- Messages
- 300
- Reaction score
- 215
- Points
- 63
அத்தியாயம் - 5
நீலவானம் முழுவதும் செவ்வானமாக காட்சியளிக்கும் ரம்மியமான அழகிய மாலை வேலையில் கல்லூரி முடிந்து தோழிகளோடு பேசியபடி கல்லூரியின் அருகில் இருந்த அத்திமரத்து அடியில் நின்றிருந்த மோகித்தாவோ, விஷ்வாவின் வருகைக்காக எதிர்பார்த்து காத்திருந்தவளின் மனம் ஏனோ காரணமின்றி படபடப்பாக இருந்தது.
பலமுறை கல்லூரி முடிந்து இருவரும் ஒன்றாக சந்திக்கும் வேலைதனில் 'தானே அழைத்து சென்று உன் வீட்டினில் விடுகிறேன்' என்று பலமுறை கெஞ்சலாக அழைத்து இருக்கிறான், 'இல்ல விஷ்வா படிப்பு முடியிர வரைக்கும் இந்த பைக்ல போறது, பிரைவசியா மீட் பண்றது எல்லாம் சரிஇல்ல. தப்பா எடுத்துக்காத' என முகத்திற்கு நேராக கராராக மருத்து பேசி செல்பவளின் உருவம் மறையும் வரை வெறியாக வெறித்துப் பார்ப்பான் அவன்.
இப்போதும் மறுக்கவே நினைத்தாள் அவன் அழைத்த போது, ஆனால் தனக்கு ஒரு உதவி என்றதும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் உடனே துணையாக வந்தவன் இரவில் இருந்து அவனோடு ஒரே வீட்டில் ஒன்றாக இருந்த போது, அவளை பொறுத்த வரையில் அவன் அவளை ஒரு பார்வை கூட தவறாக பார்க்காமல் கண்ணியமாக நடந்து கொண்டான், அவை எல்லாம் அவளுக்கு இன்னும் விஷ்வரூபன் மீது பலமான நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கவே, காதலனை தவிக்க விட்டு கெஞ்ச விடுவதில் மனம் வராமல் தன்னவன் ஆசைக்கு இனங்கி விட்டாள், அவனது கேடி வேலைகள் யாவும் அறியாத அப்பாவி நங்கை.
அத்தி மரத்தில் தத்தித்தாவி பழங்களை பறித்து கொரித்துக் கொண்டிருந்த இரு குரங்குகளின் சேட்டைகளை ரசித்தவாறு நின்றிருந்தவளின் முன்னால் நின்ற இருசக்கர வாகனத்தில் இருப்பவனைக் கண்டு உற்சாகம் பொங்க புன்னகை செய்த மோகி 'என்ன விஷ்வா முகம் டல்லா இருக்கு, ஓவர் வேலையோ' என்றபடி ஒற்றை பக்கமாக அமர்ந்தவள் அவன் தோள் பற்றாமல் கைபிடி கம்பியை பிடித்துக் கொண்டதை கண்ணாடி வழியே அக்காட்ச்சியை கண்டு வயிறு எரிந்தான் விஷ்வரூபன்.
ஓஹ்.. அவ்ளோ சேஃபா, விரல் படலான என்ன மொத்தமா மேல விழ வச்சிட்டா போச்சி வில்லத்தனமாக மனதில் நினைத்து வெளியே 'ஆமா வேலை ஜாஸ்தி பட் ஓகே, நீ என்ன ரொம்ப நேரம் எனக்காக வெயிட் பண்றியா, லேட்டா வந்துட்டேனா மோகிமா' வெகு நேரம் அவளை நிற்க வைத்து விட்டு தூரத்தில் இருந்து சிகரெட் புகைத்தபடி வேடிக்கை பார்த்தவன் இப்போது தேனாக இனித்தான் அவளிடத்தில்.
ஹ்ம்.. ஒரு ஆஃபனவர் இருக்கும், உனக்காக தானே வெயிட் பண்ணேன் வேலை இருக்கும் போது உன்னால மட்டும் என்ன பண்ண முடியும் சொல்லு, வேலைக்கு தான் ஃபர்ஸ்ட் இம்பார்ட்டன்ஸ் கொடுக்கணும் எனக்கு என்டர்டைன்மெண்ட்டா இந்த கியூட் மங்கிஸ் கம்பனி கொடுத்துடுச்சி. நீ எதுவும் வொரி பண்ணிக்காத விஷ்வா. கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் ஒன்றன் கையில் இருந்து மற்றொரு குரங்கு அத்திப்பழத்தை பிடிங்கி மாறி மாறி சண்டையிட்டு ஒன்னும் பாதியுமாக வாயில் போட்டுக் கொள்வதை ரசித்துப் பார்த்து கை நீட்டி சொல்ல, அவள் சோர்வாகி முகம் சுணங்குவாள் என்று எதிர்ப்பார்த்தவனுக்கு ஏமாற்றமாகி மௌனமான சிறு முறுவலோடு தலையாட்டி வண்டியை கிளப்பி இருந்தான் விஷ்வா.
சுற்றிலும் சாலையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு வந்தவளின் துண்டு துண்டான கூந்தல் முடிகள் முகத்தில் படிந்து கண்ணை மறைக்க செய்ய, விரல் கொண்டு அழகாக காதோரம் ஒதுக்கி விட்டவளின் பார்வை விஷ்வாவின் மீது ரசனையாக படிந்தது. காற்றில் அங்குமிங்கும் அடங்காமல் அலைமோதும் கேசத்தை ஒற்றை கையால் அவன் கோதி விட்டபடி பைக்கை வளைத்து ஓட்டும் விதம் மிகமிக ரசனைக்குறியதாய் அவள் கண்களுக்கு. அவனை பிடிக்கும் அவனை விட அதிகமாய் அவனது அக்கறை ஒழுகும் தித்திக்கும் பேச்சி உயிர் வரை இனிக்கும். அந்த பேச்சினில் மயக்கம் கொண்டவள் தான் அவனிடமும் மயங்கி காதலில் உருக காரணமாக இருந்த முக்கிய ஒன்று.
காதலனின் பேச்சை நேரம் கலமின்றி ரசிப்பவள் அவனை உரிமையாக இதுவரை ரசித்ததில்லை அப்படி ரசிக்கும் வாய்ப்பும் கிடைத்தும் அவள் பெரிதாக மனதை அலைபாய விட்டதில்லை. அது அவளுக்கு அவளே விதித்துக் கொண்ட கட்டுபாடு கூட எனலாம். இப்போதெல்லாம் அவன் மீது காதல் கூடகூட காதலனை ரசித்து கிட்டத்தில் வைத்து கொஞ்சி கொஞ்சி காதல் செய்ய ஆசைக் கொள்கிறது மனம். அதற்கெல்லாம் தடுப்பான் அமைத்து வைத்திருக்கிறதே இன்னொரு மனம்.
அவன் கேசம் வருடி கலைத்து விட ஆசை கொண்ட மனதோடு இவ்வாறு பலவித யோசனையில் மூழ்கி இருந்தவளோ சடாரென அடித்த பிரேக்கில் விஷ்வாவின் முதுகில் மொத்தமாக பெண்தேகம் சரிந்து அவன் இறுக்கமான இரும்பு இடைதனில் அவள் கரங்கள் இரண்டும் கட்டிக் கொண்டு இருந்தது.
அவளாகவே தன்னால் வந்து அவனை நெருங்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் பள்ளம் மேடு பாராமல் வேகமாக வண்டியை இயக்கினான், அப்போதும் சைடு கம்பியை இருக்கமாக பற்றிக் கொண்டு அமர்ந்து இருப்பவளை கண்டு எரிச்சலானவன், வேண்டுமென்றே பெரிய பள்ளத்தில் விட்டு இருந்ததில் நினைத்தது போலவே அல்வா துண்டு தானாக வழுக்கி அவன் வழிக்கு வந்துவிட்டிருந்தது.
அந்த அதிர்வில் வேகமாக துடித்து ஒலியெழுப்பிக் கொண்டிருந்த பெண்ணவளின் இதய ஓசை அவன் முதுகின் வழியாக ஊடுருவி அவனது இதயத்தின் வேகத்தையும் சேர்த்து துடிக்க செய்தது. பாவையின் பஞ்சி நெஞ்சங்கள் ஆடவனை பித்தனாக்க, கண்கள் மூடி அவளின் மென்மையை ஆழ்ந்து அனுபவித்தவனுக்கு பல்விதமான கற்பனையில் ஏகாந்த சுகமோ சுகம் தான். அவன் வயிற்றோடு கட்டி இருந்த வழவழக்கும் பெண்கரத்தின் மீது ஆடவனின் கரங்கள் மேலும் அழுத்திக் கொண்டதில் படபடப்பாக கண்களை திறந்து அவனிடமிருந்து கைகளை விடுவித்து தள்ளி அமர்ந்துக் கொண்டவளுக்கு கன்னங்கள் சிவந்து கூசிப் போனது.
கண்ணாடியினூடே அவளின் சொக்க வைக்கும் சிவந்த வதனம் கண்டு மோக மூச்சிக் காற்றை வெளியேற்றிய கேடியோ, "சாரி மோகி சாரி.. நான் பாக்காம பள்ளத்துல இறக்கிட்டேன், உனக்கு ஒன்னும் இல்லையே நீ ஓகே தானே" எப்போதும் போல் அவன் நடிப்பை கச்சிதமாக நடித்ததில், நம்பாமல் போவாளா அந்த ஏமாளி. 'ஐயம் ஓகே விஷ்வா நத்திங். நீ வண்டிய ஸ்டார்ட் பண்ணு' என்றதும் கோணல் சிரிப்புடன் மீண்டும் பயணம் தொடர்ந்தது அவள் வீடு நோக்கி.
வீட்டை நெருங்கிய வேலை வானம் இருட்டி மழைக்கு அறிகுறியாக பெரிய பெரிய தூறல்கள் போடத் தொடங்கி இருக்க நல்லவேளையாக பலத்த மழைக்கு முன் வீடு வந்து சேர்ந்திருந்தனர் இருவரும். எப்டியோ மழைல இருந்து தப்பிச்சிட்டோம் விஷ்வா, கொஞ்சம் லேட்டாகி இருந்தாலும் மழை அபிஷேகம் நடந்திருக்கும் நமக்கு மோகித்தா சொல்ல இருக்கையில் அமர்ந்த விஷ்வா, ம்க்கும்.. இவ வேற என்ற அலுப்போடு அதா அதுக்குள்ள வீட்டுக்கு வந்துடோமே, ஏன் மோகி ஊருக்கு போன உன் பிரண்ட் கூட பேசினியா, சரியா அவ எப்போ வருவாளாம், ஏன்னா அவ இங்கே இருந்தா ஒனக்கு ஒரு பாதுகாப்பா இருக்கும் எனக்கும் ஒரு நிம்மதியா இருக்கும் பாரு என்றான் அவள் கொடுத்த நீரை பருகியபடி.
சட்டென குழப்பத்தில் சுருங்கிய அவள் முகத்தை கூர்ந்தவன், என்ன மோகி அமைதியா இருக்க என்னாச்சி?
ஏன் இந்த திடிர் அக்கறை பலமான காரணம் உள்ளதே.
என்னனு தெரியல விஷ்வா, யார் ஃபோன் போட்டாலும் இருக்க வேலைய விட்டு உடனே அட்டன் பண்ணி பேசுறவ, நான் ஊருக்கு போயிட்டு திரும்ப வந்துட்டேன்னு சொல்ல காலைல இருந்து நானும் விடாம அவளுக்கு ஃபோன் பண்ற ஃபோனையே எடுக்க மாட்றா. அதா ஒரே குழப்பமா இருக்கு. வருத்தமாக சொல்லும் போதே அவளின் கைபேசி சத்தமிட்டதில் யாரென பார்க்க, யாரை பற்றி கவலையாக சொல்லிக் கொண்டு இருந்தாளோ அவளே தான் அழைத்து இருந்தது.
ஹெலோ.. கண்மணி எத்தன முறை ஒனக்கு ஃபோன் பண்றது ஏன் டி போனையே எடுக்க மாட்ற. ஒரு வார்த்தை அட்டன் பண்ணி பேசினா என்னவாம். இந்த பக்கம் மோகி படபடக்க அந்த பக்கம் பெரும் அமைதி. அதை தாமதமாகவே உணர்ந்தவள், ஏய் கண்மணி ஏன் பதில் பேசாம அமைதியா இருக்க என்றிட. நான் இனிமே அங்க வர மாட்டேன் மோகி, தலையும் புரியாமல் வாலும் புரியாமல் கண்மண மொழிந்த விதத்தில் புரியாமல் விழித்தவள், என்ன சொல்ற கண்மணி ஏன் திடிர்னு இப்டி சொல்ற, இங்க வராம காலேஜ் எப்டி போவ. உன் கசின்க்கு மேரேஜ்னு போனவ இப்ப என்ன டி ஏதேதோ உளற்ர.
நான் உளறல மோகி உண்மைய தான் சொல்றே. எங்க வீட்ல எனக்கு மாப்பிளை பாத்துட்டாங்க, அடுத்த வாரம் நிச்சயம் மறுநாள் கல்யாணம். கல்யாணத்துக்கு பிறகு மாப்பிளை ஊர் பக்கமே காலேஜ்க்கு போக சொல்லிட்டாங்க. எழுதிக் கொடுத்த ஸ்க்ரீப்டை மனப்பாடம் செய்து பேசுவதை போல் உணர்வுகள் இல்லாத இயந்திரமாக அவள் சொல்ல சொல்ல மோகித்தாக்கு தான் தலையே சுற்றியது.
ஏனெனில் கண்மணி ஒருவனை உயிருக்கு உயிராக காதலித்துக் கொண்டு இருக்கிறாள். அப்படி இருக்க ஏன் இந்த அவசர திருமணம், இவள் ஏன் அதற்கு ஒப்புக் கொண்டாள் என்ற எண்ணமே அவளுக்கு குழப்பத்தை அதிகரிக்க செய்திருக்க, ஹெலோ.. ஹெலோ மோகி லைன்ல இருக்கியா என்ற கண்மணி, அங்க இருக்க என் திங்க்ஸ் எல்லாம் அப்படியே இருக்கட்டும், ரூம் கீ என்கிட்ட தான் இருக்கு, கல்யாணம் முடிஞ்சதும் யாரையாவது அனுப்பி அதை எல்லாம் எடுத்துக்குறேன் என்றதுக்கு அப்போதும் புரியாமல் முழித்தபடி இவள் ம்.. என மௌனமாக சொல்லும் போதே,
'அப்புறம் இன்னொரு விஷயம். என் வாழ்க்கை நல்லா இருக்கணும்னு உனக்கு அக்கறை இருந்தா, இனிமே எனக்கு எப்பவும் ஃபோன் பண்ணாதே மோகி, இதுவே நம்ம பேசிக்கிறது கடைசியா இருக்கட்டும் ப்ளீஸ்' கடைசி வரியை கரகரப்பாக உரைத்து விட்டு படக்கென கண்மணி போனை வைத்ததும், ஃபோன் திரையை கண் கலங்க வெறித்துக் கொண்டு நின்றவளை ஏலன சிரிப்பு இழயோட பார்த்துக் கொண்டிருந்தான் விஷ்வரூபன்.
வெறும் மூன்று வருட கல்லூரி நட்பு என்றாலும் பாலிய கால நட்பை போல் அன்பாகவும் அக்கறையாகவும் ஒருவருக்கொருவர் விட்டு கொடுக்கும் மனப்பான்மையோடு அழகாக வளர்ந்து உயிர் பெற்ற நட்பு இப்போது கண்மணியின் கடைசி வரிதனில் ஒன்றுமே இல்லாமல் மோகித்தாவின் மனதையும் உடைத்து விட்டிருந்தது.
கண்ணீர் துளிகள் சொட்டு சொட்டாக போன் திரையில் சொட்டி அவள் மனவேதனையை பிரதிபலித்த நேரம் ஆதரவாக ஒரு வலிய கரம் அவள் கண்ணீர் துடைத்ததில் நிமிர்ந்து பார்த்தவள் வலி நிறைந்த புன்னகை ஒன்று சிந்தி, 'அவ இனிமே இங்க வர மாட்டாளாம் விஷ்வா, கல்யாணமாம் குழப்பத்துலயும் ஒரு வார்த்தை, என் கல்யாணத்துக்கு வந்துடு மோகின்னு கூப்பிடுவான்னு பாத்தா, அவ வாழ்க்கை நல்லா இருக்கனும்னா என்ன இனி அவகிட்ட பேச வேண்டாம்னு முகத்துல அடிக்கிற மாறி சொல்லிட்டா விஷ்வா' மனம் கனத்து வார்த்தைகள் உடைந்து உரைத்தவள் அங்கிருந்து நகரப் போக, அவள் கரம் பற்றி தன்னோடு இழுத்து இருக்கமாக அவளை அணைத்துக் கொண்டான் காதல் நாடக அரக்கன்.
தொடரும்.

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 5
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.