Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Administrator
Staff member
Messages
278
Reaction score
215
Points
63
அத்தியாயம் - 49

ஆஆஆ.. என்ற அலறல் சத்தம் கேட்டு பதறியடித்து எழுந்த ஸ்வாதி,
"ஏய்ய்.. கவி.. என்னாச்சி.. ஏன் டி கத்துற.." உறக்கத்தில் இருந்த கவியை உளுக்கி எழுப்பவும், முகமெல்லாம் வெளிரி வியர்வையில் குளித்த உடலோடு எழுந்து அமர்ந்தவளுக்கு, அப்பட்டமாக உடல் நடுங்கியது.

"கவி.. கவி.. என்ன டி என்னாச்சு.. ஏன் இப்டி பயந்து போய் இருக்க.." நெஞ்சில் கை வைத்துக் கொண்டு மூச்சி வாங்கி கண்கலங்கியவளை கண்டு பதட்டமாக அவள் வினவவும், காதில் இயர் பட்ஸ் இல்லாததால் அவள் பேசுவது புரியாமல்,

" ஸ்வாதி.. அ.அவர்க்கு.. அவர்க்கு.. க்.கத்தி.. ரத்தம்.." என தனியாக அவள் புலம்புவதை கண்டு, தண்ணீரை எடுத்து குடிக்க வைத்து மெஷினை காதில் மாட்டிவிட்டவள்,

"கவி கெட்ட கனவு ஏதாவது கண்டு பயந்துட்டியா.." என்றதும் ஆம் எனும் விதமாக தலையாட்ட, மென்மையாக அவள் தலைகோதிக் கொடுத்தவளாக,
"அப்டி என்ன கனவு வந்துச்சி.." என்றாள்.

"யாரோ அவரை கத்தியால குத்திட்டாங்க ஸ்வாதி.." விம்மலாக அவள் சொன்னதை கேட்ட ஸ்வாதி, ஒரு நொடி திகைத்து பின் சகஜமாக மாறியவள்,

"பார்றா காலைல இருந்து கல்யாணமே பிடிக்கலைனு சொன்னவ, இப்போ அவராம்ல.. நீ நினைக்கிற மாதிரி ஒன்னும் இல்ல பயப்படாதே கவி, அங்கிள் தான் சொன்னாறே தவிர்க்க முடியாத அர்ஜென்ட் வேலையா ஆத்வி சார் வெளியூர் போய் இருக்கார்ன்னு..

இந்நேரம் அவர் நல்லா தூங்கியே இருப்பார், எதை நினைச்சும் கவலை படாம வா வந்து படு.." சமாதானம் கூறி அவளை படுக்க வைக்க, கவிக்கு தானே தெரியும் அவன் எங்கே சென்றிருக்கிறான் என்று இமைகளை மூடிய கவிக்கு உறக்கம் தொலைந்துப் போனது.

*****

இங்கோ, கண்மூடி படுத்திருந்த ஆத்விக்கும் தன்னவளின் நினைவு தான். புது மனைவியை விட்டு பிரிந்து இருப்பது அத்தனை எளிதாக தோன்றவில்லை அவனுக்கு.

"ராட்சசி வந்த முதல் நாளே என்ன இப்டி தவிக்க விடுறாளே.. இத்தனைக்கும் அவளை எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல.." உதடு சுழித்துக் கொண்டவனின் மனசாட்சி, காரிதுப்பியதை எந்த மூலையில் துடைத்து எறிந்தானோ!

பொழுது அவன் கிளம்பும் போது அவள் போகாதே எனும் விதமாக ஏக்கம் கொண்டு பார்த்த தவிப்பான கண்களும், அழத் துடித்து தயாராகிய செவ்விதழும், வேக மூச்சிகள் விடுகையில் சிவந்து விரிந்த செரிப்பழமான மூக்கின் நுனி சிவப்பழகும், மாறி மாறி அவன் இமைகளில் வந்து உறங்க விடாமல் ஆட்சி செய்தது.

"ஸ்ஸ்ஸ்.. கவி.. ஏன் டி இப்டி படுத்தி எடுக்குற.." அவள் நினைவில் அவஸ்தையாக எழுந்து அமர்ந்தவனுக்கு, அவளிடம் விடைப்பெற்று கிளம்பும் முன் பாவையின் இதழ்ப் பற்றி அழுத்தமாக முற்றுகை இட்டவனின் வேகம் தாங்காமல், எக்கி அவன் கழுத்தைக் கொண்ட அவளின் மென்கரங்கள் தானாக உயர்ந்து, ஆடவனின் சிகைப்பற்றி தன்னோடு இழுத்து கண்சொக்கி இசைந்து கொடுத்தவளை கண்டு, மங்கையின் மீது ஆசையும் மோகமும் அதிகரித்து போனது.

அதிலும் சேலைகட்டி பழக்கமில்லாதவளுக்கு அடிக்கடி சதி செய்து, கணவன் முன்பு அப்பட்டமாக விலகி விருந்தளிக்கும் மாராப்பும், இடுப்பில் நிற்பேனா என சறுக்கிக் கொண்டு கீழிறங்கி பளிச்சிடும் வெண்ணிடையும் வேறு அவனை பாடாய் படுத்தி எடுத்தது.

வன்கரம் கொண்டு அவள் மெல்லிடை கசக்க, ஹ்ம்.. என முனகி, துள்ளி அவனை மோதி, கிறங்கவைத்தாள் பூவை.

அந்த நியாபகத்தில் கண்மூடி லைத்த ஆத்வி, மனைவியை முத்தமிடுவது போன்ற ப்ரம்மையோடு உதடு குவித்து உறிஞ்சி, "ஆஆ.. கவிஇஇ.. என்ன டி பண்ணிட்டு இருக்க, தூங்கி இருப்பியா இல்ல நான் உன்ன நினைச்சிட்டு இருக்க மாதிரி, நீயும் என் நினைப்பா தூக்கம் வராம படுத்திருப்பியா..

அப்டியே ஓடி வந்து உன்ன கைல அள்ளி முத்தத்தால குளிப்பாட்டனும்னு என் உடம்பும் மனசும் தவிச்சு துடிக்குது, பட் இந்த ரேஸ விட நீ ஒன்னும் எனக்கு பெருசு இல்ல டி.. உனக்கு எப்டி உன் பிரண்டு முக்கியமோ, எனக்கு இந்த ரேஸ் முக்கியம்..

நீ எப்டி அன்னைக்கு என்ன பத்தி நினைக்காம இதயத்தை கொடுக்க துணிஞ்சியோ, எனக்கும் உன்ன நினைச்சி உருகனும்னு எந்த அவசியமும் இல்ல.. எல்லாத்துக்கும் சேத்து வச்சி உன்ன வந்து பாத்துக்குறேன் டி.." தனிமையில் புரண்டுக் கொண்டு இருந்தவனுக்கு உடல் அலுப்பையும் தாண்டி, பாவையின் ஸ்பரிசம் உயிர் ஆழம் வரை தீண்டிய உணர்வு.

"ஐயோ காலையில ரேஸ்க்கு கிளம்பனும் ராட்சசி தூங்க விட மாட்றாளே.." தலையணையை தூக்கி தூர வீசி எழுந்த ஆத்வி, பாக்கெட்டில் இருந்த சிகரெட்டை எடுத்து பற்ற வைத்து புகையை ஆழமாக இழுத்து விட்டவனுக்கு, இப்போது மூச்சி சீராக விட முடிந்தது.

மறுநாள் காலை ஏழு மணியளவில் ரேஸ் தொடங்கியது. தீபக்கின் குரூதப் பார்வை ஹெல்மெட்டை தாண்டி ஆத்வியின் மீது பாயிச்சி வீச, அதை உணர்ந்து கோணலாக இதழ் வளைத்துக் கொண்டவன்,
"போட்டி முடியிர கடைசி நாள், மவனே நீ எந்த ஹாஸ்பிடல்ல மாவுக்கட்டு போடுவியோ.." உள்ளுக்குள் நகைத்து, புயல் வேகத்தில் இருசக்கர வாகனத்தை இயக்க, தீபக்கின் இலக்கு என்னவோ ஆத்வியை போட்டுத் தள்ளுவதிலேயே தான் இருந்தது.

டுர்.. டுர்.. டுர்ர்.. என்று தார் சாலையில் பைக்குகள் தாருமாறாக அதிவேகத்தில் வளைந்து நெளிந்து சென்று கொண்டிருக, தரையை தொடாத குறையாக வலப்பக்கமும் இடப்பக்கமுமாக பைக்கை சாய்த்து சாய்த்து, மின்னல் வேகத்தில் பறந்துக் கொண்டிருந்த ஆத்வியின் பைக்கை, இடித்து மோதவே வெறிகொண்டு பின்னால் வந்த தீபக், எப்போதும் போல மண்ணை கவ்விக் கொண்டே வந்தான்.

கணவனின் நினைவில் இரவு முழுதும் ஒரு பொட்டு கூட தூங்காமல், காலை வெகுவாகவே எழுந்து கொண்ட கவி, குளித்து முடித்து தன்னிடம் இருக்கும் நல்ல சுடிதார் ஒன்றை அணிந்துக் கொண்டு வெளியே வரவும், கணவனுக்கு காப்பி எடுத்து வந்த மித்ரா,

"என்ன கவிமா அதுக்குள்ள எழுந்துட்ட, இன்னும் கொஞ்ச நேரம் நல்லா தூங்கி ரெஸ்ட் எடுக்க வேண்டியது தானே.." என்றாள் கலையான முகத்துடன்.

"இல்ல அத்தை தூக்கம் வரல, அதான் சீக்கிரம் எழுந்து உங்களுக்கு கூட மாட ஹெல்ப் பண்ணலாம்னு வந்தேன்.."

"ஓஹ்.. அப்டியா.. மேடம் என்ன வேலை செய்வீங்க.." என்றாள் ஒற்றை கரத்தை இடுப்பில் வைத்து, கேலியாக புருவம் தூக்கி இறக்கி.

"வேலையா.. என்ன வேலை செய்றது அத்தை.." என அசடாக தலையை சொரிந்தவள், "ஹான் நீங்க ஏதாவது வேலை சொல்லுங்க நான் சரியா பண்றேன்.." என்றிட,

"ஓஹோ.. வேலை சொன்னா மேடம் சரியா செஞ்சிடுவீங்க, சரி அப்போ பூஜைரூம்ல உள்ள பழைய பூவை எல்லாம் எடுத்துட்டு, பிரிட்ஜ்ல இருக்க புதுபூவை ஒவ்வொரு படத்துக்கும் போட்டுடே இரு நான் வந்து பாக்குறேன், அதுக்கு முன்னாடி இந்தா இந்த காபிய குடிச்சிட்டு வேலையப் பாரு.." என்றவளாக அவளிடம் ஒரு கப்பைக் கொடுத்து விட்டு சென்றாள்.

மாமியார் பேச்சிக்கு மறுபேச்சி உண்டா என்ன! மித்ரா சொன்னது போலவே சொட்டு விடாமல் காபியை பருகி விட்டு, பூஜையறை சென்றவள் சொன்னது போலவே, சுவாமி படங்களில் உள்ள பழைய பூக்களை எல்லாம் குப்பையில் போட்டு வந்து, புது பூக்களை எடுத்து வந்து துண்டு துண்டாக கத்தரித்து படத்தில் மாட்டிக் கொண்டு இருக்க,

சுவற்றில் பதுங்கி பதுங்கி மேய்ந்துக் கொண்டிருந்த தடித்த பல்லி ஒன்று, சட்டென கவியின் மேல் விழவும், அலறி துள்ளி குதித்து கையில் வைத்திருந்த படத்தை தவற விட்ட நேரம், சரியாக படத்தையும் பிடித்து, "பாத்து கவி.." என அவளையும் கை பிடித்து, சரியாக நிறுத்தி இருந்தான் ஆதி.

சத்தம் கேட்டு ஓடி வந்த மித்ராவும் நடந்ததை யூகித்துக் கொண்டவளுக்கு, நல்ல வேலையாக சுவாமி படம் உடையாமல் விட்டதே என்ற நிம்மதி பிறந்தாலும், ஏனோ தவறாக மனம் நெருடியது என்றால், பயத்தில் வெடவெடத்து நின்ற கவிக்கும் மனது படபடவென அடித்துக் கொண்டது.

போதா குறைக்கு தீபக் பேசியது வேறு நியாபகம் வர, மேலும் பயந்துப் போனவள், "கடவுளே எந்த ஒரு ஆபத்தும் என் மாமாவ நெருங்காம பாத்துக்கோ.." அவசர வேண்டுதலை சுவாமி முன் வைக்க, அதே நேரம் இங்கு தீபக்கின் சதியில் சிக்காமல், மைரிழையில் உயிர் தப்பி இருந்தான் ஆத்வி.

"கவி உனக்கு ஒன்னும் இல்லையே.." மித்ரா கேட்கவும்,

"இ.இல்ல பல்லி விழுந்துடுச்சி அதான் கை தவறி படம்.." என தடுமாறியவளுக்கு வந்த முதல் நாளே, இப்படி ஒரு அசம்பாவிதம் தன்னால் ஏற்பட்டு விட்டதே என்று குற்றவுணர்ச்சியாக இருந்தது.

"சரி விடு கவி, இதெல்லாம் சாதாரணம் தான், எனக்கே கூட சில நேரத்துல இப்டி நடந்து இருக்கு.. நீ இதெல்லாம் பெருசு பண்ணிக்காத" என்ற மித்ரா அவளை சகஜமாக்க முயன்று,

"ஆமா இதென்னடா சுடிதார் போட்டு இருக்க, புடவை கட்டிகலையா.." என்றபடியே வெளியே அழைத்து வர,

"இல்ல அத்தை எனக்கு புடவை கொஞ்சம் கூட செட்டாகல, இதுதான் கம்ஃபோர்ட்டபிளா இருக்கு.. ரெண்டு நாளா அந்த புடிவையக் கட்டிக்கிட்டு ரொம்பவே நொந்து போய்ட்டேன்.." அவள் பாவமாக சொல்லவும் மௌனமாக புன்னகைத்துக் கொண்ட மித்ரா,

"சரி உனக்கு எது வசதியா இருக்கோ அதுவே போட்டுக்கோ.. ஹான் சொல்ல மறந்துட்டேன் பாரு, ஆரு கூட கடைக்கு போய் உனக்கும் ஸ்வாதிக்கும் தேவையானத எல்லாம் வாங்கிட்டு வந்துடுங்க.." என்றிட,

"இல்ல அதெல்லாம் எதுவும் வேணாம் அத்தை, எங்களுக்கு தேவையானது எல்லாம் போதுமான அளவுக்கு இருக்கு, தேவை படும்போது வாங்கிக்கலாம்.." என்றாள் மறுப்பு கூறும் விதமாக.

"ம்ம்.. அதெல்லாம் எனக்கு தெரியும், ஒழுங்கா சொல்றதை கேட்டு கிளம்பி போயிட்டு வா.. இதுக்கு மேல பேசக் கூடாது" ஸ்ரிக்ட் மாமியாராக மித்ரா சொல்லவும், சரி என சிரித்துக் கொண்டாள்.

ஐந்து நாட்களின் இரவுகளும், இருவருக்கும் தூங்கா இரவாகவே கழிந்தது, ஒருவரை ஒருவர் நினைத்துக் கொண்டு. கடைசி ஆறாவது நாள் (Choglamsar) சோக்லாம்சாரில் இருந்து லடக் எல்லையை தொட இன்னும் முப்பது நிமிடங்களே இருக்க, போட்டி மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்தது.

*****

இங்கு இரண்டு மாதங்கள் கழித்து வீடு வந்து சேர்ந்தான் யாதவ். அறைக்குள் இருந்த ஸ்வாதிக்கு அவன் வந்திருப்பது தெரியாமல் போக, யாதவ்க்கும் அவள் தன் வீட்டில் இருப்பது தெரியாமல்,
"அம்மா.." என்றபடி உற்சாகமாக வந்தான்.

"யாதவ்.." மித்ரா அவனை அன்போடு வரவேற்று உபசரித்து பேசிக் கொண்டு இருக்கவும், புது மஞ்சள் தாலி மினுமினுக்க அறையில் இருந்து வந்த கவியைக் கண்டதும்,

"வாங்க அண்ணி.." என புன்னகையாக வரவேற்ற யதாவை பார்த்ததும் குதூகலித்த கவி,

"யாதவ் சார்.. வந்துடீங்களா.." அவனிடம் வேகமாக வந்தவள், "ஆமா என்ன இப்போ என்னனு கூப்ட்டீங்க.." இடுப்பில் கை வைத்து முறைப்பாக கேட்டாள்.

"அண்ணிய அண்ணி தானே கூப்பிட முடியும் அண்ணி, அதான் அண்ணினு கூப்ட்டேன் அண்ணி.." வார்த்தைக்கு வார்த்தை அவன் நக்கல் செய்து சிரிக்கவும், உர்ரென மூக்கு சுருங்கியது.

"இதை நீங்க என்னனு கேக்க மாட்டீங்களா அத்தை, அவரை விட வயசுல சின்னவ நான், என்ன போய் அண்ணினு கூப்பிடுறார், முன்னாடி மாதிரி கவினு கூப்பிட சொல்லுங்க.." அத்தையிடம் அவள் குற்றப்பத்திரிக்கை வாசிக்க,

"அதெல்லாம் கூப்பிட முடியாதுனு சொல்லுங்க ம்மா.. அவ மட்டும் சாரி, அவங்க மட்டும் என்ன சார்னு கூப்பிடும் போது, நான் மட்டும் அவங்கள பேர் சொல்லி கூப்பிடணுமா.. சார்னு கூப்பிடுற வரை நானும் அண்ணினு தான் சொல்லுவேன்.." கராராக வீம்பு செய்பவனை பாவமாக பார்த்தாள் கவி.

"அவன் சொல்றதும் சரி தானேமா, இத்தனைக்கும் அவன் உனக்கு முறையும் கூட, இப்பவும் சார்னு கூப்ட்டா என் பிள்ளைக்கு கோவம் வராதா.." அப்படியே மகன் பக்கம் சாய்ந்து பரிந்துபேசும் மித்ராவை சிறு முறைப்போடு கண்டவள்,

"சரி கூப்பிடுறேன், அத்தான் எப்போ அத்தான் வந்தீங்க, பயணமெல்லாம் சவுகரியாம இருந்துச்சா அத்தான்.. சாப்பாடு எல்லாம் சரியான நேரத்துல எடுத்துகிடீங்களா அத்தான்.." அவளும் வேண்டுமென்றே வார்த்தைக்கு வார்த்தை பல்லைக் கடித்தபடி அத்தான் போட, மித்ராவுக்கு சிரிப்பாக வந்தது.

"அதெல்லாம் ரொம்ப நல்லா இருக்கோம் நரு பாப்பா.." என்றவன் கவியை அணைத்துக் கொண்டான். சிறுவயதில் எப்போதும் வால் போல அவன் பின்னே சுற்றித் திரிந்தவள் கவி. அப்படி பட்டவள் திடீரென இல்லாமல், குடும்பமும் இல்லாமல் அவன் அடைந்த வேதனையை சொல்லி மாலாது.

"அம்மா எல்லாமே ஃபோன்ல சொன்னாங்க நரு, எனக்கு கூட ஏன் உன்கிட்ட ஒரு குட் ஃபீல் வந்துச்சின்னு அப்ப புரியல, இப்போ தான் அதோட அர்த்தம் புரியிது.. நீ திரும்ப கிடைச்சதுல ரொம்ப ஹாப்பியா இருக்கு நரு.." என்றான் உணர்ச்சிவசத்தோடு.

அதில் புன்னகைத்த கவி, "உங்க எல்லாரோட அன்பையும் பாக்கும் போது தான், ஏன் டா எனக்கு பழசு எல்லாம் மறந்து போச்சின்னு ரொம்ப ஃபீல் ஆகுது.. உங்க பாசத்தை எல்லாம் நியாபகம் வச்சிக்க கூட தகுதி இல்லாதவளா இருந்திருக்கேன் இல்ல.." கண் கலங்கியவளின் கண்ணீரை துடைத்து விட்ட மித்ரா,

"பழசு எல்லாம் முடிஞ்சது அதை நினைக்காதே கவிமா, இப்போ உனக்கு கிடைச்சி இருக்க இந்த தருணத்தை மட்டும் நினைச்சி சந்தோஷமா இரு.. உன் கூட நாங்க எல்லாரும் இருக்கோம்.." மூவரும் பேசிக்கொண்டிருந்த போது,

வாக்கிங் செல்ல நேரமானதால் வெளியே வந்த ஸ்வாதி, அங்கு யாதவ் இருப்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனாள்.

இங்கு தீபக் ஒரு பக்கம் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்க, ஆத்வியை மறுபுறம் மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 49
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top