- Messages
- 282
- Reaction score
- 301
- Points
- 63
அத்தியாயம் - 7
நிச்சயமாக இப்படி ஒரு செயலை யாருமே எதிர்பார்திருக்கவில்லை.
கவியின் நிலையோ அதிர்ச்சியிலும் அவமானத்திலும் முகம் கருத்து கண்கள் கலங்கி கோவத்தின் உச்சிக்கே சென்றிருக்க, ஆத்வியின் கரமானது பெண்மையின் அபாயமான மென்மையை அழுத்தமாக பற்றியதில், அவன் கரம் மட்டுமில்லாமல் மொத்த உடலும் சிறு நடுக்கம் பெற்று முகம் முழுக்க வியர்வையில் குளித்து விட்டது.
கவியின் மதி முகத்தை நெருக்கத்தில் பார்த்தபடியே மெதுவாக அவள் கழுத்தின் கீழ் இருந்து கையை எடுப்பதை, பேருந்தில் அவர்களை சுற்றி இருந்த மொத்த கூட்டமும் வாயில் கை வைத்து அதிர்ச்சி மாறாமல் பார்த்திருக்க, நண்பர்கள் மூவரும் அதிர்ச்சியில் வாய் பிளந்து, அடுத்து என்ன நடக்குமோ என்ற பயத்தில் எச்சில் விழுங்கிக் கொண்டனர்.
கன்னம் தாண்டிய கண்ணீரை அழுத்தமாக புறங்கையால் துடைத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் சீட்டை விட்டு எழுந்த கவி,
"நான் எதுவும் செய்யல தெரியாம சாரி.." ஆத்வி வாய் திறக்கும் முன்பே,
"செய்றதையும் செஞ்சிட்டு என்ன டா கதைவிடுற யூஉஉ.. ஸ்கவுன்ரெல்.." ஆவேசமான கவி அவன் கன்னம் கன்னமாக அறைந்திருந்தாள்.
"இதுக்குனே அலையரானுங்க பொறுக்கி பசங்க, மூஞ்சியும் மொகரையும் பாரு.. இவனுக்கு எல்லாம் அக்கா தங்கச்சிங்க இல்ல.. அவளுங்க கிட்ட இல்லாததா இங்க புள்ள கிட்ட இருக்கு,. இன்னும் நல்லா நாலு சாத்து சாத்தும்மா.." கூடி நின்ற பெண்மணிகள் வேறு பொங்கி எழ,
"இந்த மாதிரி பொம்பள பொறுக்கிய எல்லாம் வெறும் அடியோட விடக் கூடாது கைய கால ஒடச்சி காலத்துக்கு வெளிய வராதபடிக்கு உள்ள தள்ளனும்" ஆண்கள் சிலரும் எகிறிக் கொண்டு வர்ற, இதையெல்லாம் கேட்டபடியே கவிக் கொடுக்கும் அறையை வாங்கிய ஆத்விக்கு, தன் கோவம் மொத்தமும் பார்கவி பக்கம் தான் சென்றது.
"எம்மா எம்மா கொஞ்சம் நிறுத்து மா, அவன் மேல எந்த தப்பும் இல்ல.. சட்டுனு பஸ் எடுத்ததும் ஸ்லிப்பாகி அப்டி பண்ணிட்டான் மா.. நீ நினைக்கிற மாதிரி அவன் தப்பானவன் இல்ல, தெரியாம பண்ண தப்புக்கு வேணும்னா நாங்களும் உன்கிட்ட மன்னிப்பு கேக்குறோம், இந்த பிரச்சனைய இதோட விட்ருமா" அசோக் நிதானமாக எடுத்து சொல்ல, அது எதுவும் கவி காதில் தான் விழத் தவறியது.
ஆத்வி வாய் திறந்து பேசும் போதே ஆவேசமாக தலையை திருப்பி எழுந்த வேகத்தில், கவி காதில் இருந்த ஹியரிங் பாட்ஸ் கழன்டு அவள் தோளில் தொங்க, அங்குள்ள யார் குரலும் அவள் காதில் விழாமல் போனது.
போன கண்டக்டர் திரும்ப வந்து அவர் வசனத்தை ஒரு முக்கால் பங்கு பேசி விட்டு, நிறுத்திய பேருந்தில் இருந்து ஆத்வியின் சட்டையை பிடித்திழுத்து வெளியே தள்ளி விட்டவராக, அசோக் பரத் சாதிக் என்று யார் கெஞ்சலும் காதில் வாங்காமல், காவல் நிலையத்துக்கு போன் செய்து காவலரை வரவைத்து பெரிய பிரச்சனையே நடத்தி விட்டார்.
உள்ளே இருந்த கவி கண்ணை துடைக்கும் போது இயர் பாட்ஸ் தன் தோளில் தொங்குவதை கண்டவளாக, அதனை எடுத்து காதில் மாட்டி, அனைவர் காலுக்கடியிலும் மிதிப்பட்டு மண்ணாக கிடந்த துப்பட்டாவை எடுத்துப் போட்டுக்கொண்டு வேகமாக வெளியே வந்தாள்.
விரைப்பாக முகம் இறுகி தன்விளக்கம் கொடுக்காது கடுமையான முகத்தோடு நின்றிருந்த ஆத்வி, தெரியாமல் செய்த தவறுக்காக ஒரு பெண் தன்னை அடித்து இத்தனை பேருக்கு முன்னால் அவமானப் படுத்தி விட்டாளே என்று எண்ணமே உள்ளுக்குள் சீறும் எரிமலையாக கொதித்துக் கொண்டிருக்கும் நிலையில், அவன் சட்டையை பிடித்திழுத்து காவலர் ஒருவர் ஸ்டேஷன் இழுத்து செல்ல முனையும் நேரம்,
"சார் அவன விட்ருங்க" கவியின் குரலில் மொத்த பேரும் ஏன் என்ற கேள்வியோடு அவளை பார்த்தனர்.
"ஏம்மா எல்லாம் உனக்காக தானே பண்றோம் இப்ப வந்து அவன விட சொல்ற" சிலர் கேள்வி எழுப்ப,
"போனா போகுது விட்டு தொலைங்க சார்.. இப்ப இந்த ஆள நீங்க ஸ்டேஷன் கூட்டிட்டு போனா, எல்லாத்துக்கும் நான் தான் வந்து முன்னாடி நிக்கணும்.. இப்ப நான் இருக்க சூழ்நிலைல என்னால எங்கேயும் வந்து சாட்சி சொல்ல முடியாது" என்றவளாக அவர்கள் வாயை அடைத்துவிட்டு, ஆத்வியை கோவம் குறையாமல் பார்த்த கவி வேகமாக அங்கிருந்து சென்று விட்டாள்.
முகம் இறுகிய நிலையில் பற்களை கடித்தபடி அவளை பார்த்து சண்டைக்கு செல்பவன் போல முறைத்து நின்றவனை, "வா ஆத்வி" என்று நண்பர்கள் வலுகட்டாயமாக இழுத்து சென்றனர்.
நடந்த பிரச்சனையால் இன்டெர்வியூ நடக்கவிருந்த நேரம் தவறி போனதில் வாழ்க்கையே வெறுத்துப் போனதை போல் உணர்ந்த கவி, கால் போன போக்கில் நடந்து சென்று சாலையின் ஓரம் உள்ள மரத்துகடியில் போடப்பட்டிருந்த கல்பெஞ்சில் தளர்ந்து அமர்ந்தவளுக்கு, நம்பிக்கையாக இந்த வேலை கிடைக்கும் என்று நினைத்துக் கனவோடு வந்தது எல்லாம் ஏமாற்றமாக முடிந்தது மட்டுமில்லாது, ஆத்வி அவளிடம் நடந்துக் கொண்ட விதமே கண் முன் தோன்றி அவன் கைதொட்ட இடம் மொத்தமும் ஒரு வித பிடிக்காத குறுகுறுப்பை ஏற்படுத்தியது.
எத்தனை நேரம் அந்த கல் பெஞ்சில் அமர்ந்திருந்தாளோ! ஸ்வாதியிடம் இருந்து அழைப்பு வரவே நினைவுலகில் வந்து அழைப்பை ஏற்று காதில் வைத்த கவி, "சொல்லு ஸ்வாதி" என்றாள் சோர்வாக.
"நான் என்ன சொல்றது.. நீ தான் டி சொல்லணும் இன்டெர்வியூல செலக்ட் ஆகிட்டியா, வேலை கிடைச்சிதா" ஸ்வாதி உற்சாகத்தோடு மொழிய.. இந்த பக்கம் கவியின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.
"ஸ்வாதி" என வெம்பலாக உதடு பிதுக்கி அழைத்து பேருந்தில் நடந்த அனைத்தும் சொல்லி முடித்த கவி, "அந்த ராஸ்கலால எல்லாமே போச்சி ஸ்வாதி" என்று அழ, அந்த பக்கம் ஸ்வாதிக்கு முகம் தெரியா ஆத்வி மேல் கோவம் பொங்கியது.
"சரி.. சரி.. கவி அழாத.. நீ முதல்ல ஹாஸ்டல் வா எதுவா இருந்தாலும் அப்புறம் பாத்துக்கலாம்.. இவனுங்கள மாதிரி ஆளுங்கள தெருவுக்கு பத்து இருப்பானுங்க, அவனுங்கள எல்லாம் திருத்த முடியாது.. அதான் நாலு பேர் முன்னாடி அசிங்கப் படுத்திட்டியே அப்புறம் என்ன, இந்த ஒரு அசிங்கம் அவன் சாகுற வரை அவனுக்கு மறக்காது.. நீ கவலை படாத வா" என்று ஆறுதல் கூறி அழைப்பை துண்டித்தாள்.
இங்கோ ஒன்னு ரெண்டு மூணு நாலு என்று கணக்கில்லாமல் மது போத்திலை வாயில் சரித்துக் கொண்டிருந்த ஆத்விக்கு, கவி தன்னை அசிங்கப்படுத்தி அடித்த நினைப்பே திரும்ப திரும்ப நிழற்படமாக தோன்றி அவளை கொல்லும் வெறிக்குக் கொண்டு சென்றது.
"விட மாட்டேன் டி உன்ன, நீ கொடுத்த அவமானம் நான் சாகுற வரைக்கும் மறையாது மறக்காது. அத்தனை பேர் பாக்க இந்த ஆத்வி மேல கைய வச்சதுக்கு நீ காலம் முழுக்க அழற மாதிரி நான் செய்யல நான் ஆத்விக் இல்ல டி.." நண்பர்கள் தடுக்க தடுக்க கேளாமல், உயர்ரக பாரில் குடித்து புலம்பிக் கொண்டிருந்தவன் அருகில் மூவரும் கன்னத்தில் கை வைத்து பாவமாக அமர்ந்திருந்தனர்.
பேருந்து நிலையத்தில் இருந்து நேராக பாருக்கு வந்தவன் தான். வீட்டில் இருந்து மித்ரா தொடர்ந்து ஆத்வி எண்ணுக்கு அழைத்துக் கொண்டே இருக்க, கவி மீதுள்ள வெறுப்பில் பாக்கெட்டில் இருந்த அலைபேசியை எடுத்து சுவற்றில் ஓங்கி அடித்து உடைத்து, வெறியாக மது போத்திலை வாயில் சரிய விட்டவன் தான். நன்றாக போதை ஏறி அங்கேயே
"உன்ன விட மாட்டேன் டி, காலம் முழுக்க நீ நெனச்சி நெனச்சி அழற மாதிரி உனக்கு நான் தண்டனை கொடுத்தே தீருவேன்" என்ற புலம்பல் மட்டும் நின்றிருக்கவில்லை.
"ம்மா.. ஏன் இவ்ளோ டென்ஷனா இருக்கீங்க, யாருக்கு ரொம்ப நேரமா போன் போறீங்க" தன்யாக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்த ஆரு கேட்க,
"ஆத்விக்கு தான் ஆரு, காலைல வெளிய போனான் இன்னும் வீட்டுக்கு வரல.. முதல்ல போன் போடும் போது ரிங் போச்சி இப்ப அது கூட போகல" என்றாள் கவலையாக.
"அதுக்கு ஏம்மா இவ்ளோ ஃபீல் பண்றீங்க.. அவன், அவனோட பிரண்ட்ஸ் கூட எங்காவது போயிருப்பான், இல்ல ஏதாவது வேலையாக் கூட போய் இருப்பான்" என்றாள் ஆறுதல் படுத்தும் விதமாக.
"அப்டி உன் தொம்பிக்கு என்ன வெட்டி முறிக்கிற வேலை இருக்கு.. உங்கப்பா பிசினஸ கைல எடுத்துட்டானா" அப்போது தான் அலுவலகம் விட்டு வந்த அஜய் நக்கலாக கேட்டு அமர்ந்தான்.
அவனை முறைத்த ஆரு "நீங்க என்னத்த முறுச்சிட்டு ஆபிஸ் விட்டு இவ்ளோ லேட்டா வரீங்க" அவள் சந்தேகமாக புருவம் உயர்த்தவும், திருட்டு முழி முழித்த அஜய், தான் திருட்டு தம் அடித்து வந்து இருக்கிறானே!
"நீங்க ஏதோ சீரியஸான டிஸ்க்கஷன்ல இருந்தீங்க போல, நீங்க கண்டினியூ பண்ணுங்க நான் போய் குளிச்சிட்டு வரேன்" என்றவன் அமர்ந்த வேகத்தில் எழுந்து ஓடியே விட்டான்.
அதை கண்டு இருவரும் சிரித்தாளும், மித்ரா முகம் சோர்ந்து இருப்பதை கண்ட ஆரு, "ம்மா.. ஆத்வி வந்துடுவான்ம்மா ஏன் இவ்ளோ கவலையா இருக்க" என்றாள்.
"இல்ல ஆருமா, ஏன்னு தெரியல இன்னைக்கெல்லாம் ஒரே பதட்டமா மனசுக்கு கஷ்டமா இருக்க மாதிரியே தோணுது.. ஆத்விக்கு ஏதாவது பிரச்சனையா இருக்குமோ, பாவம் புள்ள என்ன பண்றான்னு தெரியல.. அவன் குரலயாவது ஒருமுறை கேட்டுட்டா போதும்னு இருக்கு ஆரு" என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, தரை அதிர தடக் தடக் ஷூ சத்தம் எழுப்பியபடி மனைவியை முறைத்த வண்ணமே உள்ளே வந்த ஆதியை கண்டதும் வாய் மூடிக் கொண்டாள்.
"அப்பா, என்ன இன்னைக்கு சீக்கிரமா ஆபிஸ் விட்டு வந்துடீங்க"
மித்ராவை முறைப்பதை சற்று நிறுத்தி மகள் பக்கம் பார்வையை செலுத்திய ஆதி, "எல்லாம் காரணமா தான்.. ஆமா எங்க அவன்" என்றான் ஆத்வியை கேட்டு.
"அவன் இன்னும் வீட்டுக்கு வரல ப்பா, ஆத்விய நெனச்சி தான் அம்மாவும் ஃபீல் பண்ணிட்டு இருக்காங்க" என்றாள் வருத்தமாக.
ஓஹ்.. என்று ராகம் இழுத்த ஆதி மித்ராவை பார்த்தவனாக, "அவன் இன்னைக்கு வீட்டுக்கு வர மாட்டான், ஐயா செம்ம பிஸியான வேலைல இருக்காரு.. காலைல வருவான் போ போய் சாப்பாடு எடுத்து வை" என்றான் மனைவி மீது அழுத்தமான பார்வை வீசி.
அவன் பார்வையில் மிரண்ட மித்ரா, ஆரு இருப்பதால் எதுவும் பேசி கணவனின் கோபத்தை கிளப்பாமல், அமைதியாக உணவை எடுத்து வைத்தாள்.
புயல் வீசும்.

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 7
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.