பண்ணக் கூடாது..
நேத்து யாது பையன் ஸ்கூல் விட்டு வர எம்புட்டு லேட்டாகி போச்சி, நான் எங்க பிள்ளைய இன்னும் காணோம், எங்க போய்ட்டான்னு உன்கிட்ட கேட்டதுக்கு நீ என்ன பண்ண,

அவன் எங்கயாவது வெட்டவெளில நின்னு மேல பறக்குற ஏரோபிளேன வேடிக்கைப் பாத்துட்டு இருப்பான்னு சொல்லி, படார்னு கதவடச்சிட்டு போயி என் தங்கச்சிக் கூட ரொமான்ஸ் பண்ணல.." மூச்சி விடாமல் கேட்டதும் அசடு வழிந்தவன்,

"சரி சரி சபையில வச்சி மானத்தை வாங்காதே வாடா, பிள்ளைய தேடுவோம்.." விக்ரம் எஸ்கேப் ஆகப் போக, நிலன் விடுவதாக இல்லை.

நிலாக்கு தற்போது எட்டு மாதம். இரண்டாவதாக கருத்தரித்து இருந்ததால் அவளை பார்த்துக் கொள்ளவே சரனுக்கு நேரம் போதாமல் உள்ளே அவளை கிளப்பிக் கொண்டு இருக்க, நித்யா சுபி இருவரும் அவர்களது அறைவாயிலை எட்டிப் பார்த்து விட்டு,

"இன்னைக்கு வர மாட்டாங்க அண்ணி இவங்க.." சுபி சொல்லி சிரிக்கவும், நித்யாவும் சிரித்து,

"ஆமா சுபி சரி வா, முதல்ல அந்த சேட்டை பிடுச்சவள தேடுவோம், வர வர அவ அலம்பல் ரொம்ப அதிகமாகுது.." என்றபடி இவர்களும் அவளை தேடி படையெடுத்தனர்.

கிணற்றின் பின்னால், தண்ணீர் வாரி இறைக்கும் இடத்தில் கொலுசின் ஓசை கேட்டது. அதுவும் கீழே அமர்ந்து காலை அங்கும் இங்கும் அசைக்கும் போது தேய்ந்து உராயும் சத்தம்.

வீடு முழுக்க ஒரு இடம் விடாமல் தேடி விட்டு, கடைசியாக வீட்டின் பின்னே வந்தவர்கள் காதில் இத்தகைய சத்தம் கேட்கவே, ஒருவரின் முகத்தை மற்றவர்கள் கலவரமாக பார்த்தபடி கிணற்றருகே சென்று பார்க்க, குட்டி வாலை முறைத்து தள்ளினர் பெற்றோர்கள்.

என்ன ரொம்ப நேரமா யாரோ நம்மள உத்து பாக்குற மாதிரி இருக்கே என தோன்றியதோ என்னவோ, குட்டி ஜடை ஆட அப்பாவியாக நிமிர்ந்து பார்த்தாள் குட்டிப்பெண்.

சிறிய முகத்தில் ஆங்காங்கே சேற்றை குழைத்து தடவி, புத்தாடையோ கந்த துணியை மிஞ்சும் அளவுக்கு சேற்றில் பிரட்டி எடுத்து, கை முழுக்க சேற்றை அள்ளி மடியில் வைத்து விளையாடிக் கொண்டு இருந்தவளை, என்ன செய்தால் தகும். நித்யாக்கு கோவம் எல்லை மீறிப் போனது அவள் சேட்டையில்.

"ஏய்.. என்ன டி வேலை பாத்து வச்சிருக்க, இதோட ரெண்டாவது சட்டதுணி மாத்தியாச்சி, சொல்ல சொல்ல அடங்காம இப்ப சேத்துல வந்து விளையாடிட்டு இருக்க.." மூக்கு விடைக்க கத்தும் அன்னையை கண்டு பயந்து போனவள், தந்தையை பாவமாக பார்க்க,

"இந்த நடிப்பு எல்லாம் இங்க வேலைக்கு ஆகாது மகளே, நல்லா திட்டு வாங்கு, போன முறை உனக்கு சப்போர்ட் பண்ணி தான் என் தலை வீங்கி போச்சி, திரும்பவும் என்னால கொட்டு வாங்க முடியாது போ.." என்றாலும் மனைவியிடம்,
"பாவம் டி குழந்தை போதும் திட்டாதே.." ரகசியம் பேசி, மேலும் வாங்கிக் கட்டிக் கொண்டு ஓடி விட்டான் நிலன்.

தந்தை ஓடியதும் மாமனை தான் பார்த்தாள் நர்மதை (பார்கவியின் உண்மையா பெயர்).

"நீ வாடா செல்லம் உங்க அப்பன் ஒரு பயந்தாங்கோலி, மாமா உன்ன கிளப்பி விடுறேன்.." என்றபடி சேரோடு தூக்கவும்,

"அச்சோ அண்ணா அவ மேல சேறு, கீழ இறக்கி விடுங்க.." நித்யா சொல்ல,

"பரவால்ல நித்யா சின்ன பிள்ளைக்கு என்ன தெரியும்.." அவளை கொஞ்சியபடியே தனதறைக்கு தூக்கி செல்லவும், அவர்கள் பின்னே ஓடப் போன சுபியை, கை பிடித்து நிறுத்தினாள் நித்யா.

"அண்ணி விடுங்க, நானும் போய் மாமாக்கு ஹெல்ப் பண்றேன்.." என்ற சுபியை முறைத்தவள்,

"இன்னும் உள்ள போன ஒரு ஜோடியே வெளிய வரல, நீயும் இப்போ உள்ள போன நாம இன்னைக்கு ட்ரிப் போன மாதிரி தான்.." சலிப்பாக சொன்ன நித்யா, அவளை உள்ளே அனுப்பாமல் தன்னோடே வைத்துக்கொண்டு தயாராகினாள்.

"என்னங்க எல்லாத்தையும் எடுத்து வச்சிட்டேன் போலாமா.." புன்னகையோடு அவன் எதிரில் நின்ற மனைவியை ரசித்துக் கொண்டே முறைத்த ஆதி,

"வரவர இப்பலாம் ரொம்ப ஓவரா போறே டி, அடிக்கடி அடம் பிடிக்க கத்து வச்சிருக்க, எனக்கு அவனுங்க மூஞ்ச பாத்தாலே ஏன்னே தெரியல டென்ஷன் ஆகுது.." குரல் மட்டும் தான் கடினமாக வந்ததது, அவன் முரட்டுக் கரங்களோ மனைவியின் மென்மைகளை களவாடிக் கொண்டிருக்க, எப்போதும் போல கணவனின் கை வளைவில் கூச்சம் கொண்டு நெளிந்தாள் மித்ரா.

"ஏங்க, டைம் ஆச்சி, கட்டின புடவை எல்லாம் கலையிது, விடுங்க.." என வாய் சொன்னாலும், கணவனின் மாயாஜால வேலைகளில் கட்டுப்பட்ட முயலாக நிற்க,

"அப்பா.." என்ற ஆருவின் சத்தத்தில் சட்டென விலகி நின்ற கணவனை கண்டு வாயில் கை வைத்து சிரிக்கவும், அவளை முறைத்த ஆதி,

"எல்லாத்துக்கும் சேத்து வச்சி வந்து இருக்கு டி உனக்கு.." உதட்டசைவில் முணங்கி, "என்ன ஆரு ரெடியாகிட்டியா.." என்றான்.

"ஹ்ம்.. நான் ரெடி ப்பா.. ஆனா ஆத்வி தான் ரெடியாக மாட்டேன்னு சொல்லி முகத்தை தூக்கி வச்சிட்டு உக்காந்து இருக்கான், என்னனு வந்து கேளுங்க.." என்றாள் அலுத்துக் கொண்டு.

"அப்டியா பண்றான் அவன், சரி வா நான் கேக்குறேன்.." என்ற ஆதி, நன்றாக வளர்ந்து விட்ட மகளின் தோளில் கை போட்டு நடந்து சென்றான்.

"டேய் ஆத்வி இன்னும் ஏன் ரெடியாகாம உக்காந்து இருக்க, நேரம் ஆகுது எழுந்து வா உன்ன ரெடி பண்ணி விடுறேன்.." என்ற தந்தையை முறைத்தவன்,

"நான் வரல டாட், எனக்கு அங்க வரவே பிடிக்கல, நீங்க எல்லாரும் போயிட்டு வாங்க நான் வீட்லே இருக்கேன்.." என்றவனுக்கு நர்மதை (கவி) என்றால் பிடிக்கவே பிடிக்காது.

கூடவே யாதவும், எப்போதும் அவளோடு அவன் இருப்பதும், கவி தவறு செய்தால் அவளுக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு முதல் ஆளாக இருப்பதும் அவன் தான்.
அதே நேரம் அமைதியான குணம் யாதவ்க்கு.

கவி அவனை படுத்தாத பாடில்லை, காலை பள்ளிக்கு கிளம்பும் வேளையில் யூனிபோர்ம் கால்சட்டையின் பாக்கெட்டில், தொட்டியில் நீந்தும் மீனை எடுத்து வந்து போடுவது. ஷூவினுள் மண்ணை அள்ளி கொட்டி வைப்பது. இரவெல்லாம் கண் விழித்து எழுதும் வீட்டுப் பாடத்தில் கிறுக்கி வைத்து, டீச்சரிடம் அப்பாவியாக உதை வாங்குவது என்று அவனிடம் பல சேட்டைகளை செய்தாலும்,

"இன்னைக்கு உன்னால தான் மிஸ்கிட்ட அடி வாங்கினேன், எங்கிட்ட பேசாத நரு.." அந்நேரம் மட்டும் அவன் முகத்தை தூக்கி வைத்து அமர்ந்திருந்தால்,

"யாது அத்தான் சாரி, இனிமே அப்டி செய்ய மாட்டேன் காட் ப்ராமிஸ், என்கிட்ட பேசு.." என அவள் பாவமாக உதடு பிதுகினால் போதும், கோவமெல்லாம் திசை தெரியாமல் காணாமல் ஓடி விடும்.

"இப்ப என்ன தான் டா பண்ணனும் நீயே சொல்லு.." கைகட்டி நின்று பொறுமையாக கேட்டான் ஆதி.

"நம்ம மட்டும் தனியா கார்ல போலாம், வேற யாரும் வரக் கூடாது.." கரார் பேர்வழியாக அவன் சொன்னது ஆதிக்கு மட்டும் கசக்கவா செய்யும்!

"சரிடா நம்ம தனியா போலாம் கிளம்பு.." என்றிட,

"ஓகே டாட்.." என்ற ஆத்வி வேகமாக தயாராகி வந்தான்.

ஆதி, மித்ரா, ஆரு, ஆத்வி, ஆதியின் பெற்றோர் தேவ் அமிர்த்தா என்று குடும்பமாக மித்ராவின் வீட்டிற்கு வந்திருக்க, ஆத்வியின் முகம் தந்தையின் முகத்துக்கு மேல் இருந்தது. அப்பா மகனை தவிர மற்ற அனைவரும் மித்ராவின் குடும்பத்தில் ஐக்கியமாகி விட்டனர். ஆனால் ஆதியின் பார்வை மட்டும் விடாமல் மனைவியின் பின் தான் சென்றது.

ஆத்விக்கு அங்கிருக்கும் குட்டி வாண்டுகள் தான் தொல்லை, மற்றபடி ஓரளவு அனைவரிடமும் சகஜமாகவே பழகுவான். ஆனால் ஆதிக்கு பெற்றோர்களை தவிர்த்து அவர்கள் பெற்ற குழந்தைகளை மிகவும் பிடிக்குமே!

அவனை கண்டதும் மாமா.. பெரியப்பா.. என்று மூன்று பிள்ளைகளும் அவன் மீது தாவிக் கொள்ள, ஆத்வியின் முகத்தில் தான் எள்ளும் கொள்ளும் வெடித்தது, கவியைக் கண்டதும்.

மாமாவை மம்மு.. மம்மு.. என்றழைத்தே மேலும் அவனை வெறுப்பேற்றி விட்டு,

"எத்தன முறை சொல்றேன் அப்டி கூப்பிடாதேன்னு, இனி மம்மு சொன்ன வாய ஒடச்சிடுவேன் டி.." நன்றாக அவனிடம் அடி வாங்கிக் கொண்டு அழுது கத்துவாள்.

என்னதான் ஆத்வியிடம் அடி வாங்கினாலும் அவன் பின்னே தான் மீண்டும் மம்மு என்று ஓடி, மீண்டும் மீண்டும் வாங்கிக் கட்டிக் கொண்டு வருவாள்.

யாரவது கேட்டால் அவன் தான் அடித்தான் என்றும் சொல்ல மாட்டாள். ஏற்கனவே ஒரு முறை அவன் அடித்தான் என்று ஒப்பாரி வைத்து, அவனை வீட்டினரிடம் திட்டு வாங்க வைத்து விட்டாள் என்று அந்த கோவத்தையும் சேர்த்து வைத்தே, கவியை பார்க்கும் போதெல்லாம் அடித்து முறைத்துக் கொண்டிருப்பான்.

அப்படி என்ன தான் கவி மீது அவனுக்கு தீராத கோவம்? என்பதை ஆத்வி தான் அவளிடம் வரும் நாட்களில் சொல்வான்.

கவி அப்போதே ஆதியின் செல்லம். அவன் மடியில் ஏறி அமர்ந்து, "மாமா எங்க அப்பாவ நீங்க ஷுட் பண்ணதே இந்த அம்மாவ சுட்டு இருக்கலாம், என்ன மட்டும் எப்பவும் திட்றா, அப்பாவ மட்டும் கொஞ்சுறா.." குடும்பத்திற்கு முன்னால் நரு சொல்ல, நித்யாவின் மானம் தான் காற்றில் பறந்தது.

தலையில் அடித்துக் கொண்ட நித்யா, "இவளை எந்த நேரத்துல தான் பெத்தேனோ, இவ அழிசாட்டியம் தாங்க முடியல நிலன்.." கணவனிடம் மகளைப் பற்றி குற்றபத்திரிக்கை வாசிக்க,

"என் பிள்ளையப் பத்தி தப்பா சொல்லாத டி, அவ சரியா தான் இருக்கா.. நீ தான் அவ சொல்ற மாறி, எப்பவும் என் நருவ திட்ற.." தன்னை சீண்டும் கணவனை ஏகத்திற்கும் முறைத்து வைக்க, அவன் பார்வை ரசனையாக படிந்தது மனைவியின் சிவந்த மூக்கில்.

நிலன் நித்யா, நிலா சரண், சுபி விக்ரம் மற்றும் அவர்களின் பெற்றோர்கள், ஆதியின் பெற்றோர் என அனைவரும் ஒரு பெரிய வேனில் ஏறிக் கொள்ளழ் அவர்களோடு செல்கிறேன் என்ற ஆருவை ஆத்வி விடாமல் பிடித்து வைத்துக் கொண்டான்.

"டேய்.. அவளை ஏன் டா பிடிச்சி வச்சிருக்க, அவங்களோட ஜாலியா வரட்டும் விடு.." கூடவே தன்னையும் விடாமல் பிடித்து வைத்து இருக்கின்றனரே என்ற கோபத்தில் கணவனையும், மகனையும் முறைத்தபடி மித்ரா சொன்னது எல்லாம், அவர்கள் காதில் விழவே இல்லை.

யாதவ் திவ்யா இருவரும் ஆதியோடு காரில் ஏறிக் கொள்ள, நர்மதைக்கு மட்டும் பயணம் என்றால் பயம் என்பதால், பின் சீட்டில் அமர்ந்திருந்த விக்ரம் மடியில் சமத்துப் பெண்ணாக அமர்ந்துக் கொண்டாள்.

குடும்பத்தோடு வேன் முன்னால் செல்ல, ஆதியின் கார் அந்த வேனை பின் தொடர்ந்து சென்றது.

குடும்பமாக கலகலத்துக் கொண்டு கடவுளை தரிசிக்க செல்பவர்களுக்கு, இதுவே கடைசி நாள் என்று தெரியாமல் போனது தான் பரிதாப நிலையோ!.

காலையில் குகை கோவிலுக்கு சென்று தெய்வ தரிசனத்தை குடும்பமாக பெற்றுக் கொண்டு, அங்கிருந்த அருவியில் விளையாடிக் களைத்தவர்கள், பூங்காவில் அமர்ந்து இரவு உணவினை முடித்துக்கொண்டு, ரூம் புக் செய்த ஹோட்டல் நோக்கி பயணம் சென்ற வழியில், குடும்பமாக முன்னால் சென்ற வேன் வெடித்து சிதறியது.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 46
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top