- Messages
- 278
- Reaction score
- 215
- Points
- 63
அத்தியாயம் - 50
முகத்தில் முன்பு இருந்த பளபளப்பும் தெளிவும் இல்லாமல், முக்கிய ஒன்றாக சிரிப்பு துளியுமின்றி, சோவை பூத்து உடல் இளைத்து, என்புகள் எல்லாம் துருத்திக் கொண்டு தெரிய, தொல தொல நைட்டியில் உச்சில் கொண்டையிட்டு, பொம்மை போன்ற நடையில் கூட உயிர்ப்பின்றி, மெதுவாக நடந்து வந்த ஸ்வாதியை கண்டவனின் இதயம் வெகுவே அடிபட்டுப் போனது.
தரை நோக்கி நடந்தவள், "கவி போலாமா..." என நிமிர்ந்தவளின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்து, புதிதாக பொருத்தி இருந்த இதயம் வேகமாக துடிக்கத் தொடங்கவும், தையலிட்ட நெஞ்சி பகுதி முழுக்க சுல்லென வலி பரவியது, யாதவை கண்டதும்.
சற்றும் அவனை இங்கு அவளும் எதிர்பார்க்கவில்லை, அவனும் எதிர்பார்க்கவில்லை. வீட்டில் நடக்கும் அனைத்து விடயங்களும் மித்ராவின் மூலம் அவனுக்கு தகவல் சென்று விடும், ஸ்வாதியின் விடத்தை தவிர.
இதற்கு காரணமும் ஆத்வியே.
ஒரு முறை மித்ரா ஃபோனில் அவனிடம் பேசிக் கொண்டு இருக்கும் போது ஸ்வாதியைப் பற்றி பேச வாயெடுக்கும் நேரம், அவளுக்கு எரிதிரில் அமர்ந்திருந்தவன், "வீட்டுக்கு வந்த கெஸ்ட் பத்தியெல்லாம் தேவை இல்லாம பேசி டைம் வேஸ்ட் பண்ணாதீங்க,
அப்படி ஒன்னும் அவன்கிட்ட எல்லாத்தையும் சொல்லணும்னு அவசியம் இல்ல, தலைவலிக்குது காபி கொண்டாங்க மாம்.." வேண்டா வெறுப்பாக சொல்ல, அதோடு அந்த கதையை மித்ரா மறந்து போனாள்.
ஆத்வியின் திருமணத்திற்கு அழைத்த போதும், "வேலையை விட்டு இப்போது வருவது சாத்தியமில்லை, நீங்க நல்லபடியா நடத்தி முடிங்க ம்மா.." என சொல்லிவிட்டான். மேலும் கவியை தான் ஆத்வி திருமணம் செய்துக் கொள்ள போகிறான் என்றதும் கூடுதல் மகிழ்ச்சியில், "கல்யாணத்துல கலந்துக்க முடியாம, இப்போ போய் இங்க வந்து மாட்டிக்கிட்டோமே.." என்ற வருத்தம் இருந்தது.
காத்திருக்க சொல்லி சென்ற காதலி அரைஉயிராக நடப்பதை பார்த்து ஒன்றும் புரியா நிலையில், உள்ளுக்குள் பரவிய திகிலோடு விழித்திருக்க, ஸ்வாதியை கண்டதும் யாதவின் அதிர்ச்சி எதற்காக என கண்டுக் கொண்ட கவிக்கோ, குற்றஉணர்ச்சியில் நெஞ்சம் குறுகுறுத்துப் போனது.
"கவி இப்ப உன்கிட்ட இந்த விஷயத்தை சொல்றது சரியா இருக்குமானு தெரியல, ஆனா சொல்லி தான் ஆகனும்.. எனக்கு ஸ்வாதிய பிடிச்சிருக்கு, அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழ்க்கை முழுக்க நானும் அவளும் சந்தோஷமா வாழணும்னு, இப்போல்லாம் ரொம்ப ஆசையா இருக்கு..
எப்போ எப்டி அவ மேல காதல் வந்துச்சினு தெரியல, பட் அவளை ரொம்ப பிடிச்சி இருக்கு கவி.. உனக்கு என் மேல நம்பிக்கை இருந்தா உன் பிரண்ட எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க உதவி பண்ணுவியா.." ஸ்வாதிக்காக வாங்கி வைத்த மோதிரம் ஒன்றை அவளிடம் கொடுக்க,
முதலில் முடியாது என மறுத்தவள் பின் அவன் பாவமாக கேட்ட விதத்தில், யாதவின் பண்பான குணம் கவிக்கும் பிடித்து போகவே, அவன் கொடுத்த டப்பாவை வாங்கிக் கொண்டு,
"இதை நீங்களே அவகிட்ட கொடுக்க வேண்டியது தானே சார்.." என்றாள் புரியாமல்.
"வந்து கொடுக்குறேன் கவி, அது வரைக்கும் இதை நீயே பத்திரமா வச்சிக்கோ.." என இரண்டு மாதங்கள் முன், ஏர்போர்ட்டில் வைத்து அவன் பேசிய வார்த்தைகள் நியாபகம் வந்தது.
"நடந்ததை இவனிடம் எப்படி விளக்கிக் கூறுவது..? அப்படியே சொன்னாலும் ஸ்வாதிக்கு நடந்ததை வைத்து அவளை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என சொல்லி விடுவானோ..!" என்ற பயத்தில் கவி சிலையாக நிற்க,
"கவி போலாம் வா.." என அவள் கை பிடித்து ஸ்வாதி அசைவுக் கொடுக்கவும்,
ஹாங்.. என் விழித்து யாதவை பார்த்தபடி அவள் பின்னே சென்றாள் கவி.
எத்தனை நேரம் பொங்கி வரும் அழுகையை கட்டுப் படுத்தி கொண்டு யாதவ் முன்பு நிற்பது! அவனை கண்டும் காணாமல் சென்று விட்டாள். முதல் முதலாக ஒரு ஆடவன் மூலம், சில்லென்ற தென்றல் காற்றாக அவள் நெஞ்சில் படிந்த காதல் உணர்வு,
இன்னொரு கேடு கெட்ட ஆண் மூலம் சில்லென்ற காற்று அவளை பொசுக்கி தள்ளும் நெருப்புக் காற்றாக மாறி விட்டது.
"ம்மா.. என்னாச்சி அந்த பொண்ணுக்கு.." அதிர்ச்சி மாறாத முகத்தோடு போகும் ஸ்வாதியின் முதுகை வெறித்தபடியே கேட்டான்.
"அது வந்து டா ஆபிஸ்ல ஒரு.." நடந்ததை சொல்ல போன சமையம், "மித்துஊ.." ஆதியின் குரல் அறையில் இருந்து தொடர்ந்து ஒளிக்கவும்,
"வந்து சொல்றேன் இரு டா.." என ஓடி விட்டாள்.
******
முப்பது நிமிடத்தில் இலக்கை அடைய, ரெய்டர்கள் பைக்கை மின்னல் வேகத்தில் இயக்கிக் கொண்டு இருக்க, ஆத்வியின் பீஸ்ட் தான் அனைவரையும் முந்திக் கொண்டு சாலையை தெறிக்க விட்டு, தரையைத் தேய்த்தபடி முன்னால் சென்றது.
அவனுக்கு சரிசமமாக வந்துக் கொண்டிருந்த தீபக் வெறிக்கொண்டு காலாலும், வண்டியை அவன் பைக்கிள் மோதி கீழே தள்ளி விடும் முயற்சியில் வந்தவன், கடைசி பயணமாக மலைகள் பள்ளத்தாக்குகள் இருக்கும் ஏரியாவில் நுழைந்து செல்ல, தன் உயிரே போனாலும் பரவலாயில்லை ஆனால் ஆத்வி அழிய வேண்டும் என்று, சர்ரென ஆத்விக்கு முன்னால் வண்டியில் பறந்து அவன் டயரை இடித்து தள்ளியதில்,
பைக்கோடு சேர்ந்து மண்ணும் பாறையும் புதைந்திருந்த தரையில் உராயிந்து கொண்டே கீழே விழுந்தவனுக்கு, பதுகாப்பு உடையையும் தாண்டி ஒரு பக்கமாக உடலில் ஆங்காங்கே ரத்தம் வந்தது.
அதை கருத்தில் கொள்ளாமல் விழுந்த வேகத்தில் கையை துடைத்துக் கொண்டு ஓடி, வண்டியை எடுத்தவனுக்கு வெறிக் கூடி போனது. ஹெல்மெட் கண்ணாடி தூக்கி பார்த்து நக்கலாக சிரித்து விட்டு வண்டிய எடுத்த நேரம், ஆத்வியின் பைக் மின்னல் வேகத்தில் வந்து தீபக் வண்டியை இடித்த இடியில், வண்டியோடு சேர்ந்து வானத்தில் பறந்து சென்று கீழே பொத்தென விழுந்தான்.
பைக்குகள் ஒவ்வொன்றும் அவர்களை தாண்டி செல்ல, சைலன்சரில் புகைகிளம்ப வண்டியை சுழட்டிக் கொண்டு வந்த ஆத்வி, நடுரோட்டில் விழுந்து கிடந்த தீபக்கின் கால்களில் வண்டியை ஏற்றி இறக்கவும், ஆஆ.. என வாய் விட்டு வலியில் அலறித்துடித்தான்.
மீண்டும் டுர்.. டுர்ர்..என அதிர வைக்கும் சத்தத்தோடு, வண்டியை திருப்பி சுழண்டு வந்து அவன் தொடை மேல் வண்டியை ஏற்றி இருக்க, என்புகள் நொறுங்கி முறிந்த சத்தம் அத்தனை வண்டிகளின் சத்தங்களுக்கு இடையிலும் தெளிவாக கேட்டது.
இனி வாழ்நாள் முழுதும் தீபக் வண்டியை தொட முடியாத அளவிற்கு, அவன் இருகால்களிலும் வண்டியை விட்டு ஏற்றியவன், இப்போது அவன் ஹெல்மெட் கண்ணாடி ஏற்றி இறக்கியவனாக, இதழ் கோணி க்ரூத பார்வை பார்த்து விட்டு வண்டியை கிளப்பி இருக்க, காற்றை கிழிக்கும் வேகத்தில் வண்டியில் பறந்து வந்தவன் இலக்கை அடைந்து, வெற்றிக் கொடியை தொட்டு இருந்தான்.
கேட்ப்பாரற்று வழியில் கிடந்த தீபக்கின் கால்களில் என்புகள் உடைந்து, அசைக்க முடியாமல் ரத்தம் கொட்ட விழுந்து கிடந்தான். போட்டியில் வெற்றிப்பெற்ற ஆத்விக்கும் விழுந்த வேகத்தில் ஒற்றைப் பக்கம் தோள்பட்டை மற்றும் விலாவில் பலத்த காயங்கள் ஏற்பட்டு இருப்பதை கண்ட போட்டிக் குழுவினர், அவன் மறுக்க மறுக்க மருத்துவமனை தூக்கி சென்று காயங்களுக்கு முதலுதவு செய்துக்கொள்ள வைத்தனர்.
மருந்து போட்ட கையோடு சிறிதும் தாமதிக்காமல் மனைவியின் தரிசனம் காண வேண்டி, பிளைட்டில் பறந்து வந்துக் கொண்டு இருந்தான் ஆத்வி.
இரவு அனைவரும் உணவு மேஜையில் அமர்ந்திருக்க, கவி ஸ்வாதி இருவர் மட்டும் அங்கு வராமல் இருந்தனர். யாதவின் முகம் வந்ததில் இருந்து தெளிவின்றி இருப்பதை பார்த்த ஆதி,
"டேய் யாது சாப்பிடும் போது என்ன யோசனை, சாப்பாட்ட பாத்து சாப்பிடு.." என அதட்டவும், உணவை தொண்டைக்குள் விழுங்க முடியாமல் உண்டு முடித்து எழுந்து சென்று விட்டான்.
"அம்மா, கவியும் ஸ்வாதியும் சாப்பிட வரலையா.." தன்யாக்கு உணவு ஊட்டியபடி ஆரு கேட்க,
"கூப்ட்டேன் ஆரு, ரெண்டு பேரும் அப்புறம் சாப்பிடுறேன்னு சொல்லிட்டாங்க, திரும்ப கொஞ்சம் நேரத்துக்கு அப்புறம் நான் கூப்ட்டு சாப்பிட சொல்றேன்.." என பதில் தந்த மித்ரா,
"ஏன் ஆரு இப்போ உடனே நீ கிளம்பியாகணுமா, இன்னும் கொஞ்ச நாள் இருந்துட்டு போகக் கூடாதா.." என்ற மாமியாரை நிமிர்ந்து பார்த்து, சிறு புன்னகை சிந்தி மீண்டும் உணவுண்டான் அஜய்.
'அம்மா எனக்கும் உன்கூட இருக்க ஆசை தான், ஆனா.. " அவள் சங்கடமாக இழுக்க,
"புரியிது ஆருமா, ஒரு பொண்ணு புகுந்த வீட்ல இருந்தா தான் நல்லது, என்ன பண்றது என் மனசு தான் உங்கள பிரிஞ்சி இருக்க முடியாம தவிக்குது.. தம்பியும் உன்ன சலிக்காக நினைக்கும் போதெல்லாம் இங்க கூட்டிட்டு வராரே அது போதும், சரி வேலையோட போய் படுங்க காலைல எழுந்து தயாராகணும்.." பெருமூச்சு விட்டு சொன்ன மனைவியை ஏகத்துக்கும் முறைத்து வைத்தான் ஆதி.
"ஸ்வாதி என்ன பேசிட்டு இருக்க, ஏன் திடீர்னு இப்படி ஒரு முடிவு எடுத்திருக்க அதுவும் என்கிட்ட கூட சொல்லாம.."
"பின்ன என்ன கவி பண்ண சொல்ற, எத்தனை நாளைக்கு நான் இந்த வீட்ல இருக்க முடியும்.. உதவி பண்ணவங்க வீட்ல உபத்திரமா இருக்க எனக்கு விருப்பம் இல்ல கவி, உனக்கும் கல்யாணம் ஆகி ஒரு நல்ல வாழ்க்கை அமஞ்சிடுச்சி,
அந்த திருப்தியோட நான் ஏற்கனவே நம்ம தங்கி இருந்த ஹாஸ்டல்க்கே போறேன்.. இப்ப தான் காயம் ஓரளவு ஆறி இருக்கே, இனிமே நான் தனியா பாத்துக்குறேன்.." என்றபடியே துணிமணிகளை பையில் அடுக்க,
"அதெல்லாம் உன்ன தனியா விட முடியாது ஸ்வாதி, நீ இங்க இந்த வீட்ல தான் இருக்கணும்.. அப்டி உனக்கு இருக்க விருப்பம் இல்லனா வா, நம்ம ரெண்டு பேருமே சேந்து போகலாம்.. இதுவரை ஒன்னா தான் இருந்தோம் இனிமேலும் ஒன்னா தான் இருப்போம்.. நீ போறேன்னா நானும் வருவேன்.." பிடிவாதமாக ஒற்றைக் காலில் நிற்கும் கவியை ஆயாசமாக பார்த்தாள் ஸ்வாதி.
"ஏன் கவி என் நிலைமை புரியாம இப்டி அடம் பண்ற.." தொண்டை அடைக்க கேட்க,
"அவ ஒன்னும் அடம் பண்ணல ஸ்வாதி, நீ தான் அடம் பண்ற, உன்ன இந்த வீட்ல யார் என்ன சொன்னாங்கனு இப்டி ஒரு முடிவ எடுத்து இருக்க.." வெளியில் இருந்து வந்த கடுமையான குரலில் ஆதியை கண்டு எச்சிலை விழுங்கியவள்,
"அங்கிள் என்ன யார் என்ன சொல்ல போறாங்க, அதெல்லாம் ஒன்னும் இல்ல.. உடம்பு கொஞ்சம் தேரிடுச்சி, இனிமேலும் இங்க இருக்குறது அவ்வளவா நல்லா இருக்காது அதான்.." என்றாள் ஆசிரியரிடம் பாடம் ஒப்பிக்கும் மாணவியாக.
"ஓஹோ.. உனக்கு உடம்பு தேரிடுச்சி.. பாரேன் இதை நேத்து உன்ன செக் பண்ண வந்த டாக்டர் கூட என்கிட்ட சொல்லாம விட்டாரு.." புருவம் ஏற்றி நக்கல் செய்யவும், கவி களுக்கென்று தலை குனிந்து சிரிப்பதை கண்டு முறைத்து வைத்தாள் ஸ்வாதி.
"அங்க என்ன முறைப்பு, எங்கே மூச்சி விடாம நாலு வரி வேகமாக பேசிட்டே நடந்து காட்டு பாப்போம்.." ஆதி விரைப்பாக சொல்லவும் பாவமாக பார்த்தாள் அவனை.
"அங்கிள் நான் என்ன சொல்ல வரேன்னா.." என்றபோதே கை நீட்டி தடுத்தவன்,
"நீ ஒன்னும் சொல்ல வேணாம், அப்டி போய் தான் ஆகணும்னா போ.. ஆனா உனக்கும் கவிக்கும் எந்த ஒட்டும் உறவும் இல்லைனனு அவமுகத்துக்கு நேரா சொல்லிட்டு போயிட்டே இரு.. உன்ன யாரும் தடுக்க மாட்டாங்க" நிதானமாக கூறி, நிற்காமல் தன் அறைக்கு சென்று விட்டான் ஆதி.
ஸ்வாதி திக்பிரம்மை பிடித்தவள் போல் அமர்ந்திருக்க, கவி கூட ஆதியின் இத்தகைய சொல்லை எதிர்ப் பார்க்கவில்லை என்பது, அவள் முகத்திலேயே நன்கு தெரிந்தது.
தோட்டத்தில் குழப்ப நிலையில் நடமாடிய யாதவ்க்கு, ஸ்வாதி ஏன் இப்படி இருக்கிறாள் என்ற எண்ணமே வந்ததில் இருந்து ஓடிக் கொண்டிருந்தது. சரி கவியிடமே நேரடியாக கேட்டு விடலாம் என்று பார்த்தால், ஸ்வாதி அவளை வெளியே விடுவது போல் தெரியவில்லை, எதிர்பார்த்து காத்திருந்து காத்திருந்து மண்டை தான் சூடாகிப் போனது.
வெங்கட்க்கு போன் செய்ய, அவரோ அலுவலக வேலையாக வெளியூர் சென்றிருக்க, அழைப்பை ஏற்க முடியாத நிலை அவருக்கு.
எங்கே வெளியே சென்றால் யாதவை பார்க்க நேரிடுமோ என்ற அச்சத்தில், அவன் முகத்தில் முழிக்க முடியாமல் கூனிக்குறுகி அறைக்குள் முடங்கி விட்டாள். கவிக்கும் அவள் நிலை புரியாமல் இல்லை, அதனால் அவள் போக்கிலே விட்டு பிடிக்க எண்ணி அமைதி காத்து வந்தாள்.
சரியாக எட்டாம் நாள் நள்ளிரவு வீடு வந்து சேர்ந்த ஆத்வியை வரவேற்றது என்னவோ, அவன் அன்னை தான். தாயை தாண்டி மனைவியை தேடி அலைந்தன ஆணவன் காந்த விழிகள்.
மகனின் தேடல் யாரை தேடி என்று மித்ராக்கு உணர்ந்தாலும், இந்த நேரத்தில் கவியை எழுப்ப மனமின்றி வீட்டில் யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் வெளியூர் சென்று வந்த மகனின் மீது கோவம் கொண்டு, அவனிடம் பேசாமல் செல்லப் போனவளை,
"மாம்.. எதுக்கு என்கிட்ட பேசாம போறீங்க.." என்றான் ஒன்றும் அறியாத அப்பாவி பிள்ளையாய்.
"ஓஹ்.. நீ மட்டும் பெத்த அம்மா, கட்டின பொண்டாட்டினு இப்டி யார்கிட்டயும் சொல்லாம, தாலி கட்டி கூட்டிட்டு வந்த பொண்டாட்டியோட நினைப்பு கூட இல்லாம வெளிய போயிட்டு வரலாமா..
நான் பேசாம போனா ஏன் கேக்குற, ஒரு ஃபோன் பண்ணியா டா நீ.." நியாயமாக இந்த டயலாகை கோவமாக தானே பேசி இருக்க வேண்டும், ஆனால் என்ன செய்ய, பிள்ளைகளிடம் கோவம் காட்ட தெரியாதவள் மென்மையாக உரைத்திட, மௌனமாய் சிரித்து தாயைக் கட்டிக் கொண்ட ஆத்வி,
"சோ ஸ்வீட் மாம் நீங்க.. நீங்க இவ்ளோ சாஃப்ட்டா இருந்தா உங்ககிட்ட எப்டி பயப்பட தோணும், நீங்க பேசுறத கேட்டுட்டே இருக்கலாம்னு தான் தோணுது.." என்றான் குறும்பாக.
"ச்சீ போடா.. கோவமா பேசினா கூட அப்டியே பேச்சை மாத்தி பேசி மயக்கிடுற, சரி சாப்டியா ஆத்வி சுட சுட அம்மா தோசை ஊத்தி தரவா.." என்க,
ஏனோ இத்தனை நாளும் சரியாக உண்ணாமல் ரேஸ் ரேஸ் என்று ஓடியதால் பசியை மறந்து இருந்தவனுக்கு, இப்போது அன்னையின் கை ருசி எங்கிருந்தோ வந்து அவன் நசியை துலைக்க,பசி கமகமவென எடுத்துக் கொண்டது.
ஒன்று இரண்டு மூன்று.. ஐந்து.. எட்டு.. அதையும் தாண்டி என கணக்கில்லாமல் தோசை அவன் வயிற்றில் பஞ்சி பஞ்சாக இறங்கிக் கொண்டிருக்க, அலுப்பு தட்டாமல் தோசை ஊற்றி கொடுத்து அவன் அறைக்கு அனுப்பி வைத்தாள்.
அறைக்கு வந்தவன் நினைவு மொத்தமும் கவியிடம் இருக்க, அவளோ இன்று தான் நிம்மதியான ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.
காலையில் விழிப்பு தட்டி மெது மெதுவாக கண்ணை கசக்கிக் கொண்டே எழ முயன்று முடியாமல் போகவே, ஏதோ பாறை ஒன்று தன்மீது அழுத்துவதை போன்ற கனம் கனக்க, கழுத்து வளைவில் உஷ்னமான மூச்சி காற்று விட்டு விட்டு பரவி,
ஏதோ சப்புக் கொட்டி உறிவதை போலே, விறுவிறுவென இழுக்கும் உணர்வில், அதிர்ந்து கண் விழித்த கவி, தன்னை இறுக்கமாக கட்டிக்கொண்டு இருப்பவனை கண்டு, மகிழ்ச்சியில் இதயம் துள்ளி குதித்தது.

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 50
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.