- Messages
- 300
- Reaction score
- 215
- Points
- 63
அத்தியாயம் - 7
கருமேகம் விரிசல் விட்டு, விடாத மழை இடி மின்னலோடு பலமாக கொட்டி தீர்த்தது பூமித்தாயின் மீது.
அச்சோ சமைக்க வேண்டி வீட்ல எந்த பொருளும் இல்லையே, ஊருக்கு போய்ட்டு வந்து வாங்கிக்கலாம்னு நினச்சேன் கடைசில மறந்து போய்ட்டேன். காலைல இருந்தத வச்சி பாத்தாச்சு, இப்ப விஷ்வா வேற இருக்கானே அவனுக்காகவாது ஏதாவது செய்யணும்மே, என்ன செய்யலாம் என்ற யோசனையோடே நின்று இருந்தவளின் செவிமடலில் உஷ்னமான மூச்சிக் காற்று மோதியதில் சிலிர்த்து விழித்தாள் மோகி.
ஓய்.. மோகி.. என்ன ரொம்ப நேரமா யோசனைலே நின்னுட்டு இருக்க. வீட்டுக்கு வந்தவனை இன்னும் எவ்ளோ நேரம் பட்டினி போடறதா உத்தேசம். ஹஸ்கியாக பின்னிருந்து வந்த ஒவ்வொரு வார்த்தையிலும் வேறு அர்த்தம் நிறைந்து ஈரம் பரவும் எச்சில்காற்று செவியிலும் செவியை சுற்றிலும் மோதி தேகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி இருதய துடிப்பை அதிகப் படுத்தி இருந்தது அவளுள்.
சட்டென விலகிக் கொண்டவளோ தனக்குள் நடந்த உணர்ச்சிகளை மறைத்து, அது ஒண்ணு இல்ல விஷ்வா, கண்மணியும் வீட்ல இல்ல சரி ஊருக்கு தானே போறோம் வந்து பாத்துக்கலாம்னு, வீட்ல எந்த திங்ஸும் வாங்கி வைக்காததால இப்ப சமைக்க எதுவும் இல்ல, கடைக்கு போயிட்டு வாங்கிட்டு வரலாம்னு பாத்தா மழை என்னவோ நிக்கிற மாதிரியே இல்ல. அதான் என்ன பண்றதுனு யோசிச்சிட்டு இருக்கேன். சாதாரணமான அவனது பார்வை கூட இப்போது தன்னை குறுகுறுக்க வைப்பதாய் தோன்றுவதை பிரம்மை என்றே நினைத்துக் கொண்டாள் பாவை, அவன் பார்வையில் உள்ள அர்த்தங்கள் அறியாமல்.
அதுக்கென்ன பேபி ஃபுட் ஆர்டர் பண்ணிட்டா போச்சி. இதுக்கு ஏன் இந்த ஆழ்ந்த யோசனை, அதுக்கு பதிலா என்கூட டைம் ஸ்பென்ட் பண்ணு மோகி. ரொம்ப ஏங்கி போய் இருக்கேன் என் ஏக்கத்த இன்னைக்கு தீர்த்து வையேன், கிறக்க மொழியோடு அவளை மேலும் நெருங்கியதில் திருத்திருவென முழித்தவளோ புரியா பாவனையோடு ஏறிட்டு மிடரு விழுங்கி ஓரடி பின்னால் சென்றாள்.
என்ன மோகி அப்டி பாக்குற. மேலும் ஓரடி வைத்தான் அவளை நெருங்கி.
வ்.விஷ்வா ப்ளீஸ் எதுவா இருந்தாலும் கொஞ்சம் டிஸ்டன்ஸ் மெயின்டெயின் பண்ணி பேசு. நமக்குள்ள ஏற்பட்ற இந்த மாதிரியான நெருக்கம் இப்போதைக்கு வேணாம்னு தோணுது. தயக்கமாக உரைத்தவளை அழுத்தமாக கண்டவனோ, ஏன் மோகி உன்ன நான் ஏமாத்தி விட்டு போய்டுவேன்னு தானே என்ன ஒவ்வொரு முறையும் அவாய்ட் பண்ற. சற்றே தடித்து வந்த வார்த்தைதனில் அதிர்ந்தவளாக.
விஷ்வா ஏன் இப்டி எல்லாம் பேசுற.
வேற எப்டி பேசுறது மோகி. நீயும் நானும் லவ்வ சொல்லி ஒருத்தரை ஒருத்தர் விரும்ப தொடங்கி ஆறு மாசத்துக்கு மேல ஆகுது, அதுக்கு முன்னாடி ஒரு ஆறு மாசம்வரை நாய் மாதிரி உன் பின்னால லோல்லோல்னு சுத்தி இருக்கேன் அப்போ எல்லாம் நீ என்ன கண்டுகிட்டதே இல்ல. மனசு தளராம என் காதல உனக்கு புரிய வச்சி இப்போ ரெண்டு பேருமே லவ் பண்றோம் வார்த்தைக்கு வார்த்தை என்ன நீ நம்புறதா சொல்ற ஆனா இதுவரைக்கு ஒரு கைய கூட என்ன நம்பி நீ கொடுத்தது கிடையாது.
ஏதோ இந்த ரெண்டு நாளா நமக்குள்ள ஏற்பட்ற இந்த நெருக்கம் இட் எஞ்சான்ட்ஸ் மீ (it enchants me). இவ என் காதலி எனக்கு மட்டுமே சொந்தமானவன்னு மனசு சொல்லுது ஆனா ஒவ்வொரு முறையும் நீ என்ன விட்டு விலகி போய் அவாய்ட் பண்றது எனக்கு எப்டி இருக்கும்னு யோசிச்சி இருக்கியா. ஒரு நார்மல் லவ் கப்புல்ஸ் போல இதுவரைக்கும் நீயும் நானும் இருந்ததே இல்ல. யாரோ மூணாவது மனுஷன போல தான் என்ன நீ ட்ரீட் பண்ற மோகி. இப்ப கூட நான் ஆசையா உன்ன நெருங்கினா, டிஸ்டன்ஸ் அது இதுனு திரும்பவும் பழைய பல்லவிய தான் பாடுறியே தவிர என்ன நீ புரிஞ்சிக்கவே ட்ரை பண்ணல. இட்ஸ் ஹர்ட்ங் மீ மோகி. வேதனையாக ஒலித்த குரலில் உள்ளம் உருகி காதலனின் அன்பிலும் ஏக்கத்திலும் இலகிய பெண் நெஞ்சம் விம்மித் துடித்தது.
விஷ்வா ஏன் இவ்ளோ எமோஷனல் ஆகுற உன்னோட ஏக்கமும் என்மேல நீ வச்சிருக்க பாசமும் காதலும் எனக்கு புரியாம இல்ல, அவ்ளோ ஏன் எனக்கும் உனக்குள்ள இருக்க எல்லா எமோஷனல்ஸும் அதிகமாவே இருக்கு, ஆனா எதுவா இருந்தாலும் நமக்குள்ள முறையா இருக்கணும்னு ஆசைபடறேன் விஷ்வா.
இன்னும் கொஞ்ச நாளுல என் படிப்பு முடிஞ்சிடும் அதன்பிறகு நீ வந்து அப்பாகிட்ட பேசி நம்ம கல்யாணத்துக்கு முறையா ஏற்பாடு பண்ணு விஷ்வா. நீ ஆசை படர எல்லாத்தையும் உனக்கு உரிமையான மனைவியா மாறி திகட்ட திகட்ட கொடுக்க தயாரா இருக்கேன். அதுவரைக்கும் எனக்காக கொஞ்சம் என்று அவள் தலை குனிந்து மெதுவாக அவனுக்கு புரிய வைக்க முயற்சித்துக் கொண்டிருக்கும் போதே அவள் துடியிடையில் கை விட்டு மொத்தமாக அவளை தன்னோடு இழுத்து இருந்ததில் திகைத்து விட்டாள் மோகித்தா.
வ்.வி.ஷ்.வா.. எ.ன். ன. ப்.பண்ற நீ. இடையில் பதிந்திருந்த கரங்கள் அழுத்தம் கூட்டிக் கொண்டே சென்றதில் வார்த்தைகள் தந்தியடித்தது காதலனின் வசீகர முகத்தை மிகவும் கிட்டத்தில் கண்டு வாய் திறந்து பேச மிகவும் கடினமாக இருந்தது.
கல்யாணம் வரைக்கும் எல்லாம் என்னால கண்ட்ரோலா இருந்து சும்மா தள்ளி உக்காந்து உன்ன வேடிக்கை பாத்துட்டு போக முடியாது மோகி. யூ ஆர் மைன். இப்ப மட்டும் இல்ல எப்போதும் நீ என்னுடையவ. சோ இந்த விலகி இருந்து என்கிட்ட கண்ணாம்பூச்சி ஆடற வேலை எல்லாம் இதோட ஸ்டாப் பண்ணிக்கோ. உணர்ச்சிகள் நிறைந்த குரலில் கோவத்தின் சாயலும் லேசாக எட்டிப்பார்த்ததில் மிரண்டு விழித்தவளின் மென்னிதழ் பச்சக்கென அவன் முரட்டு அதரத்தில் சிக்கி வதைப்பட்டதில் கோதையின் இதயம் இருமடங்காக துடிக்கத் தொடங்கி விட்டிருந்தது அதிர்ச்சியில்.
வாய்க்கு அசை போட வேண்டுமென்றே தனது படுக்கையை பகிர்ந்து கொள்ளும் காமக்கிளிகளின் இதழை வன்மையாக கடித்து சுவிங்கத்தை கண்ட மேனிக்கு பற்களில் கடித்து மெல்லுவதை போல் அவ்விதழ்களை இரக்கமின்றி கடித்து சிதைத்து குருதி கசிய சுவைத்தாலும் அந்த முத்தங்கள் யாவும் காதல் இல்லாத வெறும் காமத்திற்கும் உடல் இச்சைக்கும் மனஅழுத்தத்தை போக்கவும் பேர் போன முத்தங்களே.
ஆனால் இவளுக்கு கொடுக்கும் இந்த முத்தத்தில் ஏதோ அதிசயமான வித்தியாசம் உள்ளதை உளமார உணர்ந்தவனுக்கு இன்பங்கள் மட்டுமே தேன்மழையாக பொழியும் மாய உலகத்தில் சுகமாய் பயணிக்கும் உணர்வு. இதிலும் காதல் துளியும் இல்லையே ஆனாலும் ஏன் இனிக்கிறது இவளின் எச்சில் இதழ்கள் மட்டும் என்பதில் விபரீதமான பெருத்த சந்தேகம் எழ, சந்தேகத்தை தீர்க்கும் விதமாக அவள் இதழினில் தன் இதழினை ஆழப் புதைந்து அதிர்ச்சியில் பிளந்த வண்ணமே இருந்த அவளின் பற்களுக்கிடையே நாவை நுழைத்து பதுமையின் இடையோடு தூக்கி தன்னோடு இறுக்கி அவள் கழுத்தை வளைத்துப் பிடித்து இன்ப தேன்முத்தம் சிந்தியதில், அவன் வேகம் தாங்காது நிலைகுலைந்து போனாள் கன்னிமான்.
அதிர்ச்சியில் தேகம் நடுங்கிட நடப்பவற்றை பாதி உணர்ந்தும் உணராமலும் மூளையின் செயல்பாடுகள் செயலிழந்ததை போல், காதலனின் கையில் கை பொம்மையாக அசைவின்றி இருந்த பூவையின் பொன் தேகத்தில் மீண்டுமொரு அதிர்வலை உண்டானதில் திடுக்கிட்டுப் போனாள்.
பின்னங்கழுத்தை வளைத்து பிடித்தக் கரமாது உணர்ச்சிகளின் பிடியில் தடவியபடி அவளது முன்னங்கழுத்தில் தஞ்சமிட்டு தடவி கீழிறங்க பார்த்ததில், தன்னிலைக்கு வந்த பாவையோ தன் எதிப்பை காட்டும் விதமாக ம்.. ம்ம்.. என்ற வெளிவராத சத்தத்தோடு தலையை ஆட்டி உடலை அசைக்க மேலும் மேலும் பூந்தேகம் உரசியதில் போதை கொண்டான் விஷ்வரூபன்.
காதலனின் அன்பு அக்கறை காதல் பிடிக்கிறது நெருக்கமும் பிடிக்கிறது ஆனால் வரைமுறையோடு அந்த நெருக்கம் ஏற்பட்டு பிடிப்பது வேறு இப்படி தடாலடியாக களத்தில் இறங்கி அவளை திணறடிப்பது வேறாயிற்றே.
ஒரு எல்லைக்கு மேல் அவனது முத்தத்தையும் தீண்டலையும் சகித்துக் கொள்ள முடியாமல், அவனது வலிமையான மெருகேறிய தோள்ப்பட்டையில் தன் வலு கொண்டு அடித்து அவனிடமிருந்து விடுபட முயன்றவளின் முயற்சிகளை எல்லாம் முறியடிக்கும் விதமாக, ராட்சசன் அவன் வாயில் மிட்டாயாய் கரைந்த மென்னிதழில் மையல் கொண்டு பெண்மயிலின் மென்மையான தேக பாகங்களை கரம் கொண்டு உணர்ந்தவன் தன்னிலை இழந்து பெண் வாசத்தில் கிறங்கி வேட்டையாடத் துடிக்கும் காமூகனாக உருவெடுக்க தொடங்கி இருந்தான்.
இடைவிடாது தொடர்ந்த இதழ் முத்தத்தில் மூச்சித் திணறி விட்டால் மயக்கத்திற்க்கே செல்லும் நிலையில் கண்ணீரோடு அவனது தலைமுடி கொத்தாக கையில் பற்றி இழுத்ததில் சோதனையாக அவனது தலைமையிர்கள் கூட அத்தனை உறுதியாக இருந்ததில் சோர்ந்து போனவளின் இடைக்கு கீழே பெண்மையை முட்டி நின்ற ஆண்மையினை உணர்ந்து மேலும் அதிருற்றவளுக்கு எங்கிருந்து தான் அத்தகைய பலம் வந்ததோ. விஷ்வா நோஓஓ.. என்ற கோபத்தில் வெளிப்பட்ட அலறலோடு ஒரே தள்ளாக தள்ளி, குருதி வழியும் எச்சில் இதழில் கண்ணீர் கலந்து மூச்சி வாங்க அவனை ஏறிட்டவளோ அடுத்த நொடியே முகத்தை மூடி மடிந்து விழுந்து அழுதவளை, புருங்கையால் வியர்வை படிந்த முகத்தை துடைத்துக் கொண்டு மோகம் வடியா பார்வையோடு வஞ்சகம் கலந்து சில கணங்கள் அவளை கண்டான் விஷ்வா.
குலுங்கி அழும் அவள் தேகம் கூட காமூகன் கண்களுக்கு மேலும் சூடேற்றுவதாய் அமைய, இன்று இந்த ஆட்டம் போதும் மெல்ல மெல்ல இறங்கி நின்று ஆட்டம் காணலாம் என்ற எண்ணத்தில் கடினப்பட்டு தன் உணர்ச்சிகளை மறைத்தவனாக, அவளை நெருங்கி மண்டியிட்டு அமர்ந்து அழுதுக் கொண்டிருப்பவளின் முகம் நிமிர்த்த "ப்ளீஸ் விஷ்வா டோன்ட் ட்ரை டூ டச் மீ. நீ செஞ்ச வரைக்கும் போதும் ப்ளீஸ் என்கிட்ட வராதே தள்ளி போ" கோபத்தில் கண்கள் சிவக்க பட்டென தட்டி விட்டாள் அவன் கரத்தை.
"இப்ப நான் என்ன செஞ்சிட்டேன்னு இவ்ளோ கோவம் படர மோகி" மோகம் குறையாத பட்சத்தில் கோவம் எகிறியது அவனுக்கும்.
என்ன செஞ்சியா. கொஞ்ச நேரம் முன்னாடி வரைக்கும் நீ என்ன பண்னேன்னு உனக்கு நியாபகம் இல்லையா. நான் உன்ன லவ் பண்றேன் தான் அதுக்காக இப்டி எல்லாம் என்னால எல்லை மீறி நடக்க முடியாது விஷ்வா. கல்யாணத்துக்கு முன்னாடி இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்ல. எங்க அப்பா அப்டி என்ன வளக்கவும் இல்ல. என்னால எந்த விதத்துலயும் எங்க அப்பா பேர் கெட்டு போகுறத என்னைக்கும் நான் விரும்ப மாட்டேன். அடங்காத கோபத்தில் அனலாக கொட்டிய வார்த்தையில் நிலைத்த விழிகளோடு அவளை கண்டவனுக்கு ஆத்திரம் உச்சிவரை ஏறியது.
இப்ப நீ என்ன சொல்ல வர மோகி. நான் உன்ன தொட்டா அசிங்கம்னு சொல்ல வரியா. அவளின் புறக்கணிப்பில் சீற்றம் கொண்டது குரல்.
நான் அப்டி சொல்ல வரல விஷ்வா. நான் சொல்ல வரர்த கொஞ்சம் புரிஞ்சிக்க முயற்சி பண்ணு. கண்ணீரோடு உரைக்கும் போதே கை நீட்டி தடுத்தவன். இவ்ளோ நாளா உன் பேச்ச கேட்டு உன் நிழல கூட தொடாம கண்ணியமா நடந்துக்கிட்டேன் எதனால உன்ன புரிஞ்சிகிட்டதால தான். 30 வயசு ஆகுது டி எனக்கு இப்டி ஒரு அழகான காதலிய வச்சிக்கிட்டு உணர்ச்சிகள அடக்கி வாழுற என்னோட நிலைமைய என்னைக்காவது நீ புரிஞ்சிகிட்டு இருக்கியா. என்னவோ உன்ன நான் ரேப் பண்ணி ஏமாத்தி உட்டு போய்டுவேன்ற மாறியே வார்த்தைக்கு வார்த்தை எல்லை மீறி நடக்க முடியாதுனு சொல்ற.
அப்டி நான் உன்கிட்ட என்ன டி எல்லை மீறி நடந்தேன். ஜஸ்ட் ஒன் டைட் ஹக் வித் டீப் கிஸ் இதுல என்ன டி எல்லைய மீறினத பாத்த. எந்த காதலனும் அவ காதலிகிட்ட பண்ணாததா பண்ணிட்டேன். அப்டி உன்னால என்கூட இயல்பா நெருங்கி பழக முடியலனா, என்மேல நம்பிக்கை உனக்கு இல்லனு என் முகத்துல அரைஞ்ச மாதிரி சொல்லிட்டு என்னோட சேத்து நம்ம காதலையும் கொன்னுட்டு போயிட்டே இரு. அத விட்டு என்ன ஒரு ஸ்ட்ரேஞ்சர் மாதிரி ட்ரீட் பண்ணனு வச்சிக்கோ, அப்புறம் நான் பொல்லாதவனா மாற வேண்டி இருக்கும் சொல்லிட்டேன். கண்களை உருட்டி மிரட்டிய மிரட்டலில் முட்டை கண்களை அகல விரித்தாள் அப்பாவியாக.
அழுது சிவந்த முகம் இதழ் முத்தம் காரணமாக ரத்தத் துளிகளோடு வீங்கி துடிக்கும் இதழையும் கண்டு மோகம் கூடுவதாய் அவன் உணர்ச்சி நடம்புகள் பூ பூக்க செய்ததில் ஆழ்ந்தமூச்செடுத்து தன்னை ஒருநிலை படுத்தி அவள் கன்னம் ஏந்த, பசியில் பரிதாபமாக காணும் பூனைக்குட்டியின் முகமாக சுருங்கிவிட்டு இருந்ததில் இன்னும் அழகேரி அவன் கண்களுக்கு தெரிந்தாள் மோகித்தா.
பெருவிரல் கொண்டு கலங்கி வழியும் கண்ணீரை துடைத்து படபடக்கும் இமைகளில் முத்தமிட, அவன் ஸ்பரிசத்தில் சிலிர்த்து அவனது கரங்களை பற்றிக் கொண்டாள்.
சாரி மோகி, ஏதோ உணர்ச்சிவசப் பட்டு ஏதேதோ பேசிட்டேன், உன்ன ஹர்ட் பண்ணிட்டேன். இனிமே உன் விருப்பம் இல்லாம இப்டியெல்லாம் நடந்துக்க மாட்டேன்னு சொல்லுவேன்னு கனவுலயும் நினைக்காத என்றதும் அச்சத்தில் சட்டென உயர்ந்தது அவள் விழிகள்.
அவளது பயத்தை உள்வாங்கி உள்ளுக்குள் நகைத்துக் கொண்டவனோ, இப்ப எதுக்கு இவ்ளோ பயம். முழுசா சொல்ல வரர்த கேட்டு இந்த முட்டைக்கண்ண உருட்டு மேலும் அவள் கண்களில் முத்தமிட்டு.
என் காதலிய நான் நெருங்க யாருகிட்டயும் பர்மிஷன் வாங்கணும்னு எனக்கு அவசியம் இல்ல மோகி உன்னையும் சேத்து தான். எனக்கு முத்தம் கொடுக்க தோணினா கொடுப்பேன், உன் கைபிடிக்க உன்ன கட்டிப்பிடிக்க தோணினா பிடிப்பேன், உன் மடில படுத்து உன் வயித்துல மீசை கூச முத்தம் கொடுத்து உன்ன சீண்டிகிட்டே தூங்க தோணினா அதையும் செய்வேன். இன்னும் எனக்கு என்னென்ன தோணுதோ எல்லாத்தையும் செய்வேன் பிகாஸ் யூ ஆர் ஆல்வேஸ் மைன் பேபி. இது வரைக்கும் நீ சொன்னதெல்லாம் கடைபிடிச்சி உனக்காக நான் பொறுத்துகிட்டேன், இனிமே நீ எனக்காக பொறுத்துக்க எல்லாம் வேணாம், என்ன சந்தோஷமா ஏத்துக்கோ கண்ணம்மா.
அம்மா அப்பா கூட பொறந்தவங்கனு இப்டி யாருமே இல்லாத அனாதையா அம்புக்கு ஏங்கி தவிச்சு தனிமைல வாழுற வாழ்க்கை எப்டி இருக்கும்னு நம்ம ரெண்டு பேர்க்குமே நல்லா தெரியும் மோகி. அதிலும் என் நிலைமை உனக்கு சொல்லி தான் தெரியுமா என்ன. மான்ஸ்டர் போல் பேச்சை துவங்கி குழையும் குழந்தையாக அன்புக்கு ஏங்கி தவித்ததில் பெண்மனதில் தாயமுதம் சுறந்து காதலனின் ஏக்கத்தை நன்றாக உள்வாங்கிக் கொண்டது.
பசி எடுக்குது உன் கையாள ஆசையா சாப்பிட வந்தவனை இப்டி கெஞ்ச விட்டு உக்காந்து இருக்கியே டி. உனக்கு மனசாட்சி இருக்கா பாவமுகம் சுருங்கியதில் பெண்முகத்தில் புன்னகை மலர்ந்தது.
அப்பாடா சிரிச்சிட்டா கள்ளி. சரி பேபி நேரம் இருக்கு நீ ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு வா. பக்கத்துல இருக்க சூப்பர் மார்க்கெட் போயிட்டு வீட்டுக்கு தேவையான திங்க்ஸ் எல்லாம் வாங்கிட்டு வரலாம். மெய்யுருக சொல்லி அவளை முகம் கழுவ அனுப்பி வைத்தவனுக்கோ இப்போது இருக்கும் அவளின் மனநிலையை மாற்றி பின் வேறு மாதிரியாக அவளை மடக்கி தன்வசம் கொண்டு வர வேண்டும் என்ற திட்டம் தான் மனதில் ஓடியது.
வெளியே செல்ல இரு குடைகளை எடுத்தவளை தடுத்து ஒரு குடையை விரித்துப் பிடித்து, அவள் தோளை உரசியபடியே கொட்டும் மழையில் இருவருமாக நடந்து சென்றனர் இனிமையான குளுகுளு உணர்வில்.
தொடரும்.

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 7
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.