- Messages
- 278
- Reaction score
- 215
- Points
- 63
அத்தியாயம் 11
அரவிந்த், அவளை அடித்த வலியை விட, அவன் பேசிய வார்த்தைகள் தான் அவள் நெஞ்சில் முள்ளாய் குத்தி வலிக்க செய்தது.. அனு அம்மா என்றழைத்தது முல்லைக்கே அது அதிர்ச்சியாக இருக்க.. எதுவும் புரியாமல், அரவிந்த் அடித்து சாத்திய அவனின் அறைக் கதவை சிறிது நேரம் வெறித்து பார்த்த முல்லை..
கன்னம் தாண்டி வழியும் கண்ணீர் துளிகளை துடைத்துக் கொண்டுவளாக,
"உதவி செய்தவர்கள் வீட்டில் உபத்திரமாக இருப்பது தவரு..
பாட்டி இங்க தங்கிக்கோன்னு சொன்னதும், அவங்க முகத்த பாத்து மறுப்பு சொல்ல முடியாம, எனக்கும் வேற பாதுகாப்பு இல்லாம முட்டாள் தனமா இங்க இருக்க சம்மதம் சொல்லிட்டேன்..
ச்ச..எனக்கு எங்க போச்சி புத்தி..
பாட்டி மட்டும் நான் இங்க இருக்க ஆசை பட்டு சம்மதம் சொன்னா போதுமா.. இவரோட சம்மதத்தையும் நான் ஒரு வார்த்தை கேட்டு இருக்கனும்.. எம்மேல தான் தப்பு..
இதுக்கு மேலயும் நாம இங்கு இருக்குறது சரிவராது" என்று நினைத்தாளோ!
நேராக பாட்டியிடம் செல்ல படி இறங்கி வந்தால்.
அதுவரை மேலே நடந்த அனைத்தயும், கலக்கமாக கேட்டு கொண்டு இருந்த பாட்டி,, அனுவை ஒரு பணிப்பெண்ணிடம் அழைத்து செல்லும் படி சொன்னவர்.. அரவிந்தின் எதிர்கால வாழ்க்கையை நினைத்து கவலை கொண்டாலும்... மறு புறம், முல்லையிடம் அவன் நடந்து கொண்ட விதம்.. மிகவும் அவரை மன வருத்தத்தை உண்டு பண்ணியது...
அந்நேரம், கண்ணில் நீர் திரலையோடு "பாட்டி, உங்க பேச்சை மீறி பேசுறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க.. எனக்கும் வேற வழி தெரியல.. நான் இப்பவே இந்த வீட்ட விட்டு கிளம்புறேன் பாட்டி.. என்னால அவரு இந்த நாளு நாளா ரொம்ப கஷ்டத்தை அனுபவிச்சுட்டாரு.. மேலும் மேலும் என்னால அவருக்கு கஷ்டம் வேனா பாட்டி.." என்றால் கண்ணீரோடு.
"அம்மாடி, ஏன் இப்டிலாம் பேசுற.. அவன் ஏதோ கோவத்துல, உன்கிட்ட இப்டிலாம் நடந்துகிட்டாம்மா.. அதுக்காக நான் உன்கிட்ட மன்னிப்.." என்று பாட்டி சொல்ல வரும் போதே..
"அச்சோ பாட்டி"... என பதறி அவரை பேச விடாமல் தடுத்தவள்.. "என்ன பாட்டி, என்கிட்ட போய் மன்னிப்பு அது இதுன்னு பெரிய வார்த்தை எல்லாம் பேசுறீங்க.. ப்ளீஸ் பாட்டி, இப்படியெல்லாம் பேசி என்ன சங்கட படுத்தாதீங்க"... என்றவளை.. குற்ற உணர்வோடு பார்த்தார் பாட்டி..
"நீங்க ஒன்னும் வருத்த படாதீங்க பாட்டி,, என்ன அவரு அடிச்சி திட்டினாருனு எல்லாம் கோவப்பட்டு நான் இங்கருந்து போறேன்னு சொல்லல... அவரு எனக்கு செஞ்ச உதவிக்கு, அவரு மேல கோவப்பட்டா அது எனக்கு தான் பாவம் பாட்டி.. எனக்கு வெளிய செய்ய வேண்டிய வேல நிறைய இருக்கு பாட்டி, ப்ளீஸ் பாட்டி மறுப்பேதும் சொல்லாம என்ன சிரிச்சிகிட்டே அனுப்பி வைங்க பாட்டி...
"உங்கள போல ஒரு புனிதமான உள்ளம் படைச்சவங்கள, எனக்கு திரும்ப சந்திக்க வாய்ப்பு கெடச்சா, என்னவிட அதிர்ஷ்ட்டசாலி இந்த உலகத்துலயே யாரும் இருக்க முடியாது... நான் வரேன் பாட்டி".. என்றவள், அவர் பாதம் தொட்டு வணங்கி, பொங்கும் கண்ணீரை கட்டுப் படுத்திக் கொண்டு, பாட்டி பதில் சொல்வதற்கு முன், அரவிந்த் வீட்டை விட்டு வெளியேறி இருந்தால்...
போகும் முல்லையே கண்ணீருடன் வெறித்தபடி இருந்தார் பாட்டி... அவர் எண்ணமெல்லாம் தன் பேரனின் வாழ்க்கை கடைசி வரை எங்கே தனிமையிலே முடிந்து விடுமோ என்று தான்.
அரவிந்தின் ஆசை மகள் அனுகுட்டி, அவள் பிறந்து முதலே தாய்யன்பு அரவணைப்பு, இது எதுவும் அனுபவிக்காத குழந்தைக்கு இனிமேலும் தாய் பாசம் கிடைக்கவே கிடைக்காதா என்ற கவலை இருந்தாலும்.. வீட்டுக்கு வந்த மகாலக்ஷ்மி மன வருத்ததோடு வீட்டை விட்டு சென்றது கஷ்டமாகி போக.. ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இருந்தார்.. பாட்டி..
முல்லை வீட்டுக்கு வந்ததில் இருந்து, அனு அவளுடன் பசை போல் நன்றாக ஒட்டிக் கொள்ள... வெகு நேரம் விளையாடியதில், அனு சோர்ந்து போனதை உணர்ந்து அவளுக்கு உணவு ஊட்டி விட்டவளாக, அனு அறைக்கு சென்று அவளை தட்டி கொடுத்து பலக் கதைகள் சொல்லி தூங்க வைத்த முல்லை, அசதியில் தானும் அங்கேயே அனுவை கட்டி அணைத்து கண்ணயர்ந்து விட்டால்..
அனு அறை கீழ் தளத்தில், பாட்டியின் அறைக்கு நேர் எதிர் அறையில் இருப்பதால், இதை எல்லாம் கதவின் அருகில் வீல் சேரில் அமர்ந்து, மன நிறைவோடு பார்த்துக் கொண்டு இருந்த பாட்டிக்கு ஒரு எண்ணம் தோன்ற, அதை முதலில் செயல் படுத்த நினைத்தார்...
குழந்தையில் இருந்து தாயின் அரவணைப்பு எப்படி இருக்கும் என்று அறிந்திடாத அனு... முல்லையின் மென்மையான அரவணைப்பில், பாதுக்காப்பான தாயுணர்வை உணர்ந்து, நன்றாக அவள் கழுத்தை கட்டி கொண்டு துயில் கொண்டது...
வெகு நேரம் கழித்து, தூக்கம் கலைந்து கண்ணை கசக்கி எழுந்த அனு... தன்னை அணைத்துக் கொண்டு உறங்கும் முல்லையை பார்த்து.. அவள் கன்னத்தில் முத்தம் வைத்து எழுந்து, பாத்திஇஇ... என்று கத்திக் கொண்டே அவரிடம் ஓடியது...
அனு வருகைக்காகவே காத்திருந்தவர் போல... "அனுக்குட்டி, தூங்கி எழுந்துட்டீங்களா பட்டு" கொஞ்சல் மொழியோடு அணைத்து கொண்டார்.
"ம்ம்.. ஆமா பாத்தி.. தூங்கி எதுந்துட்ட"
சரி தங்கம்.. என அவள் தலையை அன்போடு வருடி.. அவள் முகத்தில் உள்ள தெளிவை கண்டு, அகம் மகிழ்ந்து போனவர்... "அனுமா, நம்ம வீட்டுக்கு வந்துக்காங்கல்ல முல்லை அது யாரு தெரியுமா" என்று கேட்க... குழந்தை தெரியாது என உதட்டை பிதுக்கி தலையாட்டியது.
அதில் புன்னகைத்தவர்..." அவங்க தான் இனிமே உனக்கு அம்மா, இனிமே நீ அவங்கள அம்மான்னு தான் கூப்பிடனும்".. பாட்டி சொன்னதை கேட்டு மகிழ்ச்சியில் துள்ளி குதித்த அனு, மேலும் பாட்டி அவளுக்கு விளக்கமாக சொல்லி புரிய வைக்கும் முன்.. தனக்கும் தன் நண்பர்களுக்கு இருப்பதை போலவே அம்மா கிடைத்து விட்டார்கள் என்ற குஜாலத்தில், பாட்டி சொல்ல வருவதை முழுதாக கேட்காமல், தன் தந்தையிடம் உடனே இதை சொல்ல வேண்டும் என்ற ஆவலில், அரவிந்த் அறைக்கு ஓடி விட்டால்..
முல்லையும் தூங்கி எழுந்து, முதலில் அனுவை தேடியவள்.. அவள் அரவிந்த் அறையில் இருப்பதாக பணிப் பெண் சொல்ல.. சரி என்றவள்.. வெளியே சென்று சென்று மழையை வெறித்துக் கொண்டிருந்த நேரம்..
தந்தையிடம் சென்ற அனு.. "டாதி, எனக்கு அம்மா இனிமே, முல்லை அம்மா தான்" அனு சொன்னதில் அப்படி ஒரு கோவம், ஏமாற்றம், துரோகம், அவமானம், வெறுமை, இழப்பு, வெறுப்பு, ஆத்திரம், கண்ணீர்.. என எல்லாம் ஒன்று சேர்ந்து,, கடந்த கால கசப்பில்,, அனு முல்லை இருவரும் அவன் கோவத்தில் சிக்கிக் கொண்டனர்...
கைகளை மடக்கி, ஆத்திரம் தீர சுவற்றில் குத்திய அரவிந்த் கையில் ரத்தம் சொட்டியும், அவனின் கடந்த கால நினைவில் அவன் சந்தித்த, துரோகமும், அவமானமும் கண் முன் தோன்றி மறைய.. தானாக அவன் கண்ணில் நீர் ததும்பியது..
இங்கு பாட்டியும், அரவிந்தின் கடந்த காலத்தை நினைத்துப் பார்த்து வருத்தமாக இருந்தார்..
மழை...

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 11
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.