- Messages
- 300
- Reaction score
- 215
- Points
- 63
அத்தியாயம் - 45
கீச்சிக் குருவிகளின் கான இசையோடு கருவானம் மெல்ல மெல்ல நிறம் மாறி சூரிய தேவனின் புண்ணியத்தில் மஞ்சள் வானமாக காட்சியளிக்கும் ரம்மியமான காலை பொழுது.
மூடிய இமைகள் சுருக்கி துயில் கலைந்து கண் விழிக்க தயாராக இருந்த கண்மணியின் தேகம் இறுக்கத்தை உணர்ந்தபடியே விழித்து பார்த்தவள் திகைத்து விட்டாள், விதுரனின் அணைப்பில் அவள் இருந்த கோலம் பெண்மைக்கே உரிய கூச்சமும், இவன் எப்படி தன் அறைக்கு வந்து அனுமதியின்றி கட்டி அணைத்து உறங்கலாம் என்ற கோபமும் ஒருசேர அவன் கையில் இருந்து விலகப் போனவளை விலக விடாமல் மேலும் இறுக்கி அவள் நடுக்கழுத்தில் வாசம் பிடித்தபடி விட்ட தூக்கத்தை அவன் தொடர, உள்ளம் திடுக்கிட்டுப் போனாள்.
அவன் செயலில் கோவம் உண்டு தான் ஆனாலும் அக்கோபத்தை வெளிகாட்ட முடியாமல் மனம் தடுக்க தலை தூக்கி அவன் முகம் பார்த்தாள்.
நீண்ட முகம் துயில் கொள்ளும் போது இன்னும் அழகனாய் அவனை வசீகரித்து காட்டிட, ட்ரிம் செய்த மீசை தாடி அவன் முகத்திற்கு அம்சமாக இருக்க பளீரென தெரிந்த தடித்த அதரங்கள் புன்னகையில் மூழ்கி புது மனைவியின் நெருக்கத்தில் நிம்மதியை பறைசாற்றின. இரவெல்லாம் உறங்காமல் அவஸ்தையாகவும் ரசனையாகவும் அவள் முகத்தையும் கண்கள் அனுமதியின்றி பார்த்த வனப்புகளையும் ரசித்தபடியே கொட்டகொட்ட முழித்து இருந்தவன், விடியற்காலையில் தான் அவனையும் அறியாமல் கண்ணுறங்கியது.
அவன் செய்த கல்மிஷங்கள் எதுவும் அறியாப் பெண்ணோ, ஏசிக்காற்றில் மெல்ல ஆடிய அடர்ந்த கேசத்தில் விரல் நுழைத்து இதமாக வருடி உரிமை கொண்ட கணவனை இதழில் அரும்பிய புன்னகையோடு ரசித்தாள்.
தாலி கட்டிய தினத்தில் இருந்தே அவளுக்கு ஓய்வு கொடுக்காமல், 24 மணி நேரத்தில் 20 மணி நேரமும் போனை சார்ஜ் போட கூட விடாமல் கண்டதையும் பேசி பேசியே திணறடித்து வம்படியாக அவள் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்து கொண்டது உண்மையே!! தனிமையில் நிறைய நிறைய யோசித்தாள் இன்னும் எத்தனை ஆண்டுகள் தான் முடிந்த உறவையே எண்ணி எண்ணி தானும் நொந்து மற்றவர்களையும் நோகடிப்பது. எந்த ஒரு எதிர்பார்ப்புகளுமின்றி தன் மனதை மட்டுமே பார்த்து உண்மையாக நேசிக்கும் நல்ல உறவு தேடி செல்லாமல் தானாகவே அமைதிருக்கிறது ஏன் கிடைத்த வாழ்க்கையை தவற விட்டு சோக கீதம் வாசிக்க வேண்டும். விதுரன் போல் நல்ல குணம் உள்ள ஒருவர் தனக்கு கணவனாக கிடைத்தது மகிழ்ச்சியே!!
ஆனாலும் தயக்கம் உடனே எப்படி ஏற்றுக் கொள்வது அப்படி ஏற்றுக் கொண்டால் தன்னை பற்றி என்ன நினைப்பான். போனில் பல கதைகள் பேசியதுண்டு அதிலும் அவன் தான் அதிகம் பேசுவான், இன்னும் நேரில் முகம் பார்த்து கண்கள் பார்த்து சரியான பேச்சி வார்த்தைகள் எதுவும் சகஜமாக பேச தொடங்கவில்லை, அதற்குள் திருட்டுத்தனமாய் தன் அறைக்கு வந்தது மட்டுமில்லாது, தன்னை வேறு கட்டிக் கொண்டு படுத்திருக்கிறானே அதுவும் இரவு உடையில் அவஸ்தையாக அவள் நினைத்திருக்கும் போதே, குட்டிக் குழந்தையின் விரல் சப்பும் சத்தம் போல் உமிழ்நீர் தெறிக்க அவள் கழுத்தில் இருந்து வந்த சத்தமும் ஆணவனின் சூடான சுவாசமும் சேர்ந்து பெண்ணவளை திணறத்து நாணமுற வைக்க, பதட்டத்தில் சட்டென அவனை விலக்கி தள்ளி இருந்ததில் உறக்கம் கலைந்து அப்பாவியாக முழித்த முழி கண்மணியின் கண்ணின்மணிகளில் நீங்காத ஓவியமாக பதிந்து போயின.
'இ..இ.. கண்மணி தூங்கி எழுந்திட்டியா..' காலையிலேயே கண்ணுக்கு குளிர்ச்சியாக கிட்டிய பெண் சிலையை இன்ச் பை இன்ச் ரசித்துப் பார்க்க, 'யூ நான்சென்ஸ் உன்ன' அவனது விழுங்கும் பார்வையின் தாக்கத்தில் உடல் சிலிர்த்தவள் போர்வையை இழுத்து தன்னை சுற்றிக் கொண்டு மூக்கு சிவக்க முறைத்து வைத்தவளை ம்க்கும்.. என்ற சலிப்போடு பார்த்தான்.
'ஒருத்தன் உள்ள வந்து ராத்திரில இருந்து கட்டிப்புடிச்சி உருண்டு கண்ட இடத்துல கடிச்சி முத்தம் வச்சி ரசிச்சி பாத்தது எதுவும் தெரியாம அந்த தூங்கு தூங்கிட்டு, இப்ப மட்டும் எதுக்கு மறைக்கிறாளாம்' கழுத்தை வளைத்து தலைகோதியபடி முணுமுணுத்தது ஒன்னும் பாதியுமாக அவளுக்கு கேட்டாலும் அவன் என்ன நினைத்திருப்பான் என்பதை தெளிவாக உணர்ந்து ஒருவித தேக நடுக்கத்தோடு மேலும் முறைத்தவளின் கன்னங்கள் இரண்டும் பஞ்சிமிட்டாய் நிறத்தில் மாறியதை கண்டு கொண்டான் கள்வன்.
'எதுக்காக சொல்லாம கொள்ளாம இங்க வந்தீங்க' வெட்கம் மறைத்து சண்டை பிடித்தாள்.
'அப்டி வந்ததால தானே என் பொண்டாட்டியோட இன்னொரு பரிமானத்தை கண் குளிர பாக்க முடிஞ்சிது' குறும்பாக கண்ணடிக்க இமைகள் படபடத்து 'எ.என்.என்ன பாத்தீங்க' என்றவளின் முகம் கலவரமானது.
'நான் என்னென்னலாம் பாத்து இருப்பேன்னு நினைக்கிறியோ அது எல்லாம் தான்' சாதாரணமாக உரைத்து அவள் முகம் பார்க்க, உள்ளம் அதிர்ந்து சங்கடமாய் விழித்தவளை காணக் காண அத்தனை பரவசம் அவன் நெஞ்சினில்.
'இ.இல்ல இல்ல.. என்ன கிண்டல் பண்ண சும்மா தானே சொல்றீங்க' அப்பாவியாக கேட்டவளை நெருங்கி அவள் இடைபற்றி இழுத்து தன் இருகால்களுக்கு இடையில் பொம்மையாக அமர்த்தியவன் 'இதுல கிண்டல் பண்ண என்ன இருக்கு, பாதி மறச்சும் மறைக்காமலும் கச்சிதமா இருந்த என் பொண்டாட்டியோட அழகுகளை ஒரு நல்ல கணவனா நான் தானே ரசிகனும்' கிறங்கிய கண்களில் அத்தனை காதல்.
கன்னக்கதுப்புகள் கூச 'நல்ல கணவன் பண்ற வேலையா பாத்து இருக்கீங்க நீங்க, கள்ளக்கணவன் மாதிரி திருட்டுத்தனமா வந்துட்டு பேச்சை பாரு, விடுங்க நான் போகணும்' கோபக்குரல் குழைந்து தடுமாறியவளை கண்டு வசீகரப்புன்னகை சிந்தி, 'பொண்டாட்டிகிட்ட நல்ல கணவனா இருக்குறத விட கள்ளகணவனா நடந்துக்கிட்டா தான் காதல் கூடி ஆசை அதிகரிக்குமாம். உனக்கு தெரியாதா கண்ணுக்குட்டி' மெல்ல அவள் காதணி அணியாத செவி மடலை இதழ் கொண்டு தீண்டி கவ்வ இதழ்க்கடித்து சிவந்து போனாள்.
திருட்டுத்தனம் பண்ணிட்டு பேச்சை பாரு. ஆமா நைட் எப்ப வந்தீங்க. அவன் சில்மிஷம் தாங்காது பேச்சை மாற்ற அவன் மாற வேண்டுமே!!
நீதான் புருஷன் நினைப்பு இல்லாம தூங்குவ நான் என்ன உன்ன மாதிரியா, பொண்டாட்டி பத்தின நினைப்பு இல்லாம நிம்மதியா தூங்க, புருசன் போன் பேசிட்டே இருக்கும் நீபாட்டுக்கு பெறுபில்லாம பாதிலே தூங்கினா என்ன நினைக்கிறது அதான் அடுத்த கால்மணி நேரத்துல உன்ன பாக்க பொறுப்பான புருஷனா ஓடி வந்துட்டேன் என்றான் அலட்டிக் கொள்ளாமல்.
அடப்பாவி, ஒரு வாரமா போன் போட்டு விடிய விடிய பேசியே என் தூக்கத்தை கெடுத்துட்டு நேத்து ஒரு நாள் என்னையும் மீறி தூங்கினது தப்பா, இதுல நான் பொறுப்பா இல்லனு குறை வேற, சலிப்பாக நினைத்தாலும் அவன் பொறுப்புணர்ச்சி அவள் மனதை தொட்டு விட்டது.
சரி சரி உங்க பொறுப்பு பொறியல் எல்லாம் அப்புறம் பாத்துக்கலாம் நேரம் ஆச்சி விடுங்க நான் ரெடியாகனும், மெல்ல மெல்ல மனைவி மோடுக்கு மாற தொடங்கி விட்டாள்.
மேடம் இவ்ளோ சீக்கிரம் ரெடியாகி அப்டி என்ன பண்ண போறீங்க.
என் அண்ணனும் அண்ணியும் இல்ல அதுனால அவங்க வேலைக்கு வச்ச ஆட்களை எல்லாரையும் வேலை விட்டு அனுப்பிட்டேன், அப்பா கூட இருந்த பழைய ஆட்கள் சிலர் மட்டும் இருக்காங்க குக்ஸ் யாரும் இல்ல நான் போய்ட்டு தான் சமைக்கணும். அம்மாக்கு கஞ்சி ரெடி பண்ணனும் நீங்க இருக்கீங்க உங்களுக்கு பிடிச்சத ரெடி பண்ணனும், அதுக்கு முன்னாடி நான் குளிச்சிட்டு ட்ரெஸ் மாத்தணும். இதழ் கோணி சொல்லியவளை பார்த்துக் கொண்டே இருந்தாலே பசி தீர்ந்து விடும் போலும்.
எனக்கு என்ன பிடிக்கும்னு உனக்கு தெரியுமா கண்மணி என்றவனின் பார்வை ஜீராவில் முக்கி எடுத்ததை போல் மினுமினுத்த அவள் இதழிலும் போர்வை நலுங்கி தெரிந்த வட்ட வணப்பிலும் கிறக்கமாக படிந்தது. அவன் வில்லங்கம் புரியாத மங்கையோ, ரெண்டு நாளைக்கு முன்னாடி நீங்க தானே சொன்னீங்க பிஷ், சிக்கன் பிடிக்கும்னு அதை தான் செய்யணும், இதை தவிர வேற பிடிக்குமா உங்களுக்கு? என்றாள் கேள்வியாக.
'ம்ம்.. உன்ன பாத்த பிறகு நிறைய நிறைய பிடிக்க தொடங்கிடுச்சே, என்னென்னனு ஒவ்வொண்ணா சொல்லட்டுமா கண்ணுக்குட்டி' நாவை சுழற்றி அதரம் மடித்துக் கடித்து அவன் பார்வை சொன்ன விபரீதம் உணர்ந்து திடுக்கிட்டவள் கூச்சம் தாலாமல் எழுந்து செல்ல முனையும் நேரம் சட்டென படுக்கையில் தள்ளி அவள் நிதானிப்பதற்குள் இரவில் இருந்து தின்று தீர்க்க ஆசையாய் காத்திருந்த தேன்சுளை இதழ்களை வண்டாகக் கவ்விக் கொண்டான் விதுரன்.
கோலிகுண்டாய் அதிர்ச்சியில் உருண்ட மான்விழிகளை ரசித்துக் கொண்டு இதழ் முத்தத்தில் காதலை உணர்த்தி பெண்ணவளின் கைகளில் கை கோர்த்து பின்னி, ஆழமான அழகான இதழ் முத்தம் பெண்ணவளின் போதை நிறைந்த இதழினில் கவித் தீட்டி அவள் ஜீவன் உறுஞ்சி அவன் ஜீவனை அவளுள் கிடத்தி மூச்சி வாங்க இடைவெளி விட்டவன் தேன்மிட்டாயில் இருந்து சக்கரை பாகு வழிவதை போல் அவள் உதட்டினோரம் அவன் எச்சில் வழிய மலங்க மலங்க விழித்த கண்களில் முழு காதலையும் தேக்கி இச் வைத்து, வழிந்த உதட்டுப் பாகை நாவால் ஒற்றி எடுக்க அவனது ஒவ்வொரு செயலிலும் நெஞ்சிக் கூடு அதிர்ந்து அதிர்ந்து விம்மியது.
பேச நா எழவில்லை தடுக்க கைகள் முனயவில்லை, இவன் தன்னவன் என மனம் ஏற்றுக் கொண்ட பிறகு. ஆனாலும் என்ன அவசரம் இது செல்லமாய் மனதில் கடிந்து கணவனின் ஒவ்வொரு தீண்டலுக்கும் நாணம் கொண்டு ஒத்தொழைத்தாலும் பதட்டம் நீங்கவில்லை.
கண்மணிஇ.. ஆசை நிறைந்த குரலோடு அழைக்க. அவன் முகம் பார்க்க வெட்கி கண் மூடிக் கொண்டாள்.
உன் கண்ண பாத்துகிட்டே நம்மளோட ஃபர்ஸ்ட் லவ்வபிள் லிப்கிஸ்ஸ ஸ்ட்ராங்கா கொடுக்கணும்னு நைட்ல இருந்து இல்லாத பொறுமைய இழுத்துப் பிடிச்சிட்டு இருந்தேன் தெரியுமா டி. இப்ப தான் நிம்மதியா இருக்கு. ஆனா பாரு அடங்காத மனசு திரும்ப திரும்ப கேக்குது, எச்சில் தெறிக்க இந்த ஸ்வீட்லிப்ஸ கடிச்சி தின்ன அசுர வெறி பிடிக்குது கண்மணி. உன்ன மாதிரியே உன் லிப்ஸும் செம்ம ஹாட் தெரியுமா. உதடும் உதடும் பாகுபாடின்றி உரசிக் கொண்டே பொன்மேனியில் சுற்றி இருந்த போர்வையை நைசாக விலக்கி இடைக்கு மேலேறிய அவள் மேற்சட்டையில் கை நுழைத்து வெற்றிடையை மென்மையாக வருடிட, இடை துள்ளி நாணம் கொண்டவள் அவன் அசந்த நொடி தன்னிடமிருந்து தள்ளி விட்டு பெட்டில் இருந்து இறங்கி ஓடியவளை 'ஏய்.. கண்மணி போகாதே நில்லு டி..' அவள் பின்னே எதிரொலித்தக் குரலை கேட்டபடியே வேகமாக குளியலறைப் புகுந்துக் கொண்டவளுக்கு அவன் தீண்டிய இடமெங்கும் குறுகுறுப்பில் சிவந்து வெட்கம் பிடிங்கியது.
நல்லவேளையாக அவள் குளித்து முடித்து வந்த போது மீண்டும் அவன் உறங்கி இருந்தான் இல்லையெனில் மாற்றுடை எடுத்து செல்லாமல் வெறும் துண்டோடு தயங்கி தயங்கி வந்தவளை உண்டில்லாமல் ஆக்கி இருப்பான்.
காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு, டீ, காப்பி, ஸ்னாக்ஸ் என வாய்க்கு வைக்கணையாக செய்து கணவனை விழுந்து விழுந்து ஆசையாக மகள் உபசரிப்பதும், அவளை சீண்டி சிவக்க வைத்து ஆஹா ஓஹோ என அவளையும் அவள் கைப் பக்குவத்தையும் ரகசிய அர்த்தங்கள் நிறைந்த பார்வையால் பாராட்டி கலகலப்பாக இருக்கும் மருமகனையும் கண்டு தாய் மனம் நிம்மதியடைந்து மகிழ்ச்சியில் திளைத்தது.
முதல் நாள் வந்தவன் அங்கேயே பாய் விரித்து விட்டான். கண்மணியும் போ என்கவில்லை அவனை தனியே ஹோட்டலில் தங்க வைக்கவும் மனம்வரவில்லை. நிறைய காதல் கொஞ்சம் காமம் என நினைக்கும் நேரங்களில் பார்க்கும் இடங்களில் பச்சக் பச்சக் முத்தங்கள், செல்ல சில்மிஷங்கள், இதழ் கடித்து உண்ணும் ராட்சச முத்தம், இரவுகளில் இறுகிய இதமான அனைப்புகளோடு தங்கள் குடும்பங்கள், படிப்பு, காதல், தொழில், நட்பு என ஒருவருக்கொருவர் தங்களைப் பற்றி தெரிந்த தெரியாத விடயங்களை சகஜமாக பகிர்ந்து மனம் விட்டு புன்னகைத்தனர்.
வாரங்கள் சென்றது முன்பை விட இருவருக்கும் ஒருவர் மேல் ஒருவர் வைத்திருக்கும் அன்பு பெறுகியது புரிதல் உண்டானது. விதுரன் தன் திருமண செய்தியை அவன் வீட்டில் சொன்னது தான் தாமதம், அவன் அன்னை பெரிய ஊரையே திரட்டிக் கொண்டு வந்து புது மருமகளை முத்துக் கொடுத்து திருஷ்டி கழித்து கொண்டாடி தீர்த்து விட்டார். மகன் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைந்ததில் அத்தனை மகிழ்ச்சி அன்னையின் கண்களில்.
வந்த கையோடு பெரிய அளவில் விதுரன் கண்மணியின் திருமண வரவேற்பை ஊர் மெச்ச நடத்தி முடித்துவிட்டு மனதார ஆசீர்வதித்தவர் இருவருக்கும் தனிமை வழங்கி விட்டு மனமின்றி ஊருக்கு சென்றார்.
ரம்மியமான அழகிய இரவு ஆசையோடு மனைவிக்காக காத்திருந்த விதுரனை வெகுநேரம் காக்க வைக்காது எலுமிச்சை மஞ்சள் வண்ண கல் பதித்த பிளைன் புடவையில் கையில் பால் குவளையோடு தேவதையாய் வந்த மனைவியை உச்சி முதல் பாதம் வரை பார்வையால் விழுங்கினான்.
இந்தாங்க பால் குடிச்சிட்டு புது கன்ஸ்ட்ரக்ஷன் விஷயமா பெங்களூரு போகனும்னு சொன்னீங்கலே போய்ட்டு வாங்க. வாய் விரட்டி விட முனைந்தாலும் அவள் கண்களில் எங்கே சென்று விடுவானோ என்ற அலைபுறுதல் தெளிவாய் காட்டியது.
போய்தான் ஆகணுமா கண்ணுக்குட்டி.. பாலைக் குடித்ததில் உண்டான வெள்ளை மீசையை அவள் முந்தானை கொண்டு துடைக்க அலைமோதும் விழிகள் போகாதே என இறைஞ்சுவதை மறைத்து 'ஆமா நான் தான் மனசு மாற உங்ககிட்ட டைம் கேட்டேனே நியாபகம் இல்லையா ஐயாக்கு' வேண்டுமென்றே வம்பு செய்தாள்.
பெரிதாக சலித்தவன் முகம் தொங்கினாலும் அவள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கவே முதலில் விரும்பியவனாக, சரி டி இன்னும் எவ்ளோ நாள் வேணும்னாலும் டைம் எடுத்துக்கோ மைண்ட் பிரீயாகிட்டு சொல்லு நான் வரேன், வடிந்த உற்சாகத்தோடு வெளியே செல்லப் போனவனை பின்னிருந்து இறுக்கமாக அனைத்திருந்தாள் கண்மணி.
இன்ப அதிர்ச்சி அவனுக்கு அவளாக அணைக்கும் முதல் அணைப்பு அமைதியாக அடங்கி இருந்த ரத்த நாளங்கள் யாவும் பரபரவென இயங்கி எங்கெங்கோ பயணித்து ஆணவனின் மோக நரம்புகளை தட்டி எழுப்பியது.
போன்னா அப்டியே போயிடுவீங்களா? என்னையும் கூட்டிட்டு போக தெரியாதா இல்ல என்ன இங்க விட்டு நீங்க மட்டும் தனியா ஜாலியா இருக்கலாம்னு போறீங்களா? ஆணவனின் நடுமுதுகில் பெண்ணவளின் சுவாசக்காற்று மோதி இன்ப அவஸ்தையை உண்டு செய்ய, நீதானே பேபி, டைம் கேட்ட அதான் நானும் பெரிய மனசு பண்ணி டைம் கொடுத்தேன் இப்ப வந்து மாத்தி பேசி அப்பாவி பையன் மேல பழி சுமத்தினா என்ன செய்றதாம். மார்பில் பாம்புகளாக நெளிந்த விரல்களைப் பற்றி வம்படியாக இச்சிகள் வைத்தான்.
ஆமா ஆமா ரொம்ப பெரிய மனசு தான் இந்த அப்பாவி பையனுக்கு. டைம் கேட்ட பொண்டாட்டிய எந்நேரமும் கட்டிக்கிட்டே திரியலாம் முத்தம் கொடுக்கலாம் கண்ட இடத்துல கடிச்சி வைக்கலாம், நியாயமா சாரே. கூச்சத்தில் நெளிந்தாலும் விலகாமல் இருந்தாள்.
நியாயம் அநியாயம் பாத்திருந்தா கடைசி வரைக்கும் போன் பேசியே என் வாழ்க்கை முடிஞ்சி போயிருந்திருக்குமே, இவ்ளோ சீக்கிரத்துல என் பொண்டாட்டியோட மனச மாத்தி இருக்க முடிஞ்சிருக்காதே கண்ணுக்குட்டி. பின்னிருந்தவளை முன்னிழுத்து துடிப்பாக சிரிக்கும் இதழில் கட்டை விரல் கொண்டு மெல்ல வருடி மென்முத்தம் பதித்தான்.
ஏங்க.. அவசியமா பெங்களூரு போய் தான் ஆகணுமா? அவன் மார்பில் முகம் புதைத்து நெஞ்சி சட்டை பொத்தானை திருகியபடி அவன் முகம் பார்த்தாள்.
ம்ம்.. கண்டிப்பா போகணும் கண்ணுக்குட்டி ஏன் கேக்குற. மனைவியின் எண்ணம் புரிந்து சீண்டினான்.
அப்படி சொன்னதும் இன்ஸ்டன்ட்டாக வாடிய முகத்தை பார்க்க சகிக்காமல், 'ஆனா நான் தான் போகனும்னு அவசியம் இல்ல எனக்கு பதிலா என் தம்பிய அனுப்பி வைக்கிறேன், அதுவும் உனக்காக தான் கண்ணுக்குட்டி' அவள் கன்னம் பிடித்து கொஞ்ச நிறைவான புன்னகை அவள் வட்ட முகத்தில் தோன்றியது.
பெண்ணவளின் சம்மதம் கிட்டிய கையோடு தங்களின் அடுத்தக்கட்ட இல்லற வாழ்க்கையை இனிதே துவங்க அச்சாரமாக இருவரின் இதழ்களும் ஒன்றிணைந்து தேனெடுத்து ஆடை கலைந்து மோகராகநதியில் உடல்கள் நனைந்து கொஞ்சலும் சிணுங்கலும் மேலோங்க பூஉடல் தேன்வாக்க இன்பமாய் மோக கானங்கள் மீட்டினர்.
இனி இருவரது வாழ்விலும் கசப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, இனிப்பான நினைவுகளை உருவாக்கி காதலும் ஊடலும் மோகமும் கொண்ட அன்னியோன்ய தம்பதிகளாக வாழப்போவதில் எந்த தடையும் இருக்கப் போவதில்லை.
தொடரும்.

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 45
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.