- Messages
- 300
- Reaction score
- 215
- Points
- 63
அத்தியாயம் - 36
ஹெலோ மோனி.. என்ன டி ஆச்சி ஏன் போன் செஞ்சிட்டு நீ பாட்டுக்கு அழற. எத்தன முறை கேக்குறேன் பதில் சொல்லு டி. நான் வேணும்னா ஹாஸ்டல்க்கு கிளம்பி வரட்டுமா.. அந்த பக்கம் மோகி, தோழிக்கு என்னானதோ ஏதானதோ என பரிதவித்துப் போனாள்.
இல்ல இல்ல மோகி நீ வர வேண்டாம். வெகு நேரம் கழித்து கேவலோடு பதில் வந்தது.
அப்பறம் ஏன் டி அழற. உடம்புக்கு ஏதாவது முடியலயா? யாராவது உன்கிட்ட தப்பா பேசினாங்களா? ஓரளவு மோனிகாவைப் பற்றி நன்கு தெரியும் என்பதால் எதற்கு அழுகிறாள் என்று கணித்து விட்டாள்.
தப்பா பேசி இருந்தா கூட பரவால்ல மோகி, என் விக்கிய பத்தி தப்பா பேசிட்டாங்க என்னால தாங்கிக்க முடியல டி.
யார் பேசினா எப்பவும் உன்ன கிண்டல் பண்ணுங்களே அந்த சீனியர் கோஷ்டியா?கோவம் வந்தது மோகிக்கும்.
ம்ம்..
அவங்கள சும்மாவா விட்டு வந்த?
வேற என்ன பண்றது. அவங்க எல்லாரும் பெரிய ஆளுங்க பிள்ளைங்க.
பெரிய ஆளுங்க பிள்ளைங்கனா கொம்பா முளைச்சி இருக்கு. அது எப்டி அடுத்தவங்கள பத்தி தப்பா பேசலாம். நீயும் அதை கேட்டு வந்து அழுதுட்டு இருக்க பாரு உன்ன என்ன டி பண்றது. உரிமையாக கடிந்தாள் மோகித்தா.
அவங்ககிட்ட பேச எனக்கு பயமா இருக்கு. விக்கியும் தொடர்ந்து போன் பண்றாங்க அட்டன் பண்ணி பேசினா எல்லாத்தையும் அவருகிட்ட உளறி வச்சிடுவேன் மோகி நான் அழுதா வேலைய அப்டியே விட்டுட்டு என்ன பாக்க உடனே எங்கிருந்தாலும் ஓடி வந்திடுவாரு. பாவம் என்னால வேலை கெட்டு போய்டும் அதான் என்ன பண்றதுனு தெரியாம உனக்கு போன் போட்டேன். அப்பாவி பெண் கண்ணை கசக்க. குழந்தைத்தனமான காதலிலும் தன் இணையை முழுதாக நம்பி யாரிடமும் விட்டுக் கொடுக்காத அவளின் உறுதியான காதலை எண்ணி வியந்தாள் மோகி.
முட்டாள்.. முட்டாள்.. இன்னும் ஏன் டி சின்ன புள்ள மாதிரியே இருக்க. அவர் போன் பண்ணா எடுத்து பேசலைனா என்ன நினைப்பாரு சொல்லு. இன்னும் தான் பயந்து போவாங்க. அடுத்த போன் கால் வரர்துகுள்ள நீயா போன் போட்டு நார்மலா பேசு மோனி. எதுவா இருந்தாலும் அவங்க ஊருக்கு வந்ததும் சொல்லி அழு இப்ப அமைதியா இரு என படித்து படித்து தோழிக்கு அறிவுரை கூறி போனை வைத்தும் பயன் என்னவனோ பூஜியம் தான். ஓட்டை வாய் சுந்தரி அனைத்தையும் அச்சு பிசுங்காமல் விக்கியிடம் ஒப்பித்து விட்டது.
அடுத்து என்ன இரவோடு இரவாக தன்னவளின் துயரம் தீர்க்க ஓடோடி வந்து விட்டான் தீராக்காதல் கண்ணன்.
என் பாப்பூகுட்டிஇ.. என்றது தான் தாமதம் குரங்குகுட்டியாக அவன் இடுப்பில் ஏறி அமர்ந்துக் கொண்டவளை வாஞ்சையோடு அணைத்துக் கொண்டான் விக்னேஷ்.
68 கிலோ வெயிட்டான என்னையே அசால்ட்டா எப்பவும் தூக்கிகிற உனக்கு போய் வயசாகிடுச்சு சொல்றாங்க விக்கி. அப்டியே வயசானா தான் என்ன எப்பவும் என் விக்கி எனக்கு ஸ்மார்ட் அண்ட் யங் பாய் தான் அவன் கன்னத்தில் முத்தம் வைத்து ஆசைக்கண்ணனை ரசனையாக கண்டாள் மைவிழியாள்.
அவ்வளவு தான் அவளின் கோவம் தன்னவனிடம் எதையும் மறைத்து பழக்கமில்லாத வெள்ளை காகிதம் அவளது மனம். அவனிடம் தன் பாரத்தை இறக்கி வைத்தால் மட்டுமே இயல்பாக மூச்சி விடும் நிலையில் எல்லை மீறி காதல் கூடி விட்டது. காதலியை மகள் போல் தாங்கும் காதலன் கிடைப்பதெல்லாம் வரம் அல்லவா. அப்படிப்பட்ட வரத்தை பெற்றும் வாழ கொடுத்து வைக்காத துர்பாக்கியசாலி அவள்.
காதலுக்கும் அன்புக்கும் நேசத்திற்கும் கொஞ்சமும் குறைவில்லாது நன்றாக தான் சென்றுக் கொண்டு இருந்தது இருவரது வாழ்க்கையும். பொச்சரிப்பும் பொறாமையும் நெருங்காத வரை!
அன்று ஏதோ அந்த ஐவரும் கோவத்தில் அப்படி பேசிவிட்டார்கள் என்று அமைதியாக விட்டு பிறவேலைகளை பார்த்துக் கொண்டு இருக்க, மீண்டும் மீண்டும் மோனியின் மனதை கலைத்து இருவரையும் பிரித்து விட்டு அற்பசந்தோஷம் கிட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் அதையே தொடர பொருக்க முடியாமல் கடுமையாக பொங்கி விட்டான் விக்னேஷ்வரன்.
நீங்க எல்லாம் படிக்க தானே வரீங்க. கூட படிக்கிற பொண்ண போய் கிண்டல் செஞ்சி அவ மனச காயப்படுத்துறதுல உங்களுக்கு என்ன கிடைக்குது அப்டி. வயசு அதிகமானவனை தானே காதலிக்கிறா முறைகேடா ஒன்னும் காதலிக்களையே இதுல உங்களுக்கு என்ன வலிக்குது ஹான்.. வெஞ்சினமாக சீறியவனை கண்டு அஞ்சி நடுங்கினர் ஐந்து ஜந்துக்களும்.
இதுதான் கடைசி இனிமே என் மோனி பக்கம் உங்க பார்வை திரும்பினாலே இந்த விக்னேஷ்வரன் யாருனு முழுசா காட்ட வேண்டி இருக்கும். படிக்கிற பசங்களாச்சேனு அமைதியா விட்டு போறேன். திரும்ப திரும்ப தொல்லை பண்ணீங்க.. நாக்கை மடித்துக் கடித்து விரலை ஆட்டி காப்பு உருல அவன் மிரட்டி சென்ற விதம் அளவுகடந்த பயத்தையும் தாண்டி வெறி உண்டாயின பணத்தில் ஊரிய திமிர் பிடித்த அரக்கர்களுக்கு.
இனிமே அவங்க எதுவும் செய்ய மாட்டாங்க லட்டு. தைரியமா இரு உன் விக்கி எப்பவும் உனக்கு துணையா கூடவே இருப்பேன் சரியா. கிளிப்பிள்ளைக்கு கொஞ்சலோடு பாடம் சொல்ல அழகாக தலையை ஆட்டிக் கேட்டுக் கொண்டது.
அவளின் பலம் தைரியம் பலவீனம் அனைத்தும் விக்னேஷ்வரனே மாறிப் போக விக்கி என்ற மந்திரச்சொல் யானை பலத்தை கொடுத்தது அச்சிறுப்பெண்ணுக்கு.
காதலிக்கும் ஆணுக்கும் பெண்ணிற்குக்கும் வயது பெரிய காரணமாக தெரியவில்லை. அவர்களின் சொந்தங்களுக்கும் உண்மையான காதலை தவிர வேறெதுவும் பெரிதாக தோன்றவில்லை. ஆனால் வெளிஉலகம்? சும்மா இருக்கும் சங்கை சொரிந்து விட்டு துன்பப்படுத்திப் பார்க்கவில்லை என்றால் ஒரு மிடரு எச்சில் கூட நிம்மதியாக விழுங்க முடியாது. கல்ல கண்டா நாயக் காணோம் நாயக் கண்டா கல்லைக் காணோம் கதை தான். அப்படி தான் அந்த ஐந்து விஷக்கிருமிகளும்.
மீண்டும் இல்லாததும் பொல்லாததும் சொல்லி மோனிக்கு கிடைத்த நல்லவாழ்க்கையை கெடுக்க முயற்சி செய்து கடைசியில் அவளின் விக்கியைப் பற்றி தரைகுறைவாக பேசி கோவம் என்றால் என்ன என்று கேட்கும் பெண்ணையே கை நீட்டி அடிக்க வைத்து அவள் மீது தீரா பழியை உருவாக்கிக் கொண்டு விக்னேஷ் வராத நேரம் பார்த்து மோனிகாவை கடத்தி விட்டனர் ஐவரும்.
விடுங்க விடுங்க என்ன.. நான் உங்களுக்கு என்ன பாவம் பண்ணேன் எதுக்காக கடத்தி வச்சி பயம்புருத்துறீங்க. அழுகை வந்த வண்ணமே இருக்க இருக்கும் இடத்தை கண்டு பயத்தில் உடல் மொத்தமும் உதறியது.
(இதற்கு மேல ரொம்ப டீப் சீன்ஸ்க்கு போக வேண்டாம். சிலரும் பொங்க வைக்க வாய்ப்பிருக்கு பட்டூஸ் மேலோட்டமா டக்குனு முடிச்சிட்டு விஷ்வா மோகிய சேத்து வைக்க பிளான் பண்ணலாம். ஹி.. ஹி..)
ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த பழைய கட்டிடத்திற்கு மேலே உள்ளே கட்டப்படாத காங்கிரீட் போஸ்ட்டில் கட்டி வைக்கப் பட்டிருந்த மோனிகாவைக் கண்டு 'உன்ன விடுறதுக்காகவா ஸ்கெட்ச் போட்டு உன்னோட வயசான ஆள் கண்ணுல படாம தூக்கிட்டு வந்தோம்' ஏளனமாக கோணி சிரித்த ஐவரையும் மிகுந்த அச்சத்தில் பார்த்தாள்.
என்ன அப்டி பாக்குற. உன்ன குண்டுனு சொல்லி நாங்க கேலி பண்ணா கிழவனை துணைக்கு கூட்டிட்டு வருவியா நீ. அதுவும் நாங்க எல்லாரும் அவன் லெவல்க்கு வசதியான வீட்டு பசங்கனு தெரிஞ்சும் கொஞ்சம் கூட பயம் இல்லாம எங்களையே மிரட்டிட்டு போவானா அவன்.
இதுல அந்த கிழவனை சொன்னா உனக்கு கோவம் வந்து எவ்ளோ தைரியம் இருந்தா எங்களையே கை நீட்டி அடிச்சி இருப்ப, உன்ன சும்மா விடுவோமா நாங்க. பற்களை கடித்தவர்களை கண்டு மிகுந்த அச்சத்தில் மயக்கம் வருவது போல் இருந்தது காரிகைக்கு.
அதிலும் ஒருவன் அவளிடம் எல்லை மீற அருவருப்பில் அழுகை வெடித்து 'விக்கி சீக்கிரம் வந்து காப்பாத்துங்க விக்கி' விம்மி அழத் தொடங்கியவளை சுற்றி நின்று கை தட்டி சத்தமாக சிரித்தனர்.
எங்கள பாரு டி.. எங்கள பாரு.. எவ்ளோ ஸ்லிம்மா ஸிரோ சைஸ்ல ஃபிட்டா பியூட்டியா இருக்கோம். எங்களுக்கு எல்லாம் இப்படி ஒரு பணக்காரன் எவனும் உண்மையா காதலிக்க கிடைக்கலையே டி. நீ பாரு குண்டு பணியாரம் போல வீங்கி வெடிக்க தயாரா இருக்க உனக்கு போய் உருகி உருகி காதலிக்க அப்படி ஒரு ஆணழகன். வயசு முப்பது தாண்டி இருந்தாலும் அவனை மாதிரி ஒரு அழகன நாங்க யாரும் பாத்ததே இல்லையே டி கேவலம் உனக்கு போய் ராஜ வீட்டு விருந்தா ஐவரும் சேர்ந்து ஒன்றாக அவள் முகத்தில் துப்ப அவமானத்தில் கண்ணீரோடு கரைந்து அந்த எச்சிலும் முகத்தில் வடிந்தது.
ஆக தங்களை விட அழகிலும் அந்தஸ்திலும் கீழ் இருப்பவர்களுக்கு தங்களை விட பெரிதாக ஒன்று கிட்டிவிட்டதே என்ற வயிற்றெரிச்சல் பொச்சரிப்பு பொறாமை அணைத்தும் ஒன்று சேர்த்து அழகிய வண்ண மாலையாக விரல் கோர்த்து சுற்றித் திரிந்த பாட்டம்பூச்சிகளின் றெக்கைகளை மட்டும் வெட்ட துணியவில்லை பாட்டம்பூச்சி கூட்டத்தையே மொத்தமாக இணைசேர முடியாதபடி அழிக்கத் துணிந்து விட்டனர் இந்த சைக்கோ கும்பல்.
விக்கி ப்ளீஸ் வந்திடு.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு மனதுக்குள் அவன் பெயரை இடைவிடாது சொல்லிக் கொண்டு அழுதவளை, என்னவோ உன் வீங்கி போன சதைய பாத்து உலகஅழகி ரேஞ்சிக்கு அந்த அரைக்கிழவன் பீலா விடறான் அந்த அளவுக்கு உன்கிட்ட என்ன வித்தியாசமா இருக்குனு நாங்க பாக்குறோம் வா டி.. பெண்ணவளின் கதறலை பொருட்படுத்தாமல் மூணு ஆண் மிருகமும் நாசம் செய்ய, செவிப்பறையை கிழிய வைக்கும் அவள் உயிர் துடிக்க வதைப்படும் அலறல் சத்தத்தை சிகரெட்டையும் ஓட்காவையும் ஊதிக் குடித்தபடி பக்கத்து தடுப்பில் ஒய்யாரமாக அமர்ந்து கேட்டு ரசித்தனர் இரு பெண் உருவில் உள்ள பூதங்களும்.
அன்று "வர தாமதம் ஆகும் சிறிது நேரம் காத்திருது எங்கேயும் சென்று விடாதே லட்டுக்குட்டி" என குறுந்செய்தி அனுப்பியவன் எப்படியோ அரக்கப்பறக்க வேலையை முடித்து விட்டு ஒரு பத்து நிமிடங்கள் கூட தாமதமாகி இருக்காது கல்லூரி வந்து சேர. அதற்குள் மோனியை கடத்தி அவனை கதிகலங்க வைத்து விட்டனர்.
எங்கு தேடியும் அவளை காணவில்லை. பதட்டத்திலும் பயத்திலும் இதயம் தாறுமாறாக துடித்து உடல் வியர்க்க கைகால்கள் நடுகத்தோடு வீதி வீதியாக தேடி அலைந்தவனுக்கு தன்னவளுக்கு ஏதோ பெரும் ஆபத்து என்று மட்டும் உறுதியாக புலப்பட்டது.
கடைசியாக அவள் அனுப்பிய குறுந்செய்தி, 'உனக்காக உன் லட்டு காத்திருக்கேன் விக்கி சீக்கிரம் வந்திடு' கிஸ் ஸ்மைலியும் ஹார்ட் சிம்பிலும் எக்கச்சக்கமாக போட்டு அனுப்பி இருந்தது அவனை கண்டு பரிதாபமாக சிரித்து வைத்தது.
எப்படியோ தன்னவளை தேடி கண்டுப் பிடித்து விட்டான். ஒரு ஆண்மகனாக தன் காதலியை பார்க்கக் கூடாத கொடூர கோலத்தில். அத்தனை வலியிலும் அவனை கண்டதும் தந்தையை கண்ட குழந்தையாய் சிரித்தாள் அவனது குழந்தை காதலி. உயிர் துறந்து மரண வேதனை கண்டான் தந்தையான காதலன்.
ஐயோ.. மோனிஇஇஇஇஇ.. அவன் கதறலை கண்டு இதயம் விம்மித் துடிக்க பேச கூட முடியாத நிலையில் கண்ணீரை கரம் நடுங்க துடைத்து விட்டாள். குருதி தோய்ந்த கரத்தில் கண்ணீர் முத்தமிட்டான். பேச நா எழவில்லை அவள் பட்ட வேதனையை எண்ணி உயிர் நடுங்க வலி கண்டான்.
ந.நம்ம நினச்ச மாதிரி என் பிரண்ட் மோகிய உன் தம்பிக்கு கட்டிக் கொடுத்துடு விக்கி. ஸைகை மொழி ஒன்னும் பாதியும் பேசினாள். வற்றாத கண்ணீரோடு தலையாட்டிக் கொண்டான். நான் தான் உன்கூட வாழ கொடுத்து வைக்கல உன் தம்பி ரொம்ப ரொம்ப நல்லவர் மோகியும் ரொம்ப நல்ல பொண்ணு என் கடைசி ஆசை சேத்து வச்சிடு விக்கிஇ.. கண்கள் சொருக தன் ஆசையை முன்வைத்தாள்.
செய்றேன் தங்கோ.. நீ உன் விக்கிகிட்ட வாடி. மடியில் வைத்து கதறினான். அவள் இருந்த நிலையை கண்டு உயிர் பிழைக்க மாட்டாள் என்று மடையனும் உணர்ந்து கொள்வான், அனுபவசாலி உணராதிருப்பானா!!
ம்.ம.ன்னிச்சுடு வ்.விக்கி என்னால முடியல நெஞ்சம் புடைத்தது வலி தாலாமல். ஐயோஓஓ.. என் தங்கமேஏஏ.. அவன் சத்தம் வானை பிளந்தது.
'உன்கூட கடைசி வரைக்கும் வருவேன்னு நம்ம வச்சி ஏமாத்திட்டேன் விக்கி. என்னை நம்பி கடைசில நீதான் ஏமாந்து போய்ட்ட' ரணத்தில் உதடுகள் நடுங்கிட 'ப்ளீஸ் விக்கி எனக்காக கடைசியா ஒண்ணு செய்வியாஆ..'
என்ன டி செய்யணும்.. தப்பா ஏதாவது சொல்லி என்னை கொல்லாதே டி, இதுவரைக்கும் எதுக்கும் பயந்தது கிடையாது நான் இப்போ ரொம்ப பயமா இருக்கு லட்டு ப்ளீஸ் விட்டு போய் என்னை ஏமாத்திடாத டி.. காதலியின் உயிருக்காக அவளிடமே உயிர் பிச்சை கேட்டு கெஞ்சி அழுதான் ஆண்மகன் விரக்தி புன்னகை அவள் இதழினில்.
நான் இப்டி ஒரு கேவலமான நிலையில கற்பை பறிகொடுத்து அவமானப்படுத்தி சாகப் போறேன்ற விஷயத்தை யாருகிட்டயும் சொல்லாம மறைச்சிடு விக்கி. கற்பு போன கலங்கம் என்னோடே போகட்டும் ப்ளீஸ் என்னை உன் கையாலே எரிச்சிடு விக்கிஇ.. கண்ணீரோடு வேண்டுதல் விடுத்து பிளந்த வாயோடு கண் மூடியவளின் முகத்தில் ஈக்கள் மொய்க்க, இதய செயல்ப்பாடு செயலிழந்தவன் போல் பிணமாய் விக்னேஷ்வரன்.
மனங்கள் யாவும் ஒன்றல்லவே ஒருவர் மனம் போல் மற்றொருவர் மனம் இருந்து விடுமா என்ன. எதையும் தாங்கும் கனமான இரும்பு மனமும் உண்டு, மெல்லிய அதிர்வை கூட தாங்க முடியாத காகித மனமும் உண்டு. ஓரளவுக்கு மேல் அதிர்வலை அடித்துக் கொண்டே இருந்தாள் இரும்பு கூட துருப் பிடிக்கும் சிறிது சிறிதாக உதிரத்துவங்கும். விக்னேஷ்வரனின் பலம் வாய்ந்த மனமும் தற்போது வெறும் காகிதமாக.
இதயத்தை விட பலவீனமானதும் சக்திவாய்ந்ததும் மனம் மட்டுமே. காலநேரத்திற்கு ஏற்படும் தாக்கங்களால் மனிதனின் எண்ணங்களும் மாறுபடும். அப்படி தான் தன்னவளின் கொடுமையான சாவு அவன் மனதையும் இதயத்தையும் ஒருசேர பாதித்து விட தாக்குப் பிடிக்க முடியாமல் கொல்லி வைத்த கட்டையால் தன்னை தானே அடித்துக் கொண்டு அவளிடமே சென்று விட்டான் நிரந்தரமாக.
தற்கொலை மனிதனின் எண்ணத்திற்கு புறம்பானது. ஏன் அப்படி தோன்றுகிறது எதற்கு அப்படி தோன்றுகிறது என்றால் பயத்திலும் அதிகபடியான விரக்தியின் உச்சத்திலும் தான்செய்வது சரியா தவறா என்று யோசித்து செயல்படும் எண்ணங்களை எல்லாம் தாண்டும் போது தான் ஒரு மனிதன் தற்கொலை என்ற எல்லையை தாண்டுகிறான்.
அணைத்து விஷயத்திலும் தற்கொலை ஒன்றே தீர்வல்ல. ஒரு நொடியாயினும் சித்திந்து செயல்படுவீர்!! வாழ்வதும் சாவதும் ஒருமுறை தான். வாழும் போது முடிந்த வரையில் சாவைப் பற்றி நினைக்காமல் வாழ்ந்தாலே அடுத்தடுத்த இக்கட்டுகள் மாயமாய் மறைந்து போகும் புது வசந்தம் வீசி வாழ்க்கை சிறக்க வெளிச்சம் பிறக்கும்.
தொழிலின் உச்சத்தை தொட்டவனால் வாழ்க்கையின் உச்சத்தை அடையமுடியாமல் போனது.
இதில் மோகியை தவறாக புரிந்துக் கொண்டது விஷ்வரூபன். "உன் வாழ்க்கையில் எக்காரணம் கொண்டும் அந்த தேவதை பெண்ணை விட்டுவிடாதே டா" என்ற அர்த்தத்தில் விக்கி கடைசியாக சொல்லி இருக்க "தன் சாவிற்கு காரணமானவளை எக்காரணம் கொண்டும் விட்டுடாத டா" என்ற அர்த்தத்தில் இவன் புரிந்துக் கொண்டான். தேவதையை அரக்கி போல் பாவித்து விட்டான்.
அத்தனையும் கேட்ட கண்மணிக்கு மூச்சி முட்டியது. ஒரு பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்பதை அவள் அண்ணி மூலம் ஏற்கனவே கண்டவள் தான் ஆனாலும் இப்படி ஒரு கொடூரம் ப்ப்பா.. நினைத்து பார்க்கவே அப்பெண் உடலும் நடுங்கி விட்டது.
(இதை முழுசா அப்பவே விக்கி, விஷ்வாட்ட சொல்லி செத்து போயிருந்தா நமக்கு கதைக்கு கண்டண்ட் கிடைச்சி இருக்குமா சொல்லுங்க. கண்டண்ட் கொடுத்த தெய்வம்யா இந்த விக்கி)
அப்ப எல்லா தப்பும் உங்க மேல தான் இருக்கு. நீங்க தான் எதையும் முழுசா தெரிஞ்சிக்காம மோகிய கஸ்டபடுத்தி இருக்கீங்க. மீண்டும் பழைய பல்லவியை கண்மணி பாட ஆயாசமாகி விதுரனின் தோளில் சாய்ந்து கொண்டான்.
அழுகாச்சி பிளாஷ் பேக் எல்லாம் ஓவர் ஓவர்.. இனிமே லவ் அண்ட் ரொமான்ஸ் மோடுக்கு போய்டலாமா பட்டூஸ்?
தொடரும்.

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 36
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.