Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Administrator
Staff member
Messages
279
Reaction score
215
Points
63
அத்தியாயம் - 56

ஹரிதா அறையை விட்டு சென்றதும், சில நிமிடங்கள் கழித்து உடலை முறித்தபடி வெளிவந்த ஆத்வியை தெறிக்கும் விழிகளால் பார்த்த கவிக்கு, வேதனையாகிப் போனது.

இத்தனை நாளும் அவனை காண வேண்டும், அவனோடு பேச வேண்டும் என்று தவித்துப் போயிருந்த மனம், இப்போது வரண்ட பாலைவனமாக மாறி, ஏதேதோ நினைவலையில் திரும்பவும் படுத்து கண்மூடிக் கொண்டாள்.

அவன் அறை விட்டு வெளிவருவதை கண்ட பணியாள், ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த பழசாரை எடுத்து சென்று அவனிடம் கொடுக்கவும், அதை வாங்கிக் கொண்டவன்,
"கவி எழுந்தாச்சா, அவளுக்கு ஏதாவது குடிக்கக் கொடுத்தீங்களா.." என்றான் பழசாரை பருயபடி.

"ஐயா.. அம்மா ராத்திரி உங்களுக்காக காத்திருந்து, கீழ கூடத்துலே படுத்து தூங்கிட்டாங்க போல, இன்னும் எழுந்திரிக்கல.." அவள் வெறுமெனே கண்களை மூடி வருத்தமாக படுத்திருப்பதை, உறங்குவதாக நினைத்து சொல்லிட,

ம்ம்.. என்ற ஆத்வி அவரை அனுப்பி விட்டு, பால்கனி கம்பியை பிடித்தபடி, சோபாவில் ஒருக்களித்து படுத்திருக்கும் மனைவியைக் கண்டான்.

விரித்து கிடந்த அவளின் அளவான கற்றைக் கூந்தல், அவள் பட்டு முகத்தை தொட்டுத் தழுவும் அழகை கண்களால் அள்ளிப் பறுகியவன்,
"உந்தன் கூந்தல் முடி, கொஞ்சம் அசைகின்றது..
அந்த அசைவுக்கு நடனங்கள் இணையில்லையே.." மெல்ல அசைந்தாடும் பெண்ணுடலை மேய்ந்த அவன் பார்வை,
"சிற்பம் கவிதை ஓவியம், மூன்றும் சேரும் ஓரிடம்.. கண்டேன் பெண்ணே நான் உன்னிடம்.." மனதில் மெட்டுகளோடு பாடல் இசைய்திருக்க,

"நானா நெருங்கி போனாலும் தப்பா புரிஞ்சிகிட்டு என்ன டென்ஷன் பண்றா.. உண்மைய எடுத்து சொல்லி புரிய வைக்க முயற்சி செய்ய முன்வந்தாலும், லபா திபோனு கத்தி, அவளா ஒன்னு புரிஞ்சிகிட்டு சண்டை போட்டு என்கிட்ட அடி வாங்கியே அழுது கரைவா.. இவளை வச்சிக்கிட்டு என்ன செய்ய.." நினைக்கும் போதே கண்ணை கட்டியது.

"எப்டி பாத்தாலும் உன்ன எனக்கு கொஞ்சம் கூட பிடிக்க மாட்டுது டி, சிவந்த மூக்கி.." முனகிக் கொண்டவன் மனசாட்சியும் இதை கேட்டு கேட்டு சலித்து விட்டது போலும், சோர்ந்து அடங்கிக் கிடந்தது.

"நர்மதை என்னோட நருஊ.." உதட்டசைவில் முனகியவன் நெஞ்சமோ, தனது குட்டி தேவதைப் பெண்ணை எண்ணி சிலிர்த்துப் போக, கீழிருப்பவளின் அழகை ரசித்துக் கொண்டே வந்தவன் பார்வை, அவளின் வெளீர் கழுத்தில் லேசாக தெரியும் பிளவைக் கண்டு எச்சில் விழுங்கினான்.
"பெண்ணெல்லாம், பெண் போலே இருக்க..
நீ மட்டும் என் நெஞ்சை மயக்க..
பூமிக்கு வந்தாயே தேவதை போலவேஏஏ..
அடடா பிரம்மன் புத்திசாலி..
அவனை விட நான் அதிர்ஷ்டசாலி ஓஹோ.." குதூகலமாக பாடியவன்,

"என் நருஊ எவ்ளோ க்யூட் லிட்டில் பிரின்ஸஸா இருப்பா.. இவளும் இருக்காளே, எப்பப்பாரு சோடாபுட்டிய தூக்கி விட்டு முறச்சி பாக்குறதே வேலையா போச்சி.." புன்னகை கண்ணனாக நினைத்தவன் மனம் முழுக்க, பரவசம் நிரம்பி வழிந்தது.

அன்று மித்ராவிடம், கவி தன்னைப் பற்றி பேசத் தொடங்கிய போதே வந்து விட்டவன், முதலில் அவள் சொல்வதை சாதாரணமா தான் எடுத்துக் கொண்டான். ஆனால் அவள் சொன்னதை கேட்டு மித்ரா மயங்கி விழுந்த பிறகு, மீண்டும் மீண்டும், "கவிஇ.. நீ யாரு என்னனு உனக்கு உண்மையாவே ஒன்னும் நியாபகம் இல்லையா.." என தொடர்ந்து மித்ரா கேட்டுக் கொண்டே இருப்பது, ஆத்விக்கு தான் ஏதோ மனதை உறுதியது.

அதை தொடர்ந்து அவன் விசாரணை வேட்டை தொடங்கி, அவன் நரு பாப்பாவை அடையாளம் கண்டு கொண்டு சொல்ல முடியா மகிழ்ச்சிகள் அவன் நெஞ்சில் ஊற்றெடுத்து, விரும்பியவளையே கரம் பிடித்தும் கொண்டான். அவன் பாணியில் சொல்லப் போனால் வெறுப்பவளையே கரம் பிடித்துக் கொண்டான்.

"உன்ன அப்பவும் எனக்கு பிடிக்கல, இப்பவும் எனக்கு பிடிக்கல டி.. அதேமாறி உன்ன தவிர வேற எவளையும் பாக்கவும் பிடிக்கல.. என்ன மந்திரம் போட்டு மயக்கிட்டு போனியோ, நீ தொலஞ்சி போன நாளுல இருந்தே உன் நியாபகம் தான்..

எல்லாரும் உன்ன செத்து போய்ட்டேன்னு நெனச்சி ரொம்ப அழுது ஃபீல் பண்ணாங்க, ஆனா எனக்கு இதுவரைக்கும் அப்டி எதுவுமே இருந்ததில்ல நரு.. மனசுல ஏதோ ஒரு மூலைல சின்ன நம்பிக்கை, நீ திரும்ப வருவேன்னு, எனக்காக வந்திட்ட..

ஆனா புரிஞ்சிக்காம ரொம்ப கஷ்டப்படுத்துறியே நரு.." வருத்தமாக நினைத்திருக்கும் போதே, கவியின் கீச்சிக் குரல் அவன் நினைவை கலைத்தது.

உறக்கம் வராமல் எழுந்து அமர்ந்தவளிடம் பணிப் பெண் காபியை நீட்டவும், ஆத்வி மீது உள்ள கடுப்பில், "எனக்கு வேணா.." என்றவள் மேலிருந்து ஒருவன் தன்னையே பார்ப்பதை உணர்ந்து, இதற்கு முன்னர் அவன் அறையில் இருந்து வெளிவந்த ஹரிதாவின் நினைவும் சேர்ந்தே தாக்கி, முகம் கருத்தவளாக, அதற்கு மேலும் பொறுமை காக்க முடியமால் வேகமாக எழுந்து வந்தாள். வீரமங்கையாக கணவனிடம் நியாயம் கேட்க வேண்டும் என்றே!

"இப்ப என்ன ஏழைறைய கூட இவ்ளோ அவசரமா வர்றா.." புருவம் இடுங்க அவளை கண்டவனது பார்வை மட்டும், மோசமாக திருட்டு வேலை பார்த்துக் கொண்டிருந்தது, துள்ளி வரும் பெண்க்குட்டியின் குலுங்கும் அழகினை.

"மஞ்சள் நிற மலர் உன்னை நினைக்க தானடி.. கொஞ்சி கொஞ்சி பொழியுது குளிர்ந்த மழை..
மின்னுகின்ற அழகுடல் குளிக்க தானடி.. பின்னி பின்னி நடக்குது நதியின் அலை.." அவனது இன்பமான மனநிலையை குலைக்கவே வந்தது அவளின் குரல்.

"எதுக்கு அவ இங்கிருந்து உடம்ப முறிச்சிகிட்டு வெளிய போனா.." வந்ததும் வராததுமாக சிவந்த மூக்கை சுருக்கி கத்தியவளை கண்டு, தலைமுடியை புடுங்கிக் கொள்ளாத குறை.

"ஏய்.. லூசு எதையும் தெளிவா பேச மாட்டியா.." அவன் கேட்பது அவள் செவியை எட்டவில்லை, இயரிங் மெஷின் காதில் இல்லாததால்.

"நான் தான் பாத்தேனே, அவ உங்க ரூம்ல இருந்து வெளிய போறதை.. அவகூட உள்ள என்ன பண்ணீங்க.." சற்றும் அடங்காமல் அவள் எகிற,

"ஹேய்.. புரிஞ்சி தான் பேசிறியா டி, நான் யார் கூட ரூம்ல என்ன பண்ணேன்.." அவனது தடித்த அதரங்களை மீசை தாடியே மறைத்துக் கொள்ள, உதட்டு அசைவை வைத்து கூட அவன் என்ன பேசுகிறான் என்று, அத்தனை எளிதில் கண்டு பிடிக்க முடியவில்லை.

"எனக்கு தெரியும் நீங்க அவகூட என்னவோ பண்ணீட்டீங்க, அதான் அவ ஹா.. ஹம்மா..னு இப்டியும் அப்டியும் உடம்ப முறிச்சிட்டு போனா.." ஹரிதா செய்ததை அப்டியே அவள் செய்துக் காட்டிய விதத்தில், அத்தனை கோவத்திலும் லேசாக சிரிப்பு எட்டிப் பார்த்தது ஆத்விக்கு.

திரும்பத் திரும்ப பேசும் விதமே அவள் காதில் கருவி இல்லாததை உணர்ந்து கொண்ட ஆத்வி, ஓடி சென்று அவள் படுத்திருந்த இடத்தில் இருந்து அந்த கருவியை கொண்டு வந்து, அவள் காதில் பொருத்தி விட்டவனாக,

"லூசு மாறி உளராத, உன்ன தான் எங்கிட்ட பேசக் கூடாதுனு சொன்னேனே, இப்போ எதுக்கு டி, வந்து பேசுற.." பதிலுக்கு எரிந்து விழுந்தவனுக்கு ஹரிதா தன் அறைக்கு வந்ததே தெரியாமல் போனது, ஜிம்ரூமில் உடற்பயிற்சி செய்துக் கொண்டு இருந்ததால்.

"ஆமா நான் லூசு தான், அதான் நீங்க என்ன எவ்ளோ விரட்டி அடிச்சாலும், உங்க குழந்தை வேற ஒருத்தி வயித்துல இருக்குனு தெரிஞ்சும், பைத்தியம் மாதிரி திரும்ப திரும்ப உங்க பின்னாலே ஓடி வர்ற வேண்டியதா இருக்கு..

அவளை ரூம்ல வச்சி கொஞ்சிக் கொலாவ தான் என்னை தனியா தவிக்க விட்டீங்களா.." கோவமாக பொங்கியவளின் கண்ணிலும் நீர் பொங்கி வழிய, அவள் கூறவரும் பொருள் வைத்தே, ஓரளவு என்ன நடந்திருக்கும் என்று யூகித்துக் கொண்ட ஆத்வி,

"அவ்ளோ சொல்லியும் உன் நரி வேலைய தந்திரமா பாத்துட்டு போயிருக்கேல்ல. உன்ன வந்து பாத்துக்குறேன்.." ஹரிதாவை நினைத்து பற்களை கடித்தவனாக,

"ஏய்.. முதல்ல அழறத நிறுத்து, எப்பபாரு அழுது அழுதே மனுஷன சாகடிக்கிற.. எப்பவும் சந்தேகம் சந்தேகம், ஏன் டி கொஞ்சம் கூட உன் அறிவு வேலையே செய்யாதா..

எதை பாக்குறியோ அதை அப்டியே நம்பி தொலைச்சி, என் உயிர எடுக்குற.. திரும்பத் திரும்ப சொல்றேன், எனக்கும் அவளுக்கு எந்த ஒரு சம்மந்தமும் இல்ல.. நீ நம்பினாலும் நம்பலைனாலும் இது தான் உண்மை..

திரும்ப அவளையும் என்னையும் சேர்த்து வச்சி, லூசு மாதிரி பேசிட்டு வந்த, சும்மா சும்மா வாயால சொல்லிட்டு இருக்க மாட்டேன், அடிச்சி கொன்னு போட்டுட்டு போயிட்டே இருப்பேன்.." ஆவேசமாக கர்ஜித்து அவன் அறைக்கு செல்ல திரும்பவும், வினையை எப்போதும் விலைக் கொடுத்தே வாங்க நினைப்பாள் போலும்.

"ஆமா நான் ஒரு அனாதை, நீங்க கொன்னு போட்டாலும் கேக்க ஆளில்லைனு தானே எப்பவும் என்ன அடிச்சி கொடுமை படுத்துறீங்க.." மூக்கை உறுஞ்சியபடி தன் முதுகு பின்னால் அவள் கத்தவும், அடங்கி வைத்த கோவம் எல்லாம் எல்லையைக் கடந்தது, அனாதை என உதிர்த்த வார்த்தையில்.

திரும்பிய வேகத்தில் அவன் வலியக்கரம் அவள் பஞ்சி கன்னத்தை பதம் பார்த்து இருக்க, ஆணவனின் முகமோ கொஞ்சமும் அடங்கா கோபத்தில் முக்குளித்து, அதிர்ச்சியில் கலங்கிப் இருந்தவளின் பிடரிப் பற்றி வெடுக்கென இழுத்திருந்தான்.

"என்ன சொன்ன, நீ அனாதை யாரும் கேக்க ஆளில்லைனு உன்ன அடிச்சி கொடுமை படுத்துறேனா ஹான்.." அப்படி கேட்ட போதே தொண்டையில் ஏதோ சிக்கித் தவிக்கும் உணர்வில் மாட்டி மீண்டவன்,

"ஆமா டி நீ சொன்னது தான் உண்மை, அனாதை நாய அடிச்சிப் போட்டா எவன் வந்து கேப்பான்.." இப்போது இகழ்ச்சியாக சொல்லவும், திருடனுக்கு தேள் கொட்டிய நிலை கவிக்கு. கோவத்தில் அவள் விட்டபோது வலிக்காத வார்த்தை, அவன் சொன்னதும் இதயத்தைக் குத்திக் கிழித்தது.

"தாலிய கட்டின பொண்டாட்டியாச்சேனு ஆசையா உன்ன நெருங்க முடியிதா டி.. இல்ல நீ தான் என்கிட்ட ஆசையா நடந்திட்டு இருக்கியா.. எப்பவும் சண்டைக்காரியாட்டம் சண்டைக்கு தான் நிக்கிற..

பொண்டாட்டியா லட்சணமா எனக்கு என்ன வேணும்னு கேட்டு செஞ்சிருக்கியா.. பொண்டாட்டி சரியில்லாதவன் என்ன பண்ணுவான், தானா வர பொண்ணுங்கள வேண்டான்னா சொல்லுவான்.." புருவம் ஏற்றி எல்லளாக அவன் மொழுந்த விதத்தில், கவியின் மனமோ அடிப்பட்டுப் போனது.

தன்னவளின் பரிதாப முகம் பார்க்க முடியாமல் அவள் பிடரியில் இருந்து கரத்தை உறுவியவன், அதற்கு மேலும் அவளை பேசிக் காயப்படுத்த எண்ணாமல் அங்கிருந்து சென்று விட்டான்.

கவியோ தளர்ந்த நடையோடு தன் அறைக்கு வந்து மெத்தையில் விழுந்தவளுக்கு, அடக்க முடியாத அழுகையில் கரைந்து, பின் நிதானமாக யோசித்து ஒரு முடிவை எடுத்தவளாக உறங்கிப் போனாள்.

கவியிடம் கோவித்துக் கொண்டு அலுவலகம் சென்றவன் தான், குளிக்க உண்ண உடை மாற்றக் கூட வீட்டுப்பக்கம் வரவே இல்லை அவன். அனைத்தும் அலுவலக அறையிலே முடித்துக் கொண்டு, கவியின் நியாபகமே வரக் கூடாதென்று, இரவும் பகலும் வேலை வேலை என்றே லேப்டாபில் மூழ்கிப் போனான்.

இங்கு ஒவ்வொரு நாளும் கணவனை எதிர்ப்பார்த்து எதிர்ப்பார்த்து சோர்ந்து போன கவி, டிரைவரிடம் சென்று ஆத்வி எங்கிருக்கிறான், என்ன செய்கிறான் என்ற அனைத்து தகவலையும் விசாரித்தவளாக, அவன் இருக்கும் இடத்திற்கு கிளம்பி சென்றாள் கவி.

இரவு ஒன்பது மணி ஆன நிலையிலும் கண் எரிச்சலையும் மீறி, கணினித்திரையை பார்த்து லொட்டு லொட்டு என்று விரல்கள் ஓயாமல் தட்டிக் கொண்டே இருந்தவன், கதவு கதவு தட்டும் சத்தத்தில் பிஏ வாக தான் இருக்கும் என நினைத்து, "எஸ் கம்மின்.." என்றவன் குரல் அத்தனை சோர்விலும் அதிகாரமாக வெளிவந்தது.

கிரிங்.. என கதவு திறக்கும் சத்தம் ஆத்வியின் செவியில் தீண்டியதே தவிர, வந்தது யார் என நிமிர்ந்து பார்க்கவில்லை. தன் எதிரே நிழலாடுவதை வைத்து சலிப்பாக நிமிர்ந்தவன் கண்கள் ஆச்சிரியத்தில் விரிந்து, பின் கடுமையாகியது.

"நீ எதுக்கு இங்கே வந்த.." தன் எதிரே நிற்கும் கவியை முறைத்து தள்ளினாலும், எத்தனை கோவம் இருந்தாலும் அவளின் சிறு வாடிய முகம் கண்டதும், எப்படி எங்கு தான் அந்த கோவமெல்லாம் மாயமாக மறைந்து விடுகிறதோ!

"ஏன் மாமா, என்ன பாக்க பிடிக்காம தான் வீட்டுக்கு வராம இங்கே வந்து உக்காந்து இருக்கீங்களா.." குரல் கம்மி பாவமாக நின்றவளின் முகத்தை பார்த்த ஆத்வி உடனே கண்டு கொண்டான், அவளின் கருவளையம் விழுந்த உறங்கா முகத்தை.

"அதான் தெரியிதுல்ல ஏன் இங்கேயும் வந்து உயிர எடுக்குற.." என்றான் மீண்டும் வேலையில் மூழ்கியபடி.

"அப்போ நான் உங்களுக்கு தொந்தரவா இருக்கேனா.." என்றபோதே அழுகை வந்து விட்டது.

"பின்ன இல்லையா, அங்கே வந்தா தான் சண்டை போடுறேன்னு இங்கே வந்து உக்காந்து இருக்கேன்.. இங்கேயும் வந்து தொடங்கினா நான் வேற எங்கே டி போறது.." என்றவனுக்கு அன்று அவள் பேசிய வார்த்தைகளை கொஞ்சமும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

தொண்டை கேவ கண்ணீரை உள்ளிழுத்து கண்களை துடைத்துக் கொண்ட கவி, "சரி.. உங்கள ஏதாவது தப்பா பேசிருந்தா என்ன மன்னிச்சிடுங்க, இனிமே உங்களுக்கு தொந்தரவா இருக்க விரும்பல..

நீங்க நிம்மதியா இருங்க மாமா, நான் எங்கேயாவது போறேன், என்னால நீங்க உங்க வீட்டுக்கு போகாம இருக்க வேண்டா.." கடினப்பட்டு உரைத்தவளுக்கு, ஆத்வி தன்னை மொத்தமாக வெறுத்து ஒதுக்கி விட்டானே என்ற எண்ணமே இதயத்தில் ஈட்டி பாய்ச்சியது.

அவள் அப்படி சொன்னதும் பெருமூச்சு விட்டு, கணினியை அணைத்து தலைக் கோதிக் கொண்ட ஆத்வி,
"திரும்பத் திரும்ப டென்ஷன் பண்ற டி, இப்ப உனக்கு என்ன தான் பிரச்சனை.." கடுப்பாக கேட்டவனுக்கு கவியை மனதளவிலும் சரி, உடலவிலும் சரி கட்டாயமாக காயப்படுத்த மனம் வரவில்லை. இருந்தும் அவள் கேட்கும் கேள்விகளை பொறுத்துக் கொண்டு போகவும் முடியவில்லை.
அழகு பதுமையை அருகில் வைத்துக் கொண்டு வேடிக்கைப் பார்க்கும் எண்ணமும் சிறிதும் இல்லை.

எங்கே அவள் அருகிலே இருந்தால் தன்னை கட்டுப்படுத்த முடியாமல், ஏதாவது செய்து விடுவோமோ என்ற எண்ணத்தில், கடினப்பட்டு அவளிடமிருந்து விலகி இருக்கிறான்.

கவியை தன்னவளாக்கிக் கொள்ள வேண்டும் என்றே, அவளிடம் பல வம்புகள் செய்து, உரிமைப் போராட்டம் பற்றியெல்லாம் ஏதோதோ பேசி, நினைத்ததை சாதித்துக் கொண்டவனுக்கு, வாழ்க்கையே சபாமாகிப் போனால் என்ன செய்வது!

"பாத்திங்களா திரும்பவும் கோவமா பேசுறீங்க, அப்போ உங்களுக்கு என்ன பிடிக்கலைனு தானே அர்த்தம்.." வெம்பலாக கேட்கவும்,

"நான் என்னைக்கு உன்ன பிடிச்சிருக்கேன்னு சொல்லிருக்கேன்.." என்றான் புருவம் உயர்த்தி.

அந்த ஒரு வார்த்தையிலேயே வேதனை கண்டது அவள் மனம்.

'ஆம் அவன் என்றைக்கும் வாய் திறந்து, தன்னை பிடித்திருக்கிறது என்று சொல்லி இருக்கிறான்' என நினைக்கும் போதே கசந்த புன்னகை இதழில் தோன்ற, 'நான் தான் தகுதிக்கு மீறி அதிக ஆசைய வளர்த்துக்கிட்டேனா.." உள்ளே குமுறியவளின் கண்ணீர் நிற்காமல் வெளிவரத் தொடங்கியது.

வேறு எதுவும் பேசாமல் வேகமாக அவ்விடம் விட்டு நகரப் போனவளின் கரத்தை எக்கி இழுத்து, மேஜையை சுற்ற வைத்து மடியில் அமர்த்திக் கொண்ட ஆத்வி, "சும்மா சும்மா இந்த கண்ணீர் உன் கண்ணுல இருந்து வந்துச்சின்னு வையி, எனக்கு இன்னும் கோவம் அதிகமா வந்திடும் டி.." என்றவனின் உதடுகள் அவள் பின்னங்கழுத்தை உரசியது.

அதில் கூச்சத்திற்க்கு பதில் சங்கடமாக அதிர்ந்து நெளிந்த கவி, "பிடிக்காதவள ஏன் மடில இழுத்து உக்கார வச்சிருக்கீங்க, அந்த ஜில் ஜில் ராணிய இழுத்துட்டு வந்து, உக்கார வச்சிக்க வேண்டியது தானே.." என்றவளுக்கு வாயில் தான் சனிபகவான் அமர்ந்து, ஆட்டிவைக்கிறான் போல.

பின்னங்கழுத்தில் ஊரும் உதடுகள் ஒரு நொடி நின்று, மீண்டும் கழுத்தை சுற்றி ஈர உதட்டை மேய விட்டவன், "திரும்ப திரும்ப அதையே பேசாதே டி, டென்ஷன் ஆகுது..

என் முன்னாடி யார் இருக்காங்களோ, அவங்களை தான் இழுத்து உக்கார வச்சிக்க முடியும்.." கோவமாக சொல்ல வேண்டியதை கிறக்கமாக சொல்லியவன் கை விரல்கள், பாவையின் இடையில் உள்ள மேற்சட்டையினுள் புகுந்து, அங்கே அழுத்தமாக தஞ்சம் புகுந்துக் கொண்டதும், இப்போது பெண்மேனி ஆட்டம் காண தொடங்கியது.

"அப்போ அவளை நினைச்சுகிட்டு தான் என்ன மடில உக்கார வச்சிருக்கீங்களா.." மீண்டும் மூக்கை உறிஞ்ச,

"ஐயோ ராமா.." என நொந்து போய் தலையில் அடித்துகொண்டு, அவளை விலக்கி விட்டு எழுந்தான் ஆத்வி.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 56
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top