- Messages
- 278
- Reaction score
- 215
- Points
- 63
அத்தியாயம் - 53
வீட்டில் யாரும் இல்லாத நேரம் ஸ்வாதியின் அறைக்கு சென்ற யாதவ், 'அவள் எங்கே..' என தேடியபடி அறையை சுற்றி யோசனையாக நோட்டம் விட்ட சில நிமிடத்தில், குளியலறையில் இருந்து மெதுவாக நடந்து வெளிவந்தவளைக் கண்டு ஸ்தம்பித்து போனான் ஆடவன்.
தொண்டைக் குழியில் எச்சிலைக் கூட்டி விழுங்கியவனின் பார்வையும், குளித்து முடித்து வெறும் டவளோடு வந்த பண்ணீர் ரோஜாவையும் சேர்த்து விழுங்கிவனாக, சுதாரித்து சட்டென திரும்பி நின்று தலைக் கோதிக்கொண்ட சமையம், அவனது பின் புறம் மட்டும் பார்த்து விட்டு, யாரென தெரியாமல் பயத்தில் அதிர்ந்து போனாள் ஸ்வாதி.
"யா.யார் யார் நீ.." பேசமுடியாமல் குரல் நடுங்க அவள் கேட்ட விதத்தில், புருவம் இடுங்கிய யாதவ், சட்டென திரும்பவும், மூச்சி விட சிரமப்பட்டு நெஞ்சில் கை வைத்து தடுமாறியவளை, நொடியும் தாமதிக்காமல் தாங்கிக் கொண்டான்.
"ஹேய்.. ஸ்வாதி, இப்ப ஏன் இவ்ளோ டென்ஷன் ஆகுற, நான் தான் ரிலாக்ஸ்.." பொருமையாக எடுத்து சொல்ல கொஞ்சம் நிம்மதியாக உணர்ந்தாலும், 'இவன் ஏன் இங்கு வந்தான்' என்ற யோசனையில், தானிருக்கும் நிலை நியாபகம் வந்து, பதட்டமாக அவனை விட்டு விலக முயன்ற வேளையிலே, அழுத்தமான வார்த்தைகளாக அவள் செவியை தீண்டியது யாதவ் குரல்.
"சொல்லு ஸ்வாதி எதுக்காக என்ன பாத்து ஓடி ஒளியிற, அப்டி உனக்கு என்ன தான் ஆச்சி.. நீ பாக்கவும் முன்ன மாதிரி இல்லயே.." மீண்டும் மீண்டும் கேட்டிட, கண்கள் கலங்கி உதடு துடிக்கக் கண்ணீர் முட்டியது.
"நான் யார்கிட்டயும் எதுவும் சொல்ற நிலைல இல்ல, ப்ளீஸ் இங்கிருந்து போங்க.." எங்கோ பார்த்து தொண்டை அடைக்க சொன்னது, யாதவ்க்கு வருத்தமாக இருப்பினும், இன்று உண்மையை கரக்காமல் விடக்கூடாது என்ற முடிவில் இருந்தான் போலும்.
"ஸ்வாதி நானும் வந்த நாளுல இருந்து ரொம்ப ரொம்ப பொறுமையா போறேன், ஒழுங்கு மரியாதையா உனக்கு என்ன பிரச்சனைனு என்கிட்ட சொல்லு, இல்ல நான் மனுஷனா இருக்க மாட்டேன்.." பற்களை கடித்தப்படி பொறுமையவனை வேதனையாக கண்டவளுக்கு கோவம் தான் வந்தது. தான் எப்படி நிற்கிறோம், அந்த நிலையில் கூட வெளியே செல்லாமல், நிற்க வைத்து கேள்வி கேட்கிறானே என்று.
"சார் உங்களுக்கு கொஞ்சம் கூட மேனர்ஸ்னா என்னனு தெரியாதா, இப்டிதான் ஒரு பொண்ணு தனியா இருக்க ரூம்ல அநாகரிகமா பர்மிஷன் இல்லாம உள்ள வருவீங்களா.. முதல்ல இங்கிருந்து போங்க, உங்கள மாதிரி புத்திகெட்ட ஆம்பளைங்கள பாத்தாலே பத்திகிட்டு வருது.."
ஸ்வாதியின் பேச்சில் முன்பு போன்ற கலகலப்பும் துடுக்குத்தனமும் எதுவுமின்றி, அதற்கு மாறாக சோர்வும் வேதனையும் மட்டுமே பிரதிபலிப்பதை உணர்ந்துக் கொண்டவனுக்கு, ஏதோ ஒன்று இவளுக்கு பெரிதாக நடந்தேறி இருக்கிறது என்று மட்டும் நன்றாக உணர முடிந்தது.
"சரி உன்கிட்ட கேக்காம உள்ள வந்தது தப்பு தான் தாயே ஒத்துக்குறேன்.. இப்ப அது முக்கியம் இல்ல, நீ ஏன் ஸ்வாதி இப்டி இருக்க..
நான் பாத்துட்டு போன ஸ்வாதிக்கும், இப்போ பாக்குற ஸ்வாதிக்கும் சுத்தமா ஒத்து போகலையே டி.. என்ன ஆச்சி உனக்கு, எதுவா இருந்தாலும் மறைக்காம சொல்லுடா.. உன்ன இப்டி பாக்க பாக்க என் நெஞ்செல்லாம் வெடிக்கிற மாறி இருக்கு கண்ணம்மா.." அவள் கன்னம் ஏந்தி தவிப்பாக கேட்டவனை, ஏரெடுத்துப் பார்க்கும் துணிவில்லை அவளுக்கு.
அவன் முகம் பார்க்க முடியாமல் கண்களை மூடிக் கொண்டவளின் இமைகளை தாண்டி வழிந்த கண்ணீர், அவள் கன்னத்தில் கோடு வரைந்தது. அதனை கண்டவனின் உள்ளம் வெதும்பிப் போக,
"ஸ்வாதி ப்ளீஸ் அழாதே என்ன நடந்துச்சின்னு சொல்லு டி, உன்ன இப்டி பாக்க பாக்க என் நெஞ்சமெல்லாம் பதறுது, சொல்லு ஸ்வாதி.." அவன் மேலும் மேலும் கெஞ்சலாக கேட்பது, ஸ்வாதிக்கு செந்தில் அவளிடம் நடந்து கொண்ட நிகழ்வுகளை அதிக அளவில் நியாபகப் படுத்த, அவன் மீது உள்ள கோவம் அதிகரிக்க அதிகரிக்க தன்னெதிரே நிற்பவன் யாதவ் என்று மறந்தாள் அந்நேரம்.
"என்ன டா சொல்ல சொல்ற.. என்னை என்ன சொல்ல சொல்ற.. கேவலம் நீயும் இந்த உடம்புக்கு ஆசைப்பட்டு தானே, நான் தனியா இருக்கேன்னு தெரிஞ்சிகிட்டு இங்கே வந்திருக்க.. ஏன் டா எல்லா ஆம்பளைங்களும் ஒரே மாதிரி இருக்கீங்க..
உனக்கு இப்ப என்ன வேணும் என் உடம்பா.. அதை எடுத்துக்கிட்டா திரும்ப இந்த கேவலமான நடிப்பை நடிச்சிட்டு என் முன்னாடி வர மாட்டே தானே.."
ஆவேசமாக கத்தியவள் தான் கட்டி இருந்த துவாளையில் கை வைக்கப் போன நேரம், மொத்த கோவத்தையும் ஒன்று திரட்டி, யாதவ் விட்ட அறையில் சுருண்டு மயங்கி விழுந்தவளை, உணர்ச்சி துடைக்கப்பட்ட முகத்துடன் தாங்கி பிடித்தவன் மனமோ, உலைக்கனளாக கொதித்துப் போனது.
≈≈ ≈≈ ≈≈
ஆடம்பரமான அறையில் உள்ள மெத்தையில், காலைக் குறுக்கியபடி அமர்ந்து, தன்னையே பார்ப்பவளை சிறிதும் கண்டு கொள்ளாமல், ஃபார்மல் உடையில் டிப்டாப்பாக கிளம்பிக் கொண்டிருந்தான் ஆத்வி.
தன்னை அழைக்க வருவதும், பின் அமைதி காப்பதுமாக குருவிக்குஞ்சி வாயை, குவித்து குவித்து பிரித்து மூடுவதை தலைவாரியபடி கண்ணாடியினூடே பார்த்தான் தான். இருந்தும் அவளிடம் தாமாக சென்று பேசக் கூடாது என்ற முடிவோடு, கவி மீது கடுங்கோபத்தில் இருந்தவன் நினைவு பின்னோக்கி சென்றது.
காரில் தன் அருகில் அமர்ந்து வந்தவளின் முகம், படுமோசமாக மாறி சோகத்தில் மூழ்கி இருப்பதை எரிச்சலாக கண்ட ஆத்வி,
"இப்ப எதுக்கு டி முகத்தை தூக்கி வச்சிட்டு உக்காந்திருக்க, ஏற்கனவே உன் சோடாபுட்டி முகத்தை பாக்க முடியல, இதுல சோககீதம் தான் ஒரு கேடு.." புன்னகை இல்லா அவள் முகம் காண சகிக்காது, அவன் சொல்வதை தவறாக புரிந்துக் கொண்ட கவி,
"ஓஹோ.. அப்டி பாக்க முடியாதவள எதுக்கு கூட கூட்டிட்டு போறீங்க, வீட்லே விட்டு போக வேண்டியது தானே, நானாவது கொஞ்ச நாளைக்கு நிம்மதியா இருந்திருப்பேன்.." ஜன்னல் பக்கம் பார்வையை பதித்து அவள் பாட்டுக்கு சொல்ல, வெறியானவனின் கைபேசி அலறவும், அவள் மீதுள்ள கோவத்தில் அட்டன் செய்து,
'ஹெலோ..' என்றதில் தான் எத்தனை கோவம்.
அந்த பக்கம் சிறு மௌனம் காத்து, "ஆத்வி நான்தான் பேசுறேன்" ஒரு பெண்ணின் குரல் ஒளிக்க எரிச்சலானவன்,
"நான்தான்னா பேரில்லயா.." என்றதும் அவள் பெயர் சொல்ல, "ஓஹ்.. ஹரிதா நீயா.." என்றது தான் தாமதம், அதுவரை வெளியே வெறித்து வந்தவளின் பார்வை, கலவரமாக கணவன் புறம் திரும்பியது.
"சொல்லு என்ன கால் பண்ணிருக்க, ஏதாவது முக்கியமான விஷயமா.." ஓரக்கண்ணால் மனைவியின் பீதியான முகம் பார்த்தபடியே சற்று பொறுமையாக கேட்டிட, அந்த பக்கம் கேட்டுக் கொண்டு இருக்கும் ஹரிதாக்கோ மண்டை சூடேறிப்போனது.
'ஏதோ காரணத்தோட குழையிறான் ராஸ்கல்..' தனக்குள் கருவியவள்,
"ஆத்வி அதான் நீங்க சொன்ன மாதிரியே நான் தான் எல்லா உண்மையும் ஒத்துகிட்டேனே, திரும்பவும் ஏன் என்ன உங்ககூட இருக்க சொல்லி கட்டாயப்படுத்துறீங்க.."
ஹரிதா நீலிக்கண்ணீர் விட்டாலும், எப்படியாவது மீண்டும் ஆத்வியை தன்புறம் மடக்க வாய்ப்பு கிடைக்காதா என்று நயவஞ்சமாக எதிர்பார்த்தவளுக்கு, இப்போது அவனே ஆஃபர் தருகிறேன் என்றால் வேண்டாம் என்றா சொல்லப் போகிறாள்.
அவள் நடிப்பு அறியாதவன் ஆத்வியும் இல்லையே! இருந்தும் அவளை தன் கண்காணிப்பில் வைத்துக் கொள்ளவேண்டிய சந்தர்ப்ப சூழ்நிலையால் வேறு வழியில்லாமல், "என்ன பண்றது ஹரி, நான் சொல்ற வரைக்கும் நீ என் கூட இருக்கணும் இதுதானே டீல்.." என்றதும் கவியின் முகம் இருளடைந்து போனது.
அவள் முகத்தை வைத்தே மனைவி வேறு அர்த்தத்தில் புரிந்துக் கொண்டாள் என நன்றாக அறிந்துக் கொண்டவனும், மேலும் அவளை வெறுப்பேற்றும் பொருட்டு,
"சரி ஹரி, நீ நேரா என் வீட்டுக்கு வந்திடு, நானும் இன்னும் சில மணி நேரத்தில வந்திடுவேன்" என்றவன் அழைப்பை துண்டித்து கவி முகத்தை பார்த்தான். கண்கள் கலங்கி அழுகையை அடக்கிக் கொண்டவளாக, உதடு துடிக்க அமர்ந்திருப்பதை கண்டு, இப்போது தான் திருப்தியாக இருந்தது.
"ஹேய்.. கவி என்ன சொல்லிட்டு இருந்த, உன்ன வீட்லே விட்டு வந்திருந்தா நிம்மதியா இருந்திருப்பியா.. இப்பவும் ஒன்னும் கெட்டு போகல, இங்கிருந்து உன்ன வேற கார், இல்ல இல்ல.. நல்ல ஓட்ட பஸ் பிடிச்சி ஏத்தி விடுறேன், நீ வீட்டுக்கு போயிடுறியா.." நக்கல் தொனியில் கேட்டபடி அவன் காரை இயக்க, கோவம் பொங்கியது கவிக்கு.
"ஏன் என்ன பஸ் ஏத்தி அனுப்பிட்டு, உங்க முன்னால் காதலி, உங்க பிள்ளைய சுமக்குற காதலி கூட சந்தோஷமா இருக்கலாம்னு பாக்குறீங்களா.." ஆத்திரமும் அழுகையுமாக கேட்டது அவனுக்கு டென்ஷன் அதிகரித்தது.
"ஏய் எதுவும் முழுசா தெரியாம அரைவேக்காடு மாறி உளறித் தொலைக்காத.. அவ.." என ஹரிதாவை பற்றிய விபரங்களை சொல்ல வாயெடுக்கையில்,
"அதான் இப்போ கொஞ்சி கொலாவினீங்களே உங்க காதலி ஹரியோட.. இதுல செல்லப் பேர் வேற ஹரி குரினு.. அவள தான் உங்களுக்கு பிடிச்சி இருக்குனா, ஏன் என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க..
இத்தனைக்கும் உங்க குழந்தை அவ வயித்துல இருக்கு, அந்த சின்ன உயிரப்பத்தி கூட நினைக்காம, உங்க சந்தோஷத்தை மட்டும் எதிர்பாக்குற சைக்கோ நீங்க.." கவி பேசியதில் கோவம் எல்லைகடந்து போக, அவன் அடித்த அடியில் அவள் கன்னம் எரிந்தது.
"இனி நீ என் முன்னாடி வாய் திறந்து பேசவேக் கூடாது.. மீறி பேசின, அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன்.. உனக்கு என்கூட வர்ற இஷ்டம் இல்லைனா இப்பவே காரை நிறுத்துறேன், இறங்கி இப்டியே எங்கேயாவது போய் தொல..
திரும்ப என் கண்ணுல மட்டும் பட்டுடாத.. ஹரிதா என்கூட தான் இருப்பா, நீ அதை பொறுத்துக்கிட்டு இருக்க முடிஞ்சா இரு, இல்லாட்டி வந்த வழியே பாத்து போயிட்டே இரு.. உன்ன பாத்தாலே டென்ஷனாகி, எரிச்சலும் கோவமும் தான் டி அதிகமா வருது ச்ச.." தலையில் அடித்துக் கொண்டவனை நடுங்கிய புள்ளிமானாக, வெம்பலாக பார்த்தாள் கவி.
அதிலிருந்து அவளை ஏரெடுத்தும் பார்க்கவில்லை அவன். மினி மாளிகை வீட்டிற்கு அழைத்து வந்த ஆத்வி, பிரமாண்ட அறைக்குள் புகுந்துக் கொள்ள, பேந்த பேந்த விழித்த கவி, அச்சத்தில் அவன் பின்னே அதே அறைக்குள் நுழைந்து, ஓரமாக கட்டில் மேல் அமர்ந்தவள் தான்.
அவனிடம் ஏதோ பேச துடிப்பதும், அவன் மிரட்டல் நியாபகம் வந்து அப்படியே ஆஃப் ஆவதுமாக, அவள் அவஸ்தையாக நெளிந்துக் கொண்டு இருப்பதை பார்த்தபடியே, போனை காதில் வைத்தவன்,
"ஹான் வந்துட்டியா ஹரி, இதோ நானும் உன்ன பாக்க வந்துட்டே இருக்கேன்.." சிரித்தபடியே பேசிச் சென்றதை கண்டு, ஊமையாக கதறி அழுதாள் கவி.

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 53
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.