Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
Administrator
Staff member
Messages
275
Reaction score
297
Points
63
அத்தியாயம் - 3

"ஆத்வி.. டேய்.. உன்ன தான் டா கூப்பிடறேன் காதுல விழுதா இல்லையா.." தன் தந்தையின் மேகசீன் ஒன்றை புரட்டியபடி அருகில் இருந்த ஆத்வியை, அசோக் அவன் பாட்டுக்கு கத்திக் கொண்டே வேகமாக உளுக்க,

"மச்..என்ன டா" மேகசீனை மடியில் போட்டு அலுப்பாக அவன் புறம் திரும்பிய ஆத்வியிடம்,

"நீ ஏன்டா அலுத்துக்க மாட்ட.. நான் பாட்டுக்கு உங்க அப்பா கண்ணுல படாம அவர் கண்ணுக்கு மறைவா வேலை வெட்டிக்கு போகலைனாலும் கஷ்ட பட்டு நாலு வெள்ளைகாரிய புடிச்சி சைட் அடிச்சி சுத்திட்டு இருந்தேன்.. அதுல ஒன்னு மடிஞ்சி இருந்தாலும் என் வாழ்க்கை இன்னைக்கு ஒளிமையமான எதிர்காலமா மாறி இருக்கும் தெரியுமா..

ஆனா நீ என்ன பண்ண, அந்த ட்ரவுசர் போட்ட வெள்ளைகாரி கரெக்ட்டா என்னை பிடிச்சி போய் என்கிட்ட வந்து அவ லவ் சொல்லப் போற நேரத்துல, 'மச்சா உன் பொண்டாட்டி புள்ளைங்கோ ஊர்ல இருந்து காலிங்னு' எனக்கே தெரியாத என் பொண்டாட்டி புள்ளைங்களை பத்தி இங்கிலிஷுல பீலா உட்டு, எங்க அப்பனுக்கு போனை போட்டு கொடுத்து மொக்க போட வாச்சதும் மட்டும் இல்லாம,

லவ்வ சொல்ல வந்த வெள்ளைக்காரி முன்னாடி என்னைய அசிங்கப்படுத்தி, என் வெள்ளையான எதிர்காலத்தை குழி தோண்டி புதச்ச துரோகி டா நீ.. அந்த புள்ள என்னை பாத்து என்ன சொல்லிட்டு போச்சி தெரியுமா,

'மிஸ் அண்டர்ஸ்டாண்ட் ஆகிடுச்சி சாரி அங்கிளாம்' என்னை பாத்தா அங்கிள் மாறியாடா இருக்கு" வராத கண்ணீரை துடைத்துக்கொண்டவனாக, "ப்ளீஸ் மச்சா என்னை ஏர்போர்ட்லே விட்டுர்றா அப்டியே அடுத்த ரிட்டன் பிலைட் புடிச்சி உங்க அப்பா கண்ணுல படாம ஓடிடறேன் "

கோவத்தில் தொடங்கி கடைசியாக கெஞ்சிக் கொண்டிருந்த அசோக்கை புரியாமல் பார்த்த ஆத்வி,

"டேய்.. டேய்.. ஒன் செகண்ட் இரு" என்றவன் அவன் காதில் போட்டிருந்த இயர்பாட்ஸை கழட்டி விட்டு, "இப்ப சொல்லு இவ்ளோ நேரம் என்ன சொல்லிடடு இருந்த" ஆத்வி கேட்ட விதத்தில் ரத்தம் கக்கி தான் அவன் சாகவில்லை.

"அப்போ இவ்ளோ நேரம் என் உயிர கைல பிடிச்சிட்டு பேசினேனே அதுல ஒன்னு கூடவா உன் காதுல விழல" அசோக் நெஞ்சில் கை வைத்து நொந்து போய் அவன் கையில் இருந்த இயர்பாட்ஸை பார்த்துக் கொண்டே அதிர்ச்சியாக கேட்க,

"ம்ம்.. என உதடு பிதுக்கி கை இரண்டையும் விரித்து காட்டிய ஆத்வி, "கேக்கலையே" புரியாமல் தலை ஆட்டி வைத்தவனை மூச்சி இறைக்கும் கோவத்தோடு, வெட்டவா குத்தவா என்ற ரேஞ்சில் பார்த்து வைத்த அசோக்,

"கஷ்டபட்டு அவ்ளோ பெரிய வசனத்தை மூச்சி முட்ட உன்கிட்ட பேசின எதையுமே காதுல வாங்காம என்ன கத்த விட்ட இல்லை டா, இந்த நாள்.. சரியா இந்த நாளை உன் காலெண்டர்ல குறிச்சி வச்சிக்கோ ஆத்வி" சொடக்கிட்ட அசோக்,

"நீ பேசுரது எதையுமே காதுல வாங்காம இதே மாறி என் நிலைமைய விட மோசமா, உன்ன ஒருத்தி சுத்தல்ல விடுவா.. அன்னைக்கு என் நியாபகம் உனக்கு வந்து, ஏன்டா நம்ம நண்பன் பேசினதை கேக்காம தப்பு பண்ணோம்னு நீ நினைச்சி வருந்துவ டா.. சத்தியம் பண்ணி சொல்றேன் டா, என்னோட இந்த சாபம் மட்டும் கண்டிப்பா ஒரு நாள் உன் வாழ்க்கைல பலிக்கல, நீ அவகிட்ட நொந்து நூடுல்ஸ் ஆகல நான் அசோக் இல்லை டா.."

ரஜினி போல சீரியஸாக விரல் நீட்டி டைலாக் பேசி தலையை சிலுப்பி விட்டு அவன் மார் தட்டிக் கொள்ள, அலட்சிய பார்வை வீசிய ஆத்வி ஏலனமாக இதழ் வளைத்து, அவன் தலையில் டிங்'கென்று ஒரு கொட்டு வைத்தவனாக,

"இப்ப எதுக்கு டா காமெடி பண்ணிட்டு இருக்க.. என் பின்னாடி கணக்கில்லாத பொண்ணுங்க சுத்தும் போது, நான் ஏன் டா ஒருத்தி பின்னாடி சுத்த போறேன்.. அதுவும் காது கேக்காதவ பின்னாடி.. எனிவே இப்ப எனக்கு சிரிக்கிற மூட் இல்லை, மூடிக்கிட்டு உக்காரு இல்லை ஓடற பிளைட்ல தலை கீழா கட்டி தொங்க விட்டுடுவேன்" என்றவனுக்கு தெரியாதே அசோக் விட்ட சாபம் உண்மையாகி, தான் ஒரு காது கேக்காத பெண்ணின் பின்னால் லோ.. லோவென நாக்கு தள்ளும் அளவு, ஆயுள் முழுவதும் சுற்றப் போகிறோம் என்று.

** ** **

"உன்னதான், ஏய்.. பொண்ணு" கத்தி கத்தி ஆதிக்கே ச்சீ.. என்று ஆகிப் போனது. எதற்கும் மசியாமல் காயங்களை ஆராய்ந்துக் கொண்டே கேவிக் கேவி அழுதுக் கொண்டிருந்த பெண்ணை கோவம் பொங்க உற்று நோக்கியவனுக்கு உடைந்து போன ஒரு பொருள் கண்ணில் பட்டது.

அதற்குள் தன் முக்கிய கடமையை முடித்து விட்டு ஓடோடி வந்த அஜய்,
"மாமா இந்த பொண்ண பாத்து தான் காரை விட்டு அவ்ளோ அர்ஜென்டா வர்ற மாதிரி ஓடி வந்தீங்களா" என்றதும் முறைத்த ஆதியை கண்டு "ஐயோ பாக்குறாரே.. ச்சீ முறைக்கிறாரே இப்ப என்ன பண்றது" என்ற யோசனையில் பேச்சை மாற்றும் விதமாக,

"மாமா சீக்கிரம் வாங்க இந்த பொண்ணை ஹாஸ்பிடல் அழைச்சிட்டு போலாம்.. பாவம் கை காலெல்ளாம் அடி பட்டு ரத்தம் வருது" என்றதும்,

"சரி நீ போய் காரை ஸ்டார்ட் பண்ணு அஜய்" என்ற ஆதி அந்த பெண்ணை தூக்கப் போகும் போது, மூச்சிரைக்க ஓடி வந்த மற்றொரு பெண்ணோ,

"ஐயோ.. கவி.. உன்ன ஓரமா தானே நிக்க சொல்லிட்டு போனேன்.. அதுக்குள்ள இப்டி ரத்தகிளறியா நடுரோட்ல விழுந்து கிடைக்குறியே டி.." அவள் காயங்களை பார்த்ததும் அழுது விட்டாள் ஸ்வாதி.

அடி பட்ட பெண்ணும் தோழியை கண்டு அவள் பேசியது புரியாமல் கண்ணீரோடு விழித்தவளாக,
"ஸ்.ஸ்வாதி.." என தேம்பளுடன் தரையில் கிடந்த எதையோ தேடி பொருக்கி எடுத்து அவளிடம் காட்ட, அதை கண்ட ஸ்வாதிக்கும் அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் பாவமாக அவளை பார்த்தாள்.

இரு பெண்களையும் பார்த்த ஆதி அஜய்யை அழுத்தமாக ஒரு பார்க்க. அதை புரிந்துக் கொண்டவனாக,
"ஏம்மா அந்த பொண்ண ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகணும் இப்டியே இருந்தா அதிக பிளட் லாஸ் ஆகி மயக்கம் தான் வரும்" என்றதும் பயந்து போன ஸ்வாதி "சார் இப்ப என்ன பண்றது" கலங்கி போய் கேட்டவள் கையில் சல்லி பைசா இல்லை.

"ஒன்னும் பிரச்சனை இல்லை நாங்களே இந்த பொண்ண ஹாஸ்பிடல் தான் கூட்டிட்டு போக போனோம் நீயும் வந்துட்ட, சரி உன் பிரண்ட எங்க கார்ல ஏத்து" அஜய் கூற, சரி என தலையாட்டியவள் அந்த பெண்ணை தூக்க முயற்சிக்கவும் கூடவே ஆதியும் அவளுக்கு உதவியவனாக, காரின் பின் சீட்டில் அமர வைத்து ஸ்வாதியும் அவள் அருகில் அமர்ந்துக் கொள்ள, ஆதி முன் சீட்டில் ஏறியதும் அஜய் காரை கிளப்பினான் மருத்துவமனை நோக்கி.

மருத்துவமனையில், அந்த பெண்ணின் காயங்களை சுத்தம் செய்து மருந்து வைத்து கட்டு போடுவதற்குள் மருத்துவரே ஒரு வழியாகி போயினார். கையே வைக்க வில்லை அதற்குள் உயிர் போகும் அளவிற்கு கத்தினாள். கத்தாதே என்று அதட்டினால் கூட அது அவள் காதில் விழ வேண்டுமே..!

யார் சொல்வதும் காதில் விழாமல், வலியில் மற்றவர்களின் உதட்டு அசைவை கூட கவனிக்க தவறி கத்தி ஆர்ப்பாட்டம் செய்த பெண்ணை பார்த்து பெரு மூச்சி விட்டனர் மூவரும். அதிலும் ஆதிக்கு சொல்லவே வேண்டாம், புதிதாக பிபி சுகர் எல்லாம் வந்து விட்டது, அவள் செய்த அலம்பலில்.

"ஏம்மா அந்த பொண்ணுக்கு காது கேக்காதா" ரொம்ப சீக்கிரம் கண்டு பிடித்து ஆயாசமாக கேட்டான் அஜய்.

"ஆமா சார், அவளோட ஹியரிங் மெஷினும் உடைஞ்சி போச்சி" ஸ்வாதி பதில் தந்தாள்.

"ஓஹ்.. அதை தான் அங்க உன்கிட்ட எடுத்து காட்டுச்சா அந்த புள்ள.. ஐயோ பாவம் இப்படி ஒரு அழகான பொண்ணுக்கு, இப்படி ஒரு குறையா" அஜய் சோகமாக உச்சி கொட்டவும், முறைத்த அதியை கண்டு ஆப் ஆகி விட்டான்.

அது என்னவோ சிறிது நேரம் தான் அஜயின் அமைதி எல்லாம். உடனே "ஏம்மா அந்த பொண்ணு பேரு என்ன" என்க.

"பார்கவி"

"ம்ம்.. ஸ்வீட் நேம் தான்.. ஆனா அந்த பொண்ணு ஸ்வீட் இல்லமா எப்பா என்னா கத்து கத்துது நமக்கு காது கீஞ்சிடும் போல" என காது மடலை ஆட்டிக் கொண்டு ஸ்வாதியிடம் கதை வளத்த தொடங்கிட,

"அஜய் ஸ்டாப்.. நீ காரை எடுத்துட்டு போய் ஆத்விய பிக்கப் பண்ணு.. பிளைட் லேண்ட் ஆக டைம் ஆச்சி" கை கடிகாரத்தில் மணியை பார்த்தபடி ஆதி சொல்ல,

"சரி மாமா அப்புறம் நீங்க எப்டி வருவீங்க" என்றான்.

"நான் டிரைவர்க்கு கால் பண்ணி வேற கார் எடுத்துட்டு வர்ற சொல்றேன்" என்றதும் சரி என ஸ்வாதியிடம் பார்கவிவை பத்திரமாக பார்த்துக் கொள்ளும் படி கூறி விட்டு சென்றான்.

அஜய் சென்றதும், ஆதி டிரைவர்க்கு போன் செய்து கூடவே எதையோ பேசி விட்டு வைத்தவன், வார்டு வெளியே அங்குள்ள இருக்கையில் அமர்ந்து கண் மூடி இருந்தான்.

உள்ளே ஸ்வாதி தெரியாமல் அவளிடம் ஒரே ஒரு கேள்வியை தான் கேட்டாள், "எப்டி அடிபட்டுச்சு என்று" அவளின் உதட்டின் அசைவை வைத்து கண்டு கொண்ட பார்கவி பதில் சொல்ல தொடங்கிய பிறகு , ஏன்டா அந்த கேள்வியை கேட்டோம் என நொந்து போனாள் ஸ்வாதி.

ஸ்வாதியும் அவளும் முக்கியமான வேலையாக யாரையோ பார்ப்பதற்காக நடராஜா சர்விஸில் பேசியபடி வந்துக் கொண்டு இருக்கையில், ஸ்வாதியின் ஹாண்ட்பேகை ஒருவன் பிடுங்கிக் கொண்டு ஒடவே, இரு பெண்களும் பயந்து கத்தியபடியே அவன் பின்னே ஓடியதில், பார்கவியால் ஓட முடியாமல் சோர்ந்து போய் தள்ளாடுவதை பார்த்த ஸ்வாதி,

"கவி நீ இங்கேயே ஓரமா நில்லு நான் போய் அவனை பிடிக்க முயற்சி பண்றேன்.. என்னோட id கார்ட், ஆதார், போன், கொஞ்சம் பணம் முக்கியமான எல்லாமே அதுல தான் இருக்கு" என்றவள் பதட்டமாக ஓடி விட்டாள்.

கவி முடியாமல் சரி ஓரமாக போய் நிற்கலாம் தோழி வறுவாள் என நினைத்தவளாக, சாலையில் கார் ஒன்று வேகமாக வருவதை கவனிக்காமல் நடந்து சென்றவளை, கார் வருவதற்குள் மற்றொரு டூவீலரில் மின்னல் வேகத்தில் வந்த இரு வாலிபர்களில் பின்னால் உள்ளவன்,
"ஏய் செத்துற போற" என கத்தி வண்டி போகும் வேகத்தில் கவியின் காதில் பொருத்தி இருந்த ஹியரிங் மெஷினோடு சேர்த்து, அவளின் வலது கையை பிடித்து சர்ரென இழுத்து விட்டு கையை உதறிக் கொண்டு வண்டியில் நிற்காமல் கூட பறந்து விட்டான்.

பாவம் அவன் இழுத்த வேகத்தோடு வண்டி போன வேகமும் சேர்த்து ஐந்து ஆறு அடி தூரம் சென்று விழுந்தவளுக்கு கை கால்களில் நல்ல அடி பட்டு, அவளின் ஹியரிங் மெஷின் சாலையில் விழுந்து நொறுங்கி போனது. இதை எல்லாம் தோழியிடம் சொல்லி முடித்தவளாக,

"அந்த கார்காரன் மோதி இருந்தா கூட எனக்கு இவ்ளோ அடி பட்டு இருக்காது போல, ஆனா அந்த பைக் சைக்கோ என்னை காப்பாத்துறேன்னு பேர்ல அவன் பாட்டுக்கு இழுத்து நடு ரோட்ல தள்ளி விட்டதும் இல்லாம, என் ஹியரிங் மெஷின வேற உடைச்சிட்டு போய்ட்டான்..

அதை வாங்க நான் எவ்ளோ கஷ்ட பட்டேன்னு உனக்கே தெரியும் தானே ஸ்வாதி.. இப்ப மறுபடியும் அவ்ளோ பணம் போட்டு நான் எப்டி வாங்குவேன்" கண்ணை கசக்கியவள், "எல்லாம் அந்த பேகை பிடுங்கிட்டு போன டாக் குரங்கால வந்துச்சி அவன் மட்டும் என் கைல கெடச்சான்.. அவன் கண்ணை நோண்டி காக்காக்கு போடுவேன்"

"எல்லாம் அந்த பேகை பிடுங்கிட்டு போன டாக் குரங்கால வந்துச்சி அவன் மட்டும் என் கைல கெடச்சான் அவன் கண்ணை நோண்டி காக்காக்கு போடுவேன்" நானும் ரவுடி தான் நயன்தாரா போல சொன்னதையே சொல்லி ஸ்வாதியின் காதுகளை புளிக்க வைத்தாள் என்றால்,
வெளியே அமர்ந்து இருந்த ஆதிக்கும் அவள் ரிபீட் மோடில் திரும்ப திரும்ப கத்திக் கொண்டு இருப்பதை கேட்டு இதழில் மெல்லிய புன்னகை அரும்பியது.

ஏர்போர்ட்டில், ஜீன்ஸில் ஆங்காங்கே கிழிந்து, சிங்க முகம் போட்ட ரெட் டீ-ஷர்டில் முன் பக்கம் மட்டும் இன் செய்து, அதில் பாயும் புலி அச்சிட்ட பெல்ட் அணிந்து, இன்னும் கூடுதலாக அவன் உயரத்தை காட்டும் வெள்ளை நிற கேஸ்வல் ஷூ, கையில் உயர் தர வாட்ச், கண்ணில் கருப்பு நிற கூலிங் கிளாஸ் விகிதம் கையில் ட்ராலியோடு ஸ்டைலாக நடந்து வந்தான் ஆத்வி.

அவன் பின்னால். சுற்றிலும் கண்களை மேய விட்டபடி "ஆதியின் கண்ணில் மட்டும் பட்டு விட கூடாது கடவுளே" என பல வாறு வேண்டிக் கொண்டு வந்த அசோக், எதிலோ முட்டி மோதி நிற்க்க, நிமிர்ந்து பார்த்தவன் வெடவெடத்துப் போனான்.

புயல் வீசும்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 3
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top