Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖

அத்தியாயம் 3

Administrator
Staff member
Messages
300
Reaction score
215
Points
63
அத்தியாயம் - 3

தரையில் உருண்டு பிரண்டு படுத்தும் உறக்கம் வருவதற்கு பதில் மோகித்தாவின் மீது கோவமே அதிகரித்துக் கொண்டிருந்தது விஷ்வரூபனுக்கு.

இருவரும் காப்பி குடித்த கப்பை கழுவி வைத்து விட்டு வந்த மோகி. விஷ்வா வெளிய மழை விடற மாதிரி தெரியல, நீ இங்கேயே படுத்து ரெஸ்ட் எடுத்துட்டு மழை விட்டதும் கிளம்பு. என்றவள் அவள் அறைக்கு சென்று பாய் தலையனை போர்வையை எடுத்து வந்து விரித்துப் போட்டு. கொஞ்சோ அட்ஜஸ்ட் பண்ணி படுத்துக்கோ விஷ்வா. இருக்குறது ரெண்டு ரூம் தான். என் பிரண்டும் அவ ரூம லாக் செஞ்சி வச்சிருப்பா, நானும் யாரையும் என் ரூம்குள்ள விட மாட்டேன். உனக்கு நான் சொல்ல வரர்து புரியிது தானே தயக்கமாக அவள் கேட்டிட.

ம்க்கும்.. உள்ள விட்டுட்டாலும் உன்ன தொட விட்டுட்டு தான் மறுவேலை பாப்ப பாரு என உள்ளுக்குள் சலித்து. அதெல்லாம் எனக்கு நல்லா புரியிது மோகிமா நீ இதையெல்லாம் பெருசு பண்ணிக்காம போயி தூங்கு. பாக்கவே ரெஸ்ட்லெஸா இருக்க பாரு. வெளியே தேன் வடிய பேசியதை நம்பிய பேதையோ சின்னதாக சிரிப்பை உதிர்த்து விட்டு அவள் அறைக்குள் சென்றிட. இங்கு மெத்தையில் தூங்கி பழகியவனுக்கு கோரைப்பாயில் படுக்க முடியாமல் உருண்டு பிரண்டவன் ஒரு கட்டத்திற்கு மேல் நன்றாக உறங்கியும் போனான்.

காக்கை குயில்களின் அழகான கீச்சி சத்தம் காலை பொழுதை இனிமையான பொழுதாக இனிக்க வைக்கும் விதமாக இருக்க. பூஜை மணியின் சத்தத்தில் மெதுவாக கண்களை கசக்கிக் கொண்டு சோம்பல் விட்டபடி எழுந்து அமர்ந்த விஸ்வா, அவனுக்கு எதிரில் குளித்து முடித்த பிரெஷ்ஷான ஆப்பிள் ஒன்று தலையில் வெள்ளை துவாளையை சுற்றிக் கொண்டு, சிவப்பு நிற சுடிதாரில் சிரித்த முகத்தில் பக்திமையத்தோடு உதட்டசைவில் கந்த சஷ்டி கவசம் சொல்லியபடி வீடெங்கும் சாம்பிராணி நறுமணம் வீசு, தீவாரதனை காட்டிக் கொண்டு இருந்தவளை இமைக்க மறந்து பார்த்த விஷ்வா. கடைசியாக கடவுளை மனமார வேண்டி அவள் ஒற்றை விரலில் எடுத்து நெற்றியில் இட்ட குங்குமம் அவள் பால் முகத்திற்கு இன்னும் அழகு கூட்டியதை அவனை அறியாமல் ரசித்தவன் மனதை அடக்கி தலையை தட்டி கேசம் கோதிக் கொண்டான்.

காதோரம் சரிந்த சிறிய துண்டு முடிகளை ஒதுக்கியபடி திரும்பிய மோகி, அவன் எழுந்து விட்டதை கண்டு மெலிதாக சிரித்து, குட் மார்னிங் விஷ்வா, தூக்கத்துல உன்ன டிஸ்டர்ப் பண்ணிட்டேனா என்றால் உறக்கக்கலக்கம் இன்னும் அவன் முகத்தை விட்டு நீங்காமல் இருப்பதை கண்டு.

ம்ஹ்ம்.. இல்லையே என தலையாட்டி, பின்னே இல்லையா. தூக்கத்த மட்டும் இல்ல டி என்னையே மொத்தமா டிஸ்டர்ப் பண்ற. பண்ணிட்டு இருக்க. ப்பா.. இந்த கோலத்துல உன்ன பாத்துட்டு காலைலயே டெம்ட் ஆகி போச்சே. மனதில் புலம்பிக் கொண்டு இருக்கையில் அவனிடம் தேநீரை எடுத்து வந்து நீட்டியவளின் அழகு வதனமும் அவளின் பட்டு மேனியில் இருந்து வெளிந்த மனதை மயக்கும் சந்தன மணமும் கிட்டத்தில் சுவாசித்து மூர்ச்சையாகி புத்தி பேதலித்துப் போனான் விஸ்வரூபன்.

என்னாச்சு விஷ்வா டீய வாங்காம இருக்க. காலைல உனக்கு டீ குடிக்க பிடிக்காதா என்ன. வெகு நேரமாகியும் அவன் வாங்காமல் வேறு லோகத்தில் இருப்பவனை தட்டி கேட்டிட. ஹான்.. அப்டிலாம் இல்ல மோகி தூக்க கலக்கம் இன்னும் போகல அதான். நீ குடு என்றவன் தேநீரை வாங்குகையில் பேதையின் விரல் தீண்டி வருடியபடி வாங்கியதில், பாவையின் விரல் கூசி சட்டென விலகி எழுந்துக் கொண்டால்.

"என்ன மோகி அதுக்குள்ள எழுந்துட்ட நைட் தூங்கினதும் லேட்டா தானே தூங்கின, இன்னும் கொஞ்ச நேரம் தூங்கி ரெஸ்ட் எடுக்க வேண்டியது தானே" அவளை பார்வையால் அங்குலமாக அளவிட்டு, உதடு காய்ந்திடாமல் இருக்க அடிக்கடி எச்சில் படிந்த ரோஸ் நிற நாவினால் ஆரஞ்சும் சிவப்பும் கலந்த நிறத்தில் இருக்கும் இதழ்களை ஈரப்படுத்திக் கொண்டவளை காண காணக் அந்த இதழை இழுத்து வைத்து கடிக்க வேண்டி துடித்த அவன் இதழ்களுக்கு இடையில் அவள் கொடுத்த தேநீர் பட்டு அவள் இதழை கடிக்கும் ருசியாக இனித்தது.

அவனது அக்கறை பேச்சிகள் அணைத்தும் பாவையின் மனதில் சக்கரையாக இனித்திட. இல்ல விஷ்வா நான் எவ்ளோ லேட்டா படுத்தாலும் காலைல சீக்கிரம் எழுந்தே பழகிட்டே, அதான் இன்னைக்கும் அதே நேரத்துக்கு முழிப்பு வந்துடுச்சி. வீட்டு வேலைய பாத்துட்டு மெதுவா காலேஜ்க்கு போக நேரம் சரியா இருக்கும். என்றபடி சாப்பாட்டு வேலையை கவனித்துக் கொண்டு இருக்க, அவள் வைக்கும் வெந்தயக் குழம்பின் வாசம் இத்தனை காலையிலே ஆடவனின் பசியை தூண்டி விட்டு இருந்தது.

ஏய்.. மோகி நீ நல்லா சமைப்பியா என்கிட்ட சொல்லவே இல்லையே, குழம்பு வாசம் ஆளை தூக்குது. அசைந்தாடி வேலை செய்யும் நங்கையின் பின் புறத்தில் பார்வை நிலைக் குத்தி பிதற்றியது அவன் வாய் மொழி.

என்ன விஷ்வா இப்டி சொல்ற. நம்ம முதல் மீட் அப்புறம் ஒரு முறை கிளாஸ் முடிஞ்சி நான் மதியம் சாப்ட்டுட்டு இருக்கும் போது நீ வந்தியே, அப்போ நீ என்ன சாப்பிடற மோகி வாசனை நல்லா இருக்குனு சொன்னியே நியாபகம் இருக்கா. அதுக்கு நான் அவியல்னு சொல்லி என்கிட்ட இருந்த இன்னொரு கப்பை உனக்கு கொடுத்தேன் சாப்ட்டு பாத்துட்டு செம்ம டேஸ்டா இருக்கு யார் செஞ்சா கேட்டதுக்கு. நான்தா செஞ்சேன் நல்லா சமைப்பேன்னு சொன்னேன்.
நீயும் உனக்கு நான்வெஜ்னா ரொம்ப பிடிக்கும்னு சொன்ன. அதுல இருந்தே வாரம் வாரம் நான்வெஜ் செஞ்சா உனக்கு கொண்டு வந்து தரும் போது ஆபிஸ்ல போயிட்டு சாப்பிடுறேன்னு வாங்கிட்டு போவியே. இப்ப வந்து ஒன்னும் தெரியாத மாறி நல்லா சமைப்பியா சொல்லவே இல்லையேன்னு கேக்குற.

யோசனையாக அவன் புறம் திரும்பி அவள் விளக்கவும். ஒரு நிமிடம் திருத்திருவென முழித்தவனுக்கு அவள் சொன்ன விடயங்கள் யாவும் நிபாகம் இல்லை என்பதே உண்மை. அதிலும் அவளிடம் வாங்கி செல்லும் உணவை, அதில் என்ன உணவு உள்ளது என்று கூட பிரித்துப் பார்க்காமல் போற வழியில் ஏதாவது குப்பை தொட்டி இருந்தால் எரிச்சலாக தூக்கி வீசி விட்டு செல்பவன் அவளின் அளவற்ற உன்னதமான அன்பை உணர்ந்து கொள்ளாமல் விட்டுவிட்டான்.

அ.அது. அதெல்லாம் எனக்கு நியாபகம் இருக்கு பேபி. உனக்கும் நீ சொன்னது நியாபகம் இருக்கான்னு டெஸ்ட் பண்ணி பாத்தேன். போன வீக் நீ கொடுத்த கனவா தொக்கு சான்சே இல்ல செம்ம டேஸ்டா இருந்துச்சி, என்றதும் அவனை குழப்பமாக பார்த்த மோகி. போன வாரம் நான் உனக்கு கொடுத்தது நல்லிஎலும்பு கிரேவி, கையில் கரண்டியோடு நின்று முறைப்பாக கூறியதும், ஹாஹா.. வசமா மாட்டிக்கிட்டோமே என திருட்டு முழி முழித்து. அது நியாபகம் இருக்கு பேபிமா. நேத்து பிரண்ட்ஸ் கூட வெளிய சாப்ட்டத மாத்தி சொல்லிட்டேன் போல. அசடு வழிய சிரிக்கவும் அவன் சொன்னதை அப்படியே நம்பி விட்டால் அப்பாவி மங்கை.

சிறு வயதில் இருந்தே தாயில்லாமல் தந்தையின் பாசத்தை மட்டுமே பார்த்து வளந்தவளுக்கு, திடீரென கிடைத்த விஷ்வாரூபனின் போலியான பாசத்தை நம்பி அவனே ஆதியும் அந்தமும் என நினைத்து வாழ்பவளுக்கு, கொஞ்சமும் தன் காதலுக்கும் அன்புக்கும் பாசத்திற்கும் தகுதி இல்லாத ஒருவனை தேர்ந்தெடுத்து அவனிடம் தன் வாழ்க்கையையே தொலைக்கப் போவதை அறியாத அப்பாவி நங்கையின் வாழ்வு எப்படி திசை மாறி செல்ல காத்திருக்கிறதோ!!

ஏய் மோகி இங்கே எங்கே பாத்ரூம் இருக்கு. நைட்டே கேக்கணும்னு பாத்தே அதுக்குள்ள நீ உள்ள போயிட்ட, நானும் எத்தன நேரம்தா பொறுத்துட்டு இருக்க முடியும். கால்களை இடுக்கிக் கொண்டு நெளிந்தவனை கண்டு, ஸ்ஸ்.. என கண்களை பாதியாக மூடி இதழ் கடித்து தலையில் அடித்துக் கொண்டவள். சாரி விஷ்வா நான் அதை பத்தி யோசிக்கவே இல்ல. என் ரூம்லதா இருக்கு போயிட்டு யூஸ் பண்ணிக்கோ. என்றதும் உள்ளுக்குள் கருவி சிறு தலையாசைப்போடு அவளை அழுத்தமாக பார்த்தபடி உள்ளே சென்றான்.

வெளியே வேறு எங்கும் இல்லாததால் அவள் அறைக்கே அவனை அனுப்பி வைத்தவள் மிச்சம் இருந்த வேலைகளை அவள் கவனித்துக் கொண்டு இருக்க. தன் அவசர வேலையை முடித்து விட்டு வெளியே வந்தவன் மோகித்தாவின் சிறு அறையை சுற்றிப் பார்த்தான்.

சிறு அறையாக இருந்த பின்னும் மிகவும் சுத்தமாக வைத்திருந்தால் மோகி. சுவற்றில் ஆங்காங்கு அவளின் புகைப்படம் மாட்டி இருக்க, அதில் சிலது அவளின் தந்தையோடு எடுத்துக் கொண்டதும் இருந்தது. இப்போது தான் அவள் தந்தையை பார்க்கிறான் அதுவும் புகைப்படத்தில். அதற்கே அவன் முகம் அஷ்டகோணலாகி விட்டது. உடல் மெலிந்து கூலி வேலை செய்து உழைத்து உழைத்தே சத்துக்கள் வடிந்து சதைகள் வத்தி வெறும் என்புகள் மட்டுமே அவர் உடலில் மிஞ்சி இருப்பதை கண்டு அத்தனை இளக்காரம் அவன் முகத்தில்.

இந்தாளுக்கும் அவன் பொண்ணுக்கு கொஞ்சம் கூட சம்மந்தமே இல்லையே உண்மையாவே இவ அம்மாக்காரி இந்தாளுக்குதா இவள பெத்து இருப்பாளோ. கேவலமான எண்ணம் அவன் மனதில் தோன்றி வேறு எதையும் ஆராய விரும்பாமல் அங்கிருந்து வெளியே வர. 'சரி விஷ்வா இப்ப மழை நல்லாவே விட்டுடுச்சி நீ சாப்ட்டு கிளம்பு நானும் காலேஜ் போறேன். ஈவினிங் டைம் இருந்தா பாக்கலாம்' என்றிட.

இல்ல மோகி நீ சாப்ட்டு வா நானே உன்ன காலேஜ்ல ட்ராப் பண்ணிட்டு வீட்டுக்கு போறேன். என்றவனுக்கு அவள் செய்த உணவை உண்ண கொஞ்சமும் விருப்பம் இல்லை. பிடித்தமும் இல்லை.

'ஏன் விஷ்வா நீ சாப்பிடலையா நான் உனக்கும் சேத்துதா செய்தே. வா வந்து சாப்ட்டு போ. நான் நடந்தே காலேஜ் போய்டுவே இங்க தெருமுக்குட்டுல ஒரு குட்டி பாப்பா நிப்பா அவ்ளோட பேசிட்டே போய்டுவேன் நீ வந்து சாப்ட்டு வேலையோட வீட்டுக்கு போ' என்றவள் அவனுக்கு உணவு பரிமாறி தானும் உண்ட பிறகு, அவனை வலுக்கட்டாயமாக அனுப்பி விட்டு அவள் சொன்னது போலவே நடந்து சென்று விட்டால்.

அவள் வீட்டில் தனியாக தங்கியும் கொஞ்சமும் தனக்கு இசைந்து போகாமல் மீண்டும் மீண்டும் அவள் பின்னே நாய் போல் தன்னை சுற்ற விடுகிறாளே என்ற எண்ணமே விஷ்வரூபனின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க இருசக்கர வாகனத்தை மின்னல் வேகத்தில் இயக்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தவனை, 'டேய்.. நில்லுடா' என்ற வயதான நடுங்கும் குரலோடு தடி கம்பால் தடுத்து நிறுத்தினார் அவன் தாத்தா ராமமூர்த்தி.

தொடரும்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 3
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Messages
62
Reaction score
53
Points
18
Mmmm ji Ivan nallavana ? Kettavana? Apo Ivana tha mogi marg pannika poarala? Illa vera hero vandhu mogi ivanta irundhu kaapathi marg pannikuvana?:ayyo ore tension ah iruku ji...next epis lam konjam sekiram kudunga ji...
 
Top