அத்தியாயம் 9
காலை சூரியன் தன் காதலி தாமரையை காண விரைவாகவே வந்துவிட்டான். ருத்ரன் காலையில் சீக்கிரமாக எழுந்து குளித்து விட்டு சமையல் செய்து கொண்டு இருந்தான். அவன் சமையலை முடித்து ஜூஸ் போட பழங்களை வெட்டி கொண்டு இருந்தான். அப்போது அவன் இடுப்போடு இரண்டு மெல்லிய பூ போன்ற கரங்கள் அணைத்து கொண்டன.
அவனோ அம்மு போய் குளிச்சிட்டு சாப்டு வந்து தூங்கு இப்படி நின்னுகிட்டே தூங்காத பாப்பா என கூற
அவளோ அஞ்சு நிமிஷம் தேவ் என கூறி அவன் முதுகின் மீது குரங்கு குட்டி போல ஏறி அவன் கழுத்தில் முகம் புதைத்து கொண்டாள்.
தேவ் அவளை அப்படியே உப்பு முட்டை சுமந்து கொண்டு குளியல் அறையில் இறக்கி விட்டு வந்தான்.
இருவரும் அமர்ந்து காலை உணவை உண்டு விட்டு எஸ்டேட் நோக்கி சென்றனர்.
அங்கே ராம் தலை மற்றும் கையில் கட்டுடன் நடந்து சென்றான். அவனை தொலைவில் இருந்து கண்ணன் பார்த்து கொண்டு இருந்தான். ரதி கண்ணனிடம் சென்று விசாரிக்க அவன் ராம் வேலை விட்டு சென்று விட்டதாகவும் மேலும் அவனை நேற்று ஒரு லாரி மோதி விபத்தில் தலை மற்றும் கை கால்களில் அடி பட்டுவிட்டது என கூறினான்.
தேவ் அலுவலக அறை சென்று அவனுக்கும் ரதிக்கும் ஒரு வாரம் விடுமுறை என கூறி எழுதி கொடுத்துவிட்டு வந்தான். செல்லும் வழியில் ரதி தேவ்ஐ பார்த்து இன்னக்கி நான் வண்டி ஓட்டவா எனக்கு ஆசையா இருக்கு என கேக்க தேவ் வண்டியை ரதியிடம் கொடுத்து விட்டு பின்னால் அமர்ந்து அவள் இடுப்பை கட்டி கொண்டான்.
இதமான குளிர் காற்று மேனியை வருட காதலியின் அணைத்து கொண்டு சுகமான ஒரு பயணம். அவளும் வண்டியை பொறுமையாக வீட்டினை நோக்கி செல்லுத்தினாள். மாலை போல இருவரும் மகிழுந்தில் மதுரை நோக்கி சென்றனர்.
இருவரும் ஜோடியாக நீலவேணியின் வீட்டின்னுள் நுழைந்தனர். நீலவேணியோ இருவரையும் அமரவைத்து குடிக்க பழரசம் குடுத்தார்.
பின் ருத்ரனே பேச்சை ஆரம்பித்தான் பெரியம்மா இவ பேரு ரதிமலர் அவளுக்கு அம்மா அப்பா இல்ல ஒரு அண்ணா மட்டும் இருகாங்க. நானும் அவளும் ஒன்ன தான் வேலை பார்க்குறோம். நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்க ஆசை படுறோம் நீங்க தான் வீட்டு பெரியவங்க அதான் உங்க கிட்ட கேக்க வந்து இருக்கோம் அப்புறம் நீங்க தான் அக்கா மாமா கிட்ட இந்த விஷயம் பத்தி பேசணும் என கூறினான்.
அவரோ கோபமாக என்ன ருத்ர எதுயெல்லாம் உன்னக்காக அங்க பூஜா காத்துக்கிட்டு இருக்க ஆன நீ என்னடானா இப்படி ஒரு அனாதை பெண்ணை கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொல்லுற எனக்கு இதுல கொஞ்சம் கூட விருப்பமே இல்ல. ஒழுங்கா அவள விட்டுட்டு வா அப்புறம் பூஜாவா கல்யாணம் பண்ணிக்கோ சரியா என கேக்க
கோபமான ருத்ரதேவனோ நீலவேணியை பார்த்து இங்க பாருங்க பெரியம்மா எனக்கு பூஜா மேல எந்த விருப்பமும் இல்ல அதே மாதிரி நம்பி வந்த பொண்ண பாதியிலே அனுப்புற பழக்கமும் இல்ல சரியா அதனால கண்டிப்பா எங்க கல்யாணம் நடக்கும். எப்பவாவது என்ன உங்க சொந்த பையன நினைச்சா என்ன பாக்க வாங்க சரியா என கூறி ரதியோடு வெளியே சென்றான்.
வெளியே ரதியோ தேவ் நீ அவங்க சொன்ன பூஜாவா கல்யாணம் பண்ணிக்கோ நான் பாதியில தான வந்தேன் அதே மாறி போயிடுறேன். என்னால உனக்கும் உன் குடும்பத்துக்கும் சண்டை வேணாம் என கூற அவனோ இருக்கும் இடம் கருதி கோபமாக அமைதியா போய் உள்ள உட்காரு இல்ல கண்டிப்பா வர கோபத்துக்கு கன்னம் ரெண்டும் பன்னு மாதிரி வீங்கிடும் பார்த்துக்கோ என கூற அவளும் அமைதியாக சென்று மகிழுந்தில் அமர்ந்தாள்.
தேவ் வண்டியை புயல் வேகத்தில் செலுத்தினான் அவன் போகும் வேகத்திலே அவனின் கோபத்தின் அளவு தெரிந்தது. இவருக்கும் மௌனமான ஒரு பயணம். தேவ் கார்யை அவன் வீட்டின் முன் நிறுத்தினான். பின் இறங்கி அமைதியாக உள்ளே சென்றான்.
அவன் பின்னாலே ரதியும் வேகமாக வந்து அவனை அணைத்து கொண்டாள். ஆனால் அவனும் கோபமாக அவள் கையை விளக்கி விட்டு கன்னத்தில் விட்டான் ஒரு அறை அவளுக்கு தலை ஒரு கணம் அதிர்ந்து விட்டது.
அவனும் கோபம் குறையாமல் சென்று சோபாவில் அமர்ந்து கொண்டான். ரதியும் சென்று அவன் மடி மீது அமர்ந்து தேவ் மாமா சாரி இனி உன்ன விட்டு போக மாட்டேன். உனக்கு உன் குடும்பத்தை பிடிக்கும்னு சொல்லுவல அதான் அவங்களோட எதுக்கு நீ சண்டை போட்டு பிரியணும்னு அப்படி சொன்னேன் என கூற அவனோ போறேன்னு சொன்னவ இங்க என்ன பண்ற, மேடம் தான் பாதியில வந்தவங்க ஆச்சே அப்படியே கிளம்பி போக வேண்டியது தானே என கோபமாக கூறி முகத்தை திருப்பி கொண்டான்.
ரதியோ அவன் முகத்தை திருப்பி இதழ்களின் மேல் அழுத்தமாக இதழ் பதித்தாள். இருவருக்கும் முதல் முத்தம் ஆரம்பித்தது என்னவோ அவள் தான் ஆனால் அதை இவன் கையில் எடுத்துக்கொண்டான். அவனின் கோபம் மொத்தத்தையும் அவளின் இதழின் மேல் தீர்த்து கொண்டு இருந்தான். அவள் மூச்சு காற்றுக்கு எங்கும் போதும் தன் மூச்சை அவளுக்கு கொடுத்து முத்தத்தை தொடர்ந்தான்.
அவளும் ஒரு கட்டத்தின் மேல் சோர்ந்து அவன் மீது சாய்ந்து விட அப்போது தான் அவளை விட்டான். அவளோ சிவந்து இருந்த அவள் இதழ்களை பார்த்து தேவ் ஐ முறைக்க அவனோ மீண்டும் மென்மையாய் ஒரு முத்தம் வைத்து அவள் கண்களை பார்த்து இனி அப்படி எல்லாம் பேசாத சரியா எனக்கு வந்த கோபத்துக்கு உன்ன அங்கேயே விட்டுட்டு வந்து இருப்பேன் என்ன பண்றது இந்த மனசுயும் மூளையும் உன்ன தான் தேடுது உன்ன நான் சரியா பார்த்துக்கலயா இல்ல என்ன பிடிக்கலையா சொல்லு எனக்கு என் குடும்பத்தை பிடிக்கும் தான் ஆன அவங்கள விட உன்னைத்தாண்டி பிடிச்சிருக்கு பாப்பா என கோபமாக ஆரம்பித்து சோகமாக முடித்தான்.
அவளோ அவனை அணைத்து கொண்டு இனி என்ன நடந்தாலும் உன்ன விட்டுட்டு போக மாட்டேன் ஓகே வா மாமா என கேக்க அவனோ அவளை அணைத்து கொண்டு சோபாவினிலே இருவரும் உறங்கி விட்டனர்.
மறுநாள் காலை கனவிழித்த ருத்ரன் கண்டது என்னவோ தன்னை இருக்கி அணைத்து கொண்டும் அவன் நெஞ்சின் மீது முகத்தை புதைத்து கொண்டு குழந்தை போல உறங்கும் அவன் அம்முவை தான். இவன் பார்வை துளைப்பதை உணர்ந்தாளோ என்னவோ உறக்கத்தில் இருந்து எழுந்து குட் மார்னிங் மாமா என கூறினாள்.
அவனும் குட் மார்னிங் அம்மு என கூறி நெற்றியில் இதழ் பதித்தான். அன்று முழுவதும் இருவரும் சென்று திருமணத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி வந்தான். ருத்ரனோ அவனவளுக்கு பார்த்து பார்த்து கணம் இல்லாமல் அதிக வேலைப்பாடு அற்ற சாப்ட் சில்க் சிவப்பு நிற புடவையை வாங்கினான். மேலும் சில புடவைகள் அவளுக்கு மிகவும் பிடித்த கண்ணாடி வளையல்கள், தங்கத்தில் நகைகள் என வாங்கி வந்தான். அந்த வாரம் வெள்ளிக்கிழமை இருவருக்கும் அந்த ஊரில் உள்ள மலை கோவில்லில் திருமண ஏற்பாடு செய்து இருந்தான் ருத்ரதேவன்.
ருத்ர என்ற கூவளோடு ஒரு பெண் தேவ் ஐ அணைத்து கொண்டாள். யார் அவள்?

Last edited:
Author: Nithya
Article Title: ரதி 🩵9
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.