Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖

அத்தியாயம் 34

Administrator
Staff member
Messages
300
Reaction score
215
Points
63
அத்தியாயம் - 34

என்ன சார் விளையாடுறீங்களா. நீங்க பண்ணது எல்லாம் கொஞ்ச நஞ்சம் இல்ல இன்னும் நான் வேற உங்களுக்கு உதவ போய் மோகி டெல்லிய விட்டும் கிளம்பி போய்ட்டானா நான் அவளை எங்க போய் கண்டுபிடிக்க. ஏதோ அவ டெல்லிக்கு வந்த புதுசுல எதார்த்தமா என் கண்ணுல பட்டதால அவளோட இக்கட்டான நேரத்துல எல்லாம் நான் கூட இருந்தேன் இல்லனா அவளோட நிலை என்னனு உங்களுக்கு தெரியுமா? ஆவேசமாக அவள் பொங்கிட அமைதியாக பார்த்தான் விஷ்வரூபன்.

அன்னைக்கு நீங்க என்னை மிரட்டி சொல்ல சொன்ன பொய்யால இப்ப வரைக்கும் என் முகத்தை பாத்து ஒரு வார்த்தை கூட பேச மாட்டேங்குறா. இதுல உங்களுக்காக நியாயம் பேசி சப்போர்ட் பண்ண போனேன் அவ்வளவு தான், நெஞ்சில் கை வைத்து மூச்சிறைத்தாள் கண்மணி.

கண்மணி கூல் இப்ப எதுக்கு இவ்ளோ டென்ஷன் ஆகுற. முதல்ல நான் சொல்றத கேளு அப்புறம் மெதுவா யோசனை செஞ்சி எனக்கு உதவலாமா வேணாமானு முடிவு பண்ணு. அதுக்கு முன்னாடி மோகி எப்டி இங்க வந்தா? வேதிதா பிறக்கும் போது என் மோகி எப்டி இருந்தா? பிள்ளை பேரு காலத்தில் தன்னவள் எப்படி தனியாக தவித்தாளோ என்ற தவிப்பு அவனுக்கு.

நீங்க என்ன சார் ஆம்பள அதுவும் பெரிய இடத்துல இருக்கீங்க. நீங்க என்ன செஞ்சாலும் ஊரும் உலகமும் உங்கள கண்டு பேச பயந்து அடங்கி போய்டும். ஆனா மோகி அப்டியா? ஏழை குடும்பத்து பொண்ணு, அப்பாவோட வளர்ப்புல ஒழுக்கம் நன்னடைத்தையோட கட்டுக்கோப்பா வளர்ந்தவ அப்படிப்பட்டவளோட மானத்தை படம் பிடிச்சி திரைல விட்டா இந்த ஊரும் உலகமும் சும்மா இருந்திருக்கும்னு நினைக்கிறீங்களா வேதனையாக கேள்வி தொடுத்தவளின் முகத்தை பார்க்க முடியாமல் தானும் ரணவேதனையோடு தலை குனிந்துக் கொண்டான்.

ஏங்க கண்மணி.. அவன் அப்டி பண்ணலைங்க, எல்லாம் கூட இருந்தே ஒரு நாயி நன்றிக்கெட்டு பண்ண வேலை. அவனுக்கு சரியான தண்டனைய விஷ்வாவே கொடுத்துட்டான், நண்பனுக்கு பரிந்து பேசிய விதுரனை சிறு முறைப்போடு அமைதியாக கண்டாள் கண்மணி.

என்னமோ போங்க இந்த விஷத்துல இவர் மேல தான் முழு தவறும் இருக்கு. இவரோட அஜாக்கிரதையால ஒரு அப்பாவி பொண்ணோட மானம் மட்டும் போகல அவ குடும்பத்துக்கே கெட்ட பேரராகி அவளுக்கு எல்லாமா இருந்த அவ அப்பாவோட உயிரும் போயிருக்கு. இதை எல்லாம் இவர் திரும்ப பழைய மாதிரி சரி செஞ்சிடுவாரா என்ன? சொல்ல போனா இவரே அவ மானத்தை எப்டி பறிச்சி அவமானப் படுத்தலாம்னு காத்திட்டு இருந்தவர் தானே இப்ப புதுசா வந்த நானோதியத்தால பெருசா என்ன மாறிடப் போகுது. அலட்சியமாக உரைத்தவள் மேற்க்கொண்டு நடந்தவற்றை சொல்லலானாள்.

பெத்த மகளோட ஆபாச வீடியோவ பாத்து அவமானம் தாங்காம துடிதுடிச்சி செத்துபோனவரை வீட்டோட கொளுத்தி தானும் அவமானம் தாங்காம கிணத்துல குதிச்சிட்டா மோகி. அவமேல ஆசைப்பட்ட அவ மாமா கருங்காளி அவ பிழைச்சிட்டா இதை வச்சே மோகி மேல இருக்க இச்சைகளை மிரட்டி உருட்டி தீர்த்துக்கலாம்னு ஹாஸ்பிடல் தூக்கிட்டு வந்து சேத்தான்.

ஆனா அது மோகியோட நல்ல நேரமோ என்னவோ, அதே வார்டுல கணவன் ஏமாத்திட்டு போயிட்டதால இன்னொரு பொண்ணும் தற்கொலைக்கு முயன்று கிணத்துல குதிச்சதா சொல்லி தூக்கிட்டு வந்து சேர்த்து இருக்காங்க. இவன் மோகிக்காக வெளிய காத்திருக்க, ரெண்டாவதா கிணத்துல குதிச்ச பொண்ணு இறந்துட்டதா சொன்னதை மோகினு நினைச்சி கருங்காளி போய்ட்டான். இறந்து போன பொண்ணு வீட்லயும் யாரும் வரல அது மோகிக்கு சாதகமா பயன்படுத்திக்கிட்டா என்றதும் மீசை துடிக்க கைமுஷ்டியை இறுக்கிக் கொண்டான்.

மெல்ல மெல்ல மயக்கம் தெளிந்து கண் விழித்து பார்த்த மோகியின் நினைவில் அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் அனைத்தும் நினைவில் வந்து போக முகத்தை மூடி கதறி அழுதுக் கொண்டிருந்தவளை பதறி போய் வந்து பார்த்த மருத்துவர் சொன்னதை கேட்டு திகைப்பில் விரிந்தன விழிகள்.

வாயும் வருமா இருக்கும் போது யாராவது கிணத்துல குதிப்பாங்களா. என்னமா நீங்க எல்லாம் படிச்சவங்க தானே பிள்ளை வேணாம்னா முன்கூட்டியே ஜாக்கிரதையா புருசன் கூட இருக்குறது இல்லையா. மருத்துவர் வசைபாட மானம் போய் தந்தை இறந்த கையோடு சாகலாம் என்று பார்த்தால் இது என்ன புது சோதனை என்று ஒன்றும் புரியாத நிற்கதியான நிலையில் அவள் தவித்துக் கொண்டு இருக்கும் போது தான் பதறி அடித்து ஓடி வந்திருந்தான் விஷ்வரூபன்.

அவனை இப்படி ஒருசூழ்நிலையில் கண்டவளின் கண்களுக்கு படுபயங்கர மோசமான அரக்கனாக மட்டுமே தெரிந்தான். காதல் பெயரை சொல்லி என் பெண்மைய கலங்க படுத்தினதும் இல்லாம நினச்ச மாதிரியே என் வாழ்க்கைய அழிச்சி என் அப்பாவ கொன்னு என்னை அனாதையாக்கி மனசாட்சியே இல்லாம பழி தீர்த்தவன் நீ. அப்படிப்பட்டவனுக்கு என் வயித்துல வளர்ர குழந்தைய பத்தி தெரிஞ்சா அதையும் கொல்ல தயங்க மாட்டான். அவன் பழிவெறி தீர வேண்டும் என்றால் எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருப்பான் என்று அவனை கண்டு அஞ்சி மிரண்டு போனவள் அவன் மீது உள்ள மொத்த காதலும் மண்ணோடு மண்ணாகிய நிலையில், குழந்தைக்காக வாழ முடிவெடுத்து மருத்துவரிடமே உதவி கோரி, தான் இறந்து விட்டதாக யார் வந்து கேட்டாலும் சொல்ல சொன்னவள் அவரின் ஆதரவில் டெல்லியை வந்தடைந்து பல துன்பங்களை மேற்கொண்டாள் மோகித்தா.

பல பேர் அவள் முகத்தை அடையாளம் கண்டு, ஆபாச வார்த்தைகள் பேசி பின்னால் வந்து தொந்தரவு செய்ய நொறுங்கிப் போனவள் எத்தனை நாட்களுக்கு வாடகை வீட்டில் வேலையின்றி அடைந்துக் கிடக்க முடியும். மனதை திடப்படுத்திக் கொண்டு முகம் தெரியாத வாறு துப்பட்டாவால் முகத்தை சுற்றி மறைத்து கொல்லைக்காரிப் போல் வளம் வந்தாள். முதல் மூன்று மாதங்கள் வரை அவளுக்கு பண உதவி செய்த மருத்துவர், அவளின் கல்லூரி சென்று சர்டிபிகேட்ஸை வாங்கி வந்து அவளிடம் ஒப்படைத்து விட்டு கடமை முடிந்தது இனி நீயே எப்படியாவது நல்ல வேலைக்கு சென்று உடலையும் குழந்தையையும் நல்லபடியாக பார்த்துக்கொள் என்றவர் அவர் கணவனோடு வெளிநாடு சென்று செட்டில் ஆகி விட்டார்.

அதன் பிறகு வந்த நாட்களில் மோகியை பற்றிய சலசலப்புகள் அடங்கினாலும் வெளியில் முகத்தை காட்ட அத்தனை பயந்து போனாள், தவறிய தந்தையை நினைத்து கலங்காத நாளில்லை. விஷ்வரூபன் என்ற ஒருவனை அடியோடு வெறுத்து அவனை பற்றி நினைப்பது கூட பாவத்திலும் பெரும்பாவம் என்று முற்றிலுமாக அவன் நினைவை குப்பை போல் தூக்கி எரிந்து பெண்கள் கல்லூரியில் ஆசிரியராக வேலைக்கு சேர்ந்தாள்.

எப்போதும் மாஸ்க் முகத்தில் இருக்கும் மாணவிகள் கேட்டால் டஸ்ட் அலர்ஜி என்பாள் தடுமாற்றம் மறைத்து. வயிற்றில் உள்ள குழந்தையே அவள் உலகமாகி போனது. இத்தகைய சூழலில் மாதம் மாதம் மருத்துவமனைக்கு பரிசோதனை செய்ய செல்ல வேண்டும் என்பதெல்லாம் அவளுக்கு சரிவர சொல்லிக் கொடுத்து வழி நடத்த யாரும் இல்லை. வயிறு வளர்ந்தால் குழந்தையும் நன்றாக வளர்ந்து விடும் என்று ஏனோ தானோவென சென்றுக் கொண்டு இருக்கும் போது தான் விபத்து ஒன்று நடந்தேறி அப்படி ஒரு இக்கட்டான நிலையில் மோகியை கண்மணி சந்தித்தாள்.

தந்தை இறந்ததும் கண்மணியை கட்டாயத்தின் பெயரில் அண்ணன் தினேஷ் தாயை காட்டி மிரட்டி டெல்லி அழைத்து வந்து விட்டான். வீட்டு சிறை போல் இப்போது வரை வைத்திருக்கிறான் அவன் பேச்சை மீறி சென்றால் கண்மணியின் அன்னை உயிருக்கு உத்திரவாதம் இல்லை சொத்துக்காக எதையும் செய்ய துணிந்து விட்டான் என்பதை அறிந்து தனது மனதுயரங்களை தனக்குள்ளே புதைத்துக் கொண்டு அமைதியாக அவனுடன் இருக்கிறாள்.

அப்படியிருக்க அன்று அண்ணிக்காரிக்கு உடல்நலம் சரி இல்லை அவளை ஹாஸ்பிடல் அழைத்து சென்று பரிசோதனை செய்து விட்டு வா என அண்ணன்காரன் உத்தரவுப் போட்டு செல்ல, வேண்டா வெறுப்பாக அண்ணியோடு வரும் வழியில் மோகி நிறைமாத வயிற்றோடு ரத்த வெள்ளத்தில் கால்கள் துடிக்க சாலையில் கிடைப்பதை கண்டவள் பதறி துடித்து தோழியை மருத்துவமனைக்கு சென்றவள், உடன் வந்த பன்னிக்காரியை மறந்துப் போனாள்.

எட்டு மாதம் நிறைவடைந்து ஒன்பதாவது மாதம் தொடக்கம் அது. எப்படியும் குழந்தை இன்னும் கொஞ்ச நாட்களில் பிறந்து விடும் அப்போது குழந்தையை வைத்துக் கொண்டு அதற்கு தேவையானவற்றை கடைக்கு சென்று வாங்குவது எல்லாம் கடினம் என்று கல்லூரியில் சக ஆசிரியரின் சொல்லின்படி, விடுமுறை நாளன்று மதியம் கடைக்கு சென்றாள். குழந்தைக்கு குட்டி குட்டி உடைகள், பேபி ஷாம்பு, சோப், பவ்டர், பேம்ப்பர்ஸ், மை, குளிருக்கு ஸ்வெட்டர், கை கிளவுஸ், காலுக்கு கலர் கலர் சாக்ஸ், தலைக்கு குல்லா கூடவே தனக்கும் பீடிங் நைட்டீஸ் என பை நிறைய வாங்கிக் கொண்டாள்.

மதியம் சரிவர உண்ணாது போனதிலும் கடை கடையாக சுற்றிய களைப்பிலும் கண்ணை இருட்டிக் கொண்டு வந்ததில் மாலை நான்கு மணி போல் கையில் நிறைய பைகளோடு சாலையை கடந்தவளை ஒரு கார் அடித்து தூக்கி சென்றது.

நல்லவேளையாக பெரிதாக அடியில்லை என்றாலும் கார் தூக்கி எறியப்பட்ட வேகத்தில் தலையில் அடிப்பட்டு பணிக்குடம் உடைந்து அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டது. வெளியே கண்மணி பதட்டத்தில் துடித்து நிற்க, அறுவைசிகிச்சை முடிந்து பனிக்கட்டி பொம்மை போல் குட்டியாக அவள் கையில் கொடுத்த ரோஜாமலரின் கால்கள் தாயின் வயிற்றில் இருந்த போதே ஊட்டச்சத்து பற்றாக்குறையால் செயலிழந்து இருப்பதை மருத்துவர் சொன்னதை கேட்டு அதிர்ச்சியாகி நின்றாள்.

இவ்விடயம் கேள்வி பட்டதும் கதறி அழக் கூட தெம்பற்றவளாய் மனம் வெறுத்துப் போனவள், தன் கவலைகளை எல்லாம் தனக்குள்ளே பூட்டிக் கொண்டவளாக கண்ணீரோடு தன் தான் பெற்ற முத்துக்கு முத்துக் கொடுத்து நெஞ்சோடு அணைத்து அமுது பறுகியவள், இருக்கையில் அமர்ந்திருந்த கண்மணியின் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள் இல்லை.

காரணம், அப்போதே விஷ்வரூபன் தன்னை மிரட்டி உருட்டி அப்படி ஒரு பொய்யை சொல்ல சொன்னான் என்று தாமதமாக கூட சிறு முயற்சி எடுத்து அதை பற்றி தன்னிடம் தெரிவித்து இருக்கலாமே அதைவிட்டு சுயநலமாய் யோசித்து இவளும் தனக்கு துரோகம் செய்தவள் தானே என்ற எண்ணம் இதுவரை கண்மணியிடம் நேரடியாக பேசாமல், தன்னையும் குழந்தையையும் காப்பாற்றிய காரணத்தினால் தன்னை பற்றிய விபரங்களை குழந்தையை நடுவில் வைத்து கடத்திக் கொண்டு இருக்கிறாள் இப்போது வரை.

முதலில் அவள் நிலையை எண்ணி கலங்கிய கண்மணி அதன் பிறகு அவள் முகம் கொடுத்து பேசவில்லை என்றெல்லாம் கவலை கொள்ளாமல், தான் முதல் முதலில் தொட்டு தூங்கிய தோழியின் குழந்தைமீது அளவுகடந்த அன்பை வைத்து அவளே உடன் இருந்து நன்றாக கவனித்துக் கொண்டு, தற்போது மோகி இருக்கும் அபார்ட்மெண்ட்டில் தங்க வைத்தாள்.
(குறிப்பு - அப்போது கண்மணியின் அன்னை நன்றாக இருந்ததால் அவரிடம் மட்டும் சொல்லி விட்டு அவரின் துணையோடு அவள் அண்ணனுக்கு தெரியாமல் தான் வீட்டை விட்டு வெளியேறி மோகியை பார்த்துக் கொண்டாள். தினேஷும் பெரிதாக கண்மணியை தேட மாட்டான் காரணமின்றி. அதனால் இப்போது வரை பிரச்சனை இல்லாமல் செல்கிறது)

கண்மணி அணைத்தும் சொல்ல சொல்ல கேட்ட விஷ்வரூபன் தன்னவளின் துயரங்களை எண்ணி கலங்கி இருக்க, விதுரன் அதிமுக்கிய கேள்வியை அவளிடம் தொடுத்து முறைப்பை பரிசாக வாங்கிக் கொண்டான்.

அது என்ன முக்கிய கேள்வி?

தொடரும்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 34
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top