Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Administrator
Staff member
Messages
204
Reaction score
203
Points
63
அத்தியாயம் - 1

ஆன்ட்டி ஹீரோ கதைக்களம்

ஓர் பெரிய புகழ் பெற்ற மைதானத்தில் உலகளவில் புகழ் பெற்ற கார் ரேஸ் நடக்கவிருக்க. மைதானம் சுற்றியும் கூட்டம் கூடி அவ்விடமே ஆரவாரமாக இருந்தது.

தனித்தனி குழுக்களாக நின்று அவரவருக்களுக்கு பிடித்தமான பெயர்கள் தாங்கிய பலகைகளை ஆட்டிய வன்னம் உற்சாகமாக குதித்து கூச்சலிட்டும், பிடித்தமானவர்களின் முகங்களை மாஸ்க்குகளாக முகத்தில் அணிந்து கொண்டும், பிடித்தமானவர்களின் பெயரில் பந்தயம் கட்டி கொண்டும் மக்கள் கூட்டம் என்பதை விட, இளைஞர் இளைங்கியர் கூட்டம் தான் சந்தையை போல் நிரம்பி அலை மோதியது.

அந்த கூட்டத்தில் முக்கால்வாசி பேரும் ஒருவனின் பெயரை மட்டுமே சொல்லி கூச்சலிட்டு கத்திக் கொண்டு இருந்தனர். அதிலும் பெண்கள் கூட்டம் சொல்லவா வேண்டும். மேலும் அந்த ஒருவனை எப்போதடா பார்ப்போம் என்று ஒவ்வொரு வயது பெண்களின் கண்களும் ஏங்கி தவிப்பதை, சுற்றி இருந்த சில இளைஞர் பட்டாளம் பொறாமையோடு கண்டுக் கொண்டே அவ்விடம் விட்டு நகர்ந்தனர்.

அவன் ஒருவனின் பெயரை ஏதோ பிரபலமான பிடித்த நடிகரின் பெயரை சொல்லி கூச்சலிடுவதை போல அத்தனை மகிழ்ச்சியாக கத்தி கத்தி சொல்லி சிரித்துக் கொள்வதை, எதிரணியில் இருப்பவர்கள மிகவும் கடுமையான முகத்துடன் பார்த்தவர்களாக,

"ஹெலோ ரொம்ப கத்தி சந்தோஷ படவேணா, ஏன்னா இந்த தடவ ஜெயிக்க போறது எங்க தல தான்.. உங்க ஆளு இன்னைக்கு உங்க எல்லாருக்கும் பட்டைய தீட்டும் போதும், இதேமாதிரி கத்தி என்ஜாய் பண்ணுங்க" நக்கலாக கூறி ஏளனமாக சிரித்துக்கொள்ள,

"அய்ய, தோ வன்டாரு டா என் பிஜிலி பட்டாசு.. யாரு யாருக்கு பட்டய தீட்ற்றதுன்னு இன்னும் செத்த நேரத்துல தெரிஞ்சிடும் நீ மூடிட்டு போ.. எப்பவும் எங்க AK தான் மாஸ், உங்க தறுதலை ஒரு சோமாஸ்"
இவர்களும் அவர்கள் பங்குங்கு காலை வாரி ஹய் ஃபை கொடுத்து சிரிக்க, எதிர் அணிக்கு சுர்ரென கோவம் ஏறியது.

"ஏய்ய்.. யாரப் பாத்து தறுதலைங்கிறீங்க, இன்னைக்கு தெரிஞ்சிடும் யார் ஜெயிக்கிறது, யார் தோக்குறதுன்னு.."

"ஹான் ஹான்.. பாப்போம் பாப்போம்" என்றவர்கள் AK.. AK.. என்று விடாமல் கரகோஷம் எழுப்பி கொண்டிருக்க.
அவர்களும் தன் பங்குக்கு தல தல என்று கத்திக் கொண்டு இருந்தனர்.

அட எனக்கு தெரிஞ்சி, தலையும் AK வும் ஒரே ஆள் தானே, இவனுங்க என்ன தனி தனி ஆளை ஏலம் விட்டு சண்டை போட்டுக்குறானுங்க..
யாரு சொன்னது, நம்ம கதைல ரெண்டு பேரும் வேற வேற ஆளு தான்.

** ** **

"ஏய்ய்..."என்ற சத்தத்தில் பதறி போய் கையில் வைத்திருந்த பாத்திரத்தை தவற விட்டு அதை எடுத்துக் கூட வைக்க நேரமில்லாமல், வேர்த்து விறுவிறுத்து ஓடி வந்து தன் முன்னால் நிற்க்கும் அவன் மித்து பேபியை, இன்றும் கண்கள் சொக்க காதலோடு பார்த்தான் ஆதி.

புடவை முந்தானையை எடுத்து முகத்தில் முத்து முத்தாய் திறளும் வேர்வை துளிகளை துடைத்தபடியே, "என்னங்க எதுக்கு கூப்ட்டீங்க" பதற்றத்தோடு கேட்டவளை வயதை மறந்து இடை வளைத்து இழுத்து அவன் அருகில் நிறுத்த, கூச்சத்தில் நெளிந்த மித்ரா,

"ம்ச்.. நீங்க கூப்பிட்டீங்கன்னு பயந்து போய் ஓடி வந்தேன் பாருங்க என்னை சொல்லணும், எதுக்கு கூப்பிட்டீங்க.." கணவனின் இறுக்கமான கை வளைவில் கூசி நின்றாள்.

இளமை குறையாத அழகோடு இன்னும் தன் கை பட்டால் சிவந்து கூசி நிற்கும் மனைவியை, முதுமை மறந்து துள்ளலான காதல் பார்வையை வீசிய ஆதி, இடையில் கைக் கொடுத்து தூக்கி சென்று மேஜையில் அவளை அமர்த்தியவன், அவள் பின்னலிட்டு போட்டிருந்த கொண்டையை கழட்டி நரைமுடி இல்லாத சில்க்கியான அவள் பட்டுக் கூந்தலை விரித்து விட்டு, அதில் கிறக்கமாக வாசம் பிடித்தான்.

நிலைக் கண்ணாடி வழியே மனைவியின் பின் புரமும் தனது முகமும் தெரிவதை பார்த்தவனாக, "மித்து பேபி.. அது எப்டி உனக்கு மட்டும் வயசே ஆகாம, உன் உச்சி தொடங்கி பாதம் வரை அப்டியே ஷைன் போகாம இருக்கு" அவளின் காதருகில் கிசுகிசுப்பாக கேட்ட விதத்தில் வெட்கம்க் கொண்டு கன்னங்கள் சிவந்து போனது மித்ராக்கு.

"என்னங்க நீங்க போங்க.. ஏதோ முக்கியமா கூப்பிட்டீங்கனு அறக்க பறக்க ஓடி வந்தா, இப்டி பேசிட்டு இருக்கீங்க.. நமக்கு ரெண்டு பசங்க பொறந்து இப்ப பேத்தியே இருக்கா நியாபகம் இருக்கட்டும்" என்றாள் அவன் மூக்கை பிடித்து செல்லமாக ஆட்டி.

"வாடைக் காற்றுக்கு வயசாச்சு.. வாழும் பூமிக்கு வயசாச்சு.. கோடி யுகம் போனாலென்ன, காதலுக்கு எப்போதும் வயசாகாது.." அவளின் கண் பார்த்து காதல் பாட்டு பாடி, "கடைசி வரை உன்கிட்ட இப்டியே தான் டி நான் இருப்பேன்.. ஆனா நீதான் இப்பலாம் என்னை முன்னாடி மாதிரி கவனிக்கிறதே இல்லை..

பிள்ளைங்க முக்கியம் தான், அதை விட அதிகமா நீ எனக்கு முக்கியம் மித்து பேபி.." அவன் காதல் வசனம் பேசிக் கொண்டே போக, காலம் கடந்தும் குறையாதக் கணவனின் காதலில் கசிந்துருகி போனவளுக்கு, தாயாக பிள்ளைகளின் நினைவுகள் வரதானே செய்யும்!

கடிகாரத்தில் நேரம் மாலை நெருங்குவதை பார்த்த மித்ரா. "ஏங்க பாதி சமயலோட போட்டது போட்டபடி ஓடி வந்துட்டேன்.. ஊர்ல இருந்து ஆரு அதன்யாவை அழைச்சிட்டு வந்துருவா, வந்ததும் வராததுமா பாட்டி மில்க்க்ஷேக் எங்கேன்னுக் கேட்டு அடம் பண்ணுவா..
அப்புறம் ரெண்டு வருஷம் கழிச்சி நம்ம பையன் வேற வராங்க, அவனுக்கு பிடிச்ச தேங்காய் பால் சாதம் வேற செய்யணும்.. அதை மட்டும் தான் அவன் ஆசையா விரும்பி சாப்பிடுவான்" அவள் பாட்டுக்கு பேசிக் கொண்டே போக.

"ஏய்ய்... நிறுத்து டி.." என்ற கர்ஜனையில் தான், தன்னை மீறி அவனிடம் பிள்ளைகளை பற்றி பேசி அவனை கடுப்பேத்தி விட்டது நியாபகம் வர, என்ன செய்யப் போறானோ என்ற அச்சத்தோடு ஆதியை பார்த்தாள்.

"எத்தனை முறை சொல்றது, என்னை தவிர வேற யாருக்கும் நீ பர்ஸ்ட் பிரயாரிட்டி கொடுக்கக் கூடாதுன்னு.. ஆனா நீ என்ன டி பண்ணிட்டு இருக்க, பொண்ணுன்ற பேத்தின்ற.. எனக்கு எதிரா ஒருத்தன பெத்து தடிமாடு கணக்கா வளத்து வச்சிருக்கியே உன் அருமை புள்ள, அவனை பத்தி பேசி என்னை டென்ஷன் பண்ணாதேன்னு சொன்னா கேக்குறியா"

காட்டு கத்தலிட்டு அவளை முறைத்துத் தள்ள, இன்றும் தன்னவளை பெற்ற பிள்ளைகளுக்கே விட்டுக் கொடுக்காமல் மனைவி தனக்கு மட்டும் தான் சொந்தம் என்ற எண்ணத்தில் அவளிடம் சீறிக் கொண்டு இருந்தவனை பார்த்து, மித்ராக்கு சிரிப்பும் செல்லக் கோபமும் சேர்ந்தே வந்தது.

இருந்தும் அவன் கோவத்தை குறைக்க அவள் கண்களாலே மன்னிப்பு வேண்டி இறைஞ்ச. அப்போதும் கோவம் குறையாமல் நின்ற கணவனை கண்டு, வேறு வழி இல்லாமல் இறுக அணைத்துக் கொள்ள, இப்போது அவன் முகத்தில் க்ரூதப் புன்னகை. (வயசாகியும் என்ன ஒரு வில்லத்தனம் அதுவும் பெத்த பிள்ளைங்க கிட்ட, கேடி ஆதி நீ..)

பிள்ளைகள் பிறந்ததில் இருந்தே இதே பிரச்சனைகள் தான் இருவருக்கும். அவன் முன்பு சொன்னதை போலவே இன்று வரையிலும் பிள்ளைகளுக்கு கூட தன் மனைவியை விட்டுக் கொடுக்காமல் வைத்திருக்கிறான் ஆதி. இல்லை அவள் மேல் கோவம் கொண்டு கத்தினால் தன்னால் வழிக்கு வந்து விடுவாள் அவன் காதல் மனையாள்.

இன்றலவும் அவன் மேல் பயம் எந்த அளவு குறையாமல் இருக்கிறதோ, அதே அளவுக்கு காதலும் குறையவில்லை மித்ராக்கு.

ஆதி பேச்சிக்கு மறு பேச்சி பேசினால் அவனை சமாதானம் செய்வதற்க்கு பதிலாக, ஒரு பெரிய கனமான மலையையே தூக்கி விடலாம், அந்த அளவுக்கு மிகவும் மோசமாக கோவத்தைக் காட்டுவான் அவளிடம். ஆனால் அதை விட அதிகமாக மித்ரா மனதை அறிந்து அவளுக்காக எத்தனை தூரம் இறங்கி வந்துள்ளான் என்றது அவளுக்கு தானே தெரியும்.

மனைவியின் இறுகிய அணைப்பில் சற்று கோவம் குறைந்தவன் "மித்து பேபி.. அந்த ராஸ்கல்க்கு மட்டும் தான் பிடிச்சதை செஞ்சி தருவியா" என்றான் ஏக்கமாக.

"ஏன் நீங்க கேட்டு நான் என்னங்க செய்யாம விட்டுருக்கேன், என்ன வேணும் என் கோவக்கார புருஷனுக்கு" அவன் மார்பில் சாய்ந்து இவளும் செல்லம் கொஞ்சினாள்.

குறும்பு மின்னும் கண்களோடு அவளைக் கண்டு சிரிப்பை அடக்கியபடி "நீதான் டி வேணும்" என்றவனை வெட்கம் மறைத்து முறைத்த மித்ரா,

"ச்சீ.. அதெல்லாம் எதுவும் இல்ல.. முதல் பார்ட்லே உங்க எக்ஸ்ட்ரீம் லெவல் ரொமான்ஸை பாத்து எல்லாரும் ஷையாககிட்டாங்க.. இனிமே உங்க வேலை எல்லாம் பொறுப்பான குடும்பத் தலைவரா நம்ம பசங்களை வழி நடத்துறது மட்டும் தான்.." அப்டின்னு மித்ரா சொன்னா காதல் சண்டை முத்தி போய் அவளுக்கு தான் சேதாரம், பாவம் நமக்கு ஏன் வம்பு. ஜாலியா இருக்கட்டும்.

** ** **

Ak என்ற பெயரைக் கூச்சலிடும் சத்தங்கள் காதைக் கிழிக்க, பல வண்ண ஸ்போட்ஸ் கார்கள் நொடிக்கு ஒரு கிலோமீட்டர் வேகம்கொண்டு சீறிப் பாய்ந்தன அந்த மைதானத்தில்.
பல கார்கள் முன்னிலையில் இருந்த நேரம், அதை விட அதிகமாக காற்றைக் கிழிக்கும் வேகத்துடன் புயலை போல சீறிப் பாய்ந்து வந்துக் கொண்டு இருந்தது ஆத்விக் கிருஷ்ணன் ஸ்போட்ஸ் கார்.

அவன் கார் அனைத்து கார்களையும் தாண்டி முந்திக் கொண்டு முன்னிலையில் சீறி வருவதைக் கண்ட ரசிகர் பட்டாலம், மேலும் ஆரவாரத்தோடு கூச்சலிட்டுக் கத்திட, அவன் பின்னால் வெறிக் கொண்டு காரை ஓட்டி வரும் தீபக் மகேந்திரன், தனக்கு முன்னே பட்டையை கிளப்பி போகும் ஆத்வியை, தான் ஜெயிக்கிறோமோ இல்லையோ அவன் தோற்க வேண்டும் என்ற எண்ணத்தில் அடித்து பிடித்து ஆத்வி காரை ஓவர்டேக் செய்தான் தீபக்.

இரு கார்களும் ஒரே நேர்கோட்டில் இமைக்கும் நேரத்தில் பல மையில் தூரம் தாண்டியதும், ஆத்வி காரை மோசமாக இடித்து உராய்ந்தபடியே வந்தது தீபகின் கார். ஆனாலும் திறமையாக செயல்பட்ட ஆத்வி, காரை ரைஸ் செய்து சற்று பின் வாங்கி முன்னால் செல்ல, மீண்டும் வெறியாக அவன் காரை இடித்து தள்ள வந்த தீபக்கை, கண்ணாடி வழியாகக் கண்டு ஒரு ஏலனப்புன்னகை சிந்திய ஆத்வி, வெற்றிக் கோட்டுக்கு சில மையில் தூரங்களே உள்ள நிலையில், இடிக்க வந்த தீபக் காரை ரங்கராட்டினம் சுற்ற வைத்து வெற்றி பெற்றான் ஆத்விக்.

ஒரு நகம் கூட தெரியாத வகையில் உடுத்தி இருந்த ஸ்போட்ஸ் ட்ரெஸ் மற்றும் ஹெல்மெட்டில் ஒளிந்திருந்த அவன் முகத்தை பார்க்க பெண்கள் கூட்டம் ஆவலோடு கத்தி குதிப்பதை பார்த்தபடியே, கார் கதவை திறந்துக் கொண்டு காலை சுழட்டி தரையில் வைத்து தலையை வெளி நீட்டி ஸ்டைலாக இறங்கியவனாக,

தனது ரசிகர்கள் அனைவருக்கும் இரு கைகளையும் தூக்கி ஆட்டிக் காட்டிய ஆத்வி, மெதுவாக அவன் தலை கவசத்தை கழட்டி தலையை சிலுப்பி அனைவரையும் பார்த்து ஒரு மந்தகாச புன்னகையை உதிர்த்து, இருவிரலால் பிளைன் கிஸ் கொடுத்து ஒற்றை கண்ணை அடித்த அடியில் பெண்கள் கூட்டம் சொக்கிப் போனது என்றால்,
ஆண்கள்க் கூட்டம் ஆத்வியின் ஆதிக்கமான அழகில் மெய் மறந்து போயினர்.

Ak.. Ak.. என சத்தமாக கத்திக் கொண்டே எதிரணியை பார்த்து "பாத்தியா எங்க Ak தான் மாஸ்னு சொன்னோமே கேட்டியா.. உங்க தலை சாரி தறுதலை சோமாஸ் அந்த மூலைல முக்கிக்கிட்டு இருக்கான் போய் தூக்கி விட்டு சேதாரம் ஆன இடத்துல கட்டு போட்டு ஆறுதல் சொல்லுங்க" என்று நக்கலாக கிண்டல் செய்ய, முகம் கருத்த நிலையில் எரிச்சலோடு அவ்விடம் விட்டு நகர்ந்தனர் தீபக்கின் ரசிகர்க் கூட்டம்.

ஹெல்மெட்டை குழந்தை போல இடுப்பில் வைத்துக் கொண்டு காற்றில் ஆடும் கேசத்தை மறு கரத்தால் கோதியபடி நடந்தவன் தோற்றம், அன்னையின் சாந்தமான முக ஜாடையும், தந்தையின் கம்பீரமான நடையும் சேர்ந்து வசீரிக்கும் ஆணழகனாக காட்டியது.

"டேய் ஆத்வி நீ ரேஸ்ல கலந்துகிட்டது மட்டும் உன் அப்பாக்கு தெரிஞ்சிது அந்த மனுஷன் என்ன பண்ணுவாருன்னே தெரியாது.. ஏன் டா அவரு சொல்றத எதையும் கேக்காம உங்க அப்பாக்கு எதிரா ஏட்டிக்கு போட்டியா அட்டகாசம் பண்ற.. இதுல நீ பண்ற ஒவ்வொரு வில்லங்கத்துக்கும் அந்த டெரர் ஆபிசர், ஒன்னும் தெரியாத அப்பாவிப் புள்ள என்னைய தான் போட்டு கத்துவாரு"

பாவமாக அவன் பின்னோடு புலம்பி வந்த நண்பன் அசோக்கை திரும்பி பார்த்து புன்னகைத்த ஆத்வி,

"எனக்கு ஒன்னு பிடிச்சா அதை உடனே செஞ்சிடணும், எனக்கு பிடிச்ச ஒரு விஷயத்தை யாருக்காகவும் என்னால விட்டுக் கொடுக்க முடியாது அசோக்.. இதுல அப்பா அம்மானு இப்டி யாருக்காகவும் செண்டிமெண்ட் சீன் எல்லாம் என் பாதைல கிடையாது..

ஒன்னு செய்யணும்னு நான் பிக்ஸ் பண்ணிட்டேன்னா அது எப்பேர்ப்பட்ட விஷயமா இருந்தாலும் கண்டிப்பா செஞ்சே தீருவேன், யார் தடுத்தாலும் சரி.. மை லைப், மை ரூல்.. ஐ வில் நாட் டூ இட் ஃபார் எனிஒன்" என்றவன் குரலில் அத்தனை ஆணவம் உறுதி, வெற்றிக் கோப்பயை கூட நின்று வாங்க நேரமில்லாமல் அவன் ரோல்ஸ் ராய்ஸில் ஏறி பறந்து விட்டான்.

ஆத்விக் வெற்றிப் பெற்ற பரிசை வாங்கிக் கொண்டு டாக்ஸி பிடித்து வந்த அசோக்,

"இவனுக்கு எப்பவும் இதே வேலையா போச்சி வரும் போது அழைச்சிட்டு வரவனுக்கு, போகும் போது பொறுப்பா இருந்து கூடவே கூட்டிட்டுப் போகணும்னு அறிவிருக்கா இடியட்.." என புலம்பிய வாறு தான் தங்கி இருக்கும் அறைக்கு வந்தவன், அங்கிருந்த பொட்டியில் ஆத்வி இதற்க்கு முன்னர் வாங்கிய பரிசுக் கோப்பைகளில் ஒன்றாக இதையும் அதனுடன் வைத்தான் அசோக்.

புயல் வீசும்.
 
Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 1
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
New member
Messages
2
Reaction score
1
Points
3

Ithulayum part 1 irukka....aathi mithra part verayaa...ithu second part ah🙃
 
Top