Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Member
Messages
37
Reaction score
8
Points
8
அத்தியாயம் 18


அந்த ரம்மியாமான இரவு நேரம் தோட்டத்தில் வெளியே இருந்த மகிழம் மர அடியில் கயிற்று கட்டிலில் அமர்ந்து இருந்தனர் வீரராகவனும் மீனாட்சியும். மீனாட்சியின் கைகளில் மருதாணி வைத்து கொண்டு இருந்தார் வீரராகவன். மீனாட்சி அவரை இன்னும் கண்ணகளில் காதல் குறையாமல் ரசித்து கொண்டு இருந்தார். மனைவியின் குறு.. குறு.. பார்வையில் நிமிர்ந்தவரோ என்ன தாயி அப்படி பாக்குற என வினவ அவரோ எப்படி என் மாமன் மட்டும் இன்னும் அதே கம்பிரத்தோடயும் காதலோடயும் இருக்காருன்னு பாக்குறேன் என கூற வீரவோ உன்ன கல்யாணம் கட்டிக்கிட்டு அம்பத்தஞ்சு 55 வருஷமாச்சு புள்ள இன்னும் நான் பார்த்த உன்ற கன்னம் ரெண்டும் கோவ பழம் மாதிரி செவக்குது☺️☺️ இப்படி ஒரு பொஞ்சாதி இருந்த இருபதுல இல்ல என்பதுல கூட காதல் வரும், தெரிஞ்சிக்கோ என கூற அவரோ சிரித்து கொண்டே 😂😂கொள்ளு பேரன் எடுத்தாச்சு ஆனா இன்னும் என்ன வம்பு இழுக்காம மட்டும் உங்களால இருக்க முடியல மாமா என கூற ஆமா என்ற பொஞ்சாதிய நான் என்ன வேணா பண்ணுவேன் என்னை எந்த கொம்பன் கேப்பான் என வீரா பெருமையாக கூற

சரி.. சரி... நேரமாச்சு மாமா உள்ளாரா வந்து சத்த நேரம் படுங்க. காலையில நேரமே எழுந்து கல்யாண ஜோலி எல்லாம் பாக்கணும் என அவர் கூறி கொண்டே இருவரும் உள்ளே சென்றனர்.


இங்கே மொட்டை மடியிலோ...


ஹே பேபி! வர.. வர.. என்னை கண்டுக்கவே மாற்ற நானும் படிக்குற பொண்ணுன்னு உன்ன டிஸ்டர்ப் பண்ணாம இருந்த நீ ரொம்ப பண்ற என ராகவ் பல்லவியிடம் புலம்ப அவளோ யாரு நீ? அமைதியா இருந்த உன் மூஞ்சிய உம்னு வச்சிக்கிட்டு அண்ணா கிட்ட என் மானத்த வாங்கி வச்சுயிருக்க இதுல ரெண்டு பேரும் என எப்படி ஓட்டுனாங்க தெரியுமா என அவள் போய் கோபம் கொண்டு கேக்க ராகவோ உன் நொண்ணன் மட்டும் என்னவாம் பொண்டாட்டி விட்டு ஐஞ்சு நிமிஷம் பிரிஞ்சு இருக்க மாட்டான் 😂😂 தெரியுமா என சிரிக்க அவளோ சரி எழும்பு அத்து தூக்கம் வருது போய் தூங்கணும் என் அவனின் நெற்றியில் இதழ் பதித்தாள். ஆடவனோ இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கலாம்லா என கேக்க அவளோ இல்ல இப்பவே லேட் ஆச்சு இப்ப தூங்குன தான் மார்னிங் சீக்கிரம் எழுந்துக்க முடியும் என கூற அவனோ சரி குட் நைட் பேபி என அவள் கன்னத்தில் இதழ் பதித்து அவளோடு கீழே சென்றான்.

திருமண நாள்.....


தேவராகவன் 💞

வெட்ஸ்

💞 ராகபல்லவி என

மலர்களால் அந்த பெயரை பலகை அலங்காரிக்க பட்டு இருக்க. நாதாஸ்வரங்களின் மங்கள சத்தம்,சொந்த பந்தங்களின் அரட்டைகள், பேச்சு சத்தம், கேலி கிண்டல்கள், தாவணி, புடவையில் இருக்கும் கன்னி பெண்களை சைட் அடிக்கும் காளையர்கள், மழலைகளின் கொஞ்சும் மொழியோடு, ஓடி யாடி விளையாடும் சத்தம் என பார்க்கும் இடமெல்லாம் ஓரே ஆரவரமாக இருந்தது வீரராகவன் வீட்டு திருமணம். தேவ், வீரா என ஒவ்வொருவரும் ஒரு வேலை செய்து கொண்டு இருந்தனர்.

இங்கே மணமகள் அறையில் பல்லவியை கேலி.. கிண்டல்.. பேச்சுகளோடு தயார் செய்து கொண்டு இருந்தாள் ரதி. எத்தனை வேலை இருந்தாலும் தேவ்வின் கண்கள் அவன் ரதியின் மீது தான் இருந்தன.


பத்து பொருத்தம் பார்த்து.....
ஒன்பது கோள்களின் நிலை அறிந்து....
எட்டு திசைகளில் இருந்து சொந்தகளை அழைத்து...
ஏழு அடி எடுத்து வைத்து....
அறுசுவை உணவு படைத்து....
ஐந்து பூதங்கள் சாட்சியாக...
நான்கு வேதங்கள் ஓதி....
மூன்று காலம் பார்த்த பெரியவர்களின் ஆசியோடு...
இரண்டு உள்ளங்கள் இணைத்து....
ஓர் உயிராய் மாறும் திருமணம்..❤️

எரியும் அக்னியின் சாட்சியாக பல்லவியின் சங்கு கழுத்தில் பொன் தாலியை கட்டி தன் சரிபாதியாக மாற்றி கொண்டான் தேவராகவன். பின் அக்னியை சுற்றி வளம் வந்து அவள் பிஞ்சு பாதங்களில் முத்து வைத்த மிஞ்சியை அனைவித்து விட்டான். இருவரும் சென்று வீரா மீனாட்சி காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க திருமணம் முடிவு அடைந்தது. அதன் பின் மற்ற சடங்குகளான மோதிரம் எடுத்தல், தேங்காய் உருட்டுதல், அப்பளம் உடைத்தல் என கோலகாலமாக திருமணம் நடந்து முடிந்தது.


போட்டோக்ராபர் வித.. வித.மாக போட்டோகளை எடுத்து கொண்டு இருந்தார். இடது பாக்கம் தேவராகவன் - ராகபல்லவி, வலது பக்கம் ருத்ரதேவன்- ரதிமலர் நடுவில் வீரராகவன்- மீனாட்சி கையில் ருத்ரவீரோடு நிற்க அந்த அழகான தருணத்தை புகைப்படமாக சேமித்தார் போட்டோக்ராபர்.

இரவு நேரம்......


பல்லவியின் அறையில் அவளை கிண்டல் செய்து சிரித்து பேசி கொண்டே பல்லவியை தயார் செய்து கொண்டு இருந்தாள் ரதி அங்கே கையில் பால் சொம்போடு வந்த மீனாட்சியோ அதை பல்லவியின் கையில் கொடுத்து எனக்கு உன்ற மாதிரியே ஒரு பொண்ணு பெத்து கொடுத்து தங்கம் என கேக்க ரதியோ என் எங்கள மாதிரி இருந்த வேணாமா என எதிர் கேள்வி கேக்க அவரோ என் நான் ஒரு லூசு கிட்ட காலம் முழுக்க கஷ்டம் படுறது போதாத தாயி என அவளை வார அவளோ போகங்க பாட்டிமா என் தேவ் கிட்டயே சொல்றேன் என முகத்தை திருப்பி கொண்டாள். அவரோ சரி..சரி.. கோவசிக்காதடா தங்கம் என அவளை கொஞ்சியே சமாதானம் செய்து பின் இருவரும் பல்லவியை ராகவன் அறையில் விட்டு வந்தனர்.


வீரராகவனும் மீனாட்சியும் அவர்கள் அறைக்கு உறங்க சென்று விட ரதியோ அவள் அறையினுள் நுழைந்தாள். அங்கே அவள் கண்டதோ தேவ்வின் மார்பில் படுத்து கொண்டு . ஆ...ஓ.. ஊ.. ஏ.. மா.. என மழலை மொழி பேசி விளையாடும் வீரை தான். அவளோ சென்று தேவ்வின் அருகில் அமர்ந்து கொண்டாள். குட்டி வீரும் ம்ம்.. ம்மா.. மமா.. என அழைத்து கொண்டே அவளிடம் தாவினான். அவளும் வீரோடு கொஞ்ச நேரம் விளையாடிவிட்டு வீரை தோளில் போட்டு தட்டி உறங்க வைத்தாள்.வீரும் காலை முதல் விளையாண்ட களைப்பில் படுத்த உடன் உறங்கி விட்டான். உறங்கிய வீரை தொட்டில் போட்டு திரும்பிய ரதியை காத்திருந்த திருட்டுபூனையோ அவளை கைகளில் ஏந்தி கொண்டு மஞ்சத்தில் சரிந்தது.


பெண்ணவளோ டேய்! தேவ் பொறுமையா என்ன அவசரம் பா என் இடுப்பு போச்சு என கத்த அவனோ உருண்டு சென்று ரதியின் காலை பிடித்து அதில் சிறிய மலர் டிசைனின் மேல் முத்து வைத்த ஆன்ட்டிக் வகை மிஞ்சியை இரண்டு காலிலும் மாட்டி விட்டான். அவளும் சூப்பரா இருக்கு தேவ் என அவனின் மீசையை பிடித்து இழுத்து முத்தம் வைக்க அவனோ ராட்சசி! என்னடி இப்படி இழுக்குற என கேக்க அவளோ என் புருஷன் என் இஷ்டம் என கூறி அவன் மேல் படுத்து கொண்டாள். என்ன இன்னக்கி ஒரு மார்க்கமா இருக்க என்ன விஷயம் என கேக்க அவளோ ஆமா இன்னக்கி நான் எப்படி இருக்கேன் இந்த சாரீல என அவள் கட்டி இருந்த கருநில நிற புடவையை காண்பித்து கேக்க

அவனோ ஏன்? இப்ப சம்மதமே இல்லாம கேக்குற. சரி இருந்தாலும் சொல்றேன் இந்த சாரீ ஓட ஓகே தான் ஆனா இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு இருப்பாள அந்த காஸ்டும் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் என கூற அவளோ ஆடவனின் உள் அர்த்தத்தை புரிந்து கொண்டாவளின் முகமோ தக்காளி பழம் போல சிவக்க அதனை மறைத்து கொண்டு வர.. வர.. நீ ரொம்ப கேட்ட பையனா மாறிட்ட தேவ் என போய் கோபம் கொண்டாள். அவனை பார்த்து பேச்ச மாத்தாத தேவ் ஏன் இன்னக்கி நான் எப்படி இருக்கேனா சொல்லல என கேக்க அவனோ நீயே பாத்தா தான இன்னக்கி வேலை ஜாஸ்திடி அம்மு என அவளை அவன் ஸ்டைல்லில் சமாதானம் செய்ய ஆரம்பித்தான்.


நெற்றியில் தொடங்கிய முத்தம் கண், காது, மூக்கு, கழுத்து என் அவன் புதிதாக அணிவித்த மிஞ்சியில் முத்தம் வைத்து இருவரின் ஆடைகளுக்கும் விடுதலை கொடுத்து மூன்று நாள் பிரிவையும் சேர்த்து திகட்ட... திகட்ட... அவன் அம்முவின் மேல் கட்டினான். அவளும் விரும்பியே அவளவனுள் தொலைந்து போனாள் . இரவில் ஆரம்பித்த இவர்களின் காதல் விளையாட்டு காலை அவர்களின் இளவரசன் அழுகுரலில் தான் முடிவுக்கு வந்தது. வேகமாக எழுந்த தேவ்வோ வீரை தூக்கி கொண்டு சமாதானம் செய்ய ரதியோ வேகமாக சென்று குளித்து விட்டு வந்தாள். பின் அவள் வீரை வாங்கி கொள்ள இவ்வளவு நேரம் அழுத வீரோ தாயை கண்டதும் நின்று அவன் போக்கை பல் தெரிய சிரித்து அவள் கன்னத்தை முத்தமிட ஆரம்பித்தான். இதை கண்ட தேவ்ஓ டேய்! மகனே இது கொஞ்சம் கூட சரி இல்ல இவ்வளவு நேரம் உன்ன கை வலிக்க தூக்கி வச்சு கிட்டு நின்னா நீ உங்க அம்மாக்கு முத்தம் தர என சண்டைக்கு செல்ல குழந்தைக்கு என்ன புரிந்ததோ மீண்டும் சிரிக்க வீரின் இரண்டு கனத்திலும் இருவரும் சேர்ந்து முத்தம் வைத்தனர்.


இவர்களின் சந்தோசம் இப்படியே நிடிக்குமா இல்ல? பிரிவே நிரந்தரமா?.
அடுத்த பாக்கத்தில்...

அமைதியாக படிக்கும் வாசகர்கள் அனைவர்க்கும் ❤️கமெண்ட்ஸ் வரல நண்பர்களே. உங்கள் கருத்துக்களே என்னை மேலும் எழுத உகுவிக்கும். அதனால் தங்கள் பொன்னான கருத்தை தெரிவிக்கவும்.❤️
 
Top