Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖

அத்தியாயம் 29

Administrator
Staff member
Messages
300
Reaction score
215
Points
63
அத்தியாயம் - 29

முதிர்ச்சியின் காரணமாக மனகவலையிலும் உடல் பலவீனம் அடைந்தமையாலும் பிபி ஏகத்துக்கும் அதிகரித்து அவசர பிரிவில் ஆக்சிஜன் மாஸ்க் பொறுத்தப்பட்டு உயிரை இழுத்துப் பிடித்துக் கொண்டு படுத்திருந்தார் ராமமூர்த்தி தாத்தா, எப்படியாவது பேரனை பார்த்து அவனிடம் ஓரிடண்டு வார்த்தகள் பேசிவிட்டு கண்மூடிட வேண்டும் என்ற வைராக்கியம் கொண்டு.

ஆரம்ப கட்டத்தில் மோகியின் இறப்பு செய்தி கேட்டு மிகுந்த வேதனைக்கு உண்டாகி விஷ்வரூபன் மீது தீராத கோவத்தில் ரத்தம் கொதித்து போனவர், வருடங்கள் செல்ல செல்ல அவள் மீது பைத்தியமாக ஆறு வருட காலம் ஆனபின்னும் அவள் வாழ்ந்த வீட்டில் அடைந்து சகலமும் மறந்து, தன்னவளுக்கு இழைத்த துரோகத்தை அனுதினமும் எண்ணி வேதனையில் புழுங்கி அவள் நினைவில் பைத்தியமாக இருப்பனை பார்த்தால் கல்லும் கரையும். அவனே உலகமாக இருக்கும் தாத்தா கரைய மாட்டாரா என்ன!

திடகாத்திரமான கட்டுடல் மேனி லேசாக உருகி நரம்புகள் யாவும் வெளி தெரிய கழுத்து வரை நீண்டு வளர்ந்திருந்த தலை முடியும் முகத்தை மறைத்து உணர்வுகளை பிரதிபலிக்கும் சிவப்பு நிற பழுத்த கண்கள் மட்டுமே தெரிய ஏனோ தானோவென ஏதோ ஒரு கையில் கிடைத்த பழைய உடையை அணிந்துக் கொண்டு தன் முன்னே நின்றிருந்த பேரனை கண்டு உள்ளம் தவித்தார் பெரியவர்.

தாய் தந்தை இருந்தும் அனாதைகளாக பிள்ளைகள் இரண்டும் நிற்கதியாக நிரதராவற்று வீதியில் நிற்பதை கேள்விபட்டு கிராமத்தில் இருந்து பதைபதைப்போடு ஓடி வந்தவருக்கு விபத்து நடந்தேறி கால் முட்டி உடைந்து விட்ட நிலையில் பிள்ளைகளிடம் வந்து சேர்ந்தும் அவரால் வேலைக்கு சென்று அவர்களை காப்பாற்ற முடியாத நிராயுதபாணியாக கலங்கி நின்றவரையும் சேர்த்து தங்களுக்கென்று இருக்கும் ஒரே உறவாக கருதி இரு பேரன்களும் அன்போடு பார்த்துக் கொண்டனர்.

அவரால் முடிந்த வீட்டு வேலைகளை பார்த்து, சமைப்பது துணி துவைத்து வைப்பது என்று வெளியே சென்று வரும் பிள்ளைகளுக்கு என்னென்ன தேவைகளோ அனைத்தும் முடித்து வைத்து விடுவார். வாழ்க்கையில் முன்னேற வேண்டி அவரால் முடிந்த நல்ல யோசனைகளை கூறி அன்போடு பார்த்துக் கொண்டார். ஆதரவு இல்லாத பிள்ளைகளுக்கு தாத்தா ரூபத்தில் ஒரு தகப்பனாக வாழ்ந்தவரை இருவரும் முன்னுக்கு வந்த பின் ராஜாவாக வாழ வைத்து கடைசி காலத்தில் மனநிம்மதி இல்லாமல் ஆக்கி விட்டனரே அண்ணன் தம்பிகள் இருவரும்.

தாத்தாஆஆ.. என்று அழைத்தவனின் பழுப்பு கண்கள் கலங்கி தாடிக்குள் ஒளிந்திருக்கும் அதரங்கள் இரண்டும் துடித்து அவரது கரத்தினை பற்றி மார்போடு அழுத்திக் கொண்டவனை, இப்பவாது இந்த தாத்தனை பாக்க வந்திட்டியா ரூபன்.. வேதனையாக கேட்டார்.

உங்களுக்கும் என்ன பிடிக்கலனு தானே என்னை விட்டு போக போறீங்க. ஏன் தாத்தா என்னை யாருக்குமே பிடிக்காம போச்சி அளவுக்கு அதிகமா என் அண்ணன் மேல பாசம் வச்சது தப்பா. அவன் மேல உள்ள பாசத்துல முட்டாள்தனமா ஏதேதோ கிறுக்குதனம் பண்ணிட்டேன் அதுக்காக எல்லாரும் என்னை தனிமை எனும் கொடுமையான நரகத்துல தவிக்க விட்டு போறது எந்த விதத்துல நியாயம். ஆறு வருடங்களாக உணர்வுகளை பிரதிபலிக்காமல் இருட்டறையில் அடைந்துக் கிடந்தவன் தாத்தாவின் கடைசி பயணத்தில் தன் குமுறல்களை அடக்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுதுக் கொண்டிருகிறான்.

மோகி இறந்த போதே அவள் இல்லாத துக்கம் தாங்க முடியாமல் போதை பொருட்களை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றவனை தடுத்து தடிக் கம்பினால் அடிஅடியென அடித்து விலாசி எடுத்த போதிலும் அரக்கனாக உருமாறி அடங்காமல் கத்திக் கொண்டு குதித்தவனை சரியான நேரத்தில் வந்து அடக்கிய விதுரன், பல அறிவுரைகளுக்கும் எமோஷனல் பேச்சுகளுக்கும் பின் அவன் உயிர் வாழ பிடிமானமாக இருந்து வருவது மோகியின் நினைவுகள் மட்டுமே.

நான் உயிரா நேசிச்ச ஒவ்வொருத்தரும் என்னை விட்டு போன பிறகு நான் மட்டும் யாருக்காக தாத்தா உயிர் வாழனும். எனக்காக யாருமே இல்லையே!.. ஆண் பிள்ளையின் அழுகையை கண்டு நெஞ்சம் வலித்தது தாத்தாவிற்கு. கை பிள்ளையாக இருந்த போது அவன் அழுதது, தாய் தந்தையின் பிரிவின் போது கூட அண்ணன் கரத்தை பிடித்துக் கொண்டு வெகுளியாய் சிரித்த பிஞ்சி முகம், அண்ணனின் மறைவில் கூட இறுக்கத்தை மட்டுமே தத்தெடுத்து பழிவெறி கொண்டு கண்ணில் இருந்து வெளி வந்த ஒரு சொட்டு கண்ணீரை வெடுகென உள்ளிழுத்துக் கொண்டவன், மோகியின் இழப்பில் மொத்தமாக உடைந்து தன்னை தானே மாறி மாறி அறைந்து வதைத்துக் கொண்டு பரிதாபமாக கதறி விட்டவனை கண்டு விதுரனும் தாத்தாவும் கலங்கி விட்டனர்.

இங்க பாரு கண்ணா சின்ன புள்ளயாட்டும் அழாத தாத்தாக்கு கஸ்டமா இருக்கு. எது எப்டியோ எதுவுமே நம்ம கைல இல்ல நடந்து முடிஞ்சத நினைச்சி உன்ன நீயே வதைச்சி வருத்திக்காம, இருக்குற மிச்சமீதி வாழ்க்கைய நிம்மதியா வாழ தொடங்கு. உன் சந்தோஷம் தான் என்னோட சந்தோஷம் கண்ணா ஒருமுறை எனக்காக சிரியேன் அப்பதான் இந்த தாத்தன் திருப்தியா கண்ண மூடுவேன். மூச்சி விட சிரமமாகி நெஞ்சிக்கூடு ஏறி இறங்க கண்கள் மேலே சொருகிய நிலையில், அவர் இத்தனை வார்த்தைகள் பேசியதே கடினம் தான்.

தாத்தாஆ.. என படபடப்போடு கண்ணீர் விட்டவனை அழாதே எனும் விதமாக தலையாட்டி. என் பேரன் இவ்ளோ பலவீனம் வாய்ந்தனா இருக்க கூடாது கண்ணா. மனிதா பிறந்த ஒவ்வொரு உயிரும் ஏதோ ஒரு வகைல தவறிழைசிட்டு தான் இருக்கும். அதற்கெல்லாம் என்ன தண்டனை கொடுக்கணும்னு உரிமை உள்ளவர்களும் காலமும் நேரமும் தான் முடிவெடுக்கனுமே தவிர்த்து வேற யாருக்கும் அந்த உரிமை இல்ல. செஞ்சது தப்புனு உணர்ந்து திருந்தி வாழ எண்ணம் தோன்றி இதுக்கு மேல அந்த தப்புகளை செய்யாம உன்னால முடிஞ்ச நல்லதை மட்டுமே செய் கண்ணா. கூடிய சீக்கிரம் உன் வாழ்க்கை வசந்தகீதமா மாறும். சத்தியம் பண்ணு ரூபன் இனிமே நீ என்னோட பழைய ரூபனா புது மனிதனா வாழ்வேன்னு எனக்கு சத்தியம் பண்ணிக் குடுப்பா.. கரம் நடுங்க அவன் முன்பு நீட்டியவரை பாவமாக கண்டான் விஷ்வரூபன்.

'அப்ப உண்மையாவே என்னை விட்டு போக போறீங்களா தாத்தாஆஆ..' குரல் உடைந்து நெஞ்சம் புடைத்து கேவினான் அன்பை காணாதவன் அல்ல அவன். தாய் தந்தையின் பாசத்தை விட அதிகமாகவே விக்கி அணைத்துமாய் இருந்து அவனை வளர்திருக்கிறான். தாத்தா இருவரையும் பாதுகாத்து அன்பை கொட்டி அரவணைத்து இருக்கிறார். இவர்களாவது ரத்த சொந்தம் ஆனால் மோகி? யாரோ ஒருத்தி. அவனுள் அன்னையை கண்டவள், அவனுக்கு அன்னையாக மாறி சகல மகிழ்ச்சியையும் அள்ளி பருகியவள். அவளோடு வாழ்ந்தது சிறிது காலமாக இருந்தாலும் உயிரை உருக்கிக் கொல்லும் இனிய அமுது விஷமாக அளவுக்கு அதிகமாக காதலோடு சேர்த்து பரிசுத்தமான அவளின் மனதையும் உடலையும் கொடுத்து அவன் மகிழ்ச்சியை கண்டு ரசித்து அவனுக்காகவே துடித்து உருகியவள். கடைசியில் அவள் அன்பும் பாதியில் முறிந்து கடைசி வரை அவனையும் பாராமல் அவள் முகத்தையும் காட்டாமல், தீராத வெறுப்போடு உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவிற்கு, விபரம் அறியாத சிசுவை ஈன்றெடுத்து அதன் முகத்தை கூட பாராது இறந்து போகும் தாயை போல, விஷ்வரூபனை தவிக்கவிட்டு உயிர் கூட்டை விட்டு சென்றிருந்தாளே.

இப்போது தாரத்தின் மடிக்கு ஏங்கி தவித்து கதறி அழும் அவளின் மூத்த பிள்ளையாய் அவன்.

உன்ன விட்டு நான் எங்கே போக போறேன் ரூபன். நான் எப்பவும் உன் கூட தான் உனக்கு துணையா இருப்பேன். இப்ப நீ சத்தியம் பண்ணு ரூபன். இனிமே பழைய விஷ்வரூபனா இருப்பேன்னு. அது தான் கடைசி நேரத்துல இந்த தாத்தனுக்கு நீ செய்ய போற பெரிய உதவி. கடினப்பட்டு தனது கடைசி வார்த்தைகளை பேசி முடிக்கவும் விஷ்வரூபன் அவரது கரத்தில் கரம் பதிக்கவும் மெல்லிய புன்னகையோடு பேரனின் முகத்தை ஆசையா பார்த்தபடியே தாத்தாவின் உயிர் பூஉலகை விட்டு பிரிந்திருந்தது.

மேலும் ஆறு மாதங்கள் கழித்து :,

VV கார்மெண்ட்ஸ் எம்டி அறையில் கம்பீரமான தோற்றத்துடன் முக இறுக்கம் மாறாமல் கண்களில் அதே ஆளுமை வாய்ந்த கூர்மை ஆனால் அதில் சிறிதும் உயிர்ப்பு இல்லை என்றாலும் உள்ளம் இலகி கனிந்து இருந்தது கற்பாறை இதயம் மென்மையை மட்டுமே சுமந்து கொண்டிருந்தன.

கடந்த ஆறு வருடங்களுக்கு முன் நம்பர் ஒன் இடத்தில் இருந்த விவி கார்மேண்டன்ஸ் அவன் இல்லாது மொத்தமாக சரியவிருந்த நேரத்தில் சரியாக வந்து தாங்கி பிடித்து நண்பனின் தொழிலை மீண்டும் பழைய நிலைக்கு மாற்றி இருந்தான் விதுரன். இப்போதும் அவனது விவி பிராண்ட் ஆடைகள் என்றால் தனி ரகம் தான் நம்பிக்கை வாய்ந்த தரம் தான்.

தாத்தாவின் இறப்பிற்கு பின் கண்ணீர் வற்றி பித்துக்குளித்து இருந்தவனை பார்க்க பார்க்க விதுரன் நொந்து போனான். ஒருநாள் அவனாகவே எழுந்தான், அளவுக்கு மீறி வளர்ந்திருந்த தலைமுடி தாடி மீசையை சீர்திருத்தி கிளீன் ஷேவ் செய்தவன், அலுப்பு தீர நன்றாக வெந்நீரில் குளித்து, பகை என்றால் என்னவென அறியாத போது இருந்த கனிவான விஷ்வரூபனாக பழைய உருவம் பெற்றான். கோர்ட் சூட் விகிதம் டிப்டாப்பாக கிளம்பி ஷூ லேசை கட்டிக் கொண்டு கண்ணில் கூலிங் க்ளாஸ் மாட்டிக் கொண்டு நிமிர்ந்த நடையோடு கம்பனி நோக்கி காரை இயக்கிக் கொண்டு இருந்தவனை கண்டு ஒரு மென்புன்னகை உதயமானது விதுரனுக்கு.

அளவுக்கு மீறிய பாசம் கூட பாசக்கயிறாக மாறி தன் கழுத்தையே சுற்றி உயிர் வரை தாக்கி மூச்சி முட்ட வைத்து ரணத்தை கொடுக்கும் என்பதனை நண்பனின் விடயத்தில் கண்கூடாக கண்டு திகைத்து இருக்கிறான். சொந்த வாழ்க்கையில் காதலின் ஏமாற்றத்தில் அடிப்பட்ட ரணமே இன்னுமும் அவன் நெஞ்சை விட்டு நீங்காமல் இருக்க, மேலும் நண்பனின் வாழ்க்கையில் நடந்தேறிய அசம்பாவிதங்களை எல்லாம் கண்கூடாக பார்த்தவன், வயது முப்பத்திஆறை தொட்டும் திருமண வாழ்க்கையை பற்றிய யோசனையே இல்லாமல், வீட்டை ஏமாற்றிக் கொண்டு தன் தொழிலையும் நண்பனின் நலனையும் பார்த்துக் கொண்டு இருக்கிறான்.

(பேசாம உனக்கு கல்யாணமே வேணாம் கடைசி வரைக்கும் நண்பனுக்கு துணையாவே இருந்துடு விதுரா, விஷ்வாவையும் உனக்கு துணையா மாத்திக்கலாம். எத்தனை கதைல தான் ஹீரோ ஹீரோயின கடைசி நேரத்துல சேத்து வச்சி புண்ணியம் பண்றது. இந்த கதைலயாவது நண்பனையும் நண்பனையும் ஒண்ணு சேத்து வச்சி (நீங்க நினைக்கிற மாதிரி இல்ல) கதையோட எண்டிங்க மாத்துவோம் , ரீடர்ஸ்கிட்ட கண்டபடி வசவு வாங்குறோம்)

அன்றில் இருந்து மீண்டும் பழைய விஷ்வரூபனாக கம்பனி பொறுப்பை கையில் எடுத்து மென்மேலும் சிறப்பாக நடத்தி வருகிறான். இன்றும் காரை அவன் இயக்கிக் கொண்டிருக்க, அமைதியான பார்வை பார்த்த விதுரனை அவனும் பார்த்தான். 'என்னடா ரொம்ப நேரமா என்னையே குறுகுறுன்னு பாத்துட்டு வர என்ன கேக்கணும்' அழுமூஞ்சி விஷ்வா மாறி தெளிவான குரல் சீராக வெளிவந்தது.

தாத்தாக்கு பண்ணி கொடுத்த சத்தியத்தை காப்பாத்த நிம்மதியா இருக்க மாறி இன்னும் எத்தனை நாளுக்கு நடிக்கப் போற விஷ்வா. சலனமின்றி கேட்டான்.

என் மோகிய ஏமாத்த அவகிட்ட காதலை பயன்படுத்தி நல்லவனா நடிச்சேன். இப்போ என் தாத்தாவோட கடைசி ஆசைக்காக பழைய விஷ்வாவா மாறி மூலைல முடங்காம நடிச்சிட்டு இருக்கேன், எது வரைக்கும் முடியிதோ நடிப்பேன். ஹ்ம்.. என் வாழ்க்கையே ஒரு நாடகமா மாறிடுச்சு விதுரா. விட்டேத்தியாக சொல்லும் நண்பனை அமைதியாக பார்த்தான்.

அடுத்து என்ன மூவ்? விதுரன் தான் கேட்டது.

பெருசா ஒன்னும் இல்ல, நியூ ஸ்ட்ரெயின் ப்ரூஃப் ஹைகுவாலிட்டி மெட்டீரியல் லான்ச் பண்ணனும் அதுக்கு நைட் டெல்லி போறேன் என்றான் தோளை குளுக்கி.

ம்ம்.. நானும் வரேன் பிக்கப் பண்ணிக்கோ என்றவனை ஒரு பார்வை பார்த்து. ஏன் மச்சான் தற்கொலை பண்ணிப்பேன்னு பயமா? கேலியாக இதழ் வளைந்தது.

சிறு புன்னகையை பதிலாக கொடுத்து வெளியே வேடிக்கை பார்த்தான்.

நீ இன்னும் எத்தனை நாளைக்கு, என்கூடவே என்னை பாதுகாத்துகிட்டு சுத்திட்டு இருக்க போற? மீண்டும் விஷ்வா தான் கேள்வி தொடுத்தான்.

உன் வாழ்க்கை சீராகுற வரை.

இப்போது விஷ்வரூபனின் முகத்தில் விரக்தி புன்னகை.

"கல்யாணம் பண்ணிக்கோ மச்சா, வாழ்க்கை சந்தோசமா இருக்கும்" மோகியின் நினைவில் லைத்து அனுப்பபூர்வமாக கண்கள் மூடி சொன்னவனை திரும்பி பார்த்தான். எல்லாருக்கும் உண்மையான காதல் கிடைச்சுடாது விஷ்வா. காதல்ல ஏமாற்றம் அடைஞ்சவங்களுக்கு தான் அதோட வலி தெரியும். அதை விட துரோகத்தோட வலி ரொம்ப ரொம்ப பெருசு விஷ்வா. அவன் வாழ்க்கையில் பட்ட அடியை சொன்னதும் குற்றமுள்ள நெஞ்சி குறுகுறுத்தன போலும் விஷ்வாவின் முகம் காந்தியது.

அதை விதுரனும் உணர்ந்திட. மச்.. நான் உன்ன சொல்லல டா, நான் எனக்கு நடந்த நிகழ்வுகளை நினைச்சி சொன்னேன் விஷ்வா. எங்கே பழைய மாதிரி பைத்தியம் ஆகி விடுவானோ என்ற பரிதவிப்பு அவனுக்கு.

பதில் கூறவில்லை அவன். வெற்று புன்னகை சிந்தி காரை வளாகத்துக்குள் வளைத்து நிறுத்தியவன், பழைய மிடுக்கோடு நண்பனோடு பேசியபடி தனதறைக்கு செல்ல, அவர்களை பின் தொடர்ந்து ஓடி வந்தான் புதிய காரியதிரசி மாணிக்கம்.

சார் நம்ம டெக்ஸ்டைல்ஸுல இருந்து நிறைய கஸ்டமர்ஸ் ரொம்ப வருஷமா கேட்டுட்டே இருக்காங்க, டிஜிட்டல் ட்ரான்ஸாக்ஷன் வசதி செஞ்சி தர சொல்லியும். இத்தனை வசதி, விதவிதமான துணிகள் கடல் போலஇருந்து என்ன பயன், சாதாரண இளநீர் கடைக்காரன் வச்சிருக்க ஒரு சிறிய ஆன்லைன் டிரான்ஸாசஷன் வசதி கூட இல்லாம என்ன பெரிய பிராமண்ட ஜவுளிக்கடைனு, பில் போடற இடத்துல சில கஷ்டமர்ஸ் சண்டை வேற பிடிக்கிறாங்களாம் என்றான் மூச்சி வாங்க.

நிதானமாக அவன் சொன்னதை கேட்டு திரும்பியவனாக. சாதாரண இளநீர் கடைக்காரன் ஆன்லைன் ட்ரான்ஸாசஷன் வச்சிருக்கான்னா அதுக்காக நான் என்ன பண்ண முடியும். ஒரு ரூபாயா இருந்தாலும் அது ஒவ்வொருத்தரும் கஸ்டப்பட்டு உழைச்சி சம்பாதிக்கிற பணம்.

ஒவ்வொரு பணத்தையும் பாக்கெட்ல இருந்து எடுத்து கைபட எண்ணி தரும் போது தான் உழைப்போட கஷ்டமும் பணத்தோட தேவையும் ஏக்கத்தோட உணர முடியும். நம்ம உழைச்ச பணம்னு ஒவ்வொருத்தருக்குள்ளயும் கர்வம் வரும், இல்லாதவனுக்கு பாத்து செலவு பண்ணனும்னு தோணும். அதையே இப்ப நீ சொன்னியே ஆன்லைன் பேமெண்ட், UPI ட்ரான்ஸாசஷன்ல எல்லாம் பணம் கைய விட்டு போகிற கஷ்டத்தை உணர முடியாது. ஸ்கேன் செஞ்சோமா போனோமானு இருக்கும். மாச கடைசில தான் அதோட தீவிரம் தெரியும்.

கைல பணம் இருந்தா பாத்து பாத்து செலவு பண்ண தோணும். அதுவே ஃபோன்ல பணம் இருந்தா பாத்துக்கலாம்னு செலவு பண்ண தோணும். மக்கள்கிட்ட போதுமான அளவுக்கு எல்லா வரியும் பிடிச்சி தான் ஒவ்வொரு பொருட்களுக்கு தகுந்த மாதிரி பணத்தை வாங்குறோம், சொல்ல போனா அதிகமாவே வாங்குறோம். இதுல டிஜிட்டல் முறையில வேற கொல்லை அடிக்கணுமா? புருவம் உயர்த்தி நகைத்து. ஊர் உலகம் எப்டி மாறினாலும் இந்த விஷ்வரூபன் சில விஷயங்கள்ள மாற மாட்டான்.

என் கடையில கார்ட் இல்ல கை மேல பணம் இப்டி தான் கொடுக்கல் வாங்கல் இருக்கும். டிஜிட்டல் எல்லாம் இன்னும் ஒரு பத்து வருஷம் போகட்டும் பாத்துக்கலாம். அலட்சியமாக கூறி விட்டு விருவிருவென நடையைக் கட்டிட. மக்கள் பணம் தானேயா போகுது, என்னவோ இவரு வீட்டு பணத்தை இனாமா தூக்கி கொடுக்குற மாதிரி இந்த பேச்சி பேசிட்டு போறாரு. மலங்க விழித்தவன் அடுத்த வேலையை கவனிக்க சென்றான்.

தொடரும்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 29
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top