Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Administrator
Staff member
Messages
281
Reaction score
215
Points
63
அத்தியாயம் - 65

திருமண மண்டபமே கோளாகலமாக நிறைந்துக் காணப்பட்டு, இன்னும் சற்று நேரத்தில் எல்லாம் யாதவ் ஸ்வாதியின் திருமண வைபோகம் சிறப்பாக நடக்கவிருக்கையில், இங்கு ஒருவன் தன் இணையை தனியாக கடத்தி வந்து இடைவிடாமல் முத்தமிட்டே, இன்ப சித்ரவதை செய்துக் கொண்டிருந்தான்.

ம்.. ம்ம்.. ம்ம்ம்.. என தலையை இடவலமாக ஆட்டி தன்இதழை முரட்டுக்கள்ளனிடம் இருந்து கடினப்பட்டு பிரித்து எடுத்த பாவைக்கோ, மோகம் ததும்பிய கணவனின் பார்வையில் வெட்கத்தில் உடல் வெடவெடத்துப் போனது.

"என்ன மாமா இது இப்டி என்ன தனியா தூக்கிட்டு வந்து அட்டகாசம் பண்றீங்க, எல்லாரும் தேடுவாங்க நான் போகணும்.." இதழில் கசியும் ரத்த துளிகளை உள்ளங்கையால் ஒத்தி எடுத்து சிணுங்கியவளின் பெண்ணழகை, பார்வையாலே கபலைக்கடம் செய்தான் ஆத்வி.

இரவில் இருந்து தோழியின் அறையிலேயே அவளுக்கு துணையாக இருந்த கவிக்கு நன்றாக தெரியுமே, கணவனோடு தங்கிக் கொண்டால் மறுநாள் காலை திருமணம் முடிந்த பின்பு தான் வெளியே வரவேண்டும் என்று. அதற்காகவே அவன் கண்ணில் படாமல் ஆத்விக்கு போக்குக் காட்டிய கவி, ஸ்வாதிக்கும் அவளுக்குமாக நொறுக்கு தீனி எடுக்க வந்து, கடைசியில் கணவனுக்கே நொறுக்கு தீனி ஆகிப் போன கதை என்னவோ???

காணக் கிடைக்காத அற்புதம் அவள் சேலை கட்டி இருப்பது, அதைவிட சேலையை சரி செய்ய அவள் ஒவ்வொரு முறையும் திணறும் போதும் பார்க்கவே போதை ஏறிப் போகும் ஆடவனுக்கு.

பலமுறைக்கு மேல் பார்த்து பழக்கப்பட்டு அவன் ரசித்து ருசித்து, நிதானமாக பிச்சித் தின்ற பெண்தேகம் தான், இருந்தும் மோகம் விட்டு தீராமல் லேசாக தெரியும் இடையின் வளைவின் நெளிவும், புசுபுசு முயல்குட்டியின் காதாக வெளியே எட்டிப் பார்க்கும் திமிரழகும் கிறங்க வைத்து, பெண்ணுடலை கழுகு பார்வையால் கொள்ளையிட்டே, ஆடைமூடிய தேகமெங்கும் சிலிர்த்து சிவக்க வைக்கிறான் அவளை.

கத்தரிப்பூ வண்ணப் பட்டுபுடவையில் மல்லிகை சூடிய கூந்தலின் பின்னல், அவள் முன்னழகை தொட்டு சொர்க்கத்தில் மிதக்க, பளிச்சிடும் மெல்லிடையாளின் இனிப்பு நிறைந்த கரும்பு பாகை சக்கையாக மென்று தின்ன ஆசைக் கூடிப் போனது.

"மாமா.. நான் போகணும்.." வெட்கத்தில் சிவந்த முகத்தை மறைக்கத் திணறி சொல்ல,

"நேத்துல இருந்து என் கண்ணுல படாமா கண்ணாம்பூச்சி ஆடி என்ன தவிக்க விட்டல்ல, அதனால உன்ன இனி விடுறதா இல்ல டி.." என்றவன் அவள் வெற்றிடையை வருடி பெண்மேனியை ஊர்வலம் வந்து, செழுத்த அழகில் அழுத்தம் கூட்ட, கூச்சத்தில் நெளிந்த கவி,

"மாமா.. ப்ளீஸ்.. விடுங்க.. சேலை கசங்கிடும்.." என்றவளின் கைவிரல்களோ, சட்டை பொத்தான் திறந்திருந்த அவன் நெஞ்சில் இருந்த ரோமத்தை சுருட்டி இழுத்தது.

"சேலை கசங்காம எப்டி ரொமான்ஸ் பண்றது பேபிஇ.. இந்த புடவைல நீ அவ்ளோ அழகா இருக்கே டி.." என்றதும் கணவனின் ரசனைமிக்க பாராட்டை விரும்பி ஏற்ற மங்கையோ,
"சேலை இல்லனா நீ இன்னும்..ம்.ம்ம்.." மீண்டும் வாய் திறந்து சொல்ல வரும் பொருளை உணர்ந்து, அவசரமாக அவன் வாய் மூடியவள்,

"என்ன பேச்சி பேசுறீங்க மாமா.. யாராவது கேட்டா என் மானம் தான் காத்துல போகும். போங்க ஒழுங்கா போய் சமத்து பையனா வேலைய பாருங்க.. கல்யாணம் முடிஞ்சதும் நம்ம விஷயத்துக்கு வரலாம்.." என்றாள் அதட்டல் தொனியில்.

"நமக்கு தான் கல்யாணம் முடிஞ்சிடுச்சே டி, அப்புறம் என்ன.." மோகத்தில் உரைத்து, லேசாக மூடி இருந்த அவள் உள்ளங்கையில் முத்தம் வைக்க, மீசை கூசி கரத்தை எடுத்தவள்,

"ஆஹா.. ரொம்பத்தான் ஐயாக்கு ஆசை, பேச்சையும் முழியையும் பாரு பிச்சி திங்குற மாறி.. முகூர்த்ததுக்கு நேரம் ஆச்சி கைய கால அடக்கி வச்சிட்டு வாங்க, இல்ல இன்னைக்கு நைட்டுக்கு தன்யாவ கூட கூப்ட்டு வந்திடுவேன்.." விரல் நீட்டி அவள் மிரட்டவும், நீட்டிய விரலை வலிக்காமல் மடக்கிப் பிடித்தவன்,

"வர வர பயம் விட்டு போச்சி டி.. இன்னைக்கு நைட் நான் யாருனு உனக்கு காட்றேன், அப்புறம் இந்த கோண வாய என் எதிர்ல திறக்கவே மாட்ட பாரு.." என்றவன் சேவலாக மாறி விடைக்கோழியின் இதழை மட்டுமில்லாமல், கொழுத்த அழகையும் கொத்தி தின்று விட்டபின்னே அவளை விட்டான்.

கவியின் சேலைக்கு மேச்சிங்காக கத்தரிப்பூ நிற சட்டையும் அதே நிறத்தில் கரை வைத்த வெள்ளை வேஷ்டியுமாக, கம்பீரமாக வளம் வரும் கணவனை விழுங்கும் பார்வை பார்த்தபடி, மனமேடையில் ஐயர் கேட்கும் பொருட்களை எடுத்து கொடுத்து வேலையை தொடர்ந்த கவி, மனமேடையின் கீழ் தன்யாவை மடியில் வைத்துக் கொஞ்சி சிரித்துக் கொண்டு இருக்கும் விக்ரமை மகிழ்ச்சியாக பார்த்து சென்றாள்.

யாதவ் ஸ்வாதியின் திருமணத்திற்கு இன்னும் இரண்டு நாட்களுக்கும் குறைவான நேரமே இருக்கும் நிலையில், திருமண வேலைகள் அனைவரையும் கட்டிப் போட்டாலும், மற்றொரு பக்கம் உயிருடன் இருந்தும் பெற்ற மகனின் திருமணத்தை கூட பார்க்க முடியாமல் படுத்துக் கிடக்கும் விக்ரமின் நிலை எண்ணி, ஒவ்வொருவரும் வேதனைக் கொண்டனர்.

வெளியே தன்னை மகிழ்ச்சியாக காட்டிக் கொண்டாலும், தந்தையின் கை பிடித்து ஏக்கமாக பார்த்துக் கொண்டிருக்கும் யாதவின் நிலை தான் மோசமாக இருக்கும்.

தலைவன் மனசுமை தாங்காமல் சரியும் நேரம், சரியாக ஓடி வந்து தாங்கி பிடித்து மடி சாய்த்துக் கொள்பவள் தான் சரிபாதி. ஸ்வாதியும் தன்னவன் கலக்கம் அறிந்து அவனுக்கு பக்கபலமாக இருந்தாள்.

அனைவரும் ஒன்றாக குலதெய்வத்தை வழிபட்டு விட்டு, மீண்டும் இரவு வீடு திரும்பிய நேரம், வீட்டில் உள்ள மொத்த பணியாட்களும் ஒன்று கூடி விக்ரமின் அறையை சூழ்ந்து இருப்பதை கண்டு, ஒன்றும் புரியாமல் உள்ளே வந்து பார்த்த மொத்த குடும்பமும் இன்ப அதிர்ச்சியில் மூழ்கி இருந்தது.

"யாரு நீங்களாம், என் வீட்டு ஆளுங்க எல்லாரு எங்கே.. எ.என் பையன்.. என் நரு.. சுபி.. நிலன்.. சரண்.. எல்லாரும் எங்கே.. அவங்களுக்கு எதுவும் ஆகலையே.." பதட்டம் குறையாமல் ஒவ்வொரு வேலையாளின் கை பிடித்து பிடித்து பரிதாபத்தோடு கேட்டபடி இருந்த விக்ரமை கண்ட மித்ரா,

"மாமாஆ.. என்ற கத்தலும் கண்ணீரோடும் அவனிடம் வந்தவளை,

"மி.த்.ரா.." என வார்த்தை கோர்த்து அழைத்தவனை மீண்டும் 'மாமா.. என கட்டிக் கொண்டவள்,

"இந்த ஒரு வார்த்தைய சொல்ல உனக்கு இத்தனை வருஷம் தேவை பட்டுச்சா.. எங்க எல்லாரையும் தவிக்க விட்டியே மாமா.." குலுங்கி அழுதவளை அரவணைத்த விக்ரம்,

"அழாதே மித்துமா.." என்றவன் கண்கள் சுற்றிலும் ஆவலாக சுழட்டுப் பார்க்க, ஆதி, ஆத்வி, யாதவ், அஜய், ஆரு, கவி, ஸ்வாதி தன்யா மற்றும் அவர்களோடு திவ்யா அவளின் குடும்பமும் அதிர்ச்சியில் மூழ்கி பின் சிரித்தபடி இருந்தது.

ஆனால் ஆதியோ எப்போதும் போல், விக்ரமின் கைவலைவில் இருக்கும் மித்ராவையும் அவனையும் முறைப்பதில் முனைப்பாக இருந்தானே!

இன்ப அதிர்ச்சியை கலைக்கும் விதமாக, தந்தையின் கையில் இருந்து இறங்கி ஓடி வந்த அதன்யா. "ஹேய்.. தாத்தாஆ.." என ஆசையோடு அழைத்தபடி அவன் கால்களை கட்டிக் கொண்ட பிஞ்சி மொட்டை கையில் அள்ளிக் கொண்ட விக்ரம்க்கு கண்கள் கலங்கியது.

அவளை ஆசையாக முத்தமிட்டு தோளில் சாய்த்துக்கொண்டவன், பாம் வெடித்த சம்பவத்திற்கு பிறகு நிறைய மாற்றங்கள் வந்து விட்டது என நன்றாக உணர்ந்துக் கொண்டவன்,
"என் செல்லக்குட்டி, பாப்பா பேர் என்னடா.." அவள் உச்சி முகர,

"அதன்யா தாத்தா.." என முத்துப்பற்கள் தெரிய அழகாக சிரித்து சொன்ன பேத்தியின் அழகில் உள்ளம் மகிழ்ந்து, மனைவியும் மகனையும் பார்வையால் அலச, மகன் மட்டும் தானே கலங்கிய பார்வையோடு, தந்தையை எப்போது கட்டிக் கொள்ளலாம் என்ற ஏக்கத்தில் உறைந்து போய் நின்றிருந்தான்.

"அப்பாஆஆ.." என்ற உணர்ச்சி பொங்கும் குரலில் வார்த்தை நடுங்க அழைத்தவன் கால்கள் தள்ளாட தந்தையின் அருகில் வர,

"ய். யாதவ்.." என கை நீட்டி தன்னையே உரித்து வைத்து கம்பீர ஆண்மகனாக வளர்ந்து வந்த தன்மகனை, உச்சிமுதல் பாதம்வரை பார்த்து பூரித்துப் போய் ஆறத்தழுவிக் கொண்டவன்,

"ரொம்ப தவிக்க விட்டேன் இல்ல டா.. அப்பாவ மன்னிச்சுடு கண்ணா.." நெஞ்சில் சுரக்கும் தந்தையமுதின் அன்பில் உருகி,

"ரொம்பவே தவிக்க விட்டீங்க ப்பா.. ஒவ்வொரு நாளும் உங்கள இந்த படுக்கையில உணர்ச்சி இல்லாம படுத்து கிடக்கிறத பாத்து, கலங்காத நாளில்ல.." தோளில் மகனின் கண்ணீர் பட்டதும் துடித்து விட்டான் விக்ரம்.

"அழாதே டா.. அதான் நான் கண்ணு முழிச்சிட்டேனே வருத்தப்படாத யாதவ்.." என்று அவன் முதுகை வருடி, ஒட்டுமொத்த அன்பையும் திரட்டி அவன் நெற்றியில் முத்தமிட, கண்மூடி பெற்றவன் திரும்ப தந்தைக்கும் முத்தம் வழங்கி, தந்தை மகன் பாசத்தை நிலைநாட்டி நின்றனர்.

பழைய கம்பீரம் குறையாமல், மனைவி மீது அளவுகடந்த முரட்டுப் பாசத்தை கண்களில் பிரதிபலிக்கும் விதமாக நின்றிருந்த ஆதியை நிமிர்ந்து பார்த்த விக்ரம், அவன் காதலை எண்ணி அகம் மகிழ்ந்தவனாக, நமட்டு சிரிப்போடு கவியை பார்க்க, இருவருக்குமே இருக்கும் உணர்வுபூர்வமான அன்பு இருவரையும் தழுவியது அங்கே.

இருவரும் ஒருசேர, நருஊ..
மாமாஆ.. என ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு தங்களின் அன்பை வெளிப்படுத்தி, ஆத்வி ஆரு திவ்யா என்று தொடங்கி அஜய் ஸ்வாதி என ஒவ்வொருவரையும் நலம் விசாரித்து, ஒவ்வொருவரின் திருமண வாழ்க்கையை பற்றியும் அறிந்து கொண்டான்.

திவ்யா கல்லூரி முடித்த சிறிது நாட்களில், கன்னடாவில் இருந்து வந்த தொழிலதிபரின் மகனுக்கு அவளை பிடித்து விட்டதாக ஆதியிடம் சொல்ல, அவர்களை பற்றி நன்கு விசாரித்த ஆதிக்கும் அவர்கள் குடும்பத்தை பிடித்து விடவே, திவ்யாவின் கணவர் அவளை உயிருக்கு உயிராக விரும்புவதை அறிந்து, தங்களின் மகளை அவன் நன்றாக பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையில், திவ்யாவை கோலாகலமாக திருமணம் செய்து வைத்தான்.

இப்போது கணவன் குடும்பம் என்று பெரும் மகிழ்ச்சியோடு நிறைமாத கர்பிணியாக அண்ணனின் திருமணம் மற்றும் குழந்தை பேருக்காக தாய் வீடு வந்திருக்கிறாள். தம்பியின் மகளை அணைத்து முத்தமிட்ட விக்ரம்,

ஆருவின் இரண்டாவது கருதரிப்பில் உள்ளம் பூரித்து, ஆத்வி கவி ஜோடியை வாழ்த்தி, யாதவ் ஸ்வாதியின் திருமணத்தை பற்றி தெரிந்து மகிழ்ச்சியாகி அவர்களையும் வாழ்த்தி விட்டு கடைசியாக ஆதியிடம் வந்தான்.

"உன்னோட இந்த முரட்டுக்காதல் இத்தனை வயசாகியும் ப்ரம்மிக்க வைக்கிது ஆதி. ஆனா உன்னோட இந்த பயம்.." என்றதும்,

"என்ன.." என்று ஆதி பற்களை கடிப்பதை கண்டு மேலும் இதழ் வளைத்து,

"இதோ.. இதோ.. இந்த பொஸஸிவ் கலந்த பயம்தேன், எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு, கவலை படாதே உன் மித்துபேபிய யாரும் கொதித்திட்டு போவமாட்டாவ.." அவனை கட்டிக் கொண்டு காதில் கிசுகிசுக்க, ஆதிக்கும் மெல்லிய சிரிப்புடன் வெட்கம் தோன்றி மறைந்தது.

"அங்கே என்ன ரெண்டு பேருக்கு கிசுகிசுப்பு" என்றபடி மித்ரா அருகில் வரவும் பிரிந்து நின்ற இருவரும்,

"அதை உன் புருஷன்கிட்டே கேளு" என்று விக்கரமும்,

"அதை உன் மாமன்கிட்டே கேளு" என்று ஆதியும் ஒருவரை ஒருவர் முகத்தை திருப்பிக் கொண்டு சிறுவர் சண்டை போட, அங்கிருந்த அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து குழப்பமாக புன்னகைத்துக் கொண்டனர்.

குடும்பத்தோடு இணைந்து கடந்த காலங்களை பற்றி அனைத்தும் விக்ரம்க்கு விளக்கி சொல்ல, மௌனமாக கேட்டு உள்ளுக்குள் மருகிய விக்ரம், கவி மீண்டும் கிடைத்த வரை சொல்லி முடிக்க,

"ஏன் ஆதி.. பாம் வெடிச்சதுல என் ஒத்த ஆள மட்டுந்தேன் கண்டு புடிக்க முடிஞ்சிதா.. என்னையும் நருவையும் தவிர வேற யாருமே பிழைக்கலயா.." வேதனையாக கேட்ட விக்ரம்க்கு, சுபியின் நினைவு தான் அதிகம் இருந்தது. நருவை ஒரு மூலையில் தூக்கி வீசிய கையோடு, மனைவியின் கை பிடித்து வேனை விட்டு குதிக்கையில், பாம் வெடித்து இருவரும் ஆளுக்கு ஒரு மூலையில் தூக்கி வீசி விழுந்ததை, உயிர் போகும் அந்நிலையிலும் நன்றாக கவனித்து இருந்தானே!

"நீயே எப்டி பிழைச்ச என்னனு ஒன்னும் புரியாம இதுவரைக்கு மர்மமா இருந்துது, அந்த இடத்துல நீ மட்டும் தான் எங்களுக்கு கிடைச்ச.. நருவும் பள்ளத்துல விழுந்ததால அவளை அங்கிருந்த ஆட்கள் தான் ஹாஸ்பிடல்ல சேத்து காப்பாத்தி இருக்காங்க, வேற யாரும் உன்கூட கிடைக்கல.." என்ற ஆதி, விக்ரமின் யோசனை முகத்தை கூர்ந்து கவனித்தான்.

"இல்ல ஆதி.. நிச்சயமா இல்ல, நானும் நருவும் ஏதோ ஒருவகைல உயிரோட இருக்கோம்னா அப்போ என் சுபியும் எங்கேயாவது உயிரோட தான் இருப்பா.. அந்த ராஸ்கல்ஸ் பாம் வீச போறதை பாத்ததும் நருவ தூக்கி வீசிட்டு, என் சுபியோட கைய புடிச்சிட்டு நாங்க ரெண்டு பேருமே ஒன்னா தான் வேன உட்டு குதிச்சோம்..

அதே நேரத்துல பாம் வெடிக்கவும் ரெண்டு பேரும் தனிதனியா வீசி எறியப்பட்டு இருப்போம், ஆனா அவ இப்போ உயிரோட இருக்காளானு தெரியலயே.. நான் எங்கே போய் அவளை தேடுவேன்.." கலங்கிய குரல் தழைதழைக்க விக்ரம் சொல்லியதை கேட்டு அனைவரும் திகைப்போடு இருக்க,

"என்ன மாமா சொல்ற, சுபி அப்போ உயிரோட இருக்காளா.. கடவுளே என் தங்கச்சி இப்போ எங்கே எப்டி இருக்கானு ஒன்னும் புரியலயே.. ஒரு குடும்பத்தையே ஆளுக்கு ஒரு மூலையா பிரிச்சு விட்டு வேதனை படுத்துறதுல, அப்டி என்ன சந்தோஷம் உனக்கு கிடைச்சுது.." மித்ரா வாய் பொத்தி அழ, அவளை தேற்றி கொண்டு வர பல கரங்கள் நீண்டது.

தன் தாயும் கவியை போல் எங்காவது ஒரு மூலையில், நன்றாக வாழ்ந்து மீண்டும் தங்களிடமே வந்து சேர்ந்து விட வேண்டும் என்று மனதார நினைத்துக் கொண்டான் யாதவ். அவனை போல் தான் மற்ற அனைவரும் நினைத்து, விக்ரம் கண் விழித்த மகிழ்ச்சியோடு சேர்ந்து, யாதவின் திருமண வேலையும் மகிழ்ச்சியாக செய்துக் கொண்டு இருக்கின்றனர்.

மகனின் திருமணத்தையாவது பார்க்கும் பாக்கியத்தை கொடுத்த கடவுளுக்கு நன்றி கூறிய விக்ரம், தன்யா கூறும் பல கதைகளை சுவாரிசியமாக கேட்டுக் கொண்டு இருக்க,

"மாப்பிள்ளையாண்டாள அழைச்சிட்டு வாங்கோ.." என்றதும் பட்டு வேஷ்டி சட்டையில் கல்யாணக் கலையோடு கம்பீரமாக நடந்து வரும் மகனை, ஆசையாக கண்ணில் நிரப்பிக் கொண்டான் விக்ரம். ஆதியும் மித்ராவும் தான்.

சடங்குகள் மும்புரமாக நடந்துக் கொண்டிருக்க, மணப்பெண் அறையை தொடர்ந்து நோட்டம் விடுபவனை முறைத்த ஆத்வி, "டேய்.. பெருச்சாளி மூடிட்டு ஒழுங்கா மந்திரத்தை சொல்லு, இல்ல வாலு இருக்காது நசுக்கிடுவேன்..." வெறியாக எகிறவும், ஒன்றும் புரியாமல் மலங்க மலங்க விழித்தான் யாதவ்.

தன் மீது அப்படி என்ன அண்ணனுக்கு கோவம், சிறு வயதில் இருந்தே முறைப்பதும் அடிப்பதும் என்று இருப்பவன், யாதவை பிடிக்கவில்லை பிடிக்கவில்லை என்று அவன் மேல் மறைமுகமாக காட்டும் பாசத்தை நன்கே உணர்ந்து வைத்திருந்தாலும், அவன் கோவம் என்னவென அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தவன்,
"அண்ணே ஒரு நிமிஷம்.." என குனியும்படி சைகை செய்ய,
"என்னடா.." கடுகு வெடிப்பதை போல் அவனிடம் குனிந்தான் ஆத்வி.

"ஏண்ணே நானும் கேக்கணும் கேக்கணும்னு பாக்குறேன், ஆனா உன்னோட இந்த ரெட்சில்லி சாஸ் மூஞ்சிய பாத்ததும் கேக்க பயந்து கேக்காமயே போயிட்றேன்.." சன்னமாக பூடகம் பேசியவனை முறைக்க,

"மச்.. முறைக்காதண்ணே அப்புறம் கேக்க வந்தத மறந்துடுவேன்.." பாவமாக சொல்லவும் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டவன்,

"என்ன கேக்கணுமோ சீக்கிரம் கேளு.." என்னவோ தனக்கே திருமணம் போல் அப்படி பரபரத்தான் ஆத்வி.

"சின்ன வயசுல இருந்தே நீ எதுக்கு என்மேல கோவமா இருக்க? அதுவும் கடந்த சில சமீப காலமா ரொம்ப கோவம்.. என்ன பாக்க கூடாதுனே யூஎஸ் போயிருக்க, ப்ளீஸ் இப்பயாவது சொல்லுண்ணே..

இத்தனை வருஷமா என் முகத்தை கூட பாக்காம இருந்து கஷ்டப்படுத்தின மாறி, இப்பவும் பதில் சொல்லாம என்ன கஷ்டப் படுத்தாத.." தனது நீண்ட நாள் சந்தேகத்தை கேட்டவன், அவன் பதிலுக்காக ஆவலாக ஆத்வியின் முகத்தை பார்த்தான் யாதவ்.

அந்த கேள்வியில் அதுவரை இயல்பாக இருந்த ஆத்வியின் முகம், பலவிதமான உணர்வுகளை கொண்டு தனக்குள்ளே மறைத்து வெளியே இறுகியவன், "தேவை இல்லாம பேசி கல்யாண மூடை ஸ்பாயில் பண்ணாத யாதவ், முதல்ல கல்யாணம் முடியட்டும் அப்புறம் எதுவா இருந்தாலும் பேசிக்கலாம்.." அங்கிருந்து விலகி சென்றவனை புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தான் யாதவ்.

சற்று நேரத்தில் எல்லாம் மணப்பெண்ணை ஐயர் அழைக்க, தங்கநிறத்தில் பட்டு சேலை உடுத்தி தங்கத்தாலே ஆபரணங்கள் அணிந்து, புதுபெண்ணுக்கே உரிய வெட்கத்தோடு பொன்பாதம் தரைக்கும் வலிக்காமல் மெல்ல நடந்து வந்து தன்னருகில் அமர்ந்தவளை, பார்வையாலே விழுங்கி விட்டான் யாதவ்.

வெட்கத்தில் முகம் சிவந்து போன மங்கையை ரசித்து, அடிக்கடி இடித்து அவளை நெளிய வைத்தபடியே இருவருமாக ஐயர் கூறும் மந்திரம் சொல்ல, தாலியை அனைவரிடமும் ஆசி வாங்கி வந்த கவி ஐயரிடம் கொடுத்த சற்று நேரத்தில் எல்லாம், நாதஸ்வர கெட்டி மேளம் வாசிக்க, சொந்த பந்தங்களின் ஆசிர்வாதத்தோடு ஸ்வாதியின் கழுத்தில் மங்கலனான் சூடி, மனம் கொண்டவளையே தன்னவளாக்கிக் கொண்டான்.

ஆதி மித்ரா, விக்ரம் மற்றும் பெரியவர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க, மனமார்ந்த வாழ்த்துக்களோடு தம்பதிகளை அணைத்து உச்சி முத்தமிட்டனர். தோழியை கட்டி அணைத்து தனது அளவுகடந்த மகிழ்ச்சியை வெளி படுத்தினாள் கவி.

விளையாட்டாக எப்போதும் பேசிக் கொள்ளும் சில வார்த்தைகளுக்கு நிச்சயம் மகத்துவமாக சக்தி உண்டு. கவி எப்போதும் சொல்வாள், "ஸ்வாதி நீயும் ஒரே வீட்டில் தான் வாழ போகிறோம்" என்று.
அதற்கு ஸ்வாதியும் "அதுக்கு நீயும் நானும் அண்ணன் தம்பிய தான் கட்டிக்கிட்டு ஒரே வீட்ல வாழனும்" என அவளும் விளையாட்டாக சொல்லி செல்வாள். அப்போது அவர்கள் உணர்ந்திருக்கவில்லையே, அது தான் உண்மையாக எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் விடயம் என்று.

சம்பரதாயங்கள் நிறைவாக முடிந்ததும் அனைவரும் மகிழ்ச்சியாக வீடு திரும்பினர்.

ஆரத்தி, பால் பழம் சம்பரதாயங்கள் முடிந்து இருவரையும் ஓய்வு எடுக்க அனுப்பி வைக்க, தன் இணையை சில்மிஷத்தால் கூச வைத்த யாதவ் காண சென்றதோ ஆத்வியை தான்.

மௌனமாக கை கட்டி நின்றிருந்தவனை தானும் அமைதியாக வெறித்தவன், "அண்ணே இப்டி அமைதியா இருந்தா என்ன அர்த்தம், என்மேல என்ன கோவம்னு சொல்லிடேன்.. உன்கிட்ட ஆசையா பேச வரும் போதெல்லாம் நீ முகத்தை திருப்பிட்டு போறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு..

என் கல்யாணத்துக்கு நீ ஆயிரம் பரிசு கொடுத்த, ஆனா அது எதுவும் உன்னோட அன்பான வார்த்தைக்கு இணையாகுமா எனக்கு.." என்றவன் பாய்ந்து ஆத்வியை அணைத்துக் கொள்ளவும், உள்ளுக்குள் ஊற்றெடுக்கும் மகிழ்ச்சியோடு தானும் அரவணைத்துக் கொண்ட ஆத்வி,

"சின்ன வயசுல இருந்தே உன்ன பிடிக்காது தான், இப்பவும் அப்டி தான் டா, அதுக்காக உன்னைய கண்டுக்காம அப்டியே நான் விட்டதில்ல.. வெளுத்தெல்லாம் பாலுனு நம்பிற குணம் உனக்கு, அப்டிதான் உன்கூட பிரண்டுனு முகமூடி போட்டு சுத்தின அந்த தர்ஷினிய முழுசா நம்பின.." என்றதும் புருவம் இடுங்க அண்ணனை பார்த்த யாதவ்,

"ஆமாண்ணே எப்பவும் என்பின்னாடியே வால் மாறி சுத்தினவ, திடீர்னு ஆள் அட்ரஸே இல்லாம காணாம போய்ட்டா, நானும் பிசினஸ கைல எடுத்ததால அவளை பத்தி மறந்தே போய்ட்டேன்.. இப்ப நீ சொன்னதும் தான் அவ நியாபகமே எனக்கு வருது.. ஆமா அவ எங்கே இருக்கா எப்டி இருக்கா, அவளை பத்தி உனக்கு ஏதாவது தெரியுமா.." கூடவே இருந்த தோழி காணாமல் போன வருத்தத்தில் கேட்டான்.

நிர்மலாமான முகத்தோடு அவனை கண்ட ஆத்வி, "செத்துப் போனவ எங்கே இருப்பா மேலோகத்துல ஜாலியா இருப்பா.." கைகளை முறுக்கிக்கொண்டு நக்கலாக ஆத்வி சொன்ன விதம், ஏதோ ஒன்று தனக்கு தெரியாமல் நடத்திருப்பதை உணர்ந்துக் கொண்டவன், அடுத்தடுத்து அவன் சொன்னதை கேட்டு உணர்ச்சி துடைத்த முகத்தோடு மனதில் பரவிய வலியோடு நின்றான்.

யாதவ் கலகலப்பான பையன் என்பதால் பள்ளி காலத்தில் இருந்தே நிறைய நண்பர்கள் அவனுக்கு. அதில் ஒருத்தி தான் தர்ஷினி. நல்ல தோழி, அப்படி தான் யாதவ் நினைத்து பழகினான். தனக்கு பிறந்தநாள் என்று அனைத்து நண்பர்களையும் அழைத்த தர்ஷினி அவனையும் வற்புறுத்தி அழைக்கவே, போகக் கூடாது என்று ஸ்டிக்ட்டாக சொன்ன அன்னையிடம், கெஞ்சிக் கூத்தாடி சென்றதை கண்டும் காணாமல் இருந்தான் ஆத்வி.

இரவு பார்ட்டி, ஆட்டம் பாட்டம் என்று பெரிதாக நடந்துக் கொண்டிருக்க, மன்மதனாக வளம் வந்த யாதவை தர்ஷினியும் அவளின் தோழிகளும் வன்மப் பார்வை பார்த்து, அவன் குடிக்கும் ஜூஸில் மயக்க மருந்தை கலந்து தனி அறைக்கு கடத்தி விட்டனர்.

மயங்கி விழுந்து கிடந்த யாதவை கண்டு, தர்ஷினிக்கு அப்படி என்ன கொடூர வன்மமோ!

தன் கையில் இருந்த பெரிய சிரிஞ்சியில் சிவப்பு நிறத்தில் இருந்த ரத்த மாதுரியை ஏற்றி, அதனை அவன் உடலில் அதை செலுத்தப் போன நேரம், பட்டென காலால் எட்டி விட்ட உதையில், ரத்தம் நிரப்பிய சிரிஞ்சி ஒரு மூலையில் விழுந்ததில், கையை உதறிக் கொண்டு அதிர்ச்சியான தர்ஷினி, புதிதாக வந்திருந்த ஆத்வியை கண்டு பயந்து போனாள்.

"ஹேய்.. யார் நீ இங்கே எதுக்கு வந்த, உன்ன யாரு உள்ள விட்டது.. அனுமதி இல்லாம உள்ள வந்ததும் இல்லாம என்ன காலு நீளுது.." வெறிநாயாக கத்தியவளை சீற்றம் குறையாமல் கண்ட ஆத்வி,

"ஏய்.. எதுக்காக இவன இங்கே படுக்க வச்சிருக்க, இப்ப என்ன ஊசிய என் தம்பிக்கு செலுத்த போன, அதுவும் அவன் மயங்கிக் கிடக்கும் போது.. சொல்லு, என்ன பண்ண பாத்த என் தம்பிய.." கை சட்டையை மடித்து விட்டபடி கர்ஜனை குரலில் மிரள வைக்கவும், அவன் என் தம்பி என்றதிலேயே தர்ஷினி உடல் உதறிப் போனாள். 'யாதவின் அண்ணனா இவன்' என்ற பயத்தில்.

அவளின் தோழிகள் வேறு அவளுக்கு மேல் பயந்து நடுங்கி, அவர்களே தவறு நடக்கவிருப்பதற்காக துருப்பை காட்டிக் கொடுத்து விடவும், மொத்தமாக அவர்களை நோட்டம் விட்ட ஆத்வி,

"ஆல்ரைட் யாரும் உண்மைய சொல்ல மாட்டிங்கல்ல, இப்பவே போலீஸ்க்கு கால் பண்றேன்.. அவங்க வந்து விசாரிக்கிற முறைல விசாரிச்சா தானா உண்மைய கக்கிடுவீங்க.." என்றவன் போனை எடுக்கவும்,

"ஐயோ.. சார் ப்ளீஸ்.. அப்டி மட்டும் பண்ணிடாதீங்க, தர்ஷினியோட தங்கச்சி யாதவை உயிருக்கு உயிரா விரும்பி, யாதவ்கிட்டயே வந்து சொன்னா.. ஆனா யாதவ் 'அப்டி ஒரு எண்ணம் எனக்கு உன்மேல இல்லைனு' அவ முகத்துக்கு நேரா சொல்லிட்டதனால, அவளுக்கு ரொம்பவே ஹர்ட் ஆகிடுச்சி..

தொடர்ந்து யாதவ் பின்னாடி தன் காதலை சொல்லி அவ அலைய, யாதவ் அவளை கண்டுக்கவே இல்ல.. அந்த விஷயத்த தர்ஷினிகிட்டயும் சொல்லி இருக்கா, முதல்ல யாதவ் குணம் தெரிஞ்சி அவன மறந்திடுன்னு அட்வைஸ் பண்ணா.. ஆனா அவ தங்கச்சி அதை எல்லாம் கேக்கும் மனநிலைய எப்போதோ தாண்டிட்டா..

பைத்தியமா அவனை காதலிச்சவ, ஒரு கட்டத்துல அவன் நியாபகம் அதிகம் வந்து அவனை மறக்க முடியாம, போதைக்கு அடிமையானவளை யார் யாரோ மிஸ்யூஸ் பண்ணி, அவ வாழ்க்கையே நாசம் செஞ்சிட்டாங்க..

அதனால அவளுக்கு HIV பாசிட்டிவ் ஆகி கடைசில, 'என் காதலை ஏத்துக்காம என்ன இந்த நிலைமைக்கு கொண்டு வந்த யாதவும், என்னை மாதிரியே நோய் வாய்பட்டு அசிங்கப்பட்டு, கொடுமையா செத்துப் போகனும்னு' லெட்டர் எழுதி வச்சிட்டு தற்கொலை பண்ணிக்கிட்டா..

தர்ஷினிக்கு சொந்தம் பந்தம் எல்லாமே அவளோட தங்கச்சி மட்டும் தான்.. அவ இறந்து போனத தர்ஷியால தாங்கிக்க முடியாம, அவ கொடுமையா இறந்து போனதுக்கு காரணமான யாதவும், அவ தங்கச்சி எந்த நோயால அவதிபட்டு செத்து போனாளோ, அதே மாதிரி சாகனும்னு, HIV blood சாம்பில வாங்கிட்டு வந்து யாதவ்க்கு போட முயற்சி பண்ணும் போது தான் நீங்க வந்துடீங்க..

மத்தபடி இதுக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்ல சார், யாதவ்க்கு மயக்க மருந்து கொடுத்து தூக்கிட்டு வந்து மட்டும் தான் நாங்க போட்டோம்.." படபடப்பில் உண்மையெல்லாம் சொல்லிட, ஆத்விக்கு உயிர் துடிப்பெல்லாம் ஒரு நொடி நின்று விட்டது.

யாதவ் பொதுவாக பார்ட்டி அது இது என்றெல்லாம் இரவு நேரத்தில் சென்றது இல்லை. அதையும் மீறி அன்று அவன் செல்கிறேன் என்றதும், ஏதோ போல் வருத்தமாக அமர்ந்திருக்கும் அன்னையை கண்டு, 'அப்படி யாருடைய பார்ட்டிக்கு புதிதாக செல்கிறான் இவன்' என்ற எரிச்சலோடு அவனை பின்தொடர்ந்து வந்தது, நல்லதாகிப் போனது.

"ஒரு ஆம்பள, தன்னை பிடிக்கலைன்னு சொன்ன பொண்ண ரொம்ப பிடிச்சி அவ பின்னாடி சுத்தினா, டார்ச்சர் பண்றான், கைய பிடிக்கிறான், கட்டிப் பிடிக்கிறான்னு பொருக்கி அது இதுனு முத்திரைக் குத்தி, அசிங்கப் படுத்தி அனுப்புவீங்க..
அவளுக்காக அவன் கெட்ட வழில போய் தற்கொலை செஞ்சிகிட்டா, அவனுக்கு குடிகாரன், கோழைனு பல பேர் கொடுத்து, அவன் பிறப்புல இருந்து அவன் குடும்பத்தையே இழுத்து வச்சி அசிங்கப் படுத்துவீங்க..

அதுவே ஒரு பொண்ணு இன்னொரு ஆம்பளைக்கு பண்ணா, பியூர் லவ், புனிதமான காதல் இல்ல.." என்றவன் நக்கலாக சிரித்து, "பொம்பளைக்கு ஒரு நியாயம், ஆம்பளைக்கு ஒரு நியாயம், இது என்ன அநியாயம்..

உன் தங்கச்சி பைத்தியம் மாதிரி அவனை நினைச்சி கண்ட வழில போய் செத்து போனதுக்கு, என் தம்பி எந்த வகையிலும் பொறுப்பேற்க முடியாது.. செத்து போனவளை நினைச்சி உன் வாழ்க்கைய கெடுத்துக்காத.. ஒழுங்கா இருக்க உன்னோட நல்ல லைஃப்ப பாத்துகிட்டு நல்லபடியா வாழப்பாரு.."

நிதானமாக கூறி அவளுக்கு புரிய வைத்து, ஏதோ ஒரு வகையில் அவள் தங்கை சாகும் வரை சென்றதற்கு தன் தம்பியும் காரணமாகிப் போனானே என்ற வருத்தத்தில், தர்ஷினிக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்ய தான் நினைத்தான். அதற்கு அவள் ஒத்தொழைக்க வேண்டுமே!

தூர விழுந்த சிரஞ்சீயை பைத்தியம் போல ஓடி எடுத்து வந்து மீண்டும் யாதவ்க்கு செலுத்தப் போக, அவளிடமிருந்து அதை பிடுங்க முயற்சி எடுத்த ஆத்வி, அவளோடு மல்லுக்கட்டி கன்னம் கன்னமாக அறைய, அப்போதும் வெறி தீரவில்லை அவளுக்கு.

அன்னை தந்தை இல்லாமல், அன்னை போல தங்கைக்கு பாசம் கொட்டி கடினப்பட்டு வளர்த்து ஆளாக்கியவளுக்கு, மகளை போலிருந்த தங்கை இறந்து போனதும், அவள் இழப்பை தாங்காமல் மனநலம் பாதிக்கப்பட்டவள் போல் மாறி போனாள்.

ஆத்வியும் அவள் நிலை உணர்ந்து, அவளின் தோழிகளின் உதவியோடு மனநலம் காப்பகத்தில் விட்ட இரண்டு நாட்களில், பலவித உயிரை பறிக்கும் கெட்ட இல்யூஷன்ஸ் தோன்றி, அவள் உயிரையும் பறித்து விட்டது.

அளவுக்கு மீறிய வன்மம் உயிரை குடிப்பது போல், அளவுக்கு மீறிய பாசமும் ஒரு கட்டத்தில் நஞ்சாகி உயிரை கொல்லும்.

பாசத்தை போன்ற ஆபத்தான கொடிய உயிர் கொல்லி, இவ்வுலகில் வேறு எதுவும் உண்டோ??
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 65
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top