Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖

அத்தியாயம் 4

Administrator
Staff member
Messages
300
Reaction score
215
Points
63
அத்தியாயம் - 4

தன் நெஞ்சில் முட்டி நிற்கும் தடிக்கம்பயும் கோவத்தில் துடிக்கும் அவன் தாத்தாவின் முகத்தையும் மாறி மாறி கூர்மையாக பார்த்த விஷ்வரூபன், அவர் கேட்கப் போகும் விடயம் முன்பே யூகித்தவனாக எதுவும் பேசிடாமல் அமைதிக்காத்து நின்றான்.

நைட்டெல்லாம் வீட்டுக்கு வராம எங்க போயி எந்த கழுதையோட கூத்தடிச்சிட்டு வர ரூபன். வயதான நடுங்கும் குரல் தான் ஆனால் இப்போதும் கணீரென்று ஒலித்தது பேரன் மீது பெறுகிய கோபத்தினில்.

மச்.. தெரிஞ்சிகிட்டே ஏன் கேள்வி கேட்டு டிஸ்டர்ப் பண்றீங்க. வழி விடுங்க ரெஸ்ட் எடுத்துட்டு ஆபிஸ் கிளம்பனும். எங்கோ பார்த்து இயந்திரமாக சொன்னவனை கவலையோடு கண்ட 75 வயதை தாண்டிய ராமமூர்த்தியோ, 'ஒரு காலத்துல தாத்தா தாத்தான்னு ஒரு நிமிஷம் கூட விடாம என் விரல பிடிச்சிட்டே என்ன சுத்தி சுத்தி வந்தவனுக்கு இப்ப நான் டிஸ்டர்பா ஆகிட்டேன். ம்.. சாரு வளந்துட்டீங்க ரொம்ப பெரிய ஆளாகிட்டிங்க அதா இனிமே இந்த கிழவன் எதுக்குனு எண்ணம் வந்து எதை பத்தியும் கவலை இல்லாம கண்டவளோட ஊர் மேஞ்சிட்டு வர. அப்டி தானே ரூபன்' வேதனையாக வந்து விழுந்த வார்த்தையில் சுல்லென வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு கைமுஷ்ட்டி இருக்கிக் கொண்டு அவரைக் கண்ட விஷ்வா.

என்ன தாத்தா செண்டிமெண்ட்டா பேசி லாக் பண்ணலாம்னு பாக்குறீங்களா. இப்போதைக்கு எனக்கு இருக்க ஒரே உறவு நீங்க மட்டும் தான் தாத்தா ப்ளீஸ் இப்டிலாம் பேசி என் மனச கஷ்டப்படுத்தாதீங்க. இப்டிலாம் பேசி சமாதானம் செய்ய முடியாது என்னால. நீங்க எனக்கு எவ்ளோ முக்கியம்னு உங்களுக்கே நல்லா தெரியும் தாத்தா, தனியா விளக்கி சொல்ற அளவுக்கு அவசியம் இல்லனு நினைக்கிறே. நீங்க என்ன பத்தி என்ன நெனச்சாலும் ஐ டோன்ட் கேர், நான் இப்படித்தான் இருப்பேன். வீணா என்ன பத்தி நினைச்சி ஃபீல் பண்ணாதீங்க. இப்போதைக்கு இவ்ளோ தான் என்னால சொல்ல முடியும். கராராக பேசி முடித்து அவரை அழுத்தமாக பார்த்து விட்டு படிகள் ஏறி அவன் அறைக்கு சென்று விட்டான் விஷ்வரூபன்.

அவன் சென்ற திசையை முகம் கூம்பி வெறித்த தாத்தாவோ அவனை எப்படி திருத்தி நல்வழிப் படுத்துவது என்ற கவலையோடே சோர்வாக இருக்கையில் அமர்ந்து சுவற்றில் மாட்டி இருந்த புகைப்படத்தை கண்டவரது உள்ளம் மிகவும் நொந்து விட்டது.

எதிரே உள்ள பெரிய சுவற்றில், பால் வண்ண அழகு முகத்தில் கன்னக்குழி விழுந்த சிரிப்போடு மாலையும் கழுத்துமாக திருமணம் முடிந்து பிள்ளைக்குட்டிகளோடு மகிழ்ச்சியாக வாழ வேண்டிய வயதில் அந்த வாலிபனின் புகைப்படத்திற்க்கு மாலையிட்டு பார்த்துக் கொண்டிருக்கும் இத்தகைய கொடிய நிலையை எண்ணி மறுகாத நாளைல்லை, இருந்தும் சிறு கோபம். ஏன்?
விஷ்வரூபனின் சுயரூபமே முற்றிலுமாக மாறக் காரணமானவன் அவன் அண்ணன் விக்னேஷ்வரன். அவன் தாத்தாவிற்கு பிறகு அவனுக்கு அணைத்துமாக இருந்து அண்ணன் என்ற உறவையும் தாண்டி தாய்க்கு தாயாக தந்தைக்கு தந்தையாக உண்மையான அன்பின் முழு உருவமாக பாசம் கொட்டி வளர்த்தவன் இப்போது உயிருடன் இல்லாமல் போனதன் காரணம் எப்போது அறிந்தானோ அப்போதே அவன் கனிவான மனிதநேயமெல்லாம் அவனை விட்டு வெகுதூரம் பறந்து மனம் முழுக்க வெறுமையும் பழிவுணர்ச்சியும் கூடி இப்போது வெறுபிடித்த மிருகமாக மாறி நிற்கக் காரணம், அவன் அண்ணன் விக்னேஷ்வரனே ஆவான்.

மூத்த பேரனின் நினைவில் இருந்து மீல வைத்தது இளைய பேரனின் ஷூ அதிரும் சத்தம்.
போன வேகத்தில் குளித்து முடித்து டிப்டாப்பாக உடையணிந்து கை கடிகாரத்தை கையில் சரிசெய்தபடி தயாராகி வந்தவனை கண்கள் சுருக்கிப் பார்த்த ராமமூர்த்தி. என்னபா போன வேகத்துல கிளம்பி வர, ரெஸ்ட் எடுத்துட்டு ஆபிஸ் போகனும்னு தானே சொன்ன யோசனையோடு வினவியரின் முன்னால் நெடுநெடுவென உயர்ந்து நின்றவன்.

அப்போ ரெஸ்ட் எடுக்க தோணுச்சு இப்போ தோணல அதான் ஆபிஸ் போக ரெடியாகி வந்தேன். சரி நான் கிளம்புறேன் தாத்தா பாத்துக்கோங்க என்றவன் முன்னே செல்லப் போக, சாப்ட்டு போ ரூபன் என்றார் அக்கறையாக.

ஒரு நொடி அந்த வார்த்தைதனில் நின்னவன் வயிறு மோகித்தாவின் கை பக்குவத்தில் காலையிலேயே நிறைந்து விட்டு இருந்ததில், கண்மூடி அந்த ருசியை மீண்டும் சுவைத்ததை போல் உணர்ந்தவன். 'நான் வரும் போதே சாப்ட்டு வந்துட்டேன் தாத்தா நீங்க சாப்ட்டு ரெஸ்ட் எடுங்க' என்றவனோ பென்ட்ளே காரில் ஏறி சென்றான் அவன் அலுவலகம் நோக்கி.

விதவிதமான ஆடைகள் தயாரிக்கும் கடல் தான் விஷ்வரூபனின் 'விவி எஸ்ப்போட்ஸ்'. 10 ருபாய் கைக்குட்டையில் இருந்து லட்சம் தாண்டும் ஆடைகள் எல்லாம் கைத்தேர்ந்த ஆட்களை வைத்து சிறப்பாக வழி நடத்தி வரும் விஷ்வரூபனின் விவி பிராண்ட் ஆடைகள் என்றாலே வாடிக்கையாளர்களின் மனதில் நிலைத்து நிற்கும் நன்மதிப்புப் பெற்ற பிராண்டாக மாறி விட்டது. விவி பிராண்ட் ட்ரெஸா அப்போ அதோட தரம் நிச்சயமா நல்லா தான் இருக்கும் கண்ண மூடிட்டு வாங்குங்க என்று ஒரு வாடிக்கையாளர் மற்றொரு வாடிக்கையாளரிடம் பரிந்துரைத்து புகழ்ந்து சொல்லும் அவளவிற்கு விவி பிராண்ட் ஆடைகள் மக்கள் மனதில் பெரிய இடத்தை பிடித்து விட்டது.

அதற்கு முக்கியக்காரணம் எந்த அளவிற்கு விஷ்வரூபனின் அயராத உழைப்பு உள்ளதோ அதற்கும் மேலாக விக்னேஷ்வரனின் உழைப்பும் முயற்சியுமே மேலோங்கி இருந்தது.

காதலெனும் மோகப் போர்வையில் மூழ்கி வறுமை தெரியாமல் ஆசை தீரும் வரை ஒன்றாக இருந்து விட்டு வேண்டா வெறுப்பாக பெற்றுக் கொண்ட பிள்ளைகள் இருவரும் வளர வளர அவர்களை பார்த்துக் கொள்ள முடியாத சுயநலவாதிகள் இரண்டு பேரின் எண்ணமோ பணக்கார துணையை தேடி அலைந்து, தாய் தந்தையின் பாசத்தை கொட்டி வளர்க்க வேண்டிய நேரத்தில் வசதி வாய்ப்புக்கு ஆசைகொண்டு பிள்ளைகளை அனாதையாக தவிக்க விட்டு சென்றனர் விக்னேஷ் விஷ்வாவின் பெற்றோர்.

13 வயது வயதில் பக்குவமில்லாத வயதில், வறுமையின் பசியறிந்து, பொறுப்புள்ள சிறு பிள்ளை. ஆண்கள் அணியும் ஜட்டி மற்றும் பனியன்களை தைத்து 6 வயதான தம்பி விஷ்வரூபனின் கை பிடித்துக் கொண்டு வீதி வீதியாக விற்று, பல வித ஏமாற்றங்களை சந்தித்து, சின்னப் பையன் இந்த தரம் இல்லாத கந்த துணிய அள்ளிட்டு வந்து இப்பவே அதிக விலைய வச்சி ஏமாத்தி விக்கிறியா, பொடிப்பையா. இது ஒரு ஜட்டி இத காசு குடுத்து வாங்கி நாங்க மாட்டிட்டு நடக்கணுமா, என்ற பல இழிவு சொர்களால் தலையில் கொட்டு வாங்கி, தான் படிக்கவில்லை என்றாலும் தம்பியைப் படிக்க வைத்து தையல் உலகம் மட்டுமே அறிந்தவனாக வளந்து, சிறிது சிறிதாக பணம் சேத்து, சிறியதாக தொடங்கிய விவி டைலர்ஸ் இன்று அதையே ஆடையின் பிராண்டாக மாற்றி விவி எக்ஸ்போர்ட்ஸ் உலகமெங்கும் ஏற்றுமதி செய்யும் பெரிய கம்பனியாக உருவெடுத்து நின்று இருக்கிறது.

நிமிர்ந்த நடையோடு தடக் தடக் ஷூ சத்தம் அதிர நடந்துக் கொண்டே கூலர்ஸ் வழியே பணியாட்களை பார்வையிட்டபடி வந்தவனை பணிவோடு வணக்கம் வைத்து வரவேற்றான், மேனேஜர் கண்ணன்.

குட் மார்னிங் சார்.

ம்.. இன்னைக்கு அனுப்ப வேண்டிய டெக்ஸ்டைல்ஸ்க்கு எல்லாம் ஆர்டர் போட்ட பேக்கேஜஸ அனுப்ப ரெடி பண்ணியாச்சா கண்ணன். என்றபடியே அவன் அறைக்கு செல்ல பின்னாலே அவசரமாக சென்ற கண்ணன். எஸ் சார். ஏற்கனவே ஆர்டர் பண்ணவங்களுக்கு எல்லாம் ரெடி பண்ணி அனுப்பியாச்சு, பெஸ்டிவல் சீசன்னால நம்ம விவி பிராண்ட் கேள்வி பட்டு புதுசா சில டெக்ஸ்டைல்ஸ்ல இருந்து நம்மகிட்ட ஆர்டர் கேட்டு இருக்காங்க சார். அந்த டீடெய்ல்ஸ் எல்லாம் இதுல இருக்கு செக் பண்ணி சொல்லிட்டிங்கன்னா, ஒரு 2 டேஸ்ல அவங்களுக்கும் அனுப்பி விட்டுடலாம். என்ற கண்ணன் ஒரு ஃபைலை அவனிடம் நீட்ட, அதை வாங்கி உன்னிப்பாக சில நிமிடங்கள் பார்த்த விஷ்வா.

புதுசா வர எல்லா டீலர்ஸ்கிட்டயும் டூ பர்சண்ட் அமவுண்ட் டபுளா
ஏத்தி சொல்லி ஆர்டர் கொடுத்து விடுங்க. பழைய டீலர்ஸ்க்கும் அடுத்து கொடுக்குற ஆர்டர்ஸ்க்கு ரேட் பத்தி இன்ஃபார்ம் பண்ணிடுங்க கண்ணன். என்றனது அதிரடியான விலைஏற்றத்தில் திகைத்த கண்ணன். சார் நம்ம கம்பெனிக்கு இருக்க நல்ல பேர்ல ஒண்ணு நியாயமான விலை தான் மக்கள்கிட்ட அதிகமா ரீச் ஆக காரணமாச்சு. இப்ப இவ்ளோ விலை ஏத்தினா டீலர்ஸும் அவங்க பங்குக்கு விலை ஏத்தி வைப்பாங்களே சார். இதுல நம்ம விவி பிராண்ட் நேம் அடிபட நிறைய வாய்ப்புகள் இருக்கே. தயக்கமாக கூறி அவன் முகம் பார்க்கவும். அவனை அழுத்தமாக பார்த்த விஷ்வா.

அது என் கவலை கண்ணன் நீங்க ஒன்னும் வொரி பண்ணிக்காதீங்க. சொன்ன வேலை என்னவோ அதை பண்றதுக்கு தான் உங்களுக்கு சம்பளம் கொடுக்குறேனே தவிர எனக்கு ஐடியா கொடுக்க இல்ல. டூ வாட் ஐ சே. மேஜையில் பட்டென தட்டி விட்டு விஷ்வா தனது வேலையில் மூழ்கி விடவும், நெஞ்சிக்கூடு வெளியே துடிக்க நின்ற கண்ணன். சரி சார் என்றுவிட்டு அங்கிருந்து சென்று விட்டான்.

மதியம் வரை பரபரப்பாக வேலை பார்த்துக் கொண்டிருந்தவனின் அலைபேசி அதிர்ந்ததில், ம்ச்.. யாரு போன் பண்றது என்ற சலிப்போடே திரையை பார்வையிட்டு அட்டன் செய்து காதில் வைக்கவும் இனிமையான தேன் குரல் ஒன்று ஹெலோ.. என்றது.

அந்த இனிப்புக் குரலை உணர்ந்திடாத டெவிலோ. அப்பட்டமான வெறுப்பை மறைத்து, 'சொல்லு மோகிமா' என்றான் விஷம் கலந்த தேன் குரலாக.

ஒண்ணு இல்ல விஷ்வா லஞ்ச் பிரேக், சாப்பிட வந்தே, அதா உங்கூட பேசிட்டே சாப்பிடலமேன்னு போன் பண்ணே, நீ ஃப்ரீ தானே என்றாள் எங்கே வேலையாக இருப்பானோ என்ற எண்ணத்தில்.
அதில் கடுப்பான விஷ்வா. "ஆமா மோகி கொஞ்சம் வர்க் இருக்கு தான், ஆனா உன்ன விட அதெல்லாம் பெருசில்ல நீ சொல்லு" காதலிக்கான முக்கியத்துவம் கொடுத்து சொல்லவும் பெண் மனம் இலகிக் குளிர்ந்தது.

சரி விஷ்வா. மதியம் ஆச்சே சாப்பிடலயா இன்னும் என்றவளோ ஒரு பிடி உணவை அள்ளி வாயில் வைத்தாள்.
ம்.. சாப்பிடணும் மோகி. இப்ப நீ சொன்னதும் தான் சாப்பாட்ட பத்தின நினைப்பே வந்துச்சி. கணினியில் பொட் பொட் என்று ஒற்றை கையால் தட்டிக் கொண்டே சொல்லவும், சாப்பிடுவதை நிறுத்தி விட்டு அந்த சத்தத்தை உள்வாங்கிக் கொண்டவள்.

வேலை பாத்துட்டே தான் பேசுறியா விஷ்வா. சரி போதும் வந்து வேலைய பாத்துக்கலாம் நீ எழுந்திரிச்சிக்கோ சாப்ட்டு வந்து வேலைய கண்டினியூ பண்ணலாம், உரிமை உள்ள காதலி அதட்டலாக சொல்லவும் கொந்தலித்தது கோபம் அவனுக்குள்.

'என்ன பேச்சையே காணோம். நீ சாப்பிட போகாம நானும் சாப்பிட மாட்டேன் விஷ்வா. டிபன் பாக்ஸ மூடி வச்சிட்டு கிளாஸ்க்கு போய்டுவேன்' அவனோடு பழகியவரை உணவுக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டான் வேலையில் மூழ்கி விட்டால் வேலையே கதி என்று ஆகிவிடுவான் என்பதை நன்கு அறிந்து வைத்திருந்தாள் மோகித்தா. ஆனால் முக்கியான ஒன்றாக தொழில் வட்டத்தில் உள்ள அவன் உயரமும், அவன் குணமும் அறியத்தவறி விட்டாளே.

நீ சாப்ட்டா என்ன சாப்பிடாட்டி செத்தா எனக்கென்ன டி வந்துச்சி. இதுல என்ன வேற அதட்டி பாக்குறா, ச்ச.. எல்லாம் என் நேரம். இந்நேரம் வேர யாராவது இவ இடத்துல இருந்து அதட்டி இருந்தா அடுத்து காலத்துக்கும் பேச முடியாதபடி செஞ்சி விட்டு இருப்பேன். எல்லாத்துக்கும் சேத்து வச்சி வைக்கிறேன் டி உனக்கு பெருசா என மனதில் கருவி போன் திரையில் மின்னிய அவள் பூ முகத்தை கண்டு வெறுப்பாக. 'சரி மோகி கோவப்படாத இதோ எழுத்துட்டேன், சாப்பிட போறேன்' என்றவனோ கேன்டின் நோக்கி நடந்தான்.

ம்.. இப்போ தான் குட் பாய். சரி என்ன சாப்பாடு உன் வீட்டு குக் ரெடி பண்ணி கொடுத்தாங்க விஷ்வா.

இன்னைக்கு ஃபுட் ரெடி பண்றதுக்குள்ள ஆபிஸ் வந்துட்டேன் மோகி, கேன்டீன்ல சாப்பிட போறேன். நீ என்ன காலைல ப்ரீப்பேர் பண்ண அதே ஆரிப்போன சாப்பாடு தானா, கேலியாக மொழிந்தவன் சுடசுட மட்டன் பிரியாணி ஒன்றை ஆர்டர் செய்து விட்டு அமர்ந்தான்.
ம்.. வேற என்ன சாப்பிடறது வெளிய வாங்கி சாப்பிட்றத விட, ஆரி போன சாப்பாடா இருந்தாலும் வீட்ல சமைச்சத சாப்பிடறது தான் உடம்புக்கு நல்லது விஷ்வா. ஆனா நீதான் வீட்ல குக் இருந்தும் வெளிய வாங்கி சாப்ட்டு உடம்ப கெடுத்துக்குற. அவள் வார்த்தையில் தான் எத்தனை கவலை அவன் மீதுள்ள அக்கறையில்.

அதை கேட்டு அலட்சியமாக இதழ் சுளித்தவன். சரி மோகி நீ ஈவினிங் காலேஜ்லே வெயிட் பண்ணு நான் வந்து உன்ன பிக்கப் பணிகிறேன் என்றான் உள்நோக்கம் கொண்டவனாக.

இல்ல விஷ்வா நான் நடந்தே வீட்டுக்கு போய்டுவேன் என்று அவள் மறுத்துப் பேச வாயெடுக்க. "ஷ்.. பேசக் கூடாது மோகி, இத்தனை நாளா நீ சொல்றத தானே ஒண்ணு விடாம கேட்டுட்டு இருக்கேன். இன்னைக்கு ஒருநாளாவது நான் சொல்றத கேளு, உங்கூட டைம் ஸ்பென்ட் பண்ணனும்னு நினைக்கிறே, ப்ளீஸ் என்ன அவாய்ட் பண்ண நினைக்காத மோகி. ஈவினிங் வரேன் வெயிட் பண்ணு" பெண் மனதை கரைக்கத் தெரிந்த வித்தைக்காரனவன், அவன் பேச்சில் கரையாத பெண்கள் உண்டோ. மோகித்தாவும் காதலனின் உருகித் தவிக்கும் ஏக்கப் பேச்சில் கரைந்துப் போனாள்.

சரி விஷ்வா வெயிட் பண்றேன் நீ வா என புன்னகையோடு அவள் சொல்ல. இங்கு விஷ்வாவின் முகத்தில் அத்தனை குரோதம்.

தொடரும்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 4
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Messages
62
Reaction score
53
Points
18
Ayyayoo ji Ivana pakum pothellam singathukitta maatina maankuutiya tha mogi theriara.... Ivan nallavana villain ah ji? Oruvela hero innum entry aagalayoo?
 
Top