Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Administrator
Staff member
Messages
278
Reaction score
215
Points
63
அத்தியாயம் - 62

அந்தி மாலை வேளையில் பறவைகள் கூட்டம் கீச்.. கீச்.. சத்தமெழுப்பிக் கொண்டு தன் கூண்டுகளுக்கு செல்லும் அழகிய காட்சிகளை ரசித்தபடி தேநீரை ருசித்து நின்ற கவிக்கு, எப்போதடா தங்களின் குடும்பத்தை சென்று பார்ப்போம் என்றிருந்தது. அதிலும் ஸ்வாதிக்கு திருமணம் வேறு வைத்திருக்கும் நிலையில் அவளோடு இருக்கவே ஏங்கியது மனம்.

காலையில் அலுவலகம் செல்லும் போது, அவளை முத்தத்தில் குளிப்பாட்டி அவனும் அவள் இதழ் எச்சிலில் நனைந்தவனாக, 'மாலை இருட்டுவதற்குள் விரைவில் வந்து விடுகிறேன்' என சொல்லி சென்ற கணவன், வீடு வர தாமதம் ஆகவே தனிமையில் புழுங்கிப் போனாள்.

பெரிதாக வீட்டில் எந்த வேலையும் இல்லை, கணவனிடம் செல்லம் கொஞ்சி அவன் மடியில் குழந்தையாகி போவதை தவிர. சலைக்காமல் கொஞ்சுவான், சில நேரம் மிஞ்சுவான், அதில் சுகமாக அஞ்சுவாள் பேதை.

சிறுவயதில் அவள் தொலைத்த அனைத்து உறவுகளின் பாசத்தையும், அல்ல அல்ல குறையாத அட்சயப் பாத்திரமாக அன்பை வாரி இறைப்பவன், அவள் சில நேரங்களில் கிறுக்காகும் போது கண்டிக்கவும் தவறியதில்லை. நிறைய நிறைய கதைகள் மனம் திறந்து பேசுகையில் இருக்கரமும் கோர்த்து, கோர்த்த கரங்களில் இருவரும் மாறி மாறி முத்தமிட்ட படியே கதைகள் தொடரும்.

கானக்குயிலின் ராகமும் கையில் இருந்த தேநீரின் தித்திப்பு சுவையும் இனிமையான நினைவை உண்டு செய்ய, கணவனின் வரவிர்க்காக காத்திருந்த பூவைக்கோ, நேரம் செல்ல செல்ல வெட்கம் பிடுங்கியது. இப்போதெல்லாம் தித்திப்பை சுவைத்தாலோ நினைத்தாலோ, கணவனுடனான காதலுடன் கூடிய அழகிய இரவுகள் தான் நினைவில் வந்து, இனிப்பான இம்சை செய்கிறது.

பெண்ணெறும்பு இனிப்பை விரும்பி உண்ணுவதை நன்கு அறிந்து வைத்திருந்த குறும்புக்காரனோ, தினம் வகைவகையான இனிப்புகளை வாங்கி வந்து அவளை உண்ண வைத்து, இனிப்பானவளையும் விதவிதமாக ரசித்து சுவைத்து விழுங்குகிறான் கட்டெறும்பு கண்ணன்.

'நேற்று ரசகுல்லா வாங்கி வந்து பந்தாக தன்னை சுருட்டிக் கொண்டான், இன்று என்ன இனிப்பு வாங்கி வந்து எந்த இடத்தில் எறும்பாக கடிப்பானோ' என நினைத்து நாணப் பூக்கள் மலர, தன்னவன் நினைப்போடே கீழே வந்த கவி,

"வள்ளி அக்கா நைட் சாப்பிட என்ன பண்றீங்க.." என்றபடி உரிமையாக அவர் தோளில் தொங்கினாள்.

"அதுவா பாப்பா, தம்பிக்கு புடிச்ச நெய் தோசையும் கோழி குழம்பும் இருக்கு, உனக்கு நெய் தோசையும் காய்கறி குருமாவும் வச்சிருக்கேன்..." என்றதும் முகம் சுருங்கிய கவி,

"அதென்ன அவர்க்கு கோழி குழம்பு, எனக்கு மட்டும் காய்கறி குருமா.."

"தம்பி தாம்மா ஒனக்கு ஏதோ புறாட்டின்னோ புரோட்டாவோ ஏதேதோ சத்து இல்லைனு காய்கறிலே விதவிதமா சமைச்சி தர சொல்லுச்சி.." என்றவரை கண்டு புரியாமல் விழித்தவள் பின் புரிந்தவளாக,

"அது புறாவும் இல்ல புரோட்டாவும் இல்ல, ப்ரோட்டின் அக்கா.." என நமட்டுப் புன்னகை சிந்த,

"அது என்னவோ பாப்பா நமக்கு இந்த இங்குலுடீஸு எல்லாம் வாயில நுழையாது..

கோழிக்கறி சூடு, பயணம் போகும் போது ஒனக்கு கொடுக்க கூடாதுனு தம்பி கண்டிப்பா சொல்லிடுச்சி கண்ணு.. அதனால நீ இதை தான் சாப்பிடணும்.." என்றார் ஆத்வி கூறியதை அப்படியே பிசுருதட்டாமல்.

"மச்.. போங்க க்கா.. எனக்கு நைட் சாப்பாடே வேண்டா.. கோழி என்ன ஆடு மாடு பன்னி இப்டி எல்லாத்தையும் செஞ்சி அவருக்கே கொடுங்க.. எனக்கும் கோழி குழம்பு கொடுக்குற மாறினா சாப்பிடுறேன் இல்லனா வேணா.." முகத்தை தூக்கி வைத்தவளுக்கு கறிக்குழம்பு வாசத்தில் பசி கமகமவென எடுத்துக் கொண்டது.

"நான் போறேன், எனக்கு வேணா.. வேணா.." என்றாலும் நாக்கை சப்புக் கொட்டி இழுத்தபடி, அந்த இடத்தை விட்டு அசைந்தாள் இல்லை.

இவள் செய்யும் லூட்டியை கண்டு, அறையில் இருந்தபடியே ஒருத்தி வயிறு எரிந்தாள் என்றால், வேலை விட்டு வந்த ஆத்வி, கதவில் சாய்ந்து கைக்கட்டி நின்று அவளையே முறைப்பதை அறியாத கவியின் பார்வை, அடுப்பின் மேல் சுட சுட இருந்த குழம்பின் மீது ஏக்கமாய் வட்டமிட்டது.

ஆத்வியை பார்த்து விட்ட வள்ளியோ நைசாக இடத்தை காலி செய்ததை கவனிக்காத கவி, "சரி உங்களுக்கும் வேணா எனக்கு வேணா, மாமா வேற இன்னும் வரல அதனால, ஒரே ஒரு தோசைல மட்டும் கொஞ்சோண்டு கறி வச்சி கொடுங்க, கடகடன்னு சாப்ட்டு வாய கழுவிடறேன் என்ன சொல்றீங்க..?" உற்சாமாக பேசிக் கொண்டே திரும்பியவள், முறைப்பாக நின்றிருந்த கணவனை கண்டு அபக்கென வாய் மூடிக் கொண்டாள்.

"ப்ளான் எல்லாம் ரொம்ப பயங்கரமா போடுற, எப்டி எப்டி நான் வர்றதுக்குள்ள மேடம் வாய கழுவிப்பீங்களா.. ப்பா.. மாஸ்டர் மைண்ட் டி உனக்கு.." நக்கலடித்தவனை மூக்கு சிவக்க முறைத்த கவி,

'நீங்க வாங்கிட்டு வர ஸ்வீட் சாப்ட்டா மட்டும், எனக்கு அப்டியே ப்ரோட்டின் வைட்டமின் எல்லாம் சரசரன்னு வந்திடுமாக்கும், இந்த கறி சாப்ட்டா குறைஞ்சி போறதுக்கு.. நீங்களே எல்லாத்தையும் சாப்டுங்க ம்க்கும்.. " என முறுக்கிச் செல்லும் மனைவியைக் கண்டு ஆயாசமா பெருமூச்சு விட்ட ஆத்வி,

"சிறு துண்டு ஸ்வீட்டும் பல துண்டுகள் கறியும் ஒன்னா.. ப்ரோட்டின் வைட்டமின் ஏறுதோ இல்லையோ நல்லா கொழுப்பு மட்டும் கூடி போச்சி டி, அதுவும் அங்கே மட்டும்.." குறிப்பாக அந்த இடத்தை நினைத்த போதே தலையில் தட்டி வெட்கம் மறைத்தான் ஆடவன்.

உஷ்ன உடல் அவளுடையது. அடிக்கடி அடம் செய்து ஹோட்டல் அழைத்து செல்லக் கோரி, கண்டதையும் உண்டு சூட்டினால் சிறுநீர் கழிக்கக் கூட அவதிபடுவதை உடன் இருந்து பார்த்து கலங்கிப் போன ஆத்வி, சிறிது நாட்களாகவே கவியின் உணவு பழக்க வழக்கத்தை மாற்றி, கீரை முட்டை காய்கறி பழங்கள் அவ்வப்போது மீன் ஆட்டுஈரல், சுவரொட்டி, சூப் என்று உடலுக்கு குளுமையான சத்தனான உணவுகளை மட்டுமே கொடுக்க சொல்லி விட்டான் வள்ளியிடம்.

ஆத்வியும் அவளுக்காக அதையே உண்டு வருவதை ஒவ்வொரு நாளும் பார்க்கும் வள்ளி தான், எப்போதும் அசைவம் சாப்பிடுபவன் சைவ உணவை பிடிக்காமல் உண்ணுகிறானோ என்ற கவலையில், ஊருக்கு வேறு செல்லப் போகிறானே என நினைத்து தான் அவனுக்கு பிடித்த கறிக்குழம்பு வைத்தது. அதற்கே அத்தனை அக்கப்போரு செய்து மூக்கு வியர்த்து ஓடிவிட்டாளே, அவன் வம்புபிடித்த மனையால்.

கவி சென்ற திசையைப் பார்த்தவனோ, உணவு விடயத்தில் மட்டும் அவளுக்கு விட்டுக் கொடுப்பதாய் இல்லை. பார்க்கும் உணவு பொருளை எல்லாம் ருசிக்க நினைக்கிறாள், சத்தனான உணவுகளை தவிர. தொடக்கத்தில் அவள் உடல்நிலை அறியாமல் கவி கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்து விட்டான். மாதவிடாயின் போது தான் அது எத்தனை பெரிய தவறு என்றே புரிய வந்தது.

துடித்து விடுகிறாள் அந்நேரத்தில் வலி தாங்காமல். கூடவே ஜன்னி வைப்பது போன்று காய்ச்சலும் வந்து விட்ட நிலையில், பயந்து போய் மருத்துவமனை தூக்கி சென்றவனுக்கு பலத்த அறிவுரைகள் நடத்தினார் மருத்துவர்.

"கல்யாணம் ஆன பொண்ணு மாதிரியா இருக்காங்க, சின்ன பிள்ளைக்கு உள்ள சாதாரண ஊட்ட சத்துக் கூட அவங்க உடம்புல இல்ல சார், இப்டி இருந்தா எப்டி..

அதிக ஹீட்டான உணவுகளை கொடுக்கவே கொடுக்காதீங்க, ஆயில் ஃபுட் சுத்தமா அவாய்ட் பண்ணுங்க.. வெளிய சாப்பாடு வாங்கி கொடுக்காதீங்க.. தினமும் ஒரு அரைமணி நேரம் வாக்கிங் இல்ல எக்ஸசைஸ் பண்ண வைங்க, அப்போ தான் மாசம் மாசம் இந்த அளவுக்கு வலி வராம தடுக்க முடியும்..

அப்புறம் முக்கியமா ரெண்டு பேரும் கணவன் மனைவியா வாழ தொடங்கி இருப்பீங்க, சில நாட்கள்ல பேபியும் எதிர்பாக்க தொடங்கிடுவீங்க, அதுக்காகவாது அவங்க ஆரோக்கியமா உடம்ப பாத்துக்கணும்..

சாதாரணமா இருக்கவங்களுக்கே டெலிவரி நேரம் சிரமமா இருக்கும், இவங்கள போல பெண்களுக்கு சொல்லவே வேண்டாம் ரொம்பவே கவனம் தேவை.. அதுக்கு நீங்க தான் அவங்கள அக்கறையா கவனிச்சுக்கணும்.." என மேலும் சில விடயங்களை கூறி இருந்தார்.

இப்போதும் மாதவிடாய் வரப் போகும் நேரம், வாயை அடக்க மறுக்கிறாள் கவி. எதை வேண்டாம் என்கிறானோ அதை தான் வேண்டும் என்கிறாள். கண் முழி பிதுங்கிப் போகிறான் ஆத்வி அவளை வைத்துக் கொண்டு.

மலைப்பாக தலையை உளுக்கிக் கொண்டவன், "வர வர ரொம்ப குழந்தையா ஆகிட்டு வராளே, நம்ம தான் ஓவர் செல்லம் கொடுத்துட்டோமோ.." மனதில் நினைத்தபடியே திரும்புகையில் பார்த்து விட்டான், வேவு பார்க்கும் பச்சைக்கிளியை.

கவியை வெறியாக முறைத்து நின்றிருந்த ஹரிதா, பார்க்கவே உடல் சிலிர்த்து பத்திக்க வைக்கும் ஆணழகனாக இருந்த ஆத்வியைக் கண்டதும், பார்வையாலே பிச்சி தின்றவளை கண்டு எரிச்சலாக முகம் சுளித்தவன்,

"ஏய்.. ப்ளடி.." சொடகிட்டு உருமி, 'இங்கே வா' என்பது போல விரலால் சைகை செய்ய, உள்ளே பயந்தாலும் வெளியே காட்டிடாமல்,

"என்ன ஆத்வி.." என்றபடி தைரியமாக தன் முன்பு வந்து நின்றவளையும், ஆறு மாதம் நிறைவடைந்து இருந்த அவள் வயிற்றையும் மாறி மாறி கண்டு, ஓங்கி அவள் கன்னம் அறைய கை ஓங்கிய கரம் அந்திரத்தில் நின்றிட, அடிக்கும் முன்பே அச்சத்தில் கண்களை மூடி இருந்தாள் ஹரிதா.

நொடிகள் கழித்த பின்பே அவன் அடிக்கவில்லை என உணர்ந்து கண் திறந்து பார்த்த நேரம், சப்பென அவள் கன்னம் பழுத்து கபாலம் வரை கலங்கிப் போனது.
கோவத்தில் முகம் துடிக்க அவனை கண்ட ஹரிதா, "ஆத்வி இப்ப எதுக்கு என்ன தேவை இல்லாம அடிச்ச.. உன் வீட்ல உன் சொல்படி அடங்கி இருக்கேன்னு, நீ என்ன பண்ணாலும் பொறுத்துட்டு போக நான் ஒன்னும் உன் வீட்டு வேலைக்காரி இல்ல.."

குரல் உயர்த்தி கத்தியவளை "ஏய்.. என எரிக்கும் விழிகளால் சுட்டெரித்தவன்,
"எங்க நின்னு என்ன பேசிட்டு இருக்க, நியாயமா பாத்தா நீ பண்ண கேவலமான காரியங்களுக்கு எப்போவோ உன்ன கொன்னு போட்டு போயிட்டே இருந்திருக்கணும்.. ஆனா இந்த..." என அவள் வயிற்றுக்கு நேராக விரல் நீட்டி,

"இந்த ஒரு காரணத்துக்காக மட்டும் தான் நீ இப்ப உயிரோட இருக்க, திரும்பத் திரும்ப உன் விசுவாசத்தை என் எதிரிக்கு கட்டலாம்னு நினைச்சி, வீணா செத்து தொலைய்ஞ்சிடாத.. நீ நினைக்கிறது எதுவும் நடக்காது.. அப்புறம் உன் பார்வை என் வைஃப் மேல பட்டுச்சி.." எச்சரிக்கையும் கர்ஜனையுமாக அவள் முகத்துக்கு நேராக விரலை ஆட்டியவன் பார்வையே, மிரள வைத்தது.

ஹரிதா வெறும் கைபாகை. அவளுக்கு ஆத்வி மீது விருப்பம் உள்ளதே தவிர்த்து, அவனையோ அல்லது அவன் வீட்டு ஆட்கலையோ கொல்லும் அளவிற்கெல்லாம் தைரியம் இல்லை. அப்படி நினைத்ததும் இல்லை. பணத்தின் மீது அதிக மோகம் உள்ளது, பணத்திற்கு ஆசைப்பட்டு தான் ரெண்டு திருமணம், லிவ்வின் என்று வாழ்க்கையை வாழத் தெரியாமல் வீணடித்துக் கொண்டாள்.

தீபக் ஆத்வியும் அவன் குடும்பத்தையும் கொல்ல ரத்த வெறியில் காத்திருப்பது, பாவம் ஹரிதாக்கு தெரியாமலே, பணத்தை அவளுக்கு வாரி இறைத்து நிறைய வேலைகளை அவள் மூலமாக வாங்கிக் கொள்கிறான். ஆனால் ஹரிதாக்கு ஆத்வி மீது உண்மையான விருப்பம் உள்ளது என்று தீபக்கு தெரியாதே! அவன் காதலிப்பது போல் நடி என்று அனுப்பி விட்டான், அவள் உண்மையான காதலையே வளர்த்துக் கொண்டாள்.

எப்படியாவது கவியை அவன் வாழ்க்கையை விட்டு ஓட ஓட விரட்டியடித்து விட்டு, அவள் இடத்தில் இவள் ராணியாக வாழ நினைக்கிறாள், பண வசதியோடு சொகுசாக.

ஹரிதாவின் எண்ணம் பலிக்குமா?

முறிக்கி நின்ற கோவக்காரக் கிளியை அல்லேக்காக கையில் அள்ளிய காதல் மணாலனோ, கிளியின் சிவந்த மூக்கில் முத்தமிட்டு செல்லமாக கடித்தவன், மறவாமல் அவள் செவிகருவியை ஆன் செய்த ஆத்வி,

"என்ன டி குட்டிக்குழந்தை மாறி அடம் பண்ற, தன்யா கூட உன் அளவுக்கு பண்ண மாட்டா டி சமத்துகுட்டி.. ஆனா நீ இவ்ளோ கியூட்டா இருந்தா நானும் என்ன தான் டி பண்றது.. முன்ன மாறி கோவப்படக் கூட முடியல டி உம்மேல.. என்ன ரொம்ப வீக் ஆக்குற கவி, இது கொஞ்சம் கூட நல்லா இல்ல.." ஒவ்வொரு பேச்சிக்கும் இடையில், அவள் கன்னம் கண் நெற்றி மூக்கு உதடு என அவன் உதடுகள் மேய்ந்து விட்டது ஆடாக.

கணவனின் உருக வைக்கும் காதல் பேச்சில், ஆத்வி நினைத்தது போலவே அவன் கையில் வசியம் வைத்த மானாக அடங்கி போன கவி,
"கீழ இறக்கி விடு கேடி மாமா.. அடங்காத கை எங்கெங்க போகுது.." அவன் செய்யும் சேட்டையில் கூச்சமாக நெளிய,

"மச்.. நெளியாதே பேபி.. அப்புறம் எது நடந்தாலும் நான் பொறுப்பில்ல.." குறும்புக் கண்ணன் கண்ணடிக்க, வெட்கத்தில் தொய்ந்து அவன் கழுத்தில் தஞ்சம் புகுந்தவள்,

"இப்போல்லாம் உங்க பாசம் என்ன ரொம்ப மூச்சி முட்ட வைக்கிது மாமா.. உங்க கோவத்தை தாங்கிகிட்ட என்னால இவ்ளோ பாசத்தையும் லவ்வையும் ஒரேடியா தாங்க முடியல, இன்ப அவசத்தையா இருக்கு.. கோவம் கூட பெருசா தெரியல ஆனா இந்த அளவுக்கு அதிகமான அன்பு ரொம்பவே என்ன பயம்புருத்துது மாமா..

விபரம் தெரியாத வயசுல குடும்பத்தை இழந்த வேதனை எதுவும் என்ன பெருசா வாட்டல, ஆனா உங்கள பிரிஞ்சா என்னால வாழவே முடியாது மாமா.. அந்த அளவுக்கு என்னை என்னவோ பண்ணி மயக்கி, உங்க கைகுள்ள வச்சிக்கிட்டீங்க என்னையும் என் மனசையும்.. என்னை எப்பவும் கைவிட்டுட மாட்டீங்களே.."

கண்களெல்லாம் கலங்கிய நிலையில் எதையோ மனதில் போட்டு உறுத்தியவளாக கேட்கவும், தன்னவள் தன் மீது வைத்துள்ள அளவற்ற காதலில் மெய்யுருகிய ஆத்வி, அவளின் மனதில் உறுத்தும் கவலை என்ன என்று, நன்கு அறிந்தே வைத்திருந்தான்.

பூமேனியாலை பூபோல மெத்தையில் கிடத்தியவன், "நீ எதை நினைச்சி ஃபீல் பண்றேன்னு எனக்கு நல்லா தெரியும் கவிஇ.. அன்னைக்கு உன்கிட்ட பஸ்ல நடந்துக்கிட்டது ஜஸ்ட் அன் ஆக்சிடென்ட்.. எனக்கே தெரியாம பேலன்ஸ் மிஸ்ஸாகி அப்டி நடந்து போச்சி..

அதன் பிறகு உன்கிட்ட கோவமா இருந்தேன்னா, திரும்பத் திரும்ப நான் சொல்ல வர்றத காதுலே வாங்கிக்காம, என்ன பொறுக்கியாவே ட்ரீட் பண்ண பாரு, ரொம்ப வலிச்சுது டி..

தெரிஞ்சி செய்ற தப்பை விட, தெரியாம செஞ்ச தப்பை சுமக்குறது தான் ரொம்ப பெரிய கொடுமை.. எங்கே உன்ன திரும்ப பாத்தா நீ பேசுற வாய்க்கு, உன்ன வலிக்க வச்சிடுவேனோன்ற பயத்துல தான், உன்ன மொத்தமா அவாய்ட் பண்ண நெனைச்சி, உன் நியாபகமே வராம இருக்கணும்னு அமைதியா கடந்து போனேன்..

ஆனா நீ தேடி வந்து பொருக்கி பட்டம் கட்டி இம்சை பண்ணிட்ட டி.. ப்பா.. வாயா அது.. திறந்தா மூட வைக்கிறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா.. அதான் கிஸ்ஸடிச்சே உன் பேச்சை நிறுத்துவேன்" குறும்பாக சொல்ல, ஆஆ.. என பிளந்த அவ உதட்டில் பச்சக்கென இச்சா வைக்கவும், மிம்சார அதிர்வு பெற்று, சட்டென நகர்ந்து கூச்சத்தை மறைத்த கவி,

"அப்போ நான் தான் உங்கள தப்பா பிரிஞ்சிகிட்டேனா மாமா.." என்றாள் புரியாத கேள்வியுடன்.

சலிப்பாக உதட்டை குவித்து மேல் நோக்கி உஃப்.. என ஊதி தலையை உளுக்கிய ஆத்வி,
"அப்போ என்மேல முழுசா நம்பிக்கை இல்லாமலே உன்ன முழுசா எனக்கு குடுத்துட்டியா கவிஇ.." என்றவனின் மனமோ அடிபட்டு போனது.

அவளின் நம்பிக்கை இல்லாத பேச்சில் ஒவ்வொரு முறையும் அவன் ரண வேதனையை அனுபவித்துக் கொண்டிருப்பதை, அவனோடு வாழ்ந்தும் இன்னும் அறியவில்லையே கவி.

"என் மனசு முழுக்க நிறைஞ்சி இருக்க உங்க மேல உள்ள காதலால, என்ன உங்களுக்கு கொடுத்தேன் மாமா.. ஆனா..." என அவள் இழுத்த இழுப்பில், தேனை சுவைத்த மகிழ்ச்சியான தித்திப்பில் மலர்ந்த முகம், சட்டென பாகற்காய் துண்டை கடித்ததை போன்ற கசப்பில் மூழ்கி, முகம் இறுகிய ஆத்வி,

"அப்போ இன்னும் நான் பொருக்கியாவே தான் உன் மனசுல பதிஞ்சி போய் இருக்கேன், அப்டி தானே டி.." அதுவரைலும் கொஞ்சி கொஞ்சி ஒலித்த குரலில் அத்தனை கோவம் பொங்கி எழுந்தது இப்போது.

பதில் சொல்லத் தெரியாமல் தடுமாறிய கவி, அவன் கோவம் கண்டு அஞ்சியவளாக,

"அ.அது.. வ.வந்து மாமா.." என தொடங்கும் போதே, போதும் என கண்கள் மூடி ஐவிரல் விரிய கை நீட்டி தடுத்தவன்,

"எதையும் பக்குவமா புரிஞ்சிக்க தெரியாத குழந்தை மனசு உள்ளவ நீன்னு, உன்கூட பழக பழக நான் புரிஞ்சிக்கிட்டேன்.. அதேமாறி நீயும் என்னையும் என் கேரக்டரையும் புரிஞ்சிகிட்டு இருப்பேன்னு நெனச்சது என் முட்டாள்த்தனம் தான்.. நம்பிக்கை தானா வரணும் டி, என்னபத்தி பக்கம் பக்கமா லெஸன் எடுத்து இல்ல..

உன்கிட்ட முதல்முறை தெரியாம தவறா நடந்துக்கிட்டு இருந்தாலும், அதன் பிறகு வந்த நாட்கள்ள, நீ முழுசா என்னோட சரிபாதினு என் மனசு உணர்ந்ததால மட்டும் தான், உன்ன நெருங்கி வந்தேனே தவிர, உன்இடத்துல வேற எப்பேர்ப்பட்ட அழகிங்க இருந்திருந்தாலும், ச்சீன்னு கூட சீண்டி இருக்க மாட்டேன் டி.. முதல் முறை என்ன அடிச்சி அவமானப் படுத்தினதுக்கே வாழ்க்கை முழுக்க நரகமா மாத்தி இருந்திருப்பேன்..

ஆனா இந்த இன்னசென்ட் ஃபேஸ்கட்ல விழுந்து தொலைஞ்சி, இப்போ இந்த நிமிஷம் வரை உன்னால நான் தவிச்சிட்டு இருக்கேன் பாரு, எல்லாம் என் தலை விதி.."

அவன் தலையில் அவனே அடித்துக் கொள்வதை கண்டு, "அச்சோ மாமா.." என பதறி கண்ணீரோடு நெருங்கியவளை, எரிக்கும் பார்வையாலே தூர நிறுத்தியவன்,

"என்னதான் எனக்கான காதலை நீ டன்டன்னா அள்ளிக் கொடுத்தாலும், உன்னோட இந்த நம்பிக்கை இல்லாத காதல் குப்பைக்கு சமம் டி.. அப்பேர்ப்பட்ட காதல் எனக்கு வேண்டவே வேண்டா.. கொலைகாண்டுல இருக்கேன் தயவு செஞ்சி என் கண்ணு முன்னாடி வந்திடாத.." ஆக்ரோஷமாக கத்திய ஆத்வி,

"ஒவ்வொரு முறையும் வார்த்தையால கொல்றியே, ஒரு இடத்துல கூட என்ன நீ புரிஞ்சிக்க முயற்சி பண்ணவே இல்லையே டி.." கடைசி வாக்கியத்தில் அவன் கண்கள் கலங்கிப் போக, நொடியும் அங்கு நில்லாது வீட்டை விட்டு வெளியேறி இருந்தான்.

காதல் கணவனின் ஒவ்வொரு வலி நிறைந்த உண்மை பேச்சிலும், இதயத்தில் ரத்தம் சொட்ட நின்றிருந்த கவி, அவனது கடைசி வார்த்தையில் உயிர் வெறுத்து கால்கள் மடங்கி தரையில் விழுந்து கதறி அழுதாள். "ஐயோ.. தப்பு பண்ணிட்டேனே.." என்று தலையில் அடித்துக் கொண்டே.

முழுதாக பல விடயங்கள் தன்னவனை பற்றி தெரியவில்லை என்றாலும், இந்த நொடி எவ்வித காரணங்களுமின்றி முழு நம்பிக்கை அவன் மேல் பிறந்து இருந்தது. தன் கணவன் வேறொரு பெண்ணை நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டான் என்று. காலம் கடந்து வார்த்தைகளை விட்டு மனம் திருந்தி எத்தனை நேரம் அழுதாளோ, சோர்ந்து அங்கேயே உறங்கியும் போனாள் கவி.

கவியின் இத்தகைய நம்பிக்கை, அசைக்க முடியாத நம்பிக்கையாக மாறி கடைசி வரையிலும் நிலைத்திருக்குமா?

பற்றி எரியும் மனதை குளிர்விக்க இலக்கில்லா பயணம் மேற்க்கொண்டவனது மானம் கெட்ட மனமோ, மீண்டும் மீண்டும் அவளையே தேட, நொந்து போனான் ஆத்வி.

"அவதான் உன்ன நம்பளயே டா, அப்புறமும் ஏன் அந்த சோடாபுட்டி ராட்சசியையே நினைக்கிற.. லூசுப் பொண்ணு.. அழகான ராட்சசி.. ஆரம்பத்துல தூர இருந்து பாக்கும்போது கூட அவமேல இருந்த என் கோவம் ரொம்ப நேரம் நீடிச்சி இருந்துச்சி, ஆனா இப்போ அஞ்சி செகண்ட் கூட நீடிக்க மாட்டுது..

அந்த அளவுக்கு அவமேல பைத்தியமா மாத்தி வச்சிருக்கா என்ன.." காரை ஓட்டியபடியே தனியாக புலம்பியவன், ஓரிடத்தில் காரை ஓரம் கட்டியதும் சிகரெட் ஒன்றை எடுத்து பற்ற வைத்தவனாக, சீட்டில் சாய்ந்து கண்மூடியபடி புகையை இழுத்த ஆத்வி,

"போடி நீ நம்பலைனா என்ன, நீயே என்ன புரிஞ்சி நம்புற அளவுக்கு இனிமே நான் நடந்துக்குறேன்.. தெகுட்ட தெகுட்ட உன்ன லவ் டார்ச்சர் பண்ண போறேன் பேபிஇ.. கெட் ரெடி டார்லிங், ஹியர் ஐ அம் கம்மிங்.. இப்பவும் சொல்றேன் ஐ ஹேட் யூ சோ மச்.. உன்ன வாழ்க்கை முழுக்க வெறுப்பேன் டி.." என்றவன் இதழினில் மிளிர்ந்த புன்னகையில் தான் நூறு அர்த்தங்கள்.

வள்ளிக்கு அழைத்து, அவள் விரும்பி கேட்ட கோழிக் குழம்பும் தோசையும் தான் வருவதற்குள்ளாக உண்ண வைத்து விட சொல்லி அழைப்பை துண்டித்தவன், மீண்டும் வீடு நோக்கி காரை திருப்பவும், மின்னல் வேகத்தில் வந்த பெரிய ட்ரக் ஒன்று அவன் காரை இடித்ததில், மரத்தில் மோதிய ஆத்வியின் மகிழுந்து சுக்காக நொறுங்கிவிட்டிருந்தது.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 62
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top