Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Administrator
Staff member
Messages
279
Reaction score
215
Points
63
அத்தியாயம் - 52

தனதறைக்கு வந்தவன் வேகமாக சட்டையை கழட்டி எறிந்து, கட்டி போட்டிருந்த குருதி கசியும் காயத்தை கண்ணாடியினூடே கண்டு வலியில் முகம் சுணங்கினான்.

"எல்லாம் அவளால, பேசாம நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு மெதுவாவே வந்திருக்கலாம்.. அவளை பாக்கணும்னு அவசரஅவசரமா ஓடி வந்து இப்ப என்னாச்சி.. ஆசையாவா பேசினா, இல்ல அக்கறையா ஒரு பார்வை அதுவும் இல்ல..

எப்பப்பாரு என்ன தப்பாவே மீன் பண்ணி கோவத்தை கிளப்பி விடுறா சிவந்த மூக்கி.. நானா உன்ன நெருங்கி வரேன்னு தானே டி, என்ன எப்பவும் உதாசீனப் படுத்தி அவமானப் படுத்துற, நீயா என்ன நெருங்கும் போது இதே அவமானத்தை உனக்கு திருப்பி தருவேன்..

அப்போ பாக்குறேன் உன் முகம் எப்டி போகுதுனு.." மனதில் கருவியபடி குளியலறை செல்லப் போக,
"அய்யோஓஓ எப்டி மாமா அடிப்பட்டுது உங்களுக்கு.." பதறியடித்து உள்ளே நுழைந்தாள் கவி.

அவளை கண்டதும் எரிச்சலாகி போனவன், "ஏய்.. இப்ப ஏன் இங்கேயும் வந்து என் உயிர வாங்குற, மரியாதையா வெளிய போடி நான் குளிக்கணும்.." சினமாக சீறியபடி அவளுக்கு முதுகு காட்டி நின்று பேண்ட் சிப்பை கழட்டியவன், இன்னும் அவளின் ஆசை வார்த்தையான மாமாவை சரியாக கவனிக்கவில்லை போலும்.

அவன் பேசியது கவிக்கு வருத்தமாக இருந்தாலும், 'ஆறாத பச்சை ரணக் காயங்களோடு குளிப்பதா..' அவன் காயம் கண்டு கண் கலங்கிய கவி,
"என்ன குளிக்க போறீங்களா.." அவன் பின்னோடு நெருங்கி ரத்தம் கசியும் காயங்களை வருடிப் பார்த்தாள் அச்சத்துடன்.

சிறிது நேரம் முன் தான் அவளாக நெருங்கினால், பதிலுக்கு பதில் அவமானப்படுத்துவேன் என்று சபதம் கொண்டான். ஆனால் இப்போதோ ஆணவன் தேகம் பெண்கிளியின் பொன்க்கரம் பட்டதும் சிலிர்த்துப் போனது.

"குளிக்கணும் கவிஇ.. ட்ராவல் பண்ணது கசகசனு இருக்கு.." அசையாமல் நின்ற வாக்கிலே அவளின் மற்றொரு கரத்தை பிடித்து எடுத்து, தனது படிக்கட்டு வைற்றில் அழுத்திக் கொண்ட ஆத்வி, கண்மூடி முணுமுணுத்தான்.

அவன் முதுகோடு தன் உடல் உரசா வன்னம் நின்ற கவி, "இவ்ளோ காயத்தோட குளிச்சா சீழ் வச்சி அடிபட்ட இடமெல்லாம் குடைச்சல் கொடுக்கும் மாமா, குளிக்க வேண்டாமே.." என்றவளின் அக்கறையான கீச்சிக்குரல் இதமாக அவன் செவியில் இறங்கி, அவளின் உரிமையை நிலைநாட்டும் போது மனைவியின் பேச்சை தட்டி விடுவானா!

"சரிதான், ஆனா பாரு டி, எப்டி உடம்பெல்லாம் வியர்வைல பிசுபிசுனு இருக்குனு.. இதோட எப்டி இருக்குறது, ரொம்ப கஷ்டம் கவிஇ.." இருவரும் தங்களை மறந்து இயல்பாக பேசிக் கொள்வது அவர்களே உணராது போயினரோ!

"அதுக்காக இந்த காயத்துல குளிச்சா உடம்பு சரியில்லாம போய்டுமே மாமா, நீங்க வாங்க நான் ஹாட் வாட்டர்ல துடைச்சி விட்டு, காயத்துக்கு வேற கட்டு போட்டு விடுறேன்.." தன்கரம் அவன் வயிற்றோடு ஆணவன் கரத்தினுள் மாட்டி இருப்பது உணராது திரும்பி, அதே வேகத்தில் அவன் பின்னே மோதி நிற்க, ஆத்வியின் முகம் முன்பு போல் இல்லாமல் பாறையாக இறுகி இருந்தது.

"ஆஆ.. ஸ்.. என வலியில் முனகி நெற்றியை தேய்த்தபடி மீண்டும் விலகப் போனவளை விடாமல் பிடித்துக் கொண்டவனின் பிடி இறுகி, சீற்றமாக திரும்பி ஒரே தள்ளாக அவள் தோள் பிடித்து சுவற்றில் மோதி நிற்க வைத்தவன் முகம், கோவத்தில் முக்குளித்து இருந்தது.

"ஸ்..ஹாஆ.. மாமாஆ.. என்ன பண்றீங்க.." தன்னை கண்டு மிரண்ட முயலாக விழித்தவள் முகவாயை பற்றிய ஆத்வி,

"யாரு யாருக்கு டி மாமா, அப்போ இத்தனை நேரமும் உன் கள்ளக்காதலனை நினைச்சுகிட்டு தான் என்கிட்ட அந்த பதறு பதறி, அக்கறைய காட்டினியா.." கணவனின் கனல் பறக்கும் வார்த்தையில் துடித்துப் போன கவி,

"ம். மாமா.. ந்.நான் சொல்ல வர்றத கொஞ்சம் கேளுங்க.." என்று அவள் சொல்லும் முன்பே,

"ஏய்ய்.. நிறுத்து டிஇஇ.." கண்கள் சிவக்கக் கத்தியவன், "இன்னும் ஒருமுறை அந்த வார்த்தை உன் வாய்ல வந்துது, அப்டியே உன்ன கழுத்த நெறிச்சி கொல்லவும் நான் தயங்க மாட்டேன்..

என்ன டி என்னைப் பாத்தா கேனை மாதிரி தெரியிதா உனக்கு, அவனை கூப்ட்டு கொஞ்சுற பேர் வச்சி என்ன கூப்பிடுற.." பற்கள் தெரிய சீறியவனை கண்டு ஒடுங்கி சுவற்றோடு ஒன்றியவளுக்கு, ஐயோ என்றானது.

'கள்ளக்காதலன் நல்லக்காதன் கணவன் முரடன் எல்லாம் நீ மட்டும் தான் டா மக்கு மாமா..' என கத்தி சொல்லி அவன் தலை முடியை பிடித்து மாவாட்ட தோன்றிய மனதை அடக்கிக் கொண்டளின் பார்வை, தன் காயத்தில் படிந்திருப்பதை பார்த்து எரிச்சலான ஆத்வி,

"ச்சீ போடி.. உன்ன பாத்தாலே பத்திக்கிட்டு வருது.. என் கண்ணு முன்னாடி நிக்காதே வெளியே போ.." அவளை உதறித் தள்ளவும், பேலன்ஸ் மிஸ்ஸாகி கீழே விழுந்தவளை துளியும் கண்டு கொள்ளாது,
அணிந்திருந்த பேண்டை கழட்டி வீசி விட்டு ஷவருக்கு அடியில் குளிர்ந்த நீரில் நின்று, கோவத்தை தனிக்க முயன்றவனுக்கு எந்த ஒரு கவலையும் இல்லை, கூச்சமும் இல்லை, ஒரு கன்னிகையின் முன்பு பிறந்தமேனியாக நிற்பதை பற்றி.

அவன் நிற்கும் கோலம் உணரும் நிலையில்லாது, விழுந்த வாக்கிலே அமர்ந்திருந்த கவியின் தெறித்த விழிகள், அவன் காயம் கொண்ட இடத்தை வெறிக்க, ஆத்வியின் நடத்தையில் மனமே பாரமாகிப் போனது.

ஒரு சில நிமிடத்தில் இயல்புக்கு திரும்பியவள், அவன் நின்ற கோலம் உணர்ந்து அதிர்ந்து போனவளாக, படபடப்பாக எழுந்தவளின் பாதம் நீரில் வழுக்கி 'அம்மாஆ..' என்ற அலறளோடு மீண்டும் கீழே விழுந்தவளுக்கு கணுக்கால் சுளுக்கி, வலி எடுத்துக் கொண்டது.

'ஆஆ.. அம்மா..' என வலி தாங்காமல் கத்திக் கொண்டிருந்தவளை நிதானமாக திரும்பிப் பார்த்தவனுக்கு, கவியின் நிலை உணர்ந்து உள்ளுக்குள் பதட்டமானாலும், அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவளை நெருங்கியவனை கண்டு, அதிர்ச்சி தாளாமல் மேலும் முகத்தை மூடி ஆஆ.. என அலறி விட்டாள் கவி.

அவள் கத்தலில் குனிந்து தன்னை பார்த்து சலிப்பாக உதட்டை சுழித்துக் கொண்டவன், "ஏன் டி சும்மா டென்ஷன் பண்ணிட்டு இருக்க, இனிமே இதெல்லாம் அடிக்கடி பாத்து தானே ஆகனும், எதுக்கு இப்டி கத்தி உயிர வாங்குற.." பற்களை கடித்து கடுகடுத்த ஆத்வி, டவலைக் கட்டிக் கொண்டு அவளை நெருங்க,

"ஐயோ முருகா.. ப்ளீஸ் என்கிட்ட வராதீங்க.. ப்ளீஸ் வராதீங்க.. எனக்கு பயமா இருக்கு தள்ளி போங்க.. இனிமே பாக்க மாட்டேன், நீங்க இருக்க திசை பக்கமே வரமாட்டேன், என்ன விட்டுடுங்க பயமா இருக்கு.." பேசியதையே பேசி கால் வலியும் மறந்தவளாக அலறும் மனைவியை கண்டு, கோவம் மறைந்து சிரிப்பு வந்து விட்டது அவனுக்கு.

"ஐயோ கவி பாப்பா.. இதுக்கே பயந்தா எப்டி டி, இன்னும் மத்ததை எல்லாம் எப்டி சமாளிப்ப.." உதடு கடித்து தலை கோதி வெட்கம் மறைத்தவன்,

"ஏய்.. கண்ண தொற டி ரொம்ப தான் ஓவரா பண்ற, எழுந்து வா.." அவள் கை பிடித்து இழுக்க,

"ந்.நான் வர மாட்டேன்.. மாமா ப்ளீஸ் என்ன விடுங்க எனக்கு பயமா இருக்கு.." மிரண்டு போய் கண் திரவாமல் பினாத்த, பெருமூச்சு விட்ட ஆத்வி, பளபளக்கும் அவளின் அல்வா துண்டான வழவழப்பு இதழ்களை, சட்டென தன் வாய்க்குள் விழுங்கி இனிப்பை மென்று தின்ன, அப்போதும் கண்களை திறவாமல் ம்.. ம்ம்.. என்ற முனகளோடு மெது மெதுவாக அவன் கையில் அடங்கிப் போனாள் கவி.

*****

"திடீர் திடீர்னு அவன் எங்கேயாவது கிளம்பி போறது நல்லாவா இருக்கு, இப்ப வந்து திரும்பவும் பெரிய குண்டை தூக்கி போடுறீங்க..

என்னால இதுக்கு சம்மதிக்க முடியாதுங்க, அதுவும் ஆறுமாசமெல்லாம் ஆத்வி மட்டும் இல்ல கவிய விட்டும் என்னால பிரிஞ்சி இருக்க முடியாது.. ப்ளீஸ் அவனை இங்கேயே இருந்து வேலை பாக்க சொல்லுங்க..

கோயம்பத்தூர் போக வேண்டாம்னு சொல்லி புரிய வைங்க.." காலையில் உறங்கி எழுந்ததில் இருந்தே புலம்பல். காதில் பஞ்சி வைத்துக் கொள்ளாத குறையாக காபி குடித்துக் கொண்டிருந்த ஆதி, நிதானமாக அதை பருகி விட்டு மேஜையில் வைத்தவன்,

"இங்கே பாரு மித்துபேபி, ஆத்வி அங்கே புது பிராஞ் ஓபன் பண்ணி இருக்கான், போயாக வேண்டிய கட்டாயம்.. கொஞ்ச மாசம் அங்கே இருந்து வேலை பாத்தா தான் முடியும்.. அவன் இங்கே இருந்தா உன் புள்ள போட்ட உழைப்பு எல்லாம் வீணா போகும் உனக்கு பரவால்லயா.." என்றவனின் அழுத்தமான கேள்வியில், என்ன பதில் சொல்வது என தெரியாமல் தடுமாறி நின்றாள் மித்ரா.

"நீங்க என்ன சொன்னாலும் மனசுக்கு ஏதோ சரியா பாடலைங்க.. கவி சின்ன பொண்ணு, அவளுக்கு அவ வேலையே சரியா செஞ்சிக்க தெரியாது, ஆத்விக்கு எல்லாம் சரியா இருந்தா தான் பிடிக்கும்..

நல்லா இருந்துடே இருக்கவனுக்கு, எப்போ ஏன் எப்டி கோவம் வரும்னே தெரியாது.. இன்னும் ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சி, மனசு விட்டு பேசிக்கக் கூட இல்ல, அதுக்குள்ள இவங்கள தனியா விட்டா எப்டிங்க.." மகனின் குணம் அறிந்து கலக்கமாக சொல்லும் மனைவியை நிர்மலாமான முகத்தோடு கண்ட ஆதி,

"இங்கே பாரு மித்துபேபி, எப்பவும் நம்ம பிள்ளைங்க நம்ம கூடவே இருக்கணும்னு நினைக்கிறது சரி இல்ல, அவங்களுக்கு பிடிச்ச மாதிரி இருக்கட்டும் விடு..

நானெல்லாம் ஒரு வயசுக்கு மேல சிரிப்பை மறந்து வாழ்க்கைய வெறுத்து வளந்தவன் டி, நீ வர வரைக்கும்.. ஆனா நம்ம பசங்க அப்டி இருக்கக் கூடாது, சந்தோஷமா இருக்கனும் வாழ்க்கைய ரசிச்சி வாழனும்..

ஆத்வி கோவக்காரன் தான், அதுக்காக கவிய எந்த சூழ்நிலைலும் விட்டு கொடுப்பான்னு தப்பு கணக்கு போடாதே.." மகன் மீதுள்ள நம்பிக்கையில், அழுத்தம் திருத்தமாக சொன்ன வார்த்தை, கூடிய விரைவில் உடையப் போகிறது என்று ஆதிக்கு தெரியாமல் போனது.

எப்படியோ பேசி மனைவியின் மனதை மாற்றி, அரைமனதாக மகன் மருமகள் ஊருக்கு செல்ல என்னென்ன வேண்டுமோ, அனைத்தையும் எடுத்துவைக்க செய்து விட்டான்.

இவ்விடயம் ஸ்வாதிக்கு தெரிய வர, தோழி தன்னை விட்டு பிரிந்து செல்வது மனதுக்கு கஷ்டமாக இருந்தாலும், புதிதாக திருமணம் ஆன தம்பதிகள் சிறிது நாட்கள் மகிழ்ச்சியாக சென்று வரட்டும் என மனதை தேற்றிக் கொண்டாலும், கவியை விட்டு பிரிய முடியாமல் மனம் தவித்துப் போனது.

அனைத்து வேலைகளும் பரபரப்பாக நடப்பதை கண்டு ஒன்றும் புரியாமல் விழித்த கவிக்கு, ஆத்வி கோயம்பத்தூர் செல்ல வேண்டும் என்று சொன்னது சிறிதும் நியாபகம் இல்லை என்பதே உண்மை.

"என்ன டி இன்னும் கிளம்பாம அப்டியே நின்னுட்டு இருக்க, வா உனக்கு தேவையான திங்ஸ் எல்லாத்தையும் எடுத்து வைக்கலாம்.." ஸ்வாதி சகஜமாக பேசினாலும், அவள் முகத்தில் உள்ள ஒருவித தவிப்பை, கவியால் நன்றாக உணர்ந்துக் கொள்ள முடிந்தது.

"நோ ஸ்வாதி, நான் போகல அவர் மட்டும் போயிட்டு வரட்டும்.. நான் உங்க எல்லார் கூடவும் இங்கேயே இருக்கேன், எனக்கு அவர் கூட போக இஷ்டம் இல்ல..

அதுவும் நீ இல்லாம நான் எப்டி, என்னால முடியாது.." மறுப்பாக பேசி கெஞ்சிக் கொண்டிருக்கும் போதே, அவளை அழைக்க வந்த ஆத்வியின் செவியில் சரியாக அவள் பேசியது கேட்டிட,

"என்னைக்கும் இவ என்ன புரிஞ்சிக்கவே மாட்டா.." வருத்தமாக நினைத்தாலும், மீண்டும் ஆத்திரம் மூண்டது.

அனைவரும் பேசி கவியை சமாதானம் செய்து, ஆத்வியோடு செல்ல சம்மதிக்க வைத்து, கண்ணீரும் அழுகையுமாக பலவித பாசப்போறாட்டங்கள் நடத்தியப் பிறகு, இருவரையும் காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

இனி போகும் இடத்தில் என்னென்ன அலபறைகள் காத்திருக்கிறதோ!!..

*****

இங்கு வெகு நாட்களுக்கு பிறகு, ஆதியும் மித்ராவும் அவர்கள் முதல் முதலில் சந்தித்துக் கொண்ட கம்பனி பிரான்ஜில், ஊழியர்கள் அனைவரும் சேர்ந்து தங்களது முதலாளியான ஆதிக்கு சிறிதாக பாராட்டு விழா நடத்தவிருக்க, அதற்காக மனைவியை அழைத்துக்கொண்டு அங்கு சென்றிருந்த வேளையில்,

இத்தனை நாளும் ஸ்வாதியை அருகில் வைத்துக் கொண்டே அவளை பார்க்க முடியாமல் தவித்து வந்த யாதவ், வீட்டில் யாரும் இல்லாததை உறுதி செய்துக் கொண்டவனாக, அவளது அறைக்குள் நுழைந்தவனை கண்டு ஸ்வாதி என்ன சொன்னாளோ!

அதில் கோவம் தாளாமல் அவளை ஓங்கி விட்ட அறையில் மயங்கி சரிந்தவளை, உணர்ச்சி துடைத்த முகத்துடன் தாங்கி இருந்தான் யாதவ்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 52
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top