Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Administrator
Staff member
Messages
281
Reaction score
215
Points
63
அத்தியாயம் - 66

"இதுக்காண்ணே இத்தன நாளா என்கிட்ட பேசாம கோவத்த காட்டின.. எவ்ளோ பெரிய விஷயத்துல இருந்து என்ன காப்பாத்தி கொண்டு வந்திருக்க, அந்த பொண்ணு இவ்ளோ சீரியஸா இருப்பான்னு நான் நினைக்கல..

பலமுறை பொறுமையா எடுத்து சொல்லி புரிய வைக்க பாத்தேன், அவ பிரிஞ்சிக்கலைன்னு தெரிஞ்சதும் கண்டுக்காம விலகி வந்துட்டேன், அது தர்ஷினிக்கும் தெரியும்.. அப்டி இருந்தும் அவ யோசிக்காம HIV பாசிட்டிவ் பிளட எனக்கு செலுத்த துணிஞ்சி இருக்கான்னா, தங்கச்சி பாசம் அவ கண்ண மறச்சிடுச்சி போல..

ரெண்டு பேருமே நல்ல பொண்ணுங்க, அவங்க உயிர் போக நானும் ஒரு காரணமா மாறிட்டேனேனு நினைக்கும் போது ரொம்பவே வருத்தமா இருக்குண்ணே..

என்னதான் நீ என்மேல கோவத்தை காட்டினாலும், அதே அளவுக்கு பாசமும் வச்சிருக்கேன்னு எனக்கு நல்லா தெரியும்.. ஆனா ஏன் அதை நேரா வெளிப்படுத்த மாட்டேங்குறேன்னு தான் புரியல.." வருத்தமாக கூறிய யாதவை சலனமின்றி பார்த்த ஆத்வி,

"இதோ இந்த வருத்தம் கூடாதுனு தான் சொல்லாம விலகி போனேன், அதே நேரம் உன்னோட இந்த இளகிய குணம் இருக்கே எனக்கு சுத்தமா பிடிக்கல யாதவ்.. நம்ம யார் கூட பழகினாலும் ரொம்பவே உஷாரா இருக்கனும்..

நம்பிக்கை துரோகம் செஞ்சி முதுகுல குத்த நிறைய பேர் வரிசைகட்டி காத்திருக்காங்க.." என்றவன் அவன் தோள் தட்டி, "எந்த விஷயத்துக்கும் ஃபீல் பண்ணாதே, நீ வருத்தமா இருந்தா எனக்கு பிடிக்காது, உன்னையும் சேத்து தான்.." என விரைப்பாகக் கூறி அவனை அணைத்து விட்டு முன்னால் நடக்கவும்,

ஆத்வியின் பேச்சில் குளிர்ந்து குதூகளித்து கடைசி வார்த்தையில் குழம்பி நின்றவன், "நான் அதிகமா வருத்தப்பட்டதே நீ என்கூட சகஜமா பேசலைன்னு தாண்ணே, இனிமே பேசுவியா?.." அவன் பின்னிருந்து யாதவ் கத்த,

"அப்போ இதுக்கு மட்டும் வருத்தப்பட்டுட்டே இரு.. ஏன்னா என்னால மட்டும் தான் நீ வருத்தப்படனும் யாதவ், அந்த உரிமைய உன் வைப்ஃக்கு கூட நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்.." திரும்பாமல் விரலை ஆட்டியபடி சொல்லி சென்றவன் பின்புறத்தைக் கண்டு, இதழ் கடித்து புன்னகைத்துக் கொண்டவன்,

"இது என்னடா வித்தியாசமான பாசமா இருக்கு என் அண்ணனுக்கு.. பாசம் மட்டுமா வித்தியாசம், ஆளே வித்தியாசம் தான், பாவம் கவி.." தனக்குள்ளே பேசி சென்றாலும் மனதின் ஓரம் இனம் புரியா நிம்மதி பரவியது.

"அஜய் மாமா, உங்களுக்கு அடுத்து ஆண் குழந்தை வேணுமா இல்ல பெண் குழந்தை வேணுமா.." ஆருவின் அருகில் அமர்ந்து ஆப்பிளை வாயில் அரைத்தபடி திவ்யா கேட்க,
திரையரங்கம் போல் இருந்த பெரிய டிவியில், 'ராமையா வஸ்த்தாவையா' பாடலை கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த அஜய், திவ்யா கேட்ட கேள்வியில், தான் பெற்ற முத்தின் புறம் திரும்பியவன்,

"பொம்பள புள்ளைங்கன்னா பெரும்பாலும் அப்பாகிட்ட தான் பாசமா இருக்குங்க, ஆனா நான் பெத்தது எனக்கு எதிரா இல்ல இருக்கு.. அதனால எனக்கு அடுத்து பையன் தான் வேணும்.." என்றவன் பார்வை இப்போது மனைவியின் புறம் ரசனையாக படிந்தது.

கணவனின் பார்வையில் ஆரு நெளிய, "அப்போ தன்யாவ உங்களுக்கு பிடிக்கல அப்டி தானே சொல்ல வரீங்க மாமா.. பாரு பாப்ஸ் உங்க அப்பாவுக்கு உன்ன பிடிக்கலயாம், அவரே சொல்லறாரு.." உலக அதிசயமாக அண்ணன் தம்பி இருவரும் அருகரில் அமர்ந்து தன்யாவோடு விளையாடிய இருவரும், தந்தை மகளை கோர்த்து விட முடிவு கட்டிவிட்டனர் போலும்.

"அடேய்.. பாவிங்களா நான் எப்போடா அப்டி சொன்னேன், இப்டி கோத்து விட பிளான் போடுறீங்க.." அஜய் மனதில் நினைக்கும் போதே,

"டாடிஇஇ.. மாம்ஸ் சொல்றது உண்மையா என்ன உனக்கு பிடிக்காதா.." பாவமாக கேட்ட மகளை கையில் அள்ளிக் கொண்டவன்,

"ஐயோ செல்லக்குட்டி அப்பாக்கு போயி உன்ன பிடிக்காம போகுமா.. நீ என் பட்டுக்குட்டி, என் வெல்லக்கட்டி" என குட்டிக் கன்னத்தில் முத்தமிட்டு, "உன்னையும் என்னைக்கு பிரிக்க இவனுங்க பிளான் பன்றானுங்க பாப்பா.. இந்த கேடி பசங்க கூட சேராம உன் அத்தைங்க கூட போய் விளையாடு.." மச்சான்களை முறைத்தபடி சொல்ல,

"சரி டாடி.. நீ சொன்னா சரிதான்.." என தந்தையின் கன்னத்தில் முத்தமிட்டு மாமன்களை கண்டு கொள்ளாமல் அடுக்களைக்கு ஓடிய குட்டியை, இருவரும் சேர்ந்து முறைப்பதை கண்ட அஜய்,

"என்னங்கடா உலக அதிசயம் ஏதாவது ரகசியமா நடந்துடுச்சா என்ன, ரெண்டு பேரும் ஒன்னா உக்காந்து இருக்கீங்க.." என்றான் நக்கலாக.

"நாங்க ஒன்னா உக்கார தனியா எல்லாம் அதிசயம் நடக்க வேண்டியதில்ல மாமா, எங்கள பாக்குற உங்க கண்ணுல தான் அதிசயம் இருக்கு.. அப்பப்பா ஒரு அண்ணன் தம்பி ஒன்னா உக்காந்தா எம்புட்டு கேள்வி கேக்குறாய்ங்க.. நான் போயி எனக்கு ஃபஸ்ட்நைட் ரூம டெக்கரேட் பண்றேன்.." என்று எழுந்து ஓடிய யாதவை வினோதமாக பார்த்த அஜய்,

"அடேய்.. ஏற்கனவே ரூம் டெக்கரேட் பண்ணியாச்சு, நீ தனியா என்னத்த டெக்கரேட் பண்ண போறே.." பின்னிருந்து கத்தியது அவன் செவியை எட்டியும் பதில் வராமல் போனது.

யாதவ் போன திசையை கண்டு மொத்த குடும்பமும் சிரிக்கும் வேளையில், மற்றுமொரு அதிசயமாக ஆதி விக்ரம் இருவரும் முறைத்துக் கொள்ளாமல் ஒன்றாக பேசியபடி உள்ளே நுழைந்தனர்.

இரவு சடங்கிற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்திருக்க, ஸ்வாதியை எளிமையாக அலங்கரிக்கும் வேலையை மித்ரா தான் செய்துக் கொண்டிருந்தாள். மகள்கள் கர்பமாக இருக்க, கவிக்கு இந்த அலங்கார வேலை எல்லாம் சுட்டு போட்டாலும் வராத காரணத்தினால், பலவருடங்கள் கழித்து தன் கை வண்ணத்தை மருமகள் மீது இறக்கி இருந்தாள் மித்ரா.

"ஹையோ.. அத்தை, நீங்க ஆரு அண்ணிய விட சூப்பரா ரெடி பண்றீங்க.. எப்டி உங்களுக்கு இதெல்லாம் இவ்ளோ ஈஸியா வருது, எனக்கு இன்னும் சரியா தலைய கூட பின்னிக்க வரல, அதிலயும் அந்த புடவை இருக்கே ரொம்ப மோசம் நான் ஒரு பக்கம் சொருகினா அது ஒரு பக்கம் முறுக்கி சிக்கிக்கிது.." என்ற கவியை முறைத்த ஸ்வாதி.

"எத்தனை முறை இது எல்லாத்தையும் கத்துக்க சொல்லி கெஞ்சி இருப்பேன், அப்போலாம் முடியாதுனு ஒரே பிடியா இருந்துட்டு இப்ப வந்து புலம்பினா என்ன டி அர்த்தம்.." என்றதும் உதடு பிதுக்கிய கவியை பாவமாக கண்ட மித்ரா,

"சரி விடு ஸ்வாதிமா, இனிமே கவி எல்லாத்தையும் சரியா கத்துப்பா, பாரு பிள்ளைக்கு முகம் வாடி போச்சி.." அவளை தோளில் சாய்த்துக் கொள்ள, அத்தையின் தோளில் சாய்ந்து ரகசியமாக கண்சிமிட்டி ஸ்வாதிக்கு பழிப்புக் காட்டவும்,

"சரியான சேட்டை பிடிச்சவ, பாவம் இவ புருஷன், எப்டி வச்சி சமாளிக்கிறாரோ.." மனதில் நினைத்துக் கொண்டவள் அழகாக தயாரானதும், பால் சொம்போடு முதலிரவு அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டாள்.

முகம் நிறைய வெட்கத்தோடு அடிமேல் அடியெடுத்து வைத்து பட்டு சேலை சரசரக்க, செம்மை பூசிய ரோஜா ஒன்று கை கால் முளைத்து நடந்து வருவதை கண்டு கண்சிமிட்ட மறந்த யாதவ், வாவ்.. என வாய் விட்டே சொல்லியபடி அவளிடம் நெருங்கி வந்தான்.

வெட்கமும் பதட்டமுமாக தலை நிமிராது இருந்தவளின் அழகு வதனம் காண வேண்டி, ஒற்றை விரலால் அவள் தாடையை நிமிர்த்த, இத்தனை நாளும் இல்லாமல் இன்று ஏனோ ஆடவனின் ஒற்றை விரல் தீண்டியதற்க்கே, உடல் சில்லிட்டுப் போனது பாவைக்கு.

இமைகள் படபடக்க கணவனின் முகம் காண முடியாமல் மீண்டும் தலை குனிந்துக் கொண்டவளை ரசனையோடு கண்ட யாதவ், "ரொம்ப ரொம்ப புடிச்சி இருக்கு ஸ்வாதி உன்னோட இந்த வெட்கம்.. எனக்கே எனக்கான வெட்கம் இது.. காலத்துக்கு உன் வெட்க முகத்தை பாத்து ரசிக்க நான் ரெடி தான்,

ஆனா உடம்பு சொல் பேச்சைக் கேக்காம முறுக்கி எடுக்குதே, என்ன செய்யலாம்.." குறும்பாக மீண்டும் அவள் முகம் நிமிர்த்தி கண்ணடிக்க, மொத்தமாக சிவந்து போன ஸ்வாதி,

"ப்.பா.ல்.. ப்.பால்.." என்றவளுக்கு அடுத்த வார்த்தை வருவேனா என்றது.

"ஹேய்.. ஸ்வாதி இப்ப ஏன் இவ்ளோ நர்வஸா இருக்க ரிலாக்ஸ்டா.. இப்ப என்ன அந்த பால குடிக்கணும் அவ்ளோ தானே, குடு இங்க.." அவள் கையில் இருந்த சொம்பை வாங்கி இரண்டு மிடரு விழுங்கியவன், மீதியை அவளிடம் கொடுக்க, கூச்சமாக அவனிடமிருந்து வாங்கி குடிக்கத் தயங்கவும்,

"குடி ஸ்வாதி.." அவன் கண்ணசைக்க, மெல்ல தலையசைத்து தானும் இரண்டு மிடருக் குடித்து மேஜையில் வைப்பதற்குள், மீசை முளைத்த ஆறடிக்குழந்தை ஒன்று தன் மடியில் தவழ்ந்தை கண்டு திகைத்த சில கணங்களில், தலைக் கோதிக் கொடுத்தது அவள் கரம்.

தன்னவள் மடியில் கண்மூடிப் படுத்து, அவளது இதமான வருடலில் இதமாக உணர்ந்து,
"ஸ்வாதி.." என்றழைத்தவன் குரலில் தான் எத்தனை மகிழ்ச்சி.

"ம்ம்.. சொல்லுங்க" என்றாள் தேன் சொட்டும் மென்க்குரலில்.

"ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன் ஸ்வாதி, அந்த சந்தோஷத்துக்கு எல்லாம் முழு காரணம் நீதான்.. ஏன் தெரியுமா?"

"ஏங்க?.."

"அதான் சொன்னேனே உன்னால தான்னு.. நீ என் வாழ்க்கைகுள்ள வந்ததுல இருந்து தான், தொலஞ்சி போன எல்லாம் ஒவ்வொன்னா திரும்ப கிடைக்க தொடங்கி இருக்கு.. இனிமே பாக்கி இருக்குறது என் அம்மா மட்டும் தான், அவங்களும் கிடைசிட்டா என் சந்தோஷத்துக்கு அளவே இல்ல டி..."

உற்சாகம் பொங்க சொல்லும் போதே, வெகு நேரமாக அவன் முகத்துக்கு நேராக பளிச்சிட்டு மின்னிக் கொண்டு இருந்த அவளிடையில் திருட்டுப் பூனையாக பச்சக்கென முத்தமிட்டதில், ஹக்.. என அதிர்ந்து விழித்த ஸ்வாதியை குறும்பு மின்ன கண்டவன், மீண்டும் அழுத்தமாக முத்தமிட உடல் சிலிர்த்துப் போனாள்.

"என்னங்க நீங்க பேசிட்டு இருக்கும் இப்படியா பண்ணுவீங்க.." சேலையால் இடை மறைத்து சிணுங்கிய மனைவியை, மொத்தமாக அள்ளிப் பருக மோக ஆசை அதிகரித்துப் போனது.

"ஸ்வாதி.." என்றழைத்தவன் குரலோ இப்போது ஒருவித போதையாக ஒளிக்க, அதுவரை இருந்த சகஜநிலை மறைந்து கணவனின் தாபப் பார்வை உணர்ந்து உடல் கூசி நெளிந்தாள்.

"தினமும் தானே பாக்குறீங்க, அப்புறம் ஏன் இந்த பிச்சி தின்கிற பார்வை.."

"இத்தனை நாளா என் காதலியா இருந்தவ இப்போ என் மனைவியா ஆகிட்டாளே அதுக்கு தான்.. என் பார்வை மட்டும் இல்லாம என்னுடைய ஒவ்வொரு செல்லும் உன்ன அணுவனுவா ரசிச்சி பிச்சி தின்ன காத்திருக்கு, நீ என்ன வெறும் பார்வைக்கே அலுத்துப் போற.."

அவள் மடியில் இருந்து எழுந்து கன்னத்தில் தட்ட கணவனின் ஆசைபேசிச்சில் செவிகள் கூசி, "ச்சீ.. போங்க.." என மெத்தையில் இருந்து எழுந்தவளின் சேலை தலைப்பு தலைவனின் கையில் சிக்கி, முறுக்கி இழுத்து தனியாக உருவப் பட்டது.

ரவிக்கை மற்றும் பாவாடையோடு அவன் நெஞ்சில் மோதி நின்ற பாவைக்கு, இதயம் ரேஸ் பிடித்து அதி வேகத்தில் ஓடியது.

"எதுக்கு ஸ்வாதி இவ்ளோ பதட்டம், நான் தானே அம்மு டோண்ட் பேனிக்.." அவள் தோளில் தாடை பதித்து அங்கேயே சிறு சிறு முத்தங்கள் வைத்து அவள் காதில் கிசுகிசுக்க, அவன் மீசை முடி குருகுருத்து கழுத்தை வளைத்து இதழ் கடித்து சிவந்தவள்,

"கூசுது முகத்தை எடுங்க.." ஸ்வாதி திணறலாக சொல்லும் போதே, அவன் தடித்த கரங்கள் அவள் மென்வைற்றில் படர்ந்து உள்ளங்கை சூட்டை இதமாக பரப்ப, உணர்ச்சியின் பிடியில் கொதித்துப் போனாள் மங்கை.

"ஸ்வாதிஇஇ.." அப்பட்டமான காதலும் தாபமும் போட்டிப் போட்டது அந்த குரலில்.

ஹ்ம்ம்.. என்றவளை தன்புறம் மெல்லத் திருப்பி, நிலவுக்கு இணையாக மின்னி பிரகாசித்த தன்னவளின் அழகை சொட்டு விடாமல் ரசித்தவன், அவள் இரு தோளிலும் கரம் பதித்து ஒற்றைக் கரத்தால் அவள் சூடி இருந்த மல்லிகையை பிய்த்து நுகர்ந்து, அதை அவள் முகத்திலே ஊதி விட, கண்கள் மூடி புன்னகையோடு தலை திருப்பிய ஸ்வாதி, சட்டென அவனை கட்டிக் கொள்ளவும் நங்கையின் முன்னழகின் கூர் முனைகள், ஆடவனின் நெஞ்சைக் குத்திக் கிழித்து, ஆசை தீயின் தீபம், திரி தூண்டி எரிந்தது.

தாமதிக்காமல் தன்னவளின் செம்மாதுளை இதழ் கவ்வி இல்லறத்தின் முதல் அடியை வைத்து, அவள் பயம் கொள்ளாதவாறு கற்பிக்கும் ஆசானாக அவன் மாற, ஸ்வாரிஸியமாக பள்ளியறை படங்களை கற்றுக் கொள்ளும் மாணவியாக கணவனுக்கு இசைய்ந்துக் கொடுத்தபடி, அவன் பிடரிப் பற்றி தன் அச்சத்தை தூர வீசி, அவன் சட்டைக்கு அவள் கரம் விடுதலைக் கொடுக்க, பாவையின் ரவிக்கைக்கு ஆடவன் விடுதலைக் கொடுக்க மூச்சிறைத்து போனாள் ஸ்வாதி.

காமனின் ஆட்சி அவ்விடமெங்கும் ஆட்சி செய்து இருவரின் தேகத்திலும் புகுந்து தன் வேலையை தொடங்க, செங்கனியின் மென்மையை உணர்ந்தவன் கூடவே ஒருவித தடிமனான நீள்க் கோடை உணர்ந்து அவளை பிரித்து நிறுத்தி அவ்விடத்தை காண, அறுவை சிகிச்சை செய்த தழும்பை கண்டு மனம் கனத்துப் போனது அவனுக்கு.

எத்தனை பெரிய வலியும் வேதனையும் எப்படி தாங்கினாளோ என்று நினைக்கும் போதே, கடலலை போல் பொங்கி எழுந்த உணர்ச்சி நிறைந்த ஆசையெல்லாம் ஒன்றும் இல்லாமல் அடங்கிப் போனது.

விரல் கொண்டு மென்மையாக அங்கு வருடி விட்டவனது முகம் வாடிப் போனதை உள்வாங்கிய ஸ்வாதி, தன்னவன் முகத்தை கையில் ஏந்தி அவன் கண்களோடு தன் விழிகளை கலக்க விட்டவள், "சந்தோஷமா இருக்க வேண்டிய நேரத்துல என்ன வருத்தம் உங்களுக்கு..

நம்ம முதலிரவுக்கு எவ்ளோ ஆசையா இருந்தீங்க, இப்ப இப்டி மூஞ்சிய வச்சுக்கிட்டா நல்லாவா இருக்கு.. இந்த நாள் நமக்காக நாள், பழைய கசப்புகள் எதுவும் இல்லாம முழுக்க முழுக்க நம்ம காதலும் சந்தோஷமும் மட்டும் தான் நிறைஞ்சி இருக்கனும்..

நீங்க என்கிட்ட காதலோடு எல்லை மீறப் போற சேட்டை பிடிச்ச லீலைகளுக்கு வெக்கத்தை விட்டு காத்திருக்கேன், நீங்க எப்டி இந்த தழும்பையே பாத்து ஃபீல் பண்ணிட்டு இருக்க போறீங்களா என்ன.." மனைவியின் கிசுகிசுப்பான அந்தரங்க பேச்சில், இப்போது வெட்கம் கொண்டது என்னவோ யாதவ் தான்.

துடிக்கும் கிளியை அமுக்கிப் பிடித்து மெத்தையில் சரிக்ககையில், தோளுரிக்கப் பட்ட கிளியாக கிடந்தவளின் கொள்ளை அழகுகளை அனுஅனுவாக பார்வையாளே கடித்து தின்ற,

"ச்சீ.. ரொம்ப மோசம் நீங்க.." கூச்சம் தாளாமல் தன்னை மறைக்கத் திணறி போர்வையில் கை வைக்கப் போக, அது பறந்து சென்று ஒரு மூலையில் விழுந்ததை கண்டு திகைத்துப் போனாள்.

"நீதானே டி மோசமா மாற சொன்ன, இப்ப வந்து மோசம்னா நான் என்ன பண்றது..." புருவம் ஏற்றி இறக்கியதில் அவள் ஆஆ.. என வாய் பிளக்க, பிளந்த இதழை ஆண்க்கிளி கொத்தி இழுத்துக் கொண்டது.

இதமாக கண்மூடி அவன் கழுத்தைக்கட்டி இழுத்து, தன்னவனையே தனக்கு போர்வையாக்கிக் கொண்டாள், வெக்கம் கொண்ட பைங்கிளி.

சூடான பெண்தேகமெங்கும் எச்சில் முத்தத்தால் குளிர்வித்துக் கொண்டே வந்தவன், கோதையின் மென்மையில் எச்சில் வடிய சாறு குடித்தபடி மிகவும் மென்மையாக தனது தேடலை அவள் பெண்மையில் தேடத் தொடங்க,

அவனுக்கடியில் உடல் குலுங்கிய நங்கையை ரசித்து, சின்னதாக முகம் சுணங்கினாலும் தன் வேகம் குறைத்து முத்தமிட்டு தன்னவளை ஆசுவாசப் படுத்தி, அந்தரங்க பேச்சில் அவளை சிவக்க வைத்து, தோகைக்கு மோகத்தை அள்ளி வழங்கிய கள்ளனோ, தனக்கு இணையாக அவளையும் வேலை செய்ய வைக்க, இருவருக்குமே பரம இன்பம் கிட்டி ஆனந்தத்தில் மிதந்து போயினர்.

உணர்ச்சியின் பிடியில் கணவனின் ஆட்டதில் ஹ்ம்ம்... என்ற சுக முனகலோடு அவள் இடை தூக்கி நெளிய, தேன் சிந்தும் தாமரை கிண்ணத்தில் தேன் குடிக்கும் வண்டாக, நா கொண்டு அவன் சுக போதையில் உறிஞ்சி இழுக்க, இன்ப சுகத்தில் துடிதுடித்து போனவள் அவன் பிடரிமையிர் பற்றி தன்னோடு இழுத்து, தன் இதழை அவன் இதழோடுப் பொறுத்திக் கொண்டாள் வெட்கம் கொண்ட மங்கை.

அகர்பத்தி மணமோடு காதலும் மோகமும் அவ்வறையெங்கும் நிரம்பி வழிய, பாவையின் செல்ல சிணுங்களின் சத்தமும், ஆணவனின் மூச்சிறைக்கும் முத்த சத்தமும் ஒன்றாக கலந்து, அவர்களின் இல்லற வாழ்க்கைக்கு இனிப்பு சுவை சேர்த்து இனிய காதல் கீதங்களாக இசைத்து, மகிழ்ச்சியை அள்ளி இறைத்துக் கொண்டிருந்தது.

°°°°°°°

"அப்புறம் அசோக் நம்ம புது பிராஞ்க்கு வேற நேம் ரெடி பண்ணி இருக்கேன் அதையே பிக்ஸ் பண்ணிடலாம்.. நாளைக்கு நான் மும்பை போறதுக்கு முன்னாடி ஆபிஸ்க்கு வந்துட்டு தான் போவேன்.. நீ அதுக்கான அரேஞ்மெண்ட்ஸ் எல்லாம் சரியா செஞ்சி வை.."

பால்கனியில் நின்று போனில் நண்பனோடு கதைத்துக் கொண்டிருந்த ஆத்வி எதர்ச்சியாக திரும்பவும், கண்ட காட்சியில் கண்கள் பளபளத்து திகைத்து நின்றவனாக,
"டேய் மச்சி.. ஐ கால் யூ லேட்டர் டா.." என அவசரத் தன்மையில் அழைப்பை துண்டித்து, தன் எதிரே நடந்து வரும் தென்றல் பெண்ணை, மேலிருந்து கீழாக ரசித்துப் பார்த்தான்.

தேர் போல் தன்னவளை சுற்றி வந்து, "ஏய்.. ஜில்லு என்ன டி இது புது கோலம்.. பாக்கவே ஸ்ஸ்ஸ்.. செம்மையா டெம்ட்டிங் பண்றியே பேபிஇ.."

கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் லோநெக் ஜாக்கெட்டில், கருப்பு நிற நெட்டட் சேரியை ஒற்றைப் பக்கமாக மடிப்பெடுக்காமல் சரிய விட்டு கட்டி, ஃபிரீ ஹேரில் உச்சி நெற்றியில் பளிச்சிடும் குங்குமமும், மஞ்சள் தாலி கழுத்தை அலங்கரித்து அசத்தளாக இருந்த மனைவியைக் கண்டு, போதை ஏறிப் போனது ஆடவனுக்கு.

"திவ்யா தான் இதை எனக்கு கொடுத்து அவளே கட்டியும் விட்டா, இந்த ட்ரெஸ்ல நான் எப்டி இருக்கேன் மாமா, நல்லா இருக்கேனா.." ஏற்கனவே கணவன் அவளிடம் மயங்கி விட்டதை அறியாத பூவை, அவன் வாய் வார்த்தைக்காக ஆவலாக காத்திருக்க, அவன் தான் சேலை மறைக்காத பாகங்களை எல்லாம் தன் உதடுகளால் திறந்து, மனைவியை மொத்தமாக ஆராய்ச்சி செய்யும் எண்ணத்தில் இருந்தானே!

"மாமா.. மாமா.. உங்கள தான் கேக்குறேன், நான் நல்லா இருக்கேனா.. உங்களுக்கு பிடிச்சிருக்கா.." ஆசையோடு அவன் முகத்துக்கு நேராக கையசைக்க, அசைத்த கையை அப்படியே பிடித்து தன் நெஞ்சோடு இழுத்துக் கொண்டவன்,

"மேலோட்டமா பாத்துட்டு எல்லாம் என்னால தீர்ப்பு சொல்ல முடியாது பேபிஇ.." என்றவனின் சூடான பேச்சில் கன்னம் சிவந்த பாவையின் சேலை காற்றில் பறக்க, அவனோடு கட்டியில் கரைந்து கலந்து, கரைந்து போனாள் மெல்லிய வஞ்சிக்கொடி.

°°°°°°

மறுநாள் பொழுது கோலாகலமாக விடியல் பூத்திருக்க, ஸ்வாதியை விடாமல் சுற்றி வந்த யாதவை கண்டு அமங்கிருப்போர் நமட்டு சிரிப்போடு கடந்து சென்றனர்.

அவர்கள் சிரிப்பதை கண்டு சங்கடமாக உணர்ந்தாலும், விடாமல் தன்னை சுற்றி வரும் கணவனை செல்ல முறைப்போடு தள்ளி வைத்த ஸ்வாதி, குடும்பத்திற்கும் கணவனுக்கும் பிடித்த மாதிரியான உணவுகளை சமைத்து ஸ்வாதி அசத்தி விட்டாள் என்றால், தோழி சமைத்ததை உண்டே அசத்தி விட்டாள் கவி.

அலுவலகம் சென்று மேற்பார்வையிட்டு சிறிது வேலைகளையும் முடித்து வந்த ஆத்வி, மும்பை செல்ல தயாராகிட, குடும்பத்தை விட்டு செல்ல மனமேயின்று கண்ணீரோடு கணவனின் கை பிடித்து சென்றவளை, மொத்த குடும்பமும் உச்சி முகர்ந்து அனுப்பு வைத்தது.

மகிழ்ச்சியோடு சென்ற கணவன் மனைவி இருவரும், நகமும் சதையுமாக வாழ்ந்து வந்த வேளையிலே, திடீரென்று அவர்கள் இல்வாழ்க்கையில் புயல் அடித்தால்??

அசதியாக அலுவலகம் விட்டு இரவு வீடு வந்து மனைவியை தேடியவனுக்கு, அவள் சம்மந்தப்பட்ட அனைத்தும் இருந்தது அவள் ஒருத்தியை தவிர. கூடவே அவளின் முத்தான கையெழுத்தால் நிரம்பி இருந்த கடிதம் ஒன்று மேஜையில் பல்லிளிக்க, மனதில் ஏதோ தவறாக அலாரம் அடித்தது.

கரம் நடுங்க அதனை எடுத்து பிரித்துப் படித்தவன் தலையில் இடி விழுந்த உணர்வோடு, நிற்க முடியாமல் கால்கள் தள்ளாட மடங்கி அமர்ந்தவனுக்கு தன்னை மீறியும் வெல்லமாக கண்ணீர் பெறுயது.

கண்ணீரோடு சேர்ந்து, இப்படி ஒரு முடிவெடுத்து தன்னை தனியாக விட்டு சென்றவளின் மீது கோவமும் வெறியும் ஒருசேர பெருகி, மீண்டும் அவள் கையில் கிடைத்தால் கன்னம் கன்னமாக அறைந்தே கொல்லும் வெறியோடு இருந்தவன், அவள் எழுதி இருந்த வார்த்தைகளை மீண்டும் மீண்டும் படித்துப் பார்த்து, மொத்தமாக உடைந்துப் போனான் ஆத்வி.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 66
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top