- Messages
- 264
- Reaction score
- 225
- Points
- 43
அத்தியாயம் - 19
வெங்கட்டின் நினைவு காவேரியுடனான அன்றய நாளுக்கு சென்றது.
அதிகாலை பொழுதில் சூரியக்கதிர் தன் நெய்மேனி தொட்டு பளபளத்து வியர்வையாய் உருகும் அளவிற்கு, குடிசைக்கு வெளியே துடிப்பாக உடற்பயிற்சி செய்துக் கொண்டிருந்தவனை, தன் குடிசையின் முன்னால் சிறிய பாறைகல்லில் அமர்ந்து சாமானை தேய்த்தபடி கண்கள் மின்ன அவனை தான் வைத்தக்கண் வாங்காது குறுகுறுப்பாக பார்த்திருந்தாள்.
தீவிரமாக உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவனுக்கு, யாரோ தன்னை துளைக்கும் பார்வை பார்ப்பதை உணர்ந்து நிமிர்ந்துப் பார்த்தவனின் மஞ்சள்கட்டு தேகமெங்கும் ஒருவித புளங்காகிதம் உண்டானது அந்த கட்டச்சியின் விழுங்கும் கருந்துளையில்.
"என்ன இவ இப்டி பாக்குறா? பார்வை வேற ஒரு தினுசா இருக்கே" உள்ளூர யோசித்தவன் அவளைப்பற்றின சிந்தனையை ஒதுக்கி விட்டு தன் வேலையில் கவனம் சிலுத்த முயல, எங்கே ஆழ்துளை பார்வை அவனை விட்டால் தானே.
வெண்ணைக்கட்டி போல் இருந்த திடமான ஆண் தேகத்தில் பூநூல் மட்டுமே வியர்வையில் நனைந்து மின்ன, அடியில் போட்டிருந்த ட்ராக்பேண்டுடன் வைரம் போல் ஜொலித்தவனை யார் தான் பார்க்கமல் இருப்பார். சிக்ஸ்பேக் இல்லை என்றாலும் இறுக்கமான நொந்தி இல்லாத வயிறு, அளவான திரண்ட புஜம், தொண்டைக்குழியில் ஏறி இறங்கும் வியர்வையில் மின்னும் அந்த கோலிகுண்டு சற்றே உயரமான ஆண்களுக்கு கொல்லை அழகு சேர்க்கும்.
மன்மதனின் அழகில் மதிமயங்கி பச்சையாக வெளிதெரியும் அளவிற்கு சைட் அடித்தபடி சாமானை தேய்க்காமல் உருட்டிக்கொண்டு இருந்தவளை கண்டு ஒருவித கூச்சமும் எரிச்சலும் ஒருசேர முறைத்து விட்டு உள்ளே சென்று விட்டான் அவன். வடை போச்சே என்ற ரீதியில் அவள்.
அன்று ஞாயிறு விடுமுறை தினம். எவ்வளவு நேரம் தான் அந்த சிறிய குடிசையிலேயே வெறிக்க வெறிக்க மல்லாக்க கிடப்பது என்ற எண்ணத்தில் எங்காவது காலார சென்று வரலாம் என நினைத்து மெதுவாக குளித்து முடித்து துண்டை மட்டும் கட்டிக்கொண்டு உள்ளே வர, அவனுக்கு முன்னால் அவன் காலாட்டியபடி அமர்ந்திருந்ததை கண்டு விழிவிரிய பார்த்தான் சில கணம்.
"யோவ் மச்சா.. என்னையா இம்புட்டு காத்தால எங்கன கெளம்புறவ" ஏதோ தாலிக்கட்டிய மனைவி போல் சட்டமாக கேட்டதும் இல்லாமல் அவன் நிதாணித்து பதில் கூறும் முன், "அச்சோ என்னையா இம்புட்டு நேரோ ஈரத்தலையோட நிக்கிற, குடும்பத்த உட்டுப்போட்டு தனியா இருக்க ஆம்பள ஒடம்புக்கு காய்ச்ச வந்தா என்ன பண்ணுவ" வெடுக்குன்னு எழுந்து அவன் முன்பு எக்கி தனது தாவணி முந்தானையால் துவட்டி விட தொடங்கியதும், பெண்ணவளின் சுவாசம் ஆண் கழுத்தை ஊர்ந்து தேகம் சிலிர்த்து திடுக்கிட்டு நின்றான் அவளது உரிமையான அக்கறையில்.
சில நிமிட போராட்டத்திற்கு பிறகு தன்னை சமன்ப்படுத்திக் கொண்டு சட்டென அவளை தள்ளி நிறுத்தியவனாக, "ஏய் உனக்கு இங்க என்ன வேலை. ஒரு ஆம்பள தனியா இருக்க குடிசைகுள்ள வந்து நீப்பாட்டுக்கு உன் இஷ்டத்துக்கு ஒவ்வொன்னும் பண்ற. யார் கொடுத்த தைரியம் உனக்கு" விரைப்பான கஞ்சி போட்ட காக்கிக்காரன் கடுமையாக தலைதூக்கி இருந்தான் அவளது செயலில்.
"யாருய்யா எனக்கு தகிரியம் குடுக்கணும். என் மனசுக்கு புடிச்ச ஆம்பள ஒன்னாண்ட தானே ந்நா இதெல்லாம் என் இஷ்டத்துக்கு பண்ண முடியும்" வெட்கத்தில் தலைகுனிந்து கட்டைவிரலை தரையில் தேய்த்தபடி அவன் தோள் உரச, தள்ளி நின்று முறைத்தான் அவளை.
"உன்கிட்ட ஏற்கனவே சொல்லிட்டேன் எனக்கு இதெல்லாம் ஒத்துவராதுனு. அப்புறமும் திரும்பத் திரும்ப வந்து தொந்தரவு பண்ணிட்டு இருந்தா என்ன டி அர்த்தம்" கோவத்தில் பற்களை கடித்தான் அவன்.
"எல்லாம் ஒரே அர்த்தந்தே மச்சா. ஒன்னைய எனக்கு புடிச்சிருக்கு" என்றாள் உறுதியாக அவனது விழிகளில் விழி கலந்து.
அவளின் உறுதியில் சற்றே மனம் தடுமாறினாலும் உடனே சுதாரித்து, வாய்க்கு வந்ததை திட்டி கழுத்தை பிடித்து வெளியே தள்ளாத குறையாக துரத்தி அடித்தவனுக்கு அதற்கு மேலும் வெளியே போகுமென்ற எண்ணம் இல்லாமல் துண்டுடன் குப்புற விழுந்தவனின் மூளையை கடுமையாக ஆக்கிரமிப்பு செய்தாள் அழகு கட்டச்சி.
ஒவ்வொரு நாளும் இதே அக்கப்போர் தான். தானாக வந்து வம்பு செய்து நன்றாக வாங்கிக்கட்டிக் கொண்டு போனாலும் மீண்டும் வெள்ளை சிரிப்போடு மச்சா என ஓடி வரும் அவளை பார்த்து சுவாரிசியம் கூடி தன்னை அறியாமல் ரசிக்கவே செய்தான் அவனும்.
சரி வெளியே உடற்பயிற்சி செய்தால் தான் ராட்சசியின் விழுங்கும் பார்வை தன்னை தாக்குதல் செய்கிறதே என்று அன்று குடிசைகுள்ளே வியர்க்க விருவிருக்க தண்டால் எடுத்துக் கொண்டிருந்தவனின் முதுகின் மீது மெல்லிய மலர் கொடியாய் படர்ந்து அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டதும், அதிர்ச்சியில் மூச்சிபேச்சி இல்லாத செயலிழந்த மரமாய் நெஞ்சம் தரையில் மோதி அதிர அசையாமல் படுத்து விட்டான் வெங்கட்.
"என்ன மச்சா ரொம்ப கணக்குறேனா பொத்துனு படுத்துப்புட்ட, நேத்திக்குதே டிவி பொட்டில பாத்தேன். கீரோ ஒன்னைய மாறியே கீழ படுத்து எச்சசைசு பண்ணிட்டு இருக்காப்புல கீரோயினி பட்டுனு கீரோமேல படுத்தது அப்டியே அசராம படுத்து படுத்து எந்திரிக்கிறான். அத்த பாத்ததும் எனக்கு உன்ஞாபகம்தே வந்துச்சி. நீயும் தெனமும் வெளியே இதுமாதிரி செய்றத பாத்து இருக்கேனே, அத்தா எனக்கு ஆசையாபுடுச்சி"
களுக்கென்ற சிரிப்போடு ஏதோ விலைஉயர்ந்த பஞ்சி மெத்தையில் படுத்து இருப்பதை போல் சாவகாசமாக படுத்துக் கொண்டு உடையவனிடம் கூச்சம் துறந்து பேசியவளின் பொன்தேகம், ஆடவனை எந்த அளவிற்கு சித்திரவதை செய்து கொண்டிருக்கிறது என்றெல்லாம் பாவம் அறியாது போனாள் பேதை.
"ஏய் லூசு அறிவிருக்கா உனக்கு, கொஞ்சம் கூட அடக்கம் இல்லாம முன்னப்பின்ன தெரியாத ஆம்பள மேல பொத்துனு வந்து விழுற. மரியாதையா மேல இருந்து எந்திரிடி" சூடாட கொந்தலித்தவனை கண்டு உதட்டை முறுக்கினாள் கன்னி.
"முன்னப்பின்ன தெரியாத ஆம்பள மேல போய் உழுற அளவுக்கு ந்நா ஒன்னியும் வெக்கங்கெட்டு திரியல. ந்நா என் மச்சா மேலதே ஆசையா படுத்திருக்கேன். ஏன் ஒனக்கு மட்டு ஆசை இல்லாத மாறியே என்னைய வெரட்டி அடிக்க நினைக்கிற மச்சா" இப்போது அவனை மேலும் சூடேற்றும் வகையில் அவனது தாடி மழித்த கன்னத்தில் தன்பட்டு கன்னத்தை ஒட்டி இருந்தாள்.
அவளை தள்ளி விட்டு கன்னத்தில் பளாரென ஒன்று வைக்க ஒரு நிமிடம் ஆகாது. ஆனாலும் அவளை ஏங்க விட்டு வேடிக்கை பார்ப்பதும் அல்லாமல் அவளது ஏக்கத்தில் இவனும் நன்றாக ரசித்து குளிர் காய்ந்தான் என்றே சொல்லலாம்.
"ஏய்.. கட்டச்சி ஒழுங்கா மேல இருந்து எந்திரி டி. அப்டி என்னத்த தின்னு தொலைவியோ டன் கணக்குல கணக்குற" வெளியே சீறிய வேங்கை உள்ளே கொதிநிலையில் பெண்ணவளின் மென்பஞ்சி ஸ்பரிசத்தில் கிறங்கி தவித்தது.
"மச்சா மச்சா.. ப்ளீஜ்.. என்னையும் அந்த கீரோ தூக்கின மாறி ஒரு ரெண்டு தரம் மட்டும் தூக்கிட்டு கீழ உடேன்"
ஆசையாக கெஞ்சி கொஞ்சும் கிளியை அப்டியே கொத்தி விழுங்க ஆசைதான். ஆனாலும் அவன் பக்கம் எந்த இடத்திலும் எல்லை மீராது பிரட்டி கீழே தள்ளி விட்டு எழுந்து நின்றவன், கோவத்திரை அணிந்து அவளை முறைத்து தள்ளி நன்றாக திட்டி விட்டான்.
அப்போதும் சூடுசுரணை அற்றவளாய் அவனுக்கு வக்கனையாய் சமைத்துக் கொண்டு வருவதும் அவன் வேண்டாம் என முகத்தை திருப்புவதும் என அவன் என்ன உதாசீனம் செய்தாலும் சிரித்த முகமாகவே, சுவற்றில் எறிந்த பந்தை போல் அவனிடம் திரும்பத் திரும்ப ஓடி வந்தவள் இன்று இத்தனை தீர்க்கமான கோபத்தோடு முறுக்கிக் கொண்டு செல்வது அத்தனை ரணத்தை கொடுத்தது.
பெண்ணவளின் நினைவிலேயே உழன்று எத்தனை நேரம் தவித்தானோ!
"சார் நீங்க சொன்ன பொண்ணு நம்ம ஸ்டேஷன் பக்கத்துல ரெண்டு தெரு தள்ளி இருக்க வீட்ல, ஒரு வயசான பாட்டி தனியா இருக்காங்க அவங்க கூடதான் தங்கி இருக்காங்க" காவலாளியிடம் இருந்து வந்த செய்தியில் தவிப்பு நீங்கி பெருமூச்சு விட்டான்.
எப்படியோ காவேரி இப்போது பத்திரமான இடத்தில் பாதுகாப்பாக இருக்கிறாள் என்று தெரிந்துகொண்டவன், நிம்மதியாக தங்கையின் திருமணத்திற்கு தயாராகி சென்றான்.
** ** **
"அண்ணையா ரெண்டு நாளுல வதினாக்கு கல்யாணம்" தயக்கமாக சொன்ன மதனை சலனமற்று பார்த்தான்.
"என்ன அண்ணையா வதினாக்கு கல்யாணம்னு சொல்றேன் அமைதியா இருக்க?"
"அதுக்காக அவளுக்கு பிலெக்ஸ் வச்சி பட்டாசு வெடிச்சி கொண்டாடி ஆறாவராம் பண்ண சொல்றியா என்ன" கடினமாக வினவியவனை உற்று பார்த்தான்.
எப்போதும் இல்லாத அதிக அளவு இறுக்கம் ருத்ரன் முகத்தினில், காரணம் ஏன் என்று அறியாதவனா மதன். தினமும் கூவும் குயிலின் தரிசனம் மூன்று நாளாய் காணாததில் கொண்ட இறுக்கம். வெறி அடங்கும் வரை சம்பவம் செய்தாலும் கூட இலக மறுக்கிறது.
"எப்போ தமிநாடு போறோம் அண்ணையா?" மதன் கேட்ட அடுத்த கேள்வியில் "நான் எப்போ டா அங்கே போறோம்னு சொன்னேன்" ஒற்றை புருவம் ஏற்றினான் திமிராக.
"என்ன அண்ணையா விளையாடுறியா. வார்த்தைக்கு வார்த்தை உன் குயிலுனு சொல்லுவ, இப்ப என்னடானா உனக்கும் அந்த கல்யாணத்துக்கும் சம்மந்தம் இல்லாத மாறி பேசுற" எங்கே ருத்ரன் குழலியை திருமணம் செய்து கொள்ளாமல் கடைசிவரை ஒண்டிக்கட்டையாவே இருந்து விடுவானோ என்ற பயம் வந்துவிட்டது மதனுக்கு.
"அவ என்ன எனக்கு முறையா பத்திரிகை வச்சா அழைச்சா, முதல் ஆளா போய் சீர் செய்ய" ஏட்டிக்கு போட்டியாக பதில் பேசியவனை மண்டை குழம்பி பார்த்தான்.
"அப்ப நீ வதினா கழுத்துல தாலிக்கட்ட மாட்டியா?"
"அடேய் இன்னைக்கு என்ன டா ஓவரா கேள்வி கேட்டு மண்டைய சூடு பண்ற. பயம் விட்டு போச்சா. அந்த அம்மாஞ்சிய கட்டிக்க மொத ஆளா கெளம்பி ஓடினவள நான் என்ன மைத்துக்கு தேடி ஓடணும்" கடுப்பாக கேட்டு விரைப்பாக எழுந்து நின்றதும் நான்கடி ரிவர்சில் ஓடி விட்டான் மதன்.
இங்கோ திருமண கொண்டாட்டத்தில் வீடே கோளாகலமாக கலைகட்டி இருந்தது. குழலியின் முகம் கல்யாணக் கலையில் சிவந்த ரோஜாவாக ஜொலிக்க, சொந்தப்பந்தம் அனைவரும் கன்னத்தைக் கிள்ளி மேலும் சிவக்க வைத்து திருஷ்டி கழித்தே சோர்ந்து போக வைத்து விட்டனர்.
ஊருக்கு வந்த நாளில் இருந்து தினம் தினம் திருநாள் தான். பந்தல் கால் முகூர்த்தம், பாலிகை விதை விதைத்தல், மணமகனை வரவேற்றல், மங்கள ஸ்நானம் என முந்தைய நாள் இரவு வரையும் பரபரப்பான சடங்குகள் நடைபெற்று விடியற்காலையில் திருமணக் கொண்டாட்டமும் ஆறாவமாக ஆரம்பம் ஆனது.
கிருஷ்ணாவின் பார்வை மொத்தமும் சிகப்பு நிற மடிசார் பட்டில் பிராமண அலங்காரத்தில் தேவதைப் பெண்ணாக, பூக்களால் அலங்கரித்த ஊஞ்சலில் அமர்ந்து வெட்கத்தோடு தலை நிமிர்ந்து அவனை பார்த்த மாத்திரத்தில் பச்சக்கென கண்ணடித்ததும் கன்னக்கதுப்புகள் குப்பென சிவந்து போனது.
தங்கையின் அருகில் நின்று ஊஞ்சல் ஆட்டியபடியே அவளின் மகிழ்ச்சியை ரசித்துக் கொண்டிருந்த வெங்கட்டின் முகத்தில் என்னதான் சந்தோஷம் இருந்தாலும் அதையும் தாண்டிய சோகம் அவன் கண்களில் பிரதிபலிப்பதை உணர்ந்துகொண்ட குழலி, இன்னும் சற்று நேரத்தில் தான் அடுத்தமாட்டு பெண்ணாக மாறப் போவதை எண்ணி கண்ணில் நீர்க் கொண்டதை துடைத்து விட்டு சிரிக்க முயன்றான் தமயன்.
ஊஞ்சல் ஆடும் சடங்கும் சிறப்பாக நடந்து முடிந்திருக்க, அடுத்ததாக மாங்கல்ய தாரணம். கூரைப்பட்டு மடிசார் அலங்காரத்துடன் தந்தையின் மடியில் கைக்கூப்பி அமர்ந்திருந்தாள் குழலி.
கிருஷ்ணாவிற்கோ சொல்ல முடியா மகிழ்ச்சியில் பட்டு அங்கவஸ்திரத்தில் பூநூல் அவன் தேகத்தை அலங்கரித்திருக்க, மங்கள சூத்திரம் கையில் வாங்கி குனிந்து பாவையின் முகத்தை பார்த்தபடி அவள் கழுத்தில் சூடப் போகும் சமையம், கிருஷ்ணாவின் முதுகில் தொடர்ந்து துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததோடு, யாரும் எதிர்பாரா நேரத்தில் குழலியின் கழுத்திலும் மங்கலனான் சூடப்பட்டிருந்தது.
தொடரும்.
எப்டியோ கல்யாணம் ஓவர். லேட் ud னு கோவிச்சிக்க வேண்டாம் offline story முடிச்சிட்டு வர தாமதம் ஆகிடுச்சு. படிச்சிட்டு மறக்காம கமெண்ட் பண்ணுங்க drs. 10 ஆம் தேதிக்கு மேல் அமேசான் ரீடர்ஸ்க்கு புதிய விருந்தும் காத்திருக்கு 😅

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 19
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.