Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Administrator
Staff member
Messages
278
Reaction score
215
Points
63
அத்தியாயம் - 47

அனைவரும் அசதியில் கண்ணயர்ந்த வேளையில், ஓட்டுநர் பாதுகாப்பாக வேனை இயக்க, பகலெல்லாம் ஸ்வாமி தரிசனம் கூட பார்க்காமல் நன்றாக உறங்கிக் கொண்டிருந்த நரு, இரவு வந்ததும் கொட்ட கொட்ட விழித்து, சரண் விக்ரமோடு வலவலத்தபடியே வந்தாள்.

சற்று இடைவேளை விட்டு வேன் பின்னால் காரை ஓட்டியபடி வந்த ஆதிக்கும் ஓரே உடல் அசதி. மித்ரா என்ன சொல்லியும் ட்ரைவரை வைக்காமல் வெகு தூரம் அவன் ஒருவனே காரை ஓட்டியதில்.

பிள்ளைகளை எல்லாம் வசதியாக படுக்க வைத்த மித்ரா, "இதுக்கு தான் சொன்னேன் ட்ரைவர் வச்சிக்கலாம்னு, இப்ப பாருங்க உங்க முகமே சோர்ந்து போச்சி, சொல் பேச்ச கேட்டா தானே.." அக்கறையாக கடிந்து அவன் தலையை மென்மையாக கோதிக் கொடுக்கவும், இதமாக மூச்செடுத்த ஆதி,

"ட்ரைவர் வச்சா நாம இப்டி பிரீயா இருக்க முடியாது மித்துபேபி.." அவளின் கரத்தை எடுத்து தன் உதட்டில் ஒட்டிக்கொள்ள, அழகான புன்னகை சிந்திய மித்ரா,

"சரியான ஆளு தான் நீங்க, சரி உங்களால ரொம்ப முடியல காரை நிறுத்துங்க முகத்தை கழுவிட்டு, ரெஸ்ட் எடுத்துட்டு போலாம்.." கரிசனமாக சொல்லும் மனைவியின் பேச்சை, கேட்கமாட்டேன் என்றா சொல்ல போகிறான்.

"சரி இரு மித்து பேபி, கொஞ்ச தூரம் போனதும், வெளிச்சமான இடமா பாத்து ஸ்டாப் பண்றேன்.." என்றபடி ஒதுங்க இடம் தேடி காரை நிறுத்த, கண்ணுக்கெட்டும் தூரத்தில் சென்றுக் கொண்டிருந்த வேன் டம்.. டமால் என்ற பெருத்த சத்தத்துடன், சில்லு சில்லயாக வெடித்து சிதறி கொலுந்து விட்டு எரிந்துகொண்டிருந்தது.

செவி கிழியும் சத்தத்தில், நடந்த நிகழ்வு புரியாமல், எரிந்துக் கொண்டிருந்த வேனை அதிர்ச்சியாக காண, உறங்கிக் கொண்டிருந்த பிள்ளைகளும் திகிலுடன் எழுந்து விழிக்க, ஐயோஓஓ.. என நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுத மித்ராவின் கதறல், பரிதாபமாக அவ்விடத்தில் எதிரொலித்தது.

பிள்ளைகளை காரில் பூட்டி விட்டு மனைவியை அழைத்துக் கொண்டு அவசரமாக ஓடினான் ஆதி. ஆனால் என்ன பயன், ஒட்டு மொத்த குடும்பமும் தீயில் கருகி, எலும்பு கூட கிடைக்காதபடி சாம்பலாகி விட்டதே!

15 வயதுக்கு மேல் உள்ள பிள்ளைகளுக்கு என்ன நடந்திருக்கும் என்று யூகித்துக் கொள்ள முடியாதா என்ன! அப்பா அம்மா பாட்டி தாத்தா மாமா அத்தை என்று கத்திக் கதறி கண்ணீர் விட்டு துடித்ததுகள் பிள்ளைகள்.

"ஐயோ... என் குடும்பம் மொத்தமும் என் கண்ணு முன்னாடியே கருகி போச்சே.." கதறிக் கத்தியபடி தகதகவென எரிந்துக் கொண்டிருக்கும் தீக்குள் ஓடப் போன மனைவியை, கண்ணீரோடு பிடித்து இழுத்து நெஞ்சில் சாய்த்து அழுது விட்டான் ஆதி.

"இதுக்கு தான் விதி இப்டி எங்கள மட்டும் தனியா பிரிச்சி வச்சிதா.. கடவுளே, என் குடும்பம் உனக்கு என்ன பாவம் பண்ணுச்சின்னு இப்டி ஒரு கொடுமையான தண்டனைய கொடுத்து இருக்கே...

அந்த சின்ன உயிர கூட விடாம எடுத்துகிட்டியே.." அவன் நெஞ்சில் அடித்துக் கதறியவளை தேற்றும் மனநிலையில் அவனும் இல்லையே! அவனது பெற்றோரும் தானே தீயில் கருகி போனது.

"நருஊ.. ஐயோ குழந்தையும் தீயோட கருகி போச்சே.. அந்த குழந்தைய மட்டுமாவது விட்டு வச்சிருக்கக் கூடாதா.. துடிச்சி போயிருப்பாலே குழந்த.." கண்ணிலும் மூக்கிலும் நீர் வழிய தலையில் அடித்துக் கொண்டு நிறுத்தாமல் மித்ரா கதற, போலீஸார் விரைந்து வந்தனர்.

"ஒரே நாளுல என் மொத்த குடும்பமும் என்ன விட்டு முழுசா பிரிச்சிகிட்டியே கடவுளே உனக்கு கண்ணில்லயா.. கருவுல இருந்த குழந்தைய கூட விட்டுவைக்கலையே..." சுற்றியும் கூட்டம் கூடிட, அவளின் அழுகை குரல் மட்டும் பரிதாமாக எதிரொலிக்க செய்தது.

போலிஸார் ஆதியிடம் நடந்ததை மேலோட்டமாக விசாரித்துவிட்டு, நெருப்பை அணைத்ததும், யார் என்றெல்லாம் கண்டறிய முடியாத நிலையில், கருகிய உடல்களை வேனில் இருந்து தூக்கி வருவதை கண்ட மித்ரா, அதிகமாக அழுதுக் கதறியே மயங்கிப் போக,

மனம் இறுகிய நிலையில் அவளை காரில் கிடத்தில் விட்டு, ஆருவிடம் பிள்ளைகளையும் அம்மாவையும் பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு, ஏதாவது தடயம் கிடைக்கிறதா என போலீஸாருடன் தேடி சென்றான்.

அவர்கள் பயணம் செய்த இடம் ஒரு மலை பகுதி. சுற்றிலும் ஆங்காங்கே பெரிய பெரிய மலைகள் பாறைகள் என்றிருக்க, இரவு வேளையில் நன்றாக பனிமூட்டம் கூடி எதிரே இருப்பவரை கூட பார்க்க முடியாதபடி இருந்தது.

ஆதியின் செல்வாக்கை பற்றி அறிந்து கொண்ட போலீஸாரும், சிரமம் பார்க்காமல் அவர்களது வேலையை மும்புறமாக செய்துக் கொண்டிருக்க,

"சார்.. சார்.." என்ற ஒரு ஏட்டின் அலறல் சத்தத்தில் மொத்த பேரும் அங்கு ஓடினர்.

மலை சரிவு ஏற்பட்ட பல்லத்தாக்கின் அருகில், தலையில் அடிப்பட்ட நிலையில், ரத்த வெல்லத்தில் கிடந்த விக்ரமை கண்டதும் அவனிடம் ஓடிய ஆதி,

"டேய்.. டேய்ய்.. வ்.விக்ரம் கண்ண தொற டா.." அரைமயக்கத்தில் கிடந்தவனை உளுக்க, ஆதியின் கரத்தை தனது ரத்தம் படிந்த நடுங்கும் கரத்தால் பிடித்த விக்ரம்,

"ந.ந. ந.ந. ர்..ர்...ரு.." குழந்தையின் பெயரைக் கூட முழுதாக சொல்ல முடியாமல், அவனது பக்கவாட்டில் கிடந்த பல்லத்தாக்கை கண்ணீர் வழியும் கண்களோடு ஓரக் கண்ணால் பார்த்து விட்டு மயங்கி விட்டான்.

"டேய்.. விக்ரம் என்னாச்சி டா.. என்ன சொன்ன ஒன்னும் புரியலையே.. கண்ண தொற விக்ரம்.." மிஞ்சிய ஒரு உயிரிறும் தங்களை பிரிந்து சென்று விடுமோ என்ற அச்சத்தில், தன்னையும் அறியாது விக்ரமை அணைத்துக் கண்ணீர் சிந்த, விரைந்து வந்த மருத்துவர்கள் விக்ரமை பரிசோதித்து, மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர்.

அப்போது கோமாக்கு சென்ற விக்ரம் தான், இதுவரையிலும் கண் விழிக்காமல் இருக்கிறான்.

"நல்லா தரவா செக் பண்ணுங்க, நாங்க வேன் எடுத்துட்டு வரும் போது அதை நானும் சரி எங்க வீட்டு ஆட்களும் சரி, நல்லா பக்காவா செக் பண்ணிட்டு தான் அதுல வந்தோம்.. அதோட கண்டிஷன் ரொம்பவே நல்லா இருந்துச்சி,

அப்டி இருந்தும் இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்து இருக்குன்னா, நிச்சயம் இதுல ஏதோ தப்பு நடந்திருக்கு.." இறுகிய குரலில் ஆதி சொல்ல, காவலர்களும் அவன் சொல்லுக்கு ஏற்ப தூக்கத்தை மறந்து துரிதமாக செயலில் ஈடுபட தொடங்கினர்.

இரவு பத்து மணி போல் வேன் வெடித்து அனைத்து உயிர்களும் பிரிந்திருக்க, அதிகாலை நான்கு மணியாகியது தற்போது. ஆதியின் கண்கள் சிறிதும் அசரவில்லை காரில் அமர்ந்து பிள்ளைகளை மடியில் தாங்கி, மயக்கத்திலும் துக்கத்தில் கண்ணீரை சிந்திக் கொண்டு இருக்கும் மனைவியின் முகத்தையே வெறித்திருந்தான்.

அப்போது கார் கதவை சில காவலர்கள் தட்டவே, அழுது ஓய்ந்து உறங்கி இருந்த பிள்ளைகளை படுக்க வைத்து விட்டு வெளியே வந்தவனிடம்,

"சார்.. வேன் தானா வெடிச்ச மாதிரி தெரியல, வேணும்னே யாரோ பாம் வீசி இருக்க மாதிரி தான் இருக்கு" பாம் ஸ்க்வாட் சொல்ல, யோசனையாக அவர்களை பார்த்தான் ஆதி.

கெட்ட மரத்தின் ஆணி வேறையே உருதெரியாமல் அழித்த ஆதி, ஏதோ ஒரு இடத்தில் உள்ள அதன் கிளையை மட்டும் வெட்டாமல் விட்டு தவறு செய்து விட்டான் போலும். அந்த கிளை தான் காலப்போக்கில் வேர் பிடித்து துளிர்த்து வந்து மீண்டும் மரமாக உருபெற்று, ஆதியின் குடும்பத்தையே கருவருத்து விட்டது.

நியாயமாக இது ஆதிக்கும் அவன் குடும்பத்திற்கு மட்டுமே போட்ட ஸ்கெட்ச். ஆனால் இதில் மித்ராவின் பெற்றோர் அண்ணன் தங்கைகள் குடும்பம் என சேர்த்து, ஆதியின் பெற்றோரின் உயிர்களை எல்லாம் காவு வாங்கி விட்டது.

எந்த இடத்தில் தவறிழைத்தோம் என்று இவன் கடுமையான யோசனையில் இருக்க, எங்கோ ஒரு மூலையில் இருந்த ஒருவனின் சிரிப்புக் குரல் அகோரமாக வந்துக் கொண்டு இருந்தது.

யார் அவன்?

மலையடிவாரத்தில் சிறு பெண் ஒருத்தி தலை கைகால்களில் அடிப்பட்டு மயங்கிய நிலையில் பார்த்த அங்கிருந்த மக்கள், அரசு மருத்துவமனையில் சேர்த்து சென்றனர்.

உறக்கம் வராமல் பின் சீட்டில் ஏறி நின்று கண்ணாடி வழியாக வேடிக்கைப் பார்த்து வந்த நரு, ஆதியின் கார் நின்றுவிட்டதை கண்டதும், அசதியில் கண் சொக்கி சீட்டில் சாய்ந்து கண்மூடி இருந்த விக்ரம் தோளில் அடித்தாள்.

" மாமா.. மாமா.. ஆதி மாமா கார் நின்னு போச்சி, வா போய் என்னனு பாக்கலாம்..! என கத்திக் கூச்சலிடவும், நன்றாக உறங்கிக் கொண்டிருந்த மற்றவர்களும் அவள் புறம் திரும்பிப் பார்த்துவிட்டு, மீண்டும் கண் மூடிக் கொள்ள, உறக்கம் கலைந்த விக்ரம்,

"என்ன நருமா, ஏன் கத்துற.." என்றான்.

"மாமா.. ஆதி மாமா கார் நின்னு போச்சி. நான் மித்து அத்தைக் கூட வரேன் என்ன அங்க கூட்டிட்டு போ.." என்று அடம் பிடிக்கவும்,

"அதான் பிள்ள சொல்லுதுல்ல வண்டிய நிறுத்த சொல்லிட்டு கூட்டிட்டு போய் விடுங்க மாமா, யாது திவி இல்லாம அவளுக்கு போர் அடிக்குது போல.." என்றாள் சுபி.

"ஆமா அத்த நீயும் எங்க கூட வா, நம்ம எல்லாரும் அவங்க கூட வரலாம்.." என்றபடி சுபி கை பிடித்து இழுக்க,

"ஏய் வாலு, அவங்கள தூங்க விடாம ஏன் டி இப்டி ஓடுற வண்டில அட்டகாசம் பண்ற.." நித்யா திட்ட வாயெடுக்கும் போதே தடுத்த விக்ரம்,

"சின்ன பிள்ள எம்புட்டு நேரம் பெரியவங்க முகத்தையே பாத்துட்டு இருக்கும், கார்ல தான் எல்லா பிள்ளைகளும் இருக்காங்களே, ஹோட்டல் போக நேரம் இருக்கு, அதுவரைக்கு அவங்களோட கூட்டிட்டு போயிட்டு வரேன்.." என்ற விக்ரம், நருவை தூக்கிக் கொண்டு எழுந்தவன்,

"ஏப்பா டிரைவர் கொஞ்சம் வண்டிய நிறுத்து.." என்றபடி முன்னே செல்ல, நருவோ சுபியின் கரத்தையும் சேர்த்தே பிடித்து இழுக்க, அவளும் அவர்களோடு சென்றாள்.

வேன் ஸ்லோவாக ஓரம் கட்டி நிற்கப் போக, படி இறங்கப் போன விக்ரம், வெளியே எதையோ கண்டு அதிர்ந்து போனவன்,

"டேய்ய்ய்.. வேண்டாம் டா.." என கத்திக் கொண்டே அவன் இறங்கப் போக, அதற்குள் அவர்களது வேனை பின்தொடர்வது போல், தெரியாமல் வந்த மர்ம நபர்கள், வெடிகுண்டை வேனின் மீது வீசி விட்டு, அவர்கள் வந்தக் காரை வேகப்படுத்தி சென்றிருக்க,

நொடியும் தாமதிக்காத விக்ரம் கையில் இருந்த நருவை தூக்கி வீசிவனாக, மனைவியின் கை பிடித்து குதிக்கப் போக, அதற்குள் பாம் வெடித்து வேனும் சேர்ந்து வெடித்து, இருவரையும் ஆளுக்கு ஒரு மூலையில் தூக்கி வீசி இருந்தது. அவர்களின் சத்தம் எல்லாம், வேன் வெடித்த பெரும் சத்தித்தோடு கலந்து மறைந்தது.

அப்போது விக்ரம் மற்றும் நர்மதை இருவரும் உயிருடன் இருக்கிறார்கள் என்றால், சுபி என்னவானாள்?
உயிருடனாவது இருக்கிறாளா? கதையின் போக்கில் தெரிந்து கொள்வோம்.

நடந்ததை சொல்லி முடிக்க, அனைவரின் கண்களும் கலங்கிப் போனது.

"வேன் வெடிச்சதுல கருகிப் போன உடம்புங்க, அதுவும் முழுசா கிடைக்கல.. யார் யாரோட என்புனு கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு சிதஞ்சி தான் கிடைச்சுது, அதனால தான் நாங்க ஒருத்தர் விடாம இறந்துட்டாங்கனு நினைச்சி, உன்ன எங்கேயும் தேட முயற்சி பண்ணாம விட்டுட்டோம்..

இத்தனை வருஷமா நீ உயிரோட இல்லைனு நெனச்சி, எத்தனை நாள் அழுது இருக்கேன் தெரியுமா நரு.. என் அண்ணனுக்கு நீன்னா உயிர், ஒரே பிள்ளைன்னு ரொம்ப செல்லம்..

அவனுக்கு மட்டும் இல்ல எங்க எல்லார்க்கும் உன்ன ரொம்ப பிடிக்கும்.. உன் அம்மா உன்ன செல்லமா கண்டிச்சா கூட எல்லாரும் அவகிட்ட உனக்காக பறிஞ்சி பேசுவாங்க, அதிலும் உள்ள கோமால படுத்து இருக்காரே உன் மாமா விக்ரம், அவரை சொல்லவே வேண்டாம்..

எங்க எல்லாரையும் விட அவருக்கு தான் உன்ன ரொம்ப பிடிக்கும், நீயும் அவரோட தான் அதிக நேரம் விளையாடுவ.. உன்ன ஒரு குடும்பமே சீராட்டி பாராட்டி வளத்து தூக்கி கொஞ்சி கொண்டாடுச்சி.. அப்டிப்பட்டவ யாரும் இல்லாதவளா அனாதை ஆசிரமத்துல வளந்து, பழசு எதுவும் நியாபகம் இல்லாம இருக்கியே.." என்று வாய் பொத்தி மித்ரா அழவும். கவிக்கும் அழுகை வந்தது.

அவளுக்கும் சில நேரங்களில் ஒரு சில கேள்விகள் தோன்றாமல் இருந்ததில்லை. "தனக்குதான் தான் யார்? பெற்றோர் யார்? குடும்பங்கள் இருக்கிறதா? என்றெல்லாம் நியாபகம் இல்லை. ஆனால் அவர்களுக்கு நியாபகம் இருக்குமே!

அப்படி இருந்தால் ஏன் தன்னை யாரும் தேடி வரவில்லை? ஒருவேளை தன்னையும் வேண்டாம் என்று தான் எங்காவது தூக்கி வீசி சென்றிருப்பார்களா..?" என்றெல்லாம் பலமுறைகள் தனிமையில் இருக்கும் போது சிந்திப்பது உண்டு.

ஆனால் இந்த அளவிற்கு ஒரு குடுபத்தின் பாசத்தை அனுபவித்து தான், இந்த நிலைக்கு ஆளாகி இருக்கிறோம் என்று கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை. அவ்வப்போது அவள் எண்ணத்திலும் மனதிலும் மங்களான உருவமாக வந்து போவது அவன் ஒருவன் மட்டுமே!

உதடு பிதுக்கி, "அத்தை.." என மித்ராவை கட்டிக்கொண்டு அழத் தொடங்கியவளை,

"நருஊ.. திரும்ப நீ உயிரோட என்கிட்ட நல்லபடியா வந்ததே ரொம்ப பெரிய விஷயம், அழாதேடா.. இனிமே அத்தை உன்ன நல்லபடியா பாத்துக்குறேன், உனக்கு நாங்க இத்தனை பேர் இருக்கோம், நீ இனி எதுக்கும் கவலை படாதே.." அவளை அணைத்து சமாதானம் செய்ய,ஆருவும் தன் பங்குக்கு பாசமழை பொழிந்து அவளை சகஜ நிலைக்குக் கொண்டு வர, ஓரளவுக்கு அங்கு அமைதி நிலவியது.

ஸ்வாதிக்கு தோழியின் குடும்பம் கிடைத்து விட்டது என்றதில் மிகவும் மகிழ்ச்சியை கொடுத்தாலும், தனக்கும் இப்படி ஒரு அன்பான குடும்பம் கிடைக்காமல் போய் விட்டதே என்ற ஏக்கம் அவள் மனதில் வராமல் இல்லை. கூடிய விரைவில் அதே குடும்பம் அவளது சொந்தமாகப் போவது அறியாமல்.

"ஆமா ப்பா.. கவி தான் நம்ம நருனு உங்களுக்கு எப்டி தெரியும், அப்டி தெரிஞ்சிதே ஏன் எங்ககிட்ட சொல்லல, சொல்லிருந்தா இந்த சந்தோஷம் முன்னாடியே வந்திருக்குமே.." ஆரு கேள்வி எழுப்பியதும்,

அதானே என கோரஸ் பாடிய அஜய், ஆதி பார்த்த பார்வையில், "சும்மா மாமா.." வாயசைத்து இளித்து வைக்க,
"அங்க என்ன பார்வை அதான் உங்க பொண்ணு கேக்குறாள்ள பதில் சொல்லுங்க, கவி தான் நருனு ஏன் எங்ககிட்டருந்து மறைச்சீங்க.." மித்ரா கேட்டாள் முறைப்பாக.

அதில் மெலிதாக புன்னகை சிந்தி உண்மையை சொன்னான். அப்படி என்ன உண்மையா இருக்கும்?

சுபி யாருனு ஏதாவது கெஸ் இருக்கா?
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 47
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top