- Messages
- 300
- Reaction score
- 215
- Points
- 63
அத்தியாயம் - 44
சோகம் அப்பிய முகத்தோடு தன் அறையில் அமர்ந்திருந்தான் விதுரன். அவன் வம்புபிடித்த மனைவி என் மனம் மாற கொஞ்சம் காலஅவகாசம் வேண்டுமென கேட்டு அடித்து துரத்தாத குறையாக வீட்டை விட்டு அனுப்பி விட்டாளே.
வீட்டை விட்டு வருவதற்கு முன்பு கண்மணியோடு சேர்ந்து தம்பதிகளாக அவள் அன்னையின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டனர். மகளின் வாழ்வு மீண்டும் மகிழ்ச்சியாக மாற வேண்டும் என்று கண்மணியின் தாய் வேண்டாத நாளில்லை. இன்றோ மகளுக்கு ஒரு நல்ல மாப்பிளை கிடைத்து விட்டதில் குன்றிய உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி பெற்றதை போல் மகிழ்ச்சியில் திளைத்து தாய் உள்ளம் மனதார வாழ்த்தியது.
புது மனைவியோடு ஆசை தீர மனம் விட்டு பேச வேண்டும் கொஞ்ச வேண்டும் என்ற ஏக்கம் ஆவல் இருந்தாலும், அவளின் எண்ணத்திற்கும் மதிப்பு கொடுத்து தான் மேலும் அவளை சங்கடம் கொள்ள வைக்காமல் அங்கிருந்து வந்தது ஆனாலும் காதலியாக இருந்தவரை தெரியவில்லை கணவன் என்ற உரிமை வந்ததும் மனைவியின் அருகாமை கேட்கும் மனதை என்ன செய்து தடுப்பது. இத்தனை வருட தனிமையில் தெரியாத உடல் உணர்வுகள் மன ஏக்கங்கள் எல்லாம் தனக்கென்று ஒருத்தியை காணும் வரையில் தனக்கே தெரியாமல் இருந்ததை எண்ணி வியப்படைந்தவனுக்கு இப்போது தான் தெளிவாக உணர உணர முடிகிறது தனிமையின் கொடுமை என்னவென.
காதலிக்கும் கட்டிய மனைவிக்கும் உள்ள வேறுபாடுகள் உணர்ந்து லிவ் இன்னில் முன்னால் காதலியோடு வாழ்ந்த வாழ்க்கையை எண்ணி தனக்குள்ளே வெட்கினான். அப்போது இருந்த வாலிப வயதில் யார் சொல்வதையும் முக்கியமாக அவன் தாய் சொல்வதை எல்லாம் காதில் வாங்காமல் சுற்றியதற்கு கிடைத்த தண்டனையாக எடுத்துக் கொண்டவன், கண்மணியின் கடந்த காலத்தை எண்ணியும் கவலை கொண்டான். தவறாக இல்லை தன்னவள் இத்தனை பெரிய மனவேதனையை தாங்கி கொண்டு தனிமையில் தவித்து இருக்கிறாளே என்ற தவிப்பில்.
இன்னும் தனக்கு திருமணம் ஆன விடயத்தை பற்றி அவன் வீட்டில் தெரிவிக்கவில்லை. தெரிந்திருந்தால் இந்நேரம் அடுத்த பிளைட்டில் டெல்லி வந்திறங்கி மகனையும் மருமகளையும் கொண்டாடித் தீர்த்திருப்பார் அவன் தாய். கண்மணியின் மனம் தெளிந்து தன்னை முழுமையாக கணவனாக ஏற்றுக் கொண்டதும் யாருக்கும் எந்த ஒரு சங்கடமுமின்றி அறிமுகப் படுத்திக் கொள்ளலாம் என்று அமைதியாக இருக்கிறான்.
இத்தனை நாளும் வெறுமை படர்ந்திருந்த மனம், இப்போது தனக்கே தனக்கென சொந்தமாக ஒருத்தி வந்துவிட்டாள் என்ற நிம்மதியில் உறக்கம் அவன் கண்ணை தட்டிக் கொடுத்து துயில் கொள்ள வைத்தது.
** ** **
மருத்துவமனையில் வார்டின் வெளியே போடப் பட்ட இருக்கையில் உள்ளம் பரிதவித்து மோகி அமர்ந்திருக்க, அவளை ஆதரவாக பற்றி இருந்த விஷ்வரூபனின் இதயமோ டன் கணக்கில் பயமும் பயதட்டமும் ஒன்று கனத்த நிலையில், உள்ளம் தவித்துப் போனான் உள்ளிருந்து தொடர்ந்து வரும் மகளின் அழுகுரல் கேட்டு.
கடந்த ஆறு மாதங்களாக குழந்தையின் கால்களுக்கு பிசியோதெரபி கொடுக்கும் போதெல்லாம் இப்படி தான் குழந்தை வலி தாங்காமல் கதறுகிறது. மோகி பலமுறை குழந்தையின் வலியை கண்டு பெற்ற வயிறு கணக்க தனிமையில் அழுது கரைந்து விடுவாள். முதல் முறையாக குழந்தையின் வலியை நேரில் கண்டு இதயம் நடுங்கிப் போனான் விஷ்வா.
முட்டிக்காலில் முக்கிய நரம்பியல் குறைபாட்டில் மோட்டார் நியூரான்களை பாதித்து நடக்க முடியாமல் இருந்த குழந்தையின் என்புகள் தேறி தசைகள் சற்று வலு பெற தொடங்கியதும் அறுவை சிகிச்சை நடத்தலாம் என கடைசி சோதனையில் மருத்துவர்கள் சொல்லி இருந்தனர். தசைகள் செயலிழந்து பலவீனமாகி இருக்கவே ஆர்த்தோடிக் மற்றும் பிசியோதெரபி மூலம், வலிமையும் செயல்பாட்டையும் மேம்படுத்த வேண்டி உள்ளே சிகிச்சை கொடுத்துக் கொண்டிருக்க வேதியின் சத்தம் தாய் தந்தையை பலமாக அச்சுறுத்தியது.
பிசியோதெரப்பிஸ்ட் காலை ஒவ்வொரு முறைவும் அசைக்க முயற்சி செய்யும் போதெல்லாம் வலியில் கத்தி
அம்ம்மாஆ.. அம்மாஆஆ.. வலிக்குது.. அம்மாஆஆ.. தூக்கு.. குழந்தையின் அழுகுரலை அதற்கு மேலும் தாங்க முடியாது 'மோகி அப்புறம் பாத்துக்கலாம் டி குழந்தை ரொம்ப அழுது, என் இதயமே நின்னுடும் போல இருக்கு நான் போயிட்டு என் குழந்தைய தூக்கிட்டு வந்திடுறேன் டி' படபடப்பாக கண்ணீரைத் துடைத்துக் கொண்டு எழ முற்பட்டவன் கரத்தை பிடித்து வேண்டாமென தடுக்கவும் மீண்டும் பொத்தென இருக்கையில் அமர்ந்தான்.
"ரொம்ப கஷ்டமா இருக்கா விஷ்வா" மென்மையாக அவன் நெஞ்சில் சாந்தவளை இறுக அணைத்து தன் தவிப்பை உணர்த்திவனாக "ரொம்ப ரொம்ப டி தாங்க முடியல" என்றான் குரல் தழுதழுக்க.
'இந்த ஒருமுறைக்கே அவ வேதனைய பாத்து துடிச்சி போறியே, ஆனா நான் அவ பிறந்ததுல இருந்தே தனியா வச்சிகிட்டு ஆறுதல் சொல்ல கூட யாரும் இல்லாம எப்டி தவிச்சு இருப்பேன், அப்போல்லாம் நீ எங்கே டா போன? இன்னைக்கு புதுசா வந்து அப்பானு பாசம் காட்டி கூட இருந்தா நான் தவிச்ச தவிப்பு எல்லாம் இல்லனு ஆகிடுமா? கோவத்தின் வெளிப்பாடு அவள் குரலில் தெரிந்தாலும் ஆறுதலுக்காக சாய்ந்த நெஞ்சத்தை விட்டு எழவில்லை.
எத்தனை நாள் தனிமைல அழுது இருக்கேன் தெரியுமா? இப்பயாவது வேதி கொஞ்சம் வளந்து இருக்கா நம்ம சொன்னா கேட்டுக்குற பக்குவம் இருக்கு, இதுக்கு முன்னாடி அப்டியா எதுக்கெடுத்தாலும் அழுகை ஏன் அழறா எதுக்கு அழறானு அவ்ளோ சீக்கிரத்துல கண்டு பிடிக்க முடியாது. அவசரத்துக்கு ஒரு அஞ்சி நிமிஷம் பாத்ரூம் கூட அவளை தனியா விட்டு போக முடியாது. நிம்மதியா கண் மூடி ஒரு ஒருமணி நேரம் சேந்தாப்புல தூங்க முடியாது. பக்கத்துல கடைக்கு போனா கூட கங்காரு குட்டிபோல தூக்கிட்டு போகணும். இவகூட பிறந்த குழந்தைங்க எல்லாம் தத்தித் தவழ்ந்து நடக்கும் போது என் குழந்தைய நான் என் நெஞ்சில சுமந்து வேதனைய என் மனசுல சுமந்தேன்.
இத்தனை வருஷத்துல நீ என்ன நினைச்ச விஷ்வா, உன்ன ஒருமுறை நான் நினைச்சி பாக்கலைனா? விரக்தியாக கேட்டவளை கலங்கிய நிலையில் நெஞ்சம் பதைபதைக்கப் பார்த்தான்.
ஒருநாள் கூட உன்ன நினைக்காம என் நாள் போகாது. நானா நினைக்கலைனாலும் உன்னையே உறிச்சி வச்சி பிறந்த வேதிய பாக்கும் போதெல்லாம் உன் நினைப்பு தானா வந்திடும். உன்ன தேடி வந்து ஏன்டா என்ன ஏமாத்தினனு கன்னம் கன்னமா அறைஞ்சி கத்தி அழ தோணும். அதே நேரம் உம்மேல அளவுகடந்த வெறுப்பும் பயமும் தோணும், எங்கே உனக்கொரு குழந்தை இருக்குறது தெரிஞ்சா நீ கொன்னுடுவியோனு, என்றதும் பலமாக அடிப்பட்டது அவன் இருதயம்.
ஒரு மகளை எந்த தகப்பனும் பாக்க கூடாத கோலத்துல பாத்து எப்டி துடிச்சி போய் அவமானத்துல என் அப்பா செத்து போனாருனு உனக்கு தெரியுமா விஷ்வா வேதனையாக நா தழுதழுத்தவளை கட்டிக் கொண்டு வாய் விட்டு குலுங்கி அழுது விட்டான்.
உன் குழந்தைய பாத்து குறிகிய காலமா இருந்தாலும் எவ்ளோ பாசம் வச்சி அவளுக்காக துடிச்சி போற, குழந்தை பிறந்ததுல இருந்து அவ வேதனைகளையும் வலியையும் கண்டு நான் ஒவ்வொரு நிமிஷமும் துடிப்பேன் விஷ்வா, எனக்கும் குழந்தைக்கும் பக்கப்பலமா ஆறுதலா இருக்க வேண்டியவன் நீயும் இல்ல, மாசத்துல பாதி நாள் ஹாஸ்பிடல் வனவாசம் தான். உன் கண்ணீரை பாக்கும் போது எனக்கு என் அப்பா நியாபகம் தான் வந்துச்சி. ஒரு தாயா நானே ஒரு கை பிள்ளைய தனி ஆளா வளக்க அவ்ளோ கஸ்டப்பட்டேன், ஆனா என் அப்பா ஒத்த ஆம்பளையா கைல காசு இல்லாம கூலி வேலை பாத்து மூட்டை தூக்கி என்னை வளக்க எந்த அளவுக்கு கஸ்டப்பட்டு இருப்பாருனு உனக்கு தெரியுமா டா. சட்டை பற்றி அவன் முகம் பார்த்து வெம்பியவளை என்ன சொல்லி தேற்றுவது புரியாமல் கண்ணீர் சுரந்தன கண்கள்.
ஒரு பொண் குழந்தைக்கு அப்பா எவ்ளோ முக்கியம் தெரியுமா, அப்பான்னா நம்பிக்கை, பாதுகாப்பு, தன்நம்பிக்கை, தைரியம், உற்சாகம், சந்தோசம், சிரிப்பு, எந்த கவலையும் இல்லாம துள்ளி குதிச்சி விளையாடுற சந்தோஷப் பூங்கா. ஒரு பொண்ணுக்கு அப்பா பாசம் கிடைக்கிறது எல்லாம் வரம் விஷ்வா. அது எல்லாருக்கும் கிடைச்சுடாது ஆனா எனக்கு அப்டி ஒரு வரம் கிடைச்சும் என் முட்டாள்த்தனத்தால தவற விட்டேன். அதே நிலைமை என் குழந்தைக்கும் வந்திடக் கூடாதுனு தான் எனக்கு நீ கொடுத்த எல்லா கஷ்டத்தையும் மறந்துட்டு என் குழந்தையோட சிரிப்புக்கும் பாதுகாப்புகாவும் உன்ன நான் மன்னிச்சி ஏத்துகிட்டேன் என்றாள் வலிய புன்னகைத்து.
ஒரு மகளை பெற்ற தந்தையின் பாசத்தை அனுபபூர்வமாக முழுமையாக உணர்ந்த ஆடவனின் மனம் வேதனை கொண்டாலும் மோகியின் தந்தையின் பாசத்திற்கு எத்தனை விஷ்வரூபன் வந்தாலும் ஈடுஇணை ஆகாது என்று உளமார உணர்ந்து கொண்டவனுக்கு, முன்பு மோகி சொன்ன வார்த்தை நினைவு வந்தது. "இப்ப உனக்கு இதெல்லாம் கடுப்பா தான் இருக்கும் நாளைக்கு உனக்கே ஒரு பொம்பள பிள்ள பிறந்து அதுமேல நீ உயிரையே வச்சிருந்து அது உன்ன விட்டு பிரிஞ்சி போறப்போ தான் தெரியும் அப்பா மகளோட செண்டிமெண்ட் பவர் என்னனு" அன்று அவள் மாலில் சொன்ன வார்த்தைகள்.
இத்தனை வருடங்களும் குழந்தையை பிரிந்திருந்த வலியை உணர்ந்தான், உள்ளே அலறிக் கொண்டிருக்கும் குழந்தையின் சத்தம் ஆண்நெஞ்சை கொத்தோடு பிழிய சற்று நேரம் கூட குழந்தையை பிரிந்திருக்க முடியாமல் அக்மார்க் தந்தையாக அவன் துடித்துத் தவித்த தவிப்புகள், மோகியை பிரிந்திருந்த நாட்களில் அனுபவித்த தண்டனையை விட மிகவும் கொடுமையாக தெரிந்தது.
அட்டைக்கத்தி என நினைத்து விளையாடி விட்டான் பின்னாளில் அதுவே விஷக்கத்தியாக மாறி தன்னையே தாக்கும் என தெரியாமல். இனியும் அவன் செய்த அலட்சியங்களுக்கு அனைத்திற்கும் மனைவி மூலம் அல்லாது அவனது மகள் மூலமாகவே சிறுக சிறுக தண்டனைகள் கிட்டும், இன்பமாகவும் இருக்கலாம் அவ்வப்போது வேதனையாகவும் இருக்கலாம்.
** ** **
திருமணம் முடிந்து ஒரு வாரம் முழுதாக முடிந்த பின்னும் இன்னும் ஒரு வார்த்தை அவளாக பேச முனையவில்லை. இவன் அழைத்தாலும் சங்கடமான பேசி வைப்பாள். அதை அவன் உணர்ந்தாலும் பெரிதாக கண்டுகொள்ளாமல் அவளை இயல்பாக்க எண்ணுவான். இப்போதும் தொடர்ந்து அழைக்கிறான் அந்த பக்கம் போனை எடுத்தபாடில்லை. யோசனையாக நெற்றி தேய்த்தவனாக மணியைப் பார்க்க, நள்ளிரவு 2.00 மணி என பல்லிளித்தது கடிகாரம்.
ஓஹ்.. தூங்குற டைம் ஆகிடுச்சா என அசடு வழிந்தவனை காரி துப்பியது மனசாட்சி.
அடேய் நீதான் பேய் பிசாசு போல முழிச்சிருப்பேனா அவளும் முழிச்சி இருக்கணுமா. 1.50 வரைக்கும் அவளை தூங்க விடாம கண்டதையும் வளவளன்னு பேசி டார்ச்சர் பண்ணிட்டு, பத்து நிமிஷம் பேசலனு பத்து யுகமா பேசாத மாதிரி என்னம்மா சீன் போடற டா சாமி. கொஞ்ச நேரமாவது உன் தொல்லை இல்லாம நிம்மதியா அவ தூங்கட்டும் டா, கண்மணிக்காக பரிதாபப்பட்ட மனசாட்சிக்கு கூட தெரிந்திருக்கிறது, திருமணம் முடிந்ததில் இருந்து இவனிடம் பேசி பேசியே அவள் தூக்கம் கெட்டுவிட்டது என்று.
அப்டிலாம் சாதாரணமா விட்டுடுட முடியாது டா. இங்க நான் அவ நினைப்புல தூக்கம் இல்லாம தவிச்சிட்டு இருக்கேன், அங்க அவ துளியும் என் நினைப்பு இல்லாம நிம்மதியா தூங்குறாளா விட மாட்டேன் அவளை வில்லங்கமாக தலையாட்டி சிரித்தவனைக் கண்டு மனசாட்சியே பயந்து ஓடி விட்டது.
அடுத்த கால்மணி நேரத்தில் கண்மணியின் வீட்டின் முன்னால் நின்றான் விதுரன். இடுப்பில் இரு கரங்களையும் தாங்கி இரண்டு அடுக்கு வீட்டை நிமிர்ந்து பார்த்தான், "கண்மணி நிம்மதியாவா தூங்குற வரேன் டி உன் தூக்கம் கலைக்க" தனக்கு தானே பேசிக் கொண்டு அந்த வீட்டின் மாப்பிளை என்ற உரிமையோடு காலிங்பெல்லை அழுத்த, சற்று நேரம் கழித்தே பணிப்பெண் வந்து கதவை திறந்திட சகல மரியாதையோடு உள்ளே சென்றவன், பூனையாக கண்மணியின் அறைக்கதவை திறந்து கொண்டு சென்றவன் மூச்சையாகி விட்டான்.
ஹோம்லி பேபி ஹாட் பேபியாக மாறி கட்டில் மேல் அழகோவியமாக படுத்திருக்கும் காணக்கிடைக்காத தருணம். அடிப்பாவி இதுக்கு தான் அன்னைக்கு ஹாட்டா இருக்கேன்னு சொன்னதுக்கு அந்த பதட்டப்பட்டியா. நைட்ல வீடியோ கால் வாடினா வர மறுத்து என்னென்ன சாக்கு சொன்ன இன்னைக்கு பாரு எனக்கும் என் கண்ணுக்கும் சொந்தமானது தானாவே கிடைச்சிடுச்சி மெல்லிய புன்சிரிப்போடு அவளுக்கு எதிர்புறம் அவளை போலவே உடலைக் குறுக்கிப் படுத்துக் கொண்டான்.
வட்ட முகத்தில் சிவந்த இதழ்கள் லேசாய் பிளந்து மேலிரண்டு வெண்பற்கள் மின்னிட, திருமணம் ஆனதற்கு சாட்சியாக அவள் முகத்தை அலங்கரித்த உச்சி குங்குமமும், அப்பட்டமான கவர்ச்சியை கூட முறியடிக்கும் விதமாக அவள் கழுத்தை நிறைத்திருந்த மஞ்சள் காற்றில் மின்னிய பொன் தாலியும் ஆடவன் கண்களை நிறைத்து ரசிக்க வைத்தது.
அடி ஒவ்வொரு ராப்பொழுதும் ஒன அப்படி நான் ரசிச்சேன்.. உயிர் கொல்லுது ஒன் நெனப்பு.. கண்மணியே.. ஓஓ..
ஒரு ஆயிரம் வானவில்ல ஒன்பூவிழி காட்டுதடி.. அத சட்டுன்னு நீ மறச்சா நான் என்ன செய்வேன் புள்ள..
தன்னவளுக்காக மனதில் இசைத்தப் பாடலை அவள் கன்னம் வருடியபடி உதட்டசைவில் பாடி பட்டுக்கன்னத்தில் மென்முத்தம் வைக்க, குட்டியாக முகம் சுருக்கி சிணுங்கியவள் ஆடவன் மீது கையைப் போட்டு நகர்ந்து சென்று அவன் புஜத்தை தலையணையாக்கி மார்பில் முகம் புதைத்து துயில் கொள்ள இதை விடவும் வேறு இன்பம் வேண்டுமா அவனுக்கு.
நடு நெஞ்சுல ஒன்னோட வாசம்.. என்ன ஏதேதோ பண்ணுதடி.. தாங்காத சந்தோஷம் நான் என்ன செய்வேன் புள்ள..
கண்கள் எதோ.. தேட களவாடா.. நெஞ்சம் தானே.. பாட பறந்தோட..
எத்தனை நேரம் வெண்ணிலவு முகத்தை ரசித்தானோ, நேரம் செல்ல செல்ல புது மனைவியின் நெருக்கத்தில் ரசனை பார்வை கணவன் பார்வையாக மாற தொடங்கியதும் ஒருமாதிரி உடல் சூடேறி முறுக்கி என்னென்னவோ செய்ய அவஸ்தையாக நெளிந்தவன், இதற்கு மேலும் தாங்காது என எழ நினைத்தவனுக்கு மனம் வரவில்லையே அழகு பெண்ணை விட்டு நகர.
அடியே கண்மணி, ஒருத்தன் உன் ரூம்க்கு வந்து உன் பெட்ல படுத்து உன்ன கட்டிப்புடிச்சி படுத்திருக்குறது கூட தெரியாம எப்டி டி இவ்ளோ நிம்மதியா தூங்குற. இடைவிடாத குட்டி குட்டி இச்சிகள் அவள் கன்னம் நெற்றி மூக்கு இமைகள் தாடை என முகத்தை சுற்றி ஊர்வலம் வர, செவ்விதழ்கள் மட்டும் பாக்கி இருந்தது அவள் நினைவோடு காதலாக இதழ் கோர்க்க வேண்டும் என்றே.
எந்த அசைவுமுன்றி கண்கள் சுருக்கி சிறுமியாக உறங்கும் கானக்குயிலின் மெல்லிய தேகம் சிறுமி இல்லையே என தீவிர ஆராய்ச்சி செய்தன கண்கள். பெண்ணவளின் நெளிவான வனப்பும் அவன் நெஞ்சை முட்டும் மாம்பிஞ்சும் "அப்பப்பா.. மூச்சி முட்டுது டி ஓவரா சோதிக்கிற என்ன, இதுக்கு மேல தாங்காது கண் முழிச்சிடு டி கண்ணுக்குட்டி" இரவு முழுவதும் வாய் விட்டே பாவமாக புலம்பிக் கொண்டிருக்க, தன்னவனின் மெல்லிய காதல் அணைப்பில் இதமாக உறக்கம் கொண்டாள் பெண்பாவை.
தொடரும்

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 44
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.