Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖

அத்தியாயம் 40

Administrator
Staff member
Messages
300
Reaction score
215
Points
63
அத்தியாயம் - 40

மோகி.. ப்ளீஸ் காம்டவுன் டா. என்னாச்சி எதுக்காக இவ்ளோ கோவமா இருக்க. பாப்பா எங்கே டி தனியாவா விட்டு வந்த. மனைவியின் ஆக்ரோஷமான கோவம் எதற்கென்று தெரியாமல் பதற்றமானான் ஆடவன்.

ச்சீ.. நடிக்காத. உன்னோட கேவலமான புத்தி தெரிஞ்சும் உள்ள விட்டேன் பாத்தியா என்ன சொல்லணும். எதுக்கு டா என் குழந்தைய கடத்தின எங்க வச்சிருக்க என் பிள்ளைய. மரியாதையா என்கிட்ட கொடுத்துடு ஆவேசமாக அவன் சட்டைப் பிடித்து உளுக்க ஒருநொடி மூளை அவள் உரைத்த விடயத்தை உள்வாங்க மறுத்து, ஏய்.. நான் ஏன் குழந்தைய கடத்தப் போறேன். நீ தப்பா புரிஞ்சிகிட்டு இருக்க டி. முதல்ல குழந்தைக்கு என்னாச்சி எப்டி எங்கே காணாம போச்சினு சொல்லு மோகி.. அவனுக்கும் பதட்டம் மற்றும் அச்சத்தில் குரல் உயர்ந்தது.

பொய் சொல்லாத நீதான் என் குழந்தைய கடத்தினது. நான் நிம்மதியா வாழக்கூடாதுனு நீதான்.. நீதான் திட்டம் போட்டு என் குழந்தைய கடத்திட்ட. இன்னும் என்கிட்டருந்து என்ன டா வேணும் உனக்கு எதுக்காக கால சுத்தின பாம்பா பின் தொடர்ந்து எங்கள டார்ச்சர் பண்ற. நடக்க முடியாத குழந்தை டா அது, எம்மேல இருக்க உடல்வெறிய அந்த பச்சை பிள்ளமேல காட்ட தான் கடத்தினியா.. ஆத்திரத்தில் வார்த்தையை விட்டவளின் கன்னம் நெருப்பாக காந்தியது அவன் விட்ட அறையில்.

மோகி.. ஸ்டாப் இட். உன் லிமிட் தாண்டி போற. இதுக்கு மேல அசிங்கமா ஒரு வார்த்தை பேசினாலும் கொன்னு போற்றுவேன் உன்ன. கோவத்தில் கண்கள் சிவந்து விரித்து விரலை ஆட்டி அவன் கர்ஜிக்க, கன்னத்தில் கை வைத்து கலங்கிய கண்களோடு மூச்சிவாங்க அவனை முறைத்தவள் கண்ணீர் உதிர்க்க அங்கிருந்து செல்ல வேகமாக திரும்பியவளை, எங்கே டி போற.. சுதாகரித்து கரத்தை பற்றினான்.

என் குழந்தைய கடத்திக் கொண்டு போய் கொன்னுட்டு உன் கேவலமான நாடகம் போட பிளான் செஞ்சிட்டல்ல, உன் கையாள சாகுறது கூட பாவம் அதான் நானே சாக போறேன். வார்த்தையெனும் கொடிய விஷம் துப்பி அவனை மேலும் மேலும் நோகடித்தவளை தற்போது எதுவும் செய்ய முடியாத நிலையில் வேறு வழி இல்லாமல் இருக்கும் அறையிலேயே அவளை உள்வைத்துப் பூட்டியவன் அவள் கத்திக் கூச்சல் போடுவதை எல்லாம் கண்டு கொள்ளாதவனாய் குழந்தையை தேடும் களத்தில் இறங்கினான்.

விஷ்வா ஸ்கூல் வாசல்ல தான் குழந்தைய கடத்தி இருக்கானுங்க, யார் என்னனு விபரம் தெரியல எப்டிடா கண்டு பிடிக்கிறது. நடு வீதியில் நின்றிருந்தனர் இருவரும்.

தெரியல மச்சா. திடிர்னு யாரு இப்டி பண்ணது. மோகி இங்க இருக்க விஷயம் தான் யாருக்கும் தெரியாதே. அப்புறம் எப்டி என் குழந்தைய கடத்திட்டு போனாங்க. ஒரு சராசரி தந்தையின் தவிப்பு துடிப்பு அணைத்தும் சேர்ந்து புது தந்தையானவனின் உள்ளத்தை கலங்க வைத்தது.

கவலை படாத மச்சா எப்படியாவது குழந்தைய தேடி கண்டு பிடிச்சிடலாம் எனும் போதே இன்ஸ்பெக்டரிடமிருந்து அழைப்பு வந்தது.

யாருனு தெரிஞ்சிதா?

ஆட்டோவ யார் ஓட்டிட்டு வந்ததுனு தெரியல சார் முழுசா கவர் பண்ணி இருக்கான். ஆனா சிசிடிவி செக் பண்ணி ஆட்டோ நம்பர ட்ரேஸ் பண்ணியாச்சி சார். டெல்லி ஏர்போர்ட் பக்கமா சிக்னல் காட்டுது என்றிட கார் புயல் வேகத்தில் சீறிப் பாய்ந்தது.

கடத்தி சென்ற ஆட்டோ அங்கு கவிழ்ந்து கிடக்க, வறண்ட நிலம் எங்கிலும் ஆள்அரவமற்று மாயான அமைதி. பார்வையால் சூம் செய்து இரு ஆடவர்களும் ஆளுக்கு ஒரு திசையை நோக்கி ஓடிட, தூரத்தில் எங்கிருந்தோ கேட்டது குழந்தையின் அழுகை குரல்.

செவிகள் கூர்ந்து நெஞ்சம் துடித்தவன், சத்தம் வந்த திசையை நோக்கி ஓட பெரிய மரத்தின் கிளையில் கால்கள் கட்டப்பட்டு தலை கீழாக தொங்கிய நிலையில் தந்தையைக் கண்டதும், அப்பாஆஆ.. என கதறிட வேதிஇஇ.. இதழ்கள் துடிக்க குழந்தையிடம் ஓடப் போக முன்னால் வந்து நின்றது முகம் மறைத்த உருவம்.

'ஹெலோ சார்.. லைன்ல இருக்கீங்களா? குழந்தைய கடத்தினது யாருனு தெரிஞ்சிடுச்சி' என்று அந்த பக்கம் இன்ஸ்பெக்டர் சொல்லும் போதே முகத்தில் இருந்த மாஸ்கை கழட்டிய சேதுவை எதிர்பார்க்கவில்லை விஷ்வரூபன்.
(நானும் தான் டா எதிர்பாக்கல. கதைல வேற சில பயங்கர டிவிஸ்ட் அண்ட் பிளான் வச்சி அவனை கொண்டு வரலாம்னு பாத்தேன், (அப்படி கொண்டு வந்திருந்தா பாப்பா உயிர் சுவாகா கூடவே மோகி போகா. இந்த விஷ்வா பையல் திரும்பவும் தாடி மீசையோடு ஆசிரமத்தில் சுவாமி ஆகா என்று இப்படி போயிருக்கும்) இந்த ரீடர்ஸ் தான் யார் உயிரும் போக கூடாது மோகிய திரும்ப கஷ்டப்படுத்தக் கூடாதுனு என்ன மிரட்டி கிளைமேக்ஸ மாத்தி விட்டாங்க. அதனால ரைட்டர் ஜோகா)

Rdrs : ஏம்மா ரைட்டரு ஏன் இந்த கொலைவெறி?

Me : ஹி ஹி.. ஒரு சேஞ்சிக்கு பொழுது போகல drs.
ஹீரோ கடைசியா - நான் திருந்திட்டேன்
ஹீரோயின் கடைசியா - நான் மன்னிச்சிட்டேன்
ரீடர்ஸ் கடைசியா - நாங்க பழகிட்டோம்

என்ன விஷ்வரூபா திரும்ப நான் வருவேன்னு நீ எதிர்பார்க்கலல்ல பயமின்றி நக்கல் செய்த சேதுவை பார்வையால் எரித்தான் விஷ்வரூபன் "பிளடி ராஸ்கல், அன்னைக்கே உன்ன கொல்லாம கைய மட்டும் உடைச்சி விட்டது தப்பா போச்சி, என்ன தைரியம் இருந்தா திரும்ப வந்து என் குழந்தைய கிட்னாப் பண்ணிருப்ப" கோரைப் பற்கள் கடிபட அவனை தாக்க முற்பட்டவனை பெருத்த சிரிப்பால் துப்பாக்கி முனையில் தடுத்து நிறுத்தி இருந்தான் சேது.

இப்ப வாடா பாக்கலாம் ஒரு அடி எடுத்து வச்சாலும் உன் குழந்தையோட மூள சிதறிடும் வெறியாக உரைத்தவனை அதிர்ச்சியாகி பார்க்க, குழந்தை வேறு பயத்தில் வீரிட்டு கத்தியது. 'வேதி.. வேதி.. அப்பா இருக்கேன் பயப்படாம இரு தங்கம், அப்பாவ நம்புற தானே' தன் பயத்தை மறைத்து இலகுவாக பேசி குழந்தையின் பயத்தை போக்க நினைக்க. பயமா இருக்கு ப்பா.. தலைகீழாக கை நீட்டி தேம்பி அழுத பிள்ளையை கண்டு நெஞ்சம் வெம்பியது.

நான் பாட்டுக்கு கொலை குத்து ரேப்புனு போயிட்டு இருந்தவன போலீஸ்ல பிடிச்சி கொடுத்துட்டு நீ மட்டும் பொண்டாட்டி புள்ளைனு அமோகமா வாழறியே எந்த இது விதத்துல டா நியாயம். அதான் உன் புள்ளைய கடத்தி உன்னையும் உன் புள்ளையையும் போட்டு தள்ளிட்டு அப்ப ருசி பாக்காம விட்டவள இப்ப நிதானமா தொந்தரவு இல்லாம ருசி பார்த்துட்டு மெதுவா உங்ககூட அனுப்பி வைக்கிறேன். வில்லங்கமாக சிரித்தவனுக்கு இதுவரை அவர்கள் வாழ்வில் நடந்த எந்த துயரமும் தெரியாது தெரிந்தாலும் கொண்டாட்டம் தான்.

ஜெயிலில் இருந்து தப்பித்து மோகி இருக்கும் இடம் தெரியாமல் அலைமோதியவன் விஷ்வாவை பின்தொடர்ந்து எளிதாக அவளை கண்டறிந்து எப்போது தனியாக மாட்டுவாள் என்று காத்திருந்தவன் சடுதியில் மனம் மாறி குழந்தையை வைத்து விஷ்வாவின் கதையை முடித்து மோகியை அடைந்து கொல்லும் திட்டம் தீட்டி வந்துருக்கிறான்.

டேய் சேது மரியாதையா கன்ன கீழ போடு. ஏற்கனவே நீ ஆயுள் தண்டனை கைதி, ஜெயில விட்டு தப்பிச்சி வந்ததே பெரிய தப்பு மேலும் தப்பு செஞ்ச உன்ன இங்கேயே நாங்க என்கவுன்டர் பண்ணவும் ஆர்டர் இருக்கு. இன்ஸ்பெக்டர் எச்சரிக்க அதை எதையும் அவன் காதில் வாங்கினான் இல்லை.

"எப்படியும் சாக போறேன்னு உறுதியாகி போச்சி. எப்டி செத்தா என்ன. என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கின இவன் குடும்பத்தை கருவருக்காம விடமாட்டேன்" (ஐயோ போதும் சாமி முடில டேய் இவன் கதைய முடிங்க டா) அவன் சீரியஸாக டைலாக் பேசும் போதே சட்டென தலையோடு உடம்பையும் வளைத்து குனிந்து காலை சுழட்டி நகட்டி சேதுவின் காலை கொக்கி போட்டு விதுரன் தட்டி விட துப்பாக்கி ஒரு மூலையில் பறந்து விழுந்து அவனும் குப்புற விழ காவலர்கள் ஈஸியாக அவனை வளைத்து பிடித்து விட்டனர். அதற்குள் விஷ்வா சென்று குழந்தையையும் காப்பாற்றி தூக்கிக் கொண்டான்.

இவன் எதுக்கு தப்பிச்சான் எதுக்கு ஈசியா போலீஸ்கிட்ட மாட்டினான். பெரிய வில்லனா காட்ட நினைச்சவனை இப்டி புஸ்ஸாக்கி விட்டிங்களே டாலீஸ். போச்சி போச்சி என் பிளானெல்லாம் போச்சி

குழந்தையை கண்டதும் வாரி அணைத்து முத்தமிட்டு கண்ணீர் விட்ட மோகி, விதுரனை கண்டு மெலிதாக புன்னகைத்து அவளையே ஏக்கம் பொங்க பாத்திருந்த வளந்த குழந்தையை கண்டு கொள்ளாமல் சென்றதும் வயிறு புகைந்தது.

** ** **

முகம் வாடிய நிலையில் அடுத்து என்ன செய்வது என புரியாத குழப்பத்தோடு அறையை சுற்றி வந்த கண்மணிக்கு இன்னும் மூன்று நாளில் திருமணம் முடிவாகி விட்டதே!

டெல்லியில் பெரிய செல்வந்தராம் வயது தான் அம்பதை தாண்டி இருந்தது அவளின் பாசமிகு சகோதரன் பார்த்த மாப்பிளை. அன்னையை வைத்து மிரட்டி காரியம் சாதிக்க நினைக்கிறான். எங்கும் தப்பி செல்ல முடியாத நிலை எங்கு சென்றாலும் துரத்தி வந்து வெட்டி வீசும் வக்கிர புத்தி உடையவன் என்று கண்ணால் பார்த்து தெரிந்தமையால் தானே அவன் கை சிறையில் அடங்கிக் கிடக்கிறாள். வெறும் கை சிறையாக மட்டும் கடைசி வரையில் இருந்தால் பிரச்சனை இல்லையே இந்த திருமணம் தானே அவளுக்கு பெரும் பிரச்சனை.

இப்போது எப்படி இந்த திருமணத்தை தடுத்து நிறுத்தலாம் பலமான யோசனையில் இருக்கும் போதே அவள் அலைபேசி ஒலிக்க, இந்த நேரத்துல யாரு சலிப்போடு எண்ணை கண்டவள் நெற்றி சுருக்கத்தோடு அழைப்பை ஏற்றாள்.

சொல்லுங்க சார் என்ன இந்த நேரத்துல கால் பண்ணி இருக்கீங்க. ஏதாவது முக்கியமான விஷயமா? பேசியபடியே நேரத்தை நோக்கினாள், மணி 12.30 காட்டியது.

ஒன்னும் இல்ல கண்மணி சும்மா தான், தூக்கம் வரல அதான் கை தவறி உனக்கு வந்திடுச்சி. மாட்டிக்கொள்வோம் என தெரிந்தே வாய்க்கு வந்ததை உளறி பொய் சொன்னான் புதிதாக காதல் மது அறிந்தியவன்.

அந்த பக்கம் அமைதியை கண்டு, ஆமா முதல் ரிங்லே போனை அட்டன் பண்ணிட்ட நேரம் ஆச்சே தூங்கலையா. ஏதாவது அவளிடம் பேச வேண்டுமென தோன்றியது.

அர்த்த ராத்திரில போனை போட்டு நீங்க வேற ஏன் சார் ரோதனை பண்றீங்க. மோகிய பத்தின ஏதாவது விஷயமா இருக்குமோனு போனை உடனே எடுத்தேன் பாருங்க என்னை சொல்லணும். முக்கியமான விஷயம்னா மட்டும் சொல்லுங்க இல்லாட்டி போனை வைக்கிறேன். காரசாரமாக வெடிக்கவும் காதை விட்டு போனை சற்று தள்ளி வைத்து காதை குடைந்துக் கொண்டான் விதுரன்.

'என்ன கண்மணி இந்த நேரத்துல இவ்ளோ ஹாட்டா இருக்கீங்க' இவன் ஒரு அர்த்தத்தில் சொல்ல அவளுக்கு தான் பக்கென்று ஆனது.

'எ.என்ன பேசுறீங்க நீங்க ஒரு பொண்ணு கிட்ட நைட் போன் பண்ணி பேசுற பேச்சா இது. நீ.நீங்க எங்கிருந்து பேசுறீங்க' பதட்டத்தில் திரைசீலை அனைத்தும் சரியாக மூடிவிட்டளுக்கு மூச்சி வாங்க தனது உடமையை சரிசெய்து கொண்டாள்.

"ஏங்க கண்மணி இப்ப எதுக்கு இவ்ளோ கோவமா மூச்சி வாங்குறீங்க, நான் ஒன்னும் தப்பா பேசலையே என்ன இந்த நேரத்துல இவ்ளோ சூடா கோவமா இருக்கீங்க அப்டினு தானே கேட்டேன்" அப்பாவி பிள்ளைக்கு எப்படி தெரியும் அவளது இரவு ஆடையின் லட்சனம் பற்றியெல்லாம். கூடிய விரைவில தெரிஞ்சிப்பான்

"ஓஹ்.. நீங்க அப்டி சொல்ல வந்தீங்களா" என்றவள் கண்ணாடியில் தன் பின்பம் பார்த்து பெருமூச்சு விட்டுக் கொண்டாள். தொடை வரை உள்ள நைட் டிரவுசர் ஸ்லீவ்லெஸ் லோ நெக் என பார்ப்பதற்கு அவன் சொன்னது போல ஹாட் பேபியாக தான் இரவில் இருப்பாள். வெளியே செல்லும் போது இரவில் பார்த்த கண்மணியா இது எனும் அளவுக்கு ஹோம்லி பேபியாக மாறி விடுவாள். தனிமையில் கூட பெண்களுக்கு ஆடை சுதந்திரம் இல்லை என்றால் எப்படி இது கண்மணியின் எண்ணம்.

ஏன் நீங்க வேற என்ன நினைச்சீங்க. புடவையில் மட்டுமே அவளை பார்த்தவனுக்கு அவளது இரவு பரிமானம் தெரியாமல் போனதால் அவள் எண்ணப்போக்கை கண்டறிய முடியாமல் கேட்டான்.

ஒ. ஒன்னும் இல்லையே நான் என்ன நினைக்க போறேன். ஆமா தெரியாம போன் பண்ணிட்டேன்னு சொல்லிட்டு இவ்ளோ நேரம் என்ன பேச்சி போனை வைங்க. என படபடத்தவள் சட்டென அழைப்பை துண்டித்து மெத்தையில் அமர்ந்தவளின் மனம் என்றுமில்லாமல் புதிதாக புத்துணர்ச்சி பெற்றதை போல் ஒருவிதமான புதிய உணர்வில் படுத்தவளுக்கு கல்யாணக்கவலை மறந்து அவளையும் மீறி உறங்கிப் போனாள்.

இங்கு அவள் நினைவில் தரைதேய நடந்தவனின் இதழில் நீண்ட வருடங்கள் கழித்து வெட்கப் புன்னகை தேங்கி நின்றது.

தொடரும்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 40
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Messages
62
Reaction score
53
Points
18
Mmmhmmm.... ena ji aludhadhu pothum romance mood ku mathi poalam nu sonninga.... Mogi onnum samathanam aanadhu mariye therialaye... Mmm koatta padi patha innum rendu epi missing ji...
 
Top