Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖

அத்தியாயம் 42

Administrator
Staff member
Messages
300
Reaction score
215
Points
63
அத்தியாயம் - 42

நிலவு மகள் வான்மேகத்தில் ஒளிந்து ஒளிந்து நட்சத்திரங்களோடு கண்ணாம்பூச்சி விளையாட்டு ஆடிக் கொண்டு இருப்பதை பார்த்தவாறே வேதியை தூக்கி வைத்து கொஞ்சியபடி பால்கனியில் நின்றிருந்தான் விஷ்வா.

என் பப்புக்குட்டிக்கு என்னெல்லாம் புடிக்கும் எல்லாத்தையும் லிஸ்ட் போட்டு அப்பாகிட்ட சொல்லு, நம்ம நாளைக்கு கடைக்கு போய் பாப்பாக்கு புடிச்ச எல்லாத்தையும் வாங்கிட்டு வந்திடலாம் ஓகே தானே வேதி ஹாப்பியா? வீட்டிற்கு தாமதமாக வந்ததில் குட்டி கோவம் குட்டிக்கு.

அதெல்லாம் ஓகே தான் ஆனா இன்னைக்கு ஃபுல் டே என்கூடவும் அம்மா கூடவும் இருப்பேன்னு சொல்லிட்டு, என்கிட்ட சொல்லாம போய்ட்ட. அம்மாவும் இன்னைக்கு என்கூட விளையாட வரல எனக்கு எவ்ளோ போர் அடிச்சுது தெரியுமா அப்பா. கோவத்தில் வார்த்தைகள் மேலும் மழலையாய் பொழிய தந்தையின் உள்ளம் உருகியது.

'அச்சோ என் பட்டு அப்பாவ இந்த அளவுக்கு தேடி இருக்காளே. அதான் அப்பா சாரி சொல்லிட்டேனே இனிமே ஹாலிடேஸ்ல அப்பா உன்ன விட்டு எங்கேயும் போக மாட்டேன் ப்ராமிஸ்குட்டி. கொஞ்சம் சிரியேன்' குட்டி கன்னத்தில் முத்தம் வைத்து மீசை முடியால் கூச வைக்க பால் பற்கள் தெரிய அழகாக புன்னகைத்து தந்தை மகளின் சிரிப்பு சத்தம் வீட்டினுள் வரை எதிரொலித்தது.

முகத்தை உர்ரென வைத்துக் கொண்டு துணி மடித்துக் கொண்டிருந்த மோகியின் காதிலும் சிரிப்பு சத்தம் கேட்டது 'உன்னால உருவான குழந்தை தான் ஆனா இத்தனை வருஷம் கழிச்சி பாத்து தூக்குற உனக்கே அவமேல இவ்ளோ பாசம் பொங்கி உருகும் போது, அம்மா இல்லாம தனி ஆளா என்னை வளத்து ஆளாக்கின என் அப்பா எம்மேல வச்சிருந்த பாசத்தை அவர் தோற்றத்தை வச்சி எடை போட்டல்ல' மடித்த துணியை அழுத்தி பிடித்தவளின் இதழினில் விரக்தி புன்னகை.

நேரம் சென்றது, குழந்தை உறங்க வேண்டும் என்று வெடுகென அவனிடமிருந்து பிடுங்கி சென்று விட்டாள். பால்கனி கம்பியை பிடித்து நின்றபடி வானத்தை வெறித்தவன், குழந்தையை மடியில் போட்டு கதை சொல்லி தட்டிக்கொடுத்து உறங்க வைத்துக் கொண்டிருக்கும் மோகியை அடிக்கடி திரும்பிப் பார்த்து முறைத்துக் கொண்டு இருப்பதை கண்டும் காணாததை போல் இருந்தாள்.

இன்னும் அவன் அடித்த கன்னங்கள் இரண்டும் பர்கர் போல் வீங்கிய நிலையில் தான் இருந்தது கூடவே வலியும். காயம் பட்ட உதடு வேறு பேசும் போதெல்லாம் எரிச்சலை உண்டு செய்ய 'ராஸ்கல் என்னையே அடிச்சிட்டு திரும்பவும் என் வீட்டுக்கே வர எவ்வளவு தைரியம் இருக்கனும். எல்லாம் இவளால வந்துச்சி, அவன் போனதுல இருந்து அப்பா எங்கே.. அப்பா எங்கே.. அப்பா எங்கே.. இத்தனை வருஷமா பெத்துவளத்த அம்மாவ கண்ணுக்கே தெரியல நேத்து வந்தவன் பெருசா போய்ட்டான். என்னவோ இவன் பண்ணாத தப்ப நான் செஞ்சிட்ட மாதிரி துறைக்கு அம்புட்டு கோவம் வருது, சரியான சாடிஸ்ட், அராஜகம் பிடிச்சவன். உன்ன நான் லேசுல விட்டுட மாட்டேன் டா இனிமே தான் இந்த மோகி யாருனு நீ முழுசா பாக்க போறே" பெரிய சுறாங்கனி மனதுக்குள் சபதம் எடுத்துக் கொண்டு குழந்தையோடு படுத்தவளின் போர்வைக்குள் நைசாக புகுந்து கொண்டது பெரிய சைஸ் பெருச்சாளி ஒன்று.

முதுகோடு படர்ந்த ஆடவனின் வெட்பத்தில் திடுக்கிட்டு அதிர்ந்து போனவள், பதட்டமாக எழ முற்படும் வேளைதனில் அவனது வலிய பெரிய கரம் அழுத்தமாக அவள் இடை தாண்டி வயிற்றில் படர்ந்து தன்னோடு இறுக்கிக்கொண்டதும் சிறிய இடத்தில் அசைய முடியாது தேகம் சிலிர்த்து நடுங்கியவளின் பின்கழுத்தில் இதழ் ரேகையால் பச்சைக் குத்தினான் விஷ்வரூபன்.

முட்டை கண்கள் அகல விரிய பூனைமுடிகள் குத்திட்டு நின்றது. அருகினில் வேதிதா சத்தமிட்டால் முழித்துக் கொள்ளும் சிறிய இடத்தில் விஷ்வாவின் தேகம் உரசும் நெருக்கத்தில் ஆத்திரம் அடைந்தவளாக, 'ச்சீ.. வெக்கமா இல்ல உனக்கு மரியாதையா எந்திரிச்சிடு சொல்லிட்டேன்' மெதுவாக பற்களை கடித்து கரத்தை எடுத்து விட முயன்றாள்.

இன்னும் நன்றாக வயிற்றில் கரம் பதித்தவன் பஞ்சி சதையை பக்குவமாய் கடைந்து சேலை கொசுவத்தில் விரல்கள் நுழைத்து அடிவயிற்றில் கூசி சீண்டி இன்னும் எங்கெங்கோ விரல்கள் பயணிக்க இதயம் துள்ளி துடித்து தேகம் அதிர்ந்தது.

'விருப்பம் இல்லாதவள தொடறதுக்கு பேர் என்ன தெரியுமா?' என்றாள் லேசாக அவன் பக்கம் முகத்தை திருப்பி.

விருப்பம் இருக்கோ இல்லையோ அடுத்தவன் பொண்டாட்டிய ஒன்னும் நான் தொடலையே என் பொண்டாட்டிய தொட்டேன் அதுக்கு பேர் காதல், ஆசை, நேசம், பாசம், அன்பு, விருப்பம், அக்கறை இப்டி சொல்லிக்கிட்டே போகலாம் டி. நீண்ட நாட்களுக்கு பிறகு கிடைத்த மோகப்பெண்ணின் ஸ்பரித்தத்தை ஆழ்ந்து அனுபவித்தவனின் சூடான ஈரமூச்சோடு தடித்த அதரம் கழுத்தில் ஊர்வலம் வந்து அவளை கூசியது.

மச்.. அடுத்த நாடகமா. தாலியே கட்டல பொண்டாட்டியாம். நல்ல வேளையா அப்டி ஒரு பாவக்கயிறு என் கழுத்தை நிறைக்கல, ஒன்னுதுக்கும் உதவாத என் கழுத்துல மாட்டினியே அந்த செய்னுக்கும் எந்த வேல்யூவும் இல்ல அதை நான் அன்னைக்கே அறுத்து வீசிட்டேன். இனிமே பொண்டாட்டி கிண்டாட்டின்ன மரியாதை கெட்டுக்கும் ஒழுங்கா எந்திரி டா இல்ல கத்தி கலாட்டா செய்வேன். ரவிக்கையின் முன்பக்க கொக்கியில் விரல்கள் தீண்டி ராவியதும் மேல்மூச்சி கீழ்மூச்சி பலமாக வாங்கியது.

தைரியம் இருந்தா கத்து டி எனக்கென்ன வந்துச்சி. அப்பறம் ஒரு விஷயம் இந்த தாலி செண்டிமெண்ட் பேசி என்னை ஒதுக்கிடலாம்னு நினைக்காத தாலி இருந்தாலும் இல்லைனாலும் நம்ம உறவுக்கு சாட்சி நம்ம குழந்தை. நம்ம ரெண்டு பேர் காதலோட உண்மையான அடையாளம் டி என் பொண்ணு. சும்மா முடிஞ்சி போன கதைய பேசி டென்ஷன் ஆகாத மோகிமா, வீங்கிய கன்னத்தில் முத்தம் வைத்து அவள் மீது முழுதாக தழுவியபடி மகள் நெற்றியில் மெல்லிய முத்தம் பதித்தவன், முரண்டு பிடித்து வீம்பு செய்த மோகமலரின் வாயோடு வாய் பொத்தி பால்கனிக்கு தூக்கி வந்து நிறுத்தியவனை உதட்டில் வழிந்த எச்சிலை துடைத்தபடி அக்னி பறக்க முறைத்தாள் மோகி.

என்ன டி முறைப்பு. போனா போகுது பாவம் சின்ன பொண்ணுனு சாஃப்ட்டா நடந்துகிட்டா ரொம்பதான் துள்ளுற. இதுக்கு மேல வன்முறைய கையாண்டா தான் என் வழிக்கு வருவ. பெண்ணுடலை ஒருமார்க்கமாக பார்த்து கை இரண்டையும் கோர்த்து தலைக்கு மேல் தூக்கி கழுத்தை வளைத்து நட்டை முறித்த விதம் பெண் மனதில் கிலி பரவியது.

இங்க பாரு நான் ஒன்னும் பழைய மோகி இல்ல 'இந்த உடம்பை பல பேர் பலவிதமா தொட்டு பிச்சி எடுத்தாச்சு'.. அவள் சொல்லி முடிக்கவில்லை மீண்டும் ஓங்கி விட்ட அறையில் தலை கிறுக்கிறுத்து தள்ளாடியவளை இழுத்து இறுக்கமாக அணைத்துக் கொண்டான் விஷ்வா.

'அதான் பொய் பேச தெரியலல்ல அப்புறம் எதுக்கு டி என்னை கஸ்டப்படுத்தி பழிக்கு பழி வாங்குறதா நினைச்சி, உன்ன நீயே கஸ்டபடுத்திக்கிற. நீ பேசுறத உன்னாலயே முதல்ல சகிச்சிக்க முடியிதா 'பொய் சொல்லி நடிக்கிறதுக்கு எல்லாம் ஒரு திறமை வேணும் டி முட்டாள். அந்த திறமை இந்த விஷ்வரூபனுக்கு மட்டும் தான் இருக்கு'

'வீனா இனிமே தப்பா பேசி அடி வாங்கி சாகாத. காலைல நீ பேசினதுக்கு வாதம் பண்ணாம வெறும் அடியோட போனதுக்கு காரணம், உன்ன இந்த அளவுக்கு கீழ்த்தராம உன்னை நீயே சித்தரிச்சி பேச வைக்கிற அளவுக்கு உன் மனசை வேதனை படுத்திட்டேனேனு எம்மேலயே எனக்கு கோவம் வெறி. உன் முன்னாடியே எனக்கு நானே தண்டனை கொடுத்துக்கிட்டா கண்டிப்பா நீ வருத்தப்படுவ டி அதான் எதுவும் பேசாம போனேன்' என்றவன் நெஞ்சில் தண்டனைக்கான தடையம் உள்ளது மோகி காண்பாளா அதனை?

என்னை கஸ்டபடுத்துறதா நினைச்சி திரும்பவும் கண்டதையும் பேசி உன்ன நீயே வருத்திக்காத மோகிமா. என்னை மட்டும் தனியா பாதிக்கிற மாதிரி வேற எந்த தண்டனை வேணாலும் குடு சந்தோஷமா ஏத்துக்குறேன் உன் கையாள கொன்னா கூட வரம் டி எனக்கு. அந்த அளவுக்கு என் மனச மயக்கி என்னை மோகி பைத்தியமாக்கி வச்சிட்ட. நீ இல்லாம நான் தவிச்ச தவிப்பு இருக்கே சாவை விட மோசமான காலம் டி.

முன்னாடி எல்லாம் உன்ன லவ் பண்றேன்னு சொல்லிட்டு பொண்ணுங்களோட கூத்தடிக்கும் போது தெரியல டி, அதோட பின்விளைவுகள் பத்தி. ஆனா இன்னைக்கு ஒரே நாளுல ஒழுக்கத்தோட மதிப்பு என்னனு மொத்தமா புரிய வச்சிட்ட மோகி, என் உடம்ப நினச்சா எனக்கே அருவருப்பும் வாந்தியும் வருது. உன் பெண்மையோட பொக்கிஷமும் உடம்பும் எனக்கே எனக்கு சொந்தம்னு நான் எப்டி நினைக்கிறேனோ அதேமாதிரி தானே டி நீயும் என் ஆண்மையும் உடலையும் உனக்கே உனக்குனு நினைச்சி இருப்ப. எந்த அளவுக்கு நீ எம்மேல நம்பிக்கை வச்சிருந்த ஆனா ஒவ்வொரு முறையும் உன் நம்பிக்கைய உடைச்சி நம்பிக்கைக்கு அர்த்தமில்லாத சாக்கடையா இருந்திருக்கேனே டி' வேதனையாக நடுங்கி ஒலித்த ஆண்குரல் கேட்டு நெஞ்சம் கலங்கி மூச்சிழுக்க விம்மினாள் மோகி.

உண்மை தானே ஆயிரம் கோவம் இருக்கட்டும், அதெப்படி தான் இருக்கும் போதே தன்னை காதலிக்கும் போதே தன்னை ஏமாற்றி விட்டு கண்டவளோடும் இவன் தாராள பிரபுவாக ஆட்டம் போட்டு எனக்கு மட்டும் சொந்தமான ஆண்மையை கலங்கப் படுத்தி விட்டு சொஞ்சம் கூட மனசாட்சி உருத்தாமல் தன்னுள் கலந்தான் என்று ஒவ்வொரு முறையும் நினைக்கும் போதெல்லாம் பைத்தியம் பிடிப்பது போல் தலையை பிடித்துக் கொண்டு முட்டிக்காலில் முகம் புதைத்து அழுத அழுகைகள் அணைத்தும் அத்தனை எளிதில் மறக்க முடிந்திடுமா அவளால்.

இப்போதும் கட்டுபாடின்றி கலங்குகிறது கண்கள். அவனது இறுகிய அணைப்பில் இருந்து நெளிந்தவளின் முகத்தை மென்மையாக கையில் ஏந்தி கை ரேகை பதிந்திருந்த கன்னத்தில் முத்தம் வைக்க, அவன் முகம் பாராது கண்களை மூடி இதழ்க் கடித்துக் கொண்டாள்.

ப்ளீஸ் மோகிமா.. பழசை எல்லாம் மறந்திடு டி. ஐ நோ மறக்குறது கஷ்டம் தான் அதுக்காக அதையே நினைச்சி புழுங்கி, இருக்க மிச்சமீதி வாழ்க்கையும் தெரிஞ்சே நரகமாக்கிகனுமா சொல்லு. நம்ம பாப்பா இருக்கா டி அவ காலை குணப்படுத்தனும் அதுக்கு முக்கியமா நம்ம சண்டை போடாம நிம்மதியா சந்தோசமா இருக்கனும், அப்பதான் குழந்தைய நம்ம சந்தோசமா பாத்துக்க முடியும் மோகி.

குழந்தைக்கும் எனக்கும் சந்தோஷத்தை கொடுக்குறது நீ மட்டும் தான் டி. நீ சிரிச்சா நாங்களும் சிரிப்போம் நீ அழுதா நாங்களும் அழுவோம் நம்ம குடும்பத்தோட சந்தோஷம் இந்த மோகி பாப்பா மட்டும் தான், உளமார உணர்ந்து உணர்வுபூர்வமாக உரைத்தவனை விழிகள் விரிய கண்டவள் பதில் சொல்லாமல் மீண்டும் தலை குனியப் போக குனிய விடாமல் பிடித்து, 'பாரு கன்னமெல்லாம் வீங்கி இருக்கு கோவத்துல வேகமா அடிச்சிட்டேன் மருந்து போட்டு விடவா டி' விழிகள் சிரிக்க மூக்கும் மூக்கும் உரசியபடி குறும்பாக கேட்டவனை முறைத்தவளின் இதழில் நாணத்தின் புன்னகை அரும்பியது.

ஹை மோகி நீ சிரிச்சிட்ட டி.. நம்பமுடியாமல் சந்தோஷத்தில் கத்தியவன் வாயை 'ஷ்.. பாப்பா தூங்குறா' அவசரமாக கை கொண்டு மூட மூடிய உள்ளங்கையில் மீசை குறுகுறுக்க ஒரு இச். உடனே கை எடுத்துக் கொண்டு ஓட போனவளின் சேலை தலைப்பு மன்னவன் கையில் சிக்கி சுருண்டது.

மச்.. தூக்கம் வருது விடு. அவன் பின்னே நெருங்க நெருங்க இதயம் அதிவேகம் எடுத்து துடிக்க சட்டென இயல்பாக பேச முடியாதபடி சங்கடம் அவளுக்கு.

என் செல்லக்குட்டி உன் பைத்தியக்கார விஷ்வாவ மன்னிச்சிட்டியா டி. முந்தானையை விடாமல் பின்னிருந்து கட்டிக் கொண்டு அவள் தோளில் தாடை வைத்து கன்னத்தோடு கன்னம் பதித்துக் கொண்டான்.

ரொம்ப ஆசைல துள்ளாத. நீ செஞ்சதுக்கு எல்லாம் பதிலுக்கு பதில் பழி வாங்காம விட மாட்டேன். என் குழந்தைக்காக தான் போனா போகட்டும்னு உன்ன வீட்டுக்குள்ள விட்டேன், அதையே அட்வான்டேஜ் எடுத்து என்னை இப்டி தொட்டு பேசி முத்தம் கொடுத்து கட்டிப்பிடிச்சி அடிக்கிற வேலை எல்லாம் வச்சிக்காத. என்னைக்கும் நான் உன்ன மன்னிக்கவே மாட்டேன். சீரியஸாகப் பேசிக் கொண்டிருந்தவளின் கழுத்தை உரசி மார்பில் ஆடி மின்னிய பொன்சங்கிலியை கண்டு வியப்பில் விரிந்த கண்கள் தானாக கண்ணீரை சொரிந்து தலை தூக்கி அவனை பார்த்தவளின் இமைகளில் ஆத்மாத்மான காதலை தேக்கி முத்தமிட்டான்.

உன்ன பொய்யா காதலிச்சி நடிச்சி இருக்கேன் உண்மை தான். ஆனா உன்ன ஒவ்வொரு முறையும் தொடும் போது சத்தியமா உம்மேல உள்ள முழுகாதலோட மட்டும் தான் டி உன்ன நெருங்கி எனக்கே எனக்கானவளா முழுசா உன்ன எடுத்துக்கிட்டேன். என் அண்ணன் மேல வச்சிருந்த அளவுகடந்த பாசம் தான் யோசிக்காம உன்ன கஷ்டப்படுத்த காரணமா அமஞ்சிடுச்சி.

எனக்கு தெரியும் என்னதான் நீ என்கூட முழுமனசோட இணைஞ்சி இருந்தாலும் ஏதோ ஒரு மூலைல உன் மனசுல குற்றகுறுமுறுப்பு இருக்கும்னு, அதான் நம்ம உடலவுல ஒன்னா இணைஞ்சிட்ட போதே சட்டபூர்வமா உன்ன என் மனைவியா மாத்திக்க என்னென்ன செய்யணுமோ அது எல்லாத்தையும் செஞ்சிட்டேன் என்று கண் சிமிட்டி புன்னகைத்தவனை மேலும் வியப்புடன் வாய் பிளந்து பார்த்தவளின் சிவந்த இதழ்களில் கிறக்கமாக கண் பதித்து, அப்பவும் சரி இப்பவும் சரி எப்பவும் நீ பொண்டாட்டி தான் நான் தான் உன் புருஷன். என்ன நினச்ச இந்த செயினை அறுத்து வீசிட்டு வந்தா நீ என்னோடவ இல்லனு நினைச்சிட்டியா, கர்வம் நிறைந்த குரலில் கேட்ட தொனியில் சற்று கோவமும் துல்லியது.

முதல்ல நான் உன்ன தப்பா புரிஞ்சிகிட்டு உன்ன வார்த்தையால வதைச்சேன், எல்லாம் தெளிவாகி உன்ன தேடி வந்து உண்மைய சொல்லி உன் காலுல விழுந்து மன்னிப்பு கேக்குறதுக்குள்ள பல கிறுக்கு வேலை நடந்து நீ என்னை புரிஞ்சிக்காம போய் பெரிய தப்பு பண்ணி நீயும் கஷ்டப்பட்டு என்னையும் கஷ்டப்படுத்திட்ட டி. அதுக்கெல்லாம் பெரிய தண்டனை உண்டு, திடிரென அந்நியனாக மாறியவனை பீதியோடு பார்த்த நேரம் அவள் கழுத்தில் பொன் தாலிக்கயிறு நிறைந்து போனது.

என்னடா இது நான் இவனுக்கு தண்டனை கொடுக்கணும்னு நினச்சா இவன் எனக்கு விதவிதமா தண்டனை தரான் மேலும் மூச்சைடைக்கும் வியப்பு அவளிடம்.

இந்த தாலியும் அப்பவே வாங்கிட்டேன் டி ஆனா படிப்பு முடிஞ்ச பிறகு உன் ஊருக்கே வந்து ஊரரிய கல்யாணம் பண்ணலாம்னு பாத்தேன். அதுக்குள்ள எல்லாமே கொலாப்ஸ் ஆகி நம்ம வாழ்க்கையே தரம் புரண்டு போச்சி, சோகம் இழையோடியக் குரல் சட்டென மாறி, பலவித உணர்ச்சிகளை கலவையாக காட்டிக் கொண்டிருந்தவளின் இடைவளைத்து இழுக்க அவன் நெஞ்சில் முட்டி முட்டமுட்ட முழித்தவளின் செவ்விதழ் கவ்வி கல்கண்டு கட்டியாக கரைத்து சுவைத்தவன் 'இத்தனை வருஷமா என்னை தவிக்க விட்டதுக்கு இனிமே வட்டியும் முதலுமா தண்டனை உண்டு டி பொண்டாட்டி' ஒருமார்க்கமாக சிரித்தவனை கண்டு கன்னக்கதுப்புகள் கூசிப் போனாள் மோகநங்கை.

சூறாங்கனையின் சபதமெல்லாம் கற்பூரமாக காற்றில் கலக்க, கசப்பான நினைவுகளை குப்பையில் வீசி விட்டு இனி வரும் காலங்களில் தெகுட்டாத இன்ப நினைவுகளை மனதும் உடலும் ஒன்றிணைந்து மீண்டும் புதுப்பிக்கப்பட்ட காதலோடு சேமிக்க தொடங்கினர்.

தொடரும்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 42
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top