- Messages
- 300
- Reaction score
- 215
- Points
- 63
அத்தியாயம் - 6
கண்மணியின் வார்த்தையில் வேதனையாக கண்ணீர் வடித்தவளோ விஷ்வரூபனின் திடீர் அணைப்பில் அதிர்ச்சி கொண்டவளாக விழிகளை அங்குமிங்கும் உருட்டிய நிலையில் மூளை செயலிழந்த உடலாக அசைவின்றி நின்றருந்தாள் மோகி.
காதல் நடிகனுக்கு காதல் நாடகத்தை பற்றி தனியாக நடிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டுமா என்ன. கன்னியை கண்டதும் பொங்கி வரும் உணர்வுகளை அவளுக்கு காட்டிடாமல் மறைத்தவனாக, வெறிக் கொண்டு மேய துடிக்கும் அவள் தேகத்தை மிதமான அக்கறை ஒழுகும் அணைப்பில் கொண்டு வந்து, பெண் வாசத்தை ஆழ சுவாசித்தவனின் புடைத்த நெஞ்சத்தை பாவையின் மென்மையில் பட்டும் படாமல் முதலில் அழுத்தி அவள் முதுகில் உள்ளங்கையினை படர விட்டு இன்னும் தன்னோடு அவளை அழுத்திக் கொண்டதில் உடல் உஷ்னம் எகிறி, அவள் உடலமைப்பின் அழகை உணர்ந்து உணர்ச்சியின் பிடியில் எச்சில் ஊர தன்னால் வாய் பிளந்தவனோ அவள் தோளில் தாடை பதித்து, கழுத்தை தழுவி இருந்த முடிகளை விலக்கி தோளில் உரசியபடியே மயில் போல் நீண்டு இருந்த கழுத்து வளைவில் முகம் புதைத்து அழுத்தமாக அவன் இதழை பதித்ததில், ஜிவ்வென மின்சாரம் தாக்கிய உணர்வில் தேகம் அதிர்ந்து சட்டென அவனை தன் வலுக்கொண்டு தூர தள்ளி இருந்தாள் மோகி.
அவள் தள்ளி விட்ட வேகத்தில் தள்ளாட்டமாக் கால்களை அழுத்தமாக தரையில் பதித்து நின்ற விஷ்வா, மோகம் கலைத்த கடுப்பை மறைத்து கண்கள் இடுங்க அவளை புரியாத பாவனையால் கண்டு, எங்கே தன் குட்டம் வெளிப்பட்டு விடுமோ என்ற எண்ணத்தில். ம்.மோ.கி நா..என ஏதோ சொல்ல வந்தவனை ஒருவித தடுமாற்றம் நிறைந்த பார்வை பார்த்து "இல்ல விஷ்வா நான் உன்ன தப்பா எதுவும் நினைக்கல. நான் வருத்ததுல இருக்கேன்னு என் மைண்ட டைவர்ட் பண்றதுக்காக தான் இப்டி பண்ணேன்னு என்னால புரிஞ்சிக்க முடியிது. எங்கே நான் உன்ன தப்பா நினைச்சிடுவேனோன்னு நீ எதுவும் ஃபீல் பண்ணாத. ஏன்னா என் விஷ்வா என்கிட்ட எப்பவும் தப்பா நடந்துக்க மாட்டான், அவன் ரொம்ப ரொம்ப நல்லவன்" உறுதியான குரலில் தெளிவாக உரைத்து விட்டு சிறு புன்னகையோடு அவள் அறைக்கு செல்லவும், கதவடைக்கும் வரை அவள் முதுகையே வெறித்தவனுக்கு "இது என்னடா நம்பள பத்தின புது வதந்தியா இருக்கு. நான் நல்லவனா? இது எப்டி எனக்கு தெரியாம போச்சி" என்று பெரிதாக எக்காலமிட்டு சிரிக்க வேண்டிய சிரிப்பை இதழ் கோணி அடக்கிக் கொண்டவன்.
நல்லவன்.. ம்.. இந்த பேர் கூட நல்லதா இருக்கு. ஆனா இது எனக்கு பொருத்தமான பேர் இல்லையே என கீழ் உதடு பிதுக்கி. இந்த நல்லவனோட இன்னொரு முகத்தை நீ பாக்குற காலம் ரொம்ப தூரம் இல்ல மோகி. அப்போ தெரியும் இந்த விஷ்வரூபனோட சுயரூபம் என்னனு. அந்த நேரத்துக்காக தான் வெறி மொத்தமும் எனக்குள்ள அடக்கிக்கிட்டு பொறுத்திருந்து காத்திருக்கேன். ஏலனமாக சிரித்தவனது முகமோ சடுதியில் நிறம் மாறி போனது பழி வெறியில்.
தன் அறைக்கு வந்த மோகித்தா, காதலனின் அணைப்பிலும் முத்தத்திலும் படபடத்துக் கொண்டிருந்த தன் இதயத்தை நெஞ்சில் கை வைத்து பிடித்துக் கொண்டவளுக்கு, வெதுவெதுப்பாக கழுத்து வளைவில் பதித்த அவன் எச்சில் தொட்ட ஈர முத்தம் குறுகுறுப்பூட்டி நிலைகண்ணாடியினூடே அவ்விடத்தை கண்டு விரல் கொண்டு வருடியவள் முகமோ வெட்கத்தில் இமை மூடிக் கொண்டது.
தொலைவில் இருந்து பார்த்து பேசியவரை தான் எடுத்த முடிவில் உறுதியாக மனசஞ்சலங்கள் எதுவுமின்றி கிறுக்கல்கள் இல்லாத வெள்ளை காகிதமாக இருந்த மனம், இப்போதெல்லாம் காதலனின் அருகாமை தந்த அன்புருகும் அக்கறையில், பிறந்ததில் இருந்து தாய் பாசம் அறியா பேதையின் மனம் காதல் கொண்டவனிடம் லையித்து வெள்ளை காகிதமாக இருந்த மனதில் காதல் ரசாயனம் நிரப்பப்பட்ட பேனா முனையால் கிறுக்கல் வரைய தொடங்கியது. கருநிற மை கொண்டு.
மைலிறகால் வருடுவது போன்ற உணர்வை அளித்த பேனா முனையே நாளை அவள் மனதை கொடூருமாக குத்திக் கிழித்து காயமாக்க காத்திகிருக்கிறது என்று அறியாது போனாளே!!
எப்போதும் கல்லூரி விட்டு வந்ததும் காக்கா குளியல் ஒன்றை போட்டு நைட்டி ஒன்றை எடுத்து உடுத்திக் கொள்வது தான் வழக்கம், ஆனால் இன்று ஏனோ காதலனின் வரவால் அழகாக சேலை உடுத்த வேண்டும் என்ற ஆசை வந்தது அதிசயமாக.
பொதுவாகவே பெண்கள் தங்களை அலங்கரித்து கொள்ளவதில் ஆசை கொண்டவர்கள் தான். அதிலும் ஒரு ஆணின் பார்வை தங்கள் மீது விழுகிறது என்றால், அவர்களை பிடிக்கிறதோ இல்லையோ இன்னும் அழகாக தங்களை காட்டிக் கொள்ள பலவிதமான ஒப்பனை செய்து ஆண்களை வெறுப்பேற்றிப் பார்ப்பதில் பெண்களை அடித்துக் கொள்ள ஆளே இல்லை.
பலமான ஒப்பனைகள் மட்டுமே ஒப்பனை அல்லவே, உடையில் கவனம் செலுத்துவதும், பூ வைப்பதும், பொட்டு வைப்பதும், உடைக்கு ஏகுவாக அணிகலன் அணிவது, தங்கள் மீது இதுவரை இல்லாத சிறு சிறு மாற்றங்களை செய்து கொள்வது என இத்தனை நாளும் ஏனோ தானோவென திரிந்து விட்டு ஒருவனுக்காக தன்னை இன்னும் நல்விதமாக காட்டிக் கொள்ளும் இத்தகைய திடிர் மாற்றங்கள் கூட ஒப்பனைகள் தான்.
யாரோ பார்ப்பதற்காகவே இத்தனை மெனக்கிடல்கள் செய்து கொள்ளும் போது மனதுக்கு பிடித்த காதலனுக்காக, மோகித்தா ஆசையாக யோசிப்பதில் ஏதும் குத்தம் குறை இல்லையே.
காதலனின் நினைவில் தோழி பேசிய வார்த்தைகளை யாவும் மறந்தவளாக, தக்காளிபழ நிறத்தில் அவள் கண்ணை பறித்த ப்ளைன் புடவை ஒன்றை கையில் எடுத்து மேலே வைத்து அழகு பார்த்தவளுக்கு சட்டென முகம் மாறி விட்டது.
மச்.. இதுவரைக்கும் விஷ்வா என்ன சேலைல பாத்ததே இல்லயே. திடிர்னு சேலை கட்டிட்டு அவன் முன்னாடி போய் நின்னா அவன் என்ன நினைப்பான். நான் சேலை கட்டிகிட்டு கோவிலுக்கு கிளம்பி அவனை கூப்பிடும் போதெல்லாம், கோவில்னு பேரை கேட்டதுமே தெறிச்சி போய் போனை வச்சிடுவான். ஏற்கனவே சேலைல என்ன அவன் பாத்திருந்தா கூட கூச்சம் இல்லாம சேலை கட்டிட்டு போலாம். இப்ப திடிர்னு போனா கிண்டல் பண்ணுவானோ? என்ன பண்றது. என்ற குழப்பத்தோடே கையில் இருந்த சேலையை கண்டு பெருமூச்சு விட்டவளாக அதை வருடி பார்த்து எடுத்த இடத்திலேயே வைத்து விட்டு, எளிமையான சுடிதார் ஒன்றை எடுத்து மாட்டிக் கொண்டு வெளியே வந்தாள் மோகித்தா.
தலைவிதியே என தலையில் கை வைத்துக் கொண்டு இருக்கையில் அமர்ந்திருந்த விஷ்வா, விரைவாக நினைத்த காரியத்தை முடித்து விட்டு கேவலமாம இந்த நாடக வாழ்க்கையில் இருந்து விடுதலை பெற வேண்டும், எப்படி? அதற்கு முதலில் மோகித்தாவோடு நெருங்க வேண்டும் அவளின் சம்மதத்தோடு. அதற்க்கான வேலைய பாரு விஷ்வா, இன்னைக்கு அவளை கட்டி பிடிச்சதும் என்கிட்ட மயங்கி நின்னா, அப்போ அவளுக்கும் நீ நெருங்கி போனா பிடிக்குது. சும்மா அவளோட சம்மதத்தை எதிர்பார்த்து காத்திருந்தா எப்பவும் போல தூரத்துல இருந்து ஹாய் ஹலோவோட முடிச்சிட்டு போக வேண்டியது தான். இனி நோ ரியாக்ஷன் ஒன்லி ஆக்ஷன் தான். கண்கள் மூடி ஆழ்ந்த சிந்தனையில் இருந்தவனை கலைத்தது இனிமையான குரல்.
ஹான்.. என நிமிர்ந்து விழித்தவன் எதிரே நின்ற தேவதையை கண்டு அசந்து போனான். எப்போதும் போல் லூசான உடையில் இல்லாமல், கிளிபச்சை நிறத்தில் அவளுக்காகவே அளவெடுத்து தைத்தார் போல் கச்சிதமாக அவள் மேனியில் பொருந்தி இருந்த அந்த எளிமையான சுடிதாரில் பிரம்மனின் லீலைகளை கண் கூடாக உணர்ந்த கள்ளனோ இருக்கையில் இருந்து எழுந்து நின்று அவளை நெருங்கி வரவும் இதயம் படபடக்க. வி.ஷ்.வா.. எதுக்கு கிட்ட வர.. விஷ்.வா.. கிட்ட வராதே.. மருண்ட பார்வையால் வார்த்தைகள் திணற தன்னிச்சையாக பின்னோக்கி அடியெடுத்து வைத்தாள்.
'இன்னும் எத்தனை நாளைக்கு பேபி கிட்ட வராம விலகி இருக்க முடியும். நீ என் உயிர் காதலி, என் உயிர் உள்ளவரை நீ மட்டும் தான் காதலி. நீ மட்டும் தான் எனக்கு எல்லாமே, உனக்கும் நான் அப்டி தானே' உடல் முழுதும் மோகம் சடுகுடு ஆட, வர்த்தைதனில் காதலை உருக விட்டு அவள் கரம் பற்றி மேலும் நெருங்கினான் காதல் தந்திரன்.
'சொல்லு மோகி. உனக்கும் நான் தானே எல்லாம். என்னை நீ முழுசா நம்புற தானே' சிலிர்ப்பூட்டும் தேன்சிந்தும் பேச்சில் அவளை மீறி ஆம் என தன்னால் ஆடியது தலை.
அப்போ இதெல்லாம் நமக்குள்ள தப்பில்ல தானே மோகி. பற்றி இருந்த அவள் கரத்தை உயர்த்தி கண்ணிமைக்கும் நொடியில் ஒரு இச். சிலிர்த்து விட்டாள் பாவை.
'வி.ஷ்..வா.. ப்ளீஸ் இ.இது.. எல்லாம் இப்போ சரியில்ல. இப்ப மட்டும் இல்ல எப்பவும் உன்ன நான் நம்புவேன். நம்பினதால தான் என் மனசையே உங்கிட்ட நான் பறிகொடுத்தேன். இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் விஷ்வா ப்ளீஸ் எனக்காக' மனம் கொண்டவனின் அதீதகாதல் ஏக்கம் கண்டு திகைத்து போன மங்கையோ திணறிப் போக. 'நோ பேபி ப்ளீஸ் என்னையும் புரிஞ்சிக்கோயேன், பேர்லயே மோகம் வச்சி ஒவ்வொரு நாளும் கொல்ற டி என்ன. டீப்பா எதுவும் இல்ல ஜஸ்ட் ஒன் கிஸ் ஆன் யுவர் லிப்ஸ்' கண்கள் கிறங்கி குரலும் கிறங்கி அவள் இதழை நெருகியதில், இதயம் அதிர சுவற்றோடு ஒட்டி நிற்க போன சமையம் சட்டென பக்கவாட்டில் அவள் நகர்ந்து விட்டதில், சுவற்றில் மோதி மூக்கில் முட்டிக் கொண்டவனை கண்டு கலகலவென சிரித்து விட்டிருந்தாள் மோகித்தா.
'ஏய் சிரிக்காத டி. என்ன பாத்தா உனக்கு எப்டி தெரியிது கோமாளி மாதிரியா' கேவலம் இவளிடம் போய் ஏமாந்து விட்டோமே என்ற ஆத்திரம் உள்ளுக்குள் இருந்தாலும் வெளியே செல்லக் கோபம் அவளிடம்.
அழகு கண்ணனாக மூக்கை தேய்த்துக் கொண்டு முகத்தை சுருக்கிக் கொண்டிருப்பவனை புன்னகையோடே ரசித்தவள். 'அச்சோ விஷ்வா இப்டி பாக்க நீ எவ்ளோ க்யூட்டா இருக்க தெரியுமா. அப்டியே கன்னம் கிள்ளி கொஞ்சனும் போல இருக்கு' அழகான முகபாவனை காட்டி அவள் சொன்ன விதமே அடங்கி கிடந்த ஆண்மையை மேலும் மேலும் மோகத்திரி தூண்டி விட்டது.
உணர்ச்சிகளை அடக்க முடியாமல் பெண்ணவளின் பொன்னுடலை பார்வையாலே களவாடி 'அப்போ கிள்ளி கொஞ்சு பேபி' அவன் கன்னம் காட்ட 'ச்சி.. போ விஷ்வா' என வெட்கத்தில் அவனை விட்டு ஓடியவளை வன்சிரிப்போடு கண்டு அவள் அறையில் இருந்த குளியலறையில் இம்முறை அவளிடம் அனுமதி கேட்காமல் உரிமையாக நுழைந்திருந்தான்.
மோகித்தாவும் அவன் அவசர தேவைக்கு செல்கிறான் போலும் என நினைத்து இரவு உணவினை தயார் செய்ய தொடங்கி விட்டிருந்தாள்.
தொடரும்.

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 6
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.