Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖

அத்தியாயம் 38

Administrator
Staff member
Messages
300
Reaction score
215
Points
63
அத்தியாயம் - 38

டேய் விஷ்வா எதுக்கும் பாத்து பக்குவமா நடந்துக்கோ மச்சான். மோகி உம்மேல கோவமா இருந்தா கூட பரவால்ல ஆனா கோவத்தை எல்லாம் தாண்டி மனசளவுல ரொம்பவே பாதிக்கப்பட்டு இருக்கா. உம்மேல உயிரையே வச்சிருந்த அண்ணன் தன் காதலியோட கொடுமையான இழப்பை தாங்காம உன்ன பத்தி யோசிக்கிற நிலைய தாண்டி தற்கொலை செஞ்சிகிட்டாரு.

நீ உம்மேல உயிரையே வச்சிருந்த அண்ணனுக்காக அவர் கடைசியா சொல்ல வந்ததை தெளிவு படுத்தி புரிஞ்சிக்காம முட்டாள்த்தனமா உன்னையே நம்பி இருந்த பொண்ண ஏமாத்திட்ட. அந்த நிலைமைலயும் உன் சட்டைய பிடிச்சி கேள்வி கேட்டு செருப்பால அடிக்காம, தனக்குள்ள வந்த உயிர காப்பாத்த போராடி உன் குழந்தைய பெத்து பாசத்தை கொட்டி வளக்குறா பாரு சச் அ கிரேட் சோல் டா அவ. இதுக்கு பேர் தான் சுயநலம் இல்லாத தூய்மையான அன்பு. இனிமேலாவது அவ வாழ்க்கையும் உன் வாழ்க்கையும் எந்த ஒரு சிக்கலும் இல்லாம நிம்மதியா சதோஷம் மட்டுமே நிறைஞ்சி இருக்கனும். குழந்தைக்காக பெயருக்கு கடவுளை வணங்கி விட்டு கோவில் வளாகத்தில் மோகித்தா வேதிதாவை தூக்கிக் கொண்டு சுற்றி வர அவர்களை பின் தொடர்ந்து வருகையில் நண்பனுக்கு அறிவுரை வழங்கலானான் விதுரன்.

அமைதியாக அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டவனுக்கு இத்தனை வருடங்கள் கழித்து அவள் முன்பு சென்று நிற்க தயக்கம் பயம் அவள் தன்னை ஏற்பாளோ மாட்டாளோ என்று. தவறு செய்யும் போது ஏற்படாத குற்றவுணர்ச்சியும் குறுகுறுப்பும் திருந்தி வாழ நினைக்கும் போது பூதாகரமாக தலைவிரித்து ஆடுவதை எண்ணி மனதளவில் நொந்து போனான்.

கருங்கூந்தல் மயில் தோகையாக அசைந்தாட சந்தன நிற ஷிபான் புடவையின் கொசுவத்தை லேசாக கையில் தூக்கிப் பிடுத்த வண்ணம் காலில் இருந்த செருப்பை கழட்டி விட்டு மூச்சிறைக்க ஓடி வந்த கண்மணி 'என்ன சார் மோகிய பாத்து பேசுடீங்களா?' என்றாள் அவசரகதியில்.

நீங்க வந்ததும் போய் பேசுடானு நாந்தாங்க அவனை போக விடாம பிடிச்சி வச்சிருக்கேன். விஷ்வாக்கு முன்னமே முந்திக் கொண்ட விதுரனை ஏன்? என்ற கேள்வியோடு பார்த்தாள்.

ஏன்னா என்னங்க அர்த்தம் சேப்ட்டி முக்கியம் இல்ல. நான் எப்டி என் பிரண்டுக்கு நல்லது கெட்டது பிரிச்சி சொல்லி தரேனோ நீங்களும் உங்க பிரண்டுக்கு எடுத்து சொல்லுங்க. மோகி மோகி.. ஆயிரம் தான் இருந்தாலும் அவரு உன் குழந்தைக்கு அப்பா, தெரியாத்தனமா நிறைய தவறு செஞ்சிட்டாரு பாக்கவே பாவமா இருக்கு, ப்ளீஸ் கொஞ்சம் பெரிய மனசு பண்ணி மன்னிச்சி ஏத்துக்கோ அப்டி இப்டினு எக்ஸ்ட்ரா பிட்டு போட்டு தற்சமயத்துக்கு சேத்து வைங்கங்க விஷ்வாவின் தோளில் கை போட்டு அவன் உரைத்திருக்க கண்மணி மூக்கு சுருக்கி அவனை முறைத்து நின்றாள்.

ஹெலோ சார் என்ன கிண்டல் பண்றீங்களா? என்னாலலாம் அப்டி பேச முடியாது. நானா போயிட்டு இவருக்கு சப்போர்ட் செஞ்சி பேசினா திரும்பவும் அவளுக்கு நான் துணையா நிக்கலனு நினைச்சிட்டா எனக்கும் கஷ்டமாகிடும். ஏற்கனவே நம்ம பேசிகிட்டது போல நீங்க போயிட்டு பேசுங்க ஏதாவது ப்ராப்லம்னா நான் பேசுறேன். கட் அண்ட் ரைட்டாக கண்மணி சொல்லிட வேறு வழி இல்லையே இருவருக்கும். ஒருவாறு மனதை திடப்படுத்திக் கொண்டு நெஞ்சை நீவிவிட்டபடி மோகியின் மீன்விழிகளில் பிரசன்னம் ஆனான் விஷ்வரூபன்.

சிற்ப சிலை வடித்த கற்த்தூணில் சாய்ந்து அமர்ந்து பிரசாதமாக கொடுத்த நெய் மணக்கும் சுடசுட சக்கரைப் பொங்கலை ஊதி மகளுக்கு ஊட்டி விட்டு ரசித்து உண்ணும் அழகை மெல்லிய புன்னகையோடு கண்டு நெற்றியில் தவழும் முடி கற்றுகளை ஓரம் ஒதுக்கியபடி நிமிர்ந்தவளின் இதயம் ஓர்நொடி நின்று அதிவேகத்தில் துடித்திட முகமெல்லாம் குப்பென வியர்வையில் நனைந்து பார்க்கக் கூடாத அசிங்கத்தை கண்டதை போல் பார்த்த வேகத்தில் முகத்தை திருப்பியவளின் மனம் அப்பட்டமான பயத்தில் நிலைகுலைந்து போனது.

இத்தனை நாளும் ஏதோ ஒரு வகையில் இருந்த அற்ப நிம்மதி கூட உன் சந்திதானத்தில் கால் வைத்ததும் கெடுத்து விட்டாயே! இப்போது உனக்கு மகிழ்ச்சியாக. சாந்தமாக வீற்றிருந்த அம்மனை இயலாத பார்வை பார்த்து குழந்தையை தூக்கிக் கொண்டு நடந்தவளின் கரத்தை 'மோகி ப்ளீஸ் நில்லு..' பதட்டமாக ஓடி வந்து பிடித்தவன் கன்னம் அதே வேகத்தில் சுல்லென எரிந்தது.

ச்சீ.. என்ற ஒற்றை முகசுழிப்பு செத்தவனை திரும்ப திரும்ப கொடூரமாக சாகடிக்க போதுமானதாக இருந்தனவே. காதல் மட்டுமே நிறைந்து வழிந்த கண்கள் இப்போது அதீத வெறுப்பை தாங்கி அக்னி ஜவாலையாய் கொலுந்து விட்டு எரிவதை கண்டு அவன் இதயம் தீ பிடித்து திபுதிபுவென எரிவதை உணராது போனாளே மோகித்தா.

கண்ணிமைக்கும் நொடிதனில் இவை அனைத்தும் நடந்திருந்தாலும் அக்காட்சியை கண்ட வேதிதா பயத்தில் அம்மாஆ.. என மோகியின் கழுத்தை இறுக்கமாக கட்டிக் கொண்டது. 'மோகிமா.. உன் கோவம் நியாயம் தான் ஆனா ப்ளீஸ் நான் சொல்ல வரர்த கொஞ்சம் புரிஞ்சிக்கோ டி..' தன்னவளின் அந்நியமான வெறுப்பை தாங்க முடியாமல் கண்கள் கரித்துக் கொண்டு வந்தது.

உடல் நடுங்க உக்கிற பார்வை பார்த்தவளின் உடலில் உள்ள ஒவ்வொரு பாகமும் அதீத பயத்தில் நடுங்கிட அவன் சொல்ல வரும் எதையும் செவி சாய்காமல் அதிபயங்கர மிருகத்திடம் மாட்டிய மானாக தன் குட்டியை காத்துக் கொள்ள அவ்விடம் விட்டு தப்பி ஓடுவதிலேயே நோக்கமாக இருந்தாள்.

'மோகி ப்ளீஸ் குழந்தை பயப்படுறா கொஞ்சம் பொறுமையா இரு டி' இறைஞ்சலாக அவன் கேட்பது கூட மிருகத்தின் உறுமளாகவே கேட்டிட குழந்தை பயந்ததோ தெரியாது ஆனால் அவள் நடுக்கம் அதிகமாகி அதீத பயத்தில் கண்கள் இருட்டிக் கொண்டு வர தலை சுற்றி மயக்கியவளை தாங்கிப் பிடித்து நெஞ்சோடு அனைத்திருந்தான்.

எத்தனை நேரம் மயக்கத்தில் இருந்தாளோ கண் விழிக்கும் போது அவள் வீட்டினில் சோகரேகை படிந்த முகத்துடன் கண்மணி மட்டுமே அவள் அருகினில் இருப்பதை கண்டு பதட்டமானவளாக, க்.கண்மணி.. கண்மணி.. என் குழந்தை எங்கே.. எங்கே டி அவ.. ஐயோ என்னை பழி வாங்கி அவமானப்படுத்தினது எல்லாம் போதாதுனு திரும்பவும் தேடி கண்டுபிடிச்சி வந்து மேலும் பழி தீர்க்க என் குழந்தைய கொன்னுட்டானா அந்த படுபாவி. ஐயோ என் குழந்தஅஅ.. நெஞ்சை பிடித்துக் கொண்டு கத்திக் கதறியது வெளியே நின்றிருந்த விஷ்வாவின் காயப்பட்ட நெஞ்சை மேலும் மேலும் வீரியம் வாய்ந்த அமிலகரைசலை ஊற்றியதை போல் இருந்தது.

என்னை தான் கொஞ்சம் கூட இரக்கம் இல்லாம காதல் துரோகத்தால துடிக்க துடிக்க கொன்னான். அவனோட பாவப்பட்ட கண்ணுல எந்த ஒரு சூழ்நிலைலயும் என் குழந்தை பட்டுடவே கூடாதுனு தானே அவனால மனசளவுல செத்துபிணமான பின்னும் என் குழந்தைக்காக வாழ நினச்சேன். திரும்பவும் அந்த துரோகக்காரன் கண்ணுல நானும் என் குழந்தையும் படுவோம்னு தெரிஞ்சிருந்தா அன்னைக்கே நானும் என் குழந்தையும் செத்து போயிருப்போமே.. என் குழந்தையையே அவன் கொன்ன பிறகு நான் மட்டும் எதுக்கு உயிரோட இருக்கனும். ஆவேசமாக பைத்தியம் போல் கத்தி அருகில் இருந்த மாம்பழத்தட்டில் இருந்த கத்தியை எடுத்து கழுத்தில் வைத்துக் கொண்டவளை கண்டு கண்மணி அலற நொடியில் ஓடி வந்து கத்தியை பிடுங்கி எரிந்து அடங்காது திமிறியவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டவன் கண்களில் வழிந்த கண்ணீர் அவள் உச்சந்தலையை நனைத்து குளிர்வித்ததுவோ என்னவோ!

கதறல் நின்று கேவல் அதிகமாகியது கண்ணிலும் மூக்கிலும் வாயிலும் வடிந்த குழகுழத்த நீர் மொத்தமும் அவனது வயிற்று சட்டையை நனைக்க, 'உனக்கு பண்ண பாவத்துக்கே சிறுக சிறுக குற்றவுணர்ச்சில செத்துட்டு இருக்கேன் டி. இதுல என் குழந்தை என் ரத்தம்னு தெரிஞ்சி அதை கொலை பண்ற அளவுக்கு நான் அவ்ளோ பெரிய கொடூரவாதி இல்ல மோகி. எதையும் புரிஞ்சிக்காம உன்ன தப்பா நினைச்சி இந்த பைத்தியக்காரன் ரொம்ப கஸ்டப்படுத்திட்டேன் அதுக்காக என்னை நீ இவ்ளோ கொடூரக்காரனா பாக்குற அளவுக்கு நான் மோசம் இல்ல டி. ப்ளீஸ் அழாத மோகிமா ரொம்ப வேதனைய கொடுக்குது உன்னோட ஒதுக்கமும் கண்ணீரும்' ஆணவனின் குரல் நடுங்கி கரகறத்து பெண்ணவளைக் கட்டிக் கொண்டு குலுங்கி அழுது விட்டான்.

ஆனால் அது எதையும் உணர்ந்து அவனை மன்னித்து ஏற்றுக் கொள்ள மோகியின் மனம் கணியவில்லையே! அவள் அடைந்த வேதனை நரகம் மரணம் இரண்டையும் தாண்டிய அவமானம் நம்பிக்கை துரோகத்தின் உச்சம். கால்கள் முடங்கி பிறந்த பிஞ்சி குழந்தையை வைத்துக் கொண்டு ஒற்றை பெண்ணாக அவள் வளர்த்த துயரம் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் செய்வதை எல்லாம் செய்து துடிக்க துடிக்கக் கதறவிட்டு சாதாரண ஒற்றை மன்னிப்பை யாசித்தால் மன்னிக்க அவள் ஒன்றும் விஷ்வரூபனின் காதலை தாங்கி இருந்த மோகித்தா அல்லவே.

ச்சீ.. தொடாதே.. அருவருப்பில் ஆவேசம் பொங்க தன்னிடமிருந்து அவனை தள்ளி விட்டவளை திகைத்து விழிகளில் கண்ணீர் திரையிட நோக்கினான்.

எப்டி எப்டி தெரியாம தப்பு செஞ்சியா? இல்லவே இல்ல ஒவ்வொன்னையும் திட்டமிட்டு செஞ்ச, என் அப்பாவை கொன்னு என் வாழ்க்கைய கெடுத்த ஈவு இரக்கம் இல்லாத கொலைகார அரக்கன் நீ. வெறுப்பாக உமிழ்ந்த வார்த்தை அவன் நெஞ்சை தாண்டி இதயம் பிளப்பட்டு குத்திக் கிழித்தும் அவளின் மனஆதங்கத்தை கொட்டித் தீர்க்கட்டும் என அமைதியாக நின்றான்.

"எத்தனை தூரம் நம்பினேன் உன்ன. ஆனா நீ கேவலம் காதல் பேரை சொல்லி என் மனச தான் சாகடிச்சன்னு பாத்தேன் அ..ஆ..ஆனாஆ.. எ.என்.. ச்சை.. எப்டிடா மனசு வந்துச்சி உன்ன நம்பித்தானே உன்கூட ஒவ்வொரு நாளும் ப__தேன்" முகத்தை மூடிக்கொண்டு அவமானத்தில் அழுதவளை ஜீவன் மரிந்து பார்த்தான். "உன்ன மாதிரியே உன் புத்தியும் அசிங்கம். உன் முகத்தை பாக்க கூட அருவருப்பா இருக்கு. மரியாதையா வெளிய போ.. உன் நிழல் கூட எம்மேலயோ என் குழந்தை மேலயோ படக்கூடாது" ஆவேசமாக கத்தி ஆர்ப்பாட்டம் செய்தவளிடம் தற்போது எதுவும் பேசி புரிய வைக்க முடியாத நிலையில் வீட்டை விட்டு மட்டும் வெளியேறி விட்டான்.

அவன் சென்றதும் வேதிதாவை தூக்கிக் கொண்டு உள்ளே வந்த கண்மணியை துக்கம் தாலாது அணைத்துக் கொண்டு ஓவென கதறி அழுத சப்தம் வெளியே நின்றிருந்த விஷ்வரூபனை உருகுலைய வைக்க ஆதரவாக அவன் தோளைப் பற்றினான் விதுரன்.

'மோகி.. காம்டவுன் பயப்படாத பாப்பா கூட இருக்கா கொஞ்சம் அழுறத நிறுத்து டி' மென்மையாக முதுகை தட்டி தடவிக்கொடுக்க தாயின் அழுகைக் கண்டு ஒன்றும் புரியாத பிள்ளையும் அழுது கொண்டு இருக்கவும் கலங்கி போய் மடியில் வாங்கி அனைத்தார் போல் வைத்துக் கொண்டாள். பிள்ளையும் சற்று நேரத்தில் அசதியில் உறங்கி விட மடியை விட்டு இறக்காதவளாக 'நான் இன்னைக்கே டெல்லிய விட்டு போகணும் கண்மணி. அதுக்கான ஏற்பாட்டை உன்னால பண்ண முடியுமா?' என்றாள் உணர்ச்சி துடைத்த முகத்துடன்.

புரிஞ்சி தான் பேசுறியா மோகி. நல்லா நடக்குற குழந்தைய வச்சிக்கிட்டே தனியா வளக்குறது கஷ்டம் இப்டி ஒரு குழந்தைய வச்சிக்கிட்டு நீ தனியா ஊர் தெரியாத ஊருக்கு போய் என்ன செய்வ. எதையும் அவசரப்பட்டு முடிவு எடுக்காத மோகி.

மனுஷனா பிறந்த எல்லாரும் ஏதோ ஒரு வகைல தப்பு பண்ணிட்டு தானே இருக்கோம். அவர் அவங்க அண்ணன் மேல இருந்த பாசத்துல ஏதேதோ செய்ய போய் அது எல்லாமே உனக்கு பாதகமா முடிஞ்சிடுச்சி. உன்ன அவரு பழி வாங்க நினைச்சது உண்மை தான் மோகி ஆனா நினைச்சதோட சரி நீ நினைக்கிற மாதிரி அந்த வீடியோவ வெளிய விட்டது அவரு இல்ல. உன் அப்பாவ அவமானப்படுத்தினதுக்கு நீ ஒருத்தன அடிச்சியே அந்த ராஸ்கல் பண்ண வேலை என்றதும் மோகி அதிர்ந்து பார்த்தவள். என்ன டி திரும்பவும் அவன் உன்ன மிரட்டி இப்டி ஒரு பொய்ய சொல்ல சொன்னானா? இகழ்ச்சிப் புன்னகை அவள் முகத்தில்.

இங்க பாரு டி என்ன யாரும் மிரட்ட வேண்டிய அவசியம் இல்ல. அன்னைக்கு இருந்த சூழ்நிலைல அவர் சும்மா நாலு வார்த்தை மிரட்டினதுக்கே நான் பயந்து போனது உண்மை தான். அப்போ அவ்வளவான மெச்சுருட்டி இல்ல பயந்தேன் இப்போ எனக்குனு சுயமா புத்தி இருக்கு. யோசிச்சி செயல்படர அளவுக்கு பொறுமையும் நிதானமும் இருக்கு. வாழ்க்கை எனக்கு நிறைய பாடம் கத்து கொடுத்து இருக்கு மோகி நானும் பல துயரத்தை தாண்டி தான் உம்முன்னாடி நின்னு பேசிட்டு இருக்கேன். அழுத்தம் திருத்தமாக கண்மணி உறுதியாக சொல்லவும் மௌனமாக கண்டாள் அவளை.

அந்த கண்ணன் தான் அப்டி ஒரு வேலைய பாத்தது என்றவள் விக்னேஷ் மோனிகாவை பற்றிய அனைத்து மர்ம விபரங்களையும் சுருக்கமாக கூறி, கடைசியா அவர் அண்ணன் தன் காதலி இறந்த துக்கம் தாங்காம உயிர் போகும் நிலையில ஒன்னும் பாதியுமா குரல் உடைஞ்சி சொன்னது எல்லாம் உன்ன பத்தி தவறா புரிஞ்சிகிட்டு நீதான் அவங்க காதலையும் உயிரையும் பிரிக்க ஏதோ ஒரு வகைல காரணமா இருந்திருப்பனு நினைச்சி பாசத்துல யோசிக்கும் திறன் இல்லாம வந்த பிரச்சனைகள் எல்லாமே. அதை தவிர அவரு நிறைய தப்பு உனக்கு செஞ்சி இருக்காரு தான் அதுக்காக அவரும் தான் மோகி இத்தனை நாளா நீ ஒருத்தி இல்லாம தண்டனைய அனுபவிச்சாரு.

நான் அவருக்காக சப்போர்ட் பண்றேன்னு நினைக்காத டி. நிதானமா இருந்தா தான் எதையும் யோசிக்க முடியும். ஒருத்தரை ஒருத்தர் உயிருக்கு உயிரா விரும்பி இருக்கீங்க உங்க காதலால இதோ இந்த பிஞ்சி உயிர் உருவாகி சரியான நேரத்துல உன் உயிர காப்பாத்தி இருக்குனா எதுக்கு, என்னைக்காவது ஒருநாள் நீங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிகிட்டு திரும்பவும் சந்தோசமா சேந்து வாழுவீங்கனு கருவுலே உன் உங்கள ஒண்ணு சேக்க நினைச்சி இருக்கு.

எதுவும் காரணம் இல்லாம நடக்காது மோகி. பழசு எல்லாம் மறக்குறது ரொம்பவே கஷ்டமான ஒண்ணு தான் அதுக்காக அதையே நினைச்சி இருக்க மிச்ச மீதி வாழ்க்கைய நரகமா மாத்திக்கிறதும் புருஷன் குழந்தைனு குடும்பம்னு சந்தோசமா வாழ்க்கைய மாத்திக்கிறதும் இனிமே உன்கைல தான் இருக்கு மோகி. நீ எடுக்க போற முடிவுக்கு இந்தமுறை நான் உனக்கு உறுதுணையா இருப்பேன். அவள் கைகளைப்பற்றி மென்மையாக புரியும்படி அவளுக்கு எடுத்து சொல்ல அமைதியாக குழந்தையின் முகம் பார்த்திருந்தாள்.

இனி மோகியின் முடிவு என்ன?

சேதுனு ஒரு அட்டு பீஸ் வில்லன் இருக்குறது நியாபகம் இருக்கா டாலிஸ்? அவன் ஆன் தி வே ல வரான். வந்தவன் யார் உயிர எடுத்தாலும் ரைட்டர்க்கும் அதுக்கும் சம்மந்தம் இல்ல சொல்லிப்புட்டேன். (போற போக்குல வெடிய போட்டு போவோம்)

தொடரும்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 38
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Messages
62
Reaction score
53
Points
18
Etheai Yara venalum vettuvana? Ena nadakudhu Inga? Apdi ethachum nadandhu mukkiyamana aal yaraiyachum poatu thalluninga avlotha solliten .. writer ji gaali.... Next ud sekiram kudunga.....
 
Top