- Messages
- 266
- Reaction score
- 215
- Points
- 63
அத்தியாயம் - 6
Icu வார்டில்,
அந்த புது நபர் ரத்தம் கொடுத்ததன் மூலம், அரவிந்துக்கு நல்ல முறையில் மருத்துவர்கள் சிகிழ்ச்சையை முடித்து இருந்தனர்..
காலையில் இருந்து பாட்டி எதுவும் சாப்பிட்டு இருக்க மாட்டார், அதுவும் தன்னால் தான், அவரின் பேரனுக்கும் இப்படி ஒரு நிலையில் இருக்கிறார் என்ற குற்ற உணர்வோடு..
அவரிடம் வந்தவள், "பாட்டி நீங்க காலையில் இருந்து எதுவும் சாப்ட்டு இருக்க மாட்டிங்க, நான் போய் உங்களுக்கு ஏதாவது சாப்பிட வாங்கிட்டு வரட்டுமா" என்றாள் பணிவாக.
அவளை நிமிர்ந்து பார்த்த பாட்டி, "இல்ல வேணாம்மா, வயசு பொண்ணு இப்டியே வெளிய போக வேணாம்"
என்றவர்.. அங்கு வேலை செய்யும் ஒரு பணியாளரை அழைக்க..
அவனும் ஓடி வந்து, "என்னம்மா வேணும்.." என்றார்.
"அது தம்பி ஒரு உதவி பண்ணுவிங்களா"
"என்ன பாட்டிமா உதவி, சீக்கிரம் சொல்லுங்க, அடுத்த பேஷண்ட் வரதுக்குள்ள, வார்டுட கிளீன் பண்ணனும்.." அந்த பணியாள் அவசரப் படுத்த,
பாட்டி அவர் இடுப்பில் சொருகி வைத்து இருந்த சிறிய சுருக்கு பையில் அதிலிருந்து சில பணத்தாள்களை எடுத்து, அந்த ஊழியனிடம் கொடுத்தவராக,
"தம்பி கோச்சிக்காம ஒரு செட்டு புடவை, ஜாக்கெட், துண்டு, அப்புறம் சாப்பிட ஏதாவது கடைக்கு போய் வாங்கிட்டு வந்து தரியா" என்றதும்,
பாட்டியின் நடக்க முடியாத நிலையை கண்டவனால், அவர் கேட்கும் உதவியை மறுக்க முடியவில்லை என்றாலும், அவன் வார்டை கொடுத்த நேரத்திற்குள் சுத்தம் செய்யவில்லை என்றால், அவனை கண்ணா பின்னாவென, அவன் மேலதிகாரி காய்ச்சி எடுத்துவிடுவாரே என நினைத்து தயங்கி நின்றார்.
பாட்டி சொல்வதும் அவளுக்கு சரியாகவே பட்டது. ஏனெனில் அவள் இருக்கும் கோலத்தை பல பேர் பரிதாபமாகவும், பாவமாகவும், பல பேரின் பார்வை அவள் மேல் கண்ட மேனிக்கு படர்வதும் அசவுகரியமாக உணர்ந்து, இருக்கையை விட்டு ஏழாமல் எத்தனை நேரம் ஒடுங்கி போய் இருப்பது என நினைத்து அமைதியாக இருந்தாள்.
அந்த பணியாளின் எண்ணம் புரிந்தவள், "அண்ணா எந்த வார்டுனு சொல்லுங்க, நீங்க போய்ட்டு வரதுக்குள்ள நான் ரெடி பண்ணி வைக்கிறேன்"
என்றதும் இவளுக்கு தான் உடை கேட்கிறார் போல, ஏதோ பிரச்சனை நடந்து இருக்கும் என நினைத்து,
"அதெல்லாம் வேணாம்மா நானே வந்து பாத்துக்குறேன்" என்றபடி வேகமாக சென்றார் அருகில் உள்ள துணிக் கடை நோக்கி.
அவர் வருவதற்குள் அரவிந்த் கண் விழித்து விட்டான் என்று செவிலிப் பெண் வந்து சொல்லி செல்ல , அப்போது தான் அந்த பெண்ணுக்கு நிம்மதியாக இருந்தது..
உடனே பாட்டி இருந்த வீல் சேரை தள்ளிக் கொண்டு அரவிந்த் இருக்கும் வார்டுக்கு சென்றாள்.
கண் விழித்து ஒருக்கலித்து படுத்து, எதையோ வெறித்த வன்னம், காலையில் நடந்தவற்றை எல்லாம் நினைத்து பார்த்து கொண்டு இருந்தவன், அந்த பெண்ணுக்கு தாலி கட்டியதன் பின் நடந்த அனைத்தையும் நினைவு கூர்ந்து, ஒரு முடிவு எடுத்தவனாக படுத்து இருந்தான் அரவிந்த்.
அந்நேரம் உள்ளே வந்தாள் பாட்டியுடன்.. அதே பாவாடை அவன் சட்டை, மேல் மட்டும் பாட்டியின் சால்வையை போர்த்தி ஒரு கையால் அதனை இறுக பிடித்துக் கொண்டு, காலையில் பார்த்த மாதிரி அல்லாமல் மொத்தமாக சோர்ந்து போய், அழுததில் மூக்கு நன்றாக சிவந்து, கண்கள் வீங்கி காட்சியளித்தவளை பார்த்தவனுக்கு பாவமாக தான் இருந்தது.. இருந்தும் அவனால் எப்படி தன் மனைவியாக அவளை ஏற்றுக் கொண்டு வாழ முடியும் என நினைத்தவன்.. ஏதோ பேச வாயெடுக்க,
அவன் எண்ணம் புரிந்த பாட்டி, அவனை பேச விடாமல் தடுத்தவராக, "கண்ணா.. இப்ப உடம்புக்கு எப்டி இருக்கு, வலி இருக்கா" என்றார் தவிப்பாக.
அதில் பாட்டியை கண்டவன் பிறகு பேசிக்கொள்ளலாம் என நினைத்தானோ!, "ஹ்ம்.. இப்ப ஓகே பாட்டி", என்றான்.
"சரிப்பா, அப்ப நீ கொஞ்ச நேரம் படுத்து ஓய்வு எடு, அப்ப தான் வலி சரியாகும்" என்றிட..
"சரி பாட்டி,," என்றவன் கண்களோ, அவன் உடலையே தவிப்பாக பார்த்துக் கொண்டு இருந்தவள் மீது தான் இருந்தது..
அப்போது கதவை தட்டிக் கொண்டு கடைக்கு போன பணியாள் வந்து, அந்த பெண்ணிடம் சில கவர்களை கொடுத்து உணவு பொட்டலத்தையும் சேர்த்தே கொடுத்து விட்டு.. பாட்டியிடம் பொருட்கள் வாங்கிய மீதி பணத்தை கொடுக்க...
அதை வாங்க மறுத்த பாட்டி, "நீ உன் வேலைய விட்டு எங்களுக்காக செஞ்சாதே பெருசுப்பா, இத நீயே வச்சிக்கோ" என்றார் சிறு புன்னகையோடு.
அவரும் அவன் வீட்டு சூழலை கருத்தில் கொண்டு, அந்த பணத்தை சட்டை பையில் வைத்துக் கொண்டு சென்று விட்டார்..
"அம்மாடி, இங்க பாத்ரூம் இருக்கு, நீ அங்க போய் துணி மாத்திட்டு வாம்மா" பரிவாக சொல்ல..
பாட்டி சொன்னதை கேட்டாலும், "இவர் ஏதாவது சொல்லுவாரோ" என தயக்கமாக நினைத்து பெட்டில் படுத்து இருந்த அரவிந்தை அவள் பார்க்க.. அவள் தயக்கம் எதற்கென கண்டுகொண்டவன்.. உடனே கண் மூடி தூங்குவதை போல் பாவ்லா செய்தான்..
அப்பாடா என பெருமூச்சு விட்டவள், வேகமாக சென்றாள் பாத்ரூம் நோக்கி.. அவள் சென்று விட்டாள் என அவள் நடந்து செல்லும் போது அவளின் காலில் அணிந்து இருந்த மெல்லிய கொலுசொலி சத்தம் காட்டி கொடுத்து விட.. அதில் உதட்டுக்கு வலிக்காத வாறு ஒரு புன்னகை சிந்தி வெறுமுனே கண் மூடி படுத்து இருந்தான்.
பத்து நிமிடத்தில், அழகான ஊதா நிற மெல்லிய காட்டன் புடவை கட்டி, அதே நிறத்தில் ரெடிமேட் ப்ளௌஸ் போட்டு,..அவள் அணிந்து இருந்த நகையில், காதில் உள்ள கம்மல், அந்த நகைகளுடனே அணிந்து இருந்த மெல்லிய தங்க சங்கிலி, கொலுசை மட்டும் விட்டு,, மீதி எல்லாம் கழட்டி கவரில் வைத்து கொண்டாள்.
உச்சியில் சிறிய கொண்டையிட்டு இறுக பின்னி தலையில் வாடி போன மலர்களுடன், மழையில் நனைந்ததில் சொதசொதவென இருந்த முடியை மொத்தமாக கலைத்தவள், துண்டை எடுத்து தலையில் சுற்றியபடி, அரவிந்த் அவள் கழுத்தில் கட்டிய பொன் தாலி மார்பில் உரிமையாக உரசி பலபலக்க, வெளியே வந்தாள்.
இப்படி அவளை பார்த்த பாட்டி, வாயில் கை வைத்து ஆச்சிரியமாக பார்த்து வைக்க,
நடந்து வரும் கொலுசொலியில் வெடுக்கென கண் திறந்து அவளை பார்த்த அரவிந்த்,
சாதாரணமான காட்டான் புடவையில் சிறிதும் ஒப்பனை இன்றி, ஈரத்தலையில் துண்டு கட்டி, அவன் கட்டிய மஞ்சள் தாலி மின்ன, இப்போது அத்தனை சோர்வாக பார்த்தவளா இவள் எனும் அளவுக்கு, ஊட்டி ஆப்பில் போல பிரெஷாக நடந்து வந்தவளை, இமைக்க மறந்து பார்த்துக் கொண்டே இருந்தான்..
நேராக பாட்டியிடம் வந்தவள், மண்டியிட்டு அமர்ந்து, அவர் கைகளை பிடித்துக் கொண்டு கண் கலங்கியவளாக, "பாட்டி, எனக்கு நீங்களும் உங்க பேரனும் ரொம்ப பெரிய உதவி செஞ்சி, என் மானத்தையும், உயிரையும் காப்பாத்தி கொடுத்து இருக்கீங்க, இதுக்கு நான் என்ன கைமாறு செய்யப் போறேன்னு தெரியல.. ரொம்ப நன்றி பாட்டி" என கூறியவள் கலங்கிய கண்ணில் இருந்து, நீர் கொட்டியது.
மழை..

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 6
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.