• வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
Administrator
Staff member
Messages
264
Reaction score
224
Points
43
அத்தியாயம் - 1

குளத்தூர் கிராம் (கிராமத்து கதை)

ஒரு காலத்தில் இயற்கைக்கு பஞ்சமின்றி பச்சைபசேரென்று கண்ணுக்கும் மனதுக்கும் குளிர்ச்சியாக பறந்து விரிந்து காணப்பட்ட இக்கிராமத்தின் பெருமைகள் ஏராளம்.

ஆனால் தற்போது மக்கள் செய்யும் பாவக்கணக்கை எல்லாம் தன் மேல் சுமந்துகொண்டு நீர்வளம் மண்வளம் அனைத்தையும் தனக்குள் புதைத்துக்கொண்டு, பொன் விளையும் பூமி இன்று வறண்ட நிலமாக மாறி காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.

என்ன தான் தற்போதைய காலக்கட்டத்தில் டெக்னாலஜி மூலம் அனைத்தும் வளர்ந்து விட்டாலும், இந்த ஊரில் உள்ள மக்களின் மனநிலை அனைத்தும் மாறாமல் இன்னும் அதல பாதாலத்து பழைய பஞ்சாங்கமாவே தான் இருக்கிறது.

கிராமத்திலேயே பெரிய வீடு நம்ம நாட்டாமை கண்ணாயுதபாணி வீடுதான். அந்தக்காலத்து கட்டமைப்புடன் முன்னே ஒரு ஐந்தடிக்கு அழகுக்காக சிவப்பு ஓடுகள் போடப்பட்டு அதன் பிறகு பின்னாலெல்லாம் உறுதியான தளம் போடப்பட்டிருக்கும்.

ஊருக்கு தான் அவர் தீர்ப்பு வழங்கும் நியாயமான நாட்டாமை. வீட்டினில், குடும்ப பெண்களை கூட மதிக்கத் தெரியாதவர். பெண்கள் என்றாலே ஆணின் அடிமைவாதிகள் தான், அடுப்பூதி சோறு பொங்க தான் லாயக்கி, கட்டியவள் கணவன் ஆசைக்கு இணங்க எந்த நேரத்திலும் அவனுக்கு மறுப்பு கூறாமல் முந்தி விரிக்க வேண்டும், என்றெண்ணும் ஆணவமிக்க மனிதர்.

ஆசை நாயகியாக இருந்து விட்டால் இன்னும் அவள் நிலை மோசம். அடிமையை விட கேவலமான பாவப்பட்டப் பிறவி அவளாக தான் இருக்க முடியும்.

அவரே அப்படி என்றால் இன்னும் அவர் வீட்டில் உள்ள ஆண்களின் குணமும் எண்ணங்களும் எப்படியாக இருக்கும் என்பதனை கதையின் போக்கில் தெரிந்துகொள்ளுங்கள்.

"ஐயா.."

"ஐயா.."

அந்த பெரிய வீட்டு வாயிலின் வெளியே அந்த ஊர்க்காரரின் அழைப்பு சத்தம் வெகு நேரமாக கேட்டும் உள்ளிருந்து யாரும் எட்டிக் கூட பார்க்கவில்லை. ஆனாலும் அவரது இறைஞ்சும் குரலும் நிறுத்தியபாடில்லை.

அடுப்பாங்கரையின் பக்கத்தில் உள்ள சிறிய மறைவில் அந்த வீட்டின் வேலைக்காரியோடு சல்லாபம் செய்துகொண்டிருந்தான் கண்ணாயுதபாணியின் இளைய மகன் ஆனந்தபாலன்.

"ச்ச.. கருமம் புடிச்சவைங்க நேரங்கட்டநேரத்துலதே வெளிய நின்னு ஏலம் போடுவாய்ங்க"

தேக்குமரத்திலான பெரிய கதவு திறந்திருந்தும் யாரும் வெளியே சென்று பார்க்காத கடுப்பில், அந்த பெண்ணின் மீது இயங்கிக் கொண்டிருந்தவன் சட்டென அவளை உதறித்தள்ளி விட்டு எழுந்திட, தானும் சேலையை வாரி சுருட்டிக் கொண்டு மனவேதனையுடம் கண்ணீரை துடைத்தபடியே மூலையில் அமர்ந்து கொண்டாள்.

"ஏய் இந்தாரு டி. போய்ட்டு அந்தாளுகிட்ட என்னா விசயம்னு கேட்டு வரேன். அதுக்குள்ள எந்திரிச்சி ஓடப்பாத்த கால ரெண்டையும் ஒட்டுக்கா நறுக்கிப்புடுவ. எங்கப்பங்கிட்ட உன் ஆத்தாக்காரிக்கு ஒடம்புக்கு முடியலைன்னு அவசர தேவைக்கு பணம் வாங்குனது நியாபகம் இருக்குதுள்ள"

ஆனந்தன் அதிகாரமாய் மிரட்டிய தோரணையில் வேதனை மொத்தமும் எச்சிலோடு சேர்த்து தொண்டைக்குள் விழுங்கியவளாக, "இருக்குதுங்கைய்யா" என்றாள் தன் தலைவிதியை நொந்துகொண்டு.

"ம்ம்.. அது.. அந்த கடன் மொத்தமும் வட்டியோட திருப்பி என் கைக்கு வர வரைக்கும் நான் சொன்ன விசயமும் எப்பவும் உன் நியாபகத்துல இருக்கனும்"

நாக்கை உள்மடித்து சொடக்கிட்டு மிரட்டியவன் மோகம் வடியாத எரிச்சலுடன் வேட்டியை தேடி எடுத்து கட்டினான் ஆனந்தபாலன்.

நன்று வாட்டசாட்டமாக மாநிறத்தில் கட்டிளம் காலை போல் பார்க்க நன்றாக தான் இருப்பான், வயது 38 இன்னும் திருமணம் முடித்துக்கொள்ளும் எண்ணம் இல்லை. கேட்டால் திருமணம் ஆனால் சுதந்திரமும் சந்தோசமும் ஒருசேர பரிப்போய் விடுமாம். மனைவி பிள்ளைக்குட்டிகள் என்று அவர்களை பார்த்துக்கொள்ளவே காலம் ஓடி விட்டால், தனக்கு பிடித்தமான குடி கூத்தியால் என வாழ்க்கையை எப்படி வாழ்வது என்று வீட்டில் பெரும் வாக்குவாதம் இப்போது வரை சென்றுகொண்டு தான் இருக்கிறது.

கண்ணாயிதபாணியும் எவ்வளவோ சக்கரையாக பேசிப்பார்த்து விட்டார்.

ஆனா இந்த மாப்பிள,

"எதுக்கு பொண்டாட்டி என்ன சுத்தி வப்பாட்டி.. எக்கச்சக்கமாகி போச்சே கணக்கு..
பள்ளிக்கூட போகையில பல்லப்பட்டி ஓடையில.. கோக்குமாக்கு ஆகி போச்சு எனக்கு..
இத குத்தமினு சொன்னா அவன் கிறுக்கு.."

"அவன் கிறுக்குஉஉஉஉ.." நாசுக்காக அவனது அப்பனையும் பாடலின் மூலம் கிறுக்கு என்று முதுகின் பின்னால் விரலை ஆட்டி கத்தியபடியே செல்பவனை பற்களை கடித்துக் கொண்டு மட்டுமே பார்க்க முடியும் அவரால்.

சில நிமிடங்கள் கழித்த பின்னே கடுப்போடு வெளியே வந்த ஆனந்தபாலனை கண்ட அந்த பெரியவர்,

"தம்பி நாட்டாம ஐயா இருக்காவளா?" பணிவுடன் கேட்டிட, அவரை மேலும் கீழும் ஒரு மார்க்கமாக பார்த்தான் அவன்.

"இருந்திருந்தா ந்நா என்னா மயித்துக்கு வேலைய பாதியோட நிறுத்திப்புட்டு வரப்போறே. சரி என்னா விசயம் ஸ்ரையிட்டா மேட்ருக்குவாய்யா" மரியாதையின்றி நக்கலாக கேட்டு அவன் வேட்டியை மடித்துக் கட்ட, அந்த பெரியவர் தனது சூழ்நிலையை இவனிடம் சொல்ல முடியாமல் திணறிப் போனார்.

"யோவ் பெருசு.. உள்ள முக்கியமான வேலைய இருந்தவன கூட்டு நிக்கவச்சிப்புட்டு நீயி என்னத்தய்யா யோசிச்சிட்டு இருக்க.."

அவரை திமிராக அதட்டும் வேளையில் சர்ரென வழுக்கி நின்ற ஜீப் சத்தம் கேட்டதும் இருவரது பார்வையும் அப்பக்கம் திரும்பியது. ஆனால் ஆனந்தனின் பார்வையில் தான் சிறு அலட்சியம்.

கஞ்சி போட்டு சுருக்கம் இல்லாது ஐயன் செய்த வெள்ளை வேஷ்டியில் தோளில் துண்டுடன், 40 வயதிலும் இளமை குறையாது முறுக்கி விட்ட மீசையில் கட்டுமஸ்து மேனி அதிர மிடுக்காக ஜீப்பை விட்டு இறங்கி வந்தான் அமரதேவன்.

அவன் பின்னாலே ஜீப்பில் இருந்து இறங்கி, கையில் பூஜை கூடையுடன், தலைநிறைய பூவும் மஞ்சள் வண்ண பட்டும் கட்டி, நகைக்கு எந்த ஒரு பஞ்சமும் இல்லாமல், மஞ்சள் பூசிய அழகு வதனம் பளிச்சிட, 36 வயதிலும் நளினம் குறையாது சாந்த சுருபிணியாக லட்சணமாக நடந்து வந்த, அமரதேவனின் மனைவி வேதநாயகியும் தங்கள் வீட்டின் வாயிலில் நின்றிருந்தவர்களை பார்த்தபடியே எதுவும் பேசாமல் தலைகுனிந்து கொண்டு உள்ளே சென்று விட்டாள்.

தேவனை பார்த்ததும் ஏதோ கடவுகளை நேரில் பார்த்தது போல, பெரிய தம்பி என பதட்டமாக அவனிடம் வந்த பெரியவரை தோள் பிடித்து நிறுத்தி,

"என்ன விசயம் தங்கராசு பதட்டப்படாம சொல்லுங்க" என்றான் அதிகாரம் குரலை சற்றே பணிய வைத்து.

தம்பிக்காரன் இவ்வளவு நேரம் பேசியதற்கும் அண்ணன்கரான் இப்போது பேசும் பணிவான வார்த்தையும் நினைத்து யாரும் தப்பு கணக்கு போட்டுதீய இவன் நல்லவைன் அவன் கெட்டவைனு. ரெண்டு பயலுகளும் பொல்லாத கேடிங்கதே வெவ்வேறு விதத்துல குணத்துல. பொறுத்திருந்து பாருங்க.

"தம்பி எம்மவ காலேஜி படிக்க ஆசப்பட்டுச்சேன்னு, சரி நாமதே படிக்காத தற்குறியா போய்ட்டோம் ஒத்த பிள்ள தானே அது ஆசப்பட்ட படிப்ப படிக்கட்டும்னு கடனஒடன வாங்கி டவுனுல இருக்குற காலேஜிக்கு அனுப்பி வச்சேன்" அவர் கண்ணீரோடு சொல்லிக்கொண்டு இருக்க,

"ஆமா பெருசு உன் மவப் பேரு என்ன, கோகிலாவா கோதாவரியா?" இடையில் குறுகிட்டு சந்தேகத்தை கேட்ட ஆனந்தனை, தேவன் முறைத்த முறைப்பில் "ம்க்கும்.. இந்த மொறப்புக்கு ஒன்னியும் கொறச்ச இல்ல" முணுமுணுப்போடு உதட்டை முறுக்கிக் கொண்டான்.

"நீய மேல சொல்லுங்க"

"போன எடத்துல ஒரு பயலோட காதலாகி அவ மனச கலச்சி, கடைசில இப்ப வயித்த தள்ளிக்கிட்டு வந்து நிக்கிறா தம்பி. அந்த பயல தேடிபோயி நியாயம் கேட்டா இந்த பொண்ண ந்நா பாத்தது கூட இல்ல வீணா எம்மேல பழிய போடாதீயனு அப்பட்டமா பொய் சொல்லுதா. இப்ப என் மவ வாழ்க்கையே அந்திரத்துல ஊசலாடுது தம்பி. இந்த விசயம் மட்டு ஊருள்ள தெரிஞ்சா நாங்க குடும்பத்தோட வெசத்த குடிச்சிட்டு சாக வேண்டியதுதே" தங்கராசு வேதனையாக சொல்லி அழ.

"அப்புறம் ஏன் சாகாம இங்க வந்தீரு" பின்னால் கை கட்டி நின்று எங்கோ பார்த்து ஏகத்தாலம் செய்தவனை என்ன செய்வது.

"ஏலேய் ஆனந்து உள்ள போயி கொல்லைல இருக்க வைக்கப்போரை எல்லாத்தையும் வண்டில ஏத்தி மாட்டு கொட்டகைல அடிக்கி வையில" என்றான் கண்டிப்பான குரலில் அமரதேவன்.

"ஆமா படிக்க போன எடத்துல எவனையோ நம்பி ஏமாந்து வயித்த நிரப்பிட்டு வந்தது அவ தப்பு. இதுக்கு எதுக்கு இந்தாளு வெவஸ்த்த கெட்டு போயி இங்கன நின்னு ஒப்பாரி வைக்கிறான். இது ஒரு அபூர்வ ரகசியம்ட்டு வேற அம்புட்டு நேரோ என்னையவும் கூட நிக்க வச்சி எதையும் சொல்லாம கடுப்ப கிளப்பிக்கிட்டிருந்தான். பிக்காளிப் பய"

வாய்க்குள் திட்டியபடியே முகத்தை சுளித்தாலும் மூத்தவன் பேச்சை தட்டாமல் வேலையை கவனிக்க சென்றவன், உள்ளே அவன் சிதைத்து விளையாடிய மங்கையின் நினைவை அப்போது மறந்தே போயிருந்தான்.

"சரி கவல படாம போய்ட்டு வாங்க. அந்த பைய யாரு என்னனு விசாரிச்சு நாலு தட்டு தட்டி உம்ம மவளோட அவன சேந்து வாழ வைக்கிறேன். அப்பவும் முடியாதுனு ஓவரா பண்ணான்னா, வழக்கம் போலதே, அந்த பயல நமக்கு அடிமையா வச்சிக்கினு, புள்ளைய கலச்சி உட்டு வேற நல்ல வரன் பாப்போம். இந்த விசயமும் யார் காதுக்கும் போவ வேணாம்"

தேவன் நம்பிக்கையாக வாக்கு கொடுக்க, அதுவே தேவவாக்கு என்று நன்கு அறிந்த தங்கராசு பெருமூச்சு விட்டு, அவனுக்கு நன்றி சொல்லி அங்கிருந்து சென்றார்.

தந்தைக்கு உதவியாக ஊருக்கு உபதேசம் செய்யும் அமரதேவனின் மற்றொரு முகம் அவனது மனைவி மட்டுமே அறிந்திருக்கிறாள்.

தேவன் பெண்கள் விடயத்தில் குணம் கெட்டவன் இல்லை என்றாலும் பெண்கள் என்றால் ஏளனம்தான் அவனுக்கு. ஆனால் வெளியே பெரிதாகக் காட்டிக்கொள்ள மாட்டான் வீட்டை தவிர.

அதுவே இந்த ஆனந்தபாலன், மணிக்கு ஒருத்தி என விதவிதமாக வாழ்க்கையை சல்லாபத்துடன் அனுபவித்து வாழ்பவன். கஸ்டம் என்று வரும் பெண்களுக்கு பணத்தை வாரி இறைத்து விட்டு, படுக்கையை பகிந்து கொள்ள கட்டளை இடுபவன். சிலர் கட்டுப்படுவர் சில பெண்கள் சரிதான் போடா என எதையும் சமாளிக்கும் மனநிலையில் வந்த வழியை பார்த்து சென்று விடுவர்.

இவன் புத்தி அறிந்த யாரும் பண விடயத்தில் இவனிடம் வைத்துக்கொள்ள மாட்டார். அப்படித்தான் உள்ளே கண்ணீருடன் கிடக்கும் வண்ணமயிலும் தான் பணம் வாங்குவது இவன் காதில் எட்டாதவாறு கண்ணாயுதபாணியிடம் கெஞ்சி கேட்டு தன் அன்னையின் மருத்துவ செலவுக்காக கைமாத்தாக வேலை செய்து கழித்து விடுகிறேன் என்று சில ஆயிரங்களை வாங்கி இருந்தாள்.

ஆனால் இந்த ஆந்தை காதனுக்கு எப்படியோ கேட்டு விட்டதே சங்கதி. அதிலிருந்தே அவளை மிரட்டி உருட்டி கைமாத்தாக வாங்கிய பணத்திற்கு இவனே வட்டியும் போட்டு குட்டியையும் போட்டு விட்டான்.

பெரியவனை கையெடுத்து தானாக வணங்கும் ஊர் ஜனங்கள், சின்னவனை கும்பிட்டுட்டே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் பணிவாக வணங்க வைத்திருக்கிறான் இவன்.

தொடரும்.

முதல் எபிசொட் எப்டி இருக்குனு மறக்காம கமெண்ட் பண்ணுங்க drs. இந்த கதைய எப்டி லேட்டாக்கி உங்கள எல்லாம் வெறுப்பேத்தி தரப்போறேன்னு எனக்கே தெரியலை 😅
 
New member
Messages
18
Reaction score
19
Points
3
Nalla eruku sis ☺️. Kandipa entha stry Oru nalla karuthu ulla stry ya erukum 😊😊. Entha stry la ulla boys tha konjam illa nalla terror piece polaye 🥴🥴
 
Messages
62
Reaction score
50
Points
18
Ji ethana Katha venunalum poadunga padika ready ah irukoam..bt ud mattum regular ah poatruga... Aaga motham nenga poata matum pothum....
 
Administrator
Staff member
Messages
264
Reaction score
224
Points
43
Nalla eruku sis ☺️. Kandipa entha stry Oru nalla karuthu ulla stry ya erukum 😊😊. Entha stry la ulla boys tha konjam illa nalla terror piece polaye 🥴🥴
Irukum than pola sis 😅
 
Top