- Messages
- 279
- Reaction score
- 215
- Points
- 63
அத்தியாயம் - 6
"ஸ்வாதி எல்லாத்தையும் என் பேக்ல எடுத்து வச்சிட்டியா" தலைக்கு குளித்த அளவான கூந்தலை டேபிள் ஃபேனுக்கு நேராக நின்று உளர்த்தியபடியே பரபரத்தாள் கவி.
"ம்ம்.. எல்லாம் எடுத்து வச்சிட்டேன் கவி.. உன் சர்ட்டிபிக்கேட்ஸ், வாட்டர் பாட்டில், உன் ஸ்பெட்ஸ் பாக்ஸ், செலவுக்கு பணம் அப்புறம் ஸ்னாக்ஸ் எல்லாம் எடுத்து வச்சிருக்கேன்.. நீயும் ஒருமுறை சரியா இருக்கானு செக் பண்ணிக்கோ" என்றாள் ஸ்வாதி.
"எனக்கு டைம் இல்ல ஸ்வாதி, அதான் நீயே எல்லாத்தையும் சரியா வச்சிட்டியே அப்புறம் என்ன" என்றவள் வானநீல நிற சுடிதார் ஒன்றை அணிந்துக் கொண்டு பாதி காய்ந்த முடியை தூக்கி போனிடெய்ல் போட்டு, கண் மை தீட்டி நெற்றியில் குட்டி நீல பொட்டு ஒட்டி, லேசாக லிப்க்லாஸ் உதட்டில் பூசியவளாக, துப்பட்டாவை ஒற்றை பக்கமாக சரிய விட்டு பேகை எடுத்து மாட்டியவளுக்கு பதட்டம் ஒட்டிக் கொண்டது.
"ஸ்வாதி கண்டிப்பா இந்த முறை நான் இன்டெர்வியூல செலக்ட் ஆகிடுவேனா" பாவமாக கேட்டவளை கட்டிக் கொண்ட ஸ்வாதி,
"கண்டிப்பா கவி, இந்த முறை நீ இன்டெர்வியூல செலக்ட் ஆகிடுவ.. எதை பத்தியும் நினைக்காம தைரியமா போயிட்டு வா.. முக்கியமா கண்ணு உறுத்துதேன்னு கண்ணாடிய கழட்டாத, காது கூசுதேன்னு ஹியரிங் மெஷின காதுலேர்ந்து எடுக்காத, திரும்ப ஹாஸ்டல் வந்ததும் கழட்டி வச்சா போதும் சரியா.. நியாபக மறதியா எதை செய்யாதனு சொல்றனோ அதை செஞ்சிட்டு வந்து என்முன்னாடி நின்ன, உன்ன என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது" செல்லமாக அவளை கடிந்துக் கொண்டு அனுப்பி வைத்தாள்.
கவி ஸ்வாதி இருவரும் சிறு வயது முதலே ஆசிரமத்தில் ஒன்றாக வளர்ந்தவர்கள். ஒருவருக்கு ஒருவர் எப்போதும் துணையாக சந்தோஷம் துக்கம் ரெண்டையும் பங்கு போட்டுக் கொள்வர். அதிலும் கவிக்கு ஸ்வாதி தோழியும் தாண்டிய நல்ல வழிகாட்டி, அவளை பெறாத அன்னை என்று கூட சொல்லலாம். 8 வயதில் காது கேளாமல் கவி ஆசிரமம் வந்து சேர்ந்தாள்.
அப்போதெல்லாம் யாரோடவும் ஒட்டாமல் உணவு உண்ணாமல் அழுது கொண்டே இருப்பவளுக்கு, தன்னை சமாதானம் செய்ய வரும் யாரின் குரலும் அவள் காதில் விழாமல் போகும். அவளை சமாதானம் செய்வது அங்கிருப்போருக்கு பெரும் சவாலாகிப் போனது.
அந்த நிலையில் தான் ஸ்வாதியின் அம்மா திருமணமானவன் என்று தெரியாமல் அவனை நம்பி ஏமாந்தது தெரிய வந்து, சுயநலமாக மற்றொரு வாழ்க்கைக்கு தயாராகிய நிலையில் ஸ்வாதியை கொண்டு வந்து குடும்பமாக அனாதை குழந்தை என ஆசிரமத்தில் சேர்த்து சென்றது.
8 வயதிலேயே எந்த ஒரு பாசமும் கிடைக்காமல் வளர்ந்த ஸ்வாதிக்கு அவள் அன்னையை பிரிந்தது பெரிதாக ஒன்றும் பாதிப்பு ஏற்படுத்தவில்லை. சிரிக்க மாட்டாள் முகத்தை உம்மென வைத்து அவள் வேலையை பார்த்துக் கொள்வாள் யாரிடமும் பேசாமல். அப்போது தான் யாரின் சொல் பேச்சும் கேளாமல் முகம் வீங்கிய நிலையில் உடல் ஒட்டி பார்க்கவே பரிதாபமாக அழுதுக் கொண்டு இருந்த கவி கண்ணில் பட்டாள்.
ஏனோ இருவருக்குள்ளும் அப்போதே நல்ல பிணைப்பு இருந்திருக்க வேண்டும். அதுவரை யாரோடவும் பேசாமல் தனிமையை தனதாக்கிக் கொண்ட ஸ்வாதி, தானாக முன் சென்று கவியிடம் பேசி பழகி அவளுக்கு உணவு ஊட்டி, காது கேட்காது என்று புரிந்து கொண்டு அவளிடம் எப்படி பேசினால் புரியுமோ தனக்கு தெரிந்ததை போல் பேசி புரியும்படி செய்து காட்டி ஒவ்வொன்றையும் சொல்லிக் கொடுப்பாள். கவியின் வேலைகளை முதற்க்கொண்டு மனம் கோணாமல் செய்வாள் ஸ்வாதி. இருவரும் நட்பை தாண்டிய விரிவிக்க முடியாத அன்பான உறவை உருவாக்கிக் கொண்டு ஆசிரமத்திலே படித்து வளர்ந்தனர்.
கவி நர்சிங் படித்தாள், ஸ்வாதி இன்ஜினியரிங் படித்தாள். கல்லூரி படிப்பு முடியும் வரை ஆசிரமத்தில் தங்கி இருந்தவர்கள், படிப்பு முடிந்ததும் இருவருமாக வேலை தேடியபடியே கிடைக்கும் வேலைகளை பார்ட்டைமாக பார்த்துக் கொண்டு ஹாஸ்டல் வந்து விட்டனர்.
இப்போது வரை பல இன்டெர்வியூ அட்டன் செய்தாயிற்று, என்ன நேரமோ இருவருக்குமே வேலை தான் கிடைத்தபாடு இல்லை.
** ** **
"மித்து பேபி இன்னுமா சீக்கிரம் வா டி.." ஆதி குளியல் அறையில் இருந்துக் கத்திக் கொண்டு இருக்க, பார்த்துக் கொண்டிருந்த வேலைகளை அப்படியே விட்டவளாக,
"இதோ வந்துட்டேங்க.." என படபடப்போடு ஓடி வந்த மனைவியை ஒரு மார்க்கமாக பார்த்துக் கொண்டே நெருங்கிய ஆதி,
"என்ன டி உன் புள்ள வந்ததும் என்ன சுத்தமா மறந்துட்ட.. எவ்ளோ நேரம் நீ வருவேன்னு நான் குளிக்காம காத்திருக்குறது" அவன் குரல் உயர்த்தவும் பாவமாக முழித்த மித்ரா,
"அவன் சின்ன புள்ள தானே, அவங்கிட்ட போய் ஏன் தான் இப்டி போட்டிக்கு நிக்கிறீங்களோ" வாய்க்குள் முனகியதை சரியாக பாம்பு காதுக்குள் கேட்டு விட்டது.
"ஆமா டி அவன் சின்ன புள்ள இடுப்புல தூக்கி வச்சி சோறூட்டு.. அவன் சின்னதா இருக்கும் போது எனக்கு தொல்லை வளந்த பிறகு இன்னும் அதிகமா தொல்லை குடுக்குறான் டி உன்ன நெருங்க விடாம.." ஆதி ஆதங்கமாக சொல்லியதை கேட்டு உள்ளுக்குள் சிரித்த மித்ரா வெளியே மகனுக்காக பரிந்து பேசவில்லை. அப்படி பேசினால் ஆதியின் தண்டனை மொத்தமும் அவளை காயப்படுத்துவதற்கு பதிலாக சுக முனகள்கள் சோர்ந்து போகும் வரை அந்த அறை முழுவதும் கேட்டுக் கொண்டே இருக்கும்.
"தனியாக இருக்கும் போது பரவாயில்லை மொத்த குடும்பமும் இருக்கும் போது, வீட்டின் பெரியவர்கள் கதவை பூட்டிக் கொண்டு இருந்தால் நல்லாவா இருக்கும்" இவ்வாறு யோசித்து பயந்த மித்ராக்கு தன்னவனை சமாளிக்கும் வேலையே பெரும் வேலையாகிப் போனது.
குளிக்க வைத்து தலை துவட்டி, உடை அணிவித்து விட்டவள், அவன் கையில் கைகடிகாரத்தை கட்டிக் கொண்டு இருக்க, மற்றொரு கையால் அவள் இடை பற்றி அவனோடு இழுத்த ஆதி, இன்னும் பளபளப்பாக தேஜஸ் குறையாமல் மின்னிக் கொண்டு இருக்கும் அவள் ரோஜா கன்னத்தில் முத்தமிட்டவனாக,
"ஒழுங்கா நாளைல இருந்து உன் புள்ளைய இந்த பந்தயம் ரேஸ் எல்லாத்தையும் விட்டுட்டு ஆபிஸ் வர சொல்லு மித்து பேபி.. அவனுக்கு நான் கொடுத்த டைம் இன்னையோட முடிஞ்சிது" என்று அவள் காதுக்குள் கிசுகிசுக்க, பதில் சொல்ல தெரியாத பச்சை பிள்ளையாக கணவனிடமும் மகனிடமும் நடுவில் மாட்டிக் கொண்டு திணறிப் போனாள் மித்ரா.
ஆத்விக்கு சுத்தமாக வேலைக்கு போவது தந்தையின் தொழிலை எடுத்து நடத்துவதில் எல்லாம் பெரிதாக ஈடுபாடு இல்லை. பந்தயம், கார் ரேஸ், பைக் ரேஸ் என்று கலந்து கொண்டு வெற்றிக் கோப்பையை வெல்வது மிகவும் பிடித்தமான ஒன்று. ஆனால் ஆதிக்கு அது சுத்தமாக பிடிக்காது. அது மகனின் மேல் உள்ள அதீத அக்கறை மட்டுமே காரணம்.
15 வருடங்களுக்கு முன் அவன் கண் முன் நடந்த கொடூரமான நிகழ்வுகளாக கூட இருக்கலாம். வெளியே ஆத்வியிடம் முறைத்துக்கொண்டு இருப்பவன் தான், உள்ளே கொள்ளை பாசத்தை வழிய விட்டு வைத்திருக்கிறான். அதே தான் ஆத்வியும் வெளியே அன்னையை வைத்து தந்தையிடம் வம்பு செய்யும் ஆத்விக்கு, தந்தை என்றால் அத்தனை பிரியம். இருவரும் வெளியே சொல்ல தான் விருப்படவில்லை.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே "அலுவலகப் பொறுப்பை ஏற்றுக் கொள்" என்று ஆதி சொன்னதற்கு "விருப்பம் இல்லை" என்று அலட்சியமாக சொல்லும் மகனை கூர் விழிகளால் கூரு போட்ட ஆதி, சரியாக இரண்டு வருடம் கழித்து அலுவலக பொறுப்பை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்று முடிவாக சொல்லி விட்டான். ஆனால் அது ஆத்விக்கு தான் நியாபகம் இல்லை போலும்.
ஈசியார் அருகில் உள்ள பேருந்து நிறுத்துமிடதில் சற்று தள்ளி காரை நிறுத்தி விட்டு கூலிங் க்ளாஸ் அணிந்த வன்னம், வாட்சை திருப்பிப் பார்த்தபடி அசோக் மற்றும் இன்னும் சில நண்பர்களுக்காக காத்திருந்தான் ஆத்வி.
ஒரு பைக்கில் மூன்று பேர் என்று அட்டை பெட்டிகளோடு வந்தனர், அதில் அசோக்கும் இருந்தான். அவர்களை கோவமாக பார்த்த ஆத்வி,
"இவ்ளோ நேரம் என்னடா புடுங்கிட்டு இருந்தீங்க.. வாங்கிட்டு வந்துட்டு கூப்பிட வேண்டியது தானே" என்று கத்த,
"ஐயோ சாரி மச்சி.. டிராபிக் அதிகம் கடைல வேற இன்னைக்குனு பாத்து ஓவர் கூட்டம்" என்றவர்கள் காருக்குள் ஏறி அமர்ந்தனர்.
"சரி சரி சீக்கிரம் பாக்ஸ பிரிங்க.. இன்னைக்கு அவனுக்கு வீடியோ எடுத்து அனுப்பி வைக்கணும்" என்றவன் கையில் லோக்கல் சரக்கை எடுத்து வைத்தான் ஒருவன்.
"இதை எல்லாம் எப்பிடிடா வாங்கி குடிக்கிறாங்க"அதனை கண்டு முகம் சுளித்த ஆத்வி, வீட்டுக்கு தெரியாமல் எப்போதாவது பிரான்டட் சரக்கு மட்டும் குடித்து இருக்கிறான்.
"டேய்.. ஆத்வி இப்பவும் ஒன்னும் கெட்டுப்போகல இதெல்லாம் உன் உடம்புக்கு செட்டாகாது, வீணா அந்த வீணாப்போன தீபக் (முதல் எபியில் ரேஸில் தோற்றவன்) ஆம்பளயா இருந்தா லோக்கல் சரக்க குடிச்சிக் காட்டுடானு பெட் கட்டினத வச்சி கண்டதையும் குடிச்சி உன் உடம்ப கெடுத்துக்காத.. அங்கிள்க்கு தெரிஞ்சா பிரச்சனை ஆகும்" அசோக் என்ன சொல்லியும் கேளாமல்,
"இந்த ஆத்வி முன்னுக்கு வச்ச கால பின்னுக்கு வைக்க மாட்டான் டா.. அவன் எப்டி என்ன பாத்து ஆம்பளயா இருந்தா குடிச்சி காட்டுனு சொல்லுவான், இதுல பெட்டையும் தாண்டி என் தன்மானம் அடங்கி இருக்கு" என்றபடி ஒரு கோட்டர் எடுத்து பிரித்து வைத்து, கண்ணை மூடி குடிப்பதை வீடியோ எடுத்தான் சாதிக்.
கசப்பு சுவை மூளை வரை ஏறி புரையேரியது அவனுக்கு. இன்னொருவன் அவன் தலையை தட்டி விட்டு தண்ணீர் அருந்தக் கொடுக்க, குடித்து முடித்தவனுக்கு கண் முழி பிதுங்கியது.
"என்னடா இது இவ்ளோ மட்டமா இருக்கு வேற நல்ல கடைல வாங்கிட்டு வர தெரியாதா" அவன் பொறிந்து தள்ள. மற்ற மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டவர்களாக,
"டேய் லோக்கல் சரக்கு எல்லா இடத்துலயும் இப்டி தான்டா அடி மட்டமா இருக்கும்" நக்கலாக கூறிய அசோக்கை முறைத்து,
"சரி அந்த வீடியோவ அந்த தீபக்கு அனுப்பி விட்டு மீதி இருக்குற சரக்க தூக்கி வெளிய வீசுங்க" என்றவன் ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்து ஊதி தள்ளினான். இதுவும் எப்போதாவது டென்ஷன் அதிகரிக்கும் நேரத்தில் மட்டும் கையில் எடுக்கும் கவசம்.
"அதுக்கு 80 ரூபா கொடுத்து ஒன்னே ஒன்னு மட்டும் வாங்கிட்டு வந்திருப்போமே டா.. எதுக்கு 80 ரூபா சரக்க குடிக்க ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிட்டு வர சொன்ன" பரத் கேட்க,
"எனக்கு என்ன தெரியும் நான் ஒரு சரக்கே ஆயிரம் தாண்டும்னு நெனச்சேன்" சாதாரனமாக தோளைக் குலுக்கியவனை வெறியோடு பார்த்தனர் நண்பர்கள்.
"ஆயிரத்தை தாண்டினா அதுக்கு பேரு உனக்கு லோக்கல் சரக்கா" என்று நண்பர்கள் கேக்க.
"பின்ன இல்லையா" என்றவனை என்ன செய்தால் தகும் என்பது போல ஆத்விடம் மாட்டிக் கொண்டு முழித்தனர்.
அப்போது ஹாரன் சவுண்ட் காதை பிளக்க காதை மூடியவனுக்கு லேசாக போதையின் தாக்கம் இருந்தது போலும்.
"டேய் எவண்டா அது காதுல வந்து ஹாரன் அடிக்கிறது தள்ளி போய் அடி" ஆத்வி கத்த.
"பரத்து அதுக்குள்ளயா போதை ஏறிடுச்சு" சாதிக் கேக்க.
"அப்டிதான் இருக்கும் போல டா" என்றான் பரத்.
"சரி இவனை மொதல்ல வீட்டுக்கு கூட்டிட்டு போவோம்" என்ற அசோக் "டேய் ஆத்வி இந்தா தண்ணி, வெளிய போய் முகத்தை கழுவிட்டு வா" என்றதும், தண்ணீர் போத்திலை வாங்கிக் கொண்டு வெளியே வந்தவன் காதில் இன்னுமும் அந்த ஹாரன் சத்தம் விழுந்து கடுப்பை கிளப்பியது.
"டேய் எதுக்கு டா ஆளில்லாத இடத்துல நின்னு ஹாரன் அடிக்கிற பாடு" என்று கத்திக் கொண்டே குனிந்து கல்லை எடுத்து அவனுக்கு முன்னால் நின்றிருந்த பேருந்தின் கண்ணாடியை குறி வைத்து அடிக்கப் போக, அதற்குள் காரியமே கெட்டுது என்று பதறி ஓடி வந்து அவன் கையில் இருந்த கல்லை பிடுங்கி இருந்தான் அசோக்.
"டேய் ஆத்வி என்னடா பண்ணிட்டு இருக்க.. அந்த பஸ்ஸு உன்ன என்ன டா பண்ணுச்சி, ஆளுங்கள ஏத்த அவன் அப்டிதான் ஹாரன் அடிப்பான் நேரா நேரத்துக்கு அந்தந்த ஸ்டாப்பிங்ல பஸ் நிறுத்த வேணாமா" என்றான் கடுப்பாக.
"அதுக்கு ஏன்டா நான் இருக்க எடத்தில நிறுத்தி ஹாரன் அடிக்கிறான்" எனும் போதே நா குளறியது.
"அதுசரி அவன் நிக்கிற இடத்துல நீ காரை நிறுத்திட்டு அவனை ஏன் நிறுத்தினேன்னு கேக்குறியா.. உள்ள போன சரக்கு அது வேலையக் காட்டுது போல" என்று மனதில் நினைத்தவன் "சரி சீக்கிரம் முகத்தை கழுவிட்டு வா வீட்டுக்கு போவோம்" எனும் போதே மீண்டும் ஹாரன் சத்தம் ஆத்வியின் கோவத்தை கிளறி விட்டது.
"இன்னைக்கு அவனா நானான்னு ரெண்டுல ஒன்னு பாக்குறேன் டா" பல்லைக் கடித்தபடி பேருந்தை நோக்கி செல்லப் போனவனை நண்பர்கள் மூவரும் இறுக்கமாக பிடித்துக் கொண்டனர்.
"டேய் ஆத்வி அது கவர்மெண்ட் பஸ்ஸு டா.. அதுல நிறைய ஆளுங்க இருப்பாங்க, எல்லாரும் நம்மள மாதிரி கார் பைக் வச்சிருப்பாங்களா என்ன.. இல்லாதவங்க போறதுக்கு தான் டா பஸ்ஸு.. அது உன்ன மாதிரி பொறந்ததுல இருந்தே பஸ்ஸ பாக்காதவனுக்கு எங்க புரியப் போகுது.. ஒருமுறை அதுல போய் பாரு அப்புறம் தெரியும் அந்த கஷ்டம்" என்று அசோக் எப்போதோ அவன் அன்னையுடன் பஸ்ஸில் சென்ற அனுபவத்தை வைத்து சொல்லிட,
"அய் இதுவும் நல்ல ஐடியாவா இருக்கே.. நான் இன்னைக்கு அந்த பாக்ஸ் சாரி பஸ்லேயே வரேன்.. அப்டி எத்தனை பேர தான் ஒரே நேரத்துல ஏத்துவான்னு நானும் உள்ள போய் பாக்குறேன்" என்றவன் லேசான தள்ளாட்டத்துடன்,
"ஆத்வி வேனான்டா" என்று நண்பர்கள் சொல்ல சொல்ல கேளாமல் அவர்களை உதறி விட்டு பஸ்ஸின் பின்னால் ஏறிக் கொண்டான். அவன் பின்னாலே ஓடி வந்த நண்பர்களும் ஏதாவது ஏல்ரையை கூட்டி விடுவானோ என்ற பயத்தில் ஏறிக் கொண்டனர்.
அவர்கள் ஏறும் போது மொத்த சீட்டும் நிரம்பி இருக்கவே உக்கார இடம் இல்லாமல் போக, இவர்கள் நால்வர் மட்டும் நின்று கொண்டு வந்த நிலையில், அடுத்த பேருந்து நிறுத்தத்தில் அந்த பேருந்தே கால் வைத்து நிற்க கூட இடம் இல்லாமல் நிரம்பி விட்டது.
கூட்டத்தில் ஒருவரை ஒருவர் இடித்துக்கொண்டு கசகசவென சட்டை முழுக்க வியர்வையில் நனைந்த நிலையில், ஒரு கம்பியை பிடித்தபடி மூச்சி வாங்க சாய்ந்து நின்ற ஆத்விக்கு அருகில் உள்ள சீட்டில் தான், காதோரம் விழுந்து கண்கள் மேல் அடித்துக் கொண்ட குட்டி குட்டி முடிகளை ஒதுக்கியவாரு கவியும் அமர்ந்திருந்தாள்
கண்டக்டர் நெரிசலையும் மீறி டிக்கெட் எடுத்துக் கொண்டே வந்து கவியிடம் டிக்கெட் கொடுக்க, அவள் பத்து ரூபாய் தாள் ஒன்றை நீட்டி டிக்கெட்டை பெற்று பையில் வைக்கவும், ஒருப்பக்காம சரிய விட்டுருந்த துப்பட்டாவின் நுனி கீழே விழுந்ததில், ஆத்வி காலை மாத்தி வைக்கிறேன் என்று ஷூக் காலில் சிக்கி மெல்ல மெல்ல அவள் தோளில் இருந்து மொத்தமாக சரிந்து விட்டது. அதை நெரிசலின் காரணமாக கவியும் உணராமல் அமர்ந்திருக்க, ஆத்விக்கும் தெரியவில்லை.
அடுத்து கண்டக்டர் ஆத்வி டிக்கெட் கேட்க, "ஒன் மினிட்" என்றவன் பேண்ட் பாக்கெடில் இருந்து தட்டுத் தடுமாறி இரண்டாயிரம் ரூபாய் தாளை எடுத்து நீட்டவும், "ஏப்பா ரெண்டாயரூபா தாள நீட்னா நான் எப்டி சில்ர கொடுக்குறது. பத்து ரூபா சில்ர இல்லையா" என்று சத்தமிட,
"இல்ல இதான் இருக்கு வேணுனா வாங்கு இல்லாட்டி வேலையப் பாத்துட்டு போய்யா" எகத்தாலமாக அவன் கூறவும், அதற்கு கோவமாக கண்டக்டர் வாய் திறக்கும் முன்னே ஐம்பது ரூபாய் தாளை நீட்டிய அசோக்,
"அண்ணா அவன் தெரியாம பேசிட்டான் இந்தாங்க அவனுக்கும் சேத்து இதுல காஸ் இருக்கு" என்றான்.
"காலங்காத்தால எங்கிருந்து வந்து சேருவாங்களோ, பாக்க தான் நல்லா டிப்டாப்பா இருக்கானுங்க ஆனா பச்ச குடிகாரனா இல்ல இருக்கானுங்க" அவன் மீது வந்த மது வாடையை வைத்து புலம்பளோடு மீதம் பத்து ரூபாயை அசோக்கிடம் கொடுத்து விட்டு நெரிசலின் காரணமாக ஆத்வியை இடித்து விட்டு அவர் முன்னேற,
சரியா அந்நேரம் பஸ் எடுக்கவும் லேசாக கம்பியை பிடித்து நின்றிருந்தவன் நிலை தடுமாறி பிடிமானமாக அவன் அருகில் அமர்ந்திருந்த கவியின் தோள்ப்பட்டையில் கை வைக்கப் போக, அந்நேரம் பார்த்து கவி நன்றாக சீட்டின் பின்னால் சாய்ந்து அமரவும், அவன் கை வழுக்கிக் கொண்டு அவள் கழுத்துக்கு கீழ் சென்று பிடிமானமாக பிடித்த இடமோ வேறாக இருந்தது.
புயல் வீசும்.

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 6
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.