ரதி 32
அந்த பீச் ஹவுஸ்யில் இருந்து வெளியே வந்த தூரிகை நிலா வேகமாக அந்த கடற்கரை சாலையில் நடந்து கொண்டு இருந்தாள். அப்போது அந்த வழியாக சென்று கொண்டு இருந்த ராகவனின் ஆட்கள் அவளை கண்டு வேகமாக அவள் அருகில் சென்றனர். அதில் ஒருவன் ' சின்னம்மா நாங்க உங்கள பாதுகாக்க வந்து இருக்கோம் ' என்றான். அதற்குள் அங்கே விசியம் அறிந்து தேவராகவன் மற்றும் ருத்ரதேவன் இருவரும் வந்து விட
கலைந்த தலையும்....
அழுக்கு உடையும்....
அழுது வீங்கிய கண்களும்...
பொலிவு இழந்த முகமும்...
என பார்க்கவே சித்த பிரம்மை பிடித்த பைத்தியக்காரி போல இருந்த அவன் செல்ல இளவரசியை சென்று வாரி அணைத்து கொண்ட தேவ் ' ஒன்னும் இல்ல பாப்பா அதான் அப்பா வந்துட்டேன்ல இனிமே ஒன்னும் ஆகாது ' என்றான். தந்தையவனின் அணைப்பில் சுயம் வந்த நிலாவோ ' அப்பா ' என அழைக்க
அவனோ ' சொல்லு பாப்பா யார் உன்ன இங்க கூட்டிட்டு வந்தது ' என்றான்
அவளோ ' யாருனு தெரியல ஆனா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அங்க இருந்த ஒரு வீட்ல இருந்து என்ன வெளிய அனுப்பிட்டான் ' என கூற
ருத்ரதேவனோ யோசனையாக ராகவனின் முகத்தை காண ராகவனோ ' பாப்பா வெளிய வரும் போதே பாக்க சொல்லிட்டேன் மச்சான் ' என்றான்
தேவ்வோ மகளை கண்டு " சரி வா பாப்பா நாம வீட்டுக்கு போலாம் அங்க அம்மு வெயிட் பண்ணு வா ' என ஒரு சம்மந்தமே இல்லாத கடத்தல் சீன் முடிந்து மகளோடு வீட்டிற்கு சென்றனர் ருத்ரதேவனும் - தேவராகவனும். இதை எல்லாம் தூரத்தில் இருந்து ஒரு கருப்பு உருவம் பார்த்து கொண்டு தான் இருந்தது.
---
வீட்டின்னுள் மூவரும் நுழைய மகளை கண்ட ரதி வேகமாக சென்று அணைத்து கொண்டு " உனக்கு ஒன்னும் ஆகலையே பாப்பா " என்றாள்
நிலாவும் ' ஒன்னும் இல்லாம எனக்கு நான் நல்லா தான் இருக்கேன் ' என்றாள்
பின் பல்லவி, வீர் , ஆத்யா ( வீர் மனைவி ) என அனைவரும் அவள் நலமாக இருப்பதை அறிந்த பின் தான் நிம்மதி அடைந்தனர். அன்று இரவு தான் மீண்டும் அந்த வீடு பழைய மகிழ்ச்சியோடு காண பட்டது.
---
அனைவரையும் பற்றி....
45 வயதிலும் காட்டுக்கோப்பான உடலோடு என்றும் 30 வயது போல காட்சி அளிக்கும் ருத்ரதேவன் அவன் மனைவி ரதிமலரோடு இன்றும் காதலும் மோகமும் குறையாது வாழ்ந்து வருகிறான். இருவரும் சேர்ந்து ஆர். எம். குரூப்ஸ்யை நிர்வாகம் செய்து வருகின்றனர்.
மறுபுறம் தேவராகவனும் அவன் மனைவி ராகபல்லவியும் சேர்ந்து ஆர். எம். ஹாஸ்பிடல் பொறுப்பை ஏற்று ஏழை மக்களுக்கு இலவச மருத்துவம் அளித்து வருகின்றனர்.
ருத்ரவீர் ஆர். எம். ஹாஸ்பிடலில் இதய மருத்துவராக மக்களுக்கு சேவை செய்து வருகிறான். அவன் காதல் மனைவி ஆத்யா இதய மருத்துவர் அவனுக்கு எப்போதும் உறுதுணையாக இருக்க அவர்களின் அன்புக்கும் காதலுக்கும் பிரச்சனை இல்லாமல் சென்று கொண்டு உள்ளது.
கவிசூரியன் mba முடித்து விட்டு புதிதாக அவர்கள் ஆரம்பித்த கல்லூரி நிர்வாகத்தை ஏற்று நடத்தி வருகிறான். அங்கே தான் தூரிகை நிலாவும் mba முதலாம் ஆண்டு படித்து வருகிறாள்.
அந்த கல்லூரியில் கணக்கு விரிவுரையாளராக பணி புரியும் கார்த்திகேயனுக்கும் நிலாவிற்கும் தான் அடுத்த வாரம் திருமணம் முடிவு செய்து இருந்த நிலையில் ரெண்டு நாட்கள் மூன் அவளை யாரோ கடத்தி சென்றது அந்த குடும்பத்தை சோகத்தில் தள்ளியது. இப்போது மீண்டும் அவள் கிடைத்த பின் தான் அனைவரும் சந்தோசம் மற்றும் நிம்மதியாக உணர்ந்தனர்.
---
மறுநாள் காலை....
எந்த வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக அன்றைய காலை சூரியன் உதயம் ஆனது. ஆத்யா வீரோடு மருத்துவமனை சென்று விட தேவ் ராகவனோடு ஆபீஸ் சென்று இருந்தான். அப்போது நிலா வீட்டிற்கு வந்த விசியம் அறிந்து கார்த்திகேயன் மற்றும் அவனின் அம்மா கமலியும் அங்கே வந்தனர். அவர்களை வரவேற்று உபசரித்த பல்லவி மற்றும் ரதி இருவரையும் பார்த்து கொண்டு நிற்க கமலியோ ' எப்படி சொல்றதுன்னு தெரியலைங்க இந்த கல்யாணத்தை நிறுத்திடலாம் ' என கூற
ரதியோ ' ஏன் திடிர்னு இப்படி சொல்றிங்க ' என்றாள்
கமலியோ தயங்கி நிற்க கார்த்திகேயன் வேகமாக ' அதான் கல்யாணத்துக்கு முன்னாடி எவன் கூடவோ தொடர்புல இருந்து ஓடி போன உங்க பொண்ண கட்டிக்க எனக்கு விருப்பம் இல்ல ' என்றான்
அதை கேட்ட ரதி பதில் சொல்வதற்கு மூன் " ஏய்ய்ய்...... " என்ற கர்ஜனை குரல் அந்த இடத்தை நடுங்க வைத்தது. குரல் வந்த திசையை அனைவரும் பார்க்க அங்கே கண்களில் அனல் தெறிக்க.... அகன்ற புஜங்கள் ரெண்டும் விறைத்து கொண்டு அந்த வேட்டைக்கு செல்லும் ஐய்யனார் போல நின்றான் கவிசூரியன்.
ஆண் அவனோ இன்னும் கோபம் குறையாமல் ' இங்க பாரு உன்னோட படிப்புக்கு மரியாதை கொடுத்து தான் உன்ன சும்மா விடுறேன் இல்லனு வை என் தூரி பத்தி தப்பா பேசுனத்துக்கு உன்ன கொன்னு இருப்பேன், இனிமே என் கண்ணுல பட்ட அன்னக்கி தான் உனக்கு கடைசி நாள் ' என அவன் ஆளுமை குரலில் கர்ஜிக்க
அதில் அனைவரும் பயந்து நடுங்கி தான் நின்றனர் ஆனால் அப்போதும் அடங்காத அவன் ' என்ன மிஸ்டர் உங்க கள்ள காதலிய சொன்னதும் உங்களுக்கு கோபம் பொத்து கிட்டு வருதா ' என்றான்
இவ்வளவு நேரம் இதை எல்லாம் அமைதியாக அறையில் இருந்து கேட்டு கொண்டு இருந்த நிலா வேகமாக வெளியே வந்து அவன் கன்னத்தில் ஓங்கி அரைந்து ' யாரை பார்த்து என்ன சொன்ன நீ ஹான் நீ தான் டா சரியா சைக்கோ, பொம்பள பொறுக்கி வெளியே போட ' என கூற
ஒரு பெண் தன்னை அடித்து விட்டாள் என்பதில் அதிர்ந்த கார்த்திகேயனோ ' என்னையவே அடிச்சிட்டில இனி நீ எவன கல்யாணம் பண்றேன்னு நானும் பாக்குறேன் ' என்று கோபமாக கூறி அவன் அன்னையோடு வெளியே சென்று விட்டான்.
அவர்கள் வெளியே சென்றதும் சூர்யா ரதி அருகில் சென்று " ரதிமா எனக்கு நிலாவா கல்யாணம் பண்ணி வைப்பிங்களா " என்றான்
ரதியோ நிலாவையும் பல்லவியையும் பார்க்க பல்லவியோ ' உன் விருப்பம் ரதி, உன்ன விட அவனுக்கு யாரும் நல்ல வாழ்க்கை அமைச்சி தர முடியாது ' என்றாள்
நிலாவோ வேகமாக அவள் அறைக்கு சென்று விட ரதியும் சூர்யாவை பார்த்து ' நான் தேவ் கிட்ட கேட்டு சொல்றேன் சூர்யா ' என்றாள்
---
அன்று இரவு.....
ஹால் சோபாவில் தேவ், ராகவன், வீர், பல்லவி, ரதி, ஆத்யா, நிலா அனைவரும் ஒன்றாக அமர்ந்து இருக்க சூர்யா மட்டும் வெளியே சென்று இருந்தான். பல்லவியோ தேவ்வை பார்த்து காலை நடந்த சம்பவங்களை கூற அவனோ இறுகிய முகத்தோடு வீரை பார்த்து ' உன் கிட்ட சொன்ன வேலையை ஒழுங்கா செய்ய மாட்டியா வீர் பாரு அவன் வீட்டுக்கு வந்து எப்படி பேசிட்டு போய் இருக்கான் ' என்றான்
வீரோ ' அப்பா நான் விசாரிச்ச வர அவன் நல்ல பையன் தான் எல்லாரும் சொன்னாங்க ஆனா உளுக்குள்ள இவ்வளவு கேவலமானவனா இருப்பான்னு நான் நினைக்கல ' என்றான்
ஆத்யாவோ ' ப்பா நான் ஒன்னு சொல்லலாமா ' என்றாள்
தேவ்வோ ' சொல்லு குட்டிமா எத பத்தி சொல்ல போற ' என வினவ
ஆத்யாவோ ' என் நாம சூர்யாக்கு நிலாவா கல்யாணம் பண்ணி வைக்க கூடாது ' என்றாள்
தேவ்வோ ' பண்ணலாம் குட்டிமா ஆனா அதுக்கு சம்மந்த பட்ட ரெண்டு பெரும் ஓகே சொல்லணுமே, இதுல நாம சொல்ல ஒன்னும் இல்ல ' என்றான்
வீரோ ' நிலாவை பார்த்து நீ எதாவது சொல்லணும்னு நினைக்கிறிய பாப்பா ' என்றான்.
அவள் அமைதியாக இருக்க ராகவன் அவளை பார்த்து ' நீ கல்யாணம் பண்ணிக்க போறியா இல்ல பிசினஸ் பண்ண போறியா பாப்பா ' என்றான்
அவளோ ' நான் காலேஜ் மேனேஜ்மென்ட் பாத்துக்குறேன் மாமா எனக்கு கொஞ்சம் சேஞ்சு வேணும் ' என்றாள்
தேவ்வோ ' சரி நீ போ ஆனா சூர்யாக்கு என்ன பதில் சொல்லணும் உனக்கு அவன பிடிச்சி இருக்கா இல்ல இப்படியே இருக்க போறியா ' என்றான்
அவனின் அழுத்தமான கேள்வியில் இப்போதே பதில் வேண்டும் என்ற பொருள் இருக்க நிலாவோ " நான் சூர்யாவையே கல்யாணம் பண்ணிக்குறேன் அப்பா ஆனா கல்யாணத்துக்கு அப்பறம் நாங்க கொஞ்ச நாள் தனியா இருக்கோம் எனக்கும் கொஞ்சம் சேஞ்சு வேணும் " என்றாள்
அனைவருக்கும் அவள் பதில் மகிழ்ச்சியை தந்தாலும் ராகவன், தேவ் ஒன்றாக " இங்க பாரு பாப்பா நீ எங்களுக்கு ஒரே பொண்ணு உனக்கு பிடிக்காத எதையும் இங்க யாரும் செய்ய மாட்டோம் அண்ட் உனக்கு சூர்யா கூட வாழ பிடிக்கலைன்னா திரும்ப இங்கயே வந்துரு எங்க கடைசி மூச்சு இருக்க வர உன்ன நாங்க பார்த்துப்போம் " என்றனர்.
ரதியும் " உனக்கு பிடிச்ச மட்டும் கல்யாணம் பண்ணிக்கோ பாப்பா நாங்க யாரும் உன்ன போர்ஸ் பண்ண மாட்டோம் " என்றாள்
பல்லவியோ ' உன் மனசுக்கு எது தோணுது அதையே பண்ணு நாங்க எல்லாம் சப்போர்ட் பண்றோம் ' என கூற
நிலாவோ ' நான் தெளிவான முடிவோட சொல்றேன் நான் சூர்யாவை கல்யாணம் பண்ணிக்குறேன் அண்ட் காலேஜ் மேனேஜ்மென்ட் பண்ண போறேன் என்றாள்
தொடரும்....

Author: Nithya
Article Title: ரதி 🩵 32
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.