- Messages
- 278
- Reaction score
- 215
- Points
- 63
அத்தியாயம் - 58
"ஸ்வாதி இப்ப உடம்பு எப்டி இருக்குமா.." சுடுகஞ்சியோடு உள்ளே வந்த மித்ராவை சிறு புன்னகையோடு கண்டவள்,
"இப்ப பரவால்ல ஆண்டி, விழுந்த வேகத்துக்கு தலை தான் லேசா வலிக்குது.." எனும் போதே அவசரமாக உள்ளே ஓடி வந்த யாதவ்,
"ஹேய்.. ஸ்வாதி ஆர் யூ ஓகே.." பதட்டமாக கேட்டவனுக்கு பெரிதாக மூச்சி வாங்கியது.
அவனை கவலையாக பார்த்த ஸ்வாதி, தலை குனிந்துக் கொள்ள, சட்டையெல்லாம் வியர்வையில் நனைந்து முகத்தில் அப்பட்டமான பயத்தின் பிரதிபலிப்போடு இருந்த மகனை கண்டதும், முந்தானையால் அவன் முகம் துடைத்து விட்ட மித்ரா,
"ஏன் இவ்ளோ பதட்டம் கண்ணா, அவளுக்கு இப்ப ஒன்னும் இல்ல.. பாத்ரூம்ல சோப்பு நுரை இருந்தத கவனிக்காம கீழ விழுந்து மயக்கம் போட்டுட்டா.. சத்தம் கேட்டு ஓடி வந்து பாத்து டாக்டர்க்கு போன் பண்ணேன்,
அவர் வந்து பாத்துட்டு விழுந்த அதிர்ச்சில வந்த லேசான மயக்கம் தான்னு, மருந்து கொடுத்துட்டு போனதுக்கு பிறகு, இப்ப தான் எழுந்து உக்காந்தா.. நீ ஒன்னும் பயப்படாத.." நடந்ததை தெளிவாக உரைத்து சமாதானம் கூறவும், மித்ரா இருக்கவே சற்று நிதானம் கடைப்பிடித்த யாதவ்,
"பாத்ரூம் கூட பாத்து போக மாட்டியா.." என்பது போல பார்வையால் அவளை குற்றம் சாட்டிட, சங்கடமாக நெளிந்த ஸ்வாதி,
"இப்போ நான் நல்லா இருக்கேன் சார் பயப்படாதீங்க.." மெல்லமாக சொல்லி மித்ராவை பார்க்க, இருவரையும் கண்டு மௌனமாக புன்னகைத்துக்கொண்டவளாக,
"இந்தா யாது கஞ்சி, சூடா இருக்கும் போதே அவளை குடிக்க வச்சிட்டு, டாக்டர் கொடுத்த மருந்து இருக்கு அதை போட வச்சிடு, எனக்கு கிட்சன்ல வேலை இருக்கு.." இருவருக்கும் தனிமை கொடுத்து விட்டு சென்றவள் மனதிலோ, கூடிய விரைவில் இருவருக்கும் திருமணம் நடத்தி வைக்க வேண்டும் என்ற எண்ணம், ஆவலாக இருந்தது.
ஸ்வாதியிடம் பேசிய மறுநாளே யாதவ் தன் காதலை பற்றி, வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரியப் படுத்தி விட்டான். அவர்கள் என்ன காதலுக்கு எதிரியா மாட்டேன் என்றிட, மாறாக ஸ்வாதியும் தங்கள் வீட்டிற்கே மருமகளாக வரப் போவதை எண்ணி, கொண்டாடவே செய்தனர்.
மித்ரா சென்றதும் அவளருகில் வந்து அமர்ந்தவன் விடாமல் அவளை முறைத்திருக்க, "ஏன் சார் இன்னும் முறைக்கிறீங்க, தெரியாம தானே விழுந்தேன்" பாவமாக விழித்தவளை மேலும் முறைத்தவனாக,
"இப்ப தானே உடம்பு கொஞ்சம் சரியாகிட்டு வருது, அதுக்குள்ள ஏன் டி உனக்கு இந்த தேவை இல்லாத வேலை.. கீழ என்ன இருக்குனு பாத்து போக மாட்டியா, கண்ண என்ன தலைக்கு மேலயா வச்சிட்டு போன..
அம்மா போன் போட்டதும் அடிச்சி பிடிச்சி ஓடி வரேன், உனக்கு என்னாச்சோன்ற பதட்டத்துல.." முகத்தை உர்ரென வைத்து வசவு பாடியவன் கரமோ, கஞ்சியை எடுத்து அவளுக்கு மும்புரமாக ஊட்டிக் கொண்டே இருக்க,
பாவம், பதில் பேச முடியாமல் அடுத்தடுத்து அவன் கொடுப்பதை விழுங்கியே சோர்ந்து போனவளின் வாயில், அடுத்து மாத்திரையை போட்டு தண்ணீரைக் கொடுக்க ழ் சிறு முறைப்போடு விழுங்கிய ஸ்வாதி, ஹப்பாடா.. என பெருத்த மூச்செடுத்தாள்.
"என்னங்க நீங்க, கேள்வி கேட்டும் திட்றீங்க, பதில் சொல்றதுக்குள்ள தொடர்ந்து கஞ்சிய வாயில வச்சா என்ன அர்த்தம்.. தெரியாம விழுந்ததுக்கா இப்டி அலப்பறை பண்றீங்க.." லேசாக இதழ் சுழித்து, முகத்தை திருப்பிக்கொண்டாள் ஸ்வாதி.
மெலிதாக புன்னகை சிந்தி, திருப்பிய அவள் முகத்தை தன் புறமே திருப்பியவன், அங்கும் இங்கும் அலைபாயும் அவள் மின்னல் விழிகளை ரசனையாக கண்டு, பெருவிரல் கொண்டு அவள் கன்னம் வருட, கூசிப் போனவள், "இப்ப தான் திட்டினீங்க அதுக்குள்ள என்னவாம்.." கழுத்தை நெளித்து சிணுங்க,
"அதுக்கு பேர் திட்றது இல்ல அம்மு அக்கறை.. இப்போ தான் பெரிய கண்டத்துல இருந்து உயிர் பிழைச்சி வந்திருக்க, அதுக்குள்ள இப்டி கீழ விழுந்து மயங்கி விழுந்துட்டேன்னா, எப்டி டி இருக்கும்.. பதறி போய்ட்டேன் ஸ்வாதி.." என்றவனின் தாய்மைமிக்க அன்பில் உருகி விட்டாள் பாவை.
அவன் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டவளின் கண்கள் கலங்கிப் போக, "நான் ரொம்ப குடுத்து வச்சவங்க, அதான் உங்கள போல ஒருத்தர் எனக்கு வரமா கிடைச்சி இருக்கீங்க.. சின்ன வயசுல என் அம்மா என்ன அனாதையா தவிக்க விட்டு போன நேரத்துல, கவி எனக்கு எல்லாமுமா கிடைச்சா..
இப்ப வாழ்க்கையே வெறுத்து போன நிலையில, ஜடமா இருந்த எனக்கு, ஊனும் உயிருமா இருப்பேன்னு நீங்க வந்திருக்கீங்க.. என் மனசு படும் சந்தோஷத்தை எப்டி வார்த்தையால வெளிப்படுத்துறதுனு தெரியலைங்க.." விசும்பலும் கண்ணீருமாய் உரைத்தவளின் சூடான கண்ணீர் துளிகள், ஆணவனின் நெஞ்சில் நனைத்து இதமாக சுட்டது.
அவள் உச்சந்தலையில் முத்தமிட்டபடியே அவளை இறுக்கி அணைத்த யாதவ், ஒற்றை முத்ததால் தன் மொத்த காதலையும் அவளுக்கு உணர்த்தியவனாக, "உனக்கு தக்கநேரத்துல இதயம் கொடுத்து, உன் உயிரக் காப்பாத்தினது யார்னு தெரியுமா ஸ்வாதி.."
நிதானமாக கேட்டவன், ஸ்வாதி தன் அன்னையை எந்த அளவிற்கு வெறுக்கிறாள் என்று கவி மூலமாக கேட்டறிந்து, நன்றாகவே தெரிந்தே வைத்திருந்தான்.
"தெரியலைங்க, யார் இதயம் கொடுத்ததுனு தெரிஞ்சா அவங்க குடும்பத்துக்கு ஒரு நன்றி சொல்லாம்னு, நானும் கவிகிட்ட பலமுறை கேட்டு பாத்துட்டேன், அதுக்கு அவ மழுப்பளா பதில் சொல்லிட்டு போய்டுவா.. உங்களுக்கு தெரியுமா யார் இதயம் கொடுத்ததுனு.." ஆவலாக பார்த்தாள் அவன் முகத்தை.
"ம்ம்.. தெரியும்.." என்றவன் அவளை கூர்ந்தபடியே, "உன் அம்மா தான் உனக்கு இதயம் கொடுத்தது.." என்றதும் தெறித்த விழிகளில் அதிர்வுக் கொண்டு, நம்பமுடியாமல் திகைத்தவளின் கண்ணீர் ஊற்றெடுக்க, பேச வார்த்தைகளின்றி மௌனமாக கண்டாள் அவனை.
"உண்மை தான் ஸ்வாதி, உன்ன உயிருக்கு மோசமான நிலைல பாத்ததும் அவங்களுக்கு என்ன பண்றதுனு தெரியாம, உனக்கு பண்ண பாவத்துக்கு அவங்க இதயத்தையே கொடுத்து பிராயாச்சித்தம் தேடிகிட்டாங்க.." சுருக்கமாக அவர் வாழ்ந்த நிலைமையை எடுத்து சொன்ன யாதவ்,
"உன்ன ஆசிரமத்துல சேத்து விட்டதுக்கு காரணமே அவங்களோட எதிர்கால வாழ்க்கைய நெனச்சி பயந்து தான்.
நம்பி காதலிச்சவன் பிள்ளையோட விட்டு ஏமாத்திட்டு போய்ட்டானேனு வெறுத்து போய், குடும்பமும் உங்க ரெண்டு பேரையும் ஒதுக்கி வச்ச நிலையில, உன்ன ஒத்த ஆளா வளக்க முடியாம, ஏமாத்திட்டு போனவன் பிள்ளைய நம்ம மட்டும் எதுக்கு வளக்கணும்னு மெச்சுரிட்டி இல்லாத வயசுல, அவங்க செஞ்ச தப்பு, பெருசா உருவெடுத்து, ரெண்டாவதா கெடச்ச வாழ்க்கையும் ரொம்ப மோசமா போயிடுச்சி..
எதுவா இருந்தாலும் அவங்க உனக்கு செஞ்சது ஒரு வகைல தப்பா போனாலும், இன்னொரு வகைல நல்லது பண்ணி இருக்காங்கனு தான் என் மனசுக்கு தோணுது.." என்றதும், அதன் காரணம் கவி என அவளுக்கு புரியாமல் இல்லை.
ஸ்வாதி மட்டும் இல்லை என்றால் கவியின் நிலைமை இன்று எப்படி வேண்டுமானாலும் திசைமாறி சென்றிருக்கும். உலகம் தெரியாத சிறு பேதைபெண் யாரை நம்பி என்ன ஆகி இருப்பாளோ என்று நினைக்கும் போதே, கொலை நடுங்கிப் போனது.
"என்ன ஸ்வாதி அமைதியா இருக்கே.."
"என்ன சொல்றதுனு தெரியல, ஆனா அவங்க இப்ப இல்லைனு நெனச்சா மனசுக்கு ரொம்பவே கஷ்டமா இருக்குங்க.. ஏதோ ஒரு வகைல அவங்க வாழ்க்கைக்கு சாபமா நான் வந்து பிறந்துட்டேன், இல்லைனா அவங்க நல்லா வாழ்ந்து இருப்பாங்கல்ல.." கேவலாக சொன்னதும் அவன் கரம் கொண்டு வாய் மூடியவன்,
"யார் யார் வாழ்க்கை எப்டி இருக்கணும்னு மேல இருக்கவன் கணக்கு போட்ட பிறகு தான், ஒரு சின்ன உயிரை கூட இந்த உலகத்துக்கு கொண்டு வருவான்.. அந்த வகைல உன் அம்மாவோட வாழ்க்கை இப்டி தான் முடியணும்னு இருந்திருக்கு..
இவ்ளோ அழகு தங்கத்தை பெத்து, சரியான நேரத்துல அவ உயிரையும் எனக்காக காத்து கொடுத்துட்டு, அவங்க தாய்மைய புனிதப் படுத்திட்டு போன உன் அம்மா, என்ன பொறுத்த வரைக்கும் ரொம்ப பெரிய நல்லது தான் செஞ்சி இருக்காங்க ஸ்வாதி..
அவங்க வாழ்ந்த காலத்துல உன்கூட இல்லாம மிஸ்பண்ண நாட்கள, இனி காலம் முழுக்க உன்னோட இங்கே நெருக்கமா இருந்து, உன் மூலமா இந்த உலகத்தை பாக்க போறாங்க.." மென்மையாக அவள் இதயம் தொட்டு நெற்றி முட்ட, உடல் சிலிர்த்துப் போனது.
காதலன் பேசியதில் அன்னை மேல் இருந்த பழைய கசப்புகள் நீங்கி இருந்தாலும், ஏதோ ஒரு வகையில் அவள் இழந்த அன்னை பாசமாக கூட இருக்கலாம், அதன் தாக்கம் அவரை முழுமனதாக ஏற்றுக் கொள்ளமுடியாமல் தவித்துப் போனது.
"இப்பவும் சோககீதம் தான் வாசிக்கணுமா கண்ணம்மா.. நீ யார் உனக்கு ஹார்ட் டொனேட் பண்ணதுன்னு கேட்டு, எல்லாரையும் தொல்லை பண்ணிட்டு இருந்தேன்னு எனக்கு நியூஸ் வந்திச்சி, உன்கிட்ட எப்டி இந்த விஷயத்தை சொல்றதுனு தெரியாம மூச்சிச்சிட்டு இருந்திருக்காங்க..
நான் தான் என் ஸ்வாதி நான் சொன்னா புரிஞ்சிப்பா, நான் பேசுகிறேன்னு கெத்தா சொல்லிட்டு வந்தேன்.. ஆனா இப்போ உன் முகத்தை பாத்தா என் கெத்து எல்லாம் வெத்தாகிடும் போலயே.." பொய்யாக கவலை கொள்ள, மெல்லமாக இதழ் விரித்தவள்,
"அய்ய.. ரொம்பத்தான் போங்க, பேசியே ஆள மயக்கிடுவீங்க.." அவன் மார்பில் செல்லமாக அடி வைக்க,
"என்ன டி இப்பவே அடிக்கத் தொடங்கிட்டே, இன்னும் கல்யாணமானா ஏறி மிதிப்பியா என்ன.." பாவம் போல் பயந்த பிள்ளையாக அவன் கேட்க,
"ம்ம்.. கண்டிப்பா அதான் நடக்கும்.. ஆபிஸ்ல காரணமே இல்லாம என்ன திட்டி சண்டை போட்டதுக்கு எல்லாம் சேத்து வச்சி செய்ய வேண்டாமா.."
"ஓஹ்.. நல்லா செய்யலாமே.. அதுவும் விதவிதமா.. என்ன சொல்ற ஸ்வாதிமா.." என்றவன் பார்வை கிறங்கி இருப்பதை கவனித்தவள்,
"ஆ.. ஆண்டி உங்கள கூப்பிடுற மாறி இல்ல.."
"இல்ல.." அவன் சட்டென சொல்லவும் தடுமாறிய ஸ்வாதி,
"இ.இல்ல எனக்கு கூப்ட்ட மாறி கேட்டுச்சே.."
"அப்டியா ஆனா எனக்கு கேக்கலையே, உனக்கு மட்டும் எங்க அம்மா குரல் கேக்குற மாதிரி, சூப்பர் பவர் வந்திடுச்சா என்ன.." என்றபடி அவளை நெருங்கி இருக்க, சடுதியில் தடுமாறி மெத்தையில் விழுந்தவளின் அருகே தானும் படுத்து, அவள் இன்னதென உணரும் முன், பாவையின் இதழ் கவ்வி கண்சொக்கிப் போனான்.
««»»
"ஐயா.. சின்னம்மாவ ரெடி பண்ணிட்டேன், போய் பாருங்க.." பணிப்பெண் வள்ளி நமட்டு சிரிப்புடன் சொல்லி விட்டு செல்ல,
"ஏன் இந்த சிரிப்பு.." என புரியாமல் மனைவியை பார்க்க வேண்டும் என்ற ஆவலில், படியேறி ஓடி இருந்தான் ஆத்வி.
இந்த அசட்டு ஆவல் அவன் முகத்தில் அப்பட்டமாக தெரிந்ததால் தான், அவர் சிரித்தது என அறியாமல் போனான்.
சடாரென கதவு திறக்கும் சத்தத்தில் முதுகு காட்டி நின்றவள் பதட்டமாக திரும்பிய அழகில், அவள் காலடியில் தான் அவன் வெளிப்படையாக விழவில்லை. ஆனால் அவனுக்கு முன்னால் அவன் மனம், எப்போதோ அவள் காலடியில் சரணாகதி அடைந்து விட்டதே!
புத்தம் புதிய சிவப்பு ரோஜாவாக சிகப்பு வண்ண பிளைன் புடவையில், ஆங்காங்கே அதே நிற சிவப்புக் கற்கள் மின்னியது. அளவான கூந்தலை மூணுகால் பின்னலிட்டு மல்லிகை சரத்தை தோள் நிறைய வழிய விட்டு, நெற்றி வகுட்டில் குங்குமமும், இரு புருவங்களுக்கு இடையே சிகப்புக் கல் பொட்டிட்டு, சிவப்பு நிற கற்கள் பதித்த கண்ணாடி வளையல் கை நிறைய குலுங்க நின்றிருந்த மனைவியின் அழகை அள்ளிப் பறுகியது, ஆடவனின் காந்த விழிகள்.
கணவனின் பார்வையில் சங்கடமாக உணர்ந்த கவி,
"மாமா, இந்த புடவை எனக்கு நல்லா இருக்கா.." அவன் எண்ணம் புரியாமல் மலங்க மலங்க விழித்துக் கேட்டாள்.
"எங்கே டி நல்லா இருக்கு, நான் எதிர்பாத்து வந்தது தான் ஒன்னுத்தையுமே காணோமே.."சப்பிட்டு சொன்னவன், கொஞ்சமும் வெளிதெரியா வன்னம், இழுத்து மறைத்திருந்த மனைவி இடை கண்டு பெருமூச்சு விட்டதை கவனிக்காத கவி,
"அப்போ நல்லா இல்லையா மாமா.. இதுக்கு தான் சொன்னேன் இந்த புடவையெல்லாம் எனக்கு செட்டாகாதுனு, நீங்க தான் நான் சொன்னதை காதுல வாங்காம, அந்த அக்காவ அனுப்பி விட்டுடீங்க..
சரி நான் இதை மாத்திட்டு வரேன் நீங்க வெளிய வெய்ட் பண்ணுங்க.." முகம் சுணங்கிய கவி, அழகாக மடிப்பெடுத்து பின் குத்தி இருந்த முந்தானையை கழட்டப் போக,
"ஏய்.. ஏய்.. என்ன டி பண்ற.." என்றபடி ஓடி வந்து அவள் கரத்தை பிடித்து தடுத்த ஆத்வி,
"நான் எப்ப சொன்னே உனக்கு புடவை செட்டாகாது நல்லா இல்லைனு.." சிறு முறைப்புடன் ஒற்றைப் புருவம் ஏற்றி இறக்கவும், புரியாமல் விழித்த கவி,
"நீங்க தானே நான் கேட்டப்போ எங்கே நல்லா இருக்குனு சொன்னீங்க.."
"ப்ச்.. நான் சொன்ன நல்லா இருக்கு வேற, நீ புரிஞ்சிக்கிட்ட நல்லா இருக்கு வேற.. இப்ப நான் சொல்ற நல்லா இருக்குக்கு, என் வாயால விளக்கம் கொடுத்தா தானே நல்லா இருக்கும்..
சோ நான் என் வாயாலயே விளக்கம் சொல்றேன், நீ கண்ண மூடு.." அவளின் இருதோளிலும் மாலையாக கரம் கோர்த்து ஹஸ்கியாக மொழிய,
"ம்ம்.. சரி.." என்ற அப்பாவி மங்கையோ, கணவனின் சூட்சமம் தெரியாமல், சட்டென கண்களை மூடிக் கொண்டாள்.

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 58
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.