- Messages
- 279
- Reaction score
- 215
- Points
- 63
அத்தியாயம் - 48
முதல் முதலில் கவியை பார்த்த ஆதிக்கு பெரிதாக எந்த எண்ணமும் தோன்றவில்லை. அவளுக்கு உதவி செய்தது மனிதாபிமானம் அடிப்படையில் மட்டுமே. அதன் பிறகு வீட்டுக்கு வந்ததில் இருந்து தான் மனதின் ஓரம் சிறு நெருடல், ஏன் என்றே புரியாமல்.
பிறகு அவள் வேலைக்கு வந்து சேர்ந்த போதும் ஏனோ அவளை திரும்ப அனுப்பிவிட மனம் வரவில்லை. தினமும் அவளை வீட்டில் பார்க்கும் போதுதான் இவளை எங்கோ பார்த்து இருப்பதை போலவே அடிக்கடி தோன்றியது. ஏதோ ஒரு தோற்றமான எண்ணத்தில் கவியைப் பற்றி விசாரித்தத்தில் அவள் மார்த்தாண்டத்தில் இருந்து வந்ததாகவும், அங்குள்ள அனாதை ஆசிரமத்தில் வளர்ந்ததாகவும் தெரிய வந்தது.
அவ்வூரை மறக்க முடியுமா அவனால். பல விதமான மனப்போராட்டத்திற்கு பின்பு நிலனின் மகளாக இருப்பாளோ! என்ற எண்ணமும் ஓரத்தில் வராமல் இல்லை.
அவர்களின் குடும்பப் புகைப்படங்களை பார்க்கும் போது, நித்யாவின் முகஜாடை அவளோடு ஒன்றிப் போவதையும் கூர்ந்து கவனித்துக் கொண்டான்.
இருந்தும் 'நருவாக இருந்தால் தன்னையும் மித்ராவையும் அவளுக்கு நன்கு அடையாளம் தெரிந்திருக்கக் கூடுமே, அப்போ இவளுக்கு எங்கள தெரியலனா இவ நருவா இருக்க வாய்ப்பில்ல.. எங்க முன்னாடி தானே எல்லா உயிரும் கருகி போச்சி, அதுல விக்ரம் மட்டும் எப்டி தப்பிச்சான்னும் இதுவரை தெரியல, அவனா வாயத் திறந்து சொன்னா தான் தெரியும்..
ஆனா அவன் தப்பிச்சி இருக்கான்னா நருவும் ஏதாவது ஒரு வகைல தப்பிச்சி இருப்பாளா.. ஆனா எப்டி, நாங்க தான் வேன் வெடிச்ச இடத்துல நாலாப் பக்கமும் நல்லா சோதனை செஞ்சி பாத்தோமே, எங்கேயும் அவ இல்ல.. அப்டி இருக்கும் போது இந்த விஷயத்த எப்டி ஹாண்டில் பண்றது,
இவ நருவா இல்ல வேற யாரோவா.. " நன்றாக குழம்பி பின் தெளிவடைந்தவனாக, தானே கிளம்பி அங்கு சென்று, கவி வளர்ந்த ஆசிரமத்தில் அவளைப் பற்றி விசாரிக்க, அவர்களோ அவள் எந்த நிலையில் இங்கு வந்து சேர்ந்தாள் என்ற ஆதாரத்தோடு, அவள் வந்த அன்று எடுத்த சிறுவயது புகைப்படத்தையும் காட்டவும், இவள் தான் நரு என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லாமல் மகிழ்ச்சியாகிப் போனது.
பின் அவளை அனுமதிக்கப்பட்டிருந்த அரசு மருத்துவமனை சென்று விசாரிக்கவும், அங்கு வேலைப் பார்த்த ஓய்வு பெற்ற பழைய செவிலியர், 'பழங்குடி மக்கள் சிலர், பாறைல மோதி அடிபட்டு கிடந்த அந்த பொண்ண இங்க கொண்டு வந்து சேத்திட்டு, யாரு என்னனு விபரம் தெரியல, ஏதோ பெரிய விபத்து நடந்து போச்சின்னு சொல்லிட்டு போனாங்க..
அந்த சின்ன குழந்தைக்கு உடம்பு முழுக்க அடிப்பட்டு இருக்கவே, தாமதிக்காம டாக்டர்ஸ் உடனடியாக ஆப்ரேஷன் செஞ்சாங்க.. அவ கண் விழுச்சதும் அவளையே அவளுக்கு யாருனு தெரியல, அடி பட்ட அதிர்வுல காதும் கேக்கல, பழசு எல்லாம் மறந்தும் போச்சி..
அழுதுட்டே இருந்தா யாராலையும் சமாளிக்க முடியல, கொஞ்சம் நாள் பிறகு உடல் தேறினதும், மனசு கேக்காம நான் தான் அவளை எனக்கு தெரிஞ்ச ஆசிரமத்துல கொண்டு போய் சேர்ந்தேன்.." என்றார்.
நரு உயிருடன் இருக்கிறாள் என்பதே பெரிய சந்தோஷம் தான், அவளை இக்கட்டான சூழ்நிலையில் அப்படியே விடாமல் பாதுகாப்பாக தங்குவதற்காவது ஒரு நல்ல இடத்தில் சேர்த்து விட்டதே போதும் என நினைத்து, அவருக்கு நன்றிக் கூறி வந்தான். அதன் பிறகு வந்த நாட்களில் இந்த விடயத்தை வீட்டில் சொல்ல துடித்த நாவை அடக்கிக் கொண்டான், மகனின் செயலில்.
ஆத்வி கவியை பார்க்கும் பார்வையில் வித்யாசம் கண்டு கொண்டவன், "கவிய உனக்கு பிடிச்சிருக்கா ஆத்வி" என நேரடியாகவே அவனிடம் கேட்க,
"தெரியல டாட்.." சாதாரணமாக உதடு புதுக்கி சென்று விட்டான். இதுதான் காதலின் தொடக்கப் புள்ளி என அறிந்துகொள்ள முடியாத முட்டாள் இல்லையே ஆதி.
அன்று ஹரிதாவின் குடும்பம் மாப்பிளை கேட்டு போனதும் ஆதியிடம் கோவமாக பேசி விட்டு சென்றவன், மறுநாள் கவியை பார்த்து விட்டு நிதானமாக யோசித்து முடிவெடுத்தவனாக தந்தையிடம் வந்தான்.
"டாட் நீங்க ஏதோ பிளான் பண்ணி தான், அந்த ஹரிதாவ எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு வாக்கு கொடுத்து இருக்கீங்க ரைட்.. நானும் டென்ஷன்ல உங்கமேல கோவப்பட்டு பேசிட்டு போய்ட்டேன்..
நான் கல்யாணம் பண்ணிக்கிறேன், ஆனா ஹரிதாவ இல்ல.." என சிறு இடைவேளை விட்டு "கவிய" என்றவன், "அதுக்காக அவளை பிடிச்சி கல்யாணம் பண்ண போறேன்னு எல்லாம் நினைக்காதீங்க, ஐ ஹேட் ஹர்.. பட் ஐ வாண்ட் ஹர்.. ஏன் எதுக்குனு காரணம் கேக்காதீங்க, கேட்டாலும் சொல்ல மாட்டேன்.." எடக்கு மடக்காக பேசி விட்டு செல்லும் மகனை வினோதமாக பார்த்து வைத்தான் ஆதி.
மகன் பேசி சென்றதை மட்டும் சொல்லாமல் விட்ட ஆதி, "கவி தான் நருனு சொல்லிருந்தா நீங்க எல்லாரும் சந்தோஷப் பட்டு இருப்பீங்க தான், பட் சில விஷயங்கள் எல்லாம் நேரம் வரும் போது தெரிஞ்சா தான் சுவாரிசியமா இருக்கும்..
இப்போ நரு உன் அண்ணன் பொண்ணா மட்டும் உனக்கு கிடைக்கல மித்து, உன் மருமகளாவும் இன்னும் ஸ்ட்ராங்கான உறவாகவும் கிடைச்சி இருக்கா.. அந்த தருணத்தை மட்டும் நெனச்சி என்ஜாய் பண்ணு மித்து.." என்ற கணவனை விழியகலாது பார்த்தாள் மித்ரா.
இப்படி எல்லாம் பொறுமையாக எடுத்து சொல்லி தத்துவம் பேசுபவன் இல்லையே ஆதி என்ற எண்ணத்தில் அவள் பார்த்திருக்க, இந்த கள்வனோ யாரும் அறியா வண்ணம் கண்ணடித்து புருவம் ஏற்றி இறக்கவும், வெட்கத்தில் முகம் திருப்பிக் கொண்டாள்.
"ஏன் கவி.. சாரி நரு.. ஐயோ உன்ன நாங்க இப்ப எப்டி கூப்பிடுறது.." ஆரு மண்டையை சொரியவும் அதில் புன்னகைத்த கவி,
"உங்ககிட்ட இருந்து நான் தொலைஞ்சி போகும் போது நர்மதையா போயிருக்கலாம், ஆனா இப்போ திரும்ப கிடைச்ச போது கவியா கிடைச்சி இருக்கேன், என் அடையாளத்தை தொலைச்சிட்டு நிக்கும் போது, என் ஸ்வாதி எனக்கு ஏற்படுத்தின அடையாளம் தான் இந்த பார்கவி..
எனக்கு நான் எப்பவும் என் ஸ்வாதியோட கவி தான், நீங்க உங்களுக்கு எப்டி விருப்பமோ அப்டி கூட்டுக்கோங்க அண்ணி.." புன்னகையுடன் சொல்ல, ஸ்வாதிக்கு கவியின் இத்தகைய அன்பில் மூச்சி முட்டியது.
மற்றவர்களும் அவள் சொல்வதை ஆமோத்திப்பாய் தலையாட்டிட, "யாருக்கு எப்ப என்ன பேர் வருதோ அதை கூப்ட்டுக்கோங்க, இப்ப முதல்ல சோத்த போடுங்க, சாப்பிட வான்னு கூப்ட்டு உக்கார வச்சிட்டு, செண்டிமெண்ட் சீனுக்கு ஆளாளுக்கு கண்ண கசக்கிட்டு இருக்கீங்க ஒரு மணி நேரமா, சாப்பாடு வேற ஆறி போச்சி.." அஜய் சொன்னதும் தான், உணவு உண்ண வேண்டும் என்ற நியாபகமே வந்தது அனைவருக்கும்.
உண்டு முடித்து அனைவரும் அவரவர் அறைக்கு சென்று விட, ஆத்வி எங்கே என்று மித்ரா கேட்கும் கேள்விக்கு, "வேலை விடயமாக அவசரமாக வெளியூர் சென்று விட்டான்" என சொல்லி சமாளித்தும் அவளின் வாய் மூடிய பாடில்லை.
"அது எப்டிங்க கல்யாணம் முடிஞ்சி ஒரு நாள் கூட ஆகாம அவன் வெளியூர் போவான், அதுவும் என்கிட்ட கூட சொல்லாம.. புது மாப்பிளை வேற இந்த நேரத்துல அவன் வெளிய போகலாமா, எனக்கு என்னவோ மனசே சரியில்ல..
ஏங்க என்கிட்ட இருந்து நீங்க ஏதாவது மறைக்கிறீங்களா.." கணவனின் முகத்தை உற்று நோக்கியபடி அவள் கேட்ட விதத்தில், ஆதி சற்று தடுமாறி தான் போனான்.
"ஏய்.. இப்போல்லாம் என்ன டி சும்மா அவனை பத்தியே பேசிட்டு இருக்க, எங்கயாவது என்ன கண்டுக்குறியா எப்பப்பாரு பிள்ள பிள்ளனு.. போ அவன் எங்க போனாலும் அவன் பின்னாடியே வால் மாதிரி பிடிச்சிட்டு போ,ஏன் எங்கிட்ட வந்து புலம்பி என்ன டென்ஷன் பண்ற.." தனது தடுமாற்றத்தை மறைக்க முடியாமல் அவளிடம் கோவத்தை காட்டி எரிந்து விழ, பயத்தில் முகம் வெளிரி பின்னால் நகர்ந்து அமர்ந்து, அழுகையை அடக்க தலை குனிந்துக் கொண்டாள்.
அவளின் முகம் வாடி விட்டதை பார்த்தும்கூட சமாதானம் செய்ய வினயவில்லை, கொஞ்சம் ஆசையா பேசி அவளிடம் நெருங்கி சமாதானம் பேசினாலும், கொஞ்ச நேரம் பயந்து அடங்கி இருந்து விட்டு, மீண்டும் பழைய பல்லவியை பிடித்துக் கொண்டு அழத் தொடங்கி விடுவாள் என்ன எண்ணத்தில்.
இங்கு கவிக்கு உறக்கம் வருவேனா என்றிருந்தது, கணவனின் நினைவில். "இப்படி திடீரென திருமணம் செய்து கொண்டதும் இல்லாமல், தனியாக விட்டு சென்று விட்டானே..
இழ்ந்த குடும்பம் திரும்ப கிடைத்து விட்டது என்று மகிழ்ச்சி கொள்வதா, அல்லது தான் விரும்பும் ஒருவனே தனக்கு கணவனாக கிடைத்தும், அதில் நிம்மதி அடையமுடியவில்லையே என்ற வருத்தம் கொள்வதா.." இதில் தீபக் வேறு போனில் பேசியதை இப்போது நினைத்தாலும், பயத்தில் இதயமெல்லாம் படபடவென அடித்து கொண்டு உடல் நடுங்கியது.
அருகில் உறங்கிக் கொண்டு இருக்கும் ஸ்வாதியை பார்த்த கவி, மெதுவாக எழுந்து வந்து ஜன்னல் வழியே தெரியும் வெள்ளிநிலவை பார்த்தவளுக்கு, ஆத்வி நடந்து தன்னிடம் நடந்துகொண்ட அனைத்தும் கண்முன் நிழலாடியது.
"எந்த விதத்துலயும் நீங்க என்கிட்ட நல்லவிதமாவே நடந்துலையே மாமா, வேணும்னே எனக்கு குறை இருக்குறது தெரிஞ்சும் என் மனச நோகடிக்கிற விதமா பேசுவீங்க, என்ன எவனும் திரும்பி கூட பாக்கமாட்டான் அதுல நான் மட்டும் விதிவிளக்கானு சொன்னீங்க..
ஆனா நீங்க தான் நான் நேசிச்ச என் மாமானு நம்ம ரெண்டு பேருக்குமே தெரியல பாத்தீங்களா.. நான் அழுதா அதுல தான் உங்க சந்தோஷம் இருக்குனு சொல்லுவீங்க, அப்டிபட்டவள ஏன் திடீர்னு கல்யாணம் பண்ணீங்க, காலம் முழுக்க அழ வைக்கவா.. அப்டி நான் அழுதா உங்களுக்கு உண்மையாவே சந்தோசம் கிடைக்குமா மாமா..
ரொம்ப பெரிய உதவியா சரியான நேரத்துல பணம் கொடுத்து, என் ஸ்வாதியோட உயிரை காப்பாத்தி இருக்கீங்க, அந்த நன்றிக்கடன செலுத்த வந்த நேரம், என்னெல்லாம் பேசி மனச உடச்சீங்க, ரொம்ப ரொம்ப கெட்டவர் மாமா நீங்க..
சரியான சிடுமூஞ்சி சைக்கோ முரடன்.. சொல்ல சொல்ல கேக்காம தாலி கட்டினவள இப்டி தனிமைல நின்னு புலம்பி தவிக்க விட்டு போய்ட்டீங்கள்ள.. இப்போ நான் மனசுல நினைக்கிறது தான், நீங்க எப்டி என்ன தனியா தவிக்க விட்டு ரெயிடுக்கு போனீங்களோ, இதேபோல உங்கள நான் மொத்தமா தவிக்க விட்டு ஒருநாள் போவேன், திரும்ப கிடைக்க முடியாதபடி.. அப்போ உங்களுக்கு இதே நிலைமை வரல என் பேரு பார்கவி இல்ல.."
"ஏன் திரும்ப நர்மதைனே மாத்திக்க போறியா.." தன் பின்னால் கேட்ட சத்தத்தில் சட்டென திரும்பவும் அங்கு ஸ்வாதி இருப்பதை பார்த்தவள்,
"ஸ்வாதி நீ இன்னும் தூங்கலையா.." என்றாள் தடுமாற்றமாக.
"நீ இப்டி குழப்பத்துல தனியா தவிக்கும் போது எனக்கு எப்டி தூக்கம் வரும் கவி.. இப்ப ஏன் பேர் மாத்திகிற அளவுக்கு சபதம் எடுத்து தனியா நின்னு புலம்பிட்டு இருக்க.. நியாயமா பாத்தா இந்நேரம் நீ ஜாலியா தானே இருக்கணும், நீ தொலைச்ச குடும்பம் உனக்கு திரும்ப கிடைச்சதுக்கு, ஆனா அந்த சந்தோஷம் உன் முகத்துல துளி கூட இல்லையே. என்னாச்சி கவி.." என்றாள் மென்மையாக.
"எல்லாம் இந்த திடீர் கல்யாணத்த நினைச்சி தான் ஸ்வாதி, என்ன தான் குடும்பம் கிடைச்சது ஒரு பக்கம் நிம்மதியா இருந்தாலும், ஏனோ இந்த கல்யாணத்தை என்னால ஏத்துக்க முடியல..
அவருக்கு நான் கொஞ்சமும் தகுதியானவ இல்ல, ஆனா அவர் அப்படி இல்லையே..
ஸ்பீக்கர் போன நான் எங்கே, அவர் எங்கே.. அவர் அழகுக்கும் படிப்புக்கும் பணத்துக்கும் ஏணி வச்சா கூட எட்ட மாட்டேன்.. அப்படி இருக்க நான் போய் அவருக்கு எப்டி செட்டாவேன்.." கண்ணீரோடு கேவும் போதே, அவள் பேச்சை இடைவெட்டி கண்ணீரை துடைத்த ஸ்வாதி,
"ஏய் கவி என்ன பேசிட்டு இருக்க நீ, பணமும் அழகும் படிப்பும் மட்டும் ஒருவரோட தரத்தை உயர்த்திக் காட்டிடாது, அதை முதல்ல புரிஞ்சிக்கோ.. எனக்கு தெரிஞ்சி உன் புருஷன் ஒன்னும் மோசமானவர் இல்ல..
அப்டி மோசமான ஆளா இருந்திருந்தா, உன்ன கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சி இருக்க மாட்டாரு.. எனக்கு தோணுது, அவருக்கும் உன்ன ரொம்ப பிடிச்சி இருக்கனும் கவி, நிச்சயமா இதுதான் உண்மையாவும் இருக்கும்..
வீணா மனசப் போட்டு குழப்பிக்காம வா வந்து படு, காலைல சீக்கிரம் எழுந்து இனிமே கொஞ்சம் கொஞ்சமா வீட்டு வேலைகளையும் கத்துக்கோ.. முன்னாடி மாறி இல்ல இப்ப உனக்கு கல்யாணம் ஆகி பொறுப்புகள் கூடிருச்சி.." கண்டிப்பாக சொல்லி, பல அறிவுரைகளை வழங்கி அவளை உறங்க வைத்து, தானும் உறங்கிப் போனாள்.
நள்ளிரவு வரை தொடர்ந்த பயணத்தில் நிறைய ரெய்டர்கள் சோர்ந்து போக, ஓய்வு பெற கூறி போட்டியில் இருந்து அறிவிப்பு வந்ததும், ஆங்காங்கே கிடைக்கும் ஹோட்டல்களில் தங்கிக் கொண்டனர்.
ஆத்வி தனதறையில் படுத்து கண்மூடி தன் கண்மணியை நினைத்துக் கொண்டிருந்த நேரம், சதக்.. எனும் சத்தத்தோடு கத்தியை அவன் வயிற்றில் இறக்கி விட்டு, தப்பி ஓடிருந்தான் மர்ம நபர் ஒருவன்.

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 48
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.