அத்தியாயம் 11
காலை சூரியனின் கதிர்கள் இதமாக முகத்தில் பட கண்களை திறந்தான் ருத்ரதேவன். அவன் கண்டதோ இரவு நடந்த காமனின் காதல் ஆட்டத்தில் சோர்ந்து ஒரே போர்வையில் அவன் மார்பை மஞ்சமக்கி உறங்கும் அவன் காதல் மனைவி ரதியை தான். அவள் உதட்டில் மென்மையாக முத்தமிட்டு அவள் உறக்கம் கலையா வண்ணம் தலையணையில் அவளை படுக்க வைத்து சென்றான்.
முதலில் குளித்து விட்டு சமையல் வேலை எல்லாம் முடித்த தேவ் ரதியை சென்று எழுப்பினான். அவளோ நைட் எல்லாம் நீ தூங்கவே விடல தேவ் கண்ணனெல்லாம் எரியுது ப்ளீஸ் கொஞ்ச நேரம் தூங்குறேன் தேவ் மாமா என அவள் சீணுங்கி கொண்டே கூறி அவன் மடியில் படுத்து விட்ட தூக்கத்தை தொர்ந்தாள். அவனும் அவளை போர்வையோடு தூக்கி சென்று குளியல் அறையில் விட்டு தண்ணீரை அவள் முகத்தில் ஊற்றினான்.
அதில் உறக்கம் கலைந்து எழுந்த ரதியோ தேவ்வை முறைத்து பார்த்து ஷாவரை திறந்து தண்ணீர் அபிஷேகம் செய்தாள். அவனின் பார்வையோ நனைந்த அவள் ஈர உதடுகளின் மேல் தான் அதனை உணர்ந்த ரதி அவனை வெளியே தள்ள முயற்சிக்க சட்டென தேவ்ஓ அவள் இதழை சிறை செய்து கதவை காலால் சத்திவிட்டு அங்கு ஒரு அழகிய கூடலை முடித்த பின் அவளோடு சேர்த்து மீண்டும் ஒரு முறை குளித்து விட்டு ஒரு மணிநேரம் கழித்து தான் வெளியே வந்தான்.
அவர்களின் காதலும் வளர்பிறை நிலவு போல நிதமும் வளர்ந்தது. நாட்கள் எல்லாம் நிமிடங்கள் போல் கரைய இருவரும் செல்ல தீண்டல்கள் சின்ன சின்ன அணைப்புகள், அவசர இதழ் முத்தங்கள், வார விடுமுறை போல ஊடலும் கூடலும் காதலும் என நாட்கள் அழகாக சென்றது.. ❤️
நான்கு மாதங்கள் கழித்து....
தேவ் ரதியுடன் சென்னை செல்ல முடிவெடுத்து அங்கே ரெண்டு மூன்று கம்பெனிகளில் வேலைக்கு விண்ணப்பித்து இருந்தான். இன்று ஞாயிறுக்கிழமை அதனால் இருவரும் வீட்டில் தான் இருந்தனர். அப்போது அழைப்புமணி சத்தம் கேக்க தேவ் கதவை திறந்தான். அங்கே ஒரு இளம் பெண் ருத்ர என்ற அழைப்போடு அவனை கட்டி கொண்டாள்.
அவனோ தீ பட்டது போல பூஜா தள்ளி நின்னு பேசு என கூறி அவளை விலக்கினான். அவள் பின்னே நீலவேணி அவள் மகள் மணிமேகலை மருமகன் விஜயரங்கன் ஆகியோர் வந்து இருந்தனர். ரதி வந்த அனைவரையும் வரவேற்று குடிக்க காப்பி கலந்து கொடுத்தாள்.
அங்கே ஒரு வித அமைதி தொடர நீலவேணி பேச ஆரம்பித்தார். நீங்க ரெண்டு பேரும் என்னை மன்னிச்சிருங்க அன்னைக்கி நான் எதோ புத்தி கேட்டுப்போய் அப்படி பேசிட்டேன் என கூற ரதியோ ஐயோ அம்மா வயசுல பெரியவங்க நீங்க எதோ கோவத்துல பேசிட்டிங்க அதுக்கு ஏன் மன்னிப்பு கேக்குறீங்க என கூற
உடனே நீலவேணி அப்ப நீயும் அவனும் பழச எல்லாம் மறந்து நாளைக்கி பூஜாக்கு நிச்சயம் வைச்சு இருக்கோம் கண்டிப்பா வந்து ரெண்டு நாள் தங்கிட்டு தான் போகணும் சரியா என கூற ரதியும் அவர்களிடம் கண்டிப்பாக வருவோம் என கூறி மாலை போல அவர்களை வழி அனுப்பிவைத்தாள்.
ரதியும் தேவ்வை கெஞ்சி கொஞ்சி அவனை சம்மதிக்க வைத்து நிச்சயதார்த்த விழாவிற்கு அழைத்து சென்றாள். அங்கே விழா நல்லபடியாக முடிய மணிமேகலை வீட்டில் இருவரும் இரண்டு நாட்கள் தங்கி இருந்தனர்.
முதல் நாள் அனைவரும் ரதியை நன்றாக தான் பார்த்து கொண்டனர். அன்று இரவு ரதி அவள் கர்பமாக இருப்பதாக தேவ் விடம் கூறினாள். அவனோ அதீத சந்தோஷத்தில் அவள் முன் மண்டியிட்டு அவள் மணிவயிரில் உள்ள குழந்தைக்கு முத்தமிட்டான். அவன் கண்ணின் ஓரம் ஆனந்த கண்ணீர் வழிந்தது.அவளும் அவனை அணைத்து கொண்டாள். இருவரும் அந்த ஆனந்த மோன நிலையில் தான் இருந்தனர்.
மறுநாள் காலையே தேவ் அவசர வேலை விஷயமாக சென்னை சென்று விட்டான். போகும் முன் ரதியிடம் எந்த கனமான பொருளையும் தூக்காத எந்த சேட்டையும் பண்ணாம குழந்தையை பத்திரமா பாத்துக்கோ அம்மு பாப்பா என கூற
அவளோ ஐ மிஸ் யூ தேவ் மாமா... என்றாள் அவனும் ஐ மிஸ் யூ அம்மு என கூறி அவள் இதழில் ஆழமாக இதழ் பதித்து விடைபெறு சென்றான்.
அவன் கிளம்பியது முதல் அந்த வீட்டில் உள்ள வேலைகளை எல்லாம் ரதியின் தலையில் கட்டிவிட்டு சொகுசாக வளம் வந்தனர் மணிமேகலையும் நீலவேணியும். அந்த இரண்டு நாட்களாக பகல் முதுவதும் வேலையும் இரவில் தேவ்வின் பிரிவும் அவளை வாட்டி எடுத்தது. மூன்றாம் நாள் அதிகாலை போல தான் தேவ் வீடு வந்தான்.
அவன் வரும் போது ரதி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். அவனும் அவளை அணைத்து கொண்டு உறங்கினான்.
காலை நீலவேணி அனைவருக்கும் சத்து கஞ்சி என கூறி ஒரு பானத்தை தர ரதி அதன் சுவை பிடிக்காமல் பாதி மட்டுமே குடித்தால். குடித்த ஒரு மணிநேரம் கழித்து வயிறு வலியில் அவள் துடிக்க அவளை மருத்துவமனை அழைத்து சென்றான் தேவ்.
அங்கே மருத்துவர் தேவ்யிடம் உங்க மனைவிக்கு குழந்தை கலைந்து விட்டது என கூற அவனுக்கு உலகம் காலில் நழுவி கீழே விழுந்தது போல இருந்தது.
நேராக சென்று ரதியிடம் கோபமாக ஏன் என்ன ஏமாத்துன உன்ன எவளோ நம்புன நான் பாப்பா பாப்பானு நீ சொன்ன எல்லாம் செஞ்சேன் ஆனா நீ ஏன் குழந்தைய கொன்னுட்ட ஏன் இப்படி பண்ண சொல்லுடி என அவன் கோபமாக கத்த அவள் தேவ் மாமா அது.....என அவள் கூறுவதற்கு முன் இனி அப்படி நீ என்ன கூப்பிடாத நீ இனிமே என் மூஞ்சிலேயே முழிக்காத உன்ன பார்த்தாலே என் குழந்தை நியாபகம் தான் வருது நீ என்ன ஏமாத்திட என கோபப்பத்தில் வார்த்தைகளை தீ கங்குகள் போல அள்ளி வீசி சென்றான் ருத்ரதேவன்.
அவளும் சென்ற அவளவனை பார்த்து கல்லாய் உறைந்து நின்றாள். அப்போது உள்ளே வந்த மருத்துவரோ அவளிடம் இங்க பாரு பொண்ணே உன்ன பார்க்க என் பொண்ணு மாறி இருக்க அதனால சொல்லுறேன் உனக்கு யாரோ வயித்துல கரு உண்டாகமா தடுக்க விஷ மருந்து கொடுத்து இருக்காங்க . அதனால தான் உனக்கு வயித்து வலி வந்து இருக்கு மேலும் உன்கூட இருக்க யாரையும் நம்பாதே கொஞ்சம் தாமதம் ஆகியிருந்தாலும் நீயும் உன் குழந்தையும் செத்து போய் இருப்பிங்க.
இங்க உனக்கு குடுக்க மாத்து மருந்து இல்ல அதனால நீ சென்னை, கேரளா, மதுரைனு எங்கயாவது போய் விடு.
உன் குழந்தையை காப்பாத்த சரியான மருத்துவம் பார்க்கணும் அதனால இது சின்ன ஹாஸ்பிடல் தான் அதனால உனக்கு இப்ப நான் குடுத்தது வெறும் முதல் உதவி தான் இன்னும் 12 மணி நேரம் முடியறது குள்ள உனக்கு சரியான டிரீட்மென்ட் பாக்கணும் அதனால போய் விடு மா என கூறி சென்றார்.
அவளும் மருத்துவர் சொன்னதை யோசித்து கொண்டு இருந்தாள். அவளும் தேவ ராகவனுக்கு கைபேசி மூலம் உடனே வந்து அவளை அழைத்து செல்ல கூறினாள். அடுத்த பத்து நிமிடங்களில் ராகவனும் அவன் ஆட்களை அனுப்பி ரதியை பத்திரமாக அழைத்து சென்று விட்டான். விஷத்தின் விரியம் அதிகம் ஆனதால் அவள் செல்லும் வழியிலேயே மயங்கிவிட்டாள்.
அவளுக்கு தீவிரமாக நவீன கருவிகளை மற்றும் மருந்துகளை கொண்டு ஆர். எம். மருத்துவமனையில் சிகிக்சை நடந்து கொண்டு இருந்தது.மருத்துவரோ இரண்டு உயிரில் ஏதேனும் ஒரு உயிரை தான் காப்பாற்ற முடியும் என கூற ராகவனோ அவன் அறையில் உள்ள அவன் தாய் தந்தை படத்தின் முன் நின்று எப்படியாவது என் ரதியையும் அவ குழந்தையும் காப்பாத்தி கொண்டுங்க என கண்ணீர் வர வேண்டி கொண்டு இருந்தான்.
ரதியும் குழந்தையும் பிழைப்பார்களா? அடுத்த பாகத்தில்...

Last edited:
Author: Nithya
Article Title: ரதி 🩵11
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.