- Messages
- 278
- Reaction score
- 215
- Points
- 63
அத்தியாயம் - 55
"ம்ம்.. அழாம சாப்பிடு.." யாதவ் அதட்டலாக சொல்லவும், அவன் முகம் பாராமல் உணவை உண்டவளின் மனதில் பலவிதக் குழப்பங்கள்.
இந்நேரம் தான் செய்த ரகளைக்கு, இனி தன் கண்முன்னே வரவே மாட்டான் என்று நினைத்திருக்க, உணவை எடுத்து வந்து பொறுப்பாக ஊட்டி விடுவான் என்று கனவிலும் நினைக்கவில்லை ஸ்வாதி.
கடைசி வாய் உணவை அவளுக்கு கொடுத்தவன், "எப்ப ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம்.." சற்றும் பிசிரு தட்டாமல் நேரடியாக கேட்டவனை அதிர்ச்சியோடு கண்டவளாக,
"என்ன.. கல்யாணமா.." மனதில் மட்டும் சத்தமாக நினைத்து, உதட்டு அசைப்போடு அவனை புரியாமல் பார்த்தாள்.
நிதானமாக அவளுக்கு நீரை புகட்டிய யாதவ், "என்ன அப்டி பாக்குற, நீ வாயத் திறந்து சொல்லலைனா எனக்கு எதுவும் தெரியாதுனு நெனச்சிட்டியா.." தேகம் இறுகி கேட்டவன், வெங்கட் மூலம் மேலோட்டமாக நடந்ததை தெரிந்துக் கொண்டு, ஆத்வியிடம் போனில் பேசி முழு உண்மைகளையும் கரந்து விட்டான்.
அவமானத்தில் கண்கள் கலங்கி தலைத் தாழ்த்திக் கொண்டவளை, மீண்டும் தலை நிமிர்த்தி தன்னை காண செய்ய, அவனை பார்க்க முடியாமல் இமைமூடிக் கொண்ட ஸ்வாதி,
"ப்ளீஸ் என்ன விட்டுடுங்க நான் உங்களுக்கு சரிவர மாட்டேன்.." கண்ணீரோடு உதடு துடித்தவளின் மூடியஇமையில் மென்முத்தம் வைக்க, உடல் சிலித்து அதிர்ந்தவளாக, சட்டென கண் திறந்து அவனை விட்டு விலகி செல்லப் போனவளின் கரம் பற்றி மீண்டும் தன் அருகே அமர வைத்தான் யாதவ்.
"ப்ளீஸ் விடுங்க.. என்னால இதுக்கு சம்மதிக்க முடியாது.. உங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை இருக்கு, அதை பாருங்க.. என்ன மாறி ஒருத்தி உங்களுக்கு வேண்டான்.. நான் இங்கே இருக்குறது உங்களுக்கு தொந்தரவா இருந்தா சொல்லுங்க, நான் யார் கண்ணுக்கும் படாம எங்கேயாவது போய்டுறேன்.." இவ்வார்த்தைகளை சொல்லும் போதே, அழுகை தொண்டையை அடைத்தது.
"சரி.. போ.." யாதவ் பட்டென சொல்ல,
"என்ன..." பதட்டம் கொண்டு அவனை காணவும்,
"தாராளமா போ.. என் மனைவியாகி, உன்ன மாறியே ஒரு பெண் குழந்தைய எனக்கு பெத்துக் கொடுத்துட்டு, எங்களையும் உன்கூட சேத்து கூட்டிட்டு எங்கே வேனாலும் போ, உன் பின்னாடியே நாங்களும் வரோம்.. என்ன சொல்ற.." அவன் கண்சிமிட்டி புன்னகைக்க, தெரித்த விழிகளோடு கண்டவளின் மனமோ, படபடவென அடித்துக் கொண்டது.
"புரிஞ்சி தான் பேசுறீங்களா.." என்றாள் அழுகை வெடிக்க தயாராகும் நிலையில்.
"புரிஞ்சதனால தான் பேசுறேன்.." என்றான் உறுதியாக அவனும்.
"இதுக்கு நான் ஒரு காலமும் சம்மதிக்க மாட்டேன்.."
"உன் சம்மதமே எனக்கு தேவைஇல்ல.."
"ஐயோ.. ஏன் திரும்பத்திரும்ப அதையே பேசி என்ன டார்ச்சர் பண்றீங்க.. எனக்கு உங்கள கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்ளை னு தெளிவா சொல்றேனே புரியலையா உங்களுக்கு.."
"நீ மட்டும் என்ன டி, ஒன்னும் இல்லாத விஷயத்தை பிடிச்சி தொங்கிட்டு இருக்கியே.. எனக்கு நீ வேணும் என் வாழ்க்கை முழுக்க டாட்.." அவன் சத்தமிட,
"எது ஒன்னும் இல்லாத விஷயம்னு சொல்றீங்க.. என்னால எதையும் மறக்க முடியல, சும்மா கண்மூடி படுத்தாலே அந்த ராஸ்கல் முன்னாடி என் மானத்தை காத்துக்க, அம்மணமா ஓடினது மட்டும் நியாபகம் வருது..
அதை நினைக்கும் போதெல்லாம் ஏன்டா திரும்ப உயிரோட வந்தோம்ன்ற எண்ணமே, என்ன கொலையா கொல்லுது.. இதுல நீங்க வேற, ஐயோஓ.. என்னால முடியலைங்க.. நான் அருவருப்பு.. அசிங்கம்..
ப்ளீஸ் என்ன இப்டியே விட்ருங்க உங்கள கையெடுத்துக் கும்பிடுறேன்.." அவள் முகத்தை மூடி கதறி அழுவதை, வேதனை மாறாத முகபாவனையோடு கண்டவன் மனதிலும், ஸ்வாதி அந்த இக்கட்டான சூழ்நிலையில் எப்படி துடித்திருப்பாள் என்று நன்றாகவே உணர்ந்துக் கொள்ள முடிந்தது.
அந்த நேரத்தில் தன்னவளோடு தாம் இல்லாமல் போய் விட்டோமே என உள்ளுக்குள் கொதித்துப் போனவனுக்கு, சுதந்திரப் பறவையாக இருந்தவளை, இந்த நிலைமைக்கு கொண்டு வந்தவன் மீது, குத்திக் கொன்று போடும் அளவுக்கு கொலை வெறியானது.
"இங்கே பாரு ஸ்வாதி, நடந்து முடிஞ்சத எதுவும் மாத்த முடியாது, உன்ன அவன் கெடுத்தே இருந்திருந்தாலும் எனக்கு அதை பத்தி எந்த கவலையும் இல்ல.. ஏன்னா எனக்கு உன்உடம்பு மேல காதல் வரல டி, உன் மனசு மேல வந்த காதல் தான், என் மனசு முழுக்க நிறைஞ்சி இருக்கு..
கண்ட நாயும் கேவலமான எண்ணத்துல பாத்துடுச்சி அப்டின்னு எல்லாம், என் ஸ்வாதிய என்னால நிர்கதியா விட்டு போக முடியாது.. கஷ்டப்பட்டு உயிர் பிழைச்சி வந்திருக்க, தேவை இல்லாம பேசி அடி வாங்கியே செத்துடாத, எனக்கு நீ வேணும், என் வாழ்க்கை முழுக்க..
இந்த அழுகாச்சி சீனையெல்லாம் இதோட முடிச்சிகிட்டு, ஒழுங்கா கல்யாணப் பொண்ணா லட்சணமா, சிரிச்ச முகத்தோட மாமன பாக்கும் போதெல்லாம் வெட்கத்தோட இரு.. கல்யாணம் பண்ணி சந்தோஷமா வாழலாம் என்ன சொல்ற..!
அவளின் கலங்கிய அலைபாயும் விழிகளில், அவனது சூரியப் பார்வையை கலக்க விட்டு, அழுத்தமாக ஆழமாக அவன் காதலை உணர்த்திய விதத்தில், எந்த பெண்ணுக்குத் தான் இப்படி ஒருவனை வேண்டாம் என்று சொல்ல மனம் வரும்! ஏற்கனவே அவன்பால் விழுந்த கிடந்த அவள் மனம், இப்போது சொல்லவா வேண்டும்!
வார்த்தைகளில் பதில் கூறவில்லை அவள், ஆனால் அந்த பார்வை!
அந்த பார்வையில் அவனுக்கான மொத்த பதிலையும் தேக்கி வைத்து, ஆனந்த கண்ணீர் பெருக்கெடுக்க, இமைக்காமல் அவன் வசீகர முகத்தையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறாளே! அதை உணர்வுபூர்வமாக உணர்ந்துக் கொண்டவனும், மீசை விரிய புன்னகைத்து, அவள் நெற்றி முட்டினான்.
"இனி எதுக்கும் நீ அழக் கூடாது ஸ்வாதி, உனக்காக நானும் எனக்காக நீயும்னு படைக்கப்பட்டவங்க.. அதான் உயிர் போற நிலையிலும் எனக்காக நீ திரும்ப உயிரோட வந்திருக்க கண்ணம்மா..
உன்ன ரொம்ப நல்லா பத்துப்பேன் டி.. ஆனா அதுக்கு பதிலா நீ ஒன்னு எனக்கு பண்ணியாகணுமே.." என்று புதிர் போடவும், என்ன? என்பது போல் குழப்பமாக புருவம் சுருக்கினாள்.
"ரொம்ப யோசிக்காத டி, அழகா க்யூட்டான ஒரு ஸ்மைல் வேணும், சிரி.." என்றவன் பெருவிரல் கொண்டு அவள் மென்னிதழ் வருடியதில், கண்கள் படபடக்க வெட்கம் வந்து, தன்னையும் அறியாமல் புன்னகை தவழும் முகத்தை அவனிடமிருந்து மறைக்க எண்ணி, அவனை விட்டு விலகப் போனவளை இடை வளைத்து பிடித்தவன், அவள் நெற்றியில் முத்தமிட்டவனாக,
"ரொம்ப அழகா இருக்க டி.." ரசனையாக கூறி, சிரிக்கத் துடிக்கும் அவள் முகத்தையே பார்த்திந்தான்.
"சார்.. விடுங்க, எனக்கு கூச்சமா இருக்கு.." ஸ்வாதி நெளியவும், அவளது வெட்கம் பார்க்க பார்க்க ஆடவனின் பார்வையில் மாற்றம் நிகழ்ந்து, அழகாக துடித்து சிரிக்கும் அவளது மாதுளை நிற இதழில் மையல் கொண்ட யாதவின் பார்வையை நன்கு உணர்ந்துக் கொண்டவள்,
"ஸ்.சார்.. எ.ஏன் அப்டி பாக்குறீங்க.." அவஸ்தையாக கேட்டவளுக்கு வெட்கம் பிடிங்கியது.
"இன்னும் சார் தானா.." உஷ்னமாக வெளிவந்த மூச்சிக் காற்றில் இதம் காய்ந்தவள்,
"வ்.வேற எ.எப்டி கூப்பிடனும்.." என்றாள் உள்ளடங்கிய குரலில்.
"சார் தவிர வேற எப்டினாலும் கூப்பிடு, உனக்கு இல்லாத உரிமையா.." என்றவனுக்கு தான் விரிந்து விரிந்து நடுங்கித் துடிக்கும் அவள் இதழ் மீது அத்தனை மோகம்.
"ஸ்.சார்னே கூட்டுட்டு திடீர்னு மாத்தி கூப்பிட ஒ.ஒரு மாறி கஷ்டமா இருக்கே, கொஞ்சம் டைம் குடுங்க.." தனது பார்வையை சந்திக்க முடியாமல், அவள் திண்டாடும் அழகு, அவனை கொல்லை கொள்ள வைத்தது.
அதற்க்கு மேலும் தாங்காது, அவள் இதழ் வரியில் தனது எச்சில் கொண்ட மையால், மென்மையாக கவிதை எழுதத் தொடங்க, ஒவ்வொரு வரியாக அவன் எழுதிக் கொண்டிருக்கும் எச்சில் முத்த கவிதைகளை, உணர்வுகள் எனும் புத்தகத்தில் அழகு பெட்டகமாக சேமித்து வைத்துக் கொண்டாள் பாவை.
««»»
"இங்க பாரு, கீழ உள்ள ரூம்ல தங்கிக்கோ.. உன் கேவலமான புத்திய காட்டி நரிதந்திரம் தீட்ட நெனச்ச, உன்ன மட்டும் இல்ல, உன்ன சேர்ந்த ஒவ்வொரு ஆளையும் உருதெரியாம அழிச்சிட்டு, உன்னையும் ஒன்னு இல்லாம செஞ்சிடுவேன்.." ஆத்வியின் கர்ஜனையில்,
"எல்லாம் என் நேரம்" உள்ளுக்குள் சலித்துக் கொண்டாலும் வெளியே அப்பட்டமான அச்சம் அவள் முகத்தில் படிந்து, "சரி ஆத்வி" என வேகமாக மண்டையை ஆட்டி வைத்தாள் ஹரிதா.
பார்வையால் பொசுக்கித் தள்ளியவன், "வேளாவேளைக்கு சாப்பாடு தண்ணி எல்லாம் உன் ரூம்க்கே வரும், நீயா தேவைஇல்லாம யாரோடவும் பேசக் கூடாது, மீறி பேசி ஏதாவது வில்லங்கம் பண்ண நெனச்ச.. " ஒற்றை விரல் நீட்டி கடுமையாக எச்சரித்த விதத்தில், பயத்தில் எச்சிலைக் கூட்டி விழுங்கியவளாக,
"எதுவும் பண்ண நினைக்க மட்டேன் ஆத்வி.." நடுங்க சொன்ன போதும், அவள் மீது நம்பிக்கை இல்லாமலே அலுவலகம் சென்றான் ஆத்வி.
இரண்டு நாட்கள் கடந்து விட்டது கணவனைக் கண்டு. அவன் சொன்னது போலவே கவி கண்ணில் படவே இல்லை அவன்.
ஊருக்கு வரும் போது ஆதி அவளுக்கு வாங்கிக்கொடுத்த புது போனில் இருந்து பலமுறை அவனுக்கு அழைத்துப் பார்த்தும், வேண்டுமென்றே மனைவி எண்ணை கண்டு எடுக்காமல் தவிர்த்து வருகிறான்.
நள்ளிரவில் வீட்டுக்கு வரும் ஆத்வி, கவி தங்கி இருக்கும் அறைக்கு செல்லாமல், அதற்கு பக்கத்து அறைக்கு சென்று கதவடைத்துக் கொள்வதை சூனியம் பிடித்த பச்சைக்கிளி ஒன்று, பார்த்துக் கொண்டு தான் இருந்தது பதுங்கியிருந்து.
கணவன் மனைவி இருவருமே பேசிக் கொள்ளாததை, வந்ததில் இருந்தே கண்காணித்து வந்த ஹரிதாக்கு ஏகபோக மகிழ்ச்சி தான்.
அதிலும் பகல் வேளையில் அறையிலே அடைந்துக் கிடக்க முடியாமல் வெளியே வரும் கவிக்கு, அவ்வீட்டில் உள்ள வேலையாட்கள் கொடுக்கும் ராஜமரியாதை வேறு கடுப்பை கிளப்பும் அவளுக்கு.
'பிச்சைக்காரிக்கு வந்த வாழ்வப் பாரு..' அறையில் பதுங்கி நின்றபடியே பார்த்து பார்த்து வயிறு கருகிப் போவாள்.
கவிக்கோ நாள் முழுதும், மித்ரா ஸ்வாதி ஆரு என அவர்களோடு போனில் பேசியே நேரங்கள் கிடுகிடுவென கடந்து விடும். அவர்களிடம் பேசும் வரை உள்ள உற்சாகமும் மகிழ்ச்சியும், பேசி முடித்ததும் வடிந்து, ஆத்வி தன்னோடு எப்போது பேசுவான் என்ற கவலையே மீதி நேரங்களை ஆட்கொள்ளும்.
இரவு 11 மணி வரை கணவனுக்காக காத்திருந்து, பின் உறக்கம் கண்ணை சுழட்டும் போது தான், அறைக்கே எழுந்து செல்வாள்.
இதை எல்லாம் ஒளிந்து பார்த்திருக்கும் ஹரிதாவின் மனதிலோ, ஆத்வியை தன் வழிக்கு கொண்டு வர வேண்டும் என்றால், கவியை முதலில் இங்கிருந்து துரத்தியாக வேண்டும் என்ற திட்டத்தோடு, தக்க சமையம் பாத்து காத்திருக்க தொடங்கலானாள்.
««»»
"சுத்த வேஸ்ட்டு டா நீ, உன்ன நம்பி ஒரு வேலைய ஒப்படைச்சதுக்கு, இப்டி கால் முடங்கி போய் காலத்துக்கும் எழுந்து நடக்க முடியாத படிக்கு வந்திருக்க.. இதுக்கு நானே முன்னாடி பாம் வச்சி அந்த ஆதியோட குடும்பத்தை மொத்தமா போட்டு தள்ளின மாறி, சொச்சமிருக்க குடும்பத்தையும் எப்பவோ போட்டு தள்ளி இருந்திருப்பேன்..
நீதான் தேவை இல்லாம நடுவுல புகுந்து, அந்த ஆத்வி பயல தோற்க்கடிச்சி போட்டு தள்ளினா, அந்த குடும்பமே அவனை நினைச்சி கதறி அழும்போது, ஒவ்வொருத்தறா சித்ரவதை செஞ்சி சாகடிக்கலாம்னு ஏதேதோ சொல்லி, என் மனசயும் கலச்சி, இப்டி டம்மி பாவாவா வந்து நிக்கிற.."
ஆக்ரோஷமான குரலில் கத்தி, சரிந்து விழும் முந்தானை தூக்கி தோளில்ப் போட்டபடி அங்கும் இங்கும் பரபரப்பாக நடந்து, தோற்றத்தில் வில்லி சிம்ரன் போல் ஸ்லிம்மாக இருக்கும் தாய் அன்னலஷ்மியை சலிப்பாக பார்த்தான் தீபக்.
"இங்கே பாரு ம்மா.. தேவை இல்லாம பேசாத, நானும் அந்த நாயக் கொல்ல பலவழில முயற்சி செய்துட்டேன், அவன் ரொம்ப உஷாரா என்கிட்ட இருந்து தம்பிச்சி போனா நான் என்ன பண்ண முடியும்..
இப்போ கூட பெத்த புள்ள இப்டி கால் ஒடஞ்சி போய், நடக்க முடியாம வந்திருக்கானேன்ற கவலை கொஞ்சமும் உனக்கு இல்லைல.. உனக்கு தேவையெல்லாம் அந்த ஆத்வி குடும்பம் கூண்டோட சாகனும் அவ்ளோ தாதனே.." அவனுக்கு வாய்க்கு வாய் பேசவும், சிறிதும் கோவம் குறையாமல் அவன் புறம் திரும்பிய அன்னம்,
"நான் என்னைக்கு டா, உன்ன பத்தின கவலை இல்லைனு சொல்லி இருக்கேன், இப்போ இந்த கோலத்துல உன்ன பாக்க பாக்க என் பெத்த வயிறு எப்டி எரியிதுனு உனக்கு தெரியாது தீபக்.. அதுக்கும் மேல நான் உயிரையே வச்சிருந்த உங்க அப்பாவ, அந்த ஆதி துடிக்கத் துடிக்க கொன்னு போட்டானே எனக்கு எப்டி இருக்கும்.." கோவத்தில் கண்கள் சிவக்க ஆவேசமாக கத்திய அன்னத்தின் நியாயம், தீபக்கு புரியாமல் இல்லை.
சிறுவயதில் இருந்தே தந்தையை கொன்ற ஆட்களை பழி வாங்க வேண்டும் என்று சொல்லி சொல்லியே வளர்க்கப்பட்டவன் தீபக். ஆத்வி படிக்கும் பள்ளி, கல்லூரி, தொடங்கி ஸ்போட்ஸ், ரேஸ் முதற்கொண்டு விடாமல் பின் தொடர்ந்து, எதிலுமே ஆத்வியை தோல்வியுற செய்து பின் அவனை மொத்தமாக வீழ்த்த வேண்டும் என்றே, இதநாள் வரை காத்திருந்து முயற்சி செய்து கால்கள் பரிபோனது தான் மிச்சமாகி போனது.
"பாரு டா பாரு, எப்டி சிங்கம் மாறி அந்த போட்டோல உங்க அப்பா இருக்கார்னு.." என்று நிற்க்காத நடையோடே கை நீட்டி ஆட்டி, சுவற்றில் மாட்டி இருக்கும் ஆளுயற போட்டோவில், மாலையும் பொட்டுமா அழுத்தமான முகத்தை கொண்டிருக்கும் ரோஹித்தை காட்டிய அன்னத்திற்கு, தன் காதலனான ரோஹித்தை பார்க்க பார்க்க ஆதியை மட்டுமின்றி, அவனது குடும்பத்தையும் சேர்த்து கொல்லும் வெறிக் கூடிக் கொண்டே போனது.
(ரோஹித் போன சீசனில் வந்த பயங்கர வில்லன்)
மித்ராவை கடத்தி சென்று அவளிடம் தவறாக நடந்துக் கொள்ள முயற்சித்தவன் மட்டுமில்லை, பல தடை செய்யபபட்ட தொழில்கள் தொடங்கி அவனுக்கு இல்லாத கெட்ட பழங்கங்களே இல்லை. அப்படி பட்டவனை தான், ஆதி துடிக்க விட்டு கொன்றான்.
ஆனால் அவனை உயிராக விரும்பும் இப்படிப் பட்ட ஒரு காதலி இருப்பாள், நாளை அவளே பெரிய வினையாக பழிவெறிப் பிடித்து வந்து நிற்பாள் என்று ஆதி என்ன கனவா கண்டான்!
ரோஹித் எப்பேற்ப்பட்டவன் என்று அவனைப் பற்றி அடி ஆழம் வரை நன்கு அறிந்து வைத்திருப்பவள் அன்னம். அவளும் பெரிய பணக்கார வீட்டுப் பெண் தான். கல்லூரி படிக்கும் போதிலிருந்தே ரோஹித் மீது அளவுகடந்த காதல், அவன் இப்படி தான் என்று தெரிந்தும். ஆனால் அவனுக்கோ போகும் இடமெல்லாம் படுக்கையை மட்டும் பகிர்ந்துக் கொள்ள பல காதலிகள் இருந்தனரே! அதில் ஒருவளாக மட்டுமே இவளையும் பாவித்தான் ரோஹந்த்.
அழகிலும் தோற்றத்திலும் அசரடிக்கும் அழகி ஒருத்தி, தானாக வந்து காதலிக்கிறேன் என்றாள்.
அவனோ படுக்கைக்கு மட்டுமே அன்னத்தை பகிர்ந்துக் கொண்டான். ஆனால் அது அவளுக்கு பெரிய விடயமாக தோன்றவே இல்லை. காதல் கண்ணை மறைத்து, அவன் செய்யும் தவறுகளுக்கு எல்லாம் பக்கபலமாக இருந்தாள் அன்னம்.
ரோஹித் தான் உலகம் என்று பெரும் நம்பிக்கையோடு அவனோடு வாழ்ந்து வந்தவள் தலையில், இடியாக இறங்கியது அவன் மரண ஓலம். அதன் பிறகு தீபக்கை பெற்றெடுத்து தனியாக அவனை வளர்த்து வந்தவளுக்கு, ஆதியின் குடும்பமே உரு தெரியாமல் அழிய வேண்டும் என்ற வெறியில், தக்க நேரம் பார்த்து ஆள் வைத்து ஆதியை பாம் போட்டு கொல்ல சொன்னது.
ஆனால் அந்த ஆட்களோ, ஆதி தனியாக குழந்தைகள் மற்றும் மித்ராவோடு காரில் வருவதை சரியாக கவனிக்காமல், அவனும் வேனில் தான் வருகிறான் போல என நினைத்து, வேனை மட்டுமே குறி வைத்து பாம் வீசி சென்றனர்.
தற்போது,
"எப்படியெல்லாம் அவர் கூட வாழணும்னு நெனச்சேன், அது எல்லாத்தையும் கெடுத்து உன்னையும் என்னையும் அனாதையாக்கிட்டான் அந்த ஆதி.. அவனை கொல்லணும், அவனை மட்டுமில்ல இப்ப உயிரோட மிஞ்சி இருக்க அவன் குடும்பத்தையே, ஒன்னும் இல்லாம செய்யனும்.." வெறிப்பிடித்தவள் போன்று கத்தும் அன்னத்தை பார்க்க பார்க்க அவனுக்கும், அவர்களை கொல்லும் வெறி அதிகமாகிக் கொண்டே போக,
அடுத்தடுத்து செய்ய வேண்டிய திட்டங்களை தீட்டியபடி, ஆத்வியின் வீட்டிற்கு மிரட்டி அனுப்பி வைத்திருக்கும் ஹரிதாவிடம், தற்போது ஆத்வி வீட்டில் என்ன நிலவரம் என்பதை, கேட்டு அறிந்துக் கொண்டான்.
««»»
மேலும் ஒருவாரம் ஆன நிலையில், இன்று எப்படியாவது கணவனை பார்த்து அவனிடம் பேசியே ஆகவேண்டும் என்ற தீர்மானம் கொண்டு, நள்ளிரவு தாண்டியும் ஹாலில் அமர்ந்திருந்த கவி, தன்னையும் மீறிய நிலையில் அமர்ந்த வாக்கிலே உறங்கியும் போயிருக்க, காலையில் கண் விழித்த போது,
ஆத்வியின் அறையில் இருந்து கலைந்த அரைகுறை உடையோடு சோம்பல் முறித்தபடி வெளிவந்த ஹரிதா, அவள் அறைக்கு சென்றதையும், அவள் சென்ற சில நிமிடங்கள் கழித்து, உடலை முறுக்கி வளைத்து மடமடவென நெட்டி முறிய, சட்டை இல்லாத வியர்வை சுரக்கும் உடலோடு வெளியே வந்த கணவனையும் கண்டு, நொறுங்கிப் போனாள் கவி.

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 55
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.