Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Administrator
Staff member
Messages
204
Reaction score
203
Points
63
அத்தியாயம் - 10

முதல் முறை தன் கணவனின் அலுவலகம் என்று தெரியாமல் இன்டெர்வியூக்கு வந்த புதிதில் வியப்பாக பார்த்ததை போலவே, பிரமாண்டமாக ஓங்கி உயர்ந்த பதினைந்து அடுக்கு கட்டிடமான தன் மகனின் அலுவலகத்தை வாய் பிளந்து பார்த்தாள் மித்ரா.

"AM.Champion of Eagles bIKES" என பெரிதாக பொறிக்கப்பட்டிருந்த எழுத்தை அண்ணாந்து பார்த்து வியப்படைந்த தாயின் முகத்தை சிறு சிரிப்போடு பார்த்த ஆத்வி,

"மாம்.. என்ன அப்டி பாக்குறீங்க" அவள் தோள்மீது கைப் போட்டான்.

"அழகா இருக்கு ஆத்வி கம்பனி, எப்டி டா ரெண்டு வருஷத்துல இதெல்லாம் அம்மாக்கு தெரியாம பண்ண, முன்னாடியே சொல்லி இருந்தா நானும் சந்தோஷப் பட்டிருப்பேன்ல" முகம் கோணிய தாயை புன்னகை முகம் மாறாமல் அவன் பார்க்க,

"ஆமா அம்மா சொல்றது சரிதான், ஏன்டா ஒரு வார்த்தை முன்னாடியே சொல்லி இருந்தா என்னவாம்.. சரியா திறப்பு விழாக்கு யாரோ மூணாவது மனுஷங்களுக்கு சொல்ற மாதிரி சொல்லி கடைசி நேரத்துல கூட்டிட்டு வந்திருக்க" தன் பங்குக்கு ஆருவும் முறுக்கிக் கொண்டாள்.

"மச்.. உனக்கு விஷயமே தெரியாதா ஆரு அப்ப மாமா உன்கிட்ட நான் கம்பனி தொடங்கப் போற விஷயத்தை பத்தி சொல்லவே இல்லையா.."

" டேய் டேய் சொல்லாத" என்று கை ஆட்டிய அஜயை சந்தேகமாக பார்த்தபடி,

"என்ன டா சொல்ற அவர்க்கு என்ன தெரியும்" சந்தேகமாக கேட்டாள் ஆரு.

"அட மாமா தானே பில்டிங் வர்க் தொடங்க பூஜை எல்லாம் போட்டு ஸ்டார்ட் பண்ணி கொடுத்தது, இது தெரியாதா உனக்கு.." என்றவன் அஜய் தன்னை வெறியாக முறைப்பதையும், ஆரு அஜயை கொலை வெறியில் பார்ப்பதையும் கண்டு கொள்ளாத ஆத்வி,

"ஏன் மாமா அக்காட்ட சொல்லல" அவன் கன்னம் இடித்து சிணுங்கி உதவி செய்த புண்ணியவானை அக்காவிடம் கோர்த்து விட்டு பழி வாங்கி விட்டான் ஆத்வி.

"அட துரோகக்காரா நான் சொல்லு சொல்லுனு சொல்லும்போது எல்லாம், சொல்லாத சொல்லாதனு அம்மா அக்காக்கு சர்ப்ரைஸ் கொடுக்கனும்னு சொல்லி என் வாய மூடி வச்சிட்டு, ஒரு கொடுமைக்காரி கிட்ட போய் என்னைய கோத்து விட்டு போய்ட்டியே டா" மனதில் புழுங்கியவன் தலை டொங்கென்று சத்தம் எழுப்பியது, ஆருவின் கை வண்ணத்தில்.

தலையை தேய்த்துக் கொண்ட அஜய், "இப்ப நிம்மதியா டா" என மச்சானை முறைக்க, அடக்கப் பட்ட சிரிப்போடு அன்னையின் தோளில் கை போட்டபடி உள்ளே அழைத்து சென்றான்.

அஜயை முறைத்த ஆரு, "எங்கிட்ட சொல்லாம விட்டிங்கள்ள ஒரு வாரத்துக்கு என்னோட பேசவே கூடாது" என்று கோவமாக உள்ளே சென்றிட, "ம்க்கும்.. என சலித்துக் கொண்டவனுக்கும் அவளை ஒரே நொடியில் சமாதானம் செய்யும் வித்தை எல்லாம் கை வந்த கலை தான்.

இருந்தும் "எங்க அத்தை பெத்த ரெண்டுத்துக்கு அவங்க குணம் கொஞ்சமாச்சு இருக்கா, ரெண்டும் வெசம் அப்டியே அவங்க அப்பன மாறி" என்ற புலம்பளோடு அவள் பின்னே சென்றான்.

அசோக் கையில் இருந்து இறங்கி துள்ளி குதித்து றெக்கை முளைத்த பறவையாக குட்டி நீல நிற லெஹங்காவை தூக்கிக் கொண்டு,

"பாட்டிஇ.. அம்மாஆ.." என கத்தியபடி ஓடி வந்த தன்யாவை கண்டு அம்மா மகள் இருவரும் வாயை பிளந்து விட்டனர்.

ஆரு ரெடி செய்து இருந்திருந்தால் கூட அதன்யா இத்தனை அழகு தேவதையாக ஜொலித்து இருக்க மாட்டாள் போலும். வரும் வழியில் பெரிய துணிகையில் உள்ள கிட்ஸ் செக்ஷன் சென்று தன்யாக்கு ஏற்ற உடையை தேர்ந்தெடுத்தவன், அதற்கு தகந்தார் போல் ஹேர் போ, வளையல் என வாங்கி ஹோட்டல் சென்று அங்கே குளிக்க ஊற்றி, ஆத்வியே அழகாக தயார் செய்து அழைத்து வந்து விட்டான்.

"ஆத்வி உனக்கு இதெல்லாம் தெரியுமா டா" என்று மித்ரா ஆரு இருவரும் ஆச்சிரியம் மாறாமல் ஒரே கேள்வியை கேட்டிட,

"ஏன் இதை கத்துக்க தனியா கோர்ஸ் ஏதாவது பினிஷ் பண்ணி இருக்கனுமா" என்றான் சிரிக்காமல்.

"அது சரி" என்று தலையாட்டிக்கொள்ள,
"ஆமா யாரு டா கம்பனி திறந்து வைக்க போற ஸ்பெஷல் கெஸ்ட்" ஆரு தான் கேட்டது.

"இதோ வந்துட்டே இருக்காங்க க்கா.." என்றவன் தன் கை கடிகாரத்தை திருப்பி நேரம் பார்க்கும் போதே,

"ஆத்வி நம்ம வீட்ல இருந்து எல்லாரும் வந்துட்டோம் உங்க அப்பா இன்னும் வரலையே டா.. அப்புறம்" என்று ஏதோ சொல்லும் போதே, மாசாக இளம் காளைளுக்கே ட்ஃப் கொடுக்கும் விதத்தில் காரை திறந்துக்கொண்டு, கருநிற கோர்ட் சூட்டில் கூலிங் கிளாசை கழட்டியபடி ஸ்டைலாக இறங்கி வந்த ஆதியை கண்முழி பிதுங்க சைட்டிங்+ஆச்சிரியமாக பார்த்த மித்ராக்கு சகலமும் விளங்கியது, எல்லாம் அப்பா மகன் மருமகனின் கூட்டு சதி என்று.

கணவனைப் பார்த்ததும் மித்ரா சிறு கோபத்துடன் முகத்தை திருப்பிக் கொள்ள, மனைவியை பார்த்து இதழ் விரியா புன்னகைத்து நின்ற தகப்பன் முன்பு வந்த ஆரு,

"அப்பா அப்போ நீங்க தான் அந்த ஸ்பெஷல் கெஸ்டா" என்று இடுப்பில் கை வைத்து செல்லமாக முறைத்து நிற்கும் மகளை கண்டதும், சிறு பிள்ளையில் தன்னிடம் கோவித்துக் கொள்ளும் குட்டி மகளாகவே கண்ணுக்கு தெரிந்தாள் போலும்.

"உங்க கேள்விக்கு எல்லாம் அப்புறம் பதில் சொல்லலாம், முதல்ல வாங்க பங்ஷன் ஸ்டார்ட் பண்ணிட்டு வரலாம்" பதில் ஆருவிடம் சொன்னாலும், பார்வை என்னவோ தன்னிடம் சிலுப்பிக்கொண்டு நின்ற மனைவியிடம் தான் இருந்தது.

"டாட்.." என்ற ஆத்வியின் அழைப்பில் மொத்த கோபத்தையும் தூக்கி மூட்டை கட்டி வைத்து மகனிடம் பார்வை பதித்தது மித்ரா மட்டுமல்ல, ஆரு அஜய்க்கு கூட அதுவரை இருந்த சீண்டல் கோபம் எங்கோ சென்று, ஆத்வியை தான் ஆச்சிரியம் மாறாமல் பார்த்து நின்றனர்.

பின்னே ஆதியிடம் அவன் நேருக்கு நேர் பேசி வருடங்கள் ஆகிவிட்டிருந்ததே! ஆதியும் தான். ஏன் எதற்கு இருவரும் பேசிக்கொள்ளவில்லை என்ற காரணங்கள் எதுவும் சம்மந்த பட்ட நாயர்கர்களை தவிர வேற யவருக்கும் தெரியாத ஒன்று. பல முறை கேட்டும் யவருக்கும் பதில் கொடுக்கவில்லை இருவரும். அப்படி இருக்க அப்பா மகன் நேர்க்கானலை, ஏதோ உலக அதிசயம் போல் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

"யா.. ஆத்வி.. எல்லாம் ரெடியா" என்று இயல்பாக பிள்ளையிடம் பேசும் கணவன் மீது மேலும் மேலும் குற்றச்சாட்டுகள் எகிறிக் கொண்டே சென்றது மித்ராவின் பார்வையில். எத்தனை முறை கெஞ்சி கேட்டு இருப்பாள் ஒருமுறையேனும் மகனிடம் பேசி விடு என்று. அப்போதெல்லாம் அமுக்குனி போல் இருந்து கோபத்தை முகத்தில் காட்டி, அவளையும் அவன் பாணியில் அமுக்கி விடுவானே, மீண்டும் அவள் வாய் திறக்க முடியாத அளவுக்கு.

"யாஹ்.. டாட்.. எல்லாம் ரெடி உங்களுக்காக தான் வெயிடிங்" என்ற ஆத்வி மீண்டும் நேரத்தை பார்க்க,

"ஓகே ஆத்வி, பட் வேர் இஸ் யாதவ் இன்னும் அவன் வரலையே" என்ற தந்தையை வெறிக் கொண்டு முறைத்த ஆத்வி,

"அவன் எதுக்கு டாட்" முகத்தை உர்ரென வைத்து விரைப்பாக கேட்ட மகனைக் கண்டு, தன்னையே காண்பது போல தான் இருந்தது ஆதிக்கு.

"அவன் எதுக்குன்னா அவன் உன் தம்பி டா" என்று முந்திக் கொண்டு சொன்ன மித்ராவை இப்போது தந்தை மகன் இருவருமே சேர்ந்து முறைத்து தள்ளினர்.

குடும்பமாக சண்டையிட்டுக் கொள்ளும் காரணமான அந்த ஒருவனோ, டென்ஷன் தலைக்கேறி தன்னெதிரே நின்றிருந்த ஸ்வாதியை அடக்கப்பட்ட கோபத்துடன் நேரிட்டவனாக,

"இப்ப சொல்லுங்க மிஸ். ஸ்வாதி" என அவள் பெயரை ராகமிட்டு, "உங்க கண்ண என்ன தலைக்கு பின்னாடி வச்சிட்டு நடந்து வந்தீங்களா" அவன் பற்களை கடிக்கும் சத்தம் திருத்திருவென முழித்து நின்றவளுக்கும் நன்றாக கேட்க தான் செய்தது.

"ஸ்.சாரி சார் தெரியாம பண்ணிட்டேன்" தலை குனிந்து தயக்கமாக அவள் சொல்லும் பதிலை கேட்க தான் யாதவ்க்கு பொறுமை இல்லை. ஏனெனில் அவள் செய்த காரியம் அப்படி.

சற்று நேரம் முன் அவசர அவசரமாக கவியை பீச்சில் விட்டுவிட்டு இன்டெர்வியூக்கு நேரம் ஆகி விட்டதே என்று வேகமாக கம்பனிக்கு பக்கத்தில் நடந்து வந்தவளின் அருகில், சீறிப்பாய்ந்து வந்த காரை கவனிக்காது எதிர்முனையில் ஸ்வாதி தாண்ட போக, காரை ஓட்டி வந்த யாதவ் பதட்டத்தில் ஹாரன் அடிக்காமல், ஸ்வாதியை இடித்து தள்ளாத குறையாக நூல் அளவு உள்ள இடைவேளையில் சடன் ப்ரேக் போட்டு காரை நிறுத்தி இருந்தான்.

கணநேரத்தில் நடந்த நிகழ்வில் பயத்தில் குத்துகாலிட்டு சாலையின் நடுவில் அமர்ந்திருந்த ஸ்வாதி மெதுவாக கண் திறந்து பார்க்க, காரை விட்டு இறங்கி அவசரமாக ஓடி வந்த யாதவ்,

"ஆர் யூ ஓகே கேள்" என்றது தான் தாமதம், அதுவரை படபடப்பில் இருந்தவள் மின்னல் வேகத்தில் எழுந்தவளாக,

"கண்ணு தெரியல கார் தானே ஓட்டுற ஏரோப்ளேன் ஒன்னும் இல்லையே.. என்னவோ உன் அப்பன் வீட்டு ரோடாட்டம் சர்ர்ருனு இடிக்க வர்ற.. அறிவுக்கெட்ட முண்டம் ஆளையும் மூஞ்சியும் பாரு பாக்குவாயா.." அவன் யார் என்று தெரியாமல் வாய்க்கு வந்ததை கண்டபடிக்கு திட்டி விட்டு விருவிருவென அங்கிருந்து சென்றவளை கோவம் கொப்பளிக்க பார்த்து நின்றான், விக்ரம் மகன் யாதவ்

இன்டெர்வியூக்கு வந்தவர்கள் வரிசை கட்டி அமர்ந்திருக்க. அதில் ஒருத்தியாக ஸ்வாதியும் அமர்ந்து இன்டெர்வியூ அட்டன் செய்து விட்டு வந்தவளின் முகம் பிரகாசமாக ஜொலித்தது வேலைக் கிடைத்து விட்ட மகிழ்ச்சியில்.

"மேடம் இங்க வெயிட் பண்ணுங்க எம்டி வந்ததும் உங்க வேலை என்னனு சொல்லுவார், பாத்துட்டு கிளம்புங்க" பியூன் சொல்லி சென்றதும் உடனே தன் தோழியிடம் இந்த நற்செய்தியை சொல்லியாக வேண்டும் என்ற பரபரப்பில், பைலை தன் பேகில் வைத்தபடியே நடந்து வந்த ஸ்வாதி, தன்னெதிரே வந்த நபரை தெரியாமல் இடித்து விட்டதில், "சாரி" என்று நிமிர்ந்தவளுக்கு அதிர்ச்சி.

காலையில் பார்க்க பார்மல் உடையில் பால் முகமாக அம்பியாக இருந்தவன், இப்போது கோர்ட் சூட் விகிதம் மிளகாய் பழமாக சிவந்த முகத்தோடு அவளை பார்வையால் எரித்து நின்றான். போதாகுறைக்கு அவன் குடித்தபடியே வந்த ஆரஞ்சி பழசாரு வேறு, ஸ்வாதி இடித்தவேகத்தில் அவன் கோர்ட்டில் கொட்டி விட்டது.

அனைவரும் அவனுக்கு வணக்கம் வைப்பதிலேயே புரிந்துக் கொண்டாள், இது அவனுடைய கம்பனி தான் என்று.
அதனால் தவறு தன்மீதுள்ளதை உணர்ந்த ஸ்வாதி, சா.. என்று வாய் திறக்கும் போதே, அங்கிருந்து சென்று விட்டான் யாதவ்.

இன்டெர்வியூவில் செலெக்ட் ஆன ஆட்களுக்கு என்னன்ன வேலை என்று சொல்லி அனுப்பியவன், கடைசியாக ஸ்வாதியை அழைத்து அவள் கேட்ட அனைத்து வார்த்தைகளையும் ஒன்று விடாமல் அவளை கேட்டவனாக,

"மிஸ்.ஸ்வாதி என்ன கேட்டிங்க ஏரோப்ளேனா ஓட்டுறேன்னு கேட்டிங்ல்ல, எஸ் நீங்க சொன்னது உண்மைதான் நான் ஒரு பைலெட்.. வெளிய கேட்டியே இது என்ன உங்க அப்பா வீட்டி ரோடான்னு, அது எங்க அப்பன் வீட்டு ரோட் இல்ல, நான் போட்ட என் ரோடு.."

முகத்தில் கனிவில்லாமல் பொறப்பொற வெடித்தவனைக் கண்டு எச்சில் விழுங்கிய ஸ்வாதி,

"போச்சி இனி நமக்கு இங்க வேலை இல்லை" கலவரமாக நினைத்தவளின் முகத்துக்கு நேராக லெட்டர் ஒன்றை அவன் நீட்டவும், அதனை யோசனையாக வாங்கிப் பார்த்தவள் முகம் மலர அவனை கண்டாள்.

"நமக்குள்ள இருக்க பிரச்சனை அப்டியே தான் இருக்கு, நீ சீப்பா என்கிட்ட நடந்துகிட்டேன்னு நானும் அப்டி நடந்துக்க மாட்டேன்.. குறுக்கு வழில இன்டெர்வியூல செலக்ட் ஆகி இருந்தா, இந்நேரம் நானே உன்ன கழுத்தை பிடிச்சி வெளிய தள்ளி இருப்பேன்.. இது நீங்க நல்லபடியா இன்டெர்வியூ அட்டன் பண்ணதுக்காக மட்டும் தான்" என்று அழுத்திக் கூறி கன்பார்மேஷன் லெட்டரை அவளிடம் கொடுத்து,

"நாளைல இருந்து விருப்பம் இருந்தா வேலைக்கு வரலாம், இல்லனா உங்க இடத்துக்கு வேலைக்கு வர நிறைய பேர் காத்திருக்காங்க" திமிராக உரைத்த யாதவ், அவள் பதிலை எதுவும் எதிர்பார்க்கமல் எழுந்து சென்று விட்டான், ஆத்வியின் கம்பனி திறப்புவிழாக்கு.

"இதோ யாது மாமா வந்துட்டாங்க" தன்யா கை தட்டி மகிழ, அவன் வரும் திசையை பார்த்த ஆத்வியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

யாதவ் ஒரு பைலெட். ஆசை பட்டு தேர்ந்தெடுத்த துறை என்றாலும் ஆதியின் பிசினஸ்களையும் விடுமுறையில் வரும்போது எல்லாம் அவன் தான் பாதி வழி நடத்தி வருகிறான். அவன் சொந்தமாக உழைத்து தனியாகயும் தொழில் தொடங்கி விட்டான். அதில் தான் ஸ்வாதி வேலைக்கு சேர்ந்திருப்பது.

அங்கிருந்த அனைவரையும் கழட்டி விட்டு முக்கியமாக ஆத்வியை கழட்டி விட்டு, யாதவ் கையில் பறந்துக் கொண்டிருந்த தன்யாவை, "கட்சி மாறிட்டியே டி குட்டி சாத்தான்" என்று மனதில் வறுக்க தவரவில்லை ஆத்வி.

வெகுநாள் கழித்து வரும் தங்கை மகனை ஆசையோடு வரவேற்ற மித்ரா, கண்ணீரோடு அணைத்து நெற்றியில் முத்தமிட்டு மகிழ, இம்முறை ஆதியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

கடற்கரையில் அமர்ந்து குட்டி பிள்ளைகளோடு தானும் சிறுமியாக மாறி, மணல் வீடு கட்டி கலகலப்பாக சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்த கவி, எதிர்பாரா நேரத்தில் கடல் அலைகளோடு அலையாக அடித்து சென்று விட்டாள்.

இனி கவியின் நிலைமை என்ன?

புயல் வீசும்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 10
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top