Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖

அத்தியாயம் 8

Administrator
Staff member
Messages
300
Reaction score
215
Points
63
அத்தியாயம் - 8

மாலை நேரமே இரவை போல் நன்றாக இருட்டிக் கொண்டு விட்டுவிட்டு வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது மழை.

ஒற்றைக் குடையில் தோள் உரச இருவரும் மழையில் நடந்து அருகில் இருந்த பல்பொருள் அங்காடியை அடைவதற்குள் அப்பாடா என்றாகிவிட்டது.

விஷ்வாவின் மனநிலையோ கொதிப்பாக இருந்தது, கேவலம் இவளிடம் நல்லபெயர் வாங்கி நம்பிக்கையை பெறுவதற்கு எந்த அளவுக்கு எல்லாம் தன் தகுதியை விட்டு இறங்கி செல்ல வேண்டி இருக்கிறது என்று நினைக்கையில் ஆத்திரம் மூண்டாலும் இயல்பாகவே அவளிடம் நடந்துக் கொண்டான்.

என்னென்ன வேணுமோ எடு மோகி நான் போயிட்டு ட்ராலி எடுத்துட்டு வரேன் என்றவனோ சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் அவளை இடித்து தோளை உரசி சில்மிஷம் செய்து காற்றில் முத்தத்தை பறக்க விட்டு அசந்த நேரம் கன்னத்தினில் ஈரஇதழ் ஒற்றி எடுத்து அவளை சிவக்க வைப்பதுமாக கையில் கிடைத்த பொருளை எல்லாம் காட்டி, மோகிமா இது தேவையா அது தேவையா என்று அவனும் பொருளை எடுக்காமல் அவளையும் எடுக்க விடாமல் சேட்டை செய்பவனை சமாளிக்க முடியாமல் விழித்து வைத்தாள்.

போதா குறைக்கு அவள் இடையில் சுற்றி இருந்த ஆடவனின் கரத்தை குனிந்து பார்த்து குறுகுறுத்தாள் பாவை. 'விஷ்வா நீ இப்டி சேட்டை பண்ணா நான் எப்டி தேவையானதை எடுக்க முடியும், இந்த கைய எடேன் எல்லாரும் நம்மளையே பாக்குற மாறி இருக்கு' சங்கடமாக நெளிந்தாள் அவள்.

'என்ன பேபி நீ.. ஒரு கிரிப்புக்கு கூட எதையும் பிடிக்க விட மாற்ற. சரி கைய எடுக்குறேன் நீ போயி பொருளை எடு' வேண்டா வெறுப்பாக சொன்னவனின் முகம் போன போக்கைக் கண்டு வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு தேவையான பொருட்களை எடுத்து விலை பார்த்து ட்ராலியில் போட்டுக் கொண்டிருந்தவளின் செவியில் இரு ஆடவர்களின் உரையாடல் விழுந்ததில் உள்ளம் திடுக்கிட்டு நின்றாள்.

என்னடா இத்தனை டப்பா எடுக்குற ஒருத்திக்கா இவ்வளவு. உடன் வந்தவன் நண்பன் போலும்.

இல்ல டா பழைய பீஸ் போக, புதுசா ஒண்ணு தொக்கா சிக்கி இருக்கு, லேசா தொட்டாலும் மயங்கி மடங்கி உழுற மாறி. அதுக்குதான் இந்த எக்ஸ்ட்ரா டப்பா, டிஃபரென்ட் ஃப்லேவர்ஸ்ல எடுக்குறேன் என்றான் ஒவ்வொரு ஆணுறை பொட்டியையும் மூக்கினருகே கொண்டு சென்று நுகர்ந்து பார்த்து.

அந்த யாழினி வேற உன்ன முழுசா நம்பிகிட்டு உம்மேல உயிரையே வச்சிருக்கா போலயே டா. ஆனா நீ கிடைக்கிற பொண்ணுகளை எல்லாம் லவ் பண்ணி மேட்ற முடிச்சிவுட்டு ஒவ்வொருத்தியோட நியாபகமாவும் அவளுங்கள விதவிதமா வீடியோ எடுத்துகிட்டு எஸ்ஸாகிடுவ, இந்த விஷயம் மட்டும் அவளுக்கு தெரிஞ்சா நீ இத்தனை நாளா நல்லவன் மாறி அவகிட்ட பர்ஃபார்மென்ஸ் பண்ணது எல்லாம் வீணா போய்டுமே.

அதுக்குள்ள அவளை முடிச்சிவுடனும்னு தான்டா அவவீட்டுக்கு பால் பாக்கெட்ல இருந்து அவ அப்பனுக்கு மருந்து செலவு வரைக்கும் எல்லாத்தையும் பாத்து பாத்து செஞ்சி அவளை கரெக்ட் பண்ண பாக்குறேன். அப்டி இருந்தும் எல்லாம் கல்யாணத்துக்கு பிறகுதான்னு நெருப்பு மாறி தள்ளி நிக்கிறாடா. நானும் எத்தனை நாளைக்கு தான் அவ அழகுக்காகவும் உடம்புக்காகவும் அவளை டீப்பா லவ் பண்ணி அவகிட்ட நல்லவன் மாறியே நடிச்சி கேவலமா கீழ இறங்கி போறது, அதான் ஒரு ஐடியா பண்ணி வச்சிருக்கேன்.

என்ன ஐடியா டா அது?

இன்னும் இரண்டு நாளுல என் பர்த்டே வருதுல்ல, அப்போ அவளை வெளிய அழைச்சிட்டு போயி செட்டிமென்ட்டலா அவ மனச கரைக்கிற விதமா டைலாக்ஸ் பேசி வேலைய முடிக்கப் போறேன்.

டேய் ஆனாலும் அந்த பொண்ணு பாவம் டா உன்னையே நம்பி இருக்கு.

அதுக்கு நான் என்ன டா பண்ண முடியும். பெத்தவங்க இருந்தும் அவங்க பேச்சை கேக்காம எங்கள மாறி பசங்கள நம்பி ஏமாந்து போறதுதான் இவளுங்கள மாறி காதல் பண்ற பொண்ணுங்களோட தலைவிதி. நான் எதிர்ப்பாக்குறது அவ உடம்பு, இனிக்க இனிக்க பேசி ஏமாத்தினா தான் எனக்கு அது கிடைக்கும். அவ எதிர்ப்பாக்குறது என் காதல், பட் அப்டி ஒரு வார்த்தைக்கு என்ன மீனிங்னு கூட எனக்கு தெரியாதே மச்சி என நக்கலாக சிரித்துக் கொண்டே நண்பனோடு வாங்கிய பொருளுக்கு பில் போட சென்றவனை நெஞ்சடைக்க கண்டவளோ அவன் பேச்சினில் அதிர்ந்து போனாள்.

இப்படியும் கூட நம்பிய பெண்ணுக்கு துரோகம் செய்யும் மனிதர்கள் இருப்பார்களா? என்று நினைக்க நினைக்க அவன் பேசிய வார்த்தைகள் யாவும் மீண்டும் மீண்டும் செவியினில் ஒளித்துக் கொண்டே இருக்க, அருவருப்பில் கை கால்கள் எல்லாம் உதறல் எடுத்து இதயம் படபடத்து அத்தனை ஏசி குளிரிலும் வியர்வை நிற்காமல் வழிந்தது.

யாரோ ஒரு பெண்ணுக்கு தானே இத்தகைய பாதிப்பு என்று சகஜமாக நினைக்க முடியவில்லை அவளால். ஏனோ தனக்கே இப்படி ஒரு துரோகம் நடந்தேறி கண்ணீர் விட்டு கதறும் காட்சிகள் பின்பமாக தோன்றி நெஞ்சமெல்லாம் அடைத்து மூச்சிவிட முடியாத நிலையில் கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது. வி..வ்..விஷ்..வா.. என அவனை தேடி அலைமோதிய கருவிழிகள் ஓரிடத்தில் மையலிட்டு அகல விரிந்தது விஷ்வரூபன் கையில் இருந்த பொருளை கண்டு.

என்ன பண்ணிட்டு இருக்க விஷ்வாஆஆ.. என ஆவேசமாக கத்தி அவன் கையில் இருந்த பொருளை தட்டி விட்டவளை அவன் நிமிர்ந்து பார்த்த சமயம் அதீத அதிர்ச்சியில் தள்ளாடி அவள் மயங்கி விழுவதை கண்டு சுதாகரித்து ஹேய் மோகி.. என தாங்கி பிடித்திருந்தான் அவன்.

ஐயா.. மணி எட்டாச்சி நேரத்தோட சாப்பிட்டு மாத்திரைய போடுங்கய்யா, பணிவாக சொன்ன சமையல் வேலை செய்பவரை ஆயாசமாக நிமிர்ந்து பார்த்தார் ராமமூர்த்தி தாத்தா.

இன்னைக்காவது என் பேரன் வருவான் அவனோட உக்காந்து பேசிக்கிட்டே சாப்பிடலாம்னு ஆசையா இருந்தேன் ஆனா இத்தனை மணி ஆன பிறகு அவன் வருவான்ற நம்பிக்கையே போயிடுச்சி செல்வம். சரி நீ போய் சாப்பாடு எடுத்து வா இன்னைக்கும் தனியா தான் இந்த நாலு சுவத்தை முறைச்சிக்கிட்டு சாப்பிடணும்னு என் தலைல எழுதி இருக்கு என்றார் சோர்வாக.

கவலை படாதீங்கய்யா சின்னையா கூடிய சீக்கிரம் மாறிடுவாரு. பேசாம அவருக்கு ஒரு நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணி வச்சிட்டா, அந்த பெண்ணுக்காகவாது பொறுப்பு வந்து நல்ல பிள்ளையா திரும்பவும் பழைய மாறி ஆகிடுவாருள்ள. செல்வம் சமையல் வேலையையும் தாண்டி ராமமூர்த்தியின் நல்ல விசுவாசியும் கூட, அவரின் உடல் நலனில் அக்கறை எடுத்து வேளாவேளைக்கு உணவு கொடுத்து மாத்திரைகளை போட வைத்து பார்த்துக் கொள்ளும் பொறுப்புகளை விஷ்வா இவருக்கு தான் கொடுத்திருந்தான்.

இப்ப நீ சொன்னதை எல்லாம் இதுவரைக்கும் நான் யோசிச்சிருக்க மாட்டேன்னு நினைக்கிறியா செல்வம். எல்லா முயற்சியும் எடுத்து அந்த பயலுக்கு ஒரு நல்ல இடத்துல இருந்து பொண்ணும் பாத்து வச்சிட்டேன், ஆனா இவன் தான் எதுக்கும் பிடிக்குடுக்காம கேவலமான வேலைகளை பண்ணிட்டு இருக்கான். அவன் அண்ணன் விக்கி இருந்த வரைக்கும் எவ்ளோ ஒரு ஒழுக்கமான புள்ளையா சொல்ற பேச்ச கேட்டு நடப்பான், இப்ப பாரு அப்டியே நேர்மாறான குணத்துல இதயம் இல்லாத கற்பாறையா மாறி நிக்கிறான். வருத்தமாக சொன்னவருக்கு தன்னால் முடிந்த ஆறுதல் வார்த்தைகளை சொல்லியபடியே உணவை உண்ண வைத்து அவருக்கு துணையாக அவருடனே இருந்தார் செல்வம்.

பட்டு இமைகள் மெல்ல திறக்கையில் ஏதேதோ நினைவுகள் தோன்றி பயத்தில் திடுக்கென எழுந்து அமர்ந்தவளை புரியாமல் பார்த்தபடி அவளின் அருகினில் அமர்ந்திருந்தான் விஷ்வா.

மோகி.. என்னாச்சி உனக்கு. ஆர் யூ ஓகே. அவளை நெருங்க வருவதற்குள் அவசரமாக வாரி சுருட்டிக் கொண்டு பின்னால் நகர்ந்தவள், ட்.டோன்ட் டச்.. டோன்ட் டச் மீ விஷ்வா.. என்ன தொடாத. குரல் நடுங்க பயந்தவளை, இப்ப எதுக்கு டா இவ கடுப்பப் கிளப்புற விதமா இப்டி ஒரு பர்ஃபாமென்ஸ் பண்ணிட்டு இருக்கா? மனதில் இத்தகைய சலிப்போடு. மோகி காம்டவுன்.. பயப்படாதே நான் உன்கூடவே தான் இருக்கேன். இந்தா முதல்ல இந்த தண்ணிய குடி என நீர் நிறைந்த குவளையை நீட்ட வாங்க மறுத்து பயந்து ஒடுங்கியவளை, ஒருவேளை நம்மள பத்தி எதையாவது கண்டு புடிச்சி இருப்பாளோ அதான் என்ன பாத்து பயப்பட்றாளா என்ற யோசனையாக கண்டான் அவன்.

சூப்பர் மார்க்கெட்டில் திடிரென கத்திக் கொண்டு மயங்கியவளை என்ன செய்வதென புரியாமல் அந்த நேரத்தில் சற்று மழையும் விட்டிருக்கவே வெளியே இருந்த ஆட்டோவில் அவளை ஏற்றிக் கொண்டு வீடு வந்திருந்தான்.

மோகி.. இப்டியே பயந்து ஒடுங்கினா என்னனு நான் புரிஞ்சிக்கிறது. ஒழுங்கா சொல்ல போறியா இல்லையா. பொறுமை மறைந்து அதட்டல் வெளிவந்ததில், நீயும் என்ன ஏமாத்திட்டு போக தானே விஷ்வா அத வாங்க போன, கண்ணீரோடு உடைந்து வந்த வார்த்தைதனில் விழிகள் சுருக்கியவன்.

எதுவா இருந்தாலும் தெளிவா சொல்லு மோகி. நான் ஏன் உன்ன ஏமாத்த போறேன், அப்டி உன்ன ஏமாத்த என்ன வாங்கினே.

எதுவும் தெரியாத மாறி நடிக்காத விஷ்வா. நான் அந்த பசங்க பேசின எல்லாத்தையும் கேட்டேன். நீயும் அதே புத்தியோட என்ன ஏமாத்த தான் அதை வாங்க இருந்தியா விஷ்வா எனும் போதே எங்கே தன் காதலனும் தன்னை ஏமாற்றி விட்டு சென்றிடுவானோ என்ற எண்ணம் தானாக அவள் மூளையில் வந்து ஆட்டிப் படைத்து அச்சமுற செய்தது.

எந்த பசங்க என்ன பேசினாங்க. நான் என்ன நடிக்கிறேன், இப்டி அரைகுறையா சொல்லி அழுது வடிஞ்சா நான் என்னனு புரிஞ்சிக்கிறது. இங்க பாரு.. என்னை பாரு.. எதுக்கும் பயப்படாம என்ன சொல்லணுமோ என்கிட்ட என்ன கேட்கணுமோ தைரியமா சொல்லுமா என்றான் அவள் கன்னம் ஏந்தி பரிவாக.

அதில் சற்றே பயத்தை விடுத்து அங்கு அவள் கேட்டதை விடயங்களை அணைத்தும் சொல்லிவள், ஒருத்தன முழுசா ஒரு பொண்ணு நம்பி அவனுக்காக தன்னையே அர்பணிக்கிர அளவுக்கு துணியிறான்னா அவனை அவ எந்த அளவுக்கு கண்மூடித்தனமா விரும்பி இருப்பா. எப்டி நம்பலையே நம்பி இருக்க பொண்ண ஏமாத்திட்டு போக மனசு வருது.

இவனுங்க மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம் காதல்னா என்னனு அதோட புனிதத்தை பத்தி தெரியுமா தெரியாதா. 'ஒவ்வொரு பொண்ணும் அவளோட குழந்தை பருவம் மாற தொடங்கி கொஞ்சம் விபரம் தெரிய தொடங்கினதும் பெத்த அப்பா கூட பொறந்த அண்ணன் தம்பிங்க முன்னாடி கூட துணி மாத்த கூச்சப்படுவாங்க. அப்டி சின்ன வயசுல இருந்து தங்களோட உடலையும் கற்பையும் பொக்கிஷமா பாதுகாத்து வந்து, காதல்னு ஒரு அழகான உணர்வு அவ மனசுல தோன்றி நேத்து வந்தவனை முழுசா நம்பி இத்தனை வருஷமா பாதுகாத்து வச்சிருந்த தன்னோட பெண்மையான பொக்கிஷத்தை தயக்கம் துறந்து அவனுக்காக துறக்கும் போது அவ மனசுல அவனுக்கான இடம், அவளோட முழு நம்பிக்கைக்கும் காதலுக்கும் உறுதியான அடையாளமான மொத்த உருவமும் அவனா மட்டும் தான் இருப்பான்' சிவந்த முகம் துடித்து கணேரோடு அவள் காதலுக்கான விளக்கத்தை அழுத்தமாக சொல்லுகயில் விஷ்வரூபன் உன்னிப்பாக அவளின் உணர்வுகளை படித்திருந்தான் சலனமின்றி.

அப்டி இருக்க எப்டி விஷ்வா ஒரு பொண்ணோட மனச உடைச்சி அவ நம்பிக்கைய உடைச்சி ஈஸியா அவளை ஏமாத்திட்டு போகணும்னு நினைக்க முடியிது. கேவலம் ஒரு பொண்ணோட சதைமேல மோகம் இருந்தா அதுக்கு காதலை தான் ஆயுதமா கைல எடுப்பாங்களா. இதுக்கு யார் மனசையும் நோகடிக்காம ஒரு பொண்ணோட வாழ்க்கைய வீணடிச்சி நரகத்துக்குள்ள தள்ளாம பணம் கொடுத்தா தொழிலா பாக்குற பலபேர்கிட்ட போயிட்டு தன்னோட இச்சைகளை தீர்த்துக்கலாமே.

ஒரு பொண்ணோட கற்பு அப்டின்றது அவளுக்கு மட்டுமே மரியாதையை சேக்குற ஒரு விஷயம் இல்ல, அவளோட வளர்ப்புக்கு கிடைக்கிற மரியாதை. அவளோட பெத்தவங்களுக்கு கொடுக்குற பெருமை. இத்தனை வருஷமும் நம்ம பொண்ண நமா சரியா தான் வளர்த்து இருக்கோம்னு ஒரு நிமிஷம் அவங்க நிம்மதி பெருமூச்சு விடுவாங்களே பெத்தவங்க மனசு குளிர்ந்து போகும்.

ஆனா இப்பலாம் கற்புனா எத்தனை கிலோனு கேக்குற காலம் வந்து போச்சி சில ஃபேஷன் பெண்களுக்கும் ஆண்களுக்கும். ஆனாலும் பல பேர் வளர்ப்புக்கு மரியாதை கொடுத்து ஒழுக்கத்தோட வாழவே பெரும்பாலும் ஆசைப்படுவாங்க. அதுல ஒருத்தி தான் நானும் விஷ்வா என்றவளை உணர்ச்சி துடைத்த முகத்தோடு கண்டான்.

"நீ சொல்றது எல்லாம் உண்மை தான் மோகிமா ஒதுக்குறேன். நல்லதுனு ஒண்ணு இருந்தா கூடவே கெட்டதும் ஒண்ணு இருக்கும் அது போல தான் இதுவும். அவனுங்கள போல ஆட்கள் எல்லாம் வெட்ட வெட்ட துளிர்த்து வர கருவேலம் மரம் போல வளர்ந்துட்டு தான் வருவானுங்க. அவனுங்கள நம்புற ஒவ்வொரு பொண்ணும் ஏமாந்துட்டு தான் இருப்பாங்க. இதெல்லாம் மாத்த முடியாது மோகிமா. நீ இதையெல்லாம் நெனச்சி ஸ்ட்ரெஸாகி அழுவாத பேபி. பாரு முகமெல்லாம் அழுது அழுது வீங்கி போச்சி, அவள் கண்ணீரை மெதுவாக துடைத்து விட்டுக் கொண்டு இருக்கையில் "நீயும் தானே விஷ்வா நான் பாக்கும் போது க்.காண்டம் எடுத்த" பயத்தினோடே அவன் முகத்தை ஏறிட்டு அப்பாவியாக கேட்டவளின் கேள்வி சுருக்கென இதயத்தினில் விஷமுற்கள் தைத்த உணர்வு.

உண்மைதான் அவனும் தான் எடுத்தான் ஆனால் அவளுக்காக எடுத்தது இல்லை என்பதை வாய் திறந்து சொல்ல முடியாதே. இருப்பினும் அவள் பார்த்த போது அவன் கையில் இருந்தது ஆணுறை பெட்டியே இல்லை. மலிவு விலையில் ஷோகேசில் வைக்கப்பட்டிருந்த இயர்பாட்ஸ் பெட்டியை பொழுது போகாமல் எடுத்து பார்த்துக் கொண்டு இருந்ததை தான் இவள் தவறாக நினைத்து பயத்தில் மயங்கி இருக்கிறாள் என்று இப்போது உணர்ந்துக் கொண்டவன்.

மோகிமா நீ தப்பா புரிஞ்சிகிட்டு இருக்க, அவனுங்க பேசினத கேட்டு பயந்து அப்படியே என்ன நீ பாக்கவும் நான் எடுத்ததும் காண்டம்னு நினைச்சிருக்க. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்னு சும்மாவா சொன்னாங்க லூசு. அந்த பாக்ஸ் கொஞ்சம் பெரிய சைஸ்ல இருந்தத கூட கவனிக்காம தட்டி விட்டதும் இல்லாம உன்ன நான் எந்த அளவுக்கு லவ் பண்றேன்னு தெரிஞ்சும் என்னை சந்தேகப் பட்டுட்டேல்ல. வேதனையாக கேட்டவனை கண்டு பதறிப் போனாள் மோகித்தா.

ஐயம் சோ சாரி விஷ்வா. ப்ளீஸ் என்ன மன்னிச்சுடு சட்டென அவனை இறுக்கி அணைத்து அவன் கன்னத்தில் முத்தமிட்டு மன்னிப்பு வேண்டியவளின் மன்னிப்பை நிராகரித்து, பாவையின் இதழ் வழியாக அமுதம் உறுஞ்சி தித்திப்பான மன்னிப்பை எடுத்துக் கொண்டான்.

தொடரும்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 8
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top